தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
திருக்குறள் உலகப்பொதுமறையா? - சில சொல்லாடல்கள் - ந. முருகேச பாண்டியன் தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலையாக வள்ளுவர் நிற்பதற்குக் காரணம், அவர் திருக்குறள் என்ற அறநூலைப் படைத்ததுதான். சங்க காலத்திற்குப் பிந்தைய நூலாக திருக்குறள் ஏதோ ஒரு வகையில் தமிழில் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றிருக்கிறது. பக்தி இயக்கக் காலகட்டத்தில் முக்கியத்துவம் இல்லாமலிருந்த திருக்குறள், இருபதாம் நூற்றாண்டில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வள்ளுவத்தின் எழுச்சி தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், புராணங்கள் போன்றவற்றை இலக்கியமாகக் கருதிய சூழலில், அதற்கு மாற்றாகத் திராவிட இயக்கத்தின…
-
- 3 replies
- 6.9k views
-
-
வாழையிலை போலவந்த செல்லம்மா! தாழையாம் பூமுடிந்து தடம்பார்த்து நடைநடந்து வாழையிலை போலவந்த செல்லம்மா! என்வாசலுக்கு வாங்கிவந்தது என்னம்மா? கவியரசன் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் இவை. 'வாழையிலை போலவந்த செல்லம்மா!' என்ற வரிகளில் புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை ஏன் 'வாழையிலை' என்று வருணித்தான் கண்ணதாசன் என்ற விவாதம் எங்கள் நண்பர்களுக்குள் எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். நண்பர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவே இருந்தது. எங்களின் வாதத்தில் இடம்பெற்ற சில விளக்கங்களை இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன். "வாழைக் கன்றைப் பிடுங்கி அதன் தலையைச் சீவிவிட்டுக் கிழங்கோடு கூடிய தண்டுப் பாகத்தை மட்டுமே நடுவது வழக்கம்…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலக்கணம் கற்பித்தல் : ஆசிரிய அனுபவம் நான் அரசு கல்லூரி ஆசிரியனாகிப் பதினேழாம் ஆண்டு இது. பணிக்குச் சென்ற முதலாம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ந்து இளங்கலைத் தமிழிலக்கிய வகுப்புகளுக்கு இலக்கணமும் பட்ட வகுப்புகளுக்குப் பொதுத்தமிழ்த் தாளில் இலக்கணப் பகுதியும் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறேன். பொதுத்தமிழ் இலக்கணப் பகுதி பற்றி இப்போது பேசப் போவதில்லை. அது பள்ளித் தமிழ்ப் பாட இலக்கணப் பகுதியின் தொடர்ச்சிதான். தனியாகப் பேச வேண்டிய விஷயம் என்பதால் இப்போதைக்கு அதைத் தவிர்த்துவிட்டு இளங்கலைத் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு இலக்கணம் நடத்தும் அனுபவத்தில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இளங்கலையில் நன்னூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, நம்…
-
- 3 replies
- 19.3k views
-
-
பழமொழியில் இந்துமதம் - சுவாமிநாதன் தமிழ் ஒரு வளமான மொழி. இதில் இருபதாயிரத்துக்கும் மேலான பழமொழிகள் உள்ளன. பழமொழிகள் ஆழமான கருத்துடைய சிறிய சொற்றொடர்கள் ஆகும். எழுத்தறிவில்லாத பாமர மக்களும் கூட இவைகளைச் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியைப் போல வேறு எந்த மொழியிலாவது இவ்வளவு பழமொழிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியே. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியில் 400 பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொறு பழமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் ஒரு பதிகம் முழுவதையும் பழமொழிகளை வைத்தே பாடியுள்ளார். இந்த மாதிரி நூலோ பதிகமோ வேறு எந்த மொழியிலும் இல்லை. கம்பரும் இராமாயணத்தில் நிறைய பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார். பழமொழி என்றால் என்ன? ஆயிரக் கணக்…
-
- 3 replies
- 5.3k views
-
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழே உங்கிட்ட , "அ" னா- வுக்கு "ஆ" வன்னா இருக்கு "இ" னா- வுக்கு "ஈ" யன்னா இருக்கு "உ" னா- வுக்கு "ஊ" வன்னா இருக்கு "எ" னா- வுக்கு "ஏ" யன்னா இருக்கு "ஒ" னா- வுக்கு "ஓ" வன்னா இருக்கு "ஐ"(அய்) க்கு உங்கிட்ட என்னா இருக்கு ? "ஔ"க்கு உன்கிட்ட என்னா இருக்கு ? "ஃ"க்கு உங்கிட்ட என்னா இருக்கு ?
