நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின…
-
- 33 replies
- 10.2k views
-
-
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும்,போதிய போசாகின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர். இவை அனைத்திற…
-
- 1 reply
- 10.2k views
-
-
பலருக்கும் தெரியாத, "இஞ்சியில்" நிறைந்துள்ள நன்மைகள்!!! உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க எப்படி ஏலக்காய், பட்டை, கிராம்பு, பூண்டு போன்ற பொருட்கள் பயன்படுகிறதோ, இதேப்போல தான் இஞ்சியும் பயன்படுகிறது. பலருக்கும் இஞ்சியைக் கடித்தால், அதன் காரத்தன்மையால் முகம் பலவாறு செல்லும். ஆனால் அந்த இஞ்சியில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இதில் நிறைந்துள்ள மருத்துவ குணத்தால், எண்ணற்ற நோய்களை குணப்படுத்த முடியும். மேலும் ஆயுர்வேதத்தில் இஞ்சியும் நோய்களை குணமாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய இஞ்சியின் சில ஆரோக்கிய நன்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பசியைத் தூண்டும். உங்களுக்கு பசி எடுக்காவிட்டால், உணவை சாப்பிடும் முன் சிறு துண்டு…
-
- 3 replies
- 10k views
-
-
பெண்களும், மன அழுத்தமும்................ Women, Tension, tamil, Relax ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் ?. அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று. மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது. சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. அப்படி தனக்குள்ளேயே அடக்கப்படும் கோபம் மன அழுத்தத்தின் …
-
- 35 replies
- 10k views
-
-
எனக்கும் ஆட்டுக்கும் யார் அதிகம் இலை குழை சாப்பிடுவது என்று போட்டி வைத்தால் ஒரு ஆட்டை வெல்லக் கூடியளவுக்கு நான் பச்சை இலைகளை சாப்பிட்டுக் காட்டுவன். அந்தளவுக்கு நான் பச்சை இலைகளை வார நாட்களில் உண்பதுண்டு. வார இறுதி நாட்களை முற்றிலும் அசைவ உணவுகளுக்கு என்று ஒதுக்கி வைத்து இருப்பதால் வார நாட்களில் ஆகக் குறைந்தது 2 நாட்களாவது தனியே மரக்கறி, இலை வகைகளாலான சலாட்டினையும் சாப்பிடுவதும், மிச்ச வார நாட்களில் இரண்டு இலை / கீரை வகை உணவை சேர்ப்பதும் வழக்கம். சரி, இவ்வாறு பச்சை இலைகளை தெரிவு செய்யும் போது அவற்றில் என்னென்ன சக்தி இருக்கு என்று பார்த்து தெரிவு செய்வது வழக்கம். ஒவ்வொன்றிலும் என்னென்ன சக்தி இருக்கு என்று மேலோட்டமாகவேனும் தெரிந்து வைத்திருப்பது எம் உணவு முறையை Ba…
-
- 24 replies
- 10k views
-
-
40 வயதைக் கடந்த பெண்களுக்கு மட்டுமல்ல இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் கசியும். உதடு கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிட வேண்டும். இரவு நேரங்களில் வெண்ணெயை உதட்டில் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும். கண்ணில் கருவளையமா? சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இதுதான் அவர்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துணியை பன்…
-
- 14 replies
- 9.9k views
-
-
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அது சில நேரம் எதிர்மறையாகி விடுகிறது. நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது. முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். ஏனென் றால், ரத்தச் சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக்கூடிய பழங்களும் உள்ளன. சர்க்கரை அளவின்படி பழங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு பழத்தின் ஜி.ஐ, (GI - Glycemic Index) குறியீட்டு எண்ணை அறிந்துகொண்ட பின், உண்ண வேண்டும். ஜி.ஐ. என்பது கிளைசிமிக் குறியீடு. நீரிழிவு நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைந்த அளவுள்ள ஜி.ஐ. குறியீ…
