Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. மூண்டாவது சீட்டுக்கு கூடியாச்சு. கழிவு இன்னும் பெரிசா தான் இருக்கு, கட்டாய கழிவு 13‘600. இந்த முறை 22‘500 மொத்த கழிவு. ஆறுமுகம் வாங்கீற்றார். கழிவு எப்புடியும் பெரிசா இருந்தாலும் இவருக்கு தேவையா இருக்கு. கழுத்தில கத்திய வச்சமாதிரி நிலமை. 130‘000ல நிண்ட கடன் சீட்ட கழிச்சு இப்ப 77‘000 கிட்ட நிக்குது. சீட்டு எடுத்ததால அந்த மாசத்தில கட்டுப்பணம் இல்ல. சொந்தக்காரர் யாரோ 15‘000 ஆயிரம் வட்டிக்கு தாறினம் எண்டதால இன்னும் 52‘000 எங்க போறது எண்ட யோசினை. வேற சீட்டுகள் நடக்குறதால அங்க தெரிஞ்ச ஆளுக்கு சீட்டு விழுந்திருக்கு. 65‘000 சீட்டுக்கு 11‘000 கழிவில 54‘000 வந்து இருக்கு. அத தர சொல்லி கெஞ்சி கூத்தாடி வாங்கீற்றார். யாரோ பாவம் வாங்குற சம்பளத்துக்கு ஏத்த சீட்டு போட்டிருக்கிறார். அந்த …

    • 4 replies
    • 2.5k views
  2. பரவலா எல்லா இடமும் சீட்டு பற்றி தான் பேச்சு. வேற கடைக்காரர் காச சுத்தீற்றாங்கள், இவர் இவர் காச எடுத்துக்கொண்டு ஓடிட்டார், இவர் தரேல்ல எண்டு. கிட்டத்தட்ட எல்லா பெரிய சீட்டுக்களும் தொங்கீற்று. கடைக்காரர் போட்ட சீட்டுகள் யாரோ சுத்தீற்றினம் எண்டு தான் கதை, பார்த்தா கடையில புதிய புதிய சாமான்கள் கிடக்கு. உடுப்பு கடைகளில புதிய டிசைன் உடுப்பு. இது போதாத குறைக்கு வேற இடத்தில புதுக்கடை. பெரிய விசயம் இல்ல, சீட்ட எடுத்த ஆக்களுக்கு காசு போகேல்ல, 60,000 வரவேண்டிய இடத்தில 25,000 குடுத்தா, மிச்சத்த கேக்க, இவர் தந்தா தாறன் எண்டு பதில். உதாரணத்துக்கு, மிச்சம் தரேல்ல எண்டா 20 பேரில 8 பேரா தந்தவே, மிச்சம் 12 தரேல்லையா? சாத்தியம் இல்லாத நிலை, மிச்சம் எங்க? ஒரு நகை கடைகாரர் தனக்கு கடன், சீட்டு…

  3. சுமாரா அவளுக்கு ஒரு 17 வயது இருக்கும். தமிழ் பண்பாட்டுக்கு உரிய நான்கு குணமும் இருக்கு முதல் நாள் பார்வையில் என்னை ஒரு நிமிடம் திரும்பி பார்க்கவைத்தாள். யார் இவள்? ஒருநாளும் இவ்வழியில் நான் கண்டதா இல்லை என யோசிச்சு நிக்கையில் மறுபடியும் மூலையில் திரும்பும் போது கடைக்கண்ணால் ஓரப்பார்வை வீசிபோனால். பல முறை இடம் பெயர்ந்து பல இடங்களில் இருத்து எழும்பி வந்த எனக்கு பல பெண்களை கடந்து போன எனக்கு இவள் மட்டும் எப்படி என் உள் மன இடைவெளியில் குடி புகுந்தால்? மறுபடியும் இவ்விடத்தால் வருவாளா இல்லையா அல்லது யாரவது ஒரு சிநேகிதியை தேடி வந்தவளா இருக்குமா என பல கேள்வி எழ பல்லை தீட்டியபடி கிணற்றடியில் நின்று யோசிச்சு கொண்டு வாளியை கிணற்றுக்கு விட்டனான் கயிற்றைபிடிக்க மறந்து போனேன் . தண்ண…

