Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை. விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமையின் இயங்கு சக்தி மட்டும் என்றென்றும் உயிரோடு வாழ்ந்து பல்லாயிரம் பேரை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் தீயாகி வியாபித்திருக்கும். இத்தகைய அடையாளங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஒருவர் றட்ணம் என்ற இயக்கப் பெயரைக் கொண்ட தெய்வேந்திரம் ஜெயதீபன் என்ற இயற்பெயரோடு நெருப்பின் சக்தியாக இருந்ததை காலம் ஒரு போதும் அடையாளப்படுத்தியதில்லை. 1974ம் ஆண்டு உரும்பிராய் மண்ணில் தெய்வேந்திரம் தம்பதிகளின் 2வது குழந்தையாகப் பிறந்த ஜெயதீபன் ஒரு சாதா…

    • 10 replies
    • 7.1k views
  2. Sunday, June 17, 2018 நூறாய் பெருகும் நினைவு நீங்க இலங்கையா? கேட்போருக்கு..., ஓமோம்... சொல்லியும் ! நீங்க இந்தியாவா? கேட்போருக்கு...., ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை. அப்ப ஊரில எந்த இடம்? சிலருக்கு பூராயம் ஆராயாமல் பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன். அதையும் மீறி வரும் கேள்வி இது :...., …

    • 11 replies
    • 4k views
  3. "ஒரு தாயின் கண்ணீர்" [உண்மைக்கதை] தமிழருக்கு எதிராக அரசின் பார்வை இருந்த காலம் அது. தமிழர் செய்த குற்றம், படிப்பில் கூட கவனம் செலுத்தி, தமது விகிதாசாரத்துக்கும் மிக அதிகமாக, தேர்வில் சித்திபெற்று பல்கலைக்கழகம் நுழைந்ததும், அதனால் திறமையின் அடிப்படையில் கூடுதலான அரச உத்தியோகம் பெற்றதும் தான். இதற்கு மாற்றுவழி, தமிழர் அல்லாதோரை மற்றும் கிராமப்புறங்களில் வாழும் இளைய தலைமுறையினரை ஊக்கிவிப்பதும் அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதும் தான் உண்மையான சிறந்த வழியென்றாலும், அரசு தமது சமய தலைவர்களின் மற்றும் தம்மை சூழ்ந்து உள்ள அரசியல் தலைவர்களின் இனத்துவேச ஆலோசனையை கேட்டு, தரப்படுத்தல் என்ற கொடிய முறையை அறிமுகப் படுத்தியது. உண்மையில் அரசின் இந்த நடவடிக்கைதான், தமிழர்களி…

  4. படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று -------------------------------------------------------------------- ஏப்ரல் 12ம் திகதி, வெள்ளிக்கிழமை மத்தியானம் இலங்கைக்கான விமான பயணம் ஆரம்பித்தது. வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் ஒரு இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கின்றது. வாகன நெரிசல் இல்லாவிட்டால், விமான நிலையம் போவதற்கு 20 நிமிடங்களே அதிகம். நெரிசல் இருந்தால், இதே தூரம் போக இரண்டு மணித்தியாலங்களும் எடுக்கும். உலகில் எல்லாப் பெருநகரங்களிலும் இன்று நிலைமை இதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பது இந்த நிலையை இன்னும் கொஞ்சம் மோசமாக்குகிறது. லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங், பின்னர…

  5. "வரலாறு தன்னைத் தானே திருப்பிச் சொல்லும்" இலங்கையின் வடமேல் மாகாணக் கரையோரத்தில் சிறந்து விளங்கும் நகரம் சிலாபம் என்று சொல்லலாம். அங்கிருந்து 16 மைல் தூரத்தில், இந்துமகா சமுத்திரத்தின் கரையோரத்தில் அமைந்து இருக்கும் எழில் மிகும் கிராமம் தான் உடப்பு. இங்கு தற்சமயம் அண்ணளவாக 10 ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இக்கிராமம் நெய்தல் நிலத்தைச் சார்ந்ததால், இங்கு மீன் பிடித் தொழிலே முதன்மையாக இருந்தாலும், நெசவுத் தொழிற்சாலை, கயிற்றுத் தொழிற்சாலை, பனை ஓலை குடிசைத் தொழிற்சாலைகள் போன்றவையும் உள்ளன. இந்த அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம் பரப்பும் உடப்பு அல்லது உடப்பூர் கிராமத்தை, கட்டாயம் புத்தளம் மாவட்டத்தின் குட்டித் தமிழகம் என்று சொல்லலாம். இங்கு இன்று வாழும் பெரும…

