வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
கனடாவில் 9/11 க்கு பின்னர் தடை செய்யப்பட்ட "பயங்கரவாத அமைப்புக்கள்" உள்ளன. அதில் தமிழர் விடுதலை அமைப்புக்கள் இரண்டும் உள்ளன. ஆனால் பல காலமாகவே இங்கு "மாபியா" குழுக்கள் உள்ளன, முக்கியமாக இத்தாலியில் இருந்து வந்தவர்கள். அவர்களும் பல "பயங்கரவாத" ( வரைவிலக்கணம் அற்றது ) செயல்களை புரியினும் அவர்கள் தடை செய்யப்படவில்லை. கனடாவில் இரு பெரு மாபியா குழுக்கள் உள்ளன. அவர்களுக்குள் பெரிய கோஸ்டி மோதல்கள் நடந்து அண்மையில் ஒரு குழுவின் "கோட் பாதர்" ( இப்படி ஒரு ஹோலிவூட் படமும் உள்ளது) தலைவர் அவரது வீட்டில் மனைவி மகளுக்கு முன்னால் ஒரு "சினைப்பர்" தாக்குதலில் கழுத்தில் காயம் அடைந்து கொல்லப்பட்டார். சில காலத்திற்கு முன் இவரது பேரன் கொல்லப்பட்டார். இவர் மகன் நியுயோர்க் சிறையில் ப…
-
- 0 replies
- 997 views
-
-
கனடாவின் அதி உயர் கடேற் விருது அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் இந்த விதை வழங்கி கெளரவித்தார். கனேடிய கடேற் விருதுகளில் அதி உயர் விருதாகக் கருதப்படும் Lord Strathcona Award விருதே, அமோஸிற்கு வழங்கப்பட்டுள்ளது. உடல் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் கடேற் வீரர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அமோஸ் தற்போது கனேடிய பிரஜையாவார். மணி டன்ஸ்டன் - மேரி டண்ஸ்டன் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வாரன அமோஸ் American Football விளையாட்டிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த…
-
- 9 replies
- 1.7k views
-
-
கனடாவின் அமைச்சர் கொழும்பில் பேச்சுவார்த்தை ஜதிங்கட்கிழமைஇ 04 மே 2009, 09:49 பி.ப சிறிலங்காவுக்கான பயணத்தினை இன்று திங்கட்கிழமை கொழும்பை வந்தடைந்த கனடாவின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான அமைச்சர் பிவேர்ளி ஜே.ஓடாஇ வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை இன்று காலை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார். வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும்இ வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பராமரிப்பது தொடர்பாகவுமே இந்தப் பேச்சுக்களின் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர…
-
- 1 reply
- 964 views
-
-
கனடாவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழ் பெண் நியமனம் கனடா நாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார். கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார். வான்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992ஆம் ஆண்டு சட்டக்கல்வி…
-
- 0 replies
- 2.3k views
-
-
கனடாவின் ஒன்டாரியோவில் ஒருவாரத்துக்கு தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனம் - விஜய் தணிகாசலம் Published By: Vishnu 11 May, 2023 | 09:47 PM (நா.தனுஜா) கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் 'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக' பிரகடனப்படுத்தப்படவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் உலகமக்களிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் தொடர்பில் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ…
-
- 1 reply
- 351 views
-
-
கனடாவில் இடம்பெறவுள்ள ஒரு சட்டமாற்றம் பலரது எதிர்பார்ப்பையும் மீறி அதீத உரிமைகளைப் பாதுகாப்புத் தரப்பிற்கு கொடுப்பதாக ஒரு கண்டனத்தைப் பெற்றாலும், அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. கனடியப் பாராளுமன்றத்தில் ஆளும்கட்சியும் பிரதான கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியும் ஆதரவு தெரிவித்து விட்டன. ஒரு உறுப்பினரைப் பாராளுமன்றத்தில் கொண்டுள்ள பசுமைக் கட்சி மாத்திரமே பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.இவ்வாறு கடந்த சனிக்கிழமை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார். அநாமதேயப் பெயர்களில் மின்னஞ்சல் மூலம், சமூக வலைத் தளங்களில் பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக…
-
- 0 replies
- 473 views
-
-
கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடாவின் சுதேசிய விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஹரி ஆனந்தசங்கரி | Virakesari.lk