  4. எனது வேலைக்கான பயணத்தில் நாள்தோறும் பேருந்தில் போய்வருவது வழமை தினம் தினம் பஸ்கட்டணம் அதிகரிப்பதால் போக்குவரத்து செலவு அதிகமாக வரவே கையில் தலைக்கவசத்தை வைத்து பயணம் செய்வது வாடிக்கையானது. சில நேரம் சிலர் ஏற்றிச்செல்வார்கள் சில நேரம் கையசைத்தும் ஏற்றிசசெல்ல மாட்டார்கள் ஆரம்பத்தில் நானும் மோட்டார் சைக்கிளில் பயணித்தேன் காலப்போக்கில் பொருளாதார சுமை காரணமாக பஸ்ஸில் பயணிக்க ஆரம்பமானேன் . பஸ் சீசன் ரிக்கட் எடுத்தாலும் சீசனைக்கண்டால் பஸ்ஸை தூர நிறுத்தும் நம்மூர் சாரதிகளும் நான் தற்போது தலைக்கவசத்துடன் பாதையில் நிற்கும் இந்த நிலைக்கு காரணம் . வேலையிடத்தில் எனது உயரதிகாரியை சந்தித்து எனக்கு பயணம், சாப்பாட்டு செலவு அதிகமாகிறது என்னால் வேலைக்கு ஒழுங்காகவும்,குடும்ப சூழ்நிலை க…

  5. சீமைக் கிழுவை மரம் இலை தெரியாது நாவல் நிறப்பூக்கள் நிறைந்து குலுங்கியது, காட்டுப் பெண்ணைப் பிடித்து வந்து 'ஆஸ்கார் டி ல றென்ற்றா' ஆடை அணிவித்து நியூயோர்க்கின் தெருவில் விட்டதுபோல் அவ்வீட்டின் வேலி போகன் விலாவுடன் சேர்த்துச் சீமைக் கிழுவையினை நகர்ப்புறப்படுத்திவிட முயன்று தோற்றிருந்தது. காட்டுமரத்தின் பூவின் நறுமணத்தில் கள்ளிருந்தது. கண்கள் சொருகிச் சிருங்காரம் நிறைந்து கள்ளுண்ட மந்தியாய் காட்டுச் சிறுக்கியின் நறுமணத்தில் திழைத்து நின்றிருந்தேன். கோடன் சேட்டும், சாரமும் கட்டி, ஏசியா துவிச்சக்கர வண்டியில் ஒருவர் மிதிக்க மற்றவர் உரப்பையிற்குள் உலோகத்தை மறைத்து வைத்து அமர்ந்திருக்க அந்த இருவர் சென்றனர். இயக்கம் நிறுவனமயப்பட்டு வரிக்குள் சிக்குவதற்கு முந்தைய காலங்கள் சீம…

  6. தெய்வமும் மனிதனாகலாம் எழுத்து: முல்லை சதா சோளகக் காற்று தொடங்கிவிட்டதால் இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.இயக்கச்சி சோதனைச்சாவடியில் இராணுவ பரிசோதனைகளை முடித்துக்கொண்டு கைப்பையை தோளிலே கொழுவிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்.போர் நடந்த ஆனையிறவு முகாம் சூழல் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.உடைந்த கட்டடங்களும்,எரிந்த வாகனங்களும் யுத்தத்தின் சாட்சியாய் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.இராணுவம், விடுதலைப் புலிகளென ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்ட இடம் என்று எண்ணும்போது காலுக்குக் கீழே இரத்தம் பிசுபிசுப்பது போன்ற உணர்வில் உடல் கூசத் தொடங்கிது. மக்களோடு மக்களாய் நடந்து இராணுவத்தின் கண்ணிலிருந்து மறைந…

