நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
தீய கொலஸ்ரோல்(LDL) - குறைக்க முடியுமா? கொலஸ்ரோல் என்றால் என்ன? கொலஸ்ரோல் என்பது ஒரு மெழுகுத் தன்மை கொண்ட கொழுப்புப் போன்ற பொருளாகும். சாதாரண உடலியக்கங்களுக்கு இது சிறிய அளவில் இருந்தால் போதுமானதாகும். கொலஸ்ரோல் இயற்கையாகவே எமது எல்லா உடற்கலசுவர்களில் காணப்படுகின்றது. மூளைä நரம்பு தசை ஈரல் குடல் இதயம் ஆகிய எல்லாக கலங்களின் சுவர்களிலும் காணப்படுகின்றது. தினந்தோறும் சாதாரண உடலியக்கத்திற்கு தேவையான 100மிகி கொலஸ்ரோல் எமதுடலினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. எமதுடல் பல ஓமோன்களையும் விற்றமின் டி கொழுப்பைச் சமிபாடடையச் செய்யும் பித்தநீர் போன்றவற்றை உற்பத்தி செய்ய கொலஸ்ரோலைப் பயன்படுத்துகின்றது. இதற்கு குருதியிலுள்ள மிகவும் சிறிய அளவான கொலஸ்ரோல் போதுமானதாகும். மேலதிக…
-
- 77 replies
- 34.4k views
-
-
மனித உடல்களில் ஏற்படும் வலிகளில், தலைவலியை தாங்கி கொள்வது கடினமான ஒன்றாகும். இப்படி தலைவலி எடுக்கும் போது தைலம், மாத்திரைகள், ஒரு கப் சூடான காபி குடிக்கிறோம். ஆனால், சிலவகையான உணவுகளும் தலைவலியை ஏற்படுத்துகின்றன. தலைவலியைத் தூண்டும் உணவுகளில் முக்கியமானது சீஸ். அதிலுள்ள தைரமின் எனப்படுகிற வேதிப்பொருளே வலியைத் தூண்டும். இதுதவிர கேக், சைனீஸ் உணவுகள், சொக்லெட் போன்றவற்றிலும் தலைவலியைத் தூண்டும் காரணிகள் இருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும். தினசரி நாம் உபயோகப்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும், தலைவலியைத் தூண்டும் நைட்ரைட்(Nitrite) என்கிற வேதிப் பொருள் கலக்கப்படுகிறது. ஊறுகாய், ஆரஞ்சு, அன்னாசி, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, செயற்கை இனிப்புக…
-
- 0 replies
- 419 views
-
-
நான் வசிக்கும் இடத்தில் (Baement) Industrial Carpet போட்டிருக்கிறார்கள். அதனால் எனக்கு உடம்பில் சில இடங்கள் தடித்து, கடித்துப் புண் ஏற்படுகிறது? இதற்கு என்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா? நன்றி
-
- 6 replies
- 1.3k views
-
-
வருடம் 6000 குறோணர் கட்டி ஆலோசகரின் உதவியோடு பயிற்சிகள்.. புலம் பெயர் நாடுகளில் தமிழ் பெண்களிடையே ஏற்படும் புதிய மாற்றங்கள்.. தற்போது நோர்வே ஒஸ்லோ நகரில் வாழும் 30 – 45 வயதுடைய தமிழ் பெண்கள் கடுமையான தேகப்பயிற்சியில் தீவிர நாட்டம் கொண்டுள்ளார்கள். தலைநகரின் நடுவில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையங்களில் நோர்வேஜிய பெண்களுக்கு இணையாக இப்போது தமிழ் பெண்களையும் காண முடிகிறது. கடந்த 2010 ம் ஆண்டு ஜனவரி மாதமளவில் ஆரம்பித்து, இப்போது நன்கு சூடு பிடித்து, பெரும்பாலான பெண்களை உடற்பயிற்சி நிலையங்கள் நோக்கி நகர்த்தியிருக்கிறது. இந்த நிலையில் விபரத்தை அறிய பல தேகப்பயிற்சி நிலையங்களுக்கு போனோம்… அங்குள்ள பல பெண்களிடம் பெற்ற தகவல்கள் இவை.. கேள்வி : நீங்கள் உடற்பயிற்சி நிலையத்த…
-
- 41 replies
- 3.4k views
-
-
தீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய்க்கு வழிவகுக்கிறது : மருத்துவர்கள் கண்டுபிடிப்பு தீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு மிகவும் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். கோப்புப்படம் மூளையில் பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு எதிர்வினையாற்றும் பகுதியில் அதிக செயல்பாடு இருக்கும் பட்சத்தில் அது எலும்பு மஜ்ஜை பகுதியில் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்புகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகிறது. அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாள்ரகள்…
-
- 0 replies
- 287 views
-
-
