யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
அன்பான தமிழ் பேசும் உறவுகளே, பல தடைகள், சவால்கள் எல்லாம் கடந்து அனைத்து உறவுகளினதும் அன்புடனும் ஆதரவுடனும் மார்ச் 30 ஆம் நாளாகிய இன்று (தமிழீழ நேரப்படி) யாழ் 14 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. தமிமீழப் போராட்டம் தமிழ் ஈழ மண்ணில் இராணுவ வடிவப் போராட்டமாக வீறு கொண்டு நடைபெற்று வந்த காலகட்டத்தில் அந்த மக்களின் விடுதலை அவாவையும், சுதந்திரத் தாகத்தையும், அதற்காக அவர்கள் சுமந்த வலிகளையும், விடுதலை நெருப்பில் தம்மை கொடையாக்கிய மாவீரச் செல்வங்களின் தியாகங்களையும் தமிழ் பேசும் உலகெங்கும் இணையத்தினூடாக எடுத்தியம்ப மோகன் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட யாழ் இணையம், இன்று இராணுவ ரீதியான போராட்டம் உறைநிலைக்கு வந்து அதை முன்னின்று நடத்திய மக்களின் வாழ்வில் வலி மட்டுமே …
-
- 81 replies
- 7.2k views
-
-
இந்தக் களத்தைப் பார்வையிடுபவன் என்ற வகையில் சில குறிப்புக்கள் 1. இங்கு தமிழ் தேசிய ஆதரவின் பயன் என்பது தகாத வார்த்தைகளில் பேசுவதா? 2. இங்கு தமிழீழ அரசியல் சாணக்கிய ஆய்வு என்பது ஏட்டிக்குப் போட்டியாக கற்பனைக்கு ஆதாரங்கள் இன்றி இங்குள்ள சிலருக்கு பெருமைக்கு எழுதுவதுதானா? 3. தமிழ் தேசியம் என்பது இங்குள்ள பலரின் விருப்பப்படி விமர்சனங்கள் தாண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் அப்படியா? 4.சிலர் தமிழ் தேசிய ஆதரவு என்ற படியே நக்கல் நளினம் செய்வதும் புலிகளின் போராற்றல் படைவலு என்பவை குறித்து தம் பாட்டிற்கு வைக்கும் நளினத்தனமான கருத்துக்களுக்கு இக்களம் ஆதாரம் காட்ட முடியுமா? இதனால் இவர்கள் வளர்க்கும் தேசிய பலம் என்ன? 5. ஒரு பக்கம் தேசியதுக்கும் தாயகத்துக்காவு…
-
- 56 replies
- 7.1k views
-
-
அன்புடையீர், யாழ்களத்தில் கருத்து வெட்டுக்களால் காயம் படாத முன்னணிக் கருத்தாளர்கள் மிகவும் அரிது. களத்தின் தரத்தை உயர் நிலையில் பேண வேண்டி சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்ற போதும், அது தனிநபரின் கருத்துக்களை முளையிலேயே கருக வைப்பதும், குறுகிய எல்லைக்குள் மட்டுமே நிற்க நிர்பந்திப்பதும் முன்னேற்றகரமானது அல்ல என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. காலத்திற்கு காலம் சில கருத்தாளர்களின் கருத்துக்களை கத்தரிக்குமாறு சக கருத்தாளர்களே கோருவதும், நிர்வாகம் சில விதிகளை விதித்து பின்னர் தளர்த்தும் மேலும் இதுபோன்ற பல நடவடிக்கைகள் இரு தரப்பிலும் தவறுவிடும் இயல்பு உள்ளதை உணர்த்துகின்றது. நோக்கம் 1) எனவே மக்களால் மக்களுக்காக என்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வோர…
-
- 57 replies
- 7.1k views
-
-
-
சத்தியம் எடுக்க தயாராவோமா? எந்தவித - தெளிவான - சார்புமின்றி.......... அல்லது - அதனை தெளிவு படுத்த தயாருமின்றி.. படிப்படியாக.... ஒரு விசம பிரச்சாரத்துக்கு . முண்டு கொடுக்க தயாராகிவிட்ட .. அல்லது - மாற்றுக்கருத்து என்ற போர்வையில். தங்களின் திட்டத்துக்கு . இலகுவாகவே - எம் கருத்தை பயன்படுத்தும் - துணைக்கிழுக்கும் ................... சூழ்ச்சிகளை - விளங்காமலே துணைபோகிறோமா? குருவிகள்.....................மதிவதனன் - வசம்பு. இன்னும் - அவர்கள் கருதை ஒத்தவர்கள். இரட்டை ............ வேசமின்றி. நேரடியாகவே அவர்களை பற்றி அவர்களே - விளக்கம் சொல்லும் வரை - எங்களில் எத்தனைபேர் - இவர்கள் கருத்துக்கு பதிலே எழுதபோவதில்லை - என்று சொல்ல தயார்? 8)
-
- 67 replies
- 7k views
-
-
சில நிமிடங்கள் யாழ் வேலை செய்யவில்லை!!!! ... என்ன நடந்தது???? ...