  6. "ஏமாற்றும் காதல்" ஒரு காலத்தில் இலங்கையின் ஒரு அழகிய கடற்கரை நகரத்தில் ராஜ் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு அன்பான மற்றும் பாரம்பரிய குடும்பத்தின் ஒரே குழந்தை. ராஜ் தனது வசீகரம், புத்திசாலித்தனம் கடலின் மீது ஆழ்ந்த அன்பு, தாராள மனப்பான்மை மற்றும் அன்பான புன்னகைக்காக அவனது கிராமம் முழுவதும் அறியப்பட்டான். ராஜ் உள்ளூர் புத்தகக் கடையில் சுமாரான வேலையில் இருந்தான், அங்கு அவன் தனது நாட்களை புத்தகங்களில் மூழ்கி, வாடிக்கையாளர்களுக்கு சரியான வாசிப்பைக் கண்டறிய உதவினான். சமீபத்தில் அவனது கிராமத்திற்குச் சென்ற அழகிய பெண்ணான மாயாவை சந்தித்த ராஜின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. மாயாவை சுற்றி ஒரு மர்மம் இருப்பது அவனுக்…

  7. கக்கூஸ் கதையல்ல கலாய் ... ஜீவநதிக்காக..சாத்திரி . வாஷிங்டன் சிட்டிசியில் வானுயர்ந்து நிற்கும் உலக வங்கி தலமையக கட்டிடத்தின் அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்.. பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள் நித்தியானந்தாவின் வருகைக்காக காத்திருக்கும் பக்தர்களைப் போலவே உலக வங்கியின் தலைவர் எப்போ வருவார் என ஆவலோடு வாசலைப் பார்த்தபடியே பர பரப்பாக காத்திருந்தனர்.கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்ற சில நிருபர்களை காவலர்கள…

  8. குறிப்பு- கீழ்வரும் கதை புகழ்பெற்ற ஷெர்லக் ஹோம்சும், வாட்சனும் யாழ் நகர வீதிகளில் உலாவினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் புனையப்பட்டதாகும். பேக்கரி ஒழுங்கைக்குள் நுழையும் போது இடதுபக்கமாக இருக்கும் நீர்ப்பாசன திணைக்களத்தால் 221B என இலக்கமிடப்பட்ட மதகுதான் எனக்கும் ஷெர்லக் ஹோம்ஸிற்கும் பகல் வீடு.அடித்து கொளுத்தும் யாழ்ப்பாண வெயிலில் கூட அந்த இடம் குளு குளுப்பாய் இருக்கும்.தலைக்கு மேல் இலங்கை மின்சாரசபையின் மர அழிப்பையும் மீறி வியாபித்திருக்கும் ஆலமரம் குளுமைக்கு ஒரு காரணம் என்றால் பிரதான வீதியின் மறுபுறம் இருக்கும் ரியூசன் கொட்டிலில் படிக்க வந்து போகும் இளம் சிட்டுக்கள் அதற்கு இன்னொரு காரணம்.காலை ஆகாரத்தை முடித்தபின் முழு பற்றரி சார்ஜ் ஏற்றிய கலக்சி S3 யோடு இங்கே வ…

  9. வன்னியின் சந்தோஷங்களை கொண்டுவருவதில் ஒருநாள் திருவிழா காணும் கோயில்கள் முக்கியம் ஆனவை.... வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பொங்கல் செய்து எல்லா ஊர்களிலும் இருந்து வண்டிகட்டியும் உழவு இயந்திரங்களிலும் புறப்பட்டு வந்து சேர்த்து கூட்டமா ஒரு இடத்தில் பாய் விரித்து உறவுகள் ஒன்றுகூடி விரதங்கள் பிடித்து தீ மிதித்து படையல் போட்டு அந்த ஒரு இரவில் போதுமடா சாமி என சாமி சொல்லும் அளவிற்கு மக்களின் வேண்டுதலும் படையலும் இருக்கும்.... அப்படியான ஒரு கோயில்தான் மாங்குளம் மல்லாவி வீதியின் இடையில் உள்ள வன்னிவிளாங்குளம் அம்மன் கோயில்...அக்கோயிலின் சிறிது தூரத்தில்தான் மாவீரர் துயிலும் இல்லமும் அமைந்து உள்ளது... பின்னேரம் வர ஆரம்பிக்கும் மக்கள் கூட்டம் இரவு பத்து மணிவரை தொடரும்... கூடுதலா சைட்…

