Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. கி பி அரவிந்தனின் நினைவாக நடைபெற்ற சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற எனது கதை வாழ்வு வதையாகி காற்றுடன் மழையும் சுழன்றாடுவதை அந்த அறையின் சாளரத்தினூடு பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாந்தினி. சாதாரண ஆடை தான் அணிந்திருக்கிறாள். ஊசிக் காற்றில் சாளரக் கண்ணாடிகளையும் ஊடுருவிக் காற்று சிறிதாக உள்ளே வந்தபடி தான் இருக்கிறது. ஆனாலும் சமரில் வெப்பமாக இருப்பதுபோல் அறை கதகதப்பாக இருப்பதனால் குளிரவே இல்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் இந்த நாட்டில் வாழ்ந்து முடித்து விருட்சமாய் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என........ கையில் வைத்திருக்கும் காகிதங்களைக் குனிந்து பார்த்தாள். காகிதங்கள் காற்றுப் பட்டு ஆடுகின்றனவா ?அல்லது த…

  2. ஆடி மாத பின்னிரவு ,அந்த நாள் ஏறித்த கோரவெய்யிலை சற்று தணித்து அதிகாலையை வரவேற்க பச்சை வயல்களை தழுவிய படி மெல்லிய இளங்காற்று தஞ்சாவூரை வருடுகின்றது . உரத்தநாட்டு கிராமம் - தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் ஓரம் ஒரு கீற்றுக்கொட்டகையில் பெற்றோமக்ஸ் விளக்கு ஒளியின் உதவியுடன் சிற்பிகள் சிலர் உளியால் கருங்கற்களை செதுக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். பல்லவர் காலத்தில் இருந்து இன்று வரை இந்த உளிஓசை இங்கு கேட்டுக்குகொண்டுதான் இருக்கு . கொட்டகையை சுற்றி எங்கும் பெரிய பெரிய கருங்கற்கள் தீட்டபடாமல் நீண்டுகிடக்கின்றன. அங்கிருக்கும் ஒரு பெரிய கருகங்கல்லில் தலைக்கு கையை கொடுத்தபடி சாய்ந்திருகின்றான் சாரங்கன், அவனருகில் இருந்து இடது கைவிரலை ஆட்டிய படி எதையோ அழுத்திசொல்லும்…

    • 0 replies
    • 1k views
  3. Started by arjun,

    'Hello " "Is Kulan there pls" "Speaking" "குலன் நான் இங்க பிரேம்" ... "பிரேம்" ? "பெல்ஜியம் பிரேம் ". "சொல்லும் பிரேம் எப்படி இருக்கின்றீர் ? இப்பவும் பிரசல்ஸ் தானே " ? "பிரேசெல்சில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கிராமத்திற்கு இடம் மாறிவிட்டேன் ,இப்ப கனடாவில் தான் நிற்கின்றேன் .சின்ன உதவி ஒன்று தேவை .யாரிடம் கேட்கலாம் என்ற போது உம்மிட நினைவுதான் வந்தது அது தான் போன் அடித்தேன்". 'எப்படி தொலைபேசி இலக்கம் கிடைத்தது ,என்ன விஷயம் சொல்லும் ?" "சும்மா கூகிளில் உமது பெயரை போடவே தொலை பேசி இலக்கம் வந்துவிட்டது .நான் டொராண்டோ ஹில்டனில் நிற்கின்றேன் .நேரில் வந்து சந்தித்து கதைத்தால் நன்றாக இருக்கும் ". "ஏதும் பெரிய பிரச்சனையோ ?" "அப்படி பெரிதாய் ஒன்றுமில்லை , எனத…

