கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
656 topics in this forum
-
கிழக்கிலும் மேற்கிலும் ----------------------------------- கடந்த சில நாட்களாக அந்த மனிதரை அங்கு கண்டு கொண்டிருக்கின்றேன். இருவரும் ஒரு புன்முறுவலுடன் விலகிப் போய்க் கொண்டிருந்தோம். அவர் எந்த நாட்டவர் என்று சொல்லத் தெரியவில்லை. அவர் ஒரு ஆபிரிக்க அமெரிக்கராக இருப்பதற்கே சாத்தியம் அதிகம் போன்றது அவரது தோற்றம். காலையில் ஓட வருபவர்கள் மிகவும் குறைந்த குளிர்காலம் அது. இருவருக்கும் அந்தக் குளிரில் வெறும் டீ சேட்டும் காற்சட்டையுமாக நிற்கும் மற்றவர் கொஞ்சம் விநோதமானவராகத் தெரிந்திருக்கும். 'இந்தியரா......' என்று அவர் தான் ஆரம்பித்தார் ஒரு நாள். அந்த ஆங்கில உச்சரிப்பு அமெரிக்க உச்சரிப்பு இல்லை. 'இல்லை, ஶ்ரீ லங்கா....' என்று சொல்லி விட்டு, 'நீங்கள் .......…
-
-
- 10 replies
- 767 views
- 1 follower
-
-
மரணம் கொன்ற மாவீரர்களின் அப்பா. அப்பாவை அன்புச்சோலை முதியோர் இல்லத்தில் சமாதான காலத்தில் சந்தித்தேன். மகள் என்று சொல்லி தனது இருப்பிடம் பிள்ளைகளின் படங்களையெல்லாம் காட்டினார். எனது பிள்ளைகளை தன்னோடு கூட்டிச்சென்று தனது உணவிலிருந்து பங்கு கொடுத்தார். அன்புச்சோலையில் இருந்த பல அப்பாக்கள் அம்மாக்களில் அந்த அப்பாவும் ஒருவர். தலைவரிடம் கவுரவம் பெற்ற படமொன்றை தன்னோடு வைத்திருந்தார். அன்புச்சோலைக்கு பொறுப்பாயிருந்த டிஸ்கோ அண்ணா அங்கிருந்த பலரது சோகக்கதைகளை கதைகதையாகச் சொன்னார். அன்புச்சோலையை விட்டு வெளியேறும் போது பலரது பாசத்தையும் சுமந்து கொண்டே திரும்பினேன். யுத்தம் முடிந்து அனாதைகளான பலரைத் தேடியது போல அன்புச்சோலையின் அம்மாக்களை அப்பாக்களையும் தேடினேன். வவுனிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள் அங்கம் - 1 13வருடங்கள் கழித்து பிறந்த ஊரையடைந்திருந்தாள். பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட எல்லைக்குள் யாரையும் அனுமதிக்கமாட்டார்களென்ற உறவினர்களின் சொல்லையும் மீறி தான் பிறந்த வீட்டையும் நடந்த தெருவையும் பார்க்கப் போவதாய் அடம்பிடித்தாள். அவள் நடந்து திரிந்த நிலத்தைப் பிள்ளைகளுக்கு காட்ட வேணுமென்ற கனவோடு போயிருந்தவளுக்கு உறவினர் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒற்றையடிப்பாதையளவு தான் போகலாம்...கொஞ்சம் அரக்கினாலும் மிதிவெடியள் ஏன் இந்த வில்லங்கத்தை குழந்தையளோடை ? அம்மா புறுபுறுத்தா. அவள் தனது முடிவை மாற்றுவதாக இல்லை. கட்டாயம் பிறந்த வீட்டைப் பார்க்க வேணுமென்றே நின்றாள். கடைசியில் அவள்தான் வென்றாள். அன்று …
-
- 19 replies
- 3.9k views
-
-
