சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
988 topics in this forum
-
அலாரம். “ டாண் “ எண்டு நல்லூரில அடிச்ச மணி நாலு கிலோ மீற்றருக்கு இங்கால படுத்திருந்த சாந்தக்காவை ஏழுப்பிச்சுது . “டேய் சின்னவா எழும்பு நாளைக்கு சோதினை எண்டு சொன்னியெல்லோ , கொண்ணன் பிந்தித்தான் படுத்தவன் நீ எழும்பு” எண்டு திருப்பித் திருப்பி சொல்லவும் அந்தச் சண்டையில பெரியவன் எழும்பினான். அரைநித்திரையில கட்டில்ல இருந்து எழும்பின சின்னவன் பெட்சீட்டால போத்த படி வந்து மேசையில திருப்பியும் படுத்தான் . பத்து நிமிசத்துக்கு ஒருக்கா “சின்னவா பெரியவா” எண்டு மாறி மாறிக் கூப்பிட்டு கடைசீல என்ன சத்தமில்லை எண்டு வந்து பாத்திட்டு “பார் ஐஞ்சு மணி பெருமாள் கோயில் மணி கேக்குது” எண்டு மனிசி நித்திரை கொண்டவனுக்கு மேல செம்பில இருந்து தண்ணியைத் தெளிச்சு எழுப்பி படிக்க விட்டுது. வீட்…
-
- 2 replies
- 770 views
- 1 follower
-
-
-
-
- 1 reply
- 769 views
-
-
குவேனி சாபம் பற்றிய மரபுவழிக்கதையை இங்கு பார்ப்போம், தமிழ் பெண் குவேனி இட்ட சாபத்தினால் சிங்களவர்கள் மத்தியில் ஒற்றுமையின்மை மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இலங்கையில் அரசியல் ரீதியான பிரச்சனைகள் நிலவி வருகின்றன. விஜயன் யார்? வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தைய காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு, சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர். …
-
- 0 replies
- 764 views
-
-
சமீபத்தில் 'இறுகப்பற்று' திரைப்படம் பார்த்தேன். அப்படத்தில் ஒரு காட்சி என்னை வள்ளுவனிடம் கொண்டு விட்டது. அந்த அனுபவத்தை முதலில் யாழில் பதிவு செய்து, பின் ஏனைய வலைத்தளங்களுக்குக் கடத்தவே எண்ணம். இப்பதிவுக்கு மட்டுமல்ல; எனது எந்தவொரு பதிவுக்கும் இதுவே என் உள்ளக்கிடக்கை. அதற்குக் காரணம் எனக்கு ஆரம்பகால எழுத்தனுபவத்தைத் தந்தது யாழ் இணையமே! இங்கு யாழ் சொந்தங்கள் தந்த ஊக்கமே எனக்கான தூண்டுகோல். யாழ் தூண்டுகோல் ஆக நான் எழுதுகோல் ஆனேன். இருப்பினும் சில பதிவுகளில் காணொளி இன்றியமையாததாய் அமைகிறது; காணொளியை நேரடியாக யாழில் பதிவதில் எனக்கு சிரமம் ஏற்படுவதால் சமீப காலங்களில் அத்தகைய தருணங்களில் முகநூலில் பதிந்து, பின்னர் யாழின் சமூகவலை உலகத்திற்குக் கடத்துவதை வழக்கமாக்கிவிட்டேன் . அவ்…
-
- 6 replies
- 763 views
- 1 follower
-
-
மீனுக்கு மேலும் சிக்கல், கீழும் சிக்கல். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். Between the devil and the deep blue sea. அதாவது, தமிழில், ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்று ஒரு பாடல் சொல்லும் கருத்தே அந்த ஆங்கில பழமொழியின் அர்த்தம். இது ஒரு பறக்கும் மீன். அதன் மூலம், பெரிய மீன்கள் பிடித்து தின்ன வரும் போது பறந்து, தப்பி விடும். ஆனால் அதுவே வேறு பிரச்சனையை கொடுக்கிறது.... அவ்வாறு பறக்கும் போது, மேலே பறக்கும் பறவைகளிடம் சிக்கி இரையாகும் நிலை உண்டாகிறது. ஆகவே, மேலும் சிக்கல், கீழும் சிக்கல்.