  7. தேசங்களின் குரல்கள் ---------------------------------- இலங்கையிலும், மும்பையிலும் இப்பொழுது ஒரே நேரம் தானே என்று அவர் கேட்கும் போது, ஆமாம் என்று தாமதிக்காமல் சொல்லிய பின் தான் அவரது கேள்வி ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் அப்படிக் கேட்டது மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் மும்பையிலிருக்கின்றார் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு மும்பையில் ஒரு கிளை இருக்கின்றது. இப்பொழுது அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்து வேலை செய்வதை முடிந்த வரை குறைக்கும் அல்லது முற்றாகவே தவிர்க்கும் முயற்சிகளை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்கள். மும்பையில் அவர்களில் சிலர் தினமும் மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் …

  8. தேசத்திற்கு விலைதந்த மகளுக்கு தேவையானது 5 பவுண்கள் மட்டுமே. தேசத்தின் விடுதலைக்குக் கொடையளித்தவர்கள் பலருக்கு முகமில்லை முகவரியில்லை பெயரில்லை அவர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை. அநாமதேயமாய் அவர்களது வரலாற்றை அவர்கள் பெற்றுத் தந்து வெற்றியும் அவர்களைப் பெற்ற தேசமும் மட்டுமே அறியும் கதைகள். ஈகத்தின் உச்சமாக இந்த மனிதர்களின் கொடை எங்கள் தேசத்தில் எழுதப்பட்ட பலரது வரலாற்றோடு வரலாறாக....! இப்படித்தான் ஒரு வெற்றியைப் பெற்றுத்தர அந்தக் கரும்புலி தான் நேசித்து ஊரை உறவுகளை விட்டு விடுதலையமைப்பில் இணைந்து கொண்டது. அந்தப் போராளி ஒருநாள் கரும்புலியாகி தனது ஈகத்தின் உச்சத்தையடையும் நாளொன்றை காலம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. தேவைகளும் கடமைகளும் தமிழர் வாழ்நிலங்களுக்கும் அப…

    • 0 replies
    • 884 views
  9. தேசியத்தலைவர் பற்றி - 02 2001 ம் ஆண்டு முகமாலைப்பகுதியில் சிங்களத்தின் பாரிய படைநகர்வை எதிர்கொள்ள படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் இந்தச் சமரை வென்றேயாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. ஏனெனில் ஓயாத அலைகளில் கிடைத்த தொடர் வெற்றிகள், யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கியதில் ஆட்டம் கண்டது. அதனைத் தொடர்ந்து தென்மராட்சியில் இராணுவத்தினர் மேற்கொண்ட 'கிணிகிர' இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தமுடியாமல் கணிசமான இழப்புடன் பின்வாங்கலைச் செய்து முகமாலையில் நிலையமைத்தது ஒரு பின்னடைவாகவே இருந்தது. மறுவளம், இந்த இழப்புக்கள் எல்லாம் இராணுவத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. அந்த உற்சாகத்தில் ஆனையிறவைப் பிடிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து…

  10. தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமை, ஆளுமை, உறுதி, கொள்கை வழுவாத்தன்மை பற்றி எவருக்கும் தெரியாமலிருக்காது. அதற்கு அப்பால் அவர் சிறந்த பண்பாளனாகவும் பிறர்மேல் கரிசனை கொண்ட அன்புள்ளம் கொண்டவராகவும் இருந்தார். தலைமைக்குரிய கண்டிப்பும் நேர்மையும் அதேநேரம் பிறருடைய உணர்வுகளைg; புரிந்தவாராக, அவர்களுடைய உணர்விகளிற்கும் மதிப்புக் கொடுக்கும் ஒருவராக இருந்தார். வெறுமனே தலைவர் அவர்களின் ஆளுமைக் கவர்ச்சியில் மட்டும் இளைஞர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்படவில்லை. அவரிடம் இருந்த பனமுகப் பண்புகளே அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள வைத்தது. ஒரு நாள் தலைவர் வாகனத்தில் முகாமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் மீன் வித்துக் கொண்டு சென்றார் ஒரு வியாபாரி. அவரைப்பார்த்ததும் தலைவருக்கு மீன…

