சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இசை நடன அரங்கில் மாயா எழுதியவர் தளநெறியாளர் உலகெங்கும் ஆங்கிலத்தில் வெளிவரும், ஈழம் பற்றிய செய்திகளுக்கான இணைப்பை தரும், தமிழ் கனடியன் இணையத் தளத்தில்தான் அந்த செய்தி இணைப்பையும் [Jan. 27, 2005 Eye Weekly] பார்த்தேன். அதனைத் திறந்து படிக்கும் ஆர்வத்தை தலைப்பும் முன்குறிப்பும் சுட்டி நின்றன. Tiger, tiger, burning bright (Tamil pop provocatrice M.I.A. wages war on the dancefloor) என்ற தலைப்புடன் காணப்பட்ட அக்கட்டுரைக்குள் நுழைந்தபோது ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியங்கள் சிதறிக்கிடந்தன. உலகெங்குமான இளவயதினரை ஈர்த்திழுக்கும் நவீன இசை நடன அரங்கில் ஈழத்து தமிழ்ப்பெண் தடம்பதித்துக் கொண்டிருக்கின்றார் என்பதுடன் சர்வதேச ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டார் என்ப…
-
- 59 replies
- 7.4k views
-
-
இரட்டைக்குழந்தைகள், ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு தந்தையர். பிரேசில் நாட்டில், பதும வயது பத்தொன்பது வயது பெண், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். கருவுற்ற தினமன்று, இருவருடன் உடலுறவு கொண்டதால், அந்த இருவரில் யார் குழந்தைகளின் தந்தை என அறிய, குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய, இரண்டுமே வேறு, வேறு என்று தெரிய வந்து மருத்துவ உலகமும், பெண்ணும், பெண்ணின் ஒழுக்கம் குறித்து அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாது, உலகமே வியப்புடன் இது எப்படி சாத்தியம் என அரண்டு போயுள்ளது. உலகலாவிய ரீதியில் வைரலாகி உள்ளது இந்த சங்கதி. https://www.dailymail.co.uk/news/article-11188561/amp/Brazilian-woman-19-gives-birth-twins-DIFFERENT-fathers.html
-
- 4 replies
- 530 views
-
-
அந்த ஆசிரியர்கள் வாரத்தின் தொடக்கத்தில் கூட அப்படி நடக்கும் என்று யோசித்து இருக்கமாட்டார்கள்... போலிஸ்காரர் இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுத்து இருக்கமாட்டார்கள்.. மகாநதி படம் பார்த்து விட்டு சிறையில் இவ்வளவு கொடுமைகள் நடுக்குமா? ஜென்மத்துக்கு சிறைபக்கம் போகவே கூடாது, அந்த பக்கம் தலைவைத்து படுக்க கூட கூடாது என்று வைராக்கியமாக வாழ்ந்து இருக்க வேண்டும்..... ஆனால் எல்லாம் சடுதியில் நடந்து முடிந்து விட்டது... காரணம் படித்தவர்களுக்கு புத்தி இருக்காது என்பதற்கு நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி உதாரணம்... சென்னை எம்ஜியார் ஜானகி கல்லூரியில் படித்த மாணவி திவ்யாவின் தற்கொலையால் நான்கு ஆசிரியர்கள் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது... இவர்கள் வாழ்க்கை …
-
- 8 replies
- 2.7k views
-
-
ரஜினி: பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா ! ஆரா ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நேற்று பிப்ரவரி 11 ஆம் தேதி நடந்தத் திருமணம் மிக விமரிசையாக, பல்வேறு பிரபலங்கள், பெரிய மனிதர்களின் ஆசீர்வாதத்தோடும் வாழ்த்துகளோடும் நடந்தது. ரஜினியின் மகளும், அவரது கணவரும் மணமகள்-மணமகனாக வீற்றிருக்க நடுவே சௌந்தர்யாவின் பிஞ்சு மகன் அமர்ந்திருக்க அதை ரஜினி அருகே நின்று பார்க்கும் அந்தப் புகைப்படம் ரஜினிக்கு சூப்பர் அப்பா என்ற அன்புப் பட்டத்தை இந்த தமிழ்ச் சமூகத்தில் பெற்றுத் தந்திருக்கிறது. ரஜினியின் பெரும்பாலான படங்களில், பெண்கள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும், கிழித்த கோட்டைத் தாண்டக் கூடாது என்ற ம…