    • 35 replies
    • 3.5k views
  4. ஆகஸ்ட் இரண்டு -------------------------- சந்தியில் நண்பன் ஒருவன் பலசரக்கு கடை வைத்திருந்தான். அந்த நாட்களில் ஒரு நாளின் சில பகுதிகளை அங்கே செலவிடுவதும் எங்களின் வழக்கமாக இருந்தது. பல சமயங்களில் நண்பனின் இரு சகோதர்களும் கூட அங்கே வியாபாரத்தில் நிற்பார்கள். எங்களுக்குள் ஒரு சில வயதுகளே இடைவெளி. கடை ஒரு அமைவான இடத்தில் இருந்தது. புதிய சந்தைக் கட்டிடத்தில் சந்தியை நோக்கிய திசையில் கடை இருந்தது. கடையில் இருந்து பார்த்தால் சந்தி முழுவதும் தெரியும். அப்பொழுது நான் சில தனியார் கல்வி நிலையங்களில் படிப்பித்துக் கொண்டிருந்தேன். மிகுதி நேரங்களில் இந்தக் கடை, பந்தடி, கடற்கரை, கோவில் வீதி, சந்தியில் மற்றும் ஊரில் இருக்கும் திண்ணைகள், கல்யாண வீட்டுச் சோடனைகள…

  5. Started by putthan,

    சுன்னாகம் ரயில் நிலையத்தில் வழமைக்கு மாறாக அன்று சன நடமாட்டம் அதிகமாக இருந்தது.வழமையாக பாடசாலை விடுமுறை நாட் களிலும்,கோயில் திருவிழா காலங்களிலும் தான் வழமைக்கு மாறாக சன நடமாட்டம் இருக்கும் ஆனால் இன்று ஏன் இப்படியிருக்கு என்ற வினா எனக்கும் , அப்பாவுக்கும் ஏற்பட்டது "பள்ளிக்கூட விடுதலை விட்டாச்சோ" "இல்லை பப்பா" "ஏன் இவ்வளவு சனமாக இருக்கு,ரெயினில இருக்க இடம் கிடைக்குமோ தெரியவில்லை,இப்படி தெரிதிருந்தால் முதலே கே.கே.எஸ் க்கு போய்யெறியிருக்கலாம்" "நான் முன்னுக்கு ஒடிப்போய் ஏறி இடம் பிடிக்கிறேன் நீங்கள் பின்னுக்கு வாங்கோ" "நீ ஒன்றும் ஒடிப்போய் இடம் பிடிக்கதேவையில்லை ,இடம் இல்லயென்றால் நின்று கொண்டு போகலாம் ஒடிப்போய்யெறி கை காலை முறிச்சுப்போடதை" தந்…

    • 20 replies
    • 4.1k views
  6. கப்டன் றோய் 22 வது வருட நினைவுகளில்....! Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Monday, December 31, 2012 comments (0) "ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே....இசைநெஞ்சே" இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும். அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :- 'வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் வயல் வெளிகள் மீது கேட்குமா-இது வல்லை வெளி தாண்டிப் போகுமா வயல் வெளிகள் மீது க…

    • 25 replies
    • 4.2k views
  7. திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அறைகட்டி சேமிக்கும் தேனி. அலகால் தும்பெடுத்து அந்தரத்தில் கூடமைத்து உள்ளே குஞ்சு பொரித்து உயி வாழும் தூக்கணாம் குருவி. சுறு சுறுப்பாக எழுந்து வரிசைகட்டி வாழ்வதற்காக உணவெடுத்த…

  8. Started by putthan,

    "நெக்ஸ்ட் பிளிஸ்" என்ற அழ‌கிய குரலுக்கு சொந்தகாரியான அழகி என்னை அழைக்க நானும் "‍‍‍ஹாய்" என்று சொல்லியபடியே இருக்கிற பல் எல்லாத்தையும் காட்டிகொண்டு பயணப்பொதிகளை இழுத்து கொண்டு அவள் இருக்கும் கவுன்டர் அருகே சென்று கையில் ஆய‌த்தமாக வைத்திருந்த பாஸ்போர்டையும் விமான டிக்கட்டையும் கொடுத்தேன் .புன்முறுவலுடன் வாங்கியவள் சகலதும் ச‌ரியாக இருக்கின்றதா என பார்த்தபடியே பொதிகளை நிலுவையில் வைக்கும்படி சொன்னாள் . த‌ராசு 35 கில்லோ காட்டியது.முப்பது கில்லோ தான் கொண்டு போகமுடியும் மிகுதியை நீங்கள் எடுக்க வேணும் என்றாள்.கை பொதியில் எவ்வள‌வு இருக்கு என்று பார்ர்ப்போம் அதையும் தராசில் வையுங்கோ என்றாள் . மெதுவாக தூக்கி வைத்தேன் அது ஒன்பது கில்லோ என்பதை காட்டியது.கை பொதி ஏழு கில்லோ தான் அ…