-
- 119 replies
- 7k views
-
-
-
கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம், நலமறிய ஆவல். இந்த பதிவை ஒரு சகோதர நலம் விசாரித்து, வேற்றுமைகளை மறந்து, நாம் நாமாக இருக்கும் பதிவாக பாவியுங்கள். ஈழத்தை விட்டு தூர இருக்கும் நேரத்தில், எங்களை இணைத்த பெருமை யாழுக்கே. என்னை போல பலருக்கு தமிழ் கற்பித்து எழுத வைத்ததும் யாழே. குடும்பத்தை விட்டு வந்து தனியே இருக்கும் பல சகோதரர்களுக்கு, அக்கா, தங்கை, நண்பர்கள் என நல்ல உள்ளங்களை அறிமுகப்படுத்தியதும் யாழ் தான். யாழில் அப்போ அப்போ சிறிய பிரச்சனைகள் வருவது சகஜம் தானே. எங்களில் யார் தான் இதில் சிக்கவில்லை?! தனி மனித தாக்குதல் சில நேரங்களில் நடப்பது தானே! முடிந்தால் பதில் சொல்லுங்கள், நிர்வாகத்திற்கு தெரிவுபடுத்துங்கள். அல்லது அப்படியே விட்டுவுடுங்கள். பதில் சொன்னால…
-
- 58 replies
- 6.9k views
-
-
புள்ளியை களவெடுப்பது யார்? உண்மை தெரிஞ்சாகணும்....... காலையில் இருந்த புள்ளி மாலையில் இல்லை. எங்கு தேடினாலும் பிழையான கருத்து நான் எழுதி குறையவில்லை. என்ன நடக்குது இங்கே.... இந்த புள்ளியை வைச்சு ஒரு மனுசன் , வெறும் தேத்தண்ணியும் குடிக்க முடியாது.... என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கும் இப்படியான..... மண்டை விறைக்கும் அனுபவங்கள் இருக்குதா?
-
- 76 replies
- 6.9k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், யாழ் கருத்துக்களத்தில் தமிங்கிலத்தில் எழுதுவதை இனிவரும் காலங்களில் தவிர்க்க முயற்சி செய்வது நல்லது. படைப்புகளில் அவை தேவையொட்டி வருவது தவிர்க்கமுடியாதது. அதேபோல், அறிவியற் சொற்களுக்கு தமிழ் தெரியாதபோது ஆங்கிலத்தில் அவற்றை எழுதுவதும் பிரச்சனைக்குரியதில்லை. ஆனால், நாம் எழுதும் கருத்துக்களில் அவசியம் இன்றி நாமே இவற்றைத் திணிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறோம். எடுத்துக்காட்டு: காய் கவ் ஆர் யூ? வட் ஆர் யூ டூஇங் பேர்த்டே டவுட் நோர்மலா ... இப்படிக் களத்தில் ஆங்காங்கு தமிங்கிலத்தில் எழுதுவது அவசியமற்று திணிக்கப்பட்டு வருகிறது. நகைச்சுவைக்காக இப்படி எழுதுவதே பிறகு நாளடைவில் பெருகி வழமையாகிவிடும். What are yo…
-
- 54 replies
- 6.7k views
-
-
-
யாழ்கள வாசகர்களாகிய நாம் யாழ் களத்தை மெருகூட்ட ஏகமனதாக பின்வரும் பரிந்துரைகளைகளை நிர்வாகத்திற்கு முன்வைக்கின்றோம். 1) "செய்திக்களம்" என்று புதிய ஒரு களம் ஆரம்பிக்கப்படல் வேண்டும். தற்போதுள்ள தகவற்களத்திலிருந்து "செய்திகள் தமிழீழம்", "செய்திகள் உலகம்" என்பவற்றிற்குப் பதிலாக இது செயற்படும். 2) பரிந்துரைகள் செய்திக்களத்திற்கு மட்டுமே: மற்றவை தற்போதுள்ளது போலவே இயங்கலாம். 3) செய்திக்களத்தில் ஒரு குறிப்பிட்ட அங்கத்துவ நிலை உள்ளவர் மட்டுமே செய்திகளைப்போட முடியும். உதாரணமாக இவர்களின் அங்கத்துவநிலையை S1 என்போம். அப்படி போடுபவர் அதில் எதை முக்கியம் என்றோ சர்ச்சைக்குரியது, விமர்சனத்திற்குரியது, சிந்திக்கப்பட வேண்டியது விவாதத்திற்குரியவை என்ற பகுதிகளை அடையாளப்ப…
-
- 40 replies
- 6.7k views
-
-
