யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
708 topics in this forum
-
அன்பான தமிழ் பேசும் உறவுகளே, பல தடைகள், சவால்கள் எல்லாம் கடந்து அனைத்து உறவுகளினதும் அன்புடனும் ஆதரவுடனும் மார்ச் 30 ஆம் நாளாகிய இன்று (தமிழீழ நேரப்படி) யாழ் 14 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. தமிமீழப் போராட்டம் தமிழ் ஈழ மண்ணில் இராணுவ வடிவப் போராட்டமாக வீறு கொண்டு நடைபெற்று வந்த காலகட்டத்தில் அந்த மக்களின் விடுதலை அவாவையும், சுதந்திரத் தாகத்தையும், அதற்காக அவர்கள் சுமந்த வலிகளையும், விடுதலை நெருப்பில் தம்மை கொடையாக்கிய மாவீரச் செல்வங்களின் தியாகங்களையும் தமிழ் பேசும் உலகெங்கும் இணையத்தினூடாக எடுத்தியம்ப மோகன் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட யாழ் இணையம், இன்று இராணுவ ரீதியான போராட்டம் உறைநிலைக்கு வந்து அதை முன்னின்று நடத்திய மக்களின் வாழ்வில் வலி மட்டுமே …
-
- 81 replies
- 7.2k views
-
-
யாழ் நிர்வகத்திற்கும், உறவுகளுக்கும்... பல இணையத்தளங்களில் இருந்து பல செய்திகளை யாழிற்கு இணைக்கிறோம்... இது நிர்வாகத்தின் கட்டளை... இதைத் தவிர புதினம், நெருடல், தமிழ்கதிர் இன்னும் வேறு சில தனிப்ப்பட்ட இணையத்தளங்களிலிருந்து செய்திகளை யாழ் கருத்துக் களத்தில் இணைக்கலாமா என்று அறியத் தந்தால், இணைப்பவர்களுக்கும் அதனைப் படிப்பவர்களுக்கும் ஏற்படும் குழப்பங்களை ஓரளவிற்குத் தவிர்க்க இலகுவாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து... -நன்றி-
-
- 29 replies
- 4k views
-
-
நிழலி அண்ணைக்கு நன்றி.........................
-
- 10 replies
- 1.1k views
-
-
ஏன் யாழ் கள முகவரியை www.yaal.com என்று பெயரிடாமல், www.yarl.com என்று பெயர் இட்டீர்கள்? :?
-
- 1 reply
- 4.3k views
-
-
யாழ் அரச குடும்பத்தின் சார்பாக கடந்த 10ம் திகதி மகிந்தவுக்கு அனுப்பிவைக்கப்ப்டா கடிதம் கீழே... His Excellency The President Mahinda Rajapaksa President of The Democratic Socialist Republic of Sri Lanka Temple Trees Colombo - 03 Sri Lanka Your Excellency, In recent days there has been mention of my name and that of the ancient Royal Family of Jaffna. Accordingly I feel it is timely and appropriate to inform Your Excellency of recent developments with the Royal House of Jaffna, etc. On 15 June 2005, the Senior members of the Arya Chakravarti Family representing a majority of the dynasty resident worldwide, elected me to represent the Jaffn…
-
- 0 replies
- 876 views
-
-
இது ஒன்றும் நம்ம றோயல் பமிலி இல்லை... நிஜமாகவே யாழ்ப்பாணத்தில் ஒரு அரச குடும்பம் இருந்திருக்கின்றது. அதை பற்றியது... நமது யாழ்ப்பாண அரச குடும்பம் நெதர்லாந்தில் வசிக்கின்றது... (எனக்கு ஒரே குழப்பமாக இருக்கின்றது.... நெதர்லாந்து நாட்டு நண்பி இந்த அரச குடும்பம் பற்றி சொல்லி இந்த இனையத்தளத்தை எனக்கு காட்டினார்.....ஸ்கொன்லன்ட் நண்பர்களும் சிலர் சொன்னார்கள்) இணையத்தளம் இதோ.. 1) http://www.jaffnaroyalfamily.org/index.php 2) http://www.jaffnaroyalfamily.org/contentfi...page23_tumb.gif 3) http://www.jaffnaroyalfamily.org/news.php?id=19 4) http://www.jaffnaroyalfamily.org/news.php?id=41
-
- 15 replies
- 2.8k views
-
-
யாழ் இணயத்தள நிர்வாகிகளிடம் ஓர் வேண்டுகோள். மே 18 ம் திகதிக்காக ஓர் உணர்ச்சிப்பாடலை இசையமைத்து வைத்திருக்கின்றோம்.அதனை தென்னங்கீற்றில் பதிவு செய்வதற்கு தரவிறக்கம் செய்யமுடியாமல் உள்ளது.எப்படிச்சாத்தியப்படும் என்பதை விளக்குவீர்களா. நன்றி பணிவுடன் தமிழ்ச்சூரியன்.
