நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
802 topics in this forum
-
பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" தமிழீழ விடுதலைப் போர்பற்றிய அற்புதப் படப்பிடிப்பு! - பேரா. அய்யாசாமி நன்றி : தென்செய்தி கடந்த ஆண்டில் நான் படித்த நூல்களில் என்னைக் கவர்ந்தது எது என்று கேட்டால் அன்றன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்று தயங்காமல் விடை கூறுவேன். இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை தமிழர்கள் நடத்தி வரும் உரிமைப் போராட்டங்களை எடுத்துக்கூறி அவை வெற்றி பெறாமல் போனதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறார் பாலசிங்கம். இவற்றை யெல்லாம் சர்வதேச அரசியல்வாதிகளுக்குத் தெரிவிப்பதற்காக முதலில் ஆங்கிலத்தில் எழுதி, பின்னர் அவரே அதனைத் தமிழாக்கியிருக்கிறார். சிங்களவர்கள் திருப்பித் திருப்பிக் கூறுவதைப்போல் தமிழர்கள் க…
-
- 0 replies
- 2.6k views
-
-
முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவே அவன் தீக்குளித்தற்கு காரணம் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம். மாநில அளவில் 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த ஒருவனால் வெறும் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு அல்ல. குடிகார அப்பா, குடும்பத்தை சுமக்கும் தாய், படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச்செல்லும் பிள்ளைகள். இது சினிமா கதையல்ல. முத்துக்குமாரின் செயல் போலவே அவன் வாழ்க்கையும் வியக்கத்தக்கது!
-
- 1 reply
- 2.6k views
-
-
கருணை ரவியின் “கடவுளின் மரணம்” – ஒரு பார்வை ஈழத்தில் நடைபெற்ற போரின் போதும் அதன் பின்பும் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு யோ.கர்ணன், தீபச் செல்வன், கருணாகரன், நிலாந்தன், அப்பு, கருணை ரவி… என சிலரினது படைப்புகளை மட்டுமே கதைகளாக, நாவலாக, கட்டுரைகளாக தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம். இன்னும் பெண் படைப்பாளிகள் எழுத ஆரம்பிக்கவில்லை. அல்லது நம் பார்வைக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. போருக்குள்ளும் மரணத்திற்குள்ளும் வாழ்ந்து போராடி மீண்ட இவர்கள் இவ்வாறு தொடர்ந்து எழுத வேண்டும். தங்களின் வலிகளை எழுதவேண்டும். எந்த மக்களுடன் வாழ்ந்தார்களோ அவர்களின் வலிகளை எழுதவேண்டும். குரலற்றவர்களின் குரலாக இவர்கள் ஒலிக்கவேண்டும். இதற்கு இவர்களை முதலில் எழுத விடவேண்டும். …
-
- 12 replies
- 2.6k views
-
-
2016-ல் கவனம் ஈர்த்த 15 புத்தகங்கள்... பரிந்துரைக்கும் 15 பிரபலங்கள்! ”புத்தகங்களை வாசித்துக்கொண்டே இரு, ஆனால் புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே. சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை நீதான் கற்றுணர வேண்டும்”. ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் வரிகள் இவை. வான் பார்த்து அல்லாமல் நிலம் நோக்கி சிறகு விரித்திருக்கும் சுதந்திரப் பறவைகள்தான் புத்தகங்கள். 2016-ம் வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில், தங்களுக்குள் அப்படிப்பட்ட சிந்தனையையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய புத்தகங்கள் பற்றி குறிப்பிடுகிறார்கள் பிரபலங்கள். பி.சி.ஸ்ரீராம், ஒளிப்பதிவாளர் சக ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் எழுதிய ‘ஒளி ஓவியம்’ புத்தகத்தைக் குறிப்பிடலாம். கேமிரா தொடர்பான டெக…