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் 18 வயது இளைஞர் ஒருவரின் இதயத்தின் இயக்கத்தை 40 நிமிடங்கள் நிறுத்தி வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடுமையான முச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, சேலம் மோகன் குமாரமங்கலம் பல்நோக்கு உயர்சிகிச்சை அரசு மருத்துவமனையின் இதய சிகிச்சை சிறப்புப் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவரின் இதயத்தில் ஓட்டை இருப்பதைக் கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் குழுவினர் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து அதிநவீன இதய நுரையீரல் தானியங்கி கருவியின் உதவியுடன் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இளைஞரின் இதயத்தின் இயக்கம், நாற்பது நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதய உறைத் திசுக்கள் மூ…
-
- 0 replies
- 506 views
-
-
கண்களும் கண்ணாடியும் பற்றி செல்வராஜ் எழுதிய மிகச் சுவையான வலைப் பதிவைப் படித்தபின் என் மூக்கு பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உணர்வு எனக்குத் தோன்றியது. ஏனென்றால் என் மூக்கோடும் தும்மலோடும் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போராடி அதற்கு ஒரு வேடிக்கையான தீர்வு இணையத் தொடர்பின் காரணமாகக் கிடைத்த கதையை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என் கைகள் துடிக்கின்றன. நினைவு தெரிந்த நாளாய் .. மூன்று, நான்கு வயது சிறுவனாய் இருந்த காலந்தொட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் நான் தும்மிக் கொண்டே துயில் எழுவேன். அடுக்கடுக்கான தும்மல்கள் ஒவ்வொரு காலையும் நாற்பது .. அறுபது .. அல்லது நுாறு தும்மல்கள். காலை எட்டுமணிக்குப் பிறகு.. நல்ல வெய்யில் ஏறிய பிறகு தும்மல் தானாக …
-
- 3 replies
- 2.2k views
-
-
பட மூலாதாரம்,MAYANK MAKHIJA/NURPHOTO VIA GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனில் ஒருவர் தும்மல் ஏற்பட்டபோது அதனை அடக்கியதால், அவருடைய தொண்டையில் உள்காயங்கள் ஏற்பட்டுள்ளது. தும்மலை அடக்குவது இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள டண்டீ நகரில் 30 வயதுடைய நபர் ஒருவர் கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு நைன்வெல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தனக்கு தும்மல் ஏற்பட்டபோது அதனை அடக்குவதற்காக, மூக்கையும் வாயையும் தன் கைகளால் மூடியுள்ளார். அவ்வாறு தும்மலை அடக்கியதால் அவரது மூச்சுக்குழாயில் 2 மி.மீ. வரை காயம் ஏற்பட்டிருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது. ஒருவர் தும்மும்போத…
-
- 0 replies
- 558 views
- 1 follower
-
-
மழைக்காலம் தொடங்கி விட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நிற்கும். இவற்றில் தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான். காற்று தவிர வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான், தும்மல். நமது நாசித் துவாரத்தில் சிறிய முடியிழைகள் நிறைய இருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை. இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்படுகிறது. உடனே அவற்றை வெளித் தள…
-
- 2 replies
- 965 views
-
-
தும்மினால் கூட எலும்புகள் உடையலாம்! வைட்டமின்- - டி மற்றும் கால்சியம் சத்து குறைபாட்டால், தும்மினால் கூட எலும்புகள் உடையலாம்! வைட்டமின்- - டி மற்றும் கால்சியம் சத்து குறைபாட்டால்பெண்கள் தும்மினால் கூட எலும்புகள் உடையும் நிலை ஏற்படுவதாக கூறுகிறார், மருத்துவர் ராஜா: சென்னையை சேர்ந்த நான், எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் பிரிவு நிபுணராக பணியாற்றுகிறேன். நம் உடலில், வைட்டமின்- - டி, குறைந்தபட்சம், ஒரு மிலி லிட்டர் ரத்தத் தில், 30 நானோகிராம் அளவுக்கு இருக்க வேண்டும். இதில், குறைபாடு ஏற்படும் போது, 'ஆஸ்டியோபோரோசிஸ்' என்ற நோய் உண்டாகிறது. இதனால், 40 வயதிற்கு மேல் எலும்புகள் மிகவும் பலவீனமாகி, சிறு அடி பட்டாலும், ஏன், உட்கார்ந்து எழுந்தால் கூட, எலும்புகள் நொறுங்கி விடுகின்ற…
-
- 0 replies
- 625 views
-
-
துரித உணவுகளில் உயிர்க்கொல்லி கொழுப்பு "இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லுங்க? ஏன்னா Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கணும்" என்று விடுமுறைக்கு வந்த எங்கள் குடும்ப நண்பரின் மகன் கடையில் இப்படி சொன்னான், போன மாதம் அவன் காய்ச்சலில் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வை° பொருள் வாங்குமுன் அதை கவனிக்க வேண்டும் என்பது.. Zero Added Hydrogenated என்பது செயற்கையாக செய்யப்படும். இது பசு, எருது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும் சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப் படுகிறது! இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து. இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL) சத்தை குறைத…