கள்ளப்பந்து ------------------ கட்டுப்பந்தில் தான் ஆரம்பத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒரே பந்தை தைத்து தைத்து ஒரு வருடம் கூட வைத்திருப்போம். காற்று உடனேயே போகுது என்று தெரிந்தால், உள்ளுக்குள் இருக்கும் பிளாடரை வெளியே எடுத்து, தண்ணீர் வாளிக்குள் அமுக்கி, எங்கே ஓட்டை என்று கண்டுபிடித்து ஒட்டுவோம். ஒரு பந்தின் மேற்பகுதி முப்பத்தி இரண்டு துண்டுகளால் ஆக்கப்பட்டிருக்கும். அதில் இருபது அறுகோண துண்டுகள், பன்னிரண்டு ஐங்கோண துண்டுகள். ஒவ்வொரு துண்டையும் நாங்கள் 'ஓ' என்ற பெயரில் தான் சொல்லுவோம். 'ஓ' பிய்ந்து விட்டது, 'ஓ' மாற்ற வேண்டும், இப்படித் தான் முப்பத்தி இரண்டில் எந்த துண்டும் குறிப்பிடப்படும். ஏன் ஒரு துண்டை 'ஓ' என்று சொல்கின்றார்கள் என்று இன்று…
-
-
- 4 replies
- 602 views
-
-
சாயங்காலம் சாயும் நேரம் மின் விளக்குகளின் மிதமான வெளிச்சத்தில் குளித்தபடி மௌனமாய் தவமிருக்கும் தவசிபோல அமைதியும் அழகும் மிகுந்த தூய்மையுடன் தூங்கிக்கொண்டிருந்தது அந்த முதியோர் இல்லம். ஆடி ஓடி ஓய்ந்து தம் இறுதிக்காலத்தை அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் கழிக்கும் அம் முதியவர்களின் முகங்களில் மிளிரும் புன்னகையையும் தாண்டி அவர்கள் மனங்களில ;;புதைந்து கிடக்கும் ஏக்கம் ஏமாற்றம், தனிமை, கழிந்த காலங்களின் நினைவுத் தடங்கள், என பல்வேறுபட்ட பரிமாணங்களையும் தாங்கி அங்கு பல இன, மத, மொழி, சார்ந்த பல குண இயல்புகள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கங்கள், உடை வேறுபாடுகள், என்று பலதரப்பட்ட முதியவர்களும் அங்கு தங்கி இருந்தனர். அடிவானம் வெளுக்கும் அந்த விடிகாலைப் பொழுதில் வாகனத் தரிப்பிடத்தில் …
-
-
- 14 replies
- 2.3k views
-
-
வழிப்போக்கன்..! ****************** வறுமையின் காரணமாக உலக சந்தையில் நாட்டை துண்டு துண்டாக்கி விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.வந்த வழிப்போக்கன் கேட்டான் உள்ளுரில் ஒரு துண்டைக்கேட்டவர்களுக்கு கொடுத்திருந்தால் உங்களுக்கே உணவு தந்திருப்பார்களே! இந்தநிலை வந்திருக்காதே! என்றான்.மீசையில் மண் ஒட்டவில்லையென எழுந்த பெரியவர் அவர்களை வைத்துத்தான் ஆட்டமே நடக்குது என்றார். அரசமரத்தடியில் இருந்த புத்தபெருமான் இது எத்தனைநாளுக்கென்று சிரித்தார். உணவின்றி,உடையின்றி,எரிபொருளின்றி,நோய்க்கு மருந்தின்றி குழந்தைகளுக்கு மாப்பாலின்றி எத்தனை எத்தனை கொடுமைகளைப் புரிந்தும் வெண்றவர்கள் அவர்கள். அதுபற்றி உனதுமக்களும் புரிந்துகொள்ள இதுவொரு அரிய சந்தர்ப்பம்.கொடுத்திருக்கிறீர்களென வழி…
-
- 4 replies
- 1.7k views
-
-
"வழிப்போக்கன்" “பூர்வீக நிலம், பூர்வீக கலாச்சாரம், பூர்வீக கிராமம் அல்லது நகரத்தின் மீது அன்பை வளர்ப்பது மிக முக்கியமான பணியாகும், அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த அன்பை எப்படி வளர்ப்பது? அது சிறியதாகத் தொடங்குகிறது - தன் குடும்பத்தின் மீதும், தன் வீடு மீதும், தன் பள்ளி மீதும் அன்புடன். படிப்படியாக விரிவடைந்து, பூர்வீக நிலத்தின் மீதான இந்த அன்பு உங்கள் நாட்டிற்கான அன்பாக மாறும் - அதன் வரலாறு, அதன் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்காக ” / “Inculcating love for one's native land, native culture, native village or town is a very important task and there is no need to prove it. But how to cultivate this love? She starts small - with lo…