-
- 1 reply
- 2.6k views
-
-
போர்னோகிராபியும் இலக்கியமும் யமுனா ராஜேந்திரன பீடபைல்கள் இன்று எல்லாச் சமூகங்களிலும் பிரச்சினைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். இவர்கள் குழந்தைகளோடு பாலுறவு கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். குழந்தைகளை நைச்சியம் செய்து உறவு கொள்வார்கள். முடியாது போனால் தந்திரமான முறையில் கடத்திச் செல்வார்கள். இங்கிலாந்தில் இந்த மனநிலை கொண்டவர்கள் பல பெண்குழந்தைகளை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திப் பின் கொலை செய்து வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பொதுவாக இவர்கள் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என உளவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கீத்தா ஸெரனி எனும் எழுத்தாளர், இரண்டு சிறுவர்களைக் கொன்ற ஒரு சிறுமி பற்றி நூலை எழுதியிருக்கிறார். மிகவும் சிறுவயதில் சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்பட்டி…
-
- 0 replies
- 2.6k views
-
-
யாழில் உலாவரும் போது எனது புணைபெயருடன் இருந்ததிந்த தலைப்பும் அதனுடன் இருந்த "கற்பனை விஞ்ஞான கதை" என்னும் விளக்கமும் என்னை உள்ளே செல்ல தூண்டியது. கலைஞனானால் பதியப்பட்ட திரியாதலாலும் அவர்மீதிருந்ததோர் தனிப்பட்ட யாழ்கள மதிப்பினாலும் தொடர்ந்து வாசிக்க தொடங்கினேன். வாசிக்க ஆரம்பித்தவனை முழுவதுமாக வாசிக்க தூண்டியது அவரது கற்பனைக்கதை நடை. ஆங்காங்கு காணப்பட்ட சிறு தவறுகளை சுட்டிக்காட்ட தூண்டியபோதும் அதனை ஒரு "கற்பனை விஞ்ஞான கதை" யின் விமர்சனமாக கொண்டுசெல்வதே சிறந்ததாகப்பட்டது. யாழில விமர்சனத்திற்கு பெயர்போன கலைஞனின் படைப்பிற்கு நானே ஒரு தனித்திரியில விமர்சனம் செய்யலாமே என்றதொரு நப்பாசையுடன் இந்தத்திரியை ஆரம்பிக்கின்றேன். இந்தத்திரியில் பதியப்பதியபடும் அடியேனின் விமர்சனங்கள் கதாசி…
-
- 6 replies
- 2.6k views
-
-
எனது கனவு நனவாகி நூல்களாகி வந்துள்ளது. நான் எழுத ஆரம்பித்ததும் என் எழுத்து மெருகேறியதும் யாழ் களத்திநூடாகத்தான். அதனால் முதலில் எனக்குத் தளமாக இருந்த யாழ் இணையத்துக்கும் என் எழுத்துக்கு ஊக்கம் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
-
- 36 replies
- 2.5k views
-
-
ஈழத்துப்பூராடனாரின் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூலறிமுகம்... அறிஞர் ஈழத்துப்பூராடனார்( க.தா.செல்வராசகோபால்) அவர்களால் எழுதப்பெற்று திரு. அருள்சுந்தரம் விஷ்ணுசுந்தரம், திரு. பொன்னம்பலம் சிவகுமாரன் ஆகியோரால் பதிப்பு கண்டுள்ள வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூல் 2011 ஆவணியில் விஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியத்தின் ஆதரவில் வெளிவந்துள்ளது. 292 பக்கத்தில் அழகிய வண்ணப் படங்களையும், பல்வேறு அட்டவணைகளையும் வரைபடங்களையும் நிலப்படங்களையும் கொண்டு நேர்த்தியான அச்சில் குறிக்கோள் நோக்கி வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டாளர்களுக்கு முதலில் நம் பாராட்டுகளும் நன்றியும். நீராவிக் கப்பல்கள் அறிமுகத்தில் இருந்த காலச் சூழலில் பாய்மரக்கப்பல் கட்டுவதில் பேரறிவுபெற்ற…
-
- 3 replies