-
- 2 replies
- 2.5k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே... உதயசூரியன் பத்திரிகை சார்பாக யுத்தத்தால் பாதிக்கபட்டு கனவனை இழந்த பெண்களுக்கு உதயசூரியன் பத்திரிகை சர்பில் ரூபா 10.000 மாதம் ஒருவருக்க என்ற ரீதியில் வழங்கபட இருக்கின்றது... உங்கள் பிரதேசங்களில் அதாவது இலங்கையில் யுத்தத்தால் கனவனை இழந்து அல்லலபடும் யாரவது இருப்பின் எமக்கு பரிந்துரைக்கவும்....விதானையார?ன் உறுதிபத்திரம் இருப்பது அவசியம்.... இப்படிக்கு உதயசூரியன் பத்திரிகை சார்பாக சுண்டல்..... மேலதிக விபரம் வேண்டின் தனி மடலில் தொடர்புகொள்ளவும் தெரிவுசெய்யபடுபவர்களுக்க நேரடியாக பணம் அணுப்பி வைக்கபட இருப்பதால் தயவுசெய்து வங்கி விபரம் அணுப்பி வைக்கவேண்டும்..... திருப்திகரமான முறையில் விபரங்கள் நிரூபிக்கபடவேண்டும் என்றும்…
-
- 3 replies
- 1.5k views
-
-
நிர்வாகிகளின் கவனத்துக்கு முதற்பக்கத்தில் இருக்கும் காப்புரிமை ஆண்டை மாற்றிவிடவும். காப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1.2k views
-
-
கடந்த சில நாட்களாக யாழ் இணையத்தின் முகப்பு பகுதி மாறாது பழைய செய்திகளே மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. ஏதோ செயலிழந்துள்ள களத்தை பார்வையிடுவது போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. தயவு செய்து இந்த இடையூறுக்கு உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செயும்படி கேடுக்கொள்கிறேன்.
-
- 5 replies
- 1.5k views
-
-
யாழ் இணையத்தளத்தை எல்லோருக்கும் தெரிய வைப்போம். உங்கள் நண்பர்கள் மற்றும் தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், கவனயீர்ப்பு ஏற்பாட்டாளர்கள் அனைவரிற்கும் எமது யாழ் இணையத்தளத்தினை அனுப்பி அறிமுகம் செய்து வையுங்கள். காரணம் இதில் நல்ல பல கருத்துக்கள் புதுப் புது உத்திகள் பகிரப்படுகின்றன. அது பலவகையில் எமது இனத்திற்கு உதவுவதாக அமையும். நான் எனது நண்பர் வட்டாரங்களிற்கு அனுப்பி வைத்துள்ளேன். நிறைய வழிகளில் உதவுவதாக கூறி பதில் அனுப்பி உள்ளார்கள்.
