யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
40 topics in this forum
-
தைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில் TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின் அளவு குறைந…
-
- 391 replies
- 59.4k views
- 4 followers
-
-
நேற்று காலையில் பாலைவனத்தில் திட்டப்பணிகளை ஆய்வு செய்யும்போது மனதில் ஒரே தவிப்பு..! 'நாளை ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்போகுதே.. ஒரு பயலும் கடையை திறக்க மாட்டானுக..சாப்பாட்டுக்கு என்ன செய்வது..?' இங்கே ரமலான் நோன்பு மாதத்தின்போது தினமும் உணவகங்கள் மாலை ஏழு மணிக்கு மேல்தான் சில கடைகள் திறந்தாலும் திறக்கும், ஆனால் மறுபடியும் எட்டு மணிக்கு கொரானா ஊரடங்கால் மூடிவிட வேண்டும்..! காலை பத்து மணியிலிருந்து தமிழகத்திலிருக்கும் என் மனைவியிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசியில் பல அறிவுறுத்தல்கள், சமையல் குறிப்புகள், கெஞ்சல்கள்..! "சரி.. சரி..சரியம்மா.. வேலை முடிந்தவுடன் போய் சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுறேன்.. வேலையில் இருக்கிறேன், நீ…
-
- 70 replies
- 10.7k views
- 2 followers
-
-
(ஜேர்மன் நிதியமைச்சர்) என்னுடைய... தலை மயிரும், கனக்க வளர்ந்து... காதை மூடும் போல இருப்பதை பார்க்க,அரியண்டமாக இருந்தது. வழக்கமாக போகும்... "மசூதி சலூனுக்கும்" போக பயமாக இருந்த படியால்... சென்ற.. திங்கள் கிழமை, ஈஸ்டர் லீவு என்ற படியால்.... பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது... 25 வருசத்துக்கு முதல், அவர்களுக்கு... தலைமயிர் வெட்ட வாங்கின "மெசின் ஒன்று"... நில அறையில்... இருந்தது நினைவுக்கு வர, அதை எடுத்துக் கொண்டு வந்து, முயற்சி பண்ணிப் பார்த்தால்... படத்தில் உள்ளதை போல, வந்திட்டுது. இனி... யோசிக்க, நேரமில்லை என்று விட்டு... பிள்ளைகளும் வீட்டில் நின்ற படியால்.... "அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?... என்று, ஒருமுறை தா…
-
- 74 replies
- 8.4k views
- 1 follower
-
-
நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள். 'வடிவு, நீங்கள் நல்ல வடிவு' 'உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ' 'உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு' 'உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்' 'மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ' 'அக்கா, ஐ லவ் யூ" இப்படித்தான் அந்தச் செய்திகள் என்னை மயக்கும் எண்ணத்தில் எழுதப் பட்டிருந்தன. நான் Teenage இல் இருந்தி…
-
- 39 replies
- 5.4k views
-
-
