தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
என்னே இந்த நகைமுரண் ! ( What an irony! ) - சுப.சோமசுந்தரம் வீட்டிற்கு உறவினர் வந்திருந்தனர். உறவுமுறையில் எனக்கு மருமகளான பெண்ணொருத்தி தூங்குகின்ற தன் கைக்குழந்தையை அறையொன்றில் விட்டுவிட்டு முன்பக்க அரங்கில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். தற்செயலாக அறைக்குச் சென்றதால் குழந்தையைப் பார்த்த நான் அவளிடம் சொன்னேன், "குழந்தையைத் தனியே விட்டிருக்கும் பட்சத்தில் இடையிடையே பார்த்துக்கொள்; சன்னல் வழியே எப்போதாவது பூனை வருவதுண்டு". இதைத் தொடர்ந்து என் மனதில் ஏதோ ஒரு காட்சி ஓடியது- சிலப்பதிகாரத்தில் பெண்ணொருத்தி குழந்தையைத் தனிமையில் விடுத்து நீர்நிலைக்குச் சென்று வந்ததும், குழந்தையைத் தீண்ட வந்த அர…
-
- 13 replies
- 5.6k views
- 1 follower
-
-
இன்று சரஸ்வதி பூசை நிறைவு நாள். கல்வி / ஞானம் / அறிவு இவற்றிற்கு அதிபதியாகவும், கலைத்தெய்வமாகவும் போற்றப்படும் கலைமகளை நன்றியுடன் போற்றும் தினமாகும். இப்படியான ஒரு தினத்திலே ஒவ்வொரு நவராத்திரி காலத்திலும் என்னை ஆக்கிரமித்த, சரஸ்வதியின் புகழ் பாடும் ஒரு பாடல் பற்றிய எனது எண்ணங்களை பகிர வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு. 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாரதி பாடல் என்னைப் பொறுத்தவரை ஒரு நவராத்திரி கால தீம் பாடல் (Theme song) ஆகிவிட்டது என்பது விந்தையல்ல! பாரதியாரின் கவிதைகள் பாமரரும் புரிந்து கொள்ளும் எளிமையான ஆனாலும் அர்த்தம் பொதிந்த வரிகளுக்காகப் புகழ் பெற்றவை. அந்த வகையில் ஏறத்தாழ 90 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்தப்பாடல்…
-
- 4 replies
- 3.3k views
-
-
எப்படி அவரால் முடிந்தது? “இப்படி ஒரு செய்தியை நீ சொல்வாய் என நான் எதிர்பார்க்கவில்லையடி தோழி! “பொருள் தேடுவதற்காக வெகுதொலைவு செல்லவிருக்கிறார் அவர் என்பதனைச் சற்றும் தயங்காமல் சொல்கிறாயே? இச்செய்தி என்னை வருத்தும் என்பதனை நீ அறியாயோ? “இப்படி ஒரு முடிவெடுக்க எப்படி அவரால் முடிந்தது? “என்னைப்பற்றி அவருக்கு எந்த நினைவும் இல்லையோ? “துணைவியாகிய என்னைப் பிரிந்து செல்ல எப்படி உள்ளம் துணிந்தார்? "துணைவியின்பால் அன்பு இருக்கவேண்டாவோ? “என்னிடம் உள்ள அன்பையும் துறந்து செல்கிறார். “துணைவியெனும் அன்பு இல்லாவிட்டாலும் `யாரோ ஒரு பெண்' என்னும் அருளாவது இருத்தல் வேண்டாவோ? அத்தகைய அருளையும் விடுத்துச் செல்கின்றார். “பொருள்தேடும் பொருட்டுத் துணைவியைப் பிரிந்துசெல்லுதல் அறிவுடை…
-
- 0 replies
- 939 views
-
-