-
- 1 reply
- 894 views
-
-
Podcast Multimedia syndication என்பதை தமிழில் பல்ஊடக பரப்பு எனலாம். இது பல்ஊடக வடிவில் உள்ள தகவல்களை ஒரு கட்டமைப்பான முறையில் பரப்புவது ஆகும். இவற்றின் மூலம் வினைத்திறனான முறையில் நீங்கள் விரும்பும் முக்கியத்துவம் கொடுக்கும் தகவல்களை தாமதம் இன்றி அறிந்து கொள்ள உதவுகிறது. இந்தவகையில் யாழ் இணையத்தில் புதிய பகுதியாக Podcast பகுதியை அறிமுகப்படுத்துகின்றோம். எமது பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழின ஒழிப்பு நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இருக்கின்ற அதேவேளை இவைபற்றிய செய்திகளை வெளியே செல்லவிடாது தடுப்பதிலும் அல்லது திரிபுபடுத்தி பொய்யான செய்திகளை வெளி உலகிற்கு வழங்கி வருகின்றது. வெளிநாட்டு ஊடகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் சிறீலங்கா பற்ற…
-
- 28 replies
- 9k views
-
-
யாழ் முகப்பு அழகாக, நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள் இளைஞன். நான் மண்டையை போடேக்க என்ர மரண அறிவித்தல், நினைவஞ்சலியையும் ஒரு ஒரு கிழமைக்காவது சிரமம் பார்க்காமல் இலவசமாக போடுவீங்கள்தானே இளைஞன்.
-
- 5 replies
- 769 views
-
-
யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
-
- 21 replies
- 3.5k views
- 1 follower
-
-
வேறொரு விடயமாய் இணையத்தை மேய்ந்ததில், இணையத்தளங்களின் இன்றைய பெறுமதி பற்றி பார்க்க நேர்ந்தது. எனக்கு தெரிந்த ஓரளவு பிரபலமான, அதிக வாசகர்களைக் கொண்டுள்ள தமிழ் இணையத்தளங்களின் பெறுமதி சிலவற்றை கீழே இணைக்கிறேன். யாழ் இணையம்: # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $114588.1 # Daily Pageview : 51745 # Daily Ads Revenue : $156.97 புதினம் (செய்தித் தளம்): # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $94301.4 # Daily Pageview : 42392 # Daily Ads Revenue : $129.18 தமிழ்நாதம்: # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $92534.8 # Daily Pageview : 41587 # Daily Ads Revenue : $126.76 தமிழ்மணம் (வலைப்பதிவுத் திரட்டி): # இன்றைய (இணையப்) பெறும…
-
- 12 replies
- 2.6k views
-
-
அனைவரையும் யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம் சார்பில் எமது முதலாவது அறிவுப்பட்டறைக்கு அன்புடன் வரவேற்கின்றோம். இது எமது சங்கம் யாழில் நடாத்தும் முதலாவது செயற்திட்டம் ஆகும். இந்த அறிவுப்பட்டறையின் நோக்கம் யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்ற ஒரு வரைவிலக்கணத்தை எட்டி கருத்துச் சுதந்திரம் பற்றிய அறிவை கள உறவுகளிடையே வளர்த்தல் ஆகும். எமது சங்கத்தின் கெளரவ செயாலாளர் திருவாளர். குறுக்காலபோவான், மற்றும் சங்கத்தின் ஆலோசகர்கள் திருவாளர்கள் மணிவாசகன், ஈழவன், யமுனா ஆகியோர் இந்த அறிவுப்பட்டறையில் தமது ஆலோசனைகளையும் கூறி யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன இந்த தொனிப்பொருளை தெளிவாக்குவார்கள். யாழ் இணையத்தில் நாம் எவற்றையும் எழுதக்கூட…
-
- 8 replies
- 1.8k views
-
-
