சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
உலக விலங்குகள் தினம் இன்று 04 Oct, 2025 | 12:19 PM ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 04 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக (World Animal Day) கொண்டாடப்படுகின்றது. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசியின் நினைவு தினம் ஒக்டோபர் 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதால் இந்நாள் விலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1925 ஆம் ஆண்டில் ஒக்டோபர் 04 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக பிரகடனப்படுத்தபட்டது. விலங்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் ஆகியவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் அழிந்துவரும் விலங்கு இனங்களைப் பாதுகாப்பது மனிதர்களதும் கடமையாகும்.எனவே விலங்குகளை பாதுகாத்து …
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
இலங்கையின் சுதந்திர தினமும் சிறுபான்மை இனமும் ! =========================================== இலங்கையில் மீண்டும் ஒரு சுதந்திர தினம் ஒரு தேசம், ஒரு கொடி, ஒரு மொழியெனக் கொண்டாடப்பட்டுள்ளது. வழமைபோல இம்முறையும் “இது எமது கொடியில்லை, தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை” போன்ற தமிழர் மத்தியில் கருத்துரைகளைப் பார்க்க முடிந்தது. அதேநேரம் தேசியகீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என்ற ரீதியிலான பதிவுகளை சில சிங்கள நண்பர்களின் பதிவுகளில் காண முடிந்தது. சிலர் தமிழர்கள், நாட்டின் தலைவர் சிங்களத்தில் மட்டுமே உரையாற்றியதைச் சுட்டிக் காட்டியிருந்தனர். அரசு இவை எதையும் கணக்கில் எடுக்காது, வழமைபோல தனது பாணியில் 73வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. சனாதிபதி தனது உரைய…
-
- 0 replies
- 611 views
-
-
“ தடை தாண்டிய பயணங்கள் “ ஆடி அமாவாசை விரதம் எண்டா அப்பா எப்படியும் வீட்ட வந்திடுவார் . எங்களுக்கு தெரிஞ்சு அப்போதிக்கரி அப்பா வெளி மாவட்டங்களில மட்டும் தான் வேலை செஞ்சவர் . கலியாணம் கட்டினாப்பிறகு தான் எனக்கும் ஏன் அப்பாக்கள் வெளி மாவட்டங்களில வேலை செய்ய விருப்பப்பட்டவை எண்டு விளங்கினது . ஆனால் அப்பா நான் நெச்ச மாதிரி இல்லை , கஸ்டபிரதேசத்தில வேலை செய்தா allowance வரும் எண்டதால தான் அப்பிடி வேலை செயதிருக்கிறார். லீவில வாற அப்பா யாழ்ப்பாணம் வந்து சேரேக்க அநேமா இருட்டத் தொடங்கீடும். கடிதத்தில முதலே date தெரியும் எண்ட படியா கிட்டத்ததட்ட நேரம் பார்த்து சிவலிங்கப்புளியடி bus stand ல நிண்டு ஒவ்வொரு பஸ்ஸா பாத்து பாத்து ( காத்திருக்கும் சுகம் காதலிகளுக்காக மட்டும் அல்ல) …
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
முதன்மைத் தமிழ் இராஜதந்திரப் போராளி- போன போக்காளி அன்ரன் பாலசிங்கம் எழுதியவர் -பஸீர் சேகுதாவூத் முன்னாள் பாராளு மஎன்ற உறுப்பினர் *********************** 2006 இல் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமிடையில் போர் மீண்டும் உக்கிரமாகத் தொடங்கிய நிலையில், வன்னியில் நின்ற அன்ரன் பாலசிங்கம் ஐயாவுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து அவை இயங்கா நிலையை அடைந்தன. அவருக்கு உடனடியாக அவசர உயர்தர சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. வன்னியில் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி இருக்கவில்லை. ஆகவே,புலிகள் கொழும்பு விமான நிலையம் ஊடாக பாலசிங்கத்தை லண்டன் அனுப்புவதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் கோரினர்.ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி…
-
- 0 replies
- 1.1k views
-
-
மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Ima…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஒவ்வொருவரிடமும் நேரமொதுக்கி விளங்கப்படுத்தும் டாக்ரர். போன இடத்தில் சிரமம் பாராது நோயாளர்களையும் பார்வையிடுகிறார்.
