Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. கொங்கோ விடுதலை வீரன் பட்ரிஸ் லுமும்பாவின் (Patrice Lumumba) 60வது ஆண்டு நினைவாக…. (1925 – 1961) கொங்கோ ஆபிரிக்காவிலுள்ள மிகவும் வளம்மிக்க நாடுகளில் ஒன்று. மத்திய ஆபிரிக்காவில் ஆரம்பித்து கொங்கோவின் ஊடாகப் பாய்ந்து அத்திலாந்திச் சமுத்திரத்தில் கலக்கும் கொங்கோ நதியினால் கொங்கோவில் மழைக்காடுகளும், புல்வெளிகளும் செழிப்புற்றிருந்தன. அதைவிட டைட்டானியம், தங்கம், வைரம், தாமிரம் போன்ற ஏராளமான கனிம வளங்களும் நிறைந்த நாடு. ரப்பர் வளமும் மிகுந்த நாடு. (இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் கொங்கோவில் இருந்துதான் தமக்குத் தேவையான பல தாதுப் பொருட்களைப் பெற்றன.) எனவே ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் இந்த நாட்டின் மீது கண் வை…

  2. https://www.facebook.com/share/v/14xjrM9JQC/?mibextid=wwXIfr வெளிநாட்டிலிருந்து போகிறவர்களுக்காக பாடப்பட்ட பாட்டு. நன்றாக உள்ளது.

  3. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே குடும்பம் ஒட்டுக்குழு பிள்ளையானை பயன்படுத்தி கோரமான பல்வேறு சட்டவிரோத குற்ற செயல்களை கடந்த காலங்களில் செய்து இருக்கிறது . அரசியல் மற்றும் இராணுவ கொலைகள் மட்டுமின்றி ராஜபட்ச குடும்பத்திற்கு விரோதமான பத்திரிகையாளர்கள் உட்பட பலரை கொன்று போட ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை பயன்படுத்திய விவகாரத்தை Daily Mirror அம்பலப்படுத்தி இருக்கின்றது குறிப்பாக முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் ஜோஸ்ப் பரராஜசிங்கம் , ரவிராஜ் ,சந்திரநேரு உட்பட பல அரசியல் கொலைகளை பிள்ளையானை பயன்படுத்தியே கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் புலனாய்வு பிரிவு செய்து இருந்தது அதே போல திருகோணமலையை சேர்ந்த மூத்த சிவில் செயல்பாட்டாளர் விக்னேஸ்வரன் உட்பட சிவில் சமூக பிரம…

    • 1 reply
    • 580 views
  4. Nadarajah Kuruparan கொட்டபொல பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் JVP சார்பு அணி பெரு வெற்றி. மக்கள் மாற்றி யோசிக்கிறார்களா! 80களின் நடுப்பகுதியில் இருந்து 90களின் இறுதிவரை இலங்கையின் தென் மாவட்டங்கள் JVPஎன்ற மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கோட்டைகளாக விளங்கியிருந்தன. குறிப்பாக ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, புலிகள் காலத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த இளையவர்களை இலங்கைப் படையினர் எப்படி விசேடமாக கண்காணித்தனரோ அவ்வாறு காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை அடையாள அட்டையைக் வைத்திரு…

    • 1 reply
    • 616 views
  5. கதறும் மாடுகள், இரத்த வெள்ளத்தில் ஆடுகள். யேர்மனியில் செல்ம் (Selm) நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் சட்ட விரோதமான முறையில் மிருகங்களுக்கு வேதனைகள் தந்து கொல்லப்படுவதாக விலங்கு உரிமை ஆர்வல நிறுவனமான Soko Tierschutz தொடர்ந்த வழக்கு 15.09.2023 விசாரணைக்கு வந்தது. டோர்ட்மூண்டிற்கு அருகிலுள்ள செல்ம் நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் மூன்று ஆண்கள் தங்கள் இஸ்லாமிய முறையில் குறைந்தது 188 விலங்குகளை படுகொலை செய்துள்ளனர். இந்த முறையில் விலங்குகள் கொல்லப்படும் போது அவை மிகுந்த வேதனைகளை அனுபவிக்கின்றன என்பதே வழக்கின் விபரம். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறைச்சிக் கூடத்தின் உரிமையாளரும்(54) அவரது இரண்டு மகன்களும் ஆவர். மயக்க மருந்து இல்லாமல் விலங்குகளின் கழுத்தை …

