கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....! ஆய்வு கூடத்து உதவியாளர் என்று நினைவு...! அவ்வப்போது ரியூசனும் குடுப்பார்..! என்ன பாடம் என்றில்லை.., எல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..! ஒரு நாள் கேட்டார்...! உனக்கு உரிமை இருக்கா எண்டு...? என்னடா இது புது வில்லண்டம்? வில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..! அப்போது புரியவேயில்லை...! ஆறாம் வகுப்பு முடிஞ்சு ..., அட்வான்சு லெவல் வந்த போது.., எல்லாமே புரிஞ்சது...! நடு ஆற்றில் தத்தளித்தவனுக்கு.... ஒரு மரக்கட்டை கிடைச்சது...மாதிரி....! கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சது மாதிரி...! மப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல…
-
- 3 replies
- 1.5k views
-
-
நீ சென்ற ஒரு நொடியில் பிறந்து விடுகிறது உனக்கு புது பெயர் ஒரு மணி நேரத்தில் தூக்கி எறியப்படுகிறது உடைமைகள் வாங்கியப் பதக்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறது அலமாரியில் உயரிய சான்றிதழ்கள் எடைக்குப் போடப்படுகிறது எட்டு மணி நேரத்தில் ஆயுள் காப்பீடு ஆராயப்படுகிறது உட்பெட்டியில் அசையும் சொத்தின் அட்டவணை அமைதியாய் தயாரிக்கப்படுகிறது அசையா சொத்துக்கள் பிரிக்கப்படுகிறது அன்றிரவே அலைபேசியில் பங்குச்சந்தையில் பரிசீலக்கப்படுகிறது பங்கின் பரிவர்த்தனை நள்ளிரவில் நீ சென்ற அன்றே முடிந்து விடுகிறது உன் நினைவுகள் செல்லாகாசாய்....
-
- 2 replies
- 773 views
-
-
பார்வை கடலில் நீந்திய நாட்கள் நினைவாய் உடன் இருக்க. வற்றிய ஓடையில் நினைவின் துணையுடன் நீர் பயணம்.
-
- 3 replies
- 1.9k views
-
-
தடம்புரண்டோடும் மனித வாழ்வில் தடம்புரளா வண்டி போல் அவன் தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில் தபுதாரனற்ற ஒருத்தன் தவிப்பில் அவள் தவிர்க்க முடியாது தவித்த அவன் விழிகள் தத்தை அவள் தகிக்கும் வதனம் காண...... தண்ணீர் போல் கண்ணீர் தத்தளிக்கும் துளிகள் தரவரிசையாய் சரிகின்றன. தவிக்கிறது அவன் மனசு தரமறியாது தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க.. தவிர்த்த விழிகள் தகர்ந்து போகின்றன தகரடப்பா போல் போனுக்கு தத்தை அவள் கண்ணீர் கோலம் தரவாகிறது தகவலாய் மறுமுனை தாவ தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...! தகர்கிறது தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில் தகரும் அவள் வதனப் பூச்சொடு …
-
- 2 replies
- 427 views
-
-
Sri Lanka has withdrawn from a UN resolution that would allow war crimes allegedly committed during the country's civil war to be investigated. கண்ணை மூடி பால் குடித்த பூனை அத்தனை பொய்களையும் ஐ நா மனித உரிமை மன்றில் பேசிய அமைச்சரின் உரை பூனை கண்ணை மூடியபடி பால் குடிப்பது போல் இருந்தது அழகான ராஜதந்திர வார்த்தைகளும் அபிவிருத்தி என்றும் அரசியல் சாணக்கியத்தில் ஒளித்து இருந்தபடி இனவாதி பேராசிரியர் பீரிஸ் எழுதிக் கொடுத்ததை பெருமையாக வந்து வாசித்துப்போனார் அமைச்சர் அறம் அன்பு அடுத்தவர் துன்பம் எதையுமே அறியாதவர் இறுதியில் அந்த புத்தனின் தத்துவத்தை சாட்சிக்கு அழைத்து அந்த புத்தரையும் ஐ நா சபையையும் அவமதித்தது போல்…
-
- 4 replies
- 1.1k views
-
-
கனவாய் வந்தாய் காவியமே எங்கு இருந்தாய் எங்கு இருந்தாய் எந்தன் கவியே எங்கு இருந்தாய் கண்ணில் உனை நான் கட்டிவைத்தேன் என் காதல் கவியே எங்கு இருந்தாய் என்னில் உனக்காய் உயிர் வடித்தேன் என் இதயம் முழுக்க உனை வரைந்தேன் உன்னில் பின்னால் நிழல் போலே உன்னோடு இருந்தேன் உன் உயிர் போலே காலை வந்த மழை துளிபோல் கவித்துளி போலே உனை வரைந்தேன் மாலை வந்த மதி போலே காலைக் கனவில் உனை கண்டேன் அழகே தமிழே என் கவியே என் அருகில் பூவாய் பூத்தவளே புலரும் பொழுதில் எனை எழுப்பி கனவாய் வந்தாய் காவியமே .