-
-
- 9 replies
- 912 views
- 1 follower
-
-
Part 1
-
-
- 5 replies
- 668 views
- 1 follower
-
-
பின்னேரம் புகைக்கூட்டடியில ஆணியில தொங்கிக்கொண்டிருந்த சுளகை எடுத்து அதில ஒட்டியிருந்த காய்ஞ்சு போன பழைய மாவை தட்டி சுரண்டிப்போட்டு , சாடையா நுனி கருகின நீத்துப் பெட்டியை கழுவி அம்மம்மா எடுத்து வைக்கேக்க அண்டைக்கு புட்டுத்தான் எண்டு தெரியும் . மூடி போட்ட பிளாஸ்டிக் பக்கட்டில இருந்து மூண்டு சுண்டு மா. பிளாஸ்டிக்கிற்கு முன்னைய காலம் சருவச்சட்டிலையும் அதுக்கு முந்தி மண் பானையிலும் தான் அரிசி மாவை போட்டு வைக்கிறது . ஒரு சுண்டு எண்டுறது பழைய ரின்பால் பேணி , சிலர் அளக்கிற பேணி எண்டும் சொல்லுறவை. சோறு எண்டால் அப்ப ஒரு சுண்டு மூண்டு பேருக்கு தான் காணும், புட்டுக்கு எண்டா இரண்டு பேருக்கு தான் சரி. ஆனால் இப்ப dieting எண்டு வந்தா பிறகு doctors advise பண்ணினம் c…
-
- 15 replies
- 1.8k views
-
-
http://www.vaarakesari.lk/article/10039 குருந்தூரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தமிழர்கள் மற்றும் இந்து பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களின் எதிர்ப்புகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கையில் உள்ள இந்துத்துவ சிவசேனை தலைவர்கள், குறிப்பாக மறவன்புலவு சச்சிதானந்தம், முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்பொருள் தளத்தில் நிறுவப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த விகாரையில் கல்கோமுவே சாந்தபோதி தேரருடன் இணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். குருந்தூர் பௌத்த விகாரைக்கு சென்று வழிபட்டதோடு மட்டுமால்லாது இவர் பிக்குகளின் இந்த கட்டுமானத்திற்கு ஆதரவும் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. இதன் ம…
-
- 14 replies
- 1.3k views
-
-
1958 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் சிலோன் (இலங்கை) இடையே தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை உலகின் இரண்டாவது மிக நீண்ட பேருந்து பயணமாக கருதப்படுகிறது. பயணத்தின் போது இந்த பேருந்து இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து கப்பலில் பேருந்தை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு பயணித்தது. 42 நாட்கள் 20000 கிலோமீட்டர் பயணம் செய்த இந்தப் பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்? Vino Rajacholan VII
-
- 1 reply
- 710 views
-
-
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: திரு அனுரா குமார திசாநாயக்க அவர்கள் மிக சில நாட்களில்/வாரங்களில் சாதிக்க போவதாக வழங்கியிருந்த வாக்குறுதிகள் மின்சாரக் கட்டணத்தைக் மூன்றில் ஒரு பங்கு குறைப்போம். உதாரணமாக, ரூபா 3,000 மின்சார கட்டணம் , ரூபா 2,000 ஆக குறைக்கப்படும். ரூபா 9,000 மின் கட்டணம் ரூபா 6,000 ஆக குறைக்கப்படும். எரிபொருளுக்கான வரி ரூபா 50 வை நீக்கி எரிபொருள் மீதான விலையை குறைப்போம் உதாரணமாக டீசல் லீட்டர் ஒன்று ரூபா 100 இற்கு வழங்குவோம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மதிப்பீட்டில் (DSA) உடன்பட மாட்டோம் Bailout programme குறித்து மீள் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு நன்மைகளை பெற்று கொடுப்போம் அரிசி இறக்குமத…