  9. கழுத்தில் மின்னும் தங்க சங்கிலி, கறுத்த கண்ணாடி, வார்த்தைக்கு வார்த்தை வெக்கை, ஊருக்கு போனா செலவு அடுத்தது அங்க இருக்கிற எல்லாருக்கும் ஏதாவது குடுத்திட்டு வரவேணும். போகாமலே இருக்கலாம், ஆனா போறம். „அண்ண விமான பற்றுச்சீட்டு கொழும்புக்கு என்ன விலையண்ண ஏழாம் மாசம் 9ம் திகதி போய் 22 23 வாற மாதிரி?“ „தம்பி இப்ப தை மாசம், ஆனா நிறைய சீட் இல்லை. எத்தின பேர் நீங்க?“ „நான் என்ற வைப் அடுத்தது என்ற இரண்டு சின்ன பிள்ளைகள், மகனுக்கு 7 வயசு மகளுக்கு 4 வயசு. அவாவ மடியில வச்சு இருக்க ஏலாதா?“ „இல்ல தம்பி அவாக்கு புள் டிக்கெட், தலா ஒருத்தருக்கு 850.- சுவிஸ் பிராங் வருது.“ „என்ன அண்ண இந்த விலை சொல்லுறீங்க? „நான் ஒண்டும் பண்ண ஏலாது, விடுமுறை நேரம், இது எமிரேட்ஸ் விமானம், கத்தார்…

  10. அவனுடைய கையில் UK வீசா அலுவலகத்தால் கொடுக்கப்பட்ட ஆவண உறை இருந்தது. அந்த மூடிய உறைக்குள்தான் வீசா கிடைத்திருக்கின்றதா இல்லையா? என்ற அவனதும் அஞ்சலியினதும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முடிவும் அடங்கியிருந்தது. ஒருவித படபடப்போடு அதைத் திறந்தவனுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மிகப் பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. சில அநாவசியக் காரணங்களை வீசா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களாகக் கூறி அதை மூன்று பக்கத்தாள்களில் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தனர். 'அஞ்சலியுடன் கூடிய விரைவில் சேரப்போகிறோம்' என்ற கனவில் இருந்தவனுக்கு.... 'அது இப்போதைக்கு இல்லை' என்பது... மிகப்பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் கொடுத்திருந்தது. இவன் தன்னை நினைத்து கவலைப்பட்டதைவிட... அஞ்சலி இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள…

  11. Started by putthan,

    பாடசாலையில் எனது பிள்ளைகளின் பட்டமளிப்பு விழா பரிசளிப்புவிழா போன்றவற்றுக்கு அடியேன் போவது வழக்கம்.நிகழ்ச்சி தொகுப்பாளராக பாடசாலை மாணவத் தலைவரும் உபதலைவரும் கடமையை செய்வது வழக்கம். சரியான நேரத்திற்கு நிகழ்ச்சிகளை தொடங்குவதில் உந்த வெள்ளைகள் கெட்டிக்காரங்கள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேணும்.அவங்களோட சேர்ந்த எங்கன்ட வாரிசுகளும் நேரவிடயத்தில் ஒழுங்காக கடைப்பிடிக்கினம் என்பதில் ஒரு சின்ன சந்தோசம். நானும் போயிருக்க, மாணவத்தலைவன் ''we would like to acknowledge the traditional custodians of this land, of elders past and present.'' நானும் அவுஸ்ரெலியாவுக்கு வந்து கொஞ்ச காலம் ஒடிவிட்டது ,உந்த பூர்வீக குடிகளை கணடதை விட வந்தேறுகுடிகளை கண்டதுதான் அதிகம்.ஒன்றுக்கு பத்தா…