அன்பான உறவுகளுக்கு, மோதல்கள் நடைபெறுவதாக அறியப்படுகிற செய்தி ஓரளவு உறுதிப்படுத்தப்படக் கூடியதாக இருப்பினும், மேலதிக விபரங்களோ அல்லது இழப்பு விபரங்களோ எதுவும் நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறப்படவில்லை. "கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்" என்கிற இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகவோ, வாய்வழி பகிரப்பட்ட தகவல்களாகவோ, சில தமிழ் ஊடகங்களின் வழி வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவோ தான் இருக்கின்றன. இவற்றின் உண்மைத்தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஊரில் தொலைத் தொடர்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முட…
-
- 4 replies
- 6.7k views
-
-
உறவுகளே எனக்கு ஒரு உதவி வேண்டும்....எனக்கு ஒரு நல்ல தமிழ் பெயர் வேண்டும்...இல்லை உங்களுக்கு தெரிந்த பெயர் select pannura website தெரிந்தால் சொல்லுங்கள்....மோகன் அண்ணா மன்னிக்கவேண்டும் பெயர் ஒன்று வேண்டும் அதுதான் யாழில் போட்டேன்... தவறாய் இருந்தால் எடுங்கள்....சு, சோ, ல, சே இந்த வரிகளில் நல்ல தமிழ் பெயர் இருந்தால் சொல்லுங்கள்.. சின்ன பெயராய் சொல்லுங்கள்... பெண் குழந்தைக்கு பெயர் வேண்டும் முக்கிய குறிப்பு: என் குழந்தைக்குதான் பெயர் என்று தப்பாக எடுக்கவேண்டாம்...எனக்கு இன்னும் கல்யாணமே ஆக வில்லை...இது என் அக்காவின் குழந்தைக்கு...
-
- 38 replies
- 6.6k views
- 1 follower
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்…
-
- 71 replies
- 6.6k views
-
-
சர்வதேச நாடுகளில் ஜனநாயக வழியின் கீழ் ஆட்சி நடக்கும் பிரதேசங்களில் பாராளுமன்றங்களின் பங்களிப்பு என்பது முக்கியமானவை. குறிப்பாக அங்கு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடைபெறும் வாதப் பிரதி வாதங்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லத்தக்க முடிவுகளை ஆளும் கட்சி எடுக்க தூண்ட உதவுவதோடு..சர்வதேச விவகாரங்கள் குறித்தும்..வாதங்களும் தீர்மானங்களும் எட்டப்படும். அவ்வகையில்...யாழ் களத்திலும் ஒரு தமிழ் இளையோர் பாராளுமன்றைத் தெரிவு செய்து... நடைமுறை அரசியல்..பொருளாதார..சமூக...விவக
-
- 67 replies
- 6.4k views
-
-
-
அண்மையில் ஆறுமுகம் என்னும் ஒரு உறுப்பினர் பல வடமொழி கலந்த ஆக்கங்களை பிரதான களத்தில் இணைத்து வருகிறார், இது சம்பந்தமாக நிர்வாகத்திடம் சில கேள்விகள். 1) வட மொழி தமிழ் மொழியா? 2) அப்படி இல்லாது விடின் கள விதிகள் மொழி சம்பந்தமாக இவ்வாறு இருக்கிறது, 3. மொழி யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும். ஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்: அவற்றுக்குரிய பகுதியில் மட்டும் இடப்படல் வேண்டும். அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும் அல்லது செய்திகளாக இருப்பின் அவற்றின் உள்ளடக்கத்தை தமிழில் சுருக்கமாக எழுதி, மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும். மேற்படி கள விதிக்கு அமைவாக இந்த ஆக்கங்கள்…
-
- 48 replies
- 6.3k views
-
-
வணக்கம் மோகன்! இன்று மாலையிலிருந்து யாழ் இணையம் பார்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன! யாராவது ஏதும் செய்து விட்டார்களா? என்ன நடந்தது யாழிற்கு?
