பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
உலக ‘தாய்மொழி தின’ விழா 2011 பிப்ரவரி 21-ம் தேதி தாய்மொழி தினத்தைக் கொண்டாடும் விழா என்பதால் வேலூர் வாசகர் பேரவையும் வி.ஐ.டி பல்கலைக்கழகமும் இணைந்து வேலூரில் இரண்டு நாள் விழாவைக் கொண்டாடுகிறது. இதில் பிப்ரவரி 20 அன்று ‘நாம் வளர தமிழ் வளர்ப்போம்’ என்ற கருத்தரங்கு நடைபெறுகிறது. கருத்தரங்கு நடக்கும் இடம்: டாக்டர் சென்னா ரெட்டி கருத்தரங்கக் கூடம், வி.ஐ.டி பல்கலைக்கழகம், வேலூர். நிகழ்வு ஆரம்பிக்கும் நேரம்: மாலை 3.00 மணி. தலைப்புகளும் பேசுவோரும்: தெய்வத்தமிழ்: திருமதி மா.கவிதா (அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி) கல்வித்தமிழ்: பேராசிரியர் பா. கல்விமணி பசுமைத்தமிழ்: திரு சு. தியோடர் பாஸ்கரன் ஆட்சித்தமிழ்: முனைவர் அரணமுறுவல் (செ…
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழீழத்தின் அதி உயரிய விருது :மாமனிதர் தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக-உரிமை விடுதலைக்காக விடுதலைப் போராட்டத்துக்காக அரும்பாடுபடும் தமிழருக்கு மாமனிதர் என்ற இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. ஈழத்தமிழரின் விடிவுக்காக பாடுபடுபவர்களின் பெயரை தேர்ந்தெடுத்து விடுதலைப்புலிகளின் உயர்மட்டக்குழு தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு சிபார்சு செய்யும். தேசியத்தலைவர் தலைமையில் கூடும் அம்முக்கிய குழு தேர்வு செய்யப்பட்டவர் குறித்து பரிசீலித்து பின்னர் முடிவெடுத்து அவரை விருதுக்கு உரியவராக அறிவிக்கும். மாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும். இந்த விருதுக்கு அரசியல் சாயம் எதுவும் இல்லை. விசேட அளவுகோல்களும் இல்லை. இந்தியாவில் வழங்கப்படும் பாரத ரத்னா பத்…
-
- 9 replies
- 2.1k views
-
-
உலகின் மூத்த குடி தமிழ் குடி.. அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்புதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்…
-
- 3 replies
- 1.6k views
-
-
"Achievement in music written for motion pictures (Original song)" என்ற பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை Maya Arulpragasam (M.I.A.) இற்கு கிடைத்துள்ளது. மேலதிக விபரம் http://www.oscars.org/awards/81academyawards/nominees.html
-
- 61 replies
- 12.3k views
-
-
காட்சி - ஒன்று இடம் : தமிழீழத்துக் கடற்கரையோரம் ஒரு குடிசை பாத்திரங்கள் : சிற்பி, ஒரு பெரியவர் நேரம் : மதியம் (குடிசைக்குள் "டக் டக்" என்ற ஒலி எழும்பிக்கொண்டிருக்கிறது. தூரத்தே கடலலைகளின் ஓயாத இரைச்சல் ஒலித்துக்கொண்டிருக்கிறது... குடிசையை நோக்கி அந்தப் பெரியவர் வந்து கொண்டிருக்கிறார்) பெரியவர்: அதோ! ஒரு குடிசை தெரிகிறதே! அங்கே போய் யாராவது இருந்தால் உதவி கேட்போம்! ('டக் டக்' - ஒலி ஓயவில்லை) குடிசைக்குள் யாரய்யா? (பெரியவருக்கு கீழ்மூச்சு - மேல் மூச்சு வாங்குகிறது) சிற்பி : (குடிசைக்கு வெளியே ஓடி வந்து) வாருங்களய்யா! வாருங்கள்! இப்படி உடம்பெல்லாம் நனைந்து, மூச்சு வாங்க வருகின்றீரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன நடந்தது? …
-
- 14 replies
- 3.1k views
-
-
-
- 2 replies
- 666 views
-
-
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் ஆய்விதழ் தமிழியல் - Journal of Tamil Studies இல் 1972 முதல் வெளியான அத்தனை ஆய்வுக் கட்டுரைகளும், புத்தக மதிப்புரைகளும் சுமார் 9000 பக்கங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் நிலையில் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. http://www.ulakaththamizh.org/default.aspx என்ற பக்கத்தில் இதனைப் பார்க்கலாம். இதுவரை Journal of Tamil Studies இல் 76 இதழ்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் கடைசி 4 இதழ்கள் நீங்கலாக, அதாவது முதல் ( 001 - September 1972 ) இதழ் தொடக்கம் எழுபத்திரண்டாவது ( 072 - December 2007 ) வரையிலான இதழ்களில் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் நீங்கள் தரவிறக்கம் செய்யலாம். 306 முதன்மைக் கட்டுரையாளர்களால் எழுத…