-
- 0 replies
- 379 views
-
-
"விழிமூடித் துயில்கின்ற வேங்கைகள்" இன்று கார்த்திகைத் திங்கள் இரண்டாம் கிழமை, முல்லைச்செல்வி தனது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு, தனது வீட்டில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தாள். வானம் இருண்டுபோய் இருந்தது. குளிர் காற்றுப் பலமாக வீசிக்கொண்டிருந்தது. அவள் வாய் "தீபங்கள் அணையாலாம் தீ அழிவதில்லை தேசத்தை காத்த உயிர் ஓய்ந்து அழிவதில்லை" என்று முணுமுணுத்தபடி, காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை நோக்கிச் சென்றாள். அவள் பேருந்துவால் இறங்கி, நடக்கத் தொடங்கிய போது, அவளுடைய ஊன்றுகோல் சீரற்ற மண் பாதையில் உறுதியாக அழுத்தியது. ஒரு காலத்தில் மாவீரர் விழிமூடித் துயில் கொண்ட அமைதியான அந்த இடம், இப்போது, உடைத்து எறியப்பட்டு ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தது. அன்று பல உயிர்களைப் பறித்த …
-
- 2 replies
- 386 views
-
-
அந்தக் கடற்கரையின் அலைகள் அவனது காலடியைத் தொட்டுச் சென்றன! மாலை நேரத்தில் அவன் அந்தக் கடற்கரைக் கோவிலுக்கு வருவதும், அந்தக் கடற்கரையின் ஓரத்தில் காலடிகள் பதிய நடப்பதும், சற்று நேரத்தில் அந்தச் சிற்றலைகள் அவனது காலடிகளை நனைத்து அழிப்பதும், அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நடந்து வரும் சம்பவங்கள்! தகிக்கும் தாம்பாளத் தட்டாக, கதிரவனும் தனது அன்றைய பணியைச் செவ்வனே செய்த ஆத்ம திருப்தியுடன், மெல்ல மெல்ல மேல் திசையில் மறையும் காட்சியும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்! அவனது பெயர், அவனுக்கே மறந்து போய் விட்டு நீண்ட நாட்களாகி விட்டது! இப்போதெல்லாம் அவனுக்கு ஊர்ச்சனம் வைத்த பெயரே, அவனது பெயராக நிலைத்து விட்டது. அந்தப் பெயர் தான் ‘விசரன்' ! கொஞ்சம் வளர்ந்த சனங்கள், கொஞ்சம…
-
- 13 replies
- 1.8k views
-
-
இம்மாத ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகையில் வெளிவந்த என் சிறுகதை சிவாவுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. இரவு அடித்த வொட்காவின் தாக்கம் தலையிடியாய் மாறி அவனை எழுப்பியிராவிட்டால் இன்னும் கன நேரமாக அவன் தூங்கியிருப்பான். அப்பவும் எழும்ப மனமின்றிப் புரண்டே படுத்தான். இதமாக இளங்காலையில் வீசிய காற்றினால்கூட அவனை எழுப்ப முடியவில்லை. அதற்காக அவன் இரசனை அற்றவனும் அல்ல. மதுவையும் பெண்களையும் எப்படி இரசிக்கின்றானோ அதுபோல் இயற்கையின் விந்தைகளையும் தன்னை மறந்து இரசித்துமிருக்கிறான். வேலை அற்ற நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏனோ அவனுக்கு வெள்ளனவே விழிப்பு வந்துவிடும். அந்த நாள் முழுவதையும் அமைதியாக வீட்டிலிருந்தபடியே கரைப்பதான அவனின் அந்தத் தீர்மானத்தை யாராலும் கலைக்க முட…
