யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
43 topics in this forum
-
2015 இல் அண்ணனின் மகனுக்கு திருமணம் என்று சிட்னி அவுஸ்திரேலியா போயிருந்தேன்.அண்ணியின் குடும்பம் கொஞ்சம் பெரியது.லண்டன் பிரான்ஸ் ஜேர'மனி என்று தூர இடங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.நான்காம் சடங்கு முடியும் வரை ஒரே மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் நண்பர்கள் என்று வந்து போய்க் கொண்டிருந்தனர்.நாளாக ஆக வருவோர் போவோரும் குறைந்து விட்டது.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.அதற்கிடையில் எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு இடமாக கூட்டிக் கொண்டு போய் காட்டினார்கள். நாளைக்கு எல்லோரும் திறி சிஸ்ரேசைப் பார்க்க போகிறோம்.10 மணிக்கு இங்கிருந்து வெளிக்கிட வேண…
-
- 25 replies
- 18k views
-
-
பெண்கள் பிறந்த நாள் தொட்டு பெற்றோரை, கணவனை, பிள்ளைகளை நம்பித்தான் அல்லது சார்ந்துதான் வாழவேண்டுமா??? என்றால் இல்லை என்னும் பதில் பல ஆண்களிடம் இருந்து வரலாம். ஆனால் அவள் பிறப்புத் தொடக்கம் இறப்புவரை ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு தன் சுய விருப்பு வெறுப்புக்களை மென்று விழுங்கியபடி மற்றவருக்காக வாழவேண்டிய நிலைதான் எம் பெண்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தை விடுவோம். புலம் பெயர்ந்து மற்றைய சமூகத்துடன் வாழும் எம்சந்ததிப் பெண்கள் அந்நாடுகளில் பல நிலைகளில் இருந்தாலும் இன்னும் ஆணுக்கு ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாது வாழ்ந்து வருவது உங்களுக்குத் தெரியாததல்ல. ஆண்கள் சிறுவர்களாக இருந்தபோதும் சரி வாலிபர்களானபின்னும்சரி மணமுடித்த பின்னும்கூட தம் நண்பர்…
-
- 85 replies
- 13.5k views
-
-
புதிய ஊர்கள் நாடுகள் பார்ப்பதில் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விருப்பம் தான். ஆனாலும் பணம் பணம் என்று அதைச் சேர்ப்பதில் உள்ள ஆர்வம் செலவழிப்பதில் இருப்பதில்லை பலருக்கு. யேர்மனியில் வசித்தபோது நானும் கணவருமே முழுநேர வேலை செய்தோம். முழுநேரம் என்றால் எட்டே எட்டு மணிநேரம் தான். அதற்குமேல் பெரும்பாலானவர்கள் வேலை செய்வதில்லை. ஆண்டில் ஆறு வாரங்கள் விடுமுறை உண்டு. சம்பளத்துடன் ஒரு நாளுக்கு 32 டொச் மார்க்குகள் மேலதிகமாக விடுமுறைக்காகத் தரப்படும். அப்ப சொந்த வீடும் ஒருத்தரிட்டையும் இல்லை. அதனால் மற்றவரைப் பார்த்துப் புகைந்து நாமும் சொந்த வீடு வாங்கவேணும் எண்ட துன்பமும் இல்லை. வாடகை லண்டன் போல் உச்சத்துக்கு போவதும் இல்லை. ஒருவரின் உழைப்பிலேயே மிக மகிழ்வாக வாழக்கூடிய நிலை. நத்த…
-