யாழ் கள உறவுகள், மற்றும் வாசகர்களிற்கு வணக்கம், யாழ் இணையம் அண்மையில் தனது பத்தாவது அகவையைக் கொண்டாடி இருந்தது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம். இதற்காக யாழ் இணையத்தின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்களிற்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும்.. அண்மையில் யாழ் இணையத்தின் முகப்பு மாற்றப்பட்டு.. தோற்றம், அமைப்பு மறுசீரமைக்கப்பட்டு பொழிவுடன் திகழ்கின்றது. அழகுடன் ஜொலிக்கின்றது. இதற்காக இரவு, பகலாக உழைத்தவர்களிற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.. ஆனால்.. யாழ் இணையத்தின் அடிப்படை விசயமான கருத்தாடல் தளத்தில் உள்ள பிரச்சனைகளும்... பிடிபாடுகளும், இழுபறிகளும்... முன்புபோலவே எதுவித மாற்றமும் இன்றி அப்படியே இர…
-
- 39 replies
- 6.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! யாழ் இணையத்தில் சில காலங்களாக பெண்கள் மீதான கீழ்வரும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது... 1. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை கிளறுதல் 2. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை குறிப்பிட்ட ஒரு செய்தித் தலைப்புடன் ஒப்பிட்டு கதைத்தல் 3. கருத்து எழுதும் ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து தாக்குதல் 4. தனிப்பட்ட பெண்ணிற்கு அறிவுரை கூறுவது போல் கூறிக்கொண்டி உண்மையில் பலர் முன்னிலையில் அந்தப் பெண்ணை நையாண்டி செய்தல் யாழ் இணையத்தில் சில காலங்களாக பொதுப்படையில் பெண்கள் மீது கீழ்வரும் தாக்குதல்கள் நடக்கின்றது.... 1. பெண்வர்க்கத்தை நையாண்டி செய்து கவிதை எழுதி ஒட்டுதல் 2. குறிப்பாக உலகச் செய்திகளில், உலகில் எங்காவது ஒரு மூலையில் நடைபெறும் ஆண்கள் சார்ப…
-
- 120 replies
- 12.7k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மெளனத்தோடும் - ஏக்கத்தோடும் - விடுதலைக்காய் வீழ்ந்தவர் நினைப்போடும் - துயரத்தோடும் - எதிர்காலத்தை எண்ணிய பயத்தோடும் - எங்காவது தெரியாதா நம்பிக்கையின் சிறு கீற்று என்கிற எதிர்பார்ப்போடும்... யாழ் இணையம் தனது 12ஆவது ஆண்டை நிறைவு செய்து கொண்டு - இன்று (30.03.2011) 13ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம்" என்பதைத் தவிர சொல்வதற்கெதுவும் இல்லை. மண்ணோடும் மக்களோடும் மாவீரர் நினைவோடும் என்றென்றும் இணைந்திருப்போம். நன்றி யாழ் இணைய நிர்வாகம்
-
- 51 replies
- 5.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம், தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து கொண்டு மீண்டும் புதியதோர் ஆண்டில் யாழ் இணையம் நுழைகின்றது. ஆம்! யாழானாது 16 ஆண்டுகள் கழித்து தனது 17வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால்களும் நெருக்கடிகளும் வந்தபோதும் அவை அனைத்தையும் தாண்டி யாழானது தொடர்வதற்கு யாழ் கள உறுப்பினர்களினதும் வாசகர்களினதும் அன்பும் ஆதரவுமே முக்கிய காரணங்கள் என்பதை நினைவில் கூருகின்றோம். யாழானது தனது கால ஓட்டத்தில் எம்மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து கொண்டு வருவதுடன், பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியும், ஊக்குவித்தும், மற்றும் இலைமறைகாயாக இருந்தவர்களை வெளிக் கொணர்ந்தும் உள்ளது …
-
- 36 replies
- 3.3k views
-
-