-
- 1 reply
- 562 views
-
-
கனடாவின் தேசத்து மைந்தர்கள் நாம்!!! www.cbc.ca/1.3836796
-
- 2 replies
- 773 views
-
-
சாம் (உண்மையான பெயர் அல்ல) என்ற தமிழர் கனடாவின் ரொறன்ரோ பிரதேச பீற்சா உணவகம் ஒன்றின் விநியோகத் தொழிலாளி. ஏதேச்சையாக, தனக்கு நடந்த சம்பவத்தை சாம் எனக்குக் கூறக் கேட்டபோது, இந்தப் பதிவினை இங்கே இடவேண்டும் என்று தோன்றியது. இதோ சாமின் கதை. ஓரு இரவு, வழமைபோல் சாம் தனது உணவகத்தில் இருந்து தான் விநியோகம் செய்யவேண்டிய பீற்சாவுடன் வெளியேறியபோது ஒரு பி.எம்.டபிள்யூ எக்ஸ்-5 ரக வாகனம் இவரது வாகனத்தை வழிமறித்து அவசரமாக வந்து நின்றதாம். அதிலிருந்து ஒரு இளம் தமிழ் பெண் பதைபதைப்புடன் இறங்கி இவரிடம் நீங்கள் தமிழரா என ஆங்கிலத்தில் வினவினாராம். இவரும் ஆம் என்று கூறவே அந்தப் பெண் தான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் தனக்கு உதவமுடியுமா எனவும் மிகுந்த பதைபதைப்புடனும் வெளிப்படையான ம…
-
- 20 replies
- 3.6k views
-
-
கனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரிகனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரியோவின் 1 கோடியே 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர்யோவின் 1 கோடியே 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர் https://www.680news.com/2020/03/23/premier-ford-announces-the-shutdown-of-non-essential-services/ நாளாந்தம் பாவிக்கும் மருந்து, மாத்திரை, insulin போன்றவற்றை 3 வாரத்திற் தேவையானவற்றைஎடுத்து வையுங்கள் உங்கள் குடும்ப வைத்தியருடைய தொலைபேசி எண்ணை சரி பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் வழமையான மருந்தகத்தின் Pharmacy தொலைபேசி எண்ணை எழதி வையுங்கள். வீட்டிலே ஓய்வாக இருங்கள் இந்த நாட்களும் கழிந்து போகும் …
-
- 35 replies
- 2.9k views
-
-
கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு. கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு தெரிவிக்க முனைந்து, மூக்குடைபட்டது, இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் உருவான அமைப்பு. 12,000 தமிழர்கள் வசிக்கின்றனர் என்பது நகரத்தின் தரவு. அதனை உபயோகிக்காது, வெறுமனே 4,000 தமிழர்கள் என்று சொல்வதன் காரணம் என்ன? ஆ.... வந்து.... தமிழர்கள் இலங்கையில் மட்டுமில்லை, தமிழகத்தில், மலேசியாவில், என்று வசிக்கிறார்கள்... அதுதான்.... வந்து..... அப்படித்தான்..... ஹி.. ஹீ. உங்களது ஆவணத்தில் உள்ள அனைத்துமே,இலங்கைத் தூதரக ஆவணத்தில் உள்ளது போன்றே உள்ளது. உங்களுக்கும், இலங்கை தூதரகத்துக்கும், நேரடியாக அல்லது மறைமுகமான தொ…
-
- 6 replies
- 1.4k views
-
-
கனடாவின் பிரின்ஸ் எட்மண்ட் தீவில் பணிபுரிந்த இலங்கையர்கள் மாயம் மு.சுப்பிரமணியம் கனடாவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவு பண்னையில் இருந்து வேலையில் இலங்கையர்கள் காணாமற் போயுள்ளதாக கன் வெஸ்ட் நியூஸ் சேவை தெரிவித்துள்ளது . தப்பிச்சென்ற 11 பேரும் கனடாவில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளாதாக பிரின்ஸ் எட்வாட் தீவு பா .உறுப்பினர் வயிலே ஈஸ்டர் எச்சரித்துள்ளது . செய்யவில்லையென அது உண்மைதான் எனினும் அவர்கள் காணமல் போணமை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்டர் ஒட்ட்டாவிலிருந்து தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளதாக செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது. காணமல் போன இவ் 11 பேரும் மே மாத முற்பகுதியில் 8 மாத தற்காலிக வேலை புரிவதற்கான விச…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை ரொரன்டோ Crowne Plaza Hotel ல் "Refugees, Forced Migration and Mental Health – Recovery from Trauma and De-stigmatization of Mental Illness" என்ற கருவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலம் தொடர்புடைய psychosis, schizophrenia, Autism போன்ற விடயங்களை குடும்பங்கள் சமூகங்கள் மன நல நிபுணர்கள் எவ்வகையில் அணுகிகிறார்கள் என்பது தொடர்பான விடயங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திலும் உளநலம் தொடர்பான பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக நோக்கப்படுவதால் இவ்வகையான உளநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்போது சம்மந்தப்பட்டவர்களின் சமூக கலாச்சாரப் பின்னணிகளை கவனி…