-
- 3 replies
- 1k views
-
-
"கனவே கலையாதே" கனவும், இயல்பும் ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் வேறுபட்டது, என்றாலும் சிலவேளை இயல்பாக நடக்கும் ஒரு சம்பவத்தை, இது கனவா என கருதும் அளவிற்கு ஆச்சரியப்படுத்தும் வலிமை கனவுக்கு உண்டு. அதேபோல கனவு கண்டு கொண்டிருப்பவர் இது இயல்பாகவே நடக்குமா என அவரை சிந்திக்க தூண்டிவிட்டு போகும் வல்லமையும் கனவுக்கு நிறையவே உண்டு. எனக்கு இரண்டுமே நடந்து உள்ளது அதனால்த்தானோ என்னவோ 'உங்களுக்கென ஒரு கனவு இருந்தால், அதைப் கெட்டியாகப் பிடிக்க வேண்டும், ஒருபோதும் விடக்கூடாது' என்று என் பொன்மொழியை மாற்றி உள்ளேன் இல்லை "கனவே கலையாதே" என்று வேண்டுகிறேன்! நான் இப்ப திருமதி ஜெயா தில்லை, ஆனால் நான் வேம்படி மகளிர் கல்லூரியில் உயர் வகுப்பு படிக்கும் காலத…
-
- 0 replies
- 472 views
-
-
நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும் மகளின் திருமணம் 2019 நவம்பரில் பதிவுத்திருமணம் நடைபெற்றது 2020 செப்ரெம்பரில் திருமணவிழா என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது மார்ச்சில் கொரோனா வந்திட்டுது என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வருவதால் ஆனி ஆடியில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தது . திருமண விழாக்கள் செய்யலாம் ஆனால் 150 விருந்தினருடன் என்ற கட்டுப்பாட்டுத் தளர்வில் எல்லாமே சடுதியாக நடந்தேறியது இரண்டு வாரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்து மிகவும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 80 விருந்தாளிகளை அழைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து அழைப்பும் விடுத்தாயிற்று . ஆவணி நடுவிற்குப்பின்னர் நல்ல நாள் இருக்கு எ…
-
- 42 replies
- 5.9k views
- 1 follower
-
-
பதினாறு வயது என்பது எல்லோருக்கும் ஒரு அழகைக் கொடுக்கும் வயதுதான். இளம் காளையர்கள் எல்லாம் நின்று திரும்பிப் பார்க்கும் வயது. நின்று திரும்பிப் பார்க்கத் துணிவற்றவர்கள் கூட பதினாறு வயது மங்கையைக் கண்டால் கடைக்கண்ணால் தன்னும் பார்த்துக்கொண்டு போகும் அழகு. இயற்கையான அழகு இல்லாதவர் கூட அந்த வயதுக்கான ஒரு தளதளப்பில் ஒரு மினுக்கத்தில் அழகாகத் தெரிவர். தூக்கக் கலக்கத்தில் அவர்களைப் பார்த்தாலும் கூட அழகாகத்தான் தோன்றும். நிலாவும் அப்படித்தான். பேரழகி என்று கூற முடியாவிட்டாலும் கடந்து போகும் ஆண்கள் எல்லாம் அவளைத் திரும்பிப் பார்க்காது செல்ல முடியாது. அவளூரில் மிதியுந்தில் செல்பவர்கள் மிகச் சிலரே. அதிலும் அவள் மிதியுந்தில் செல்லும் வேகம் பார்த்து ஆண்களே, டேய் தள்ளி நில்லுங்கடா என…