-
- 0 replies
- 376 views
-
-
களவும் கற்று மற. என் பால்யத்தில் நடந்த சில சுவாரஸ்ய திருட்டுகளைப் பற்றியே இப்பதிவு. முதன் முதலில் வீட்டில் திருடிய அனைவருக்கும், நம் அம்மா காசு வைத்திருக்கும் கடுகு டப்பா ஏடிஎம்களை, எந்த பாஸ்வேர்டும் இன்றி திறந்து திருடியதோ அல்லது அசட்டையாக தொங்கும் அப்பாவின் சட்டைப் பைகளில் இருந்து பணம் எடுத்ததோ தான் முதல் திருட்டாக இருந்திருக்கும்! முதல் வெளிநாட்டுப் பயணமே அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு என்பது போல நானும் என் தம்பி பாலுவும் முதலில் திருடியது வீட்டு பீரோவின் லாக்கரில் இருந்து!அப்பாவின் தொழில் ஓட்டல் என்பதால் அன்றைய கலெக்ஷன்கள் நோட்டுக்கட்டுகளாக பீரோ லாக்கரில் குடியேறும். மறுநாள் வங்கியில் செலுத்தப்படும். கடை கேஷியர் ஒரு முறை அப்பாவிடம் 'அண்ணா பேங்கில் நாம செலுத்திய …
-
- 0 replies
- 354 views
-
-
மனிதர்கள் செய்த மிகப்பெரிய தவறுகள் மனிதர்கள் செய்த மிகப்பெரிய சொதப்பல்கள் https://www.facebook.com/FreeFireTamilGT/videos/264361572200999
-
- 0 replies
- 602 views
-
-
மறதியாளர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்பதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லையே! Nadarajah Kuruparan யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் முன்னிலையில் இருப்பவர்கள் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் முக்கியஸ்த்தரும், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், 43ஆவது படையணியின் இணைப்பாளருமான, பாட்டளி சம்பிக்க ரணவக்க. (Patalee champika ranawaka.) இவர் கடுமையான இனவாதக் கருத்துகளின் முன்னைநாள் சொந்தக்காரராகவும் இருந்தவர். நல்லாட்சி அரசாங்கத்தில் 50 வீத ஞானோதயத்தைப் பெற்றவர். மற்றையவர் சிறிலால் லக்திலக (Shiral Lakthilaka) 9…
-
- 2 replies
- 796 views
-
-
குடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் . இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்கும்போது ஓட்டுனருக்கு தங்குவதற்கு நல்ல ஒரு இடம் நாம் அமைத்து கொடுப்பது குறைவு . அப்படி இருக்கும் பட்சத்தில் ஓட்டுநர் அவரது வாகனத்திலேயே படுத்து தூங்கும் நிலைமை தான் உருவாகிறது. ஒருசில தங்கும் விடுதிகளில் மட்டுமே ஒட்டுநர்களுகான ஓய்வு அறை உள்ளது. பெரும்பாலான விடுதிகளில் அதுபோல் இல்லை. ஓட்டுனருக்கு குறைந்தபட்சம் ஒரு 300 ரூபாய்க்கு அல்லது 500 ரூபாய்க்கு அறையெடுத்து கொடுத்து அந்த ஓட்டுநர் நிம்மதியாக தூங்குவதற்கு நாம் வழி செய்வது குறைவு . அடுத்த நாள் நமக்கு நெருங்கியவர்கள் கூட சுகமாக…
-
- 1 reply
- 922 views
-
-
முட்டிக்கு கீழே இருகால்களை இழந்த முன்னாள் பிரிட்டிஸ் கூர்க்கா வீரரின் சாதனை முயற்சி பற்றி விபரிக்கிறது இக்காணொளி.
