கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
மொழி-பா.உதயன் காற்றுக்கும் மொழி உண்டு கடலுக்கும் மொழி உண்டு காலையில் தினம் பாடும் பறவைக்கும் மொழி உண்டு மலை கூடி மொழி பேசும் மௌனமாய் கவி பாடும் அழகான நதி வந்து அதனோடு கதை பேசும் அமுதான தமிழ் போல அந்த குருவிக்கும் மொழி உண்டு மலர் கூட மொழி பேசும் மனதோடு இசை பாடும் அழகான கிளி எல்லாம் அமுதமாய் தமிழ் பேசும் அருகோடு குயில் வந்து அதனோடு சுரம் பாடும் மழை கூடி தினம் வந்து மலரோடு கதை பேசும் இரவோடு இது பேசும் மொழி எல்லாம் தனி ராகம் சிற்பியின் உளியோடு சிலை கூட மொழி பேசும் அவனோடு தனியாக அது பேசும் மொழி வேறு அழகான பாவங்கள் அசைந்து ஆடும் ராகங்கள் மனதோடு அது பேசும் மனிதர்க்கு மட்டு…
-
- 6 replies
- 1.8k views
-
-
பாலக்காடு 2006 ஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் தன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் சன்னதங்கள் எழுதுவாள்./ எதில் இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./ . பெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன். . . பாலக்காடு 2006 வ.ஐ.ச.ஜெயபாலன் . வண்ன ஆடைகளை வானெங்கும் வீசிவிட்டு அம்மணச் செஞ் சூரியன் அரபிக்…
-
- 6 replies
- 1.8k views
-
-
என் .....மரணத்தின் போது......யாரும் அழவேண்டாம்......நீங்கள் இழப்பதற்கு......இன்னும் நிறைய இருக்கிறது.....!என்.....உடலை மரணத்தின் பின்.....நீராட வேண்டாம்......உயிருள்ள போது நன்றாக......நீராடுகிறேன்..................!என்.....உயிரற்ற உடலுக்கு........வாய்க்கரிசி போடவேண்டாம்.......உயிருள்ளபோது நன்றாக.......சாப்பிடுகிறேன்...............!என் ......மரணத்தின் போது......ஈமைக்கிரிகைகள் எதுவும்.......செய்யவேண்டாம்.......கடவுள் பற்றற்றவன் அல்ல.....கிரிகைகளில் பற்றற்றவன்.....!என்.....உடலை எரிக்காதீர்கள்......புதைத்துவிடுங்கள்......புழுக்கலும் பூச்சிகளும்.....உணவாக உண்டுமறைந்துவிடுகிறேன்.......!^^^^^^கவிப்புயல் இனியவன்யாழ்ப்பாணம்- இலங்கை
-
- 4 replies
- 1.8k views
-
-
வருவதை தள்ளி வாழுவோம் நண்பா..! ******************************* ஓலைக் குடிசையில் வாழ்ந்தனான் நண்பா ஒளிவு மறைவின்றி சொல்லுறேன் நண்பா காலை உணவுகூட கஞ்சிதான் நண்பா காலத்தால் நானொரு ஏழைதான் நண்பா வாழப்பிடிக்காமல் வாழ்ந்தநான் நண்பா -இந்த வையகம் ஏனென்று ஏசினேன் நண்பா பிறந்ததன் பயன் பற்றி யோசித்தேன் நண்பா பிடித்தது வாழ்க்கையில் பற்றொன்று நண்பா மனிதர்கள் எல்லோரும் வேறு வேறு நண்பா மடையராய் எங்களைப் பார்ப்பார்கள் நண்பா உலகத்தில் எல்லோரும் ஒன்றுதான் நண்பா உணர்ந்தாலே போதுமே வெல்லலாம் நண்பா. படித்ததன் வேலையோ கிடைக்கேல்ல நண்பா பாசங்கள் காட்டவோ யாருமில்லை நண்பா எடுத்ததன் பிறவியின் புரி…
-
- 6 replies
- 1.8k views
-
-
"◆என்◆இதயம்◆எரிகிறது◆" [நவீன கவிதை] "உன்னை நினைத்து என் இதயம் எரிகிறது! உன் இன்றைய காதலன் பொறாமை வாசனையை எனக்கு வீசுகிறான்!" "எதற்காக இப்படி செய்தாய்? கேட்டிருந்தால் எல்லாமே தந்திருப்பேனே 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'! " "எனக்கு நீ மட்டுமே வேண்டும் எடுத்திடு என் பணம் எல்லாவற்றையும் என் இதயம் எரிகிறது!" "உனக்கு 'நான் விரும்புகிறேன்' சொல்ல, நீயோ மறுபக்கம் திரும்பி என்னை விட்டுவிடு என்கிறாய் என் இதயம் எரிகிறது!" "என்னை பார்த்து அன்று சொன்னாய் விரும்புகிறேன், மணம் முடிப்பேன் என்று கனவ…
-
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-
-
முழுமதி முகமதில் கனலும் கருவிழிகண்டு இயல்பான இதயம் இடம் பெயருதே!! உன் கன்னங்களின் வண்ணம் என் எண்ணங்களில் நிரம்புகிறது... வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில் நின் முகமே எங்கு நோக்கினும்...! கனவுகளில் கரம்கோர்த்து விழித்தவுடன் வெறுமையை உமிழும் இவள் நினைவுகளை யாரிடம் பகிர்வேன்!!??