-
- 55 replies
- 26.6k views
-
-
ஆதித்தாயின் மொழி --------------------------------- 'ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று. விளையாடி விட்…
-
-
- 9 replies
- 870 views
- 1 follower
-
-
"விடியலைத் தேடி" கிளிநொச்சி இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். எனினும் கிளிநொச்சியில் கிராஞ்சி, வலைப்பாடு, பள்ளிக்குடா, இரணைமாதா நகர் மற்றும் நாச்சிகுடா கிராமம் போன்றவை மீன்பிடிக் கிராமமும் ஆகும். இந்த நிலவளம், நீர்வளம் நிரம்பிய கிளிநொச்சி பிரதேசம், வன்னி நிலத்தின் முக்கிய பகுதியாக, வடமுனையில் இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலே, இந்த வன்னிப் பகுதியில், குறிப்பாக கிளிநொச்சிப் பிரதேசத்தில், ஆங்ஆங்கே சில குடியிருப்புகளே இருந்தன. அதைத் தவிர்த்து அநேக இடங்கள், அடர்ந்த காடுகளான வனப் பகுதியாகவே காணப்பட்டது. அந்தக் காலத்தில் பிற இடங்களில் இருந்து இந்த அ…
-
- 0 replies
- 238 views
-
-
பிறிதின் நோய் தந்நோய் - சுப. சோமசுந்தரம் நம் கதாநாயகன் ஓர் ஆசிரியர். எதிலும் படிம நிலை கொண்டே பழகிய உலகம் அவரைப் பேராசிரியர் என்று விளிக்கலாம். அவரோ, "ஆசிரியரில் என்ன பெரிய ஆசிரியர், சிறிய ஆசிரியர் ?" என்று கேட்கும் தன்மையர் என்பதால், ஆசிரியர் என்பதே அவருக்கு ஏற்புடைய அடையாளம். தோழர்களின் சகவாசம் மனிதனை மனிதனாக மட்டுமே அடையாளப்படுத்தும் ஆற்றல் பெற்றது என்பதற்கு அவரே தரச்சான்று. தந்தையார் அடிக்கடி இடமாற்றலாகும் பணியில் இருந்தமையால் இளம் வயதில் பாட்டன் - பாட்டியிடம் சிறிது காலம் வளர்ந்தவருக்கு, அவர்களது பரிவிற்கும் பாசத்திற்கும் சற்றும் …
-
- 8 replies
- 2.4k views
- 2 followers
-
-
பசியும் பார்வையும் திரும்பத் திரும்ப அவளைப் பார்க்கத் தோன்றியது. உருவம் இன்னும் திடகாத்திரமாக முகத்தில் ஆண்களுக்கே உரித்தான ஒரு வித தடிப்புடன் தாடைகள் அமைந்திருக்க என்னுடைய ஞாபகக்குழிக்குள் அவள் முகம் தெரிந்ததுபோலும் தெரியாதது போலும் தளம்பல்பட்டுக் கொண்டிருக்க நான் அந்த முகத்தை யாரென்று ஊகிக்க மிக ஆழமாக உற்று நோக்கினேன். அவள் அருகில் இன்னும் ஒரு பெண் நளினத்தோடு முறுவலித்தபடி வெட்கச்சாயம் பூசியிருந்தாள் . முறுவலிட்டபடி இருந்தவளை இரசிப்பதா இல்லை மற்றவளை இனம் காண்பதா என்ற இரண்டு நிலையில் நான் அந்த ஸ்காபுரொ மோல் பக்கம் விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துச் செல்வது வழக்கம் இன்றும் அப்படித்தான் அவ்விடத்தில் நான் பிடித்தமான உணவுகளை வாங்க பிள்ளைகள்…
-
- 4 replies
- 2.2k views
-
-