  6. கொரோனா – சுயதனிமைப்படுத்தலும் விவசாயப் பொருட்களும் ! கடந்த வாரம் ஊரடங்குஉத்தரவுபற்றி அறியாத நெடுங்கேணியை சேர்ந்த விவசாயி 800 கிலோ கத்தரிக்காயை பிடுங்கிவைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாதிருந்ததாக செய்தியொன்றைக் காணக் கிடைத்தது. அதேபோல யாழ்ப்பாணம் சித்தங்கேணியை சேர்ந்த விவசாயி ஒருவர் அறுவடைக்குத் தயாரான தக்காளி பழங்களை மரத்திலும் விடமுடியாமல் பிடுங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் ஒரு செய்தியை வாசிக்கக் கிடைத்தது. இவ்வாறான அவசரநிலைக்காலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை இது. இதேநிலைதான் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலையாகவும் இருக்கக்கூடும். நாட்டின் பல பகுதியிலும் மரக்கறியின் அறுவடை ஆரம்பித்துவிட்டது. ஆனால் சந்தைப்படுத்தல் இப்போத…

  7. கொரோனா வைரசின் செயின் பரவலை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம்: நியூசிலாந்து பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெறுவோம் என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டபோது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஜனவரி மாதம் இறுதி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் சீனாவின் வுகான் மாகாணத்தை புரட்டி எடுத்தது. பிப்ரவரி 2-வது வாரத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்லமெல்ல பரவ ஆரம்பித்தது. இது ஒரு தொற்று நோய், சமூக விலகலால் (ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகி இர…

  8. கொரோனாவால் விளைந்த எதிர்பாராத நல்ல விடயங்கள் ! கண்ணுக்குத் தெரியா கொரோனா எம்மை கஷ்டப்படுத்தினாலும் பூமிக்கு சில நன்மையையும் செய்தே இருக்கிறது. உலகெங்கும் வாகன ஓட்டம் குறைந்து வாகனப்புகை, CO2 மற்றும் CO வெளியேற்றம் குறைந்து வருகிறது. உலகளாவிய ரீதியில் வாகன விபத்தும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது. தொழிற்சாலை இயக்கம் குறைந்து அதனால் ஏற்படும் சூழல் மாசும் குறைந்து வருகிறது. பல இடங்களில் நீர்நிலைகள், நதிகள், ஓடைகள் சுத்தமாகி வருகின்றன, காற்றின் தரமும் அதிகரிக்கிறது. இனிவரும் நாட்களில் நீரிலும் நிலத்திலும் வாழும் ஏனைய உயிரினங்களின் வாழிடங்களும் மேம்பட இடமுண்டு. மனித உருவில் திரியும் சில மிருகங்களின் நடமாட்டம், வேட்டையாடல் குறைந்து …

  9. கொரோனாவும் சித்த வைத்தியமும் – பகுதி 1 கொரோனா தொடர்பாக தமிழ் மக்களிடையே இன்று பரவலாக விவாதிக்கப்படும் இன்னொரு பேசுபொருள்தான் சித்த வைத்தியம் ஆகும். உலகில் உள்ள ஒவ்வொரு நாகரிகத்துக்கும் தனித்தனி மருத்துவ முறைகள் உள்ளன. உலகில் 170 நாடுகளில் பாரம்பரிய வைத்தியம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. தெற்காசிய நாடுகளிலும் சீனா உட்பட பல கிழக்காசிய நாடுகளில் மிகவும் தொன்மை கொண்டதாகவும் இன்றும் பலராலும் பின்பற்றப்படும் வைத்திய முறையே சுதேச வைத்திய முறை ஆகும். 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரே பல நூற்றாண்டுகளாகவே மக்களின் நோய் தீர்த்து வந்தது அந்தந்த நாடுகளில் பின்பற்றப்பட்ட பாரம்பரிய சுதேச வைத்தியமே. இதனை ஆங்கிலத்தில் Traditional m…