    • 65 replies
    • 16.2k views
  11. Started by putthan,

    . மாமா யாழ்ப்பாணம் வரும் பொழுதெல்லாம் சோமரின்ட சோமசெட் காரை வாடகைக்கு அமர்த்தி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போய்விடுவேன்.கடிதத்தில் எந்த புகையிரதத்தில் எத்தனை மணிக்கு வருவார் என்று விபரமாய் எழுதுவார் .ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவார் .எனக்கு நேரமும் நாளும் தெரிந்தால் காணும் மிகுதி எல்லாத்தையும் அம்மா வாசிப்பார்am,pmஎன்று போடுவார் அது அந்த காலத்தில் விளங்குவது கொஞ்சம் கஸ்டமாயிருக்கும் அம்மாவும் ஓவ்வொரு முறையும் விளங்கப்படுத்துவா ஆனால் அடுத்த முறை மறந்துவிடுவேன், ஒருமாதிரி அம்மாவிடம் திட்டை வாங்கி அறிந்து கொள்வேன்' வருவதற்கு முதல் நாள் த‌ந்தியும் அடிப்பார்.அவர் வருகிறார் என்றால் எங்களுக்கு எல்லாம் பெரிய சந்தோசம் .எனக்கு மட்டுமல்ல சோமர் மற்றும் ச‌லவை தொழி…

    • 9 replies
    • 2.6k views
  12. தொடர்மாடிக் கட்டிடத்தின் அறையொன்று அதிர்ந்துகொண்டிருந்தது. வயலின் கருவியின் தந்திகளிற்குள்ளால் மனித மனமொன்று பேசிவிட முனைந்து கொண்டிருந்தது. பேச்சு, யாரையும் நோக்கியதாய்த் தோன்றவில்லை. பேசவேண்டியது தவிர்க்கமுடியாததாய்த் தந்தி அதிர்ந்துகொண்டிருந்தது. நேற்றைய இரவில் ஓரு உணவகத்தில் மாயை கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. 'நம்புங்கள்' என்ற கோரிக்கைக்கு அவசியமற்று நம்பிக்கை பிரவாகித்துக்கொண்டிருந்தது. எதிர்ப்பின்றிப் பிரவாகிப்பதாய்த்தோன்றும் ஆற்றில் துருத்திக்கொண்டு வெளித்தெரியும் மரக்கட்டைபோல, இந்த வயலின்காரன் அங்கு துருத்திக்கொண்டமர்ந்திருந்தான். பேச்சால் நிறைந்திருந்த மண்டபத்தில் இவன்மட்டும் வார்த்தைப்பிரவாகம் வெளிவராது, ஆட்டுக்குட்டியினை விழுங்கிக்கொண்டிருக்கும் பாம்பை…

    • 2 replies
    • 1.2k views
  13. Started by Innumoruvan,

    எட்டுமணிக்கு முந்திய காலைப்பொழுது. தினம் விரியும் காட்சிகள் அப்படியே விரிந்து கொண்டிருக்கின்றன. பத்து நிமிட நடையில் மூன்று நடைபாதை நித்திரைகொள்ளிகள். காட்டுக்குள் காட்டெருமைகள் குழாமாய் நீரிற்கு ஓடுவதைப்போல் அலுவலகம் நோக்கி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நடைபாதை நித்திரைகொள்ளிகளை மிதித்துவிடக்கூடாது என்ற கவனத்தில் மேற்படி மூன்று இடங்களிலும்; காட்டருவி கிளையாய்ப் பிரிந்து பின் மறுபடி சேர்ந்து ஓடுவதைப்போல அலுவலக பயணிகள் விலகி இணைந்து நடந்து கொண்டிருந்தார்கள். நடைபாதை மனிதரை மிதித்துவிடக்கூடாது என்ற சிரத்தையில் நமக்கு அழுக்காகுமோ என்ற கவனமும் அவர்களிற்குள்ளாக இருந்ததாகவே பட்டது. அழுக்கு எனும்போது அது மனவெளியில் நடைபாதை மனிதன் சித்தரிக்கும் அந்தஸ்த்து இழப்பு சார்ந்து நிக…