-
- 4 replies
- 1.8k views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
கோடை காலம் —————————————————————————————————— என் வீட்டு வாசலில் பூக்கள் விரியும் முற்ரத்து மரங்களில் மூச்சுகள் கேக்கும் காலையில் வந்து இனி காக்கையும் குருவியும் பாடும் என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் கானகம் போல் ஒரு சோலை விரியும் காலத்தின் பிறப்பு ஒன்றை சொல்லி சிரிக்கும் கள்ளமாய் வந்து இனி தேனீக்கள் காலை பூக்களில் காதல் கீதம் இசைக்கும் கண்ணை பறித்திடும் கன்னியின் கூந்தலில் காலை மலர்ந்திட்ட மல்லிகை வாசம் எண்ணக் கனவினை சொல்லி சிரித்திடும் எங்கள் மங்கையர் கோலங்கள் வாசலில் பூத்திடும் தென்னம் தோப்பினில் தொட்டிலை கட்டி சிட்டு குருவின் சிரிப்பு ஒலி கேக்கும் வானை திறந்து ஒரு வானவில் ப…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஓ அமேசான் (Pray for Amazon) உலகத்தின் உடல் தீ பிடித்து எரிகிறது உன்னோடு சேர்த்தே மனிதப் பிழைகளினால் மண்ணில் மனிதனும் இல்லை மரமும் இல்லை என்றாகிப்போய் விடுமோ ஒரு உலகம் தானே உனக்கும் எனக்கும் ஏதோ பயமாக இருக்கிறது உலகக் குழந்தைகளை நினைக்கையிலே ஓ உனக்காகவே ஆமேசூன் ஒவ்வொரு எங்கள் கண்ணீர் துளிகளும் உன்னை வந்து அணைக்கட்டும் .
-
- 6 replies
- 1.8k views
-
-
சட்டமும் ஒழுங்கும் சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள் பின்பு ஏன் பிக்குமாரை பின் கதவால் திறந்து விடுகிறார்கள் . நீதியும் அரசியலும் என்ன தீர்ப்பை இலங்கை நீதியரசர்கள் எழுத வேண்டும் என்று ஏற்கனவே எழுதி இருப்பர் இலங்கை அரசியல் வாதிகள் . நீதி எ .வி .டைசியின் சட்ட புத்தகம் இலங்கையில் செல்லுபடியாகாது இங்கு நீதி என்று எங்கும் இல்லை . அரசியல் கைதிகள் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை அவர்கள் தமிழர்கள் என்பதால் அப்படித்தான் அந்த அரசியல் அமைப்பு எழுதி இருக்கிறது . பா .உதயகுமார் .