  10. முற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்....! ஊர்முற்றக்கவிஞன் புதுவையின் முற்றத்தில் கரைந்த இனிய பொழுதொன்று. எங்களோடு பகிடி விட்டு , எங்களோடு அரசியல் பேசி , எங்களோடு கவிதைபேசி , எங்களோடு ஒருவனாய் கவிஞனாய் வாழ்ந்து காலநதிக்கரையில் புதுவையென்ற பெயரை மட்டும் ஞாபகம் தந்துவிட்டுக் காணாமற்போன புதுவை இரத்தினதுரை இன்றில்லை. அந்தக் கலைஞனின் முற்றத்தில் கண்ணகையம்மன் உற்வச காலத்தில் நடந்த சந்திப்பின் நினைவோடு கரையும் நாட்களிது. 2003ஆண்டு சமாதான காலத்துச் சந்தோசங்களில் கலந்திருந்த பொழுது. வற்றாப்பளை கண்ணகையம்மனின் உற்சவ காலம். வன்னி நிலத்தின் பெரும்பகுதி மக்கள் மச்சம் தவிர்த்து கண்ணகைக்கு விரதமிருக்கும் மாதம். எங்கும் கண்ணகையின் கதைகளை…

    • 13 replies
    • 4.6k views
  11. எனக்கு கனவுகள் வருவதில்லை வந்தாலும் அவை நினைவில் நிற்பதில்லை. ஆனால் இந்தக்கனவு மட்டும்........... புதுவருடப்பிறப்பன்று 01.01.2014 எமது பெற்றோரின் முக்கிய உறவு ஒன்றுக்கு முதலாவது துவசம். அழைப்பு வந்தது. போறதாகவே இல்லை. 31.12.2013 அன்று இரவு அண்ணரின் பேத்திக்கு பிறந்தநாள். போய் சாப்பிட்டு விட்டு கதைத்துக்கொண்டிருந்த போது இந்த துவசவீட்டுக்கதையும் வந்தது அதில் பலர் அதற்கு நாளை போவதாக சொன்னார்கள் சும்மா இருங்கோ நாளைக்கு புது வருடப்பிறப்பு. அந்த மாதிரி சாப்பிடும் நாள் மரக்கறி சாப்பாடு எனக்கு வேண்டாம் நான் வரமாட்டன்..... சொல்லிவிட்டு இரவு 12 மணிக்கு எல்லோரும் முதல் வீட்டுக்கு வந்து சாமிக்கு விளக்கு வைத்து புது வருடம் கொண்டாடி எல்லோருக்கும் வாழ்த்துச…

  12. சிலந்தி வலை ---------------------- காற்றில் ஈரப்பதன் குறைந்ததும், வருடம் முழுவதும் கடுமையான குளிர் அற்றதுமான ஒரு இடத்தில் நீண்டகாலமாக வசித்து வருகின்றேன். எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் கோடைகாலம், அதன் பின்னர் வரும் மூன்றோ அல்லது நாலு மாதங்கள் கூட குளிர் என்று சொல்லி விடமுடியாதவை. உலர்ந்த காலநிலைக்கென்றே சிலந்திகள் படைக்கப்பட்டிருக்கின்றன போல. உலகில் 40,000 வகை சிலந்திகள் இருக்கின்றன என்று சொல்கின்றனர். அந்த 40,000 வகைகளும் இங்கேயே இருக்கின்றன என்று நினைக்கின்றேன். சிலந்தியின் வலையில் அப்பாவிப் பூச்சிகள் மட்டும் தான் அகப்பட்டு அல்லாடிச் சாகின்றன என்றில்லை. வீட்டுக்கு வருபவர்கள் வீட்டில் எங்கோ ஒரு மேல் மூலையைப் பார்த்து, 'அது என்ன........, சிலந்தி …

  13. "அமைதியின் கதவு திறக்கட்டும்" இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான். பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும்…