-
- 2 replies
- 1.4k views
-
-
எல்லைகள் தாண்டி கருந்தேகம் ஒன்று கரங்கள் அறுந்து கால்கள் ஒடிந்து தழும்புகள் நிறைந்து கனவில் வந்து கதை பேசிச் சென்றது. வடக்கே என் வீட்டுக் கோடியில் ஆக்கிரமிப்பு எதிரியோடு தான் இட்ட சண்டையில் கரம் ஒன்று அறுந்தது.. கிழக்கே என் சொந்தங்களின் வளவில் தான் இட்ட சண்டையில் கால் ஒன்று ஒடிந்தது.. கந்தகத் துகள் துப்பி உடல்கருகிக் கரும்புலியானதன் அடையாளம் கருந்தேகம் என்று சொன்னது.. முள்ளிவாய்க்கால் தனில் உயிர் சுவாசம் தேடிய இறுதி மூச்சு வேளையில் வெள்ளைப் பொஸ்பரசில் உலக வல்லரசுகள் ஒன்றாய் வீசிய குண்டுகளில் அவன் முகமே தழும்புகளால் ந…
-
- 2 replies
- 1.5k views
-
-
கனவெனப்படுவது நினைவும் நிஜமும் கூட்டி மகிழ்தலும் கொடுந்துயர் உழத்தலும் ஆழ் மனத்தாழ்ந்த உள்ளுணர்வெழுந்து மீள் நினைவாற்றலை உயிர்ப்பிக்கும் நிகழ்வது!!! ஆற்றிய நிகழ்ச்சியை முற்றும் மறந்துளம் சுற்றியதொன்றின் பான்மையை நிகழ்வுகளால் அழகுறக்காட்டி அணைக்கும் மகிழ்வைப் பழகுநற் கூட்டும் பான்மையுடையது எண்ணமே மலர்ந்தோட உயிர்ப்புற்று வருதலால் வண்ணமாக எழுந்துயிர் பெறும் நிகழ்வது!!! உணர்வினில் உயிரினில் உடலினில் நரம்பினில் புணர்ந்த நிகழ்வுகள் எண்ணரும் வகையால் ஒழுகு மெய்யுணர்வின் ஊற்றொடு கலந்து ஆழ்ந்த நினைவினை முகிழ்த்தும்... இற்றைக்கியலும்.... இயம்பும்..... நிகழ்வது!!! -…
-
- 0 replies
- 701 views
-
-
கனவு பலிக்குமா? ********************** கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தி…
-
-
- 3 replies
- 1.3k views
-
-
கனவில் கருங்கூந்தல் கலைய கண்ணிமைகள் காவியம் புனைய கைவிரல்கள் கவி பாட வெண்கழுத்து வெட்கத்தில் சிவக்க செவ்விதழ்கள் சுவை சொட்ட வியர்வையில் துவண்ட உன் எழிலுக்கு துகில் கலைக்க வந்த என் கைகள் காற்றில் கலந்தது! விலகும் உன் பெண்ணியம் கண்டு.