-
- 3 replies
- 1.9k views
-
-
-
- 3 replies
- 1.4k views
-
-
ஒப்பாரியில் ஆராய்ச்சி செய்யும் சீனத் தமிழர் பேட்டி
-
- 3 replies
- 1.7k views
-
-
[size=4]நற்றினையில் என் உள்ளம் கவர்ந்த ஓர் பாடல். பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் வருவதாகக் கூறிய பருவம் கடந்து மேலும் ஒரு மாதமாயிற்று. அப்பொழுதும் தலைவன் வரவில்லை. தலைவியின் துன்பம் பல்கிப் பெருகிற்று. தோழி தலைவியின் துன்பத்தை தணிக்க பலவாறு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை கூறுகிறாள். அதனிலும் துன்பம் தணியாத தலைவி பின்வருமாறு கூறுகிறாள். என் தோள்களும் மெலிந்து அழிகின்றன. அவன் வருவதாக கூறிய நாட்களும் கடந்து விட்டது. நீண்ட பாலை வழியை நோக்கி நோக்கி என் கண்களும் ஒளியற்று காணும் தன்மையை இழந்தன. எனது அறிவும் மயங்கி என்னை கைவிட்டு பித்துபோல் வேறுபட்டது. நோயும் திரும்பி வருகின்றது. உயிரைப் பெயர்த்தற்குரிய மாலைப் பொழுதும் வந்து விட்டது நான் என்ன ஆவேனோ? இவ்வுலகத்தில்…
-
- 3 replies
- 1.3k views
-
-
மக்களே.... எழுத்துலகில் விண்வெளி தொடர்பான கட்டுரைகளில் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொல் அறியாமல் பல பேரும் பலவிதமான சொற்களை கையாண்டு வருகின்றனர் என்பது வருத்தமளிக்கும் விதயமாக உள்ளது. இது செந்தரப்படுத்தாமையால வந்த விளைவு. இது தொடர்ந்தால் மொழிச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது; இதனால் பொருள் பிரளும். ஆகவே அதைப் போக்கும் விதமாக இதை எழுதுகிறேன். Rocket(Space) - ஏவூர்தி Rocket(Weapon)- உந்துகணை/ தெறிப்பு தெறிப்பு - பழைய ஈழப் புத்தகம் ஒன்றில் இச்சொல் இப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. Missile - ஏவுகணை Satellite - செய்மதி(ஈழ.வழ.), செயற்கைக்கோள் (தமி.வழ) இதில் நான் செய்மதி என்பதையே என்னுடைய விடைகளில் கையாள்கிறேன். என்னைப் பொறு…
-
- 3 replies
- 2.4k views
- 1 follower
-
-
எல்லோருக்கும் வணக்கம்! தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள். காலை ஆறு மணி! தலையில் துவாய், கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா? யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி ஊமல் கரியில் பல் துலக்கி, கரண்டு போன மின்கம்பம் பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி. டயர் வாரில் தேடா வலயம் ஆழக்கிணற்றில் வாரும்போது அரைவாசி தண்ணீர் ஓட்டை வாளியால் ஓடிவிடும். முகம் கழுவி சைக்கிள் எடுத்து சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும், புதன்கிழமை என்றால் ஞாயிறு வீரகேசரியும்! அப்பாவுக்கு ஒன்று எனக்கொன்று வாசிப்பதில் தொடங்கும் அனுபவம்! பாடசாலை இடை வ…
-
- 3 replies
- 1.1k views
-
-
பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட பி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. "கல்ச்சர்' எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் "கலாச்சாரம்' எனக் கொண்டார்கள். இந்தக் "கல்ச்சர்' என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். "கல்ச்சரை' ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு. தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச் சுட்டியி…
-
- 3 replies
- 611 views
-
-