  10. கொரோனாவும் சில பரிகாரங்களும் ================================= கொரோனாவிற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பலப்பல வைத்தியம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் சரிதானா? அவையெல்லாம் உண்மையிலேயே தீர்வு தருமா? அவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் சில: 1. பத்துநிடத்துக்கு ஒருமுறை சுடுநீர் குடித்தால் தொண்டையில் உள்ள வைரஸ் செத்துப்போகும், அல்லது கழுவப்பட்டு வயிற்றுக்குள் அனுப்பப்பட்டு அங்குள்ள அமிலத்தால் கொல்லப்படும். இது உண்மையில்லை. முதலாவதாக நாங்கள் குடிக்கும் வெதுவெதுப்பான நீரினால் வைரஸ் கொல்லப்படாது. வயிற்றில் உள்ள அமினோஅமிலத்தாலும் கொல்லப்படாது. 2. சுடுநீரில் மஞ்சளும் உப்பும் சேர்த்து வாயைக் கொப்புளிப்பதால் வைரஸ் கொல்லப்படும். இதுவும் உண்மையில்லை. தொண்ட…

    • 9 replies
    • 1.6k views
  11. முஸ்டீன் இஸ்மாயீல் கொழும்புக்குப் பொருத்தமான தமிழ் வேட்பாளர் யார்? நம்நாட்டின் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் மட்டுமே தமிழ்க் கட்சிகள் செயற்பாட்டுத் தளத்தை நிறுவியிருந்தன மலையககக் கட்சிகள் கொழும்பு உட்பட இந்திய வம்சாவழித் தமிழ்ர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமது அரசியல் செய்பாட்டுத் தளத்தை நிறுவிக் கொண்டன. இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் இந்தியத் தமிழர் பகுதிகளில் அரசியல் நடவடிக்கையில் இடையீடு செய்வதில்லை அதுபோன்றே மலையகக் கட்சிகளும் இலங்கைத்தமிழர் பகுதிகளில் அரைசியல் தலையீடுகளைச் செய்வதில்லை. இலங்கைத் தமிழர் ஓரளவுக்குச் செறிந்து வாழும் கொழும்பில் கூட தமிழ்த் தேசியக் …

  12. கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசு கப்பல்! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship contact ship Sail lanka 0773874540 - Piradeep 0774023015 - U.Jenushan

  13. முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா தமிழர்களை கடத்தி முதலைக்கு இரையாக்கினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. கோத்தபாயாவின் உத்தரவுப்படி தமிழர்களை கடத்திய உண்மையை வெளி உலகிற்கு கூறியவரையே இப்போது கடத்தி விட்டார்கள். தமிழருக்கு எப்போது எப்படி நீதி கிடைக்கும்? தோழர் பாலன்

  14. "அலரி மாளிகையைவிட்டு வெளியேறமாட்டேன்" என்று அடம்பிடித்துக்கொண்டு பிரதமர் பதவியை தனது கழுத்துப்பட்டியைப்போல கொழுவியவாறு கடந்த ஒக்டோபர் மாதம் ஜனநாயகம் பேசிய ரணிலை - இன்று, அதே ஜனநாயகத்தை சாட்டைபோல வீசி அந்த அலரி மாளிகையிலிருந்து கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள் ராஜபக்ச சகோதரர்கள். விடுதலைப்புலிகள் உட்பட தன்னோடு உறவாடிய எல்லாத்தரப்பிற்குள்ளேயும் வெடி வைத்து தனது பிரித்தாளும் சூட்சுமங்களை அரங்கேற்றி விளையாடிய ரணிலுக்கு "பதிலுபகாரமாக" அவரது ஐக்கிய தேசிய கட்சியை சல்லி சல்லியாக உடைத்து பொறுக்கி எடுத்துக்கொண்டு போகச்சொல்லியிருக்கிறார்கள் ராஜபக்ஷக்கள். "ஒட்டுமொத்த கிரிமினல்களும் கிரீடம் சூடிக்கொண்டு நின்று இந்த நாட்டை ஆளப்போவதாக அறைகூவுகிறார்களே" - என்ற…