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 4 replies
- 947 views
-
-
கரும்புலி மறவர்கள் கரும்புலி மறவரே கரும்புலி மறவரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிந்தீரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிகையிலே வெந்தழிந்தாலும் வீழ்விலை என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைத்தீரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைக்கையிலே பெருக்குண்ட துயரெலாம் தூசுகள் என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவினீரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவுகையிலே ஏய்ந்த துன்பமும் இன்பமே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைந்தீரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைகையிலே உழந்த நெஞ்சிலும் உவகையே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே என்மொழி என்னினம் என்நிலம் என வாழ்ந்தீரே என் மொழி என்ன…
-
- 4 replies
- 747 views
-
-
கரைச்சல் வேண்டும் ---------------------------------- கடவுளே வருடம் வந்து விட்டதே என்று காணி நிலம் கேட்பார்கள் சொத்து சுகம் கேட்பார்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கரைச்சலாவது கட்டாயம் கொடுக்கவும் ஒன்றுக்கு மேல் கொடுத்தால் இன்னும் நல்லது பெரிதாக தேவையில்லை சிறியவையாகவே போதும் பச்சை தண்ணீர் குடித்தால் மூக்கு ஓடுவது போல முருங்கைக்காய் சாப்பிட்டால் தோலில் அரிப்பு வருவது போல இனிப்பு சாப்பிட்டால் நெஞ்சு எரிவது உறைப்பு சாப்பிட்டால் வயிறு எரிவது நடந்தால் பாதம் நோவது இருந்தால் பிஷ்டம் நோவது படுத்தால் கழுத்து சுளுக்கு…
-
-
- 18 replies
- 811 views
-
-
மௌனம் எனும் அறைக்குள் விருப்பு வெறுப்பு எனும் இரண்டு பேரை அடைத்து கர்வம் எனும் பூட்டினால் பூட்டப்பட்டிருக்கின்றது விருப்பும் வெறுப்பும் யார் பெரியவர் எனும் விவாதத்தை தொடங்கி வாக்குவாதமாக்கிக் கொண்டிருந்தனர் மௌனம் எனும் அறைக்குள் பேரிரைச்சல் கேட்கத் தொடங்குகின்றது தனிமை என்னும் நெருப்பு கர்வம் எனும் பூட்டின் சாவியை உருக்கிக் கொண்டு இருக்கின்றது தனிமை எனும் நெருப்பினால் கர்வம் எனும் பூட்டின் சாவி உருகி காணாமல் போனால் ஓர்நாள் மௌனம் எனும் அறை திறக்கப்பட முடியாமல் விருப்பு வெறுப்பு எனும் இருவரின் வாக்குவாதத்தால் கர்வம் எனும் பூட்டு வெடித்துச் சிதறும் விருப்போ வெறுப்போ பெரியவர் வெளியேறுவார்!😆 -தமிழ்நிலா.