-
- 2 replies
- 762 views
-
-
-
- 0 replies
- 762 views
-
-
விளம்பரங்கள் பற்றிய புத்தகம் எழுதிய மன்னர் மன்னரின் பேட்டி. மனிதர்களை ஏமாற்ற பதினைந்து உளவியல் கோட்பாடுகள் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஆர்வமுள்ளோர் பாருங்கள்.
-
- 0 replies
- 762 views
- 1 follower
-
-
Sangarasigamany Bhahi C.V.Wigneswaran· இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் ஒன்றை சட்டரீதியாக அமைக்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் வாதம் தவறானது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே நீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழுவை ஒரு உதாரணமாக நான் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். அறிக்கையின் எந்த இடத்திலும் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை போன்ற ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை. இலங்கையில் உள்ந…
-
- 1 reply
- 762 views
- 1 follower
-
-
தேங்காய் எண்ணெயும் இரு கோடுகளும் ! ================================ ஒரு தாளில் உள்ள ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்குவது எப்படி? இதற்கு விடை உங்களில் பலருக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். இன்றைய அரசியல் சூழலிலும் இந்த இருகோடுகள் தத்துவம் பல நாடுகளில் வெற்றிகரமாக பின்பற்றப்படுகிறது. சரி, தேங்காய் எண்ணெய்க்கும் இந்த இரண்டு கோடுகளுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கட்டுரையின் இறுதியில் உங்களுக்கே புரியும் ! கடந்த ஒரு வாரமாக அரசியல்வாதிகள் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் முக்கிய பேசுபொருளாகி இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்க்குள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டும் அதன் பின்னரான வாதப் பிரதிவாதங்களும் ஆய்வுகூட அற…
-
- 0 replies
- 760 views
-
-
1985: இலங்கையில் இந்தியா Sep 11….அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்தவரையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். Sep 11, 1985ல் தான் இலங்கை கிரிக்கெட் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அந்த நேரத்தில் தமிழ் போராளிகளிற்கு ஆதரவும் அடைக்கலமும் பயிற்சியும் சுடுகலன்களும் கொடுத்து வந்த இந்தியாவிற்கு எதிராக ஈட்டப்பட்ட வெற்றி, கொழும்பு சரவணமுத்து விளையாட்டரங்கின் எல்லைக் கோட்டைத் தாண்டியும் எதிரொலித்தது. 2009 போர் வெற்றிக் கொண்டாட்டங்களிற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைத்த கொண்டாட்டமாக தென்னிலங்கையில் இந்தியாவிற்கு எதிரான இந்த கன்னி டெஸ்ட் வெற்றி கொண்டாடப்பட்டது. டெஸ்ட் ஆட்டம் முடிந்த அடுத்த நாளான வியாழக்கிழமையான Se…
-
- 1 reply
- 760 views
-
-
-
Covid-19: கொரோனா வைரஸ் உருவாக்கிய புதிய சொல்லாடல்கள்: சுய தனிமைப்படுத்தல், சமூக விலகல் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையில் விற்கப்பட்ட வெளவால் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. சீனாவில் ஆரம்பித்து வெகுவேகமாக உலகம் முழுவதும் பரவி தற்போது ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில், மையம்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பல ஆயிரக் கணக்கானவர்களைப் பலியெடுத்தும் இன்னும் பல்லாயிரக் கணக்கானவர்களை வதைத்தும் வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க முன்னரே அது மாறும் அளவுக்கு Pandemic ஆக உருவாகியுள்ள கொரோனா தொற்றுப்பரவரலைத் தடுக்கமுடியாமல் உலகநாடுகள் அனைத்தும்…