எப்போது வேப்பங்காய் இனிக்கும்? "இவளோடு படும் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது. “ஏதோ ஒன்று, `பின்னே போனால் உதைக்கிறது; முன்னே போனால் கடிக்கிறது' என்பார்கள். "இவளுக்கும் அதற்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் போயிற்று. "என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் தவறு கண்டுபிடிக்கிறாள்; குற்றம் சொல்கிறாள்; முரண்டு பிடிக்கிறாள்; பிணங்கிக்கொள்கிறாள். “ஏதும் சொல்லாவிட்டாலும் ஏதும் செய்யாவிட்டாலும் வம்பாகிப் போகிறது. “இவளைத் திருமணம் செய்துகொண்டேனே, என்னை எதனால் அடித்துக்கொள்வது?” என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை; எப்படி அவளைச் சரிசெய்வது, எப்படி அமைதிப்படுத்துவது என்று நெடுநேரம் சிந்தித்தான்; ஒரு வழி புலப்பட்டது. மனைவியின் தோழியைத் …
-
- 2 replies
- 2.5k views
-
-
எரிதழல் -சுப.சோமசுந்தரம் நான் இதற்கு முன் எழுதிய ‘என்னே இந்த நகைமுரண் !’ என்ற கட்டுரைக்குப் பின்னூட்டம் அளித்த நண்பர் ஒருவர் பின்வரும் கருத்துக்களைக் கூறியிருந்தார் : “ பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியாரும் தம் தவறுக்குத் தண்டனையாக தம் உயிர் மாய்த்த பின் கண்ணகி மதுரையை எரித்தது ஏற்புடைத்தன்று.” “ இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் இலக்குவன் மீது சீதை கடுஞ்சினம் பொழிந்ததன் விளைவே இலக்குவனால் மூட்டப்பெற்ற சிதையில் சீதை பாய நேரிட்டது.” இவ்விரண்டினையும் ஒன்றாய்க் கட்டும் இழையாக ‘எரிதழல்’ எனும் இத்தலைப்பு அமைந்ததுடன், இலங்கையில் அனுமன் இட்ட தீயும் இண…
-
- 6 replies
- 6.1k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 2.1k views
-
-
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method
-
- 0 replies
- 873 views
-
-
சுஜாதாவின் நினைவு நாளில்( feb 27) எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு சந்திப்பு சுஜாதா என்கிற எழுபது வயது இளைஞர் சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது, தன்னை வந்து சந்திக்கும் வாசகர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதினார்: 'எனது உண்மையான வாசகர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை'. எனக்கு இதில் உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில், ஒரு சிறந்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளிலேயே தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்களையும், எண்ணங்களையும் முழுமையாக எந்த வித உபகேள்விகளுக்கும் இடமில்லாமல் மிக நேர்மையாக எழுதி விடுகிறார். ஆக அந்தப் படைப்பாளி எழுதியதையே நாம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்டால் அது போதுமானதாக இருக்கும். அதை விட்டு…
-
- 0 replies
- 832 views
-
-