    • 10 replies
    • 3.3k views
  12. என் இல்லம் சொல்லும் சேதி இது... என் முற்றத்தில் மூழியாய் எறிக்கிறது முழுநிலவு. சற்றைக்கொருதரம் தன்னை ஸ்பரிசிக்கும் திரைச்சீலைகளின் உரசல்களை இழந்த சாளரத்து ஓரங்கள். தலைவாசல் கதவிழந்து தனிமையில் தவிக்கும் நிலைப்படிகள். மௌனித்துக் கிடக்கும் சமையலறை மேடை. பொலிவிழந்து புகைக்க மறந்த சோகத்தில் புகைபோக்கி. ஏஞ்சல்கள் ஆடும் ஊஞ்சலை எண்ணி ஏங்கும் வேப்பமரம். சிறு சோறு சமைக்கும் சில்வண்டுகளைத் தேடும் சிறு தாழ்வாரம். சுற்றிப் பறந்த ( த) தும்பிகளைத் தேடும் கம்பி வேலிகள். தேவதைகளைத் தேடி தேகம் இளைத்த நிலைக் கண்ணாடி;. ஓளித்து விளையாடிய தோழர்களின் தோள்சாயத் துடிக்கும் குட்டை மதில். ஓண்டிகாகி உறவிழந்து நிற்கும் ஒற்றைப்பனை. உல்லாசமிழந்து உருக்குலைந்த மண்டபம். ஒப்பனை இழந்த…

  13. Started by arjun,

    ஏதேதோ நினைவுகள் வந்து மனதை தொடர்ந்தும் குழப்ப நித்திரை கொள்ளமுடியாமல் படுக்கையை விட்டு எழும்பி படிகளில் இறங்கி வீட்டின் சிற்றிங் ரூமிற்கு வருகின்றேன் .அக்காவின் மகன் எனக்கு முதலே எழும்பிவந்து தொலைகாட்சியில் சத்தத்தை குறைத்து வைத்து Sesame Street பார்த்துக்கொண்டு இருந்தவன் என்னை கண்டதும் சத்தம் போடவேண்டாம் என்று வாயில் விரலை வைத்து சிக்னல் போடுகின்றான் .அப்படியே அவனை தூக்கி மடியில் வைத்தபடி நானும் Elmo ,Cookie Monster களின் விளையாட்டுகளை ரசித்தபடி அவனுடன் சேர்ந்து Sesame Street பார்க்க தொடங்குகின்றேன் . இந்தியாவால் லண்டன் வந்து சேர்ந்து இருமாதங்கள் ஆகின்றது .அக்கா வீடுதான் வாசம் .அத்தானும் அக்காவும் வாரநாட்களில் வேலை என்று அலைவதால் வாரவிடுமுறையில் பிந்தித்தான் எழு…

    • 24 replies
    • 2.5k views
  14. "தந்தை எனும் தாய்" [இன்று 15/06/2024: பிறந்த நாள் நினைவு கூறல்] தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகளும், அதிலும் குறிப்பாக தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிப்பதும் ஆகும். உதாரணமாக, “அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“ “எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“ மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் [தந்தையில் தாய் இருப்பினும்] அன்றாடச் சிக்கல்கள் அவரைத் [பிள்ளைகளை] தாயற்ற குழந்தை போலத் துன்புற வைத்த சூழலை தவிர்க்க, குழந்தை செய்யும் குற்றம…