-
- 0 replies
- 756 views
-
-
அன்னம்... பாலையும் ,தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். நான் சில மிருகக்காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா? என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார். எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்ற…
-
- 3 replies
- 753 views
-
-
இந்த உலகம் நல்லவர்களால் இயங்குகிறது.. நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் Mumbaiல் settle ஆனவர். Fast Food கடை மும்பை outerல். கோவை அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். வயதாகிவிட்டது. எனவே கிராமத்திற்கு வந்து விட்டேன். கடையையும் கொடுத்து விட்டேன் என்று கூறினார். பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. மும்பை அவர் கடையில் 6 பேர்கள். மூன்று பேர் Sandwich makers. ஒருவர் Bearer.ஒருவர் Table Cleaner. கூட இவர் order எடுக்க, Cash வாங்க கல்லாவில். Simple Hub.. மாலை 5 மணி முதல் 9 மணி வரை நல்ல கூட்டம் இருக்கும். அந்த சமயத்தில் இவரே Customers இடமிருந்து order வாங்கி உள்ளே சொல…
-
- 1 reply
- 753 views
- 1 follower
-
-
ஹர்த்தால் “ நாளை யாழ்குடா நாடு முழுவதும் ஹர்த்தால்”எண்டு முரசொலியில முன்பக்கம் வாசிச்சவுடன் எனக்குள் ஒரு குறுகுறுப்பு . ஏன் இந்த ஹர்த்தால் , ஹர்த்தால் எண்டால் என்ன , யார் இதை ஒழுங்கு படுத்தி இருக்கிறார்கள் , யாரை எல்லாம் ஹர்த்தால் செய்யச் சொல்லுறார்கள் எண்ட சிந்தனை ஒண்டும் இல்லை, ஆனாலும் எனக்குள் இருந்த வேற ஆர்வம் அம்மாவுக்கு தொற்ற முதல் நான் வெளிக்கிட்டன் . இண்டைக்காவது கொஞ்சம் இருந்து மெல்லச் சாப்பிடன் எண்டு வீட்டை சொன்னதை எல்லாம் கவனிக்காம , அவசரமா வெளிக்கிட்டன் ஹர்த்தாலை எப்பிடி முழுமையா அமுல் படுத்துவது எண்டு. நல்ல ஞாபகம் , நிசாகரன் லண்டனுக்கு படிக்கப் போய் அனுப்பின முதலாவது கடிதத்தில் “ மச்சான் இங்கேம் உங்க மாதிரித்தான் திடீரெண்டு holiday எண்டு அறிவிச்சா,…
-
- 1 reply
- 752 views
- 1 follower
-
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு. ❤️ 1917 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய கோயில் அதிகாரியான 4ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் சிந்தையில் முருகப்பெருமானுக்கான தீர்த்தக்கேணியைத் திருப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் பலனால் 1922 – 1923 ஆம் ஆண்டுப் பகுதியில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தீர்த்தக்கேணி சற்சதுர வடிவில் சுண்ணாம்புக் கற்களாலும் வெள்ளைக் கல்லாலும் அமைக்கப்பட்டது. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் காலத்தில் அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியானது, கடப்பாக் கற்களைக் கொண்டு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. குபேர கோபுரவாசல் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கேணித் தீர்த்தத் திருப்பணி இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்…
-
-
- 3 replies
- 749 views
-
-