-
- 8 replies
- 1.6k views
-
-
கனடாவின் மாபெரும் ‘தமிழர் தெருவிழா’ - கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் பங்கேற்புடன்... கனடியத் தமிழர் பேரவையினரால் வருடாவருடம் நடத்தப்படும் 'தமிழர் தெருவிழா' மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாக ரொறொன்ரோவில் (டொரண்டோ) நடைபெற்றது. இவ்வருடம் முதன்முதலாகத் தமிழர் தெருவிழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொண்டு விழாவுக்குப் பெருமை சேர்த்தார். ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு திகதிகளில் ரொறொன்ரோவின் பிரதான வீதியான மார்க்கம் ரோட்டை இருபக்கமும் அடைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விழாவில் இரண்டு லட்சம் மக்கள் கலந்துகொண்டது ஒரு வரலாற்று நிகழ்வு. புலம்பெயர் மக்களின் விழா ஒன்றுக்கு, அந்த நாட்டின் பிரதமருடன்…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ் பேசும் அங்கத்தவர் லோகன் கணபதியின் சிபார்சை ஏற்று தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் மீண்டும் கௌரவம்.. தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்ததன் முலம் தமிழ் மக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கிய மார்க்கம் நகரசபை மீண்டும் ஒரு தடவை உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தனது நிர்வாகத்தின் கீழ் வரும் முக்கிய வீதி ஒன்றுக்கு "வன்னி வீதி" என்று பெயர் சூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது. மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரான திரு லோகன் கணபதியின் சிபார்சினை ஏற்று சபை அங்கத்தவர்கள் அனைவரதும் ஏகோபித்த ஆதரவோடு இந்து வன்னி வீதி என பெயர் சூட்டும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டியுள்ள்து. மார்க்கம் நகர சபையின் தமிழ் பேசும் அங்கத்தவராகத் திகழும் திரு லோகன் கணபதி அவர…
-
- 41 replies
- 3.8k views
-
-
வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் மார்க்கம் நகரில் உள்ள ஹில்டன் 5 நட்சத்திர ஹோட்டல் (HILTON SUITES INTERNATIONAL) மண்டபத்தில் நடைபெற்ற MISS TAMIL CANADA-2015 விருது வழங்கும் விழாவில் 14 இளம் போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். மேற்படி விழாவிற்கு சுமார் 500 பார்வையாளர்கள் கலந்துகொண்டார்கள். மேற்படி அழகு ராணி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் நடுவர்கள் பலவிதமான போட்டிகளையும் நடத்தி, அவர்தம் திறமைகளை கண்டறியும் உத்திகளையும் மேற்கொண்டார்கள். இறுதியில் செல்விகள் தீப்தி ஞானேஸ்வரன், விதுசாயினி பரமனாதன்,சுயிரபி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் தட்டிக்கொண்டனர். பல கலை நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன. http://www.canadamirror.com/canada/45636.html#sthash.xLMKmbg8.dpb…
-
- 16 replies
- 1.4k views
-
-
நகீத் மென்ஷி நேற்று கனடாவின் எண்ணெய் வளம் கூடிய அல்பேட்டா மாநிலத்தில் உள்ள கால்கரி நகர பிதாவாக தெரிவானார். இவர் முதலாவது முஸ்லீம் நகர பிதாவாவார் . http://www.nenshi.ca/new/ கனடாவில் அதிகளவு புலம்பெயர் மக்களை கொண்ட டொராண்டோவில் தான் அண்மையில் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது அவர்களின் பிள்ளைகள் நகர பிதாவாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கால்கரி அதிகளவு பெரும்பான்மையினரை அதுவும் வலது சாரிகளை கொண்ட இந்த நகருள் இவர் வெற்றி பெற்றது பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. இவர் "நாவல் (நிறம்) புரட்சி)" [ Purple Revolution] என்ற பெயருடன் தன் கொள்கைகளை பரப்பினார். http://www.purplerevolution.ca/index.php?permalink=true&entry=186 மேலும் பேஸ்புக் (Facebook), ட்…
-
- 2 replies
- 834 views
-
-
கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு 05 Nov, 2025 | 11:38 AM (இணையத்தள செய்திப் பிரிவு) கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வெற்றியுடன், கியூபெக், மொன்றியலில் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை அவர் நாட்டினார். கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா, இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட லிங்கராஜா தியாகராஜா (சட்டத்தரணி …