  14. **நாம் வாழ்க்கையில் உயர்வதை கண்டு மகிழ்ச்சியடையும் நண்பர்கள் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்** அது 2005ம் ஆண்டின் நடுப்பகுதி என நினைவு..வன்னி ரெக்கின் 3து batchல படிப்பதற்கு இடம் கிடைத்திருந்தது நாட்டின் வடகிழக்கு பகுதியின் பல்வேறு இடங்களைச்சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத 4 பேரை ஒரே ரூமில் போட்டார்கள் வாழ்க்கையின் முதல் முதல் ஹொஸ்டல் வாசம். முதலில் பெரிதாக ஒருவரிற்கொருவர் எந்த ஈர்ப்பும் இல்லை ரூம் மேட் என்ற அளவில் மட்டுமாகவே தொடர்ந்தது .எனக்கு நண்பர் கூட்டம் அவ்வளவாக சேர்வது குறைவு . அவனோ நண்பர் கூட்டத்துடனே திரிவான்.. அத்துடன் அவனின் பாடப்பிரிவு நெட்வோர்கிங் ,நானோ எலக்ட்ரோனிக்ஸ் ஹொஸ்டல் வாழ்க்கையில் சண்டை…

  15. வன்னியின் சந்தோஷங்களை கொண்டுவருவதில் ஒருநாள் திருவிழா காணும் கோயில்கள் முக்கியம் ஆனவை.... வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பொங்கல் செய்து எல்லா ஊர்களிலும் இருந்து வண்டிகட்டியும் உழவு இயந்திரங்களிலும் புறப்பட்டு வந்து சேர்த்து கூட்டமா ஒரு இடத்தில் பாய் விரித்து உறவுகள் ஒன்றுகூடி விரதங்கள் பிடித்து தீ மிதித்து படையல் போட்டு அந்த ஒரு இரவில் போதுமடா சாமி என சாமி சொல்லும் அளவிற்கு மக்களின் வேண்டுதலும் படையலும் இருக்கும்.... அப்படியான ஒரு கோயில்தான் மாங்குளம் மல்லாவி வீதியின் இடையில் உள்ள வன்னிவிளாங்குளம் அம்மன் கோயில்...அக்கோயிலின் சிறிது தூரத்தில்தான் மாவீரர் துயிலும் இல்லமும் அமைந்து உள்ளது... பின்னேரம் வர ஆரம்பிக்கும் மக்கள் கூட்டம் இரவு பத்து மணிவரை தொடரும்... கூடுதலா சைட்…

  16. முக நூலில் கந்தையா முருகதாசன் என்னும் பத்திரிகையாளர் ஒரு விண்ணப்பம் வைத்தார். எழுத்தாளர்களை எல்லாம் இணைத்து ஒவ்வொரு வாரம் ஒருவர் கதை எழுதுவது என்று. அதாவது ஒருவர் ஒரு கதையைத் தொடங்க அடுத்த வாரம் இன்னொருவர் தொடர்வார். நான் யாழில் தொடங்கினால் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே வேறொரு ஊரின் இணையத் தளத்தில் அதை ஆரம்பிப்பதாக இரு நாட்களில் அறிவித்துவிட்டார். நாம் இங்கே நிறையப்பேர் கதை எழுதுபவர்கள் இருக்கிறோம். நாம் ஒரு தொடரை இங்கே ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. உறவுகளே! உங்கள் கருத்துக்களும் ஆதரவும் எதிர்பார்க்கப் படுகிறது.

  17. http://www.meeraspage.com/novels-and-kids-stories/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4/

  18. Started by Innumoruvan,

    கட்டாக்காலி காலம் ஆரம்பித்திருந்தால் வயலில் கால்நடைகள் நின்றன. மதகில் கனகாலம் கடந்து நாதன் உட்கார்ந்திருந்தான். நாதனிற்கு இளமைக்காலம் இலகுவாய் இருக்கவில்லை. பள்ளி புரியவில்லை. பெறுபேறுகள் கடிவாளம் இடவுமில்லை பாதைகாட்டவுமில்லை. பதின்மத்தில் நாதன் இயக்கத்தில் சேர்ந்தான். சிலகாலம் இயக்கத்தில் இருந்தான். இயக்கத்திலும் நாதன் உயரவில்லை. துண்டு குடுத்து முறைப்படி விலகி வெளிநாடு சென்றான். முப்பது வருடம் கடந்து இன்று மதகில் இருக்கிறான். திட்டமிட்ட செயற்பாடு எதுவும் எப்போதும் நாதனிடம் இருந்திராத போதும், எதேச்சையாய் ஒருமித்த காரணிகள் அனுகூலங்களை நாதனிற்கு உருவாக்கின. பணம் பெருக்குவது நாதனிற்கு மிக இலகுவாகத் தானாக நடந்தது. அது அதுவாகப் பெருகியது. ஊரில் நாதனின் வீடு பெருத்த காணி…