[size=4]எழுத்தாளர்கள் எப்போதுமே அடித்துக் கொள்கிறார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. [/size][size=4]பாமரரிலிருந்து பத்திரிகையாளர் வரை இந்தக் கருத்தை நிலைநாட்டியும் வருகிறார்கள். [/size][size=4]எழுத்தாளர்களுக்குள் அவ்வப்போது கருத்து மோதல்கள் உண்டே தவிர வேறு விதமான விருப்பு வெறுப்புகள் இருப்பதில்லை. [/size] [size=4]சமீபத்தில் ஷோபா சக்தி என் நாவல் ராஸ லீலாவை குப்பை என்று எழுதியிருக்கிறார். உடனே நான் அவரை ஜென்ம வைரியாக நினைக்க வேண்டும். மாட்டேன். அவருக்கு அந்த நாவல் குப்பை என்று தோன்றுகிறது. அதற்கு அவருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். [/size] [size=4]சினிமாக்காரர்களைப் போல் பாராட்டு விழாவில் “இப்படி ஒரு படம் வந்ததே இல்லை; இந்தப் படத்தை ஹாலிவுட் காரன் பார…
-
- 3 replies
- 687 views
-
-
பொதுவாக இணையவெளியில் தமிழ் எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழை சார்ந்து பரிட்சயமான ஒரு கூச்சல் இருக்கிறது. மேலோட்டமாய்ப் பார்க்கையில் இந்தக் கூச்சல் நியாயமானதாகத் தான் தெரிகிறது. இருப்பினும், இந்தக் கூச்சலை நிராகரிப்பதற்கும் ஏராளமான நியாயங்கள் தெரிகின்றன. அந்த வகையில் இந்தப்பதிவு எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழை சார்ந்து அமைகிறது. புதிவிற்குள் செல்லமுன்னர் இதயசுத்தியாக ஒன்றைக் கூறவேண்டும். பதிவெழுதுவதற்காக இதை எழுதவில்லை. இந்த முனையில் உண்மையில் இவ்வாறு தான் எனக்குப் படுகின்றது. யாரேனும் இந்தப் பார்வை தவறு என்பதனை காத்திரமான கருத்துக்கள் கொண்டு தெரியப்படுத்தினால் மனதார மகிழ்வேன். மாறிக்கொள்வேன். சங்க கால இலக்கியத்தை வாசித்து ரசிப்பதற்கு என்னால் முடியாது. காரணம் எனக்கு …
-
- 17 replies
- 2.3k views
-
-
ஐ —-நாஞ்சில்நாடன் 'ஐ' எனும் இந்தச் சொல், இன்று,இங்கு ஒரு தமிழ் சினிமாவின் தலைப்பாக அறியப்படுகிறது. அல்லது நான் என்ற பொருளில் வரும் ஆங்கிலச் சொல் I என்பதை நினைவுபடுத்தும். மேலும் சிலருக்கு கண் எனும் பொருளில் வரும் Eye எனும் சொல்லை. நம்மில் எவருக்கும் ஐ என்பது தமிழ்ச்சொல் அன்று. ஆனால் இந்த ஓரெழுத்துத் தமிழ்ச் சொல்லை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, கலித்தொகை எனும் எட்டுத்தொகை நூல்களும் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி எனும் பத்துப்பாட்டு நூல்களும் பயன்படுத்துகின்றன. தமிழ் அகரவரிசையின் உயிரெழுத்துகளில் ஒன்பதாவது எழுத்தான ஐ எனும் நெடில் எழுத்து, ஒரு தனிச் சொல்லாகும். இதனை ஓரெழுத்துச் சொல் என்பார்கள். …
-
- 0 replies
- 905 views
-
-
ஐங்குறுநூற்றில் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகள் .. முன்னுரை ஐங்குறு நூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார், தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இந்நூலில் மொத்தம் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் காணப்படுகின்றன. கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். ஐங்குறுநூற்றுத் திணைகளில் ஐந்தாவது திணையாகவும் மற்றும் இறுதித் திணையாகவும் இடம்பெறுவது முல்லைத் திணையாகும். இம்முல்லை நிலமே ஆய்வுக்களமாக அமைகின்றது. இம்முல்லைத் திணையின் ஆசிரியர் பேயனார் ஆவார். இத்திணையில் செவிலி கூற்றுப் பத்து, கிழவன் பருவம் பாராட்டுப் பத்து, தோழி வற்புறுத்த பத்து, பாணன் பத்து, தேர்வியங்கொண்ட பத்து, வரவுச் சிறப்புரைத்த பத்து…
