சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
987 topics in this forum
-
கறி... ~~~~~ எப்போதும் நான் வெளிப்படையாகவே சொல்லி வந்திருக்கிறேன்.. நான் ஒரு பார்ப்பன சாதியில் பிறந்தவன்.. மிக ஆச்சாரமாக வளர்க்கப்பட்டவன்.. சிறு வயதில் எம் தந்தை பெரியாரை வெறுக்க கற்பிக்கப்பட்டவன்.. ஆனாலும் மிக சிறு வயதிலேயே புத்தகங்கள் வாசிக்கத் துவங்கிவிட்டதால் ஒரு குழப்பமான தெளிவோடு நான் வளர்ந்தவன்.. ஏன் என்று தெரியாது. சாமி இல்லை என்பது மட்டும் அந்த வயதில் மனதுக்குள் பதிந்து போயிருந்தது.. அப்பா எனக்கு சிறந்த படிப்பைத் தருவதாக உறவினர்களிடம் பெருமை பீத்தியபடி என்னை எப்போதும் அத்தை வீட்டிலும் சித்தப்பா வீட்டிலும் பாட்டி வீட்டிலுமாக படிக்க வைத்தார். பாட்டி வீடு தவிர மற்றவை எல்லாம் யூத சித்திரவதை முகாம்களுக்கு சற்றும் குறையாதவை.. விளையாட அனுமதியற்ற.…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில எப்பயுமே கடல் உணவு எண்டா மீன், இறால், கணவாய், நண்டு தான் கிடைக்கும், எங்கயாச்சும் தேடி போன, மட்டி, சங்கும் எடுக்கலாம் , இத எல்லாம் விட கொஞ்சம் வித்தியாசமா, ஒரு Exotic கடல் உணவு எண்டு பாத்தா இந்த Oyster ஆஹ சொல்ல ஏலும் ஆனா யாழ்ப்பாணத்தில எடுக்க ஏலாம இருந்த, அதுவும் இதுவரைக்கும் english படங்களையும் TV Series களிலையும் மட்டும் கேட்டு ஒருதரமாவது சாப்பிடு பாக்கணும் எண்டு பெரிய ஆசை இருந்தது. கொழும்பில இது விக்கிறாங்க எண்டு சொன்னதும் ஒருக்கா டேஸ்ட் பண்ணி பாத்த காணொளி இது. பாருங்கோ. இதுக்கு முதல் நீங்க சாப்பிட்ட அனுபவம் இருந்தா சொல்லுங்கோ
-
- 3 replies
- 1.2k views
-
-
Saravanan Vel மேற்கு வங்கத்தில் மமதாவின் தோல்வி எப்படி ஏற்பட்டது? --------------------------------------------------------- உலகிலேயே தீவிரமான மொழிப்பற்று உடையவர்கள் வங்காளிகள். உலகத் தாய்மொழி தினம் என்பது வங்க மொழியை வைத்தே கொண்டாடப் படுகிறது. முட்டாள் தனமாக வங்க மொழியின் மீது தாக்குதல் தொடுத்தார் மமதா. பள்ளிக் கல்வியில் உருது மொழியைத் திணித்தார் மமதா. பள்ளி கல்லூரிப் பாட நூல்களில் உர…
-
- 0 replies
- 1.2k views
-
-
Degree 2021 Dec 22 வாயில வைச்ச சுருட்டை பத்த வைக்காமல் lighter ஐ தட்டித் தட்டிக்கொண்டு இருந்த Greig ( கிரேக்குக்கு) , “ Sir முப்படைத்தளபதிகளும் விண்வெளிக் கட்டுப்பாட்டு தலைவரும், உளவுத்துறைத் தலைவரும் வந்திட்டினம்” எண்டு செய்தி வர meeting room க்கு உடன வந்தார். உலகத்து மீடியா எல்லாம் பரபரப்பாக பேசிய ஒரு நியூஸ் , Australia வை கொஞ்சம் கூட உலுக்கி இருந்தது. ஆனாலும் இது இந்தோனேசியாவில் பூகம்பமோ இல்லை பாலியில்( Bali) சுனாமியோ இல்லை. ஐஞ்சு சுவருக்குள் நாள் முழுக்க நடந்த meeting முடிவெடுக்காமல் நீள , “ நாங்கள் ஒரு local agent இட்டை Detail report கேப்பம்” எண்டு முடிவோடு அடுத்த meeting date குறிக்கப்பட்டது. காலமை வந்த call என்னவாக இருக்கும் எண்டு மோப்பம் பிடிச்சு …
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
வீரசாகசம் புரிவதாக நினைத்து, வீடியோ போடுவதால் பல வித பிரச்சினைகள் வரும், அதில் இது ஒருவகை. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ இந்த வீடியோ தற்பொழுது எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியாகச் சொன்னால் இந்த வீடியோ 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது, பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டில் உள்ள சாண்டோ மரியா எனும் ஆற்றில், சிர்லேய் ஒலிவிரியா மற்றும் அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ் மற்றும் நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வழியில் ஒரு அனகொண்டா பாம்பு எதிர்பட்டது. அதுபாட்டுக்கு இரை தேடி போய் கொண்டிருந்தது. பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