- 2.5k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், செவிக்கினிய பல பாடல்களை எழுதியும், இறுவட்டாக வெளியிட்டும், மற்றும் பல்வேறு கலை முயற்சிகளில் ஈடுபட்டும், புலம்பெயர் கலைஞர்களுக்கு ஓர் முன்னோடியாக திகழக்கூடிய, எங்கள் மனங்களை தனது வசீகரமான வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும் குளிரவைக்கின்ற நோர்வே வசீகரன் (யாழ் தமிழ்வாணம்) அவர்களின் கவிதைத்தொகுப்பை அண்மையில் நான் வடலி வலைத்தளம் ஊடாக பெற்று இருந்தேன். எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழமுதம் சோழியான் அவர்கள் கவிதைகளை படித்துவிட்டு நூல்பற்றிய ஓர் விமர்சனம் எழுதி தருமாறு கேட்டு இருந்தார். கவிதைத் தொகுப்பை மேசையில் கிடத்தி, 360பாகையில் வெவ்வேறுவிதமாக தடவிப்பார்த்து, நுணுக்குக்காட்டி மூலம் ஆராய்ச்சி செய்து விமர்சனம் செய்வதற்கு…
-
- 7 replies
- 2.5k views
-
-
கடந்த வார வீரகேசரி வாரமலரை எடுத்துப் புரட்டாமலே ஒரு வாரம் கழிந்து விட்டது என்ற நினைப்பில் நேற்று அந்தப் பத்திரிகையை மேய்ந்தேன். கண்ணிற் பட்டது கவிஞர் எருவில் மூர்த்தியின் மரணச் செய்தி.மட்டக்களப்பு வன்னியனார் தெருவைச் சேர்ந்த பிரபல கவிஞர் எருவில் மூர்த்தி ஜனவரி 11 ஆம் திகதி இறந்ததாகவும் அன்னாரின் இறுதிச் சடங்கு ஜனவரி 14 ஆம் திகதி மாலை நடைபெறும் என்றும் இருந்தது. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/01/blog-post_21.html
-
- 3 replies
- 2.5k views
-
-
ஜெயமோகனின் உலோகம் நூல் பற்றி ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி தனது வலைதளத்தில் எழுதியது.. அண்மையில் கனடாவுக்குப் போயிருந்தபோது எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தைச் சந்தித்தேன். ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் தொய்வின்றித் தொடர்ந்த உரையாடல் அது. அந்த உரையாடலில் சொற்கள் தீர்ந்துபோனதாக உணர்ந்த தருணத்தில் இருவரும் எழுந்துவிட்டோம். அ.முத்துலிங்கம், ஜெயமோகனின் எழுத்தைப் பற்றிச் சொன்ன ஒரு வாசகத்தை வழியெங்கும் நினைத்தபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். (இந்த வாசகத்தை எங்கோ வாசித்திருக்கிறேனே…) “தமிழில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறத் தகுதி வாய்ந்தவராக ஜெயமோகனை வாசிக்கும்போது உணர்கிறேன். அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டாலே அது சாத்தியம். தகுதியானவர்கள் முன்வந்து அதைச் செய்யவேண…
-
- 17 replies
- 2.4k views
-
-
புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்-கே.எஸ்.சுதாகர் [புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.] உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘ப…
-
- 3 replies
- 2.4k views
-
-
வெண்முரசை என்ன செய்வது? சுரேஷ் பிரதீப் சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக 'கண்டெடுக்கப்பட்டு' கொடுக்கப்படும் எதையுமே நமக்கு - அதாவது தமிழர்களுக்கு - முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார். வெண்முரசின் இறுதி நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலையும் மாலையுமாக ஜெயமோகன் வெண்முரசு வாசகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதை ஒட்டி தமிழ் அறிவ…
-
- 7 replies
- 2.4k views
-
-