-
- 1 reply
- 666 views
- 1 follower
-
-
கோவையில் இலவச யோகா மையம் பாராட்டு மழையில் ஆலயம் அறக்கட்டளை
-
- 0 replies
- 589 views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில அழிந்து வார ஒரு தொழில் பற்றி பாப்பம் வாங்க, ஒரு 20 வருசத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில பல வீடுகளில ஒரு குடிசை தொழிலா இருந்த இந்த நெசவு நெய்யறது இப்போ ஒண்டு இரண்டு இடத்தில தான் இருக்கு. வாங்க இந்த காணொளியில எப்பிடி இந்த கைத்தறி நெசவு பயன்படுத்திற எண்டும், இத இன்னும் செய்யிற ஆக்கள் என்ன மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றார்கள் எண்டும் பாப்பம், நீங்க சொல்லுங்க பாப்பம் ஒரு சேலை நெய்யறதுக்கு எவ்வளவு நாள் எடுக்கும் எண்டு.
-
- 9 replies
- 1.3k views
-
-
“ ஆயிரம் பொய் சொல்லி ” “சித்தப்பா சொல்லப் போப் போறாராம் நீயும் போப்போறியே “ எண்டு சின்ன மாமி கேக்க , நானும் ஏதோ அம்மா சொன்னாத்தான் போவன் எண்ட மாதிரி அம்மாவைப் பாக்க , “ வா வந்து இந்த சட்டையை மாத்தீட்டுப் போ” எண்டா அம்மா. ஒற்றை விளப் போகோணுமாம் எண்டு ஆள் கணக்குக்கு என்னை ஏத்தி விட்டது எண்டது பிறகு விளங்கிச்சு. “ உவனை உண்ட மடியில வைச்சிரு அண்ணை “ எண்டு பெரிய மாமி சொல்ல சித்தப்பாவும் காரின்டை முன் சீட்டில இருந்த படி என்னை மடீல தூக்கி வைச்சிருந்தார். “தம்பி காரை கொக்குவிலுக்கு விடும் முதலாவதா பெரியப்பருக்கு சொல்லிப்போட்டுத்தான் மற்றாக்களுக்கு சொல்ல வேணும்” எண்டு சித்தப்பா சொல்ல காரும் பெரிய அப்பப்பா வின்டை வீட்டை போச்சுது. Morris Oxford காருக்கால என்னை விட ஆறு …
-
- 3 replies
- 860 views
-
-
👉 https://www.facebook.com/watch?v=1355781698240847 👈 பாராளுமன்றில், கண்ணீர் விட்டு அழுத... ஹாபீஸ் நஸீர் அஹமட்.
-
- 2 replies
- 615 views
-
-
“குறைந்த விலை, பெரிய தேர்வு, 90 சதவீதம் வரை தள்ளுபடி” என அட்டகாசமாக யேர்மனிய சந்தைக்குள் தற்போது நுளைந்திருக்கும்சீன நாட்டு Temu என்னும் இணையத்தள வியாபாரம் பற்றி இப்போது பெரிதாகப் பேசப்படுகிது. நகைகள், தளபாடங்கள், சிறார்கள், பெண்கள், ஆண்கள் ஆடைகள், சமையலறை உபகரணங்கள், வீட்டுக்குத் தேவையானபொருட்கள் என குறைந்த விலையில் பல பொருட்கள் இந்த இணையத்தள விற்பனைப் பகுதியில் குவிந்திருக்கின்றன. உதாரணமாக180 யூரோ பெறுமதியான Adidas தயாரிப்புகளை ஒத்த காலணிகளை 12யூரோவுக்குக் குறைவாகவே Temu தளத்தில் பார்ககமுடிகிறது. Temu அன்றாடம் தேவைப்படும் பொருட்களின் ஒரு மலிவான ஒரு பெரிய சந்தையாக இப்பொழுது இருக்கிறது. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் இடைத்தரகர்கள…
-
- 6 replies
- 647 views
-
-
அன்பர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும். தனித்தனியாக உங்கள் ஒவ்வொருவருடனும் உரையாட ஆசைதான். ஒரேநாளில் இயலாதுதானே? இரண்டு மாதங்கள் தாயகத்தில் இருந்தேன். பேரின்பம். உற்றார் உறவினர் நண்பர்களெனக் கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேலானவர்களை நேரில் சென்று சந்தித்து உரையாடினேன். திருமணங்கள், உறவினர் மறைவு முதலானவற்றிலும் பங்கு கொண்டேன். அணுக்கமானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கின்றது. முன்பெல்லாம் தாத்தா, பாட்டி எனும் வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமான இழப்புகளை உணர முடிந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக, அப்பா, சித்தப்பா, மாமனார் என்பதான இழப்புகள் என்றிருந்த நிலையில், தற்போது சம வயதுடையோரும் விடைபெறுவது இடம் பெற்று வருகின்றது. திரண்டிருந்த ஊரகத்திண்ணைகளும் சத்…