மொழியாக்கம் செய்வது எப்படி? அருணவ சின்கா வங்காளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பவர். இவரது மொழியாக்கங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அரங்கிலும் கவனம் பெற்றுள்ளன. மொழி பெயர்ப்பு கலை குறித்து அவரது பத்து குறிப்புகள் இங்கே: மூல நூலைப் படிப்பது மட்டும் போதாது, உன் தலைக்குள் கேட்கும் குரலை கவனிக்க வேண்டும். முதல் வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப திருத்தி எழுது- நீ அந்த குரலைப் பிடித்து விட்டாய் என்ற திருப்தி கிடைக்கும் வரை. எழுத்தாளரின் குரல் பிடிபட்டதும் முதல் வரைவு வடிவத்தை விரைவாக முடித்து விடு- அந்தக் குரல் வெகு நேரம் தங்காது. ஃப்ளோவில் இருக்கும்போது மூல நூலில் உள்ள கடினமாக பகுதிகளுக்கு விடை காண மொழியாக்கத்தை நிறுத்தி யோசிக்காதே; மூல மொழியில் உள்ளபட…
-
- 3 replies
- 1.5k views
-
-
புல் மேலே பனித்துளி by என். சொக்கன் நூல்: நாலடியார் (நல்லினம் சேர்தல் #171) அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறி அல்ல செய்து ஒழுகி அவ்வும், நெறி அறிந்த நல் சார்வு சாரக் கெடுமே வெயில் முறுகப் புல் பனிப் பற்று விட்ட ஆங்கு பாடியவர்: சமண முனிவர்கள் அறியாத பருவத்தில், அடங்காதவர்களோடு சேர்ந்து சில பிழைகளைச் செய்துவிட்டீர்களா? அதனால் பாவம் சேர்ந்து இப்போது வருத்தப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். இனிமேல் நீங்கள் நல்ல நெறியில் செல்கிறவர்களுடன் சேர்ந்து பழகி வாழுங்கள். அதன்மூலம் உங்களுடைய பழைய குற்றங்கள் தானாக மறைந்துவிடும். நம்பமுடியவில்லையா? அதிகாலையில் புல்தரையைக் கவனித்துப் பாருங்கள். ஒவ்வொரு புல்லின் நுனியிலும் பனித்துளி படர்ந்து அதை நனைத்திருக்கும், ஆனால் பின்னர…
-
- 3 replies
- 950 views
-
-
உதாரணமாக கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் வைட் பால் என்ற ஆங்கில பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பு இப்போதைக்கு இல்லை என்று கூறும் ஜெகன்மோகன், அதை அகலப்பந்து என்று சில வர்ணணையாளர் கூறுவதைத் தவறு என்று கூறுகிறார். இப்படி தமிழைக் கொல்வதற்குப் பதில் வைட் பால் என்றே கூறிவிட்டுப் போகலாம்என்றும் கூறுகிறார் ஜெகன்மோகன். தகவல்: http://thatstamil.oneindia.in/news/2006/05...5/25/hindi.html நன்றி 'புறப் பந்து என்றும் கூறலாமே! இதை வர்ணணையாளர்கள் கவனிப்பார்களா? உங்கள் கருத்தென்ன? தமிழ்ச்சொல் இல்லையென்று அங்கலாய்க்காமல், இதை மற்ற தமிழ் அறிஞர்களிடம் கலந்தாலோசித்து ஆங்கிலச் சொல்லை தமிழ் பாவனையில் இருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்! அல்லிகா
-
- 3 replies
- 1.8k views
-
-
படைப்பு, அழிப்பு என்ற சொற்கள் ஓர் அற்புதத்தைக் குறிப்பதற்கு மேலாக எந்த ஒரு மதிப்பும் பெற்றவையல்ல. நீங்கள் ஒரு தங்கக் காசை அழித்து விடலாம்; ஆனால் காசு என்ற அதன் நிலையைத்தான் நீங்கள் மாற்றி-யிருக்கிறீர்களே அன்றி, தங்கம் என்ற பொருளை நீங்கள் அழித்து விடவில்லை. அது போலவே படைப்பு, அழிப்பு என்பவையும் நிலைமாற்றத்தைக் குறிப்பனவே அன்றி, ஒரு பொருளின் தோற்றத்தையோ முடிவையோ குறிப்பவை அல்ல. இந்தப் பிரபஞ்சத்தைக் கட-வுள் படைத்தார் என்று ஆத்திகர் கூறும்போது, அக்கடவுள் தன்னிலிருந்தே இந்தப் பிரபஞ்-சத்தைப் படைத்தார் என்றோ அல்லது ஒன்-றுமே இல்லாத ஒன்றிலிருந்து படைத்தார் என்-றோதான் கருதுகிறார். ஆனால் பிரபஞ்சம் கட-வுளின் படைப்பு என்று நாத்திகரால் கருதமுடி-யாது. அவ்வாறு கருதுவது பிரபஞ்சத்தையும், க…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ் மொழி ஒர் அறிவியல் ஆய்வும் .. எதிர்கால தேவையும் சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றியும் கண்டனர். அதோடல்லாமல், தமிழின் உண்மையான மேன்மையை உணர்ந…
-
- 3 replies
- 3.9k views
-
-