-
- 3 replies
- 1.8k views
-
-
நவீன கவிதை / "நிழல்" "என்னை பின்தொடரும் இருண்ட நிழலே நான் நடக்க ஏன் நீயும் நடக்கிறாய் சிலவேளை முன்னுக்கு நிற்கிறாய் மறுவேளை பின்னுக்கு நிற்கிறாய் குட்டையாய் தெரிகிறாய் நெட்டையாய் தெரிகிறாய் ஏன் உனக்கு இந்த கோலம்?" "வெளிச்சத்தில் கூட்டாளியாய் வருகிறாய் இருட்டில் ஏனோ ஒழிந்து விடுகிறாய் ? நிழலே , உன்னை பார்த்து ரசிக்கிறேன் என்றாலும் உன் கோலம் உண்மை சொல்லாது கை விரல்கள் விந்தை காட்ட நீ நாயாவாய், குருவியாவாய் எப்படி உன்னை நம்புவது? நான் ஏங்கி துடிக்கிறேன் நண்பனே!" "உன்னை மதிலில் பார்க்கிறேன் ஒரு கத்தி என் முதுகை குத்து…
-
- 0 replies
- 1.8k views
-
-
"பூவுக்குள் ஏனப்பா பூகம்பம்" "பூவுக்குள் ஏனப்பா பூகம்பம் பூரியரென்று யார் சொன்னது? பூவையர் என்றால் கேவலமா பூத்துக்குலுங்குவது அழகு மட்டுமா?" "மண்ணில் வளத்தைக் காண்பவனே பெண்ணில் வளமோ ஏராளம்! ஆண்களின் இன்பப் பொருளல்ல கண்கள் அவர்களே வாழ்வில்!" "சிவன்-பார்வதி கதை தெரியாதோ சித்தத்துடன் சமஉரிமை வழங்காயோ? சினம்கொண்டு அவள் எழுந்தால் சிதறிப்போவாய் வாழத் தெரியாமல்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பூரியர் - இழிந்தோர், கீழ்மக்கள்
-
- 0 replies
- 1.8k views
-
-
அடுத்த வீட்டு அம்பிகா மாமி ஆருக்கும் ஒன்றும் குடா கசவார மாமி இவோ கையை விட்டு காசை எடா வட்டி போட்ட குட்டிகளை பாங்கில போட்டு பிட்டு கடைசி மட்டும் கடைக்கு போக காய் பிஞ்சு வேண்ட மாட்டா கையில ஒட்டின சோத்தை கூட காக்கைக்கும் போட மாட்டா அறம் செய்ய விரும்பு என்று அந்த ஔவையார் போல் நடிப்பு வேற பக்தி என்றும் முக்தி என்றும் பல கதைகள் விடுவா மாமி படிப்பது தேவாரம் இடிப்பது கோவில் கதை மட்டும் அளக்க கந்தசாமியார் கோவிலில் காலையும் மாலையும் காணலாம் மாமியை உறுட்டிப் பிரட்டி கதை விடுவா உண்மையை மட்டும் ஒளித்திடுவா அடுத்தவரை அப்ரிஸியேட் பண்ணுகிற பழக்கமில்லை ஆனா உதவு மட்டும் கேட்டுப் பிட்டு மறந்…
-
- 5 replies
- 1.7k views
-
-
நீங்கள் கெட்டவரா?நல்லவரா? ************************ அடுத்தவன் வாழ்வைக் கெடுத்தவன் அவனியில் அவனோ பெரியவன் எடுத்தவன் கொள்ளையடித்தவன் உலகினில் அவனோ உயர்ந்தவன். உழுதவன் உணவு படைத்தவன் ஊர்களில் உயிரே அற்றவன் உழைத்தவன் உணவு கொடுத்தவன் உறவுகளால் கால் மிதிபட்டவன். படித்தவன் பட்டங்கள் பெற்றவன் பட்டணியோடு வேலைக்கலைபவன் கால் பிடித்தவன் அரச வால் பிடித்தவன் கஸ்ரமில்லாமலே காசில் மிதப்பவன். கஞ்சா குவித்தவன் கற்பைக் கெடுத்தவன் மந்திரியோடவன் மதுக்கடைப் பெரியவன் லஞ்சம் பெற்றவன் ஊளல் புரிந்தவன் வஞ்சனைக் காரனே வாழ்வில் உயர்ந்தவன் நல்லவன் வாழ்வதேயில்லை-எனினும் நானிலம் போற்…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஞானம் எனக்குப் பிறக்காதாநானவ் விறையை உணரேனாஊனுள் கலந்து உள்ளுருகிஉளத்தில் நிறைந்த தெய்வதத்தின்மோன நிறைவில் முழுதாகமூழ்கிப் பிறப்பின் முழுநோக்கைஆன மட்டும் புரிந்தந்தஅறிவின் தெளிவில் இவ்வுலகில்ஏனென் இருப்பு என்பதனைஎனது மனதில் உணரேனா?