- 44 replies
- 8.2k views
-
-
பார்க்கும் இடம் எங்கும் வெண்பனி ஓவியங்கள் வரைந்திருந்தது. குளிரும் இம்முறை அதிகம். பனிப்பொழிவைப் பார்ப்பதும் இரசிப்பதும் மட்டுமே போதுமாக இருந்தது சந்தியாவுக்கு. கணவனும் மகளும் வெளியே நின்று பனித்துகள்களை அள்ளி விளையாடி மகிழ இவள் ஜன்னலூடாக அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டினுள் கீற்றர் போட்டு வெப்பமாகத்தான் இருந்தது. ஆனாலும் வெளியே பார்க்க வீடும் குளிர்வதாய் எண்ணம் தோன்ற, யன்னலை விட்டு உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள் சந்தியா. சிறிது நேரத்தில் கணவனும் மகளும் உள்ளே வர ஈரமாக்கிப் போன மகளின் உடைகளைக் களைந்துவிட்டு வேறு உடை அணிந்துவிட்டு நிமிர கணவனும் உடைமாற்றிவிட்டு வந்தமர்ந்தான். "எதையும் உமக்கு ரசிக்கத்தெரியாது. எங்களோட வெளியில வந்திருக்கலாம் தானே. ரசனை கெட்ட…
-
- 41 replies
- 4.8k views
-
-
கள உறவு கவி அருணாச்சலத்தின் பதிவுகைளைத் தொடர்ந்து படித்தபோது ஒரு பதிவிடத் தோன்றியது. உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது ஒரு விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. இந்தப் பதிவு அதிகபட்சம் இந்த விமர்சனம் சார்ந்தது தான். பதிவிற்குள் போவதற்கு முன்னர். உங்கள் கதைமாந்தர்களின் காலத்தை வைத்து நீங்கள் என்னைக் காட்டிலும் பதினைந்து முதல் இருபது வயது பெரியவர் என்று எண்ணுகிறேன். ஆர்வமாக நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது மிக ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதும். இந்த விமர்சனம் எவ்வகையிலும் உங்கள் மன அமைதியைக் க…
-
- 10 replies
- 2.4k views
-
-
முருகமூர்த்தி அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர். பெற்றோர்கள் எந்த மதத்தை கடைப்பிடிக்கிறார்களோ அந்த மதக்கடவுளின் பெயர்களை வைப்பது எம்மவர்களின் மரபு அந்த வகையில் அவனுக்கும் அந்த பெயர் அவனின் அனுமதியின்றி ஒட்டிக்கொண்டது.ஆசிரியர் இடாப்பு கூப்பிடும்பொழுது மட்டும் முருகமூர்த்தி என்று அழைப்பார்.மற்றும்படி முருகா,முருகு ,முருகன் என்றுதான் அழைப்பார்கள், அவனது வீட்டுக்கு அருகில் முருகன் கோவில் உண்டு பரம்பரை பரம்பரையாக அவனது முன்னோர்கள் வழிபட்டு வந்த கோவில்.அவன் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதே பாட்டி அழைத்து சென்று கற்பூரம் கொழுத்தி விளக்கேற்றி வருவார்,சில சமயம் கோவில் முற்றத்தை துப்பரவு செய்வார்.நான் இல்லாத காலத்தில் முருகு நீ தான் வெள்ளிக்கிழமைகளில் வந்து விளக்கேற்றி வைக்கவேணும…
-
- 26 replies
- 5.8k views
- 1 follower
-
-