-
- 0 replies
- 1.4k views
-
-
துரியன் பழத்தை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் தீரும் பலாப் பழம் போலவே தோற்றமளிக்கும் இது, துரியன் பழமாகும். மலேசியாவை பிறப்பிடமாக கொண்டது. பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம், உள்ளே இனிப்பு சுவை கொண்ட பழம் என துரியன் பழம் சுவைக்க தூண்டுகிறது. சுவை மட்டுமல்ல, சத்து பொருட்களும் துரியன் பழத்தை பிரபலமாக்கி உள்ளன. இதில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. துரியன் பழம், மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகிற…
-
- 28 replies
- 3k views
- 1 follower
-
-
எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு வி…
-
- 4 replies
- 695 views
-
-
துளசியின் மருத்துவ குணங்கள்! துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். இதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான். அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசி…
-
- 1 reply
- 683 views
-
-
துணையுடன் தூங்குவதைத் தவிர்க்கும் இளைய தலைமுறை - நன்மைகள் கிடைக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபெர்னாண்டா பால் பதவி, பிபிசி நியூஸ் வேர்ல்டு 34 நிமிடங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுநோய்க்கு பிறகு இந்த பிரச்னை தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் கணவரின் குறட்டையை சிசிலியாவால் தாங்க முடியவில்லை. அவர் தூங்க முடியாமல் தவித்தார். எவ்வளவோ முயற்சிகள் எடுத்துப் பார்த்தும், கணவரின் குறட்டையை அவரால் நிறுத்த முடியவில்லை. 35 வயதான சிசிலியாவால் இதை மேலும் தாங்க முடியவில்லை. எனவே கணவன் மனைவி இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இனி ஒரே அறையில் ஒன்றாக தூங்க முடியாது என்ற…
-
- 0 replies
- 606 views
- 1 follower
-
-
உடல் தளர்ந்து, கண்கள் மூடியும், திறவாமலும் சோர்ந்திருந்ததன. அவரது முக்கிய பிரச்சனை ‘நித்திரை வருகுதில்லை’ என்பதுதான். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா போன்ற நோய்களும் அவருக்குத் தொல்லை கொடுக்கின்றன. “பகல் முழுதும் கதிரையில் இருந்து தூங்குவார். இரவும் எட்டு மணிக்கே படுத்திடுவார். ஆனால் எப்பவும் நித்திரை இல்லை எண்டுதான் சொல்லூர்” என்று அலட்சியமாகக் கூறினாள் கூட்டிக் கொண்டு வந்த மகள். இது அவருடைய பிரச்சனை மட்டுமல்ல. பெரும்பாலான வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைதான். பகலெல்லாம் தூங்கி விழுவது, நேர காலத்துடன் இரவு 7-8 மணிக்கே படுத்துத் தூங்குவதும், அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்து எழுந்து சிரமப்படுவதும் ப…
-
- 1 reply
- 493 views
-
-
இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந…
-
- 14 replies
- 10.3k views
-
-
தூக்கத்திலேயே மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்? எப்படி முன்கூட்டியே அறிவது? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,@LMKMOVIEMANIAC / TWITTER படக்குறிப்பு, கௌசிக் எல்.எம் பிரபல சினிமா விமர்சகரும் திரைப்பட டிராக்கருமான எல்.எம்.கௌசிக் நேற்று (ஆக. 15) மாரடைப்பால் காலமானார். யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த கௌசிக், தமிழ் சினிமா பிரபலங்களிடையே எடுக்கப்பட்ட நேர்காணல்களுக்காகவும் திரைப்பட விமர்சனங்களுக்காகவும் இணைய உலகில் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார். தூங்கிக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு கௌசிக் உயிரி…
-
- 1 reply
- 992 views
- 1 follower
-
-
ஒருசிலர் தூக்கத்தில் இருக்கும்போதே இறந்துபோனது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு தூக்கத்தில் இருக்கும்போதே ஒருவர் மரணம் அடைவது ஏன் என்பது குறித்து விளக்குகிறார். தூக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