உ. நிலம் தழுவாத நிழல்கள். நிலம் ..... 1. அழகிய பாரிஸ் நகருக்கு அணிகலனாய் விளங்கும் ஷேன்நதி கடல் காதலனின் கரங்களில் தவழ இரு கரைகளின் தழுவலில் அடங்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். ஆங்காங்கே ஓரிரு சுற்றுலாப் படகுகளும் சுமைதாங்கிப் படகுகளும் நதியன்னைக்கு வலிக்காமல் நீரை விலக்கி நகர்ந்து செல்கின்றன. படகின் மேல் தளத்தில் சில சிறுவர்கள் நின்று வீதியில் போய் வருகிறவர்களையும், கரையோர பூங்காக்களின் கதிரைகளில் இருப்பவர்களையும் பார்த்து குதூகலத்துடன் கையசைத்துக் கொண்டு செல்கின்றனர். …
-
- 73 replies
- 8.3k views
-
-
டிஸ்கி : இந்தாண்டு நம்மளும் ஏதாவது கிறுக்குவோமே..! என்ற முயற்சிதான்..கீழே..! ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்.. புகுமுக வகுப்பை (PUC) முடித்துவிட்டு, மதிப்பெண்கள் வெளிவரும் நேரம்.. 'திக் திக்' மனதோடு அடுத்த எதிர்கால படிப்பை 'எந்தப் பிரிவில் தொடரலாம்..?' என மனதில் ஆயிரம் கேள்விகள்..குழப்பங்கள்..! தோட்டத்திற்கு சென்றால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், அக்கம்பக்கம் உள்ளோர் எனது ஐயாவிடம் "மைனர் அடுத்து என்ன செய்யப்போறார்..?" எனக் கேள்விகள்.. மதிப்பெண்கள் வரும்வரை என்னிடம் பதிலில்லை.. ஒருமாத கால காத்திருப்பிற்கு பின் பெறுபேறுகள் வந்தாயிற்று.. எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள்..! நிச்சயம் எனது கனவான பொறியாளராக முடியும…
-
- 63 replies
- 10k views
- 1 follower
-
-
செயற்கை சுவாசக்கருவி மூலம் மூச்சு உள்ளே சென்று வெளியே வருகின்றது. ஒவ்வொரு மூச்சுமே ஒரு போராட்டம். சுயநினைவு திரும்புமா? தெரியாது. ஆனால், திரும்பவேண்டும். பின்பு...? கண்கள் விழிக்கவேண்டும். சாதுவாக அல்ல, அவை நன்றாய் அகல விழிக்கவேண்டும். ஆட்கள், பொருட்கள் தெளிவாய், துல்லியமாக தெரியவேண்டும். மேலும்? காதுகள் கேட்கவேண்டும். இரண்டு காதுகளும் கேட்கவேண்டும். மனித குரல்கள், குருவியின் ஓசை, கோயில் மணியோசை, வாகன இரைச்சல் அனைத்துமே காதுகளில் ஒலிக்கவேண்டும். இவை மட்டும் போதுமா? இல்லையே. படுத்த படுக்கையாக சரிந்த ஆள் மீள எழவேண்டும். எழுந்து நடமாடவேண்டும். நாளாந்த வாழ்க்கை வழமைக்கு திரும்பவேண்டும். சிரித்து கதைத்து பேசவேண்டும். ஒன்…
-
- 11 replies
- 2.8k views
-
-
எனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய மரண பயம். - தமிழ் சிறி.- 2019´ம் ஆண்டு விடை பெற்று, செல்லும் போது..... 2020´ம் ஆண்டை வரவேற்க உற்சாகமாக இருந்த நேரம். இப்படியான... ஆண்டு மாற்றங்கள், நடக்கும் தருணங்களில்.... எனது பிள்ளைகள்... சிறுவர்களாக இருக்கும் போது.. அவர்களுக்கும், எனக்கும்.. உற்சாகமாக இருப்பதற்காக, நிறைய... வாண வேடிக்கைகள் செய்து, புத்தாண்டை வரவேற்போம். இப்பிடி, "காசை கரியாக்தேங்கோ... " என்று, மனைவி சொன்னாலும், வழக்கம் போல்... ஒரு காதால்.. வாங்கி, மறு காதால், வெளியே விட்டு விடுவேன். அதை நான்... கணக்கில் எடுப்பதில்லை. (அதுதான்... காதல், என்பார்கள்) ஆனால்.... கடந்த சில ஆண்டுகளாக, பிள்ளைகளுக்கு படிப்பில்... கவனம் செலுத்…