-
- 7 replies
- 9.9k views
-
-
உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு இரும்புச்சத்து அதிகம் உள்ள, பேரீச்சம் பழங்கள் சிறந்த நிவாரணி [sunday, 2012-12-09 21:35:23] நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உட…
-
- 16 replies
- 9.9k views
-
-
தேமல் மறைவதற்கான மருத்துவக் குறிப்புக்கள் எமது உடலில் தேமல் வந்தால்இபார்ப்பதற்கு அழகில்லாமல் இருக்கும் ஆகவே தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும். தேமல் மறைவதற்கான சில மருத்துவக் குறிப்புக்கள் நீங்களும் இவற்றைச் செய்து பார்த்தால் உங்களுக்கு வந்த தேமல் காணாமல் மறைந்து போயிடும். இளம் கூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும். ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் இல்லாமல் போய்விடும். மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தா…
-
- 2 replies
- 9.8k views
-
-
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால், ஆசையாக முத்தம் கொடுக்க வரும் துணை கூட கொடுப்பதற்கு தயங்குவார்கள். சரி, இப்படி பற்கள் மஞ்சளாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பரம்பரை காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவைகளே காரணங்களாகும். இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக வெளிக்காட்ட, பல் மருத்துவமனைக்க…
-
- 7 replies
- 9.8k views
-
-
அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள் தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது. *தோற்றம் :* அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி …
-
- 0 replies
- 9.8k views
-
-
பச்சை காய்கறிகள், இலைதழை உணவுகள் என சைவம் மட்டும் தான் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகள் தரும் என யார் கூறியது. மனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது ஆட்டிறைச்சி. ஆட்டின் தலை, இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவ பயன் தருகிறது உங்களது, இதயம், மூளை, குடல், எலும்பு என தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் நன்மை விளைவிக்கிறது ஆட்டு இறைச்சி. வெறும் சதை இறைச்சியை மட்டும் உண்பதை தவிர்த்து உறுப்பு இறைச்சியை சாப்பிட பழகுங்கள் இது உங்கள் உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவும். சரி இனி, ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.... தலை …
-
- 28 replies
- 9.7k views
-
-
ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் கிடைக்கும் மகிழ்ச்சியான நேரத்தில், அதை மேலும் இன்பமாகக் கொண்டாடவே மனம் விரும்பும். இது மனித இயல்பு, இந்த நிலையில், எண்ணெய் தேய்த்து குளித்த அன்று தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாமா? அல்லது கூடாதா? எனப் பலருக்கும் பெரும் சந்தேகம் உள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் நல்லெண்ணெய் தேய்து குளிப்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். தலைக்கு மட்டும் இன்றி உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். சனி மற்றும் புதன் ஆகிய இரு கிழமைகளில் ஆண்கள் நல்லெண்ணெய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். அது போல், பெண்கள் செவ்வாய…
-
- 10 replies
- 9.7k views
- 1 follower
-
-
மூலநோய்க்கான மருத்துவம் மூலநோய் உள்ளவர்களுக்கான மருத்துவ முறைகள் தெரிந்தவர்கள் தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.