-
- 1 reply
- 3.3k views
-
-
உதயணகுமார காவியம் வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது. இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது. கதையமைப்பு சிக்கலானதாகவும், இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளது. பெயர் தான் காவியமே தவிர காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ சிறிதும் இல்லாதது. பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு. நாககுமார காவியம் இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை. 5 சருக்கங்கள…
-
- 0 replies
- 748 views
-
-
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்! பாண்டிய மன்னனின் மகளைக் குலோத்துங்க சோழனுக்கு பெண்கேட்டு வந்த ஒட்டக்கூத்தருக்கும், பாண்டியமன்னன் மகளின் குருவான புகழேந்திப்புலவருக்கும் தந்தம் நாட்டுப்பற்றால் மோதல் ஏற்பட்டது. இருவரும் புலவர்கள் ஆதலால் கவிதைத் திறத்தால் மோதிக்கொண்டனர். புலவர்கள் இருவரும் தத்தம் அரசுகளைப் புகழ்ந்து பாடியதை பாண்டிய மன்னன் இரசித்துக் கேட்டான். எனினும் அந்நாளில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களுக்குள் தன் மகளுக்கு ஏற்ற கணவனாக வரும் தகுதி குலோத்துங்க சோழனுக்கு இருந்ததை பாண்டிய மன்னன் அறிந்திருந்ததாலும், அரசியல் காரணங்களுகக்காகவும் அத்திருமணத்திற்கு உடன்பட்டான். திருமணம் முடித்து குலோத்துங்கனுடன் செ…
-
- 0 replies
- 632 views
-
-
ஒப்பாரியில் ஆராய்ச்சி செய்யும் சீனத் தமிழர் பேட்டி
-
- 3 replies
- 1.7k views
-
-
பல பொருள் கொண்ட ஒரு சொல்லை இங்கே இணையுங்கள். அவற்றின் விளக்கத்தையும் தாருங்கள். உதாரணமாக 1. குடை - வெயில் மழையில் சாதாரணமாக பாவிப்பது. (சிறப்பான பாவனைக்கு சைவனை கேட்கவும்) 2. குடை - மனதில் ஏதேனும் தொடர்ந்து வந்துகொண்டிருத்தல்.( இது சரியான விளக்கம் இல்லை). 3. குடை - ஒரே அணியில் ஏனைய அணிகள் இணைந்து செயற்படல் 4. குடை - பேரூந்து குடை சாய்ந்தது. 5. குடை - துருவித்துருவி கேள்வி கேட்டல் 6. குடை - அவன் அதை வைத்து குடைந்து கொண்டிருந்தான். அவன்தான் அதனை பழுதாக்கியிருக்கவேண்டும். எங்கே உங்களாலும்முடியும். நினைவுக்கு வருவதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- 6 replies
- 58.9k views
-
-
ஒரு சொல் - பல பொருள் தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அவற்றை வசனமாகவோ கவிதையாகவோ யார் வேண்டுமானாலும் தரலாம். நான் ஆரம்பித்து வைக்கிறேன் ஒற்றை அறை வாழ்வு ஞாபகம் அகதி வாழ்வின் ஆரம்பம் அது. கன்னத்தில் விழுந்த அறையின் ஞாபகம் இதய அறைக்குள் புதைந்து போன வலியின் வடுக்கள்.