பதிற்றுப்பத்து வழி சேர மன்னர்களும் மக்கள் வாழ்வியலும்… தமிழ்ச் சமூக வரலாறு நீண்ட நெடிய வரலாற்றை, மனித குலம் தோன்றி நிலைபெற்ற செயல்முறையை விளக்கும் ஒளிவிளக்கமாய் திகழ்ந்து வருகிறது. தோண்ட தோண்ட நீர் பெருகுவது போல, ஆராய ஆராய பல புதிய கருத்துக்கள் தோன்றி பழந்தமிழர் வாழ்வை புதிய நோக்கில் ஆராயும் வேட்கையும் மிகுதியாகிறது. கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், இலக்கியங்களும் இன்ன பிற சான்றுகளும் வரலாற்றை வெளிக்கொணரும். அதே வேளையில் அவை முழுமையும் உண்மை நிலையை பிரதிபலித்து விடுவதில்லை. எனினும் பல்லாயிரம் கருத்துக்களை தம்முள் புதைத்தும், மறைத்தும் இன்று விதையாக நின்று புதிய கோட்பாடுகளோடு பொருத்தி ஆராய்கையில் புதிய வாழ்வியல் கருத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் ‘…
-
- 3 replies
- 6.3k views
-
-
செயற்கை நுண்ணறிவில் தமிழ் மொழியின் பயன் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
வட்டுக்கோட்டைக்கு வழி என்ன எண்டு கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு கருத்து வழியைக் காட்ட சொன்னா, துட்டு ( 1காசு ) இரண்டு பாக்கு வாங்கலாம் எண்டு சொல்லுங்கள் சில சனம் அப்பிடின்னா சாதாரணமா எங்கட ஆக்கள் சிலரின்ர குணம் ஒண்டு இருக்குது. ஒரு கேள்வியக்கேட்டா அதுக்கு நேரா விடை சொல்லத்தெரியாது. அங்க போய், இங்க வந்து சுத்தி வளைச்சுத்தான் பதில் சொல்லுவினம். இது போன்ற சில சொற்கள் ஈழத்தில நாங்க பயன்படுத்தினது. அதாவது ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ற மாதிரி கனக்க வார்த்தை பிரயோகங்கள் இருக்குது. இதை நான் ஏன் இங்க வந்து சொல்லிறன் எண்டு நினைக்கிறியளே அது ஒண்டும் பெரிசா இல்லைங்கோ. எதிர்கால சந்ததியினருக்கு இது போன்ற வார்த்தைப்பிரயோகங்கள் போய்்ச்சேருமோ எண்ட…
-
- 3 replies
- 1k views
-
-
வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் -------------------------------------------------------------- தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது. அடர் சிவப்பு – cramoisy அடர் நீலம் - perse / smalt அடர் மஞ்சள் - gamboge அயிரை/ அசரை - sandy colour அரத்த(ம்) (நிறம்) - heliotrope / haematic அருணம் - bright red, colour of the dawn; அவுரி(நிறம்) - indigo அழல் நிறம் – reddish colour of fir…
-
- 3 replies
- 9.9k views
-
-
-
-
- 3 replies
- 1.8k views
-
-
வைசிய புராணமும்- வளையாபதியும் எது உண்மை? வளையாபதியின் சிறப்பு; வட மொழியில் தோன்றிய ரகுவம்சம் குமார சம்பவம் சிசுபால வதம் நைடதம் கிராதர்ஜீனியம் ஆகிய 5 நூல்களை பஞ்ச காவியம் என்று அழைப்பர்.அதே போல தமிழில் தோன்றிய சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,மணிமேகலை,வளையாபதி ,குண்டல கேசி ஆகிய 5 நூல்கள் ஐம்பெரும்காப்பியம் எனப்பட்டன. இந்த பாகுபாட்டை யார் வகுத்தது என்று தெரியவில்லை.. நன்னூலுக்கு உரை வழங்கிய மயிலை நாதர் ஐம்பெரும்காப்பியம் எண் பெரும்தொகை,பத்து பாட்டு எட்டு தொகை பதினொண்கீழ்கணக்கு என இலக்கியங்களை வகைபடுத்தியுள்ளார்..ஆனால் அவர்க் கூட ஐம்பெரும்காப்பியம் எவை எவை என்று வகைப்படுத்தவில்லை.. பிற்காலத்தில் ஆசிரியர் பெயர்தெரியா பாடலென்று ஐம்பெரும் காப்பியத்தினை வகை…
-
- 3 replies
- 8.1k views
-
-
தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் வெங்கட் சாமிநாதன் 1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில, மாதிரிப்படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று Indian Horizons என்ற தலைப்பில் 500 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு ஜனவரி-ஜூன், 1999-ல் வெளியானது. இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸ…
-
- 3 replies
- 6.9k views
-