Sritharan Gnanamoorthy இனமொன்றின் குரல் Yesterday at 4:44 AM யாழ்ப்பாண மாநகரசபையின் புதிய கட்டடம் கட்டுவதற்கு இரண்டாம் தரம் அடிக்கல் நாட்டுவதற்கு உணவு மண்டப செலவு மட்டும் 2.7 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள் .. பந்தல் போட மட்டும் 16 லட்சம் ..மதிய உணவு ஒன்றின் பெறுமதி 2500 ரூபா.இந்த மதிய உணவு 150 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது ..100 ரூபா பெறுமதியான சிற்றுண்டி 2200 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கு என சொல்ல பட்டு இருக்கிறது ..மாநகர வரியிரு…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐயோ சாமி தைப் பொங்கல் எனக்கு வேணாம்! ===================================== நான் சின்னப் பொடியனா இருந்தபோது நாங்கள் எங்கள வயலில நெல்லு விதைச்சுப் பராமரிச்சு அறுவடை செய்தம். தை மாதம் புது அரிசி போட்டுப் பொங்கிச் சந்தோசமா சாப்பிடுவம். பிறகு கோவிலுக்குப் போவம், அப்பிடியா சொந்தக்காரர் வீட்டுக்குப் போவம். பிறகு பொங்கல் திண்ட தியக்கத்தில கொஞ்ச நேரம் நித்திரை கொண்டிட்டுப் பின்னேரம் பருத்தித்துறைக் கடற்கரைக்குப் பட்டம் பார்க்கப் போவம். இப்பிடி ஒரு பிரச்சினை இல்லாமத்தான் எங்கட தைப்பொங்கல் கொண்டாட்டம் இருந்தது. தைப்பொங்கல் உழவர் பெருநாள், சூரியனுக்கு நன்றி சொல்லுற நாள் அடுத்தநாள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லுற நாள் என்ற புரிதல்தான் எனக்கு இருந்தது. பி…
-
- 3 replies
- 1.2k views
-
-
1876- 1878 ஆண்டுகளில் மதுரை மிக மோசமான பஞ்சத்தை சந்தித்தது, எங்கள் பாட்டி வீடு 19 கீழ் அனுமந்தராயன் கோவில் தெருவில் 137 ஆம் வயதில் இன்னும் உள்ளது, இந்த தெருவில் மாற்றம் காணாத பழைய வீடென இது மட்டுமே எஞ்சியுள்ளது, இந்த வீட்டிற்கு ஒரு துயரமான சாபம் உண்டு ,அது ஒரு சிறுமியின் சாபம்., நவராத்திரி சமயத்தில் பட்டுப்பாவாடை அணிந்து அக்கம் பக்கம் சுற்றி விளையாடிய சிறுமி அன்று நெல் களஞ்சியத்தின் கதவு திறந்து வைத்திருப்பதைக் கண்டதும் அதன் உள்ளே உள்ள உயரமான பானைகளில் ஒன்றில் சென்று ஒளிந்து கொள்கிறாள்,பின்னர் உறங்கியும் போகிறாள். மகாபஞ்சத்தின் எதிரொலியால் மக்கள் அந்தந்த பருவங்களில் என்ன உணவு தானியங்கள் கிடைக்கிறதோ? அதை வாங்கி சேர்த்து வைக்கத் துவங்கியிருந்த கால…
-
- 1 reply
- 1.2k views
-
-
Ananda AK மன்னார் மனித புதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா? புதைகுழிக்கு காரணமானவர்கள் யார்? கொன்று புதைக்கப்பட்டவர்கள் யார்? கேள்விக்கு விடைதெரிய பதிவினை வாசியுங்கள் சிலவேளை பதில் இருக்கலாம். மன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளிவந்து பல சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் தோற்றுவித்திருக்கிறது. புளோரிடாவில் இருந்து கிடைக்கப்பெற்ற காபன் அறிக்கையில் அந்த மனித எச்சங்களின் காலம் கி.பி 1450 தொடக்கம் கி.பி 1650 வரைக்கு இடைப்பட்டதென்று கூறப்பட்டுள்ளது. மன்னார் புதைகுழி மிகச்சமீப காலத்துக்குறியதாக இருக்கும் என…
-
- 1 reply
- 1.2k views
-
-
இராணுவத்திற்கு விருதுவழங்கும் விழாவில் காற்சட்டையுடன் கலந்துகொண்டார் ஈழத்து சிவசேனை தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள். புத்த பிட்சுவின் ஆசனத்தில், வெள்ளைத்துண்டு இல்லாமையால் தன் வேட்டியை கழட்டிக்கொடுத்த மறவன்புலவு சச்சிதானந்தம். ஆதாரம்: முக நூலில் இருந்து.