-
- 48 replies
- 6.3k views
-
-
யாழில் உறுப்பினர் மத்தியில் குழுமங்கள் உருவாக்கப்படுவது குறித்தும்... அதில் நீங்கள் எந்தெந்த குழுமங்களில் இடம்பெற விரும்புகின்றீர்கள் என்றும் உங்கள் கருத்துக்களை பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளுங்களேன். அது எல்லோரும் ஒருங்கிணைந்து முடிவுகள் எடுக்கவும் ஏற்றத்தாழ்வற்ற நிலையைப் பேணவும் உற்சாகக் குறைவின்றி அனைவரும் களத்தின் புனரமைப்பில் பங்கெடுக்கவும் அது நல்ல பயன்பெறவும் உதவிடும்..! வாக்கெடுப்பில் ஒரு தெரிவின்றி பல தெரிவுக்கு இடமளிக்கப்பட்டிருப்பினும்.. உங்கள் தெரிவு ஒன்றாக இருப்பது விரும்பத்தக்கது. உங்கள் ஆதரவுக்கு நன்றி..!
-
- 45 replies
- 6.3k views
-
-
-
11-January 06 அன்று தொட்டு இன்றுவரை உறவாடிய உறவுகள்... கருத்துக்களம் ஒன்றினை ஆரம்பித்து, உறவுப்பாலமாய் அனைவரையும் கரம் இணைத்த பெருமைக்குறியவர் மோகன். தனக்குள்ள பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லாமலே அனைத்தையும் தன் சிரம் தாங்கி நிற்கிறார். கருத்துகள் எதனையுமே முன்வைக்காமால், கருத்துகளால் ஏற்படும் முரண்பாடுகளுக்குள் தன்னை ஐக்கியப்படுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். சொல்லில் அடங்கா இன்னல்களுக்கு மத்தியிலும் வீறுநடைபோடும் அவர் உடல் நலமும், மனதுக்கு வலிமையும் தர இறைவனை மன்றாடிக் கொள்கிறேன். மோகன் - கை கொடுக்கும் கை யாழ்களத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்திருக்கும் யாழ்கள உறவுகளையும் எண்ணிப்பார்க்கிறேன். யாழ்களம் இல்லாமல் உறவுகளும் இல்லை. உறவுக…
-
- 74 replies
- 6.3k views
-
-
அன்பு நண்பர்களே, வணக்கம் சில நாட்களுக்கு முன் தமிழ்மணம் பதிவாளர்கள் சந்திப்பு ஒன்று சென்னையில் ஏற்பாடாகியிருந்தது. அதற்காகவும் வேறு சில பணிகளுக்காகவும் சென்னை சென்றிருந்த நேரத்தில் யாழ்கள உறுப்பினர் திரு.லக்கிலுக்கை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது குறித்து நேற்று ஒரு பதிவாளர் இங்கு கிண்டல் தொனியில் பதிவு செய்திருந்தாகவும் அதை தான் நீக்க கோரியதாகவும் லக்கி என்னிடம் தொலைபேசியில் இரவு தெரிவித்தார். அந்த அன்பருக்கும் உறவுகளுக்கும் விளக்கம் அளிக்கும் முகமாகவே இந்த விளக்கம். 1) லக்கியுடனான சந்திப்பு முன்பே முடிவு செய்யப்பட்டதல்ல 2)இந்த சந்திப்பு ஒரு உளப்பகையை முடிவுக்கும், ஒரு நட்பை துளிர்ப்புக்கும் வித்திட்டது 3) லக்கி எழுத்தில்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்…
-
- 53 replies
- 6.2k views
-
-
களத்தில் உள்ள நாட்காட்டியில் தமிழரின் முக்கிய நினவு தினங்களை (recurring event ஆக)பதிவு செய்து வைத்தால் உதவும் அல்லவா? சாதாரண அங்கத்தவர்கள் ஏதாவது பதிய முனைந்தால் Sorry, but you do not have permission to use this feature. If you are not logged in, you may do so using the form below if available. அதுதான் நிர்வாகம் குறட்டை விடுவதை நிறுத்ததா?
-
- 41 replies
- 6.2k views
-
-