    • 10 replies
    • 5.6k views
  19. எனது சிறுவயது முதல் என்னை அதிகமா நேசித்த மனிதர்களில் எனது அப்பாச்சி முன்னணியில் உள்ளார் அம்மாவை விட அவர் மேல பாசம் அன்பு கொள்ளை பிரியம் எனக்கு ஒரு நெடியெனும் என்னை காணமல் இருப்பது அப்பாச்சிக்கு எதோ தொலைத்து விட்ட சோகம் இருக்கும் எங்க போட்டான் இன்னும் காணவில்லை சுற்றிக்கொண்டு வருவான் ஆளை காணம் செக்கல் பட்டுடு விளக்கு வைக்கும் நேரம் ஆகுது இவனை காணம் என தனியா விட்டின் திண்ணையில் இருந்து கதைப்பார் . அம்மா பேசியபடி இருப்ப அவன் வருவான் நீங்க வந்து தேத்தண்ணிய குடியுங்க எங்க போகபோறான் எங்காவது பெடியலோடா நிப்பான் இப்ப வந்திடுவான் என்று சொன்னாலும் அப்பாச்சி கேளாது நாலுதரம் ரோட்டுக்கு வந்து எட்டி பார்க்கும் சிலவேளை அப்பொழுதுகளில் நான் வருவேன் ......'என்ன கிழவி ரோட்டில யாரை சயிட…

  20. நான் செய்யும் குறும்புகளுக்கு அளவே இருக்காது அப்படி குழப்படி சிறுவயதில் ஒவ்வரு நாளும் காயம் இல்லாமல் இரத்தம் சிந்தாமல் வீடு போனது கிடையாது அப்படி விளையாடி வரும் காயங்களுக்கு மருந்து போட்டு விடுவதில் இருந்து சுடுதண்ணீ ஒத்தனம் கொடுத்து பழைய நிலைக்கு வரும்வரை கிழவி உறங்காது .சும்மா பஞ்சி பட்டு படுத்து இருந்தாலே கிழவி குழற தொடங்கிடும் ஒருநிமிடம் சும்மா இருக்க மாட்டான் இன்னும் எழும்பாமல் படுத்து இருக்கிறான் என்ன எண்டு கேளண்டி மகளே என்று அம்மாவை நச்சரித்து எடுக்கும் . மாதுளம் பழம் மரத்துக்கு மாதுளைக்கு அணில் கடிக்காமல் அங்கர் பை எடுத்து கட்டி விடுவா பழம் நல்லா முற்றிய பின் பை இருக்கும் பழம் இருக்காது நானு ஆட்டையை போட்டு பள்ளிக்கூடம் கொண்டு போயிடுவன் ,அந்த நேரங்களில் யாரவது…

  21. நாட்டில் இருந்து வெளிக்கிட்டு ஐரோப்பா வந்து ஒரு ஆறுமாதம் வெளிஉலகம் தெரியாது இருந்தன். அங்க போகாத இங்க போகாத அவனோட சேராத இவனோட சேராத அவங்கள் குறுப் பெடியள் இவனுகள் இவங்களுக்கு எதிர் பெடியள் எண்டு என்னை வெருட்டி வீட்டில இருத்தி போடுவாங்க. வீசா போடு அப்புறம் போய் வரலாம் எண்டு சொல்லி டிகெட் காசு போயிடும் எண்டு என்னை கூட்டி போறது இல்லை. சரி எண்டு வேலைக்கு போறவங்களுக்கு சமைச்சு கொடுப்பன். நல்லா தூள் அள்ளி போட்டு கறி வைப்பன். யாருக்கு தெரியும் அளவு.. என்ன சிவக்கவில்லை எண்டு போட்டு போட்டு கடைசியா கூடி போடும் பாவம் பேசி பேசி சாப்பிட்டு போவாங்கள் பெடியள்.. படமும் நான் பெரிதா பார்ப்பது இல்லை. அதோட இருந்த வீட்டில் தமிழ் சனல் வராது. வீட்டில் இருந்த ஒருத்தன் மட்டும் ஒரு சிறிய மடிக்…