வல்லினம் இணைய இதழில் எனது கசகறணம் நாவல் சம்பந்தமாக ஷோபா சக்தியின் கேள்வி - பதில் வந்த நாளிலிருந்து இதுவரையிலும் முகபுத்தகத்தில் வந்துகொண்டிருக்கும் கருத்துக்களையும் கருத்து மோதல்களையும் அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் என்மீது பாய்ந்த மூன்று அஸ்திரங்க...ள் இவைகளென்றும், அவைகளுக்கு விளக்கம் தருகிறேன் என்று கூறிக்கொண்டு வந்திருக்கும் ஷோபா, மீண்டும் மீண்டும் என்னையும் என்நாவலையும் கேலிக்குள்ளாக்குகின்றார் என்பதனாலேயே நானும் மௌனம் கலைய வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். சசீவன் சொன்னதுபோல தானே கேள்வி தானே பதில் என்றாகக்கூட இருக்கலாம். அதற்கான எதிர்வினைகளை எதிர்கொள்ள ஷோபா சொல்லுகின்ற நொண்டிச்சாட்டுகள்தான் நகைப்பூட்டுகின்றது. எத்தனை தழுவல்கள் - நழுவல்கள், எத்தனை எடுத்துக் க…
-
- 17 replies
- 2.4k views
-
-
எஸ்.பொவின் 'சடங்கு' இளங்கோ-டிசே 1,எஸ்.பொ எனப்படுகின்ற எஸ்.பொன்னுத்துரையின் புனைவுகளில் பரவலாக வாசிக்கப்பட்ட நாவலாக 'சடங்கே' இருக்கக்கூடும். 1966ல் சுதந்திரன் பத்திரிகையில் தொடராக வந்து, பின்னர் சுதந்திரனால் நூலாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றது. அன்றையகாலத்தில் ஒரு வருடத்துக்குள்ளேயே சடங்கு, 2000 பிரதிகள் விற்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தியாவில் ராணி வாராந்திரி வெளியீடு சடங்கை 80களின் தொடக்கத்தில் மலிவு விற்பனையில் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றது. இந்தவகையில் இலங்கையில் மட்டுமில்லை, இந்தியாவிலும் 'சடங்கு' பெருமளவு வாசகர்களால் வாசிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறியமுடிகின்றது. சடங்கை எஸ்.பொ எழுதத்தொடங்கியது தற்செயலான நிகழ…
-
- 11 replies
- 2.4k views
-
-
நூலில் அடங்கியவை 1. ஈழ இனப்படுகொலை துயரங்களை காட்டும் 371 புகைப்படங்கள். 2. 4 முக்கிய அட்டவணைகள் (i) ஈழத்தமிழ் இனப்படுகொலைகள்ள் 1956 -2009 . (ii) தோல்வி அடைந்த ஓப்பந்தங்களும் , பேச்சு வார்த்தைகளும், (iii) ஈழத்தமிழரின் அறவழிப் போராட்டங்கள். (iv) இலங்கைத்தீவில் தமிழரின் பூர்வீகம். 3. ஈழம் குறித்து உலகப்பிரமுகர்களின் முக்கிய கருத்துக்கள். 4.நீதி கேட்கும் 80 மனித நேய கூற்றுக்கள் 5. மனித உரிமை போராளிகளின் அணிந்துரைகள் (i).V.R.கிருஷ்ணய்யர், முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி. (ii). டாக்டர். எலன் சாண்டர் , மனித நேய மருத்துவர் அமெரிக்கா. (iii) விராஜ் மென்டிஸ், தலைவர், சரவதேச மனித உரிமைகள் கழகம…
-
- 6 replies
- 2.4k views
-
-
தொலைவில் எழுதியவர். வாசுதேவன் பாரீஸ் நகரிற்கு ஒரு அலுவலாக நான் போக வேண்டியிருந்தது போய் எனது அலுவல்களை முடித்து கொண்டு அன்று எனது நகரத்திற்கு திரும்ப முன்ன பாரீசில் தமிழர் வர்த்தக நிலையங்கள் அதிகமாக அமைந்திருக்கும் லா சப்பல் என்கிற இடத்திற்கு போனபோது தான் இவ்வனவு தூரம் வந்தனான் சில நிமிடம் வாசனையும் சந்தித்து விட்டு போகலாம் என்று அவனது அலுவலகத்தில் நுளைந்தேன் பலவருடங்களின் பின்னர் மீண்டும் கண்டாலும் உடனே அடையாளம் கண்டு எப்பிடி இருக்கிறாய் எங்கே இரக்கிறாய் என்று வழைமையான விசாரிப்புகள் ஒரு பத்து நிமிட சந்திப்பு அதன் இடையில்தான் பகட்டேன் என்னடா நீ ஏதோ புத்தகம் ஏதோ வெளியிட்தாய் எங்கோ வலைப்பூக்களில் படித்த ஞாபகம் என்ன புத்தகம் என்றேன். ஒரு புத்தகத்தை எடுத்…
-
- 3 replies
- 2.4k views
-
-