வணக்கம்... இந்த வருடம் மார்ச் 30, 2008 உடன் யாழ் இணையத்துக்கு அகவை பத்து ஆகின்றது. சென்ற வருடம் அகவை ஒன்பதை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருந்தோம். இது சம்மந்தமாக யாரோ ஏதோ புத்தகம் எல்லாம் வெளிவிடப்போவதாய் சென்ற வருடம் சொன்னார்கள். பிறகு ஆக்களின் சத்தத்தையே காண இல்லை. அடியேன் முன்பு புதுசு புதுசாக பல கருத்தாடல்கள் யாழில் துவங்கி யாழ் கள கல்விமான்கள், பகுத்தறிவாளர்கள், தேசியவாதிகளிடமிருந்து கல்லெறிகளும், துரோகி என்ற பட்டங்களும் வாங்கி நன்றாக அனுபவப்பட்டு விட்டதால் இந்தத்தடவையும் ஏதாவது வித்தியாசமாக செய்யத்தொடங்கி கடைசியில் பலகோடி உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில் எனது கோவணத்தை பறிகொடுக்கும் முட்டாள்தனமான வேலையை செய்யாமல் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்று பார்க்கின…
-
- 19 replies
- 2.8k views
-
-
யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? யாழ் இணையம் என்கிற ஒரு இணையத்தளம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? நண்பர்கள் மூலமா அல்லது கூகிள் தளமூடாகவா? அல்லது வேறு தமிழ் தளங்களூடாகவா? யாழ் கருத்துக்களத்தில் இணைய வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது? யாழில் நடந்த விவாதங்களா? கவிதை கதை போன்ற ஆக்கங்களா? அல்லது வேறு ஏதுமா?
-
- 117 replies
- 20.3k views
-
-
யாழ் இணையம் ஏன் தடைப்படுகிறது? மற்றைய தளங்கள் எல்லாம் பிரச்சனை இல்லாமல் வேலை செய்கிறது யாழ் இணையம் மட்டும் தடைப்படுகிறது. என்னுடைய இன்ரநெற் கனெக்சனில் எந்தத் தடையும் இல்லை. எல்லாத் தளங்களும் வேலை செய்யும் போது ஏன் யாழ் மட்டும் தடைப்படுகிறது? இப்போதும் கடந்த 27 மணிநேரத்திற்கு மேலாக வேலை செய்யவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னைப் போல் வேறு யாருக்கேனும் தடைப்படுகிறதா?
-
- 11 replies
- 1.3k views
-
-
நண்பர்களே! ஒரு தவறு நடந்து விட்டது. யாழ் இணையம் பற்றிய கருத்துக்கணிப்பு என மேலே ஒரு இணைப்பு இருக்கிறது இல்லையா? அதில் நான் கலந்து கொண்டேன். ஆனால் யாழ் இணையம் என்பது வேறு, யாழ் கருத்துக்களம் என்பது வேறு என்பதை மறந்து யாழ் கருத்துக்களம் பற்றித்தான் கேட்கிறார்கள் என்று நினைத்து அதற்கேற்ப படிவத்தை நிரப்பி அனுப்பியும் விட்டேன். சில நொடிகள் கழித்துதான் என் தவறு புரிந்தது. நான் அனுப்பிய படிவத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டா என இணையத்தளத்தை நடத்துபவர்களிடம் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்! தொல்லைக்கு வருந்துகிறேன்!
-
- 1 reply
- 639 views
-
-
வணக்கம், யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு இக்கருத்துக்கணிப்பின் மூலம் நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் கவனமாக ஆராயப்பட்டு யாழ் இணையத்தினை மேலும் மெருகேற்ற வழிசமைக்கும். அதேவேளை இங்கு பதியப்படும் விடயங்கள் அனைத்தும் அநாமதேயமாகவே பார்க்கப்படும் என்பதால் தனிப்பட்ட ஒருவர் இன்ன கருத்தினை வைத்தார் எனப் பார்க்கப்பட மாட்டாது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கருத்துக்களத்திலும் முகப்பிலும் இக் கருத்துக்கணிப்பானது காண்பிக்கப்பட்டபோது பங்குபற்றத் தவறியவர்கள் கூடிய விரைவில் பங்குபற்றி உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது. நன்றி
-
- 15 replies
- 1.8k views
- 1 follower
-