  22. நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும் மகளின் திருமணம் 2019 நவம்பரில் பதிவுத்திருமணம் நடைபெற்றது 2020 செப்ரெம்பரில் திருமணவிழா என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது மார்ச்சில் கொரோனா வந்திட்டுது என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வருவதால் ஆனி ஆடியில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தது . திருமண விழாக்கள் செய்யலாம் ஆனால் 150 விருந்தினருடன் என்ற கட்டுப்பாட்டுத் தளர்வில் எல்லாமே சடுதியாக நடந்தேறியது இரண்டு வாரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்து மிகவும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 80 விருந்தாளிகளை அழைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து அழைப்பும் விடுத்தாயிற்று . ஆவணி நடுவிற்குப்பின்னர் நல்ல நாள் இருக்கு எ…

  23. அம்மன் கோவில் மணி அடிக்கத் தொடங்கீட்டுது. பின்னேரப் பூசை இப்ப. விதவிதமா சீலை உடுத்திக்கொண்டு பெண்கள் போவினம். எனக்கும் கோவிலுக்குப் போக ஆசைதான். ஆனால் உந்த விடுப்புக் கேட்கிற ஆட்களுக்குப் பதில் சொல்ல எரிசல் தான் வரும். ஏதோ உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்தமாதிரி கூடிக் கூடிக் குசுகுசுப்பினம். மூன்று பிள்ளைகளுடன் நான் அம்மா வீட்டுக்கு வந்து பதினொரு மாதங்களாகின்றன. நான்கு அண்ணன்களுடனும் ஒரு அக்காவுடனும் பிறந்த எனக்கு மட்டும் வாழ்வு ஏன் இப்பிடியானது. எல்லோருமே வெளிநாட்டில் இருக்க என் அவசர புக்தியால் வாழ்வு இப்பிடியாகிவிட்டதே. என்ன செய்வது? என் தலையில் இப்படி எழுதியிருக்கு என என்னை நானே தேற்றிக்கொண்டாலும் எதிர்காலம் கேள்விக்குறியோடு பூதமாய் என்னை பயமுறுத்தியபடி இரு…

  24. Started by sathiri,

    நானும்அவனும் …................................. ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி …. இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்துக்கொண்டிருக்கும் போதே இடி இடித்த சத்தத்தில்சட்டென்று சோடாவை திறந்து கிளாசில் ஊற…

    • 8 replies
    • 2.7k views
  25. இரவில் படுக்கும் போது என் இரண்டு குழந்தைகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு கதைகள் சொல்வது வழக்கம். கதை கேட்பதற்காகவே இரண்டு பேரும் என்னுடன் படுக்க விரும்பி வருவினம். நான் கதை சொல்வதுடன் அவர்களையும் கதை சொல்ல வைப்பதுண்டு. மகனுக்கு 9 வயதாகுது என்பதால் அவன் தான் வாசித்த கதைகளை ஓரளவுக்கு நேர்த்தியாக சொல்வான். மகளுக்கு 4 வயது என்பதால் தனக்கு நடக்கும் சம்பவங்களை கோர்வையின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லி மெருகேற்றப் பார்ப்பாள். அவள் கதைகளில் அநேகமாக ஒரு Naughty boy வருவான். அது அவளது அண்ணனாகத் தான் இருப்பான். இப்படி, அவர்கள் என்னிடம் கதை கேட்கும் போது என்னால் நான் சின்ன வயதில் வாசித்த கதைகளை நினைவு வைத்து சொல்ல முடிவது இல்லை. என் ஞாபகத்தில் இருந்த சிறுவர் கதைகள் எல்லாம் மறந்த…

    • 13 replies
    • 3.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.