குறிப்பா புலம் பெயர்த்த ஈழ மக்கள் உங்களுக்கு இது உதவும் எவர் முதல் சொல்வது நம்ம கௌரவம் என்னாகும் மரியாதையை போயிடும் என்னும் சில அற்ப விசயங்களுக்கு பயந்து நீங்கள் உங்களுக்கு நடந்த இப்படியான சம்பவத்தை மறைத்து இருக்கலாம் .. ஆகவே விழிப்பாய் இருங்கள் மோசடிகள் பல கோணத்தில் பல மாதிரி நடக்கு அதில் இதுவும் ஒன்று ஓகே பிரச்சினைக்கு வருவம் .. (கற்பனை பெயர் அனைத்தும் ) வீட்டு தொலைபேசி அதிகாலை 5.30 மணிக்கு உறக்கத்தை கிழித்து அலறி தனது குரலை தயார் செய்கிறது நிசப்தம் உறக்கத்தை வேண்டி நிக்க தொலைபேசி தொந்தரவு கொடுக்கிறது மனதில் யாரா இருக்கும் என எண்ணியபடி எட்டி போனை எடுத்து காதினில் கொடுக்கிறாள் ஜெசி மறுமுனையில் .. ஹலோ ..ஹலோ . இவள் ..ம்ம் யாரு நிங்க எங்கிருத்து .. என்னை தெரியாதா வ…
-
- 16 replies
- 2.3k views
-
-
உறவுகளே இந்தத் திரியில் உங்கள் கருத்துக்களை வையுங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&hl=
-
- 256 replies
- 22.7k views
-
-
இரவு வேலைக்குப்போய் வந்து தன் தனிமை வாழ்க்கைக் கதையை தலையணையோடு பகிர்ந்துவிட்டு போர்வைக்குள் புகுந்த குமரன், பத்து மணி நேர வேலை அலுப்பின் அசதியை நித்திரையில் கரைத்துக்கொண்டு இருந்தான்.அந்த நேரம்பார்த்து சிவபூசையில் கரடி புகுந்தால்போல் அவன் தொலைபேசியின் அழைப்பு "நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா" என்ற பாடலுடன் ஒலித்தது.தூக்க அசதியில் கைபேசியை கையில் எடுத்து ஒருவாறாகாத் தடவி இணைப்பை காதுக்குள் வைத்தான் மறு முனையில் அவன் தாய் ஊரில் இருந்து "தம்பி என்ன நித்திரயா"?எனக் கேட்கவே "ஓம் அம்மா சொல்லன" என்று தன் தூக்க அலுப்பிலும் தன் பாசத்தை அன்போடு பகிர்ந்தான். தாயும் "அப்பன் அப்பாட துவசமடா இன்டைக்கு விரதமா இரையா" என்றவே அவனுக்கு சுருக்கென்று கோவம் வந்தது "இங்க என்ணண்டு என? வேலைக்கு…
-
- 6 replies
- 1.5k views
-
-
மனிதம் இன்னும் ..... அண்மையில் சென்ற வெள்ளிக் கிழமை சாய் சென்டர் இல் ஒரு திருமண விழாவுக்கு சென்று இருந்தேன். நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்த வேளை.,நேரத்துடன் சென்றதால் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்து கொண்டிருந்தேன். ஒரு வயதான தம்பதிகள் கணவனுக்கு எண்பது வயதுக்கு மேல் இருக்கும் மனைவியை கவனமாக நுழை வாயில் அருகில் இறக்கி விட்டு அவர் கார் தரிப்பிடம் தேடி சென்றுவிடடார். மனைவி கைத்தடியுடன் நிற்கிறார் . அவரருகே ஒரு பெண்மணி இறங்கி உள் நுழைய முற்படட போது வயதான மனைவி என்னை ஒரு இருக்கையில் உட்க்காரவைக்கமுடியுமா எனக் கேடடார். குளிருக்குள் நிற்க சிரமமாயிருக்கிறது என்றார் . பெண்மணியும் வாருங்கள் உள்ளே செல்வோம் என அழைத்து, உயர்த்தி மூலம் (லிப்ட்) அழைத்து சென…
-
-
- 12 replies
- 727 views
- 1 follower
-
-
1988ஆம் ஆண்டு வீரகேசரியினால் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை. மீள் பிரசுரம் - 13-12-2015 ஞாயிறு வீரகேசரி வாரவெளியீடு நன்றி வீரகேசரி. மானுடம் தோற்றிடுமோ! அந்த நள்ளிரவில் தூரத்தே வெடிச்சத்தங்கள் கேட்டன. குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த அவளுக்கு நெஞ்சுக்குள் சிலீரென்றது. வந்திற்றானுகள் ரவண்டப்புக்கு! இவர இப்ப என்ன செய்யிற! என்ன மாதிரி ஒளிக்கிற! - குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். மனம் கிடந்து பதறியது. தற்செயலா வந்து இவரையும் கூட்டிற்றுப் போனாஎனக்கும் என்ர புள்ளக் குஞ்சுகளுக்கும் என்ன கெதி! போட்டு அடிச்சுப் போடுவானுகளோ தெரியா? இவர் அதுகளத் தாங்கவும் மாட்டார். - கணவனை …