டாக்ரர் சிவராமின் அறிவுரைகளைக் கேட்டதிலிருந்து ரொம்பவுமே குழப்பமாக இருக்கிறது. எனக்கு 1997 இல் இருதயநோய் வந்தது.இந்த நோய்க்கேற்ற சாப்பாடு ஓட் தான் என்று டாக்ரர்கள் மட்டுமல்ல பார்க்க வந்தவர்களுமே சொன்னார்கள். மெத்தப் படித்தவர்கள் பெரியவர்கள் எல்லோரும் சொன்னால் தட்ட முடியுமோ?அன்று தொடக்கம் இன்று வரை காலை உணவு ஓட் தான்.எனக்காக நலமாக இருக்கும் எனது மனைவியும் என்னுடன் சேர்ந்து தானும் ஓட்சைத் தான் சாப்பிடுவார்.எங்கேயாவது போனால் கூட நாய்க்குட்டியை கொண்டு திரிவதைப் போல ஒரு ஓட் பொதியையும் சுமந்து கொண்டு தான் வருவார். இப்போ இந்த டாக்ரரின் உரை அறிவுரையைக் கேட்ட பின் ஓட்சை எப்படி தயாரிக்கிறார்கள்? எந்த எந்த இரசாயனங்கள் ஏன் கலக்கிறார்கள்? …
-
- 31 replies
- 4.7k views
-
-
முன்னொரு காலத்தில் யாழ் அதிகம் இளையோரைக் கொண்டிருந்தது. தற்போது, நான் பார்த்தவரைக்கும் இது மாறியுள்ளது. அந்தவகையில் வாழ்வு சார்ந்து யாழ் கள உறவுகளின் அனுபவங்களைப் பெறுவதற்காக இந்தப் பதிவு. போராட்டம் நடந்தவரை, ஈழத் தமிழர்களிற்கு வாழ்விற்கு அர்த்தம் தேடும் தேவை இருக்கவில்லை. ஒரு சாரார் போராட்டத்தோடு ஒன்றியிருந்து அதன் அர்த்தம் நமது அர்த்தம் என வாழ்நதார்கள், பிறிதொரு சாரார் எதிரிகளாக போராட்டத்தின் பிறழ்வுகளைக் கோடிட்டுக்காட்டுவது வாழ்வின் அர்த்தம் என்று வாழ்தார்கள். மிகுதிப் பேர் தமக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, ஆனால் நடக்கின்ற போராட்டத்தின் வீச்சு தம்மையும் தொட்டுவிடக்கூடாது என்ற கவனமே குறியாக, தாம் அது அல்ல (தாம் அதற்கு மேலானவர்கள்: ஆன்மீகம், நண்பர்கள், வர்க்…
-
- 38 replies
- 6.9k views
-
-
ஆலமரமும் அழியாத ஞாபகமும் - சாந்தி நேசக்கரம் - __________________________________ வேர்கட்டிய மண்ணின் ஆழத்தை அழி(ரி)த்தது மழை. ஊர்கட்டி வளர்த்த காலத்தின் க(வி)தை இறுக்கம் தளர்ந்து சரியத் தொடங்கியது. வல்லியர் காலத்து வைரம் வசந்தம் காணாமல் இரவடி(ழி)த்த மழையின் பெயரால் பாறி வீழ்ந்தது. எம்மூரின் பரம்பரை ஆல்விழுதின் கதை விடிய முதல் ஆயுள் முடிந்தது. இருந்தவரை நிழல் நாங்கள் ஊஞ்சலாட விழுது ஊர் மடியில் கனத்தோரின் கதையறிந்து கண்ணீர் துடைத்த தோழமை. சோளகக் காலம் கால்நடைகள் உணவாக ஆலிலைகள் தந்த உரம் பாய்ந்த மரம். எங்கள் பெரிய ஆலமரம் ஓரிரவில் குடைசாய்ந்து ஓய்ந்தது உயிர். பங்கு பிரித்து கோடரி…
-
- 10 replies
- 5.4k views
-
-