-
- 1 reply
- 1.2k views
-
-
-
மட்டக்களப்பு அம்பாறையில் படை நடத்திய கருணா அம்மான் சொகுசாக திரிகின்றார் . அவரால் வழிநடத்தப்பட்ட நாங்கள் இன்று சிறையில் இருக்கின்றோம் . அதேபோல் இலங்கைக்கு ஆயுதம் கடத்திய கேபியும் சொகுசாக வாழ்கின்றனர்
-
- 0 replies
- 1.2k views
-
-
-
Sivasubramaniam-jothilingam Jothilingam · #யாழ்ப்பாணத்திற்கு_ஒரு_ஆறு யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30' மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60' இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி…
-
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 'அரட்டை ' எனும் செயலியின் அதிகரித்து வரும் பயன்பாடு பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்கா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, உலக நாடுகள் பலவும் சொந்தக் காலில் நிற்பது பற்றி அதிகம் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் சேவையான WhatsApp இற்குப் பதிலாக அரட்டை எனும் செயலியினைப் ( Arattai App) பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். WhatsApp, Snapchat போன்ற செயலிகளைப் போன்றே அரட்டையும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த சோகோ நிறுவனத்தால் ( Zoho corporation) உருவாக்கப்பட்ட செயலி இதுவாகும். சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயற்படுகின்றது. இச் செயலியின் பெயர் தமிழ்ச் சொல்லாக இருப்பதுடன், 'அ' என்ற …
-
-
- 21 replies
- 1.2k views
- 2 followers
-
-
Relationship: The state of being connected, by blood or marriage. 'Synonym. 'எனக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்து இருக்கு, எனக்கு யாருமே தேவை இல்லை' - இப்படித்தான் அந்த 65 வயது பெரியவர் ஆரம்பித்தார். கொஞ்சமா ஆல்கஹால் எடுத்திருந்தார் போல. நிலையில்லாமல் இருந்தார். ஒரு 15 நிமிடம் அவரோட 65 ஆண்டு கால வாழ்க்கையை பெருமிதத்தோட சொல்லி முடித்தார். சின்னவன் ஆஸ்திரேலியால இருக்கான். பொண்ணுங்க 2 பேர், ஒருத்தர் சென்னைல குடுத்திருக்கேன். இன்னொருத்தி பூனேல இருக்கா. மாப்பிள்ளை மிலிட்டரில இருக்கார். பெரியவன் என் கூட இருக்கான். நிறைவான வாழ்க்கை, என்றார். இவர் என் மருத்துவமனைக்குள் நுழைந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. மனைவியுடன் வந்தார், ஏதோ விசேஷ வீட்டுக்கு போய்விட்டு வந்திருப்பா…
-
- 3 replies
- 1.2k views
-
-
Sathiam Sivam to புதிய தகவல்கள்... New information... 17 hrs *மாண்புமிகு கேரளா மாநில முதல்வர் பிரணாயி விஜயன் நாட்டு மக்களுக்கு கூறியுள்ள செய்தி.* *இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி அருந்தினால் 3600 கோடி ருபாய் தோராயமாக.* *நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் பணம் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ருபாய் வரை ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.* *நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி ருபாய் வரை சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
Keethan Ilaythampy 'சுடரொளி' பத்திரிகையின் திருமலைச் செய்தியாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி படுகொலை செய்யப்பட்டார். திருமலையில் சிறிலங்காப் படையினரால் ஐந்து தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான செய்திசேகரிப்பில் ஈடுபட்டபோதே அவர் இலக்குவைத்துக் கொல்லப்பட்டார். திருமலை கொலைகள் தொடர்பாக விசாரித்துவந்த நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எதுவித ஆதாரங்களும் இல்லை என அவர்களை அண்மையில் விடுதலை செய்தது. சுகிர்தராஜனின் கொலை தொடர்பாக எதுவித விசாரைணயும் நடைபெறவில்லை. எந்த பத்திரிகைக்காக பணியாற்றி பலியானாரோ, அந்த பத்திரிகை சொந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
Portuguese Kaffringha Dance with Baila Music - போர்த்துகீசியர்கள் இலங்கையை விட்டுச்சென்று 365 ஆண்டுகளாகிவிட்ட போதிலும், இங்கு வசித்து வரும் அவர்களின் சந்ததியினர், தங்களின் பாரம்பரிய கஃப்றிஞ்ஞா நடனத்தை இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். இந்த சமூகத்தின் சிறுவர்கள் கூட கஃப்றிஞ்ஞா நடனத்தை தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான இசைக்கலைஞர்கள் வெகு சிலரே இருக்கின்றனர்.