    • 2 replies
    • 1.9k views
  15. கோவையில் இலவச யோகா மையம் பாராட்டு மழையில் ஆலயம் அறக்கட்டளை

  16. சங்கீத கலாநிதி 'சங்கீத கலாநிதி' விருது பெற்ற திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களை வாழ்த்துவோம். அவர் பார்ப்பன சமூகத்தில் தோன்றிய முற்போக்குச் சிந்தனையாளர் என்பது அவருக்கான கூடுதல் தகுதி, சிறப்பு; நமக்கான கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள், 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யை நிரப்பிக் கொண்டு திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பிற்போக்குத்தனமாகக் கொதிக்கிறார்கள், குதிக்கிறார்கள் என்றால் ஒரு காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினரின் கற்பனைக்கு விட்டு விடுவோம். சுமார் ஐம்பது வருட காலம் அடங்கி இருந்தவர்கள் இப்போது ஒன்றியத்தில் ஒரு மதவாத, பார்ப்பனிய, பாசிச அரசு அமைந்தத…

  17. எனது முகநூல் பதிவினைப் படியெடுத்துக் கீழே மீள்பதிவு செய்துள்ளேன். அங்கு நான் ஏற்றிய நிழற்படங்களைக் காண இறுதியில் உள்ள முகநூல் இணைப்பைச் சொடுக்கவும். இனி அந்தப் பதிவு : சங்கே முழங்கு ! -சுப.சோமசுந்தரம் Suddenly I felt, "Today why don't I blow my own trumpet ?". சுய தம்பட்டத்தில் அப்படியென்ன அலாதி இன்பம் ? எதையும் அனுபவித்தால்தானே தெரியும் ? எனவே இக்கட்டுரைத் தலைப்பும் அங்ஙனமே அமையப்பெற்றது. எத்துணைச் சிறிய பெருமையானாலும் (முரண் தொடை - oxymoron !), அந்த என் பெருமையைச் சங்கே முழங்கு ! நான் சார்ந்த கல்லூரி/ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான MUTA பேரியக்கத்தில் ஒரு மரபு உண்டு. சங்க உறுப்பினர்கள் ஓய்வு…

  18. சச்சின் தேடிய நபர்

  19. கதற வைக்கும் கனவு தேசம். ஒரு நாட்டு குடிமக்கள் இன்னொரு நாட்டுக்கு சட்ட விரோதமாக குடியேறுவது என்பது காலம் காலமாக நடக்கிற விஷயம்தான். பல நூற்றாண்டுகள் வரலாறுகள் கொண்ட மன்னர் ஆட்சி காலத்திலும் இவையெல்லாம் நடக்காமல் இல்லை. பொதுவாக நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குள ஒரு குடிமகன் நுழைகிறான் என்றால் அதற்கான காரணங்களை சுலபத்தில் பட்டியலிடலாம். உள்நாட்டு குற்ற தண்டனையிலிருந்து தப்பிக்க, உள்நாட்டு அரசியல் பிரச்சினையால் வாழ முடியாமல் வாழ்வாதாரத்தை தேட, அதிக அளவில் பொருள் சம்பாதிக்க எனக் காரணங்கள் பல உண்டு. இப்படிப்பட்ட நிலையில் எந்த ஒரு நாடும் சட்ட விரோதமான குடியேற்றத்தை ஏற்றுக் கொள்ளாது..அப்படி ஏற்றுக் கொள்வது உள்நாட்டு மக்களுக்கு எதிரான செயல். ஒரு நாட்…