-
- 0 replies
- 1.6k views
-
-
பழைய யாழில் இருந்து சண்முகி என்ற சகோதரி இணைத்தது பிடித்திருந்ததால் மீண்டும் வருகிறது. 1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள். 2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள். 3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள். 4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள். 5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள். 6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகள…
-
- 16 replies
- 2.3k views
- 1 follower
-
-
இன்று தாய்த்தமிழகம் தொடக்கம் உலகம் முழுவதும் தமிழனுக்கு என ஒரு நாடு இல்லாத நிலையில் தமிழ் மொழியை நாம் திணிப்பதில் தான் நாம் வெற்றிபெற முடியும். இதில் தமிழ் இசையமைப்பாளர்கள் பங்கு, திரைப்படம் மற்றும் அதன் தொன்மை பற்றை நாம் அனைவரும் பேச வேண்டிய தேவை முக்கிய பங்கு வகிக்கின்றது. #1 : இந்தி சுத்தமான மொழி, தேசிய மொழி என்று சொல்பவர்களுக்கு இந்தி நடிகர் ஒருவர் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார். தமிழ்தான் உலகிலேயே மிகவும் பழமையான செம்மொழி. எனவே இந்தி குறித்து பெருமை அடித்துக் கொள்வோர் தமிழைத்தான் கற்க வேண்டும். ஒரு இந்தி விரும்பியான நானே இதை மனதார சொல்கிறேன். இந்தி நாடு முழுவதும் பாப்புலராக இல்லாத நிலையில் அதை திணிக்க முயல்வது தவறானதாகும். இதை உணர வேண்டும். உல…
-
- 49 replies
- 6k views
-
-
ஊர்காவற்றுறைக் கோட்டை வட இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட கோட்டைகளில் ஊர்காவற்றுறை ஹீ மென்கில் கோட்டை வரலாற்றில் முக்கியம் பெறுகிறது. இக்கோட்டையானது ஊர்காவற்றுறை – காரைநகரினை பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியில் போர்த்துக்கீசரினால் கட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றி ஆட்சி செய்த போது ஊர்காவற்றுறை கோட்டையினை மாற்றியமைத்து தற்போதைய வடிவத்தினையும் பெயரையும் பெற்றது என்றும் கூறப்படுகின்றது. இக்கோட்டையானது ஒல்லாந்தர் காலத்தில் நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இது முதன்முதலில் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதிற்கு ஆதாரங்கள் உள்ளன. இக்கோட்டையில் இருந்து இந்த…
-
- 0 replies
- 888 views
-
-
வணக்கம், இண்டைக்கு ஜெயா ரீவியில் திரைப்பட விருதுகள் நடைபெறும் நிகழ்ச்சி ஒண்ட தொலைக்காட்சியில பார்த்தன். ஒவ்வொருத்தரும் விருத வாங்கேக்க விருது குடுத்தவருக்கு தங்கியூ தங்கியூ தங்கியூ எண்டு சொல்லிச்சீனம். ஒருத்தனாவது நன்றி சொன்னதா தெரிய இல்ல. நான் வாய் அசைவ வச்சுத்தான் கண்டுபிடிச்சன். தங்கியூ எண்டு சொல்லிறதுக்கும், நன்றி எண்டு சொல்லிறதுக்கும் வாய் அசைவில சரியான வித்தியாசம் இருக்கிது தானே..? நீங்கள் யாராச்சும் இந்த நிகழ்ச்சி பார்த்தனீங்களோ? விருது வாங்கின யாராவது நன்றி எண்டு சொன்னத நீங்கள் கேட்டனீங்களோ? தெரிஞ்சால் சொல்லுங்கோ. நானும் தங்கியூ தாராளமா பாவிக்கிறது. ஆனால்.. இப்பிடி ஆக்கள் தமிழில செய்த ஏதுக்கும் விருது தரேக்க தங்கியூ எண்டு சொல்லமாட்டன் எண்டு ந…
-
- 6 replies
- 1.6k views
-
-
இந்தோனேஷியாவில் சோழ வம்சம் வாழ்ந்ததற்கான சான்று.! எப்படி இந்த சிலைகள் இங்கு வந்தன? என்ற கேள்வி அனைவருக்கும் இருக ்கும், இந்தோனேஷியாவில் உள்ள ஒரு தோட்டத்தில் பள்ளம் தோண்டும் போது அங்கு அகத்தியர் சிலை மற்றும் நந்திதேவர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த சிலைகள் எவ்வாறு இங்கு புதைக்கப்பட்டது என்று விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதற்கு முன்னரும் இந்தோனேஷியாவில் இவ்வாறு பல இடங்களில் இந்து கடவுள் சிலைகள் கிடைக்கப்பெற்றது எப்போதும் நாம் அனைவரும் அறிந்த வியமாகும்.குறித்த சிலைகள் இங்கு கிடைக்கபெற்றதால் இந்தோனேஷியாவில் சோழ வம்சம் ஆட்சி செய்த பகுதி என்பதற்கான மற்றொரு ஆதாரம் கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை ப…