  14. ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்! எனது பிறந்தநாள் சம்மர் பாடசாலை விடுமுறைக் காலத்தில் வருகின்றது. நான் பிறந்தநாள் அன்று வேலைக்கு விடுப்பு எடுத்து ரிலாக்ஸாக ஓய்வில் இருப்பதை ஒரு கொள்கையாகவே வேலை செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்து விடாமல் வருடாவருடம் தொடர்வதால், பல மாதங்களுக்கு முன்னரே ஒருவார விடுமுறையை விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தேன். குளிர்காலம் எப்போதும் மப்பும் மழையும் காதுமடல்களை விறைக்கச் செய்யும் கடுங்குளிர்காற்றுமாக இருப்பதால், சம்மரில் பிரகாசிக்கும் வெயிலில் எங்காவது செல்ல மனம் ஏங்கும். பாடசாலை விடுமுறையில் வீட்டில் நிற்கும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிக்க எனது இணையும் இதே வாரத்தில் விடுமுறை எடுத்திருந்தார். விடுமுறையைக் கழிக்க எங்கே போவது என்பதில் ஒரு…

  15. பொட்டல் காட்டில் ஒரு கதை. அது ஒரு பொட்டல் காடு.ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.ஒரு ஒற்றையடிப் பாதை. தினசரி ஆட்கள் நடந்து நடந்து, மிதிவண்டிகளும் பிரயாணப்பட்டு ஒரு பாம்பின் முதுகுபோல் நீண்டு கிடந்தது.எப்போதும் அந்த காட்டு வெளி ஆளரவமற்றே இருக்கும். விதம் விதமான பறவைகள் மற்றும் பாம்பு, கீரி, ஓநாய்,நாரி, முயல் என்று சிறுசிறு விலங்கினங்களும் உண்டு. காவேரி தினமும் அந்தப் பாதையால்தான் பக்கத்து ஊருக்கு வேலைக்கு போய் வருவதுண்டு. அப்படி போய்வரும் நேரங்களில் ஒரு சிறு பையில் நொறுக்குத் தீனிகள் (பொரி ,கடலை,அரிசி இப்படி ஏதாவது)கொண்டு செல்வாள். அந்த பொட்டல் காடு வந்ததும் கொண்டுவரும் நொறுக்குத் தீனியை கொரிக்க தொடங்குவாள்.அவள் கையில் இருந்து சிந்துவதை சில குருவிகள் பொறு…

    • 7 replies
    • 4.6k views
  16. கப்டன் லோலா ஈரநினைவாய்..... நிலை: கப்டன் இயக்கப் பெயர்: லோலோ இயற்பெயர்: தம்பிராசா சுரேஸ்குமார் ஊர்: புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு: 16.07.1969 வீரச்சாவு: 29.12.1988 நிகழ்வு: சுன்னாகத்தில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கும்பலின் முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பின்னர் வீரச்சாவு. நெடிய தோற்றம். தேவையின்றிக் கதைக்காத சுபாவம். ஆனால் விழிகள் எப்போதும் ஆக்கிரமிப்பாளனின் நடமாட்டத்தை அவதானித்தபடியிருக்கும்.கழுத்தில் சயனைட்டோடு ஒரு சிலுவை அவன் கழுத்தில் எப்போதுமே இருந்தது. குப்பிளான் கேணியடியிலிருக்கும் எங்கள் கடைக்கு அடிக்கடி வருவான். தன் தோழர்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவான். வசாவிளானில் சென்றியிருக்கும் போராளி…

    • 13 replies
    • 2.4k views
  17. Thursday, April 20, 2017 மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்) அவனுக்கும் அவளுக்குமான உறவு உரையாடல்கள் மூலம் உருவாகி வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது. எந்த விடயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை ? அவர்களுக்கிடையே பேசாப்பொருள் என்று எதுவுமே இருந்ததில்லை. உரையாடலில் ஒருநாள்....., நாங்கள் முற்பிறப்பில ஒண்டாப் பிறந்திருக்கிறம் போல....அதுதான் இந்தப் பிறப்பிலயும் தொடருது. என்றான் அவன். முற்பிறப்பெல்லாம் நம்பிறியேடா ? இது அவள். தெரியேல்ல..., ஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு நுற்றாண்டுகளுக்கு மேல இருந்திருக்கு. நீங்கள் அப்…