-
- 5 replies
- 3.9k views
-
-
காலை 7 மணி கைத்தொலைபேசியும் வீட்டு தொலைபேசியும் மாறி மாறி அடிக்க. . யார்ராது காலங்காத்தால என்று எரிச்சலோடு போனை எடுத்தால் .. மனிசி பதட்டதோடு " என்னங்கோ. மரியா வீட்டு பெல்லை கனநேரமா அடிக்கிறேன் நாய்கள். குலைக்கிற சத்தம் தான் கேட்கிது கதவு திறக்கேல்ல . எனக்கு பயமாயிருக்கு. கெதியா வாங்கோ" என்றார் . ஆறுதலாக சோம்பல் முறித்து கொட்டாவி விட்டபடி. 10 மணிக்கு எழும்பும் நான் அரக்கப்பரக்க. எழும்பி சப்பாத்தை கொழுவிக்கொண்டு ஓடிப்போனேன் . மழை வேறு 4 வது நாளாக. விடாமல் அழுதுகொண்டேயிருந்தது .மரியா வீட்டுக்கு போவ துக்கிடையில் அவரைப்பற்றி சொல்லி விடுகிறேன். மரியா வயது 78 .வீட்டுக்கு அருகிலிருக்கும் வசதியானவர்கள் வசிக்கும். அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் 7 வது ம…
-
- 6 replies
- 4.4k views
-
-
"வறுமையின் சிறகினை அறுத்தெறி" அண்மையில் குண்டு தாக்குதலால் கால் இழந்த தந்தையையும், அயல் வீடுகளுக்கு சென்று துப்பரவு பணிகளில் ஈடுபடும் தாயையும், ஆறு பிள்ளைகளில் மூத்தவனாகவும் இன்று நான் இருக்கிறேன். எனக்கு வயது பதின்நான்கு எம் குடிசை "இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்" போல், உணவின்றி வருந்தி, மாறி மாறித் தோண்டி எலிகள் மடிந்த சுவருடையதாக இருக்கிறது. தாயோ "பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து முலைக்கோள் மறந்த புதல்வனொடு" என்பது போல பால் காணாது, பால் குடிப்பதையே நிறுத்திவிட்ட பிள்ளையுடன், என் கடைசி தம்பியுடன் வாடி நிற்கிறாள். …
-
- 0 replies
- 377 views
-
-
1992 அல்லது 1993 ஆக இருக்கும். நான் கொழும்பில் இருந்து எனது உயர்தர பரீட்சைகளுக்காகப் படித்துக்கொண்டிருந்த காலம். வெள்ளவத்தையில் பிரேம்நாத் மாஸ்ட்டரின்ர இன்டர் மொட் ஸ்டடி சென்டரில், புறாக்கூடு போன்ற அறையில் நெருக்கமாக அமர்ந்து, அவர் சொல்லித்தரும் கணக்கினை ஒரு வரி மீதமில்லாமல் கொப்பியில் பதிந்துகொண்டு, பரீட்சைக்குக் காத்திருந்த காலம். தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவர்களையும் செல்லப்பெயர் ( பட்டப்பெயர்தான்) கொண்டுதான் பிரேம்நாத் மாஸ்ட்டர் அழைப்பார். அவர் ஒரு வகுப்பில் எங்கள் பெயரை அழைத்து ஒரு கேள்வி கேட்டார் எண்டால், அது எமக்கு ஆத்மதிருப்தி. வகுப்பில் முன்னால் இருந்த சரக்குகளுக்கெல்லாம் எங்கள் பெயர் தெரிந்துவிடும் என்கிற சந்தோஷம், "விலாசம்", இப்படி ஏதோ ஒன்று. அந்…
-
- 101 replies
- 11.1k views
- 1 follower
-