எங்கும் நிறைந்த சக்திதனைஎன்னைப் படைத்த திருவருளைஅங்கும் இங்கும் என்னாதுஅனைத்தும் நிறைக்கும் அன்புருவைபொங்கும் மகிழ்வில் உளமாரப்புரிந்து சிலிர்க்கும் நற்பேறைதங்கு தடைகள் இல்லாதுதமியன் அடைய முடியாதா?ஒன்றும் இல்லாச் சூனியத்தில்உதித்ததிந்தப் பேரண்டம்என்றோ ஒருநாள் உருவழிந்துஎங்கும் எதுவுமில்லாமல்இன்று நேற்று நாளையெனும்எதுவுமில்லாப் பரவெளியில்ஒன்றிக்கலந்து போய்விடுமாம்உயிர்ப்பேயற்று உறைந்திடுமாம்.என்றிவ்வாறாய் அறிஞா் பலர்எமக்கு விளக்கம் கூறுகிறார்நன்ற…
-
- 7 replies
- 1.7k views
-
-
எச்சரிக்கை ----------- வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது எச்சரிக்கை நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும் அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள் உங்களின் மிச்சங்களே இருட்டில் உருட்டுவதும் பகலில் ஒழிவதுமாக நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும் தக்காளிச்செடியில் நின்றதாகவும் அம்மணி அழுதார் எலிக்கு ஏனய்யா தக்காளி? ஏக பிரதிநிதியாக இங்கு எல்லாம் உங்களுக்காகவா? முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க 'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக் பின்னர் மொத்தமாக…
-
-
- 17 replies
- 1.7k views
-
-
தன்முனைக் கவிதை / "நினைவுகள்” "நினைவுகள் பறக்குது அவள் பிரிந்தது வதைக்குது! நினைவுகள்அணைக்குது அவள் வாழ்ந்தது இனிக்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 1.7k views
-
-
நீக்கமற்ற நினைவுகளில்......! ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய் நீ நினைவுகளிலிருந்து மெல்லத் தேய்ந்து மறைந்தே போனாய்.…
-
- 0 replies
- 1.7k views
-
-
“கடிதங்களின்” கவலை..! எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை தொழில் நுட்பமென்னும் தூரதேசம் பேச, எழுத.. பல நுட்பம் வந்ததனால் எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை. அந்தக்காலத்தின்-நாம் அன்பின் பாலங்கள்.. பிரிந்து வாழ்ந்தாலும் பிரியமுடன் வாழ்ந்தாலும் எங்களைத்தான் எதிர் பார்த்தே ஏக்கமுடன் இருப்பார்கள். ஊர் விட்டுத் தள்ளிப்போன உறவுகளின் உணர்வுகளை வேர் இருக்குமிடம்பார்த்து விருப்போடு நாம் வருவோம். அந்தகிராமத்தின் அதிகாரிகளை தெரியாது ஆனால்.. குஞ்சு குருமான்கள்,இளம் குடலை, பெரியோர்கள் எல்லோர்க்கும் தெரிந்த முகம் எமை காவும் தபால் காரர் …
-
- 7 replies
- 1.7k views
-
-
மனக்குரங்கு கால் நீட்டி குந்தி இருந்தபடி கட்டளை இடுகிறது என் மனக்குரங்கு அதை கட்டிப்போட்டு சும்மா இரு என்று சொல்ல நான் என்ன புத்தனா புனிதனா ஆசையும் பாசமும் கொண்ட அந்த மனக்குரங்கு தானே அது ஆடி அடங்கும் வரையிலிம் எந்தக்கிளை வேண்டுமானாலும் தாவித் திரியட்டும் ஆசையும் பாசமும் அகன்று அந்த ஞானம் அடைந்தவனை அறியும் வரையிலும் இப்போதைக்கு இது இப்படியே இருந்து தொலையட்டும் .