-
- 0 replies
- 282 views
-
-
கனடாவின் ரொறன்ரோ மாநகர நகர பிதாவின் புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. "இந்த காணொளியில் ஆங்கில தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளது" http://www.thestar.com/news/gta/2013/11/07/mayor_rob_ford_caught_in_video_rant.html
-
- 2 replies
- 682 views
-
-
-
- 0 replies
- 767 views
-
-
தயவு செய்து இந்த மனுவில் கையொப்பம் இடவும். நன்றி. http://liberatetamils.net/
-
- 1 reply
- 1.5k views
-
-
கனடாவிலும் புலி ஆதரவு முத்திரை வெளியிட்ட சர்ச்சை பிரான்ஸின் தபால் சேவைத் துறையினரால் வெளியிடப்பட்ட புலிகள் சார்பு முத்திரைகள் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் கனடாவின் ஒட்டாவாவைத் தளமாகக் கொண்ட இலங்கையர் அமைப்பொன்றானது கனடிய அரசாங்கத்தின் கவனத்தைத் திருப்பியுள்ளது. புலிகளின் சின்னங்களைத் தாங்கிய முத்திரைகளை கனடாவில் சுற்றோட்டத்திற்கு விட்டிருப்பது தொடர்பான விவகாரமானது கனடிய அரசு கவனம்செலுத்தும் நிலைமையைத் தோற்றுவித்தி ருக்கிறது. கனடாவின் இலங்கை ஐக்கிய தேசிய சங்கமானது புலிகளின் முன்னணி அமைப்பான தமிழ் இளைஞர் அமைப்பின் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. கனடாவின் தபால் சேவையை இந்த அமைப்பானது துஷ்பிரயோகம் செய்திருப்பதாகக் குற்றச்சா டுத் தெரிவிக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
கனடாவில் "விடுதலைவேள்வி" திகதி: 24.09.2009 // தமிழீழம் கனடா வாழ் தமிழீழ மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக தியாக தீபம் திலீபனின் 22வது நினைவு ஆண்டில் கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுக்கும் மாபெரும் 24 மணிநேர உண்ணா நோன்பு, "விடுதலைவேள்வி". சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசில் தீர்வை தமிழீழ மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும். வதை முகாம்களில் உள்ள மக்களை மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற ஆவண செய்ய வேண்டும். இன அழிப்புச் செய்த, செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து சர்வதேச சமூகத்தை வேண்டி தீலிபன் நினைவுடன் உண்ணா நோன்பு தொடர்ச்சியாக கலை நிகழ்வுகளும் இடம்பெறும். காலம்: வெள்…
-
- 0 replies
- 979 views
-
-
கனடாவில் - தென்மராட்சி மக்களிடையே விமர்சனங்களை உண்டுபண்ணியுள்ள தலைமைத்தெரிவு..!! ஒரு பார்வை. கனடாவிலுள்ள யாழ் - தென்மராட்சி பிரதேச மக்கள் மத்தியில் குறிப்பாக தென்மராட்சி பிரமுகா்கள் வர்த்தகர்கள் பிரதேச நலன்விரும்பிகள் மற்றும் ஊர்ச்சங்கங்களது தலைவா்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த குழப்பநிலைக்கான காரணம் அண்மையில் ஐரோப்பியநாடுகளில் இருந்து கனடா வந்திருந்த வைத்தியர் திரு-புவிநாதன் தலைமையிலான குழுவினரது நல்லெண்ண வருகையும் திட்டங்களும் என தெரியவருகிறது. தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி தொடர்ப்பிலான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற பலசுற்று சந்திப்புகளும் - அதனை மையமாகவைத்து கனடாவிலுள்ள சிலர…
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடாவில் 'தழும்பகம்' தமிழ் இன அழிப்பு காட்சியகத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வு கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் (CTYA), பீல் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பிரம்டன் நகரின் ஆதரவுடன் 'தழும்பகம்' தமிழ் இன அழிப்பு காட்சியகத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வினை நடத்தவுள்ளது இந்நிகழ்வு, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பிரம்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும்.பிரம்டன், மிசிசாகா மற்றும் பீல் பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் இக்கண்காட்சியில் பங்குபற்றுவதுடன், உங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு பற்றிய தகவல்களை அவர்களும் அறிந்துகொள்ள உதவுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
-
- 0 replies
- 376 views
-