-
- 0 replies
- 889 views
- 1 follower
-
-
சமீபத்தில் 'இறுகப்பற்று' திரைப்படம் பார்த்தேன். அப்படத்தில் ஒரு காட்சி என்னை வள்ளுவனிடம் கொண்டு விட்டது. அந்த அனுபவத்தை முதலில் யாழில் பதிவு செய்து, பின் ஏனைய வலைத்தளங்களுக்குக் கடத்தவே எண்ணம். இப்பதிவுக்கு மட்டுமல்ல; எனது எந்தவொரு பதிவுக்கும் இதுவே என் உள்ளக்கிடக்கை. அதற்குக் காரணம் எனக்கு ஆரம்பகால எழுத்தனுபவத்தைத் தந்தது யாழ் இணையமே! இங்கு யாழ் சொந்தங்கள் தந்த ஊக்கமே எனக்கான தூண்டுகோல். யாழ் தூண்டுகோல் ஆக நான் எழுதுகோல் ஆனேன். இருப்பினும் சில பதிவுகளில் காணொளி இன்றியமையாததாய் அமைகிறது; காணொளியை நேரடியாக யாழில் பதிவதில் எனக்கு சிரமம் ஏற்படுவதால் சமீப காலங்களில் அத்தகைய தருணங்களில் முகநூலில் பதிந்து, பின்னர் யாழின் சமூகவலை உலகத்திற்குக் கடத்துவதை வழக்கமாக்கிவிட்டேன் . அவ்…
-
- 6 replies
- 777 views
- 1 follower
-
-
ஆர்மேனியர்களுக்கு நடந்த படுகொலைகளை உலகம் ஏற்றுக்கொள்ள அவர்கள் ஒரு நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கேட்டு நடக்க வேண்டிய தூரமும் வெகு தொலைவாகவே இருக்கும். அதைப் பார்க்க நாம் உயிரோடு இல்லாது போனாலும், நமது ஏதோ ஒரு தலைமுறை அதை நிகழ்த்திக் காட்டும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆக, நாம் இப்போது செய்யவேண்டியது தொடர்ச்சியாக இந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தியபடி நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டியதுதான். அதேவேளை எமது இயக்கம்/இயக்கங்கள் 'விடுதலை'யின் பெயரால் நிகழ்த்திய அநீதிகளையும் நாம் மனதார ஒப்புக்கொண்டாக வேண்டும். இல்லாதுவிட்டால் நாம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பொருட்டு கோரிநிற்கும் நீதியில் அர்த்தமிருக்காது. இந்த…
-
- 0 replies
- 210 views
-
-
உலக சமூக ஊடக தினம் இன்று Published By: DIGITAL DESK 4 30 JUN, 2025 | 10:40 AM மக்களின் வாழ்க்கையில் பின்னிபிணைந்துள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் இன்று ஜூன் 30 ஆம் திகதி அனுஷ்க்கப்பட்டு வருகிறது. தகவல் பரிமாற்றம் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. அந்த வகையில் இன்றைய சூழ்நிலையில் தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடத்தை சமூக ஊடகம் வகிக்கின்றது. அந்தவகையில், மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைவதற்கு, செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு மற்றும் தகவல்களை அறிந்தவர்களாக இருப்பதற்கு மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாக சமூக ஊடகம் மாறியுள்ளது. சமூக ஊடகங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களை ஒருவருடன் ஒருவர் ஒன்றிணைத்து, உண்மையிலேயே உலகளாவிய சமூகத்தை உருவாக்கியுள்ள…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-