    • 4 replies
    • 1.9k views
  18. "காதல் தந்த தண்ணீர் குடம்" நான் வேலை முடிந்து, வீடு திரும்புகையில், நான் வேலை செய்யும் ஊர் சந்தியில் இருந்த பெட்டி கடை ஒன்றில் சூடாக வடை அருந்திக் கொண்டு இருந்தேன். இது தான் என் இரவு சாப்பாடும் கூட. நான் இந்த ஊருக்கு அண்மையில் வேலை மாற்றம் பெற்று வந்தவன். எனக்கான அரச விடுதி பெற ஒன்று இரண்டு மாதம் பொறுத்து இருக்கவேண்டும். ஆகவே தற்காலிகமாக ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் தங்கி உள்ளேன். ஆகவே சமையலுக்கு அங்கு பெரிதாக வசதி இல்லை. எனவே காலை, மதிய உணவை வேலை தளத்திலும், இரவு உணவை இலேசாக இந்த பெட்டி கடையிலும் இப்போதைக்கு சமாளிக்கிறேன் ஆனால், இன்னும் ஒன்றையும் நான் சொல்லத்தான் வேண்டும், இந்த பெட்டிக் கடையுடன் சேர்ந்த வீட்டில் தான் கடைக்கார…

  19. மூன்றாவது காலை விடிந்திருக்கின்றது. காய்ச்சல் கொஞசம் குறைந்திருக்கிறது. இன்னமும் எழுந்து நிற்க முடியவில்லை. எனது அணியோடு தொடர்பில்லை. திசையும் சரியாகத் தெரியவில்லை. சாதுவாகப் பசிக்கிறது. மனிதநடமாட்டம் மருந்திற்கும் இல்லை. நகர்ப்புற மக்கள், வேடர்களைக் கதைகளிற் தான் கேட்டிருப்பர். ஆனால் கதிர்காமத்திலிருந்து தென்தமிழீழம் வழியாக வன்னியை இணைக்கும் பிரதேக்காடுகளிற்குள் வேடர்கள் இன்னமும் வாழ்கி;றார்கள். அவர்களை முன்னர் நான் கண்டுள்ளேன் என்பது மட்;டுமன்றி, ஒரு வேலைத்திட்டத்தில் வேடர்களோடு வேடர்களாக நான் எதிரி நாட்டிற்குப் பயணித்தும் உள்ளேன். என்னால் வேடர்போன்று பேசமுடியும். வேடர்களோடு பேசமுடியும். ஆனால் நான் பேசுவதற்கு வேடர் எவரையும் தற்போது காணவில்லை. காடு முற்றாக விழித்திரு…

  20. அப்பா இறந்த நாள் முதல் வீடு முழுவதும் நண்பர்கள் உறவினர் என்று இரவு பன்னிரண்டு ஒன்று என்று இருந்து கதைத்துவிட்டுப் போவதாய் முதல் மூன்று நாட்கள் கழிய, நான்காம் நாளிலிருந்து உறவினர்கள் படிப்படியாகக் குறைய எஞ்சியது நாங்கள் ஒரு இருபது பேர் தான். ஆனாலும் அப்பப்ப அயலில் உள்ளவர்களும் தெரிந்தவர் போனவர் என்று நாள்முழுதும் வீட்டில் பேச்சுச் சத்தம் கேட்டபடி இருந்தது. தம்பியின் ஐந்து நண்பர்களும் மனைவி பிள்ளைகளும் கூட இரவு பதினோருமணி வரை எம்முடன் இருந்து கதைத்து தாமே எல்லா வேலைகளையும் செய்து, அதன் பின் வீட்டுக்குப் போவார்கள். அம்மாவின் ஒன்றுவிட்ட தங்கை அம்மாவின் நெருங்கிய நண்பி. அவரே அம்மாவின் அருகில் தூங்கி எழுவது கடந்த மூன்று நாட்களும். அம்மா தன் பக்கம் படுக்க சின்னம்மா த…

  21. உன்னால் முடியும் தம்பி -------------------------------------- இவ்வளவு மலிவாக விமானச்சீட்டை வாங்கி விட்டோமே என்ற சந்தோசம் அமெரிக்காவிலிருந்து கனடா வந்த விமானப் பயணத்திலேயே தொலைந்து போயிருந்தது. அது இன்னொரு கதை. இது அதே மலிவு விலையில் கனடாவிலிருந்து திரும்பி அமெரிக்கா போகும் கதை. எங்கள் நான்கு பேர்களுக்கும் விமானத்தின் நாலு இடங்களில் நடு இருக்கைகளை கொடுத்திருந்தார்கள். கனடா விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கைகளை மாற்ற முற்படும் போது, ஒவ்வொரு புது இருக்கைக்கும் பயணச்சீட்டுக்கு கொடுத்திருந்த அளவில் கட்டணம் மீண்டும் கேட்டார்கள். சரி, விமானநிலையத்தில் போய் இலவசமாகக் கேட்டுப் பார்ப்போம் என்று விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். கீழே நின்றவர்கள் பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்…