நாய்க்குட்டி தனது படுக்கையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது. அந்த நிமிடத்தில் அது பார்ப்பதை மட்டும் செய்து கொண்டிருந்தது. நாளைக்கான திட்டமிடல்களோ நேற்றைய நினைவுகளோ நாய்க்குட்டியிடம் இருப்பதில்லை. மகிந்தன் நாய்க்குட்டியினை நிலைகுத்திப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள், நாயின் கண்கள் என்ற வித்தியாசங்கள் அவனுள் மறைந்து, இடையில் இணையவலை இருப்பது மறந்து இந்தக் கதையினை இப்போது படித்துக்கொண்டிருக்கும் வாசகரைப் போல, மகிந்தனிற்கு நாய்க்குட்டி தெரிந்தது. நாய்க்குட்டிக்கும் தனக்கும் இடையே இருந்த தூரமோ நேரமோ அவனிற்குள் மறைந்து போனது. மிகமிகப் பழைய காலத்தில், படைப்பெதுவும் நடப்பதற்கு முன்னால், ஆதிக்கு முந்திய ஒரு ஆதிக் கணம் இருந்தது. அது வெறுமையாய் இருந்தது. ஒன்றில் …
-
- 15 replies
- 2.5k views
-
-
கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே இது ஒரு கறுப்பு வெள்ளைக் கதை. பல வருடங்களுக்கு முந்தியது. நான், பாடசாலை முடிந்து வந்து மாலையில் கிளித்தட்டோ, கிரிக்கெற்றோ விளையாடிய காலம். ‘ட’ வடிவில் அமைந்த ஒரு காணிதான் எங்கள் விளையாட்டுத் திடல். காணியின் ஒரு பக்கம் மரங்கள் எதுவுமின்றி வெளியாக இருக்கும். மற்றைய பக்கத்தில் பனைமரங்கள் நிறைய இருக்கும். அது பீற்றர் குடும்பத்துக்கு சொந்தமானது. கிரிக்கெற் விளையாடும் போது பந்து பீற்றர் குடும்பத்துக் காணிக்குள் போய் விழுந்து விட்டால் பந்தை யார் போய் எடுப்பது என்பதில் எங்களுக்குள் சண்டையே வரும். பீற்றர் வீட்டில் கழிப்பிட வசதி கிடையாது. அந்த பனைக்கூடல்தான் அவர்கள் `குடும்பத்துக்கான திறந்தவெளிச் ‘சுழல் கக்கூஸ்’. (கொஞ்சம் அதிகமா…
-
- 7 replies
- 2.3k views
-
-
இது விஞ்ஞா ஆய்வு இல்லை. செயற்கை அறிவு பற்றிய ஆரம்ப விளக்கம் மட்டுமே. *** பிரபஞ்ச வரலாற்றைப் பற்றிப் பேசும்போது மனிதனை அறிவார்ந்த வடிவம் (intelligent form) என்று குறிப்பிடுவார்கள். மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகள் தாவரங்கள் கூட வரயறைக்கு உட்பட்ட அறிவார்ந்த வடிவங்களே. பசி எடுத்தால் உண்ணவைத் தேடிச் செல்லவும் ஆபத்தை உணர்ந்தால் பாதுகாத்துக் கொள்ளவும் குளிர் மழையில் பாதுகாப்பாக ஒதுங்கவும் விலங்குகள் போதிய அளவு அறிவுடையவையாக உள்ளன. மனிதனும் இதே நிலையில் தான் சுமார் 30 லட்சம் வருடங்களுக்கு முன்னர் இருந்துள்ளான். மனித இனம் வேகமாக வளர்ச்சியடைய ஒரு காரணியாக மனிதன் மொழிகளை உருவாக்கிக் கொண்டதைக் குறிப்பிடலாம். மொழி மூலம் தனக்குத் தெரிந்ததை இன்னொருவருக் விளக்கமாகப் …
-
- 29 replies
- 6.8k views
- 1 follower
-
-