ஈழம் - சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் Francis Harrison Francis Harrison பல ஆண்டுகள் பிபிசியின் அயல் செய்தியாளராக ஆசியாவில் பணியாற்றினார். 2000 - 2004 வரை பிபிசியின் இலங்கைச் செய்தியாளராக செயல்பட்டார். இவர் எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த Still Counting the Dead எனும் நூலின் தமிழாக்கமே இந்த நூல். புத்தகம் படிப்பதே தமிழர்களிடத்தில் குறைந்து வரும் நிலையில் இது போன்ற எமது வரலாற்றை தாங்கி நிற்கும் நூல்களை புலம்பெயர்ந்த இளம் சமூகம் வாசித்திருக்க சந்தர்ப்பங்கள் குறைவு என்றே நான் நினைக்கின்றேன். எமது கதையை எமக்காக வேறினத்தவர் ஒருவர் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலையில் தமிழினம் உள்ளது என்பது வருந்ததக்கது. இந்த கதைக்கு சொந்தக்காரர்கள் யாரையாவது நாம் சந்தித்தால் எம்மால் அவர்களி…
-
- 5 replies
- 2.4k views
-
-
பெண் விடுதலை இன்று ஆசிரியர்: க.வி.இலக்கியா விலை: ரூ.60 விடியல் பதிப்பகம் பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளியப் பொருளாதார சமூகக் கட்டமைப்புச் சூழலில், இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட அடிமை நிலையே பெண் விடுதலை என்று நம்பப்படுகிறது என்று பேசும் நூல் இது. ***** எங்கள் ஐயா - பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள் பதிப்பாசிரியர்கள்: பெ.முத்துசாமி, ஆ.சின்னதுரை, ரெ.மகிந்திரன், ப.குமரேசன், விலையடக்கப் பதிப்பு ரூ. 250 காலச்சுவடு பதிப்பகம் எழுத்தாளர் பெருமாள்முருகனிடம் பயின்ற மாணவர்…
-
- 3 replies
- 2.4k views
-
-
தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர்களின் கலை, கலாச்சாரம், தமிழகம், தமிழீழம் சார்ந்த படைப்புக்களை மட்டுமே வெளியீட்டு வரும் தமிழ் மண் பதிப்பகம், மற்றுமோர் அரிய படைப்பாகிய உலக இசைகளுக்கு மூல இசையாம் தமிழிசையின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் தமிழிசை அறிஞர் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் எனும் தமிழிசைக் களஞ்சியம் (1907,1917,1946 வெளிவந்த) 1 முதல் 7 தொகுதிகள் வெளிவந்துவிட்டன. கலையுலகில் பயணிக்கு ஒவ்வொருவரும் படித்துகொள்ளவேண்டிய இவ் கலை பொக்கிஷம், உலக இசைகளுக்கு மூல இசை தமிழ் இசை என்பதை உணரவைக்கும். http://www.sankathi24.com/news/36523/64//d,fullart.aspx
-
- 0 replies
- 2.4k views
-
-
முக்கிய குறிப்பு: நான் நூல் விமர்சகனோ அல்லது திறனாய்வாளனோ அல்ல. உப்பு நாய்கள் மீதான என் பார்வையை மட்டும் கீழே தருகின்றேன். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அண்மைக் காலங்களில் ஒரு நாவலை இந்தளவுக்கு மனம் அதிரவும், சற்று அருவருப்பு உணர்வு மேலிடவும், ஆத்திரம், இரக்கம், கோபம், அதிர்ச்சி போன்ற கலவையான உணர்வு பெருக்கு எழவும் வாசித்திருக்கவில்லை. வாசிக்க கூடாத நாவலாகவும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நாவலாகவும் இருக்க கூடிய நாவல்களில் ஒன்றாக உப்பு நாய்கள் அமைந்திருக்கின்றது எனக்கு. சென்னையின் பணச் செழிப்பு மிக்க பகுதிகளிலும், செழிப்பும் வறுமையும் பக்கம் பக்கம…
-
- 9 replies
- 2.4k views
-
-