-
- 20 replies
- 2.8k views
- 1 follower
-
-
கொரோனா என்னும் கொடுநோய் காணுமிடமெங்கும் கரகமாடுகிறது கொள்ளைபோல் வந்து மனங்களை கொதிநிலையில் கதிகலங்க வைக்கிறது கூட்டம்கூட முடியவில்லை கொஞ்சிப்பேசவும் முடியுதில்லை குடும்பமாய்க் கூட நாமெல்லாம் குதூகலிது மகிழ்ந்திருக்க முடியாது கொடுங்கோல் ஆட்சியாளனாய் கொத்துக்கொத்தாய் மனிதர்களை கொன்றேதான் குவிக்கின்றது வைரஸ் என்னும் விழியில் தெரியா சிறுகிருமி வல்லவர்களைக் கூட விழிபிதுங்க வைக்கிறது மானிடர்கள் கண்ட மதி நுட்பமெல்லாம் பேரிடரில்க் கூடக் கைகொடுக்க மறுக்கிறது மாளிகையில் வாழும் மகாராணி கூட மனங்கலக்கம் இன்றி இருக்கவா விடுகிறது வீதியில் இருப்போரும் வீடுகளில் இருப்போரும் வேறில்லை என்றேயது வினைகூறி நிற்கிறது வீதியெங்கும் வாகனம் விரைந்த…
-
- 16 replies
- 2.4k views
-
-
விதியே கதை எழுது…….. ( 1 ) வானத்தில் வட்டநிலவு இரவல் ஒளியில் எறித்துக் கொண்டிருந்தது. கட்டிலில் விழி மூடாமல் விழித்திருந்தாள் கவிதா. வானில் ஓடி மேகத்திரையில் முகம் மறைத்து விளையாடிக்கொண்டிருக்கும் வெண்நிலவின் அழகை ரசிக்க மனமின்றி மேகக் கூட்டத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன அவள் விழிகள். ஒரு காலத்தில் வெள்ளி நிலா பவனி வரும் அழகை ரசித்து ரசித்து கவிதை எழுதி அந்த மோகத்தைத் தூண்டுகின்ற முழுமதியின் அழகில் மனதைப் பறி கொடுத்து மனம் லயித்துக் கிடந்தவள் அவள். அதிலும் பனிக்காலம் முழுவதும் பார்க்க முடியாத அந்த நிலவு வசந்தகாலத்தில் பார்க்கக் கூடியதாக மூடிக்கிடந்த சாளரங்கள் திறக்கப்பட்டு திரைச் சீலைகள் விலக்கப்பட்டு வானத்திரையின் நீல வண்ணத்தை ரசிக்கும் யாருக்கும் மனம…
-
- 8 replies
- 2.2k views
-
-
மகளின் 21 வது பிறந்த தினத்துக்குத் தன்னை தான் விரும்பும் மூன்று நாடுகளுக்குக் கூட்டிக்கொண்டு போவீர்களா அம்மா?? செலவும் அதிகம் இல்லை என்றாள். சரி நாம் மற்றவர்கள் போல் ஆடம்பரமாக எதையும் கொண்டாடுவதில்லை. மகளின் சாட்டில் நானும் போய்வரலாம் என்று எண்ணி சரி என்று கூறி இரு மாதங்களுக்கு முன்னர் விமானச்சீட்டுக்களை வாங்கியாகிவிட்டது. மூன்று நாட்கள் ஒரு நாட்டிலும் இரண்டு நாட்கள் இன்னொரு நாட்டிலும் மூன்றாவதாக சுவிசுக்கும் போவதாக ஏற்பாடு. நான் பலதடவை சுவிஸ் போயுள்ளேன். என் கடைக்குட்டி போகாதபடியால் கட்டாயம் அங்கும் தான் போகவேண்டும் என்றதனால் சரி மீண்டும் அந்நாட்டின் அழகை இரசிப்போம் என்று காத்துக்கொண்டிருக்க உந்தக் கொரோனா வந்து தடையாய் நிக்குது. டிக்கற் தங்குமிடம் இரண்டும் சேர்த்து…