-
- 3 replies
- 1.7k views
-
-
. . ரூமிக்கு -வ.ஐ.ச.ஜெயபாலன் , நலமா ரூமி, கவிஞர்களின் கவிஞரே உலரும் நமது உடலும் உயிரும் செளிக்க மது வார்க்கிறவர்கள் எங்கே? சுவர்கத்து நூலேணிகளில் இறங்கி வருகிறதே வசந்தம். பாரசீக ரோஜாவோ, மதுரை மல்லியோ தேன் சிந்துமுன்னம் நம் இதயங்கள் திறக்க வேண்டுமே?. . ”இதயம் திறக்கும்வரை உடைத்துக்கொண்டிரு” என்கிறாயே. ரூமி. ஆம், மூடிய இதயம் சிறையிலும் கொடிதே. ஆனாலும் உடைந்த இதயம் நினைவின் ஆறாப் புண்ணல்லவா? என்போல் நீயு…
-
- 8 replies
- 1.7k views
-
-
எங்கும் நிலையானது எதிலும் நினைவேயது உயிரின் தவமேயது உயிர் வடிவின் படைப்பேயது வழிக்குத் துணையாவது உலகில் எதுவோவது! மதியாலது உருவாகுவது விதியாலது உருவாவ(ன)து மதியால் அது மாற்ற இயலாதது புரிந்தும் புரியாததால் அது மாறா விதியானது சில மரமண்டைகள் புரியாததால் புதிரானது! உறவாலது உருவாவது பிரிவாலும் மறையாதது உடலைத் தான் என்பதால் விளைந்த கதிதானது இங்கு நானாவது அங்கு நீயாவது உயிரே உயிரானது! வெறும் பெயரென்பது தானே வேறென்பது எல்லாம் ஒன்றானது பிரித்தால் பலவாகுது இரு மெய்யாலது உருவாகு(வ)து பல பொய்யாலது பிரித்தாலும் பிரியாதது! ஞானம் அடைந்தோரது கூற்றை உணர்ந்தோரது வாழ்வில் நிறைவானது என்று உளதோவது கொடுத்தாலது குறையாதது கொடுக்க நிறைவாவது உலகில் ஒன்றேயது செலுத்தும் அன்பேயது …
-
- 2 replies
- 1.7k views
-
-
அப்படியே நினைத்து பார்க்கவே .... பயமாக இருக்கிறது நம் காதலை .....!!! ஓடாமல் இருக்கும் மணிக்கூட்டில் நான் ... நிமிட முள்ளாய் ... இருந்தென்ன பயன் ....? அணைத்தேன் துன்பம் ... அழைத்தேன் இன்பம் நீ அருகில் இருப்பதை ... விட தூர இரு .....!!! ^ கவிப்புயல் இனியவன் முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை
-
- 14 replies
- 1.7k views
-
-
கடைகோடியில் கைவிடப்பட்ட நூலின் மறு வாழ்வு, மங்கையின் கழுத்தில் மாங்கல்யமாய். ~ கபியின் கவி
-
- 1 reply
- 1.7k views
-
-
அந்திப்பொழுதில் ஓர் அவசர தொலைபேசி அவசர சிகிச்சைப்பிரிவில் நீங்களும் அனுமதியாம் தொலைபேசியும் அனுமதியில்லை தொடர்புகொள்ளவும் முடியவில்லை மீள்வீர்கள் என நினைத்திருந்தேன் மீளாத்துயில் கொண்டதேனோ! சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடியதும் இரவினில் பயத்திலே நான் கட்டிப்பிடித்து உறங்கியதும் பசுமை நினைவுகளாய் இன்றும் என் மனதினிலே! இடப்பெயர்வால் எந்தன் ஈராண்டுக் கல்வியது இல்லாமல் சென்றதனால் திகைத்து நிற்கையிலே! ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் கற்பித்து சாதாரண தரமதிலே சிறப்பு சித்தி பெற வைத்தீர் கணக்கு முதற்கொண்டு சங்கீதம் வரையிலே தெரியாத பாடம் என்று உமக்கில்லைக் கண்டீரோ தெரிந்ததால் தானோ இறைவன் விடவில்லை உமையிங்கு இருபத்தொரு அகவையில…
-
- 17 replies
- 1.7k views
- 1 follower
-