வசந்தகாலச் சோதனை நான் பிரான்சுக்கு வந்து 3 வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இளமைப் பருவம், அரைகுறை பிரெஞ்சு மொழி அறிவு, கொஞ்சம் படிப்பு, சிறு சிறு வேலைகள். ஊர்சுற்றல் என்று சுதந்திரப் பறவையாகப் பறந்து திரிந்த காலம் அது. அன்றொருநாள் வசந்த காலத்தில் காட்டுப் பகுதியில் நடக்கும் காணிவேல் ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். என்னிடம் இருந்த் 50 பிராங்கில் சாண்ட்வீச் வாங்கிச் சாப்பிட்டது போக மீதியை விளையாட்டுகளுக்குக் கொடுத்துத் தோற்றுவிட்டு காட்டுப் பாதையால் வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தேன். சில நாட்களாகவே தடிமன் போன்று மூக்கு வடிந்தபடியும் இருமல் போன்றும் இருந்தது. அதுவரை அதைப்பற்றிக் ககவலைப் படவில்லை. ஆனால் அன்று வழமைக்கு மாறாக வித்தியாசமாக இருந்தது. மூச்சு விடக் கடினமாக…
-
- 23 replies
- 4.3k views
- 1 follower
-
-
காரும் கதியாலும். ஆட்டுப்பால் ....முலைப்பால்.....அன்பால்....! அந்தக் கிராமம் பிரதான வீதியில் இருந்து சில கிலோ மீட்டர்கள் உள்வாங்கி இருந்தது. அங்குள்ள மக்களும் விபரமானவர்களாகவும் அதே சமயம் வெள்ளந்தியானவர்களாகவும் இருந்தார்கள்.அங்கும் ஒரு பெரிய ஒழுங்கையில் இருந்து பிரிந்த சிறிய ஒழுங்கையில் சென்றால் அதன் முடிவில் எதிர் எதிராக இரண்டு வீடுகள்.அதில் ஒரு வீடு தங்கராசுவின் வீடு .அவன் மனைவி தனலட்சுமி. நண்டும் சிண்டுமாய் நாலு பிள்ளைகள். மூத்தவனுக்கு ஏழு வயசிருக்கும்.அடுத்த ஐந்து வயசில் ஆணும் பெண்ணுமாய் இரணைப்பிள்ளைகள்.மற்றது கைக்குழந்தை.அவர்களிடம் ஒரு சிறிய மொரிஸ்மைனர் கார் உண்டு. அதில்தான் வேலைக்கு போய் வருவது.தங்கராசுவுக்கு ஒரு ஆசை....ஒரு பெரிய ஃபரினா கேம்பிரிட்ஜ் வாங்க…
-
- 12 replies
- 3.4k views
-
-
ஓய் மனிசி.. என்ன ஒரே பேஸ்புக்.. வைபர்.. வாட்ஸ் அப் என்று இருக்கீங்க.. உதில அடிக்ட் ஆகிட்டால்.. அவ்வளவும் தான்.. குடும்பம் களேபரமாகிடும். அப்படிங்களாங்க.. யுனில இருக்கேக்க.. பாவிச்சுப் பழகிட்டன். கொஞ்சம்.. கொஞ்சமா குறைக்கப் பார்க்கிறன். ஆனால்.. முழுக்க நிற்பாட்ட ஏலாது...உடனடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தான்.. குறைக்கனும். சில மாதங்கள் கழித்து........ ஓய் மனுசா.. அதென்ன.. இவ்வளவு வேகமா ரைப் பண்ணிட்டு இருக்கிறீங்க.. அது ஒன்னுமில்ல.. எங்க பார்ப்பம்.. அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ.... ஐயையோ.............................................. நானும…
-
- 31 replies
- 5.1k views
- 1 follower
-
-