-
- 72 replies
- 8.9k views
- 1 follower
-
-
உ. காமரூபினியும் கற்சிற்பியும். அயிரை மீன்கள் உருண்டு பிரண்டு நிரை நிரையாய் விளையாடும் ஆறு. கரையினில் குறுமணல் மேடுதனில் தரையிலே இருந்தது தங்குமோர் குடில். கற்சிற்பியவன் கலங்கி நின்றான் --- கையில் சிற்றுளி கொண்டு செதுக்கி செப்பனிட்ட கற்சிற்பத்தை கண்ணால் வருடியபடி கண்ணில் நீர் ஒழுகியபடி. மெய்தீண்டாது வான் பார்த்து சிந்தனையுடன். அலைபுரண்டோடும் ஆற்றின் கரைபுரண்டு தெறிக்கும் திவலையின் நுரைகளுடன் கையளைந்து நிரை கொங்கைகள் சதிராட நீந்திக் களிக்கும் மங்கையவள் ஈரேழு அகவையவள் இளமைப் பருவத்தின் தலைவாசல் தீண்டுவாள். சிற்றிடை தள்ளாட தண்டை கிண்கிணியென ஒலிக்க சின்ன பாதங்களால் தாவி கரையேறி --- அவள் எடைபோல் குறைந்த உ…
-
- 19 replies
- 3.3k views
-
-
கொரோனோ காலத்தின் கதையொன்று. ---------------------------------------------- போர்க்காலத்தில் பிள்ளைகளை உறவுகளைப் பிரிந்திருந்து அவலமுற்ற அம்மமாக்களும் உறவுகளும் இப்போது கொரோனோ காலத்தை கடந்து செல்ல அடையும் துயரத்தை எழுதவோ விளக்கவோ வேண்டியதில்லை. கொரோனோ காலம் எனக்குத் தந்த அனுபவம் பற்றியதே இப்பகிர்வு. மகள் இத்தாலி றோம் நகரின் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒருவருட கல்விக்காக கடந்த வருடம் போயிருந்தாள். இவ்வருடம் யூன்மாதம் படிப்பு முடிந்து திரும்பவிருக்கிறாள். யேர்மனியில் படித்தவரை மாதம் ஒருமுறை மவளைச் சந்திக்க ரயிலேறிவிடுவேன். அதுபோல மகனையும் சந்திக்க ரயிலேறுவது வளமை. அந்த நாட்களை எண்ணியபடியே எல்லாத் துயர்களையும் கடக்கும் தைரியம் பிள்ளைகளும் அவர்களது சந்திப்புகளும் தா…
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
தனித்திருந்து பார்…… ஏகாந்தம் என்பது இனிமையா? கொடுமையா? என்பது தெரிய வேண்டுமா? எவருமில்லாத உலகில் நீ மட்டும் வலம் வர வேண்டுமா? பூமியின் எல்லைகளுக்கப்பால் பூகோள விதிகளைத் தாண்டி வானவீதியில் இறக்கை விரித்துப் பறக்க வேண்டுமா? தனித்திருந்து பார். கொட்ட முடியாத சோகங்களை கண்ணீரில் கொட்டி கவலைகளை மறக்க வேண்டுமா? எட்ட முடியாத சிகரங்களை கற்பனையில் ஏறி கலகலப்பாய் கரமசைக்க வேண்டுமா? தழுவவும் தலை தடவவும் ஆளில்லாமல் உனக்குள் நீயே உடைய வேண்டுமா? தனித்திருந்து பார் கடந்து போன காலங்களின் களிப்பான நிகழ்வுகளை அசைபோட்டு மனம் ஆர்ப்பரிக்க வேண்டுமா? உறவுகளின் உரசலும் பிரிவுகளின் விரிசலும் தொலைந்து விட்ட காலமும் தோளில் பாரமாகிட வி…
-
- 19 replies
- 5k views
-
-