  15. "ரதியின் கனவு" [போதை பொருள் மற்றும் பாலியல் விழிப்புணர்வு] வடக்கே கிளிநொச்சியையும் கிழக்கே இந்துசமுத்திரத்தையும், மேற்கே மன்னாரையும், தெற்கே திருகோணமலை மற்றும் வவுனியாவையும் எல்லைகளாக கொண்ட, சங்க கால நிலக்கூறுகளின் பண்பை ஒத்த நானிலத்தன்மை கொண்டதாகவும் உள்ள முல்லைத்தீவில் தனது சிறு வீட்டில் பெற்றோர் சகோதரர்களுடன் வாழும் இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி இரண்டு அகவை மதிக்கத்தக்க, எழுத்தாளரும் சமூக தொண்டாளருமான இளம் பெண் ரதி, காலை தேநீரை அருந்திக் கொண்டு, ஹால் இல் இருந்த தொலைக்காட்சியில் அன்றைய செய்திகள் கேட்டுக் கொண்டு இருந்தார். கிழக்கு வானம் சிவந்து சூரியன் மெல்ல மெல்ல கீழ்வானில் இருந்து மேலே ஏறிக் கொண்டு இருந்தது. பறவைகள் தமது கூட்…

  16. கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 கிறிஸ்துமஸ் ஈவ் [christmas eve] சந்திப்பு டிசம்பர் 24 அன்று, யாழ்ப்பாணத்தின் அன்றைய மாலை மெதுவாக மங்கிக் கொண்டிருந்தது. நாட்காட்டியில் [காலண்டரில்] அது கிறிஸ்மஸ் ஈவ் [இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள்] என்று எழுதப்பட்டிருந்தாலும், யாழின் வானம் அதை எந்த மத நாளாகவும் கருதவில்லை. அது பைபிளில் காணப்படும் தேதி அல்ல. கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததாக ஒருபோதும் பைபிளில் கூறப்படவில்லை. அது ஒரு முன்மொழிவு மட்டுமே. அதுவும் கிறிஸ்து இறந்து 340 ஆண்டுகளின் பின்பே. அதனாலோ என்னவோ அது எப்போதும் போலவே — காற்றோடு, உப்புக் காற்றின் சுவையோடு, மண்ணின் நினைவோடு இருந்தது. ஆனாலு…

  17. வழமைபோலவே காலைக் கதிரவன் குதூகலத்துடன் தன் கதிர்பரப்பிப் பூமியின் வெப்பத்தை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டான். இரண்டு நாட்கள் பெய்த கடும் மழையில் நிலமும் மரங்கள் செடிகளும் மகிழ்வுடன் காலை வெய்யிலை வரவேற்றுக் குதூகலிக்க ஜீவாவின் மனம் மட்டும் மகிழ்விழந்து போர்களமாகி எதிரும் புதிருமான நிகழ்வுகளை அசைபோட்டு சலிப்படைந்திருந்தது. இனியும் நான் இப்படியே இருக்கமுடியாது. எனக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது. கானல் நீரை நம்பி எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் காத்திருப்பது?? பண்பாடு கலாச்சாரம் எல்லாம் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்காக என் வாழ்க்கையை நான் வாழாது ஏன் சமூகத்துக்குப் பயந்து காலத்தை வீணடிக்கவேண்டும். இப்பவே வயது முப்பதாகிவிட்டது அரைவாசி இளமையைத் தொலைத்தாகிவிட்டது. இனியும் அம்மா, அ…

  18. எனக்கு மனதில் பயத்துடன் கூடிய ஒரு பெருமிதமும் தோன்றியது. செய்வது திருட்டு. இதற்குள் என்ன பெருமிதம் என்று மனதில் எண்ணம் எழ மனதுக்குள்ளேயே சிரித்தும் கொண்டேன். என்றாலும் இது ஒரு அசட்டுத் துணிவு என்பதும் தெரிந்தே தான் இருந்தது. அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பா என்று ஒரு பயம் ஏற்பட்டாலும் இப்படி திருட்டுத்தனமாய் பள்ளிக்கூடத்தைக் கட் பண்ணிவிட்டு படம் பார்க்க வருவது ஒரு திரில்லான அனுபவமாகத்தான் இருக்கு என எண்ணிக் கொண்டது மனது. இருந்தாலும் அடிமனதில் யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சம் ஓடிக்கொண்டே இருந்தது. தனிய நான் வரவில்லைத்தான். இன்னும் மூன்றுபேர் மாலி, நந்தினி, ஹேமா, ரதி இத்தனை பேருடன் தான் வந்திருக்கிறேன். பாடசாலைக்குப் பக்கத்தில் இருக்கும் மாலியின்…