வடையும் மோதகமும் அண்ணன் தம்பிகள் சூசை ஒரு Bci பட்டதாரி. அந்தப் பட்டப் படிப்புக்காக அவன் பல்கலைக்கழகம் எங்கும் போகவில்லை. அந்தப் பட்டத்திற்கான தகுதியை அவன் சினிமா தியேட்டர்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டான். பருத்தித்துறை சென்றல், வல்வெட்டித்துறை யோகநாயகி, புலோலி காசில், நெல்லியடி மகாத்மா, லக்சுமி தியேட்டர்கள்தான் அவனை (Bachelor of Cinema) பட்டம் பெற வைத்த முக்கிய கூடங்கள். எவ்வளவு கேவலமான படங்களாக இருந்தாலும் முதல்நாள் முதல் காட்சியில் பிரதம விருந்தினராக சூசை இருப்பான். அவனிடம் சினிமா சம்பந்தமாக எது கேட்டாலும் பதில் கிடைத்து விடும். அறுபதுகளின் பிற்பகுதியிலேயே வானொலியில் பாடல்களை ஒலிபரப்பும் போதே அதை எழுதியவர், இசையமைத்தவர், பாடியவர்கள் விபரங்களையும்…
-
- 13 replies
- 3.1k views
-
-
அரோஹரா!ஆறுமுகா! “அந்தக் கூட்டத்துக்குள்ளை நேற்று உன்னைக் காணேல்லை” திங்கட்கிழமை வேலை இடத்தில் மரியா என்னைக் கேட்ட போது, எந்தக் கூட்டத்தை அவள் சொல்கிறாள் என்பது எனக்கு முதலில் புரியவில்லை. அவளே தொடர்ந்தாள். “இத்தாலியில் வீதியில் வைச்சு ஆளாளுக்கு தக்காளி அடிச்சு ஒரு விளையாட்டுவிழா (Tomatina Festival) நடக்குமே அது போலை உங்கடை நாட்டிலையும் தேங்காய் அடிச்சு விளையாடும் ஒரு விளையாட்டுவிழா இருக்குதோ? ” “நீ என்ன சொல்ல வாறாய்?” நேற்று, போக்குவரத்து வீதியை மறிச்சு தடை போட்டிருந்தார்கள். அதாலை அடுத்த வீதியாலை போகவேண்டி வந்திட்டுது. என்ரை காரைத் திருப்பிக் கொண்டு அடுத்த வீதிக்குப் போற பொழுதுதான் பார்த்தன், உன்ரை நாட்டுக்காரர்கள் நிறையப் பேர் வீதியிலை ஊர்வ…
-
- 12 replies
- 2.5k views
-
-
ஆசைகளின் அலைதலுடன் அவாக்கொண்டு காத்திருந்தேன் எத்தனை ஆண்டுகள் ஆனபின்னும் அத்தனை முகங்களும் கண்முன்னே கனதியாய் கண்ணாமூச்சியாடியபடி காலம் எண்ணிக் காத்திருந்தேன் கனவுகளின் கால்பரப்பலுடன் மனத்துள் நெருடிய முள்ளகற்றி என் தேசம் என்னும் எண்ணம் அகன்றிட ஆர்ப்பரித்த மனம் அடங்கிப் போனது மனித முகங்கள் முதிர்வாய் மாறி ஊரின் தெருக்கள் சிறிதாய் ஆகி அயலின் நெருக்கம் அறுந்தே போக அந்நிய தேசம் ஆனது வீடு வெறிச்சோடிய வீதிகள் நடுவே விண் தொட்டன வீடுகள் ஆயினும் மண் அளைந்து மகிழ்ந்து கழிக்க மானுடப் பிள்ளைகள் எங்கே போயினர் கிட்டிப்புள் விளையாடிய கிழவர்க…
-
- 18 replies
- 2.2k views
-
-
ஓடிய ஓட்டம் என்ன? எங்கள் ஊரின் அன்றைய அழகு தேவதை அவள்தான். பெயர் எல்சி. நிறம் வெள்ளை. அதனால்தான் ‘லொள்ளு’ விட பல இளைஞர்கள் அவளைச் சுற்றிச் சுற்றி சைக்கிளில் திரிந்தார்கள். அவர்களுக்குள் கவியும் இருந்தானா என்று கேட்கிறீர்களா? இல்லை என்று சொல்ல மாட்டேன். இருந்தான். அழகு என்பது பொதுவுடமை. அதை யாரும் ரசிக்கலாம்தானே. ஆனால் பயம் காரணமாக தூரஇருந்தே கவி ரசித்துக் கொண்டிருந்தான். தங்களைப் பார்த்து ஒருத்தியாவது சிரிக்க மாட்டாளா என்று ஏங்கும் இளம் வயது வாலிபங்கள் மத்தியில் எல்சி எல்லோரையும் பார்த்துச் சிரித்தாள். கவனியுங்கள் அவளுக்கும் பொதுவுடமைத் தத்துவம் தெரிந்திருக்கிறது. அவளுக்கு முழங்காலுக்கு கீழே இருக்கும் பாவாடை அணியப் பிடிக்காது. இதுவும் வாலிபங்களுக்கு அவளிடம் …