-
- 3 replies
- 9.7k views
-
-
முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம். இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம். எப்படி ஆனதோ? நாரிப்பிடிப்பு ஏன் வருகிறது? இவ்வாறு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள…
-
- 12 replies
- 9.6k views
-
-
தயிரின் (Yoghurt ) மருத்துவ குணங்கள் தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் இதுவும் ஒன்று. தயிர் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் இனி அறிவோம்: *** நாம் ( நம் முன்னோர்கள் ) கிட்ட தட்ட 4,500 ஆண்டுகளாக, மக்கள் தயிரை தயாரித்தும்-- மற்றும் உண்டும்-- வந்திருக்கின்றனர். இன்று அது அனைத்து உலகிலும் ஒரு பொதுவான உணவாக ஆகிவிட்டது. அது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை. * மிகவும் முந்தைய பழமையான காலங்களில் தயிரானது தானே இயங்குகின்ற வகையில் லாக்டோபசில்லுஸ் தேல்ப்றுஎச்கஈ சுப்ச்ப். புல்கரிகஸ் (Lactobacillus delbrueckii …
-
- 7 replies
- 9.5k views
-
-
மணத்தக்காளியின் மருத்துவக் குணங்கள்: 1. மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து உண்ண உடம்பு குளிர்ச்சி அடையும். 2. வாரம் ஒரு முறை இக்கீரையை உண்டுவர, கடுமையான உழைப்பு காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்றியைப் போக்கலாம். 3. இதயத்திற்கு வலிமை ஏற்றும். 4. களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். 5. மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெற உதவும். 6. கண்பார்வையும் தெளிவு பெறும். 7. வயிற்றுநோய், வயிறு பெறுக்கம், வாய்புத் தொல்லை உடையவர்கள், வாரம் இருமுறை மணத் தக்காளிக் கீரையை சமைத்து உண்டு வர, நோய் கட்டுபட்டு குணமாகும். 8. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து தொடர்ந்து சாப்பிட்டால், குடல் புண் மற்றும் மூத்…
-
- 8 replies
- 9.5k views
-
-
உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை! உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும். உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது. ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்…
-
- 1 reply
- 9.4k views
-
-
உடல் பருமனை தவிர்ப்போம் வெள்ளி, 08 ஏப்ரல் 2011 10:31 உடல் பருமன் என்பது ஒரு மனிதன் சராசரியாக இருக்க வேண்டிய எடையை விட 20 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் நிலையாகும். உடல் பருமன் உடல் நலத்தைக் கெடுக்கும். உடல் பருமன் மூலம் ஒருவருக்கு இரத்த அழுத்தம், இருதய நோய், நீரிழிவு நோய், சில புற்று நோய், முடக்குவாதம், தூக்கமின்மை போன்ற எண்ணற்ற பின் விளைவுகள் தோன்றி ஆயுட்காலமும் குறையும். உடல் பருமனின் காரணங்கள்: 1. பரம்பரை உடல் வாகு.2. உடல் உழைப்பின்மை, எந்த வித உடற் பயிற்சியிலும்/நடைப்பயிற்சியிலும் ஈடுபடாதிருத்தல்.3. அசைவ உணவு, எண்ணெய் உணவு பொருட்கள், ஜாம், ஜெல்லி, கேக், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், சாக்லேட் ஆகியவற்றை அதிகமாக உண்ணுதல்.4. மாறிவரும் கலாச்சாரமும், அடிக்கடி …
-
- 12 replies
- 9.4k views
-
-
பிறந்ததிலிருந்தே உடம்பில் கவனம் எடுத்த பழக்கமில்லை. அதிலும் கடந்த சில வருடங்களாக சாப்பாட்டில் கவனமில்லை. உடலும் வயிறும் வீஙகத்தொடங்கின. மக்கள் சொல்வார்கள் அப்பா உடம்பைக்கவனியுங்கள் என. அதிலும் எவராவது என் வயதுக்காரர் மோசம் போய்விட்டால் தாங்கவே முடியாது ஆனாலும் 7 நாளும் வேலை அத்துடன் பொது வேலைகள்.................. வேலை அலுப்பு மற்றும் அதிக நேரவேலை இதனால் தூக்கம் குறைவு அதனால் எப்பொழுதும் ஒருவித சோர்வு கண்களுக்குள்.... எங்கு இருந்தாலும் தூக்கம் வரும் கார் ஓடிக்கொண்டிருக்கும் போதும்.... அத்துடன் குறட்டை........ அப்பா உடற்பயிற்சி அல்லது நீச்சலுக்காவது செல்லுங்கள் அல்லது குளிசை வாங்கிப்போடுங்கள்.... இல்லை மாட்டேன் எனக்கு எதுவித வருத்…