ஆடாமல் ஆடுகிறேன் என்ன நடந்தது இந்த இளவேனிலுக்கு என்னை ஏன் மறந்தனர் இத்தனைபேரும் நான் என்ன துரோகம் செய்தேன் யாரையாவது வைதேனா? வதைத்தேனா? இல்லை வம்புதான் செய்தேனா? எனக்குள் ஏன் இத்தனை வெறுமை நானோ இளந்துளிர்கால தேடலில் என் தேவதைகளோ ஊடலில்; பூப்பூவாய் எத்தனை பட்டாம் பூச்சிகள் என்னைத்தேடி என்னிடம் நாடி என்னிலே ஆடி நண்பரைக் கூடி மழலைகள்முதல் முதியவர்வரை என் மடிதவழும் உல்லாசம் எங்கே? நானோ தன்னந்தனியாக ஆடிக்கொண்டிருக்கிறேன் வசந்தம் வந்துவிட்டால் என் வீட்டில் சுகந்தம் என்னைச் சுற்றி கண்கொள்ளாக் காட்சிகள் காலாற நடப்பது கைப்பிடித்து மகிழ்வது ஓடிப் பிடிப்பது உடற்பயிற்சி செய்வது மந்திகளாய் தொங்குவது மனம் விட்டுப் பேசுவது மேல…
-
- 12 replies
- 2k views
-
-
எப்ப இளைப்பாரலாம் என்ற சிந்தனையுடன் கட்டிலை விட்டேழுந்தேன்.எனது வயதையும் இளைப்பாறுவதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் வயதெல்லையையும் எண்ணிபார்த்தேன் இன்னும் 10 வருடங்கள் வேலை செய்தால் தான் ஓய்வுதியம் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் .சிறிலங்காவிலிருந்தால் நான் இப்ப பென்சனியர் ஆனால் இங்க பொல்லுபிடிச்சு கொண்டு வேலைக்கு போகவேண்டி இருக்கு என சலித்தபடியே காலைக்கடன்களை முடிக்க தொடங்கினேன். "டேய் நீ சிறிலங்காவிலிருந்தால் உனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்திருக்குமா?அரச உத்தியோகம் இல்லாவிடின் பென்சனே இல்லை".. மனச்சாட்சியின் அதட்டலினால் காலைகடன்களை விரைவாக முடித்து கொண்டு வேலைக்கு புறப்பட தயாரானேன். "இஞ்சயப்பா வரும் பொழுது வூலியில் டொய்லெட் டிசுவும்,தமிழ் கடைகளில் போய் அரிசி…
-
- 10 replies
- 3.3k views
-
-
கலைந்து சென்ற கார்மேகம். கார்குழலில் இருந்து நழுவிய மலரொன்று நர்த்தனமாடுகின்றது அசைந்து வரும் அவள் அசைவுகளில் அவள் நடந்து வருகின்றாள்........! பெருமழையின் தூறல்களில் விழும் சிறு துளிகள் முகமலரில் விழுந்து முன்னழகில் மோட்சமடைகின்றன அவள் ஓடி வருகின்றாள்......! எதிரே பார்த்து புன்னகைக்கையில் என்னிடமும் சிறு மலர்ச்சி மழைநீரில் குமிழ்களாய் மனசுக்குள் சிதறுகின்றன அவள் சிரிப்புடன் வருகிறாள் ........! என்னை கடந்து செல்கையில் என் மனசில் சிறு சலனம் குழந்தையோடும் குடையோடும் என் பின்னே வருகின்றான் அவள் கணவன் அவள் அவர்களிடம் செல்கிறாள் ......! …
-
- 16 replies
- 2.5k views
-
-