-
- 8 replies
- 1.3k views
-
-
BLACK JULY 1983. கறுப்பு ஜூலை 1983 BLACK JULY 1983. கறுப்பு ஜூலை 1983 . 1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உய…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 2 replies
- 775 views
-
-
-
- 5 replies
- 1.3k views
-
-
TRIBUTE TO KALAIGNARகலைஞர் அஞ்சலி- வ.ஐ.ச.ஜெயபாலன்.எங்கள் போர்கால நெருடல்களை மறந்து. காலமெல்லாம் ஈழத் தமிழருக்கு அரணாய் அவர் நின்றதை நினைந்து அஞ்சலிக்கிறேன், கலைஞரின் புகழ்பூத்த காலத்து இயல் இசை நாடக செம்மொழியாய் தமிழ்கூறும் நல்லுலகமெல்லாம் தமிழ் வளர தமிழகத்தில் அரசு இயற்றிய ஆற்றலை வியந்து கலங்குகிறேன்.குமரியில் காலமெல்லாம் தமிழகத்தை தின்ற கடற்கோளும் தலைபணிய வள்ளுவனை எல்லைக் காவலாய் வைத்த மாண்புகளைப் போற்றி மனது நெகிழ்கிறதேஉன்னை வழியனுப்ப வந்து நீலமலையெங்கும் தேன்சிந்தி அழுகின்ற குறிஞ்சிமலர்களுடன் கண்சிந்தும் கவிஞன் நான். ஏற்கனவே உலகத் தமிழர் மனங்களிலே புதைதுவிட்டான். இனி அவனை எங்கே இடுவதென ஏங்குவதேன்? செம்மொழிப் பூங்கா அவனது நினைவிடமாய் என்றும் இருக்குமே. அண்ணா நூலகத்தைவி…
-
- 12 replies
- 2.2k views
-
-
https://timesofindia.indiatimes.com/videos/toi-original/kolkata-doctors-last-words-before-horrific-rape-murder-revealed-i-want-to-be-watch/videoshow/112552183.cms?fbclid=IwY2xjawEv0CZleHRuA2FlbQIxMAABHbKHKGXNSWu7n7YWPY1GNOELchx1Bs1iz558QA-bMuJm0VQbs4taiGEesw_aem_lcxvXznR72fMYKeYy-gYXw கிழித்தெறியப்படும் கவிதைகள் இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம் புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட நெறி தவறாமல் நாம் எம் கவிதைகள் படித்தோம் காலம் உருண்டோடி இச்சைக் கருவிக்குச் சண்டை போட்டபோது கசக்கி எறியப்பட்டன பல கவிதைத் தாள்கள் …
-
-
- 2 replies
- 704 views
-
-
எல்லா வீட்டு வேலியும் பாய்ந்து சட்டியை உருட்டும் பூனைகள் போலே எம்மிலும் பல கள்ளர் இருப்பது தெருஞ்சுக்கடா இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லி எல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய் நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடா இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா நட்பு என்றும் உறவு என்றும் நல்ல பல கதைகள் பேசி சமூகம் சேவை என்றும் கோவில் பள்ளி படிப்பு என்றும் கொக்கரித்து திரிவாரடா பின்பு கட்டியதை உடைப்பாரட கண்டபடி கதைப்பாரடா ஒற்றுமையை தொலைத்து விட்டு ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா கள்ளம் பல செய்வா…
-
- 8 replies
- 669 views
-
-