பலாலித்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலைத்தாக்குதலில் படையினரிடம் அகப்பட்ட கெனடியை மீட்பதற்காக, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டவர் "சாகரவர்த்தனா" கப்பல் கப்டன் அஜித் போயகொட. 1994 ஆம் ஆண்டு மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகள் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் பிடிக்கப்பட்ட அஜித் போயகோட, ஏழு வருடங்களின் பின்னர் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்டார். போயகொட சொல்ல சுனிலா கலபதி எழுதிய A Long Watch என்ற தன்வரலாற்றுக்குறிப்பு 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூல் தமிழில் தேவாவின் மொழிபெயர்ப்பில் 'வடலி' பதிப்பகத்தின் ஊடாக "நீண்ட காத்திருப்பு" என்ற பெயரில் தற்போது வெளிவந்திருக்கிறது. யுத்த களத்தில் எதிரிகளால் பிட…
-
- 4 replies
- 2.3k views
-
-
"அப்பால் ஒரு நிலம்" நாவலை வாசிக்க தொடங்கும் போது வழமையான போர் பற்றிய வலியை பேசப்போகிறது என்னும் முன் சிந்தனையுடன் தான் தொடங்கியது வாசிப்பு ,ஏனெனில் குணா கவியழகன் அவர்களின் முதல் நாவல்கள் தந்து போன வலியை இது கொஞ்சம் கூடுதால கொடுக்கலாம் என்னும் எண்ணமும் இருந்தது, காரணம் அந்த போரோடு வாழ்த்த ஒவ்வெரு ஜீவனும் அறியும் அதன் உக்கிரம் அதிலும் அதில் தன்னை செலுத்தி நீந்திய இளையவர்களுக்கு அது இப்பொழுது பெரு வலி . வீரன் பற்றி ஆசிரியர் சொல்ல தொடங்கும் போது, எம் அருகில் இருந்த ஒரு வீரன் நினைவில் வருகிறான் ,அவன் தான் இளங்கீரன் இவன் பூநகரி மண்ணில் பிறந்த ஒருவன் அழகிய வெண்மை நிறமான அவனுது தேகம், ஒரு பெண்ணுக்குரிய அவனின்வசீகர முகம் எவரையும் இவன் பெ…
-
- 7 replies
- 2.3k views
-
-
ஈழ விடுதலை என்றாலே இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது என்ற கருத்துத் தளத்தில் இருந்து இயங்கும் ஜெயமோகன் ஈழ விடுதலை அவா கொண்டு அனைத்து தளத்திலும் இலக்கியம் ஆக்கம் படைப்பு என்று இயங்கும் தீபச் செல்வனை 'சின்னப் பையன்' என்ற ஒரு அடைமொழியில் ஒழித்து வைக்கின்றார் இதனை வாசிக்கவும் சுரா 80- இருநாட்கள் கன்யாகுமரிக்கு வருவதற்கு மிகச்சிறந்த காலகட்டம் ஆனியாடி சாரல் இருக்கும் ஜூன், ஜூலை மாதம். இந்தவருடம் சாரல் இப்போதே ஆரம்பித்துவிட்டது. குளிரும் இளமழையுமாக இருக்கிறது ஊர். சுந்தர ராமசாமியின் 80 ஆவது நினைவுநாளை ஒட்டி காலச்சுவடு ஒருங்கிணைத்திருந்த கருத்தரங்குக்கு கன்யாகுமரிக்கு வந்த பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்தச் சூழல் உதவியாக இருந்தது என்றார்கள். கிட்டத்…
-
- 13 replies
- 2.3k views
- 1 follower
-
-
பொ.ஐங்கரநேசனின் ஏழாவது உழி நூல் தொடர்பான அறிமுகம் - மீராபாரதி:- நான் அதிகமான நூல்களை வாசிக்கின்ற ஒருவரல்ல. ஆனால் வாசித்த வாசிக்கின்ற ஒவ்வொரு நூலும் என்னில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தின... ஏற்படுத்துகின்றன. அது பதின்மங்களில் வாசித்த காந்தியின் சத்திய சோதனையாக இருந்தால் என்ன, இருபதுகளில் வாசித்த மார்க் ஏங்கல்ஸ் லெனின் ஆகியோர்களின் நூல்களாக இருந்தால் என்ன, முப்பதுகளில் வாசித்த ஓசோவின் நூல்களாக இருந்தால் என்ன. இவை எல்லாம் என்னில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. அந்தவகையில் பொ.ஐங்கநேசன் எழுதிய சுற்றுச் சூழல் கட்டுரைகளைத் தொகுப்பாக கொண்ட ஏழாவது ஊழி நூல் முக்கியமானது. இதுவும் என்னில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. “டெனிம்” நீல நிற நீளக் காற்சட்ட…
-
- 2 replies
- 2.3k views
-