  19. மறக்க முடியாத நினைவுகள்...  ஒரு காலத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி முடிய பல மணிநேரம் இருந்து பல விடயங்களையும் கதைத்த இடம். இந்த மதில் ஓரத்தில் ஒரு சீமெந்திலான கட்டு இருந்தது (அது இப்ப அந்த இடத்தில இல்லை. அதையும் யாரோ தூக்கி கொண்டு போய் விட்டார்கள்) அதில்தான் நாங்கள் இருந்து கதைப்பது. இந்த மதிலுக்கு முன்பாக ஒரு 8 பரப்பு காணி. அதுக்குள் 2 புளியமரம், ஒரு வேம்பு, ஒரு மாமரம், ஒரு செரிபழ மரம்.. இதுக்கு நடுவில்தான் கிரிக்கெட். கண்னுக்கு பந்து தெரியும்வரை விளையாட்டுத்தான். யாழ் நகரில் உள்ள முன்னனி பாடசாலை மாணவர்கள் எல்லாம் பிற்பகலில் கூடும் இடம். கலகலப்புக்கும் நகைச்சுவை கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிலவேளைகளில் ஒரு அணியில் 15 பேர் கூட இருப்பார்கள்.. …

  20. அந்த வேப்ப மரத்தின் நிழலில், சாக்குக்கட்டிலில் படுத்திருந்த சந்திரனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது! ஒரு நீண்ட காலச் சொகுசு வாழ்க்கை அவனது உடலை இன்னும் மாற்றிவிடவில்லை என நினைத்தபோது, தனது உடலைப்பற்றிக் கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது! பல வருடங்களுக்கு, முன்பும் இதே இடத்தில். பல தடவைகள் மதியச் சாப்பாட்டின் பின்பு படுத்து உறங்கியிருக்கிறான்! அப்போது, அருகே இருந்த தென்னம் பிள்ளையில், எட்டிப்பிடிக்கலாம் போலச் செவ்விளனிக் குலைகள் தொங்கும்! அவற்றின் அழைகைப் பல முறை பார்த்து வியந்திருக்கிறான்! ஒரு கவிஞனாக இருந்திருந்தால், அவனது அந்த வயதின் கற்பனைகள், அளவில்லாத, அர்த்தமில்லாத ஆயிரம் கவிதைகளையாவது புனைந்திருக்கும் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை! இப்போது அந்தத…

  21. Started by Innumoruvan,

    மலையின் மஞ்சள் கலந்த மண்ணிறம் மாயத்தோற்றந் தந்தது. மலையினைக் கையால் உடைத்து வாயில் போட்டு மென்று தின்ன முடியும் என்று தோன்றியது. மலை வெண்ணையென்றும் நான் கண்ணனென்றும் கூட ஒரு தடம் மனதுள் விரிந்தது. கண்ணன் என்ற எண்ணம் சிந்தையில் வந்ததும் கோபிகை தோன்றி விடுகிறாள். குதிரை வால் குடுமியில் ஏதோ ஒரு மாந்திரீகத் தன்மையிருக்கிறது என்பது எனது அபிப்பிராயம். கறுத்த முடிப் பெண் குதிரைவால் குடுமி போட்டு என் முன் நடப்பின் என் மனம் ஒரு முகப்பட்டு அவள் முகம் பார்க்கத் துடிப்பது எனக்குப் பரிட்சயம். உடற் பயிற்ச்சி நிலையத்துள் குதிரைவால் குடுமியுடன் ஒரு இளையவள் குதிரையாய் வந்தாள். காதிற்குள் “எம்.குமரன் சன் ஒவ் மகாலட்சுமி படத்தின் ஐயோ ஐயையோ” பாடல் நிஜமாகவே ஒலித்தபடி நான் ஓடிக்கொண்…