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
சிங்கள டயஸ்போரா Vs தமிழ் டயஸ்போரா —————————————————————- சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது! லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள். சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த …
-
-
- 13 replies
- 1.2k views
-
-
8ஆயிரம் தேவார பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உடுமலை மாணவி திரு. உமா நந்தினி சிவபெருமான் மீது பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது. மண் சுமந்த பாடல்கள் என்று கூறப்படும் இந்த தேவாரப்பாடல்களை உடுமலையை சேர்ந்த ஆசிரிய தம்பதி பாலகிருஷ்ணன்-கண்ணம்மாள் ஆகியோரின் மகளான பிளஸ்-2 மாணவி உமாநந்தினி இனிமையான ராகத்துடன் 239 நாட்கள் பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதுகுறித்து மாணவி உமாநந்தினி கூறியதாவது:- தேவாரப்பதிகங்களில் நோய் நீக்கும் அருமருந்தாகும் பாடல்கள் பல உள்ளது. கொரோனா உலக மக்களையெல்லாம் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில் நோய் தீர்க்கும் பதிகங்களை பாடி அது மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என…
-
- 0 replies
- 1.2k views
-
-
மனிதாபிமான உதவிகளும் மதுபானக் கடைகளும் ! ========================================= இலங்கையில் அண்மையில் COVID-19 தொற்றினைத் தடுக்கக் கொண்டுவரப்பட ஊரடங்கு உத்தரவை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் பல குடும்பங்களுக்கு வருமானம் அற்ற நிலை ஏற்பட்டது நாங்கள் அனைவரும் அறிந்ததே. அதையடுத்து அவர்களுக்கு உதவ புலம் பெயர் தமிழ் அமைப்புகள் பலவும் முன் வந்ததும், அவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பொருட்களை அனுப்பி வைத்ததும் நாம் அறிந்ததே! அதே நேரம் இலங்கை அரசே வருமானம் குறைந்த, வருமானம் இழந்த குடும்பங்களுக்கு பணக் கொடுப்பனவுகளை மேற்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இலங்கையில் உள்ள சில மத அமைப்புக்களும் சமூக அமைப்புக்களும் தமது பங்குக்கு உணவுப் பொதிகளை வழங்கி வருகின்ற…
-
- 7 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசியல்வாதிகள் அனைவரையும் வறுத்தெடுக்கும் சிங்கள மொழிப் பாடல்
-
- 0 replies
- 1.2k views
-
-
யார் சாமி இவன்...!! தமிழருக்கே விபூதி அடிக்கும் அமெரிக்கர்...!! யார் சாமி இவன்...!! தமிழருக்கே விபூதி அடிக்கும் அமெரிக்கர்...!! https://www.facebook.com/watch?v=358142962623365
-
- 2 replies
- 1.2k views
-
-
மனிஷா கொய்ராலா - புற்றுநோய். ரிசி கபூர் - புற்றுநோய். சோனாலி பெண்ட்ரே - புற்றுநோய். இர்பான் கான் - புற்றுநோய். யுவராஜ் சிங் புற்றுநோய். சைஃப் அலிகான் - மாரடைப்பு. ஹிருத்திக் ரோஷன் - மூளை உறை. அனுராக் பாசு - இரத்த புற்றுநோய். மும்தாஜ் - மார்பக புற்றுநோய். தாஹிரா காஷ்யப் (ஆயுஷ்மான் குரானாவின் மனைவி) - புற்றுநோய். ராகேஷ் ரோஷன் - தொண்டை புற்றுநோய். லிசா ராய் - புற்றுநோய். ராஜேஷ் கண்ணா - புற்றுநோய், வினோத் கண்ணா - புற்றுநோய். நர்கிஸ் - புற்றுநோய். ஃபெரோஸ் கான் - புற்றுநோய். இவர்கள் எல்லாம் புகழும் பணமும். செல்வாக்கும் பெற்றவர்கள். இவர்களுக்கு எப்படி இவ்வளவு கொடுமையான வியாதி வந்தது? இவர்களில் யாருக்கு பணப் பற்றாக்குறை ? 24 மணி …
-
- 0 replies
- 1.2k views
-