-
- 0 replies
- 773 views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் தமிழகர்களின் பாரம்பரிய மருத்துவ முறை என கருதப்படும் சித்த மருத்துவ முறை பல பெருந்தொற்று காலங்களை கடந்து இன்று கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தனது பங்கை ஆற்றி வருகிறது. ஏன் எல்லை கடந்து பயணிக்கவில்லை? சித்தர்களால் பழங்காலத்தில் எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள மருத்துவ குறிப்புகளின்படி வைத்தியம் பார்ப்பது அல்லது மூலிகை தயாரிப்பது, சித்த மருத்துவமுறை என கருதப்படுகிறது. இந்த சித்த மருத்துவம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறையாக கருதப்பட்டாலும், ஆங்கில மருந்துகளை போன்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு நவீன அறிவியல் மொழியில் அதனை இயற்றாமல் போன காரணத்தால் இந்த மருத்துவ…
-
- 0 replies
- 952 views
-
-
வீரம் நிறைந்தவர்கள், ஆம் நாங்கள் தமிழர்கள்… 19 Views “தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கொரு குணமுண்டு.” என்று தமிழரை அடையாளப்படுத்தினர். வேறு எந்த இனத்திற்கும், மொழிக்கும் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. காரணம் மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதைவிட எப்படி வாழக்கூடாது என்று வாழ்வியலை கற்றுக் கொடுத்த, தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்று உலகம் முழுவதும் தடம் பதித்திருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும், சமூகம் என்னும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கின்றது என்று தானே அர்த்தம். பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல்பு எடுத்துக் கூறுகின்றது. மேலும் வீரர் அல்லாதவர்கள் புறங்…
-
- 0 replies
- 7.3k views
-
-
வேருக்கு நீர் வார்த்தவர்கள்: தமிழ்மொழியின் தொன்மையும் மாண்பும்! By வித்துவான் பாலூர் து.கண்ணப்ப முதலியார் தமிழ்மொழி தொன்மையானது என்பது வான்மீக ராமாயணமும், வியாசர் மகாபாரதமும் கூறுமாற்றால் அறியலாம். பாரதத்தில் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்பு வருகிறது. வானரங்களுக்குச் சுக்ரீவன், ""நீங்கள் மலைய மலையின் சிகரத்தில் அகத்தியரைக் காண்பீர்கள். அவர் ஆணை பெற்றுப் பாண்டியர்க்கு உரித்தான கபாடபுரத்தைக் காண்பீர்கள்'' என்று கூறிய குறிப்பு வான்மீக ராமாயணத்தில் வருதல் காண்க. பாண்டியர்களைப் பற்றிய குறிப்பு அந்நூலில் காணப்படுதலின், அவர்களின் மொழியாகிய தமிழின் பழமையும் இதன் வழி அறியவருகிறது. பாண்டியநாடு தமிழ் வளர்த்த நாடு என்பது, ""சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும…
-
- 0 replies
- 1.3k views
-
-
இடைக்காலத் தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் வெள்ளமும் தடுப்பும் 1. இயற்கைப் பேரிடர்களில் வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளிலும் விளைநிலப் பகுதிகளிலும் மீட்கமுடியாத விளைவினை காலந்தோறும் ஏற் படுத்துகிறது. இதனை எதிர் கொண்டு தடுக்கும் முயற்சிகளில் இன்றைய காலகட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். வரலாற்றுக் காலங்களில் வெள்ளத் தினைத் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மக்கள் எப்படி மேற்கொண்டனர் என்பதனை அறிவதே இக்கட்டுரையின் நோக்கம். நிலவுகிற நிலப்பரப்பியலுக்கு ஏற்ப வெள்ளம் மக்களைப் பாதிக்கிறது. குடியிருப்புப் பகுதிகளில் மனிதர்களையும் அவர்களின் செல்வங்களான வளர்ப்பு விலங்குகளையும் அழிப்பதோடு அவர்களுடைய பொருள் சேமிப்பினையும் அழிக்கிறது. விளைநிலப்பகுதிகளில் அவர்களின்…
-
- 0 replies
- 715 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
எனக்கு ஒரு கேள்வி அல்லது சந்தேகம் வருகிறது.. ஏன் பொங்கு தமிழ் நிகழ்வு இந்தியாவில் நிகழ்த்தபடுவதில்லை??? யாராவது முயற்சி செய்திருக்கிறார்களா???