-
- 15 replies
- 3.7k views
-
-
இந்த உலகம் தொழிநுட்பத்தில் வளர்கிறது நாமும் அதன் போக்கில் காலத்துக்காலம் அதில் புதிய கண்டுபிடிப்புக்களில் ஈர்க்கப்பட்டு அதன் பின்பே சென்று கொண்டிருக்கிறம் என்பத விட ஓடிக்கொண்டிருக்கிறோம். நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சி நம்மை எவ்வாறு அடிமையாக்கிறது நமது வாழ்வை அது எப்படி விளையாடுகிறது என்பதே இந்த கதை. இலங்கை போக்குவரத்துசபை பஸ் மட்டும் கைபோட்டால் நிற்குமா என்ன? நிற்கவில்லை அந்த கொழுத்தும் வெயிலில் மீண்டும் அடுத்த பஸ்ஸ்சுக்காக காத்திருந்தேன் அந்த மொபலை நொண்டிக்கொண்டே இந்த போணும் இல்லையென்றால் நமக்கு வாழ்க்கை வெறுத்துவிடும் சாமி. என்ற நினப்பில் பஸ் கோர்ண் சத்தம் கேட்டது நிற்பானா ?மாட்டானா? என்று கைய போட்டாலும் அங்கே இறங்கும் பயணிக்காக நிற்பாட்டினான். உடனே ஏறிவ…
-
- 22 replies
- 2.9k views
-
-
இங்கு, எத்தனை பிழைகள்... உள்ளது? இணையத் தளங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்று, பிரபல செய்தி ஊடகங்கள் எழுதும்... தமிழ் எழுத்துக்களை வாசிக்கும் போது, அதில் வரும் தமிழ் எழுத்துப் பிழைகள்.... நாம்... கற்ற, பேசும் தமிழ் மொழியை கூட.... எது சரி, எது பிழை என்று, எமக்கே... சந்தேகம் வரும் போது, பெரும் சங்கடமாக இருக்கும். இங்கு... அந்த ஊடகங்களின் பெயரை குறிப்பிடாமல், அந்தச் செய்தியில் வந்த ஒரு பந்தியை... மட்டும் இணைக்கின்றேன். அதில் எத்தனை... பிழைகள் உள்ளது என்று, ஒரு, தமிழ் ஆசிரியராக..... உங்களை, நினைத்துக் கொண்டு... எத்தனை பிழைகளை.... கண்டு பிடிக்க முடிகின்றது என்பதே.... போட்டி. இதனால்... நாம் விடும் பிழைகளை, உங்கள் மூலம் அறியலாம…
-
- 18 replies
- 2.6k views
-
-
பெண் பார்க்கப் போறேன் அவர் ஒரு அங்கீகாரம் பெற்ற சீட்டுப்பிடிப்பாளர். சொந்தமாக கார், அதை ஓட்டுவதற்கு ஒரு ஆள், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர எடுபிடிகள் என எல்லாமே அவரிடம் இருந்தன. அத்தோடு முக்கியமாகப் பல பெண்களும் அவருக்கு நெருக்கமாக இருந்தார்கள். ஒருநாள், தனது குடும்பத்தார், நெருக்கமானவர்கள், எடுபிடிகள், பழகிய பெண்கள், சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு மாரடைப்பு வந்து தனியாளாகச் செத்துப்போனார். தந்தையின் இறப்புக்குப் பின் அவரது மூத்தமகன் கோபாலகிருஸ்ணன் அரியணை ஏறினான். தகப்பனைப் போலவே எடுபிடிகளுடன் மகனும் தொழிலை நடத்தத் தொடங்கினான். மிக விரைவிலேயே தந்தையை விட அதிதீவிரமாகப் பல பெண்களோடு நெருக்கமானான். தொழிலை விரிவாக்க, நகரத்தில் அடைவுக் கடை ஒன்றைய…