பெரிய அளவிற் பேசப்படாத வாகை சூடவா – திரை விமர்சனம் உங்க வீட்டுப்பிள்ளை படம் திரையில் போகிறது. அதிலே எம்ஜிஆரை நம்பியார் சவுக்கால் அடிக்கிறார். அதனைப் பொறுக்காது படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகன் சுடுகலனால் சுடத் திரை பற்றி எரிகிறது. இப்படித்தான் காட்சி தொடங்குகின்றது. 2011 இல் வெளியாகிய இந்தத் திரைப்படத்தை கொறோனா முடக்கத்தால் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. கற்றலின் அவசியத்தை வலியுறுத்தி எடுத்துள்ள திரைப்படம். ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வியை மறுக்கும் கிராமத்துத் தலையாரி. படிக்காத பாமர மக்களை மட்டுமன்றி அவர்களது பிள்ளைகளையும் வயது வித்தியாசமின்றிக் கற்சூளையில் வேலைசெய்ய நிர்பந்திக்கப்பட்ட கிராமத்தை நோக்கி உதவி நிறுவனமொன்றின் வழிகாட்டலோடு அந்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
நீரோடடத்தில் செல்லும் துரும்பாக இயந்திரங்களோடு இயந்திரமாய் கால நிலையோடும் போட்டி போட்டு ஓடி யோடி உணவு உறக்கமின்றி எந்திரமாய் உழைத்த மனிதா வங்கியிலே பணம் பகடடான வீடு களி த்திருக்க மனைவி பிள்ளைகள் மதி மயங்க மது வகைகள் பவனி செல்ல படகு போன்ற கார் என மமதை கொண்ட மானிடா சற்றே நில் ..எல்லாம் உனக்கே நானே ராஜா ..எனக்கே ராச்சியமென உண்டு களித்து உலகை ஆண்ட மானிடா அறிவியல் கொண்டு ஆயுதங்கள் செய்து அணுகுண்டுகள் போர்க் கப்பல்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணை கள் .ஏழைகளை சுரண்டி ஏகாதிபத்திய ஆடசி பெரியவன் என்னை விட யாரும் இல்லை என்னால் எதையும் அழிக்க முடியு…
-
- 10 replies
- 2k views
-
-
இல்லறம் இருமனம் இணைந்த திருமண வாழ்வில் இது ஒரு சுகராகம் பிரிவினை விரும்பும் இருவரின் வாழ்வில் இது ஒரு பெரும் சோகம் சரிநிகர் என மன உணர்வினை மதித்தால் இது ஒரு மலர்த் தோட்டம் பெரியவர் நான் என ஒரு மனம் நினைத்தால் இது ஒரு சிறைக் கூடம் அன்பெனும் கடலில் இதயங்கள் மிதந்தால் இல்லறம் ஒரு சொர்க்கம் துன்பங்கள் அங்கு தொடர்கதையானால் நிரந்தரமாய் நரகம் வாதங்கள் இல்லா வாழ்க்கையில் என்றும் வாசங்கள் பாரங்கள் பேதங்கள் எல்லாம் நேசங்களாக நெஞ்சினில் தாபங்கள் ராகங்கள் இசைக்க வாத்தியம் தேவை தாளங்களும் தேவை பாசங்கள் நெஞ்சில் பூத்திடும் வேளை சோகங்கள் தூரங்கள் தமிழொடு இனிமை இணைந்தது போல தம்பதிகள் இணைந்தால் அமிழ்தோ…
-
- 20 replies
- 3.6k views
-
-
கலையாத கனவு ---------------------------- என்றுமில்லாத ஒரு பரவசத்தில் தமிழீழமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம். பார்க்கும் முதன்மை வாய்ந்த இடங்களில் எல்லாம் தமிழீழ தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறந்து கொண்டிருந்தது. மாவீரர்துயிலும் இல்லங்கள் மஞ்சள் சிவப்பு வண்ணக்கொடிகளால் அழகூட்டப்பட்டு, வித்துடல்கள் உறங்கும் கருவறைகள் எங்கும் மலர்கள் தூவித் தீபங்கள் ஏற்றப்பட்டு உற்றார் உறவுகளின் விசும்பலும் மக்களின் வாழ்த்தொலியுமாக ஒருபுறமென்றால், குடாரப்பு, திருகோணமலை, மன்னார், காங்கேசன்துறை எனக் கடலிலே காவியமான மாவீரர்களுக்கும் வானிலே மேலெளுந்து காவியமானோருக்கு இரணைமடுவிலுமென மக்கள் தமது நன்றிக் கடனைச் செலுத்த, ஆல…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