  20. சதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை ! அண்மையில் வேலைத்தளத்தில் நண்பர் ஒருவருடன் அளவலாவிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்க ரெட்டைக் கோபுரத் தாக்குதல்பற்றியும் பேச்சு எழுந்தது. இதுபற்றி மேலும் எழுதுவதற்குமுன்னர், அந்த நண்பர் பற்றிய சில விடயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர் ஒரு வெள்ளையினத்தவர், வாழ்க்கையின் அதிகமான நேரங்களை தனிமையில் கழிப்பவர். பெரும்பாலான தருணங்களில் தனிமையில் இருக்கும் அவருக்கு தாழ்வு மனப்பன்மை இருப்பதென்பது அவரது சில செயல்கள் மூலம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். மெளனமே பெரும்பாலும் அவரது மொழியாக இருப்பினும், சில விடயங்கள் பற்றிப் பேசும்பொழுது அவரது சுபாவம் மாறிவிடும். அப்படியொன்றுதான் இந்த ரெட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பாக அவர் கொண்டிருக்கும் …

    • 45 replies
    • 4.4k views
  21. சத்தம் இல்லாத தனிமை வேண்டாம்….. அப்ப எங்களுக்கெல்லாம் நேரம் பாக்க மணிக்கூடு தேவையில்லை. காது இருந்தாச் சரி அதிலேம் பாம்புக் காதெண்டா விசேசம். பாம்புக்கு காதில்லாமல் எப்பிடி அதிர்வுகள், உணர்வுகள் மூலம் கேக்குதோ அப்பிடித் தான் எங்கடை சனத்துக்கும் சத்தம் இல்லாமலே எல்லாம் கேக்கும். “சின்னவா ஆறு மணி ஆகீட்டு”எண்டு அம்மா கூப்பிட்டா அது அரை மைலுக்க எங்க இருந்தாலும் கேக்கும், இல்லாட்டியும் கேக்கிறமாதிரி இருக்கும். கேட்ட உடனயே அடுத்து வரி “சாமி கும்பிடோணும் விளையாடினது காணும்” எண்டு சொல்லேக்க கிணத்தடீல நிப்பம். விடிய நாலரை, ஐஞ்சு எண்டு நேரம் மாறமல் அடிக்கிற கோயில் மணி அவையவையின்டை தேவைக்கு ஏத்த மாதிரி எழுப்பி விடும். காலமைக் கோயில்களின்டை மணியடிக்கிற ஐயர் என்னெண்டு …

  22. சந்ததிப் பெருக்கமும் இன்மையும் (பகுதி 1) - ஆர். அபிலாஷ் கேரளாவை சேர்ந்த என்னுடைய மாணவர் ஒருவர் அரசு உதவி பெறும் கல்லூரியில் நல்ல சம்பளத்தில் உதவிப் பேராசிரியர். அவரை நான் சந்தித்த போது தான் புதிதாகக் கட்டிய பிரம்மாண்டமான வீட்டை தன் போனில் காட்டினார். அப்போது வகுப்பில் உள்ள பிற மாணவர்கள் சிரித்தனர். காரணம் அவரது வீட்டின் முன் எடுத்ததாக அவர் காட்டிய குடும்ப புகைப்படத்தில் அவருடன் மூன்று சிறு குழந்தைகள் ஏற்கனவே இருந்தார்கள். இது நடந்து அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் இரு குழந்தைகள் வந்துவிட்டனர். இப்போது அவரது குடும்பமென்பது அவர், அவரது மனைவி, ஐந்து குழந்தைகள். இப்போது அவர் மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறார். அவரது பெற்றோர் பக்கத்தில் அவர்களது குடும்ப வீட்டில் இர…

  23. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வல்வை மண்ணின் மகத்தான புதல்வன், சந்நிதியான் அருளில் திகழும் தொண்டர், “அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல்” எனப் புகழப்படும் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நாளை (31.08.2025) தனது 76ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். 🌺 சந்நிதியான் சுவாமியின் பணி பெரியபுராண நாயன்மார்களின் வழியில், “அடியார்க்கு அமுதூட்டல் தான் உயர்ந்த தர்மம்” என்ற கருத்தை வாழ்வின் கடமையாக ஏற்று நிற்கும் மோகன் சுவாமி, 1989 ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றில் சந்நிதியான் ஆச்சிரமத்தை நிறுவினார். அன்று தொடங்கிய அந்த தர்மம் இன்றும் 37ஆண்டுகளாக, வருடம் 365 நாட்களும், தினம் மூன்று வேளையும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.