நீதிக்கும் சமாதானத்துக்குமான, கேள்விகளின் காலம் - 1 – நடராஜா குருபரன்! #justice #peace #memories #peace_talk கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழி முறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். ஒரு எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அது கொள்கையாகிறது. சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பின்பும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு ஏற்படும் போது அது கோட்பாடாகிவிடுகிறது. முன் கூட்டியே தீர்மானிக்கப்படும் நம் கொள்கைகளில், மூலோபாயம் தந்திரோபாயங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவைப்படின் அவை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய உள்ளீடுகள…
-
- 0 replies
- 749 views
-
-
President Maithripala Sirisena, I am writing this letter to you, but I am fully aware you may never read it. Just as you pardoned my sister’s murderer on a Saturday night and chose to do it on a long weekend in Sri Lanka so you could avoid facing what you have done for as long as possible. I cannot begin to understand how a father of two daughters reached the decision to release this monster? I know every single injury my sister sustained that night. I could write the extensive list right here, it is tragically clear in my memory, but I need to protect my parents from having to go through it all again. I can’t stop thinking about what she went through that night. She foug…
-
- 0 replies
- 746 views
-
-
டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதிக்குள் கிரனேற் லோஞ்சர் தாக்குதல்கள் ரஷ்யா - உக்ரைன் யுத்தம் மூன்றாம் நாட்டுக்கு விரிவு உக்ரைன் எல்லையோரம் மோல்டோவா வுக்குள் அமைந்துள்ள டிரான்ஸ்னிஸ்ட் ரியா பிராந்தியத்தில் திங்கள், செவ்வாய் இரு தினங்களும் அடுத்தடுத்துத் தாக்கு தல்கள் நடந்திருக்கின்றன.மர்மமான விதத்தில் கிறனேட் லோஞ்சர்கள் மூலம் நடத்தப்பட்ட அத் தாக்குதல்களில் ரஷ்யா வின் ஒளி,ஒலிபரப்பு சேவையை வழங்கு கின்ற அன்ரனா கோபுரங்கள் சேதமடைந் துள்ளன. ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சி அரசினால் நிர் வகிக்கப்படுகின்ற டிரான்ஸ்னிஸ்ட்ரியா வின் பாதுகாப்புப் பணிமனை ஒன்றும் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. இத் தாக்குதல்களை அடுத்து மோல்டோவா அரசு அதன் பாதுகாப்புச் சபையைக்…
-
- 2 replies
- 746 views
-
-
உள்ளடக்கம் :- பள்ளி கல்வியை முடித்தபின் உயர் கல்விக்கு செல்லும் விகிதாசாரம் தமிழ்நாடு 45.2%, உத்தராபிரதேசம் - 25%, குஜராத் - 20% (வளர்ச்சியடைந்த மாநிலம்🤔 ) திரவிட கழகத்தால் தமிழ்நாடு கெட்டு போச்சு என்று கூச்சலிடுபவர்கள் கவனிக்கவும்..... ஏன் தமிழ்நாடு நீட்டுக்கெ ஏதிராக போராடுகின்றது 20 கோடிக்கு உத்தரபிரதேசத்தில் 55 மருத்துவ கல்லூரி, தமிழ்நாட்டில் 53, குஜராத்தில் - 29............. பல நிர்வாகங்கள் இன்னும் முழுமையாக இயங்காத நிலையில் எப்படி பள்ளிகளை திறக்க முடியும், திறந்தால் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும், பல குழந்தைகள் உணவின்றி மெலிந்துவிட்டார்கள்............. கடைசியாக ஒரு முட்டை சாப்பிட்டது பங்குனி மாதம் மிஸ்...
-
- 0 replies
- 746 views
-
-
இது 'கீற்று' இணையத்தில் இருந்தது. கவிஜி இதை எழுதியிருந்தார். இதை வாசிக்கும் போது மனம் இலேசாக ஆனது. உங்களுக்கும் இது பிடிக்கலாம். ************************************************* மதகத ராசாக்களே சிரியுங்கள் வயதாகும் போது கோமாளிகள் ஆகாமல் இருக்க கவனத்தோடு இருக்க வேண்டும். பல கெத்துகள் வெத்துகளானதை பார்த்து விட்டோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்க்க பார்க்க வயதாகி விடுவது இயல்பு. அது ஒரு ப்ரோஸஸ். வயது ஏற ஏற மனதின் வடிவம் மாற வேண்டும். தன்மையின் தகவமைப்பில் பழம் போல பழுத்து... சுவை கூடும் இனிப்பில் புன்னகைக்க வேண்டும். மொட்டு விடும் அனிச்சையின் மொழி கொள்ளலே வயதாவதின் வடிவம். இயல்பினும் இயல்பாக பனி உருளும் நுனிப் புல் ஆகி எட்டு திசைக்கும் இசை பட அசைதல்…