தலைமுறைகள் விடைகாண்பர்! ---------------------------------------------------------------------- விடுதலைக்கு உரமான வீரத் தளபதிகாள் கலையாது நினைவுகளில் வாழும் வீரர்களே விழிநீரால் நினைந்துருகும் நிலையாகப் போனவரே கலையாத கனவொருநாள் மெய்ப்படும் வேளைவரும் உறங்காத உணர்வுடனே உயிர்பெறும் பொழுதினிலே விடிவுபெறும் தேசத்தில் விழிதிறப்பீர் வீரர்களே! விழிதிறக்கும் வழிகாணும் தலைமுறைகள் எழும்போது விலங்குடைத்து நிமிர்கின்ற வழிதேடி விடைகாண்பர் புலமெங்கும் வளம்பெற்று நிமிர்கின்ற இளையோரும் தாய் நிலமெங்கும் தமிழோடு வாழ்கின்ற இளையோரும் அறிவோடு இணைந்தே அறப்போரைத் தொடுத்தாலே நிலத்துயரை நீக்கிவிடும் நிலைகாண வழிபிறக்கும்! சாவுகளை எதிர்கொண்டு சரித்திரமாய் வாழ்பவரே…
-
- 14 replies
- 2.5k views
- 1 follower
-
-
எழுதவேண்டும் என்று எண்ணும் பொழுதுகளில் எல்லாம் என் முன் வந்தமர்ந்துவிடுகிறது ஆண் என்ற முகமும் அதன் அகங்காரமும் எத்தனையோ வார்த்தைகளை மனதின் எழுத்தாணி எழுதித்தான் விடுகின்றது ஆயினும் அத்தனையிலும் எத்தனை எழுத்தை சுதந்திரமாய் நான் எழுத உன்னால் அனுமதிக்க முடியும் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் …
-
- 9 replies
- 2k views
-
-
மங்கை அவளது அகமது புதிராகிடும் விழிகளிரண்டில் கணை தொடுப்பாள் கார்மேகக் கூந்தலின் பூவும் கமழும் இடையின் வளைவுகள் கண்டு கம்பனும் மயங்கிக்கிடக்க சாரை போல் நடந்து வருகையில் ஊரும் திகைக்க.....கவர்ந்திடும் புருவங்கள் புருசர்களையும் ஈர்க்க நாணமும் நாணித்திட .... தவம் கிடக்கிறாள் மனம் கவர்ந்தவனை அடைந்திட......
-
- 10 replies
- 2k views
-
-
இயற்கையே சக்தி தா! ----------------------------------------------- காலையைக் கடந்து செல்லும் பொழுது மலர்கள் மலர்ந்திருக்கின்றன கதிரோன் காலாற நடக்கின்றான் மனித மனங்கள் வாடியிருக்கிறது தெருக்கள் வெறிச்சோடியிருக்க நாயை நடப்பதற்கு அழைத்துச்செல்லும் முதியவர் ஆனந்தமாகப் புகைவிட்டவாறு சிறியதொரு குளிரோடு காற்று மெதுவாக வீசுகிறது வீட்டுக்குள் சிறைப்பட்ட சூழல் கொறொனாவை இந்த உலகு வென்று நிமிரும் காலம் விரைந்து வர வேண்டும் இயற்கை அதற்கான சக்;தியைத் தர வேண்டும்! ஒடுங்கி மடியும் உலகு உயிர்பெற்று உயர்வடைய இயற்கையே சக்தி தா! உன்னுள் ஒளிந்திருக்கும் புதிரகன்று புத்தொளி பரவிட இயற்கையே சக்தி தா! எல்லையற்று விரிகின்ற உயிரிழப்பை நிறுத்தும்…
-
- 7 replies
- 1.7k views
-