-
- 55 replies
- 20k views
-
-
-
- 0 replies
- 813 views
-
-
ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும். ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும். இதை படித்தாலே இந்த பகுதியில் கேட்கப்படும் 3 கேள்விகளுக்கும் எளிதாக பதிலளித்துவிடலாம். ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் அ-சுட்டெழுத்து, எட்டு, சி…
-
- 2 replies
- 2.4k views
-
-
தமிழ் எழுதப்படும் துணையெழுத்துகள், எழுத்துருக்கள் ஆகியவற்றை விளக்கும் படம் இது. ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை அறிந்திருக்கும் நம்மில் பலருக்கு மேல்விலங்கு, கீழ்விலங்கு என்றால் என்னென்று தெரியாது. தமிழில் எழுதப்படும் ஒவ்வோர் எழுத்தும் எத்தகைய சேர்ப்பு வடிவத்தினால் அதன் வரிசையில் இன்னோர் எழுத்தாகிறது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் ஒவ்வொரு வரைவுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அவற்றையும் அறிந்திருக்க வேண்டும். மூத்த தமிழாசிரியர்களிடையே அறியப்பட்டிருக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்கள் புதிய தலைமுறைத் தமிழாசிரியர்களிடையே பரவலாகாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கும் நம் மாணார்க்கர்களுக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்களின் பட்டியல்…
-
- 1 reply
- 860 views
-
-
-
நாலு கோடியா? ...........காசில்லப்பா, பாடல்! - ஒளவையின் புலமை. சோழமன்னன் ஒருநாள் தனது ஆஸ்தான கவிஞர்களை அழைத்து, நாளை விடிவதற்குள் நாலு கோடிக்குப் பாடல் பாடி வரவேண்டும் என கட்டளை இட்டான்.இந்தக் கவிஞர்கள் அரண்மனையிலே சும்மா தினமும் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமா?; அவர்களுக்குச் செய்ய ஒரு வேலை கொடுக்க வேண்டாமா என சோழமன்னன் நினைத்தானோ என்னவோ, இதை ஒரு வீட்டு வேலையாகச்(Homework) செய்து வர, பணித்திருந்திருக்கலாம். அதை கேட்ட கவிஞர்கள், "நாலு கோடிக்கு எங்கே போவது?", எனக் கவலையுடன் வீடு திரும்பினார்கள். அன்று அவ்வழியாக வந்த ஒளவையார் அந்தக் கவிஞர்கள் கவலையுடன் இருப்பதைக் கண்டு, " ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். " ஒளவையே, எம்மை சோழ மன்னன் நாளை சூரிய உதயத்திற்கும…
-
- 2 replies
- 1.9k views
-
-
- ரிஷியா Source : http://www.varalaaru.com கா... கா... கா... என்று கரைந்தது மரத்தின் மீது அமர்ந்திருந்த கரியகாகம். அவன் இன்றும் வரவில்லையே என்று பிரிவுத் துயரால் முற்றத்தில் இருந்த தலைவி வெளியே ஓடி வந்தாள். காக்கை கரைகிறதே, இது ஒரு நல்ல நிமித்தமே, பரவசப்பட்டாள். காக்கை கரைந்தால் விருந்து வருமே. மனம் குதூகலிக்க வீட்டிற்குள் ஒடினாள். ஒருவேளை அவன் வருவானோ... அவன் இன்று வருவானா? என் கண்ணீர் துடைப்பானா? என் சோகம் இன்று தீருமா? எல்லாம் கேள்விக் குறிகள். கா.... க்கா....... அந்த கரிய காகம் எதற்காய் இப்படிக் கரைகிறது? வாசலுக்கும் முற்றத்திற்குமாய் நடையாய் நடந்தாள். தூரத்தில் குதிரைக் குளம்பொலி கேட்டது. பழகிய அந்த ஒலி அவளுக்கு எல்லையில்லா மகிழ்வைக் கொடுத்தது. அவனேத…
-
- 2 replies
- 802 views
-
-
"கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும் கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேன்டும் வாடை தருமூதலிலே நடுங்கும் போதும் வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும் பாடையிலெ படுத்தூரை சுற்றும் போதும் பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும் ஓடையிலெ என் சாம்பல் கரையும் போதும் ஒண் தமிழெ சலசலத்து ஓடவேண்டும்" இது யாரால் இயற்றப்பட்டது என்பதையறிந்தால் தெரிவிக்கவும். ஈழத்தில் கல்வி கற்ற காலத்தில் இதை உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் என்று சிலர் சொன்னதாக நினைவு.வரதரின் அறிவுக் களஞ்சியம் இதழில் இது வேறு ஒருவரால் இயற்றப்பட்டதாவகவும் சொல்லப்பட்டது
-
- 11 replies
- 7.8k views
-
-
ஒருாவத வது இடத்தில் தமிழ் மொழி - தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா [Friday 2015-08-14 07:00] உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்TOP 10 Oldest Languages in the World - சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் …
-
- 2 replies
- 3.9k views
-