- 0 replies
- 538 views
- 1 follower
-
-
தூக்கத்துக்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம்? லோரா பெளபர்ட் தி கான்வர்சேஷன் 28 ஆகஸ்ட் 2022, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையுடன் இருக்கிறீர்கள் என்பதை எது தீர்மானிக்கிறது? உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? நீங்கள் எவ்வளவு அன்புடன் இருக்கிறீர்கள்? அல்லது நீங்கள் எத்தகைய அறத்தை பின்பற்றுகிறீர்கள் என்பது கொண்டு தீர்மானிக்கப்படுகிறதா? இத்தகைய அனுமானங்கள் ஒருவேளை சரியாக இருக்கலாம். நீங்கள் எவ்வளவு நன்றாக உறங்குகிறீர்கள் என்பதை பொருத்தே, மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய எவ்வளவு தயாராக இ…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
தூக்கத்தை இழந்தால் இதயம் பாதிக்கும்: ஆய்வு எச்சரிக்கை கோப்புப் படம் நீண்ட நேரம் பணியாற்றுவதால் ஏற்படும் தூக்கமின்மையின் விளைவாக, இதயம் இயங்குவதில் பெரிய அளவில் பாதிப்பு நேரிடலாம் என்று புதிய மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. தீயணைப்புப் படையினர், அவசர மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட 24 மணி நேர சேவைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் பெரும்பாலும் அன்றாடம் குறைந்த நேரமே தூங்க முடிகிறது. ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டானியல் கியூட்டிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 24 மணி நேர சேவைப் பணியாளர்களில் குறைவான தூக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு இதய நோய் சார்ந்த பாதிப்புகள் …
-
- 0 replies
- 284 views
-
-
தூக்கமின்மை டாக்டர் ஜி. ஜான்சன் குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல் தூங்குகிறோம். இதில் ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லாமல் போனால் கெடுதி இல்லை. ஆனால் தொடர்ந்து சரியான தூக்கம் இல்லையேல் அது மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும். மூவரில் ஒருவருக்கு இதுபோன்ற தூக்கப் பிரச்னை உள்ளது. இதில் பெண்கள் இரு மடங்கினர் அடங்குவர்.நாம் தூங்கும் முறை வயதைப் பொறுத்து அமைவதால் பெரும்பாலும் முதிர் வயதுடையோரிடையே தூக்கப் பிரச்னை அதிகம் காணலாம். தூக்கமின்மையை ( insomnia ) துயிலொழி நோய் என்றும் கூறுவார். நாம் தூக்கமின்மை என்றே அழைப்போம். தூக்கமின்மை மூன்று வ…
-
- 8 replies
- 1.6k views
-
-
தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி? நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான். உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது. …
-
- 12 replies
- 1.7k views
-
-
தூக்கமின்மை: தினமும் ஐந்து மணி நேரம் தூங்கினால் என்ன நடக்கும்? மிஷெல் ராபர்ட்ஸ் டிஜிட்டல் சுகாதார ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் தினமும் குறைந்தது 5 மணி நேரம் உறங்குவதால், 50 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும் பல நாள்பட்ட உடல்நல பிரச்னைகளை குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆரோக்கிய குறைவு தூக்கத்தை கெடுக்கும். ஆனால் மோசமான தூக்கம் உடல்நலக்குறைவுக்கான ஒரு முன்னேச்சரிக்கையாகவோ அல்லது ஆபத்தாகவோ இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. ஆழ்ந்த தூக்கம் உடலையும், மனதையும் மீட்டெடுக்கவும், ஓய்வெடுக்கவும் …
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
தூக்கமின்மையால் மனோநிலை பாதிக்கும்? பொதுவாக பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை. அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும். திரவ உணவு மாறி, இட்லி, பருப்பு சாதம், பிஸ்கட் போன்ற திட உணவுப் பொருட்களை குழந்தைகள் சாப்பிடத் தொடங்குகின்றன. ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளானால், மதியம் பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். மேலும் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குற…
-
- 8 replies
- 1.3k views
-