-
- 42 replies
- 4.7k views
- 1 follower
-
-
வேலாயுததத்தின் வீடு. வீட்டை சுற்றி பலா கமுகு பப்பாசி என மரங்கள் சூழ்ந்து சோலையாய் இருக்கின்றது,பின் பக்கம் மாதுளையும் தேசிமரமும், மரத்துக்கடியில் அடுப்பெரித்த சாம்பலை வேரை கரையான் அரிக்கமல் கொட்டிவிடுவது வழக்கம். மத்தியாண வெக்கைக்கு வீட்டு நாய்களும் படுத்திருக்கும் கோழிகளும் சாம்பல் அவ்வப்போது சம்பல் குளிக்கும். முன்பக்கம் சுவர் நீட்டுக்கும் நந்தியாவட்டையும் பக்கவாட்டில் குரோட்டன்களும் நாலுமணிப்பூச் செடிகளும் எப்போதும் செழிப்பாக இருக்கும் . வீட்டுக்கு ஈசான மூலையில் கிணற்றில் இருந்து குளிக்கும் தண்ணி சுவரோர பூச்செடிகளை எப்போதும் பசுமையாக வைத்திருக்கின்றது.. வீட்டு வாசலுக்கு இரண்டுபக்கமும் திண்ணைகள் மத்தியாணத்திலும் குழுமையாக இருக்கும்.. திண்ணைக்கு நே…
-
- 19 replies
- 2.4k views
-
-
யுத்தம் முடிவடைந்த பின்னர் நம்பிக்கை ஒளி என்னும் நிறுவனம் மூலம் அறிமுகம் ஆனாள் அவள். பிரடேனியாப் பல்கலைக் கழகத்தில் BSE செய்வதாக அவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அங்கிருப்பவர்களுக்கு பண உதவி மட்டும் செய்தால் போதாது. அவர்களை அரவணைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாரத்தில் ஒரு முறை அவளுடன் போன் செய்து கதைப்பேன். போரினால் தாயாருக்கு புத்தி சிறிது பிசகிவிட்டதாகவும் தமையனுக்கு காலில் சிறு காயம் என்றும் தானும் தம்பியும் படித்துக்கொண்டு இருப்பதாகவும் கூறினாள். தந்தையைப் பற்றிக் கேட்டபோது தந்தை போரின் பின் தம்முடன் இல்லை. தனியாக வாழ்கிறார் என்றும் கூறினாள். நீர் பிரடேனியா வந்துவிட்டால் யார் அம்மாவைப் பார்ப்பார்கள் என்றதற்கு அண்ணன் தான் பார்க்கிறார். அவருக்கும் கோழி வளர்ப்…
-
- 19 replies
- 2.2k views
-
-
வாத்தியார் தோட்ட வேலையை முடித்து விட்டு கைகால் அலம்பி கொண்டு "டேய் குகன் ஆட்டுக்கு குழை ஒடிச்சு போட்டனீயே" "ஒம் அப்பா " "எங்க அம்மா" "எங்க போறது இங்க தான் நிற்கிறேன், டி போடுறன் கொண்டு வாரன்" . "உவள் சுதா அவளோட கம்பசில படிக்கிற குகனை லவ் பண்ணுறாள்" "நீ கண்டனீயே" "பக்கத்து வீட்டு பவளத்திற்கு முன் வீட்டு பர்வதம் சொன்னவளாம்" "அவளுக்கு யார் சொன்னதாம்" "அவளுக்கு செல்வராணி சொன்னதாம்" "அவளின்ட கதையை கேட்டு ஒரு பொம்பிளை பிள்ளையின் வாழ்க்கையில் விளையாடதையுங்கோ, அவள் 'R Q' வேற வேலையில்லை ஊர் விடுப்புக்களை தன்ட இஸ்டப்படி சொல்லிக்கொண்டு திரிவாள் நீங்களும் நம்பிகொண்டிருங்கோ" செல்வராணி காலையில் வெளிக்கிட்ட என்றாள் பின்னேரம்…
-
- 20 replies
- 2.3k views
-