2016 பனி உறையும் கனடாவின் கூதிர்காலத்தில் டொறன்ரோ நகரில் இருந்தேன். கைகுலுக்கிச் சிரிக்கும் வெண்மணல் பாலைப் பொன் மணல் அல்லது கருங்கற் சிற்பங்களுக்கு மத்தியில் உயிர்த்த சுடுமண் பாவையாக என்னுடைய கவிதையின் சினேகிதியை சந்தித்தேன். மொழிமட்டும் எனது தாய்தந்தது. கவிதையும் விநோதங்களும் அழகும் நம்மைச் சூழ்ந்து நம்மை வாழவைக்கும் இயற்கையும் பெண்களும் தருகிற வரங்கள் தானே. இன்று மீண்டும் அந்தக் கவிதையை நினைத்தேன். . கவி நாயகி/ muse - வ.ஐ.ச.ஜெயபாலன் . வெண்பனிக் கோலமும் இல்லாத புகை வண்ணக் கொடுங்குளிர் நாள். தேனீரால் உயிரை சூடாக்கியபடி கண்ணாடி மாளிகையுள் இருந்தேன் * தூரத்துக் கரும் அணில்கள் கோடையில் புதைத்த கொட்டைகளை மீட்க்க அலைந்தன. நானோ அந்த உறைந்த நெடும் பகல…
-
- 0 replies
- 567 views
-
-
"கவிதை' என்றால் என்ன ? பாட்டென்பார்! செய்யுளென்பார்! "கவி'யாலே ஆனதுதான் தமிழ்மொழி என்பார்! "கவிதை' என்னும் சொல்லை எடு; "தை'யை ஓரமாய் நீக்கி வை "கவி' மழையில் நீ நனைவாய்; கவிஞன் ஆவாய்! முதல் எழுத்து "க'வை நீக்கிப் பார்த்தால் முளை விட்டுத் துளிர்க்கின்ற "விதை' கிடைக்கும்,அங்கே விதவிதமாய் சொல் விதைகள் குவியல் ஆகும்! "கவி' என்னும் எழுத்திரண்டை நீக்கிப் பார்த்தால் ஓரெழுத்தில் "தை' மாதம் பிறப்பெடுக்கும்! அந்தத் தை பிறந்தால் அனைவருக்கும் புது வழி ஒன்று பிறந்திருக்கும் "வி' என்னும் எழுத்ததனை விரட்டி விட்டால்-நீ விரும்புகின்ற "கதை' ஒன்று விரிந்தெழும்பும்! விரிந்தெழுந்த "கதை'தனைக் கேட்டுக் கொண்டே விரித்…
-
- 4 replies
- 1.1k views
-
-
கட்டுப்பாடுகள் விட்டுப் போகையில் மனம் கெட்டுப் போய்விடும் எம்மில் முட்டி மோதியே எழும் சிந்தைகளை அது கட்டிப் போட்டு விடும் அதை வெட்டி வீழ்த்தியே வெற்றி வாகை சூடினால் வானம் நம் வசப்படும் எதுவுமே தெரியாதென்று ஒதுங்கினால் வாழ்வு பெட்டிப் பாம்பாய் அடங்கி விடும் எல்லாம் தெரிந்து கெட்டித்தனமாய் இருந்தால் வாழ்வு சிறந்து விடும் எதையும் பட்டுத் தெளிவோம் என்று விட்டு விட்டால் பின்பு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என ஆகி விடும் திட்டுத் திட்டாய் மனதில் தோன்றும் பல வன்மங்கள் அவை சொட்டு சொட்டாய் நம்மை அழித்து விடும் மட்டு மட்டாய் நாம் வழங்கும் அன்பு கூட இறுதியில் பட்டுப் பட்டாய் கரைந்து போய் விடும் கொட்டும் மழை போல் அன்பை வாரி வழங்கினால் விட்டுப…
-
- 10 replies
- 1.4k views
-
-
கவிதை ஆர்வலர்களே அடியேன் அறிந்த கவிதை வகைகளும் அதற்கான சிறுவிளக்கமும் அவற்றுக்கு அடியேன் எழுதிய கவிதைகளும் தொடர்ந்து பதியப்போகிறேன். இது தற்கால எதிர்கால கவிதை ஆர்வலருக்கு சிறு தீனி போடும் என நம்புறேன் @ கவிப்புயல் இனியவன் 1) ஹைக்கூ 2) சென்றியு 3) லிமரைக்கூ 4) ஹைபுன் 5) குறள்கூ 6) சீர்க்கூ 7) கஸல் என்பவை முதலில் வருகின்றன
-
- 43 replies
- 5.8k views
-
-
என்னை.... காதலித்துப்பார்.... கவிதையால்... திணறவைக்கிறேன்.... ! என்னை..... ஏங்கவைக்க காதல் செய்....... ஏக்கத்தின் சுகத்தை... அனுபவிக்க துடிக்கிறேன்... ! காதல் செய்தபின்.... தினமும் என்னை.... சந்திக்காதே....... கவிதைகள் என்னை... கோபித்துவிடும்.... !!! @ கவிப்புயல் இனியவன் கவிதையை காதலிக்கிறேன் (01)
-
- 7 replies
- 1.4k views
-