-
- 44 replies
- 9.4k views
-
-
வாழைப்பழம் அன்றாடம் 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால் பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காலை நேரத்தில் ஒரு வாழைப்பழம்இ மதியம் ஒரு வாழைப்பழம்இ இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிடும் போது போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் ரத்த உறைவை தடுக்க முடியும். இது 21 சதவீத ரத்த உறைவை தடுக்க உதவுகிறது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். பொட்டாசியம் சார்ந்த கீரைகள்இ பருப்புகள்இ பால்இ மீன்இ ஆகியவற்றை போதிய அளவு எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத பிரச்சனைகளை தவிர்க்க முடியும். முந்தய ஆய்வின் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வாழைப்பழம் உதவுகிறது என தெரிவிக்கப்பட்ட…
-
- 32 replies
- 9.4k views
-
-
மஞ்சள் உலகின் மிகச் சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல் வாதம்) சிகிச்சையில் பயன்ப டுத்தப்படுகிறது. ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை. மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளைத் தடுக்கலாம். அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச் சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்று…
-
- 10 replies
- 9.2k views
- 1 follower
-
-
உடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை. தேவையான பொருள்கள் : கொள்ளு – 4 ஸ்பூன் பூண்டு – 5 பல் தக்காளி – 2 மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் துவரம்பருப்பு – 1 ஸ்பூன் பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிது கறிவேப்பிலை – சிறிது தாளிக்க நல்லெண்ணெய் – சிறிது கடுகு – சிறிது வரமிளகாய் – 2 செய்முறை : மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். (ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்த…
-
- 6 replies
- 9.1k views
-
-
அனுப்பி வைத்தவர்: டாக்டர் நளினி சிவப்பிரகாசம் நோய்க்கான பொதுக் காரணிகள் ஒருவருடைய வாழ்கையில் எதிர் பாராது நிகழும் சில சம்பவங்கள், இழக்கப் படாததை இழந்ததால் ஏற்படும் துக்கம், எதிர் பார்த்த சில விடயங்கள் நடைபெறாது போவதால் ஏற்படும் ஏமாற்றம் (பரீட்சையில் சித்தியெய்தமுடியாது போவது, காதலில் தோர்வியடைவது) அல்லது சமூகத்திற்கு முகம் கொடுக்க முடியாத சமூக விரோத செயல்களில் ஏடுபட்டதால் ஏற்பட்ட குற்ற உணர்வு, கடன்பட்டு பின் அதனை செலுத்த முடியாது போவதால் ஏற்படும் மானநஷ்டம், பெரிய எதிபார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு முடங்கிப் போவதால் ஏற்படும் திடீர் மாற்றம் என்பனவற்றால் ஒருவர் மனதை துன்புறுத்தும் மன வேதனையும், தாழ்வு உணர்வு (Low Mood) நிலையும…
-
- 2 replies
- 9.1k views
-
-
வாய் துர்நாற்றம் அகல வேண்டுமா...? நன்றாக பல் துலக்காததும், அடிக்கடி காபி, டீ என எதையாவது குடித்துக் கொண்டும், தின்று கொண்டும் இருந்தால் வாய் துர்நாற்றம் வீசும். மேலும் வயிற்றில் புண் இருந்தாலும் இதற்கு வாய்ப்பிருக்கிறது. வாய் துர்நாற்றம் காரணமாக, பிறரிடம் அருகில் சென்று பேசக் கூட தயக்கம் காட்டுகிறோம். வாய்நாற்றத்தை குறைப்பது எப்படி ? வாய்துர்நாற்றம் உள்ளவர்கள், தினமும் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குறைந்தது நாலு ட்ம்ளர் தண்ணீர் குடித்து வர வேண்டும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றை சுத்தப்படுத்தும். மேலும் எலுமிச்சம் பழச் சாற்றை தண்ணீரில் கலந்து அதில் தினமும் வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும். முடிந்தவரை…
-
- 16 replies
- 9.1k views
-