-
- 0 replies
- 743 views
-
-
அறம் வெல்லும்..? 'BigBOSS' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் விக்ரமன் அடிக்கடி உச்சரித்த ‘அறம் வெல்லும்’ என்ற வார்த்தைகள் மக்களிடத்தில் இப்பொழுது அதிகம் பரீட்சயமான வார்த்தைகளாகியுள்ளன. ஆனால், போட்டியின் முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. உண்மையில் 'அறம்' தோற்பதில்லை. அது தோற்கடிக்கப்படுகிறது என்று மக்களுக்கு புரியவைப்பதற்கே ஒரு ‘விடுப்பு’ நிகழ்ச்சி தேவைப்படுகிறது. இது தான் இன்றைய நிதர்சனம். புதிய ஒழுங்கு. 'அறம்' தோற்றல் என்பது புது விடயம் அல்ல. இது அரசியல், வணிகம், சட்டம், சமூகம், ஊடகம் என எல்லா மட்டங்களுக்கும் பொருந்தும். அடிப்படியில் அறத்தைத் தோற்கடிக்கும் தந்திரம் ஆதிக்க சக்திகளின் மூலோபாயம் என்றாலும், அதனை நி…
-
- 0 replies
- 741 views
-
-
WORDS OF COMFORT TO RANIL- V.I.S.J.AYAPALAN POETரணிலுக்கு ஆறுதல் மொழிகள் - வ.ஐ.ச.ஜெயபாலன் . . NEWS, I WILL DECIDE WHO BECOMES PM. PM: - SAJITH யார் பிரதமர் என்பதை நான் தீர்மானிப்பேன் - சஜித் . எனது ஆறுதல் மொழி. - MY WORDS OF COMFORT . . . RANIL, DON'T WORRY. ISRI LANKAN PRESIDENT ELECTION RACE REMINDS ME A CHILDREN STORY. . கவலைப்படாதே ரணில். இலங்கை அதிபர் தேர்தல் எனக்கு ஒரு சிறுவர் கதையை ஞாபகப்படுத்துகிறது. SAJITH IS THE FASTEST RABBIT IN THIS RACE. RANIL, YOU ARE THE NEPHEW OF THE FOX, SO DON'T STOP. SEND MORE AND MORE MINSTERS TO THE OTHER SIDE TO SAVE YOUR CARRIER. …
-
- 0 replies
- 741 views
-
-
** எனது அனுபவம் அல்ல. வாட்ஸ் அப்பில் வந்த செய்தி யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நான் பெற்றுக்கொண்ட மனம் வருந்தத்தக்க அனுபவம். கடந்த 12.09.2023 காலை 8.25 மணியளவில் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு சென்ற நான் ஒரு முதலுதவி பயிற்றுவிப்பாளர் என்றவகையில் சுய விருப்பின் பெயரில் சிறுநீரகத்தின் செயற்பாட்டை அறிய உதவும் Serum Creatinine எனப்படும் பரிசோதனையை செய்வதற்காக குருதி மாதிரியினை வழங்கியிருந்தேன். அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் பரிசோதனையின் முடிவினை பெறச்சென்றிருந்தபோது அங்கு சில நிமிடநேரத்தின் பின் ஒரு பெண் கையில் எனது பரிசோதனை முடிவினை வழங்கிவிட்டு அது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்துவிட்டுச் செல்லும்படி அறிவுறுத்தினார். அத்…
-
- 6 replies
- 740 views
- 1 follower
-
-
Vara Mahadevan 1984, மருத்துவக் கல்லூரியில் நுழைந்து சில மாதங்களே இருக்கும். இடி போல் வந்தது அந்த GO. எல்லா வெளி நாட்டு மாணவர்களின் கட்டணம் மாதம் 2000 ரூபாயாக கட்ட வேண்டும். மருத்துவ கனவு நொறுங்கிய உணர்வு. சோத்துக்கே வழியில்லை இதில... DME அலுவலகம் போல பல இடங்கள் ஏறி இறங்கியும் எந்த பயனும் இல்லை. சரி மூட்டையைக் கட்டிக்கிட்டு வேற ஏதாவது படிக்கலாம் என்று நாயர் கடைல சிங்கிள் டீ கிளாசோட யோசனை. அப்போ ஒரு சீனியர் வேடிக்கையா ஒன்று சொன்னார். கோட்டையில போய் CM கிட்ட ஒரு மனு குடு…
-
- 1 reply
- 738 views
-