  22. Started by pri,

    இலங்கையில் ஜேபி (justice of peace) என்று பதவி ஒன்று இருக்கிறது. சுத்த தமிழில் சமாதான நீதிவான் என்று சொல்வார்கள். கையொப்பம் போடுவது அவர்களின் வேலை. சில ஜேபிகள் காசு பார்க்காமல் கையெழுத்து போடுவார்கள். "இப்ப சரியான பிசி " பிறகு வரும்படி சொல்லி படம் காட்ட மாட்டார்கள். அவர்களை பொதுவாக நல்ல ஜேபி என்று சொல்வதுண்டு. ஜேபியாக என்ன படிக்க வேண்டும் என்பது மட்டும் இன்றைவரைக்கும் யாருக்கும் தெரியாத பரம இரகசியம். எங்கள் ஊரில் ஒரு ஜேபி இருந்தார். பகலில் பாடசாலையில் வேலை செய்வார். பின்னேரத்தில் ஜேபி வேலை பார்ப்பார். இருட்ட முன்னம் போனால் எல்லா படிவத்தையும் படித்து பார்த்து தேவையான இடத்தில் சீலை குத்தி முத்து போன்ற எழுத்தில் கையொப்பம் வைப்பார். கொஞ்சம் நேரம் செல…

    • 0 replies
    • 1.9k views
  23. Started by putthan,

    வயசு போகப்போக பக்தி முத்தி பரவச நிலையை அடைய துடிப்பது மனித இயல்பு .அது அடியேனை ஆட்டி படைக்க தொடங்கி சில அறிகுறிகள் தென்படவே என்னை அறியாமலே சில செயல்களை செய்ய தொடங்கினேன் .காலையில் எழுந்தவுடன் "முருகா நீயே முதல்வன் நீ இன்றி எதுவும் அசையாது" என கொஞ்சம் சத்தமாக சொல்ல பக்கத்தில படுத்திருந்த பெட்டர்காவ் "என்னப்பா ஆர் யூ ஆல்ரைட்" என கேட்க நானும் "ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம் "என கண்ணை மூடி கட்டிலில் அமேர்ந்தேன் திடுக்கிட்டு எழுந்து அருகில் வந்து " டொக்டரிட்ட போவமே ,குளிச்சு வெளிக்கிடுங்கோ நான் லீவு போட்டுவிட்டு கூட்டிகொண்டு போகிறேன்" "இப்ப ஏன் டொக்டரிட்ட உமக்கு விசரே" "எனக்கோ உங்களுக்கோ...." என ஆச்சரியதுடனும் பரிதாபமாகவும் பார்த்து கேட்டாள். " எம் பெருமா…

  24. "திருந்தாத உள்ளம்" "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!" எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர். நான் ச…

  25. வாழைப்பூ வடை -------------------------- வீட்டுக்கு வெளியே என்னை இருக்க வைத்திருப்பதற்கு அவன் ஏற்கனவே இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டிருந்தான். வீட்டுச் சுற்றுமதிலுக்கும் வெளியே இரண்டு பிளாஸ்டிக் கதிரைகளையும், ஒரு சின்ன பிளாஸ்டிக் மேசையும் போட்டிருந்தான். எனக்கு துடக்கு என்று அவன் சொன்னான். இறந்தவர் எனக்கு ஆண் வழியில் உறவுமுறை என்பதால் இந்த துடக்கு 31 நாட்கள் வரை இருக்கும் என்றான். அவனின் வீட்டில் ஏதோ கோவில் விரதமோ அல்லது மாலை போட்டிருக்கின்றார்கள், அதனால் என்னை வீட்டின் உள்ளே விடவில்லை என்றும் சொன்னான். நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அழிவதும் அரிது, அவற்றை துடக்கு கூட தொட முடியாது போல என்று நினைத்துக் கொண்டே கவனமாக கதிரையின் உள்ளே வசதியாக உட்கார மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.