  22. நான் கண்ட கனவொன்றை (உண்மையிலை கனவு தானோ எண்டு கேக்கப்படாது) உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். (கீறிட்ட இடங்களை நிரப்பி வாசியுங்கோ.) …. யில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின் நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையை நாட்டின் தலைவர் …. தற்போதும் … மாளிகையிலேயெ தங்கியிருப்பதாகவும் அவரைக் கைது செய்வதற்கு இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் எனினும் ஜனாதிபதிக்கு விசுவாசமான ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்குத் இராணுவத்திற்கும் இடையில் சண்டை இடம்பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. பிந்திக் கிடைத்த செய்தியொன்றின் படி ஜனாதிபதி … காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனின…

    • 0 replies
    • 808 views
  23. கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01 பகுதி: 01 - ஒட்டாவாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை முதன் முதலில் “கடற்கரை அலைந்து திரிந்தோர்” (Beachcombers) ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதர்களே ஆகும். கடற்கரைகளைக் கடந்து, கடலின் வளங்களை உணவாகக் கொண்டு அவர்கள் மெதுவாக ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பின்னர் உலகின் பல பகுதிகளுக்குப் பரவினர் என்பது வரலாறு ஆகும். இதனால், மனித வரலாற்றின் முதல் “நெடுஞ்சாலை”யாக கடற்கரை அமைந்து இருந்தது. அதனாலோ என்னவோ, தாத்தாவும் தன் வெளிநாட்டில் பிறந்து வளரும் பேரப்பிள்ளைகளுக்கு அந்த பெருமை பெற்ற “நெடுஞ்சாலை” வழியாக இலங்கை சுற்றிலாவை ஆகஸ்ட் 2025 இல் ஆரம்பிக்க முடிவு செய்தார். ஆக…

  24. என் விழியே......... என்று ஆரம்பித்த அந்த கடிதத்தின் ஆரம்ப வரிகளை வாசித்தபோது அவளின் மனதில் இருந்து எழுந்த மெல்லிய நடுக்கம் உடலெங்கும் பரவி பெருமூச்சாக வெளிவந்தது. கடிதம் முழுவதையும் வாசிக்கவேண்டும் போலவும், அப்படியே அந்த கடிதத்தை கண்களில் வைத்து சத்தமிட்டு அழவேண்டும் போலவும் இருந்தது ரேவதிக்கு. தன்னுணர்வில்லாமல் கடிதம் கிடந்த அந்த கொப்பியை மூடியவள், ஒரு உந்துதலால் கொப்பியின் முதல் பக்கத்தை திறந்து பார்த்தாள். "மறத்தல் கொடுமையானது அதிலும் கொடுமையானது மறந்தது போல நடிப்பது" என அவளின் கையெழுத்தில் எழுதப்பட்டு இருந்தது. தனக்கு மட்டும் கேட்கக்கூடியவாறு அந்த வரிகளை வாசித்தவளுக்கு, முகத்தில் அறைந்தது போல இருந்தது அந்த வரிகள். அறையின் புழுக்கமும், ப…

  25. புன்னாலைக்கட்டுவன் பெற்ற புலிவீரன் மேஜர் தமிழரசன் (டொச்சன்) நவம்பர் 15, 2013 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். Edit Post (இயற்பெயர் - கந்தசாமி.ஜெயக்குமார்) வீரப்பிறப்பு- 21.06.1966 – வீரச்சாவு – 24.11.1992 வடக்குப்புன்னாலைக்கட்டுவன் 80களில் விடுதலைப்புலிகளை ஆதரித்த ஊர்களில் ஒன்று. இங்கு பல ஆரம்பகால விடுதலைப்புலிகளின் வரலாறும் பலரது வரலாற்றின் வேர்களும் பரவியிருக்கிறது. தலைவர் பிரபாகரன் வந்து தங்கி வாழ்ந்து அவரைப் பாதுகாத்த ஊர்களில் வடக்குப்புன்னாலைக்கட்டுவனும் ஒன்று. தலைவருடன் வாழ்ந்த போராளிகளில் ஒருவர் தலைவர் நன்றியுடன் ஞாபகம் கொள்ளும் ஒருவர் பற்றி ஒருமுறை உரையாடிய போது சொன்னவை :- புன்னாலைக்கட்டுவனில் தலைவரை பாதுகாத்த குடும்பங்களில் ஒன்று சுவிஸ் குல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.