-
- 5 replies
- 1.7k views
-
-
மொரீசியஸ் நாட்டில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறை தூணில்... பிரெஞ்சு மற்றும் தமிழில் கல்வெட்டு கி.பி. 1700-ம் ஆண்டு வைக்கப்பட்டுள்ளது.Tamil and French language inscription found on a 18th century grave tomb (1700 B.C.) in Mauritius. London tamil cultural center
-
- 0 replies
- 579 views
-
-
தமிழ்நெற் வழங்கும் தமிழ் எழுத் தொலிபெயர்ப்பு தமிழை ஆங்கிலத்தில் எளிமையாக வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் வசதி யான எழுத்தொலிபெயர்ப்பு முறை ஒன்றை தமிழ்நெற் தற் போது பயன் படுத்திவருகிறது. இந்த முறையை, கணனியில் இலகுவாகக் கையாளலாம். தமிழை, ஆங்கிலம் எழுதும் உரோமன் எழுத் துக்களுக்குத் தானாகவே மாற்றுவதற்கும் உரோமன் எழுத்துக்களில் எழுதப்பட்ட தமிழ் ச்சொற் களைத் தானாகவே தமிழுக்கு மீள்பெயர்ப்பதற்கும் கணனியைப் பயன் படுத்தக் கூடிய முறை ஒன்றையும் தமிழ்நெற் உருவாக்கியுள்ளது. இந்த எழுத்தொலிபெயர்ப் புக்கான விளக்கங்களும் விதிமுறைகளும் வழிகாட்டி களும் இங்கு தரப்பட்டுள்ளன. பயன்படுத் திப் பார்க்க விரும்புவோருக்காக, தன்னியக்க எழுத்தொலிபெயர்ப்புக் கருவி ஒன்றும் இங்கு இணைக்கப் …
-
- 0 replies
- 1.3k views
-
-
அறிஞர்கள் பெரியோர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு கருத்துக் களத்திற்கு வந்த ஒருவன் தெளிவு பெறவேண்டும். ஆனால் நான் தமிழ்க் களத்தை சுற்றிப் பார்த்து பலரது கருத்துக்களையும் வாசித்த பின் குழம்பிப் போய் நிற்கிறேன். என்னடா அடிமடியிலேயே கை வைக்கிறானே என்று யோசிக்காதிங்கோ. தெளிவு பெறத்தான் கேட்கிறேன். தமிழன் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்களை பட்டியலிடுங்கள். தமிழ் மொழி பேசும் தாய் தந்தையருக்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன் தமிழ் மொழி பேசும் தாய்க்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன் தமிழ் மொழி பேசும் தந்தைக்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன் தமிழ் ஈழ எல்லைக்குள், தமிழ் நாட்டில் பிறந்தால் அவன் - தமிழன் பார்ப்பனியர் அல்லாதோர் - தமிழர் தமிழ்மொழி பேசுபவன் - தமி…
-
- 25 replies
- 6.4k views
-
-
"தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils!" / பகுதி / Part 01 [In English & Tamil] பொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் உள் அடங்கியிருக்கின்றன என்பது யாருக்கும் பொதுவாக தெரியாது. தமிழ் நிலங்களில் கார்த்திகை மாதம் வரை மழை இருக்கும். மார்கழி மாதம் வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும். மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும். தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. அதனால் தை என்னும் பெயர் இந்த மாதத்திற்கு வந்திருக்கலாம…
-
- 0 replies
- 230 views
-
-
-
- 0 replies
- 476 views
-
-
-
- 1 reply
- 1k views
-