-
- 5 replies
- 1.9k views
-
-
"உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் `ஆண்' என்று கொண்டாடுவாள்." இரண்டாவது தேனிலவு... தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இதனால், ஒரு கணவன் - மனைவிக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன? டாக்டர். ஷாலினியிடம் கேட்டேன். அவருடைய விளக்கமான பதில்களை படியுங்கள். தேனிலவு ஏன் அவசியம்? `திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் ஒ…
-
- 27 replies
- 3.9k views
-
-
ஏனோ ராதா, இந்தப் பொறாமை? பானுமதி.ந டிசம்பர் 29, 2019 தலைப்பு ஒரு பழைய திரைப்பாடலை நினைவூட்டுமென்று நம்புகிறேன். அதில் பழைய தமிழ்ப் பட மரபுப்படி பெண்களே பொறாமை பிடித்தவர்கள் என்பது போலப் பாடல் அமைகிறது. இதே மரபு அன்றைய நாடகங்கள், கதைகள், திரைப்படங்கள் ஆகியவற்றில் எல்லாம் தொடர்ந்தது என்பது 1930களிலிருந்து தமிழ் பொது ஜன ஊடகங்களைக் கவனிப்பவர்களுக்குத் தெரியும். இன்றுமே தமிழ் தொலைக்காட்சிகளின் அவல நாடகத் தொடர்களில் இந்த மரபின் வேறோர் உரு தொடர்வதையும் கவனித்திருப்பீர்கள். இதற்கு மாறாக பொது ஊடகங்களிலேயே தொடர்ந்து வரும் அசல் வாழ்க்கைச் செய்திகளில் பார்த்தால், ஆண்கள் தம் காதல் மறுக்கப்பட்டதால், அல்லது தம்மை மணக்க மறுத்ததால் என்று ஏதோ ஓர் அற்பக் காரணத்தை …
-
- 0 replies
- 982 views
-
-
கறுப்பராய் இருப்பதால் விபச்சாரி? தேனிலவில் நேர்ந்த அவலம் திருமணத்தின்போது மோனிகாவும், அவரது கணவரும் 47 வயதான மோனிகா வலேரியா கொன்சால்வஸ் இரண்டு பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு சொந்தக்காரர். பிரேசிலியாவில் சட்ட ஆலோசகராக பணிபுரியும் அவர் ஒரு நீதிபதியான கார்லோஸ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த அவர், அடிக்கடி விடுமுறையின்போது, பிரேசில் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு. விலை உயர்ந்த உணவகங்கள் மற்றும் பிரத்தியோக சமூக நிகழ்வுகளுக்கு அடிக்கடி செல்லும் அவர், பிரேசிலின் சிறந்ததொரு சுற்றுப்புறத்தில் வசித்து வருகிறார். சுருக்கமாக சொன்னால், ஒரு சதவீத உயர் வகுப்புக்கு பிரேசிலிய சமூகம் அனுபவித்து வருவதற்கு இணையான வாழ்க்கையை பெ…
-
- 2 replies
- 997 views
-
-
பெண்களுக்கு இடையிலான சவால்களை ஆண்களால் எதிர் கொள்ள முடியுமா????? பெண்கள் ஆண்களை விட தம்மை வெகு குறைவாகவே மதிப்பிடுகிறார்கள். சமூகத்தில் பெண்கள் தாம் இரண்டாம் நிலையிலேயே இருப்பதாகத் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கின்றார்கள். ஆனால் பெண்களின் சக்தி பலம் வாய்ந்தது என்பதைஇ ஏனோ அவர்கள் மறந்து விடுவதுதான் வேதனைக்குரியது. ஆண்களை சவலாகப் பெண்களால் எதிர்கொள்ள முடியும். ஆனால் பெண்களின் சவால்களை ஆண்களால் எதிர்கொள்ள முடியுமா? சமூகத்தில் பெண்களை விட ஆண்களே சக்திவாய்ந்தவர்கள் என்பது சமூகத்தின் கருத்து. அப்படியானால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர்கள் எதிர்கொள்வார்களா? அல்லது எதிர்கொள்ளத்தான் ஆண்களால் முடியுமா? ஆண்கள் உடல் மன வலிமையில் சிறந்து விளங்குபவர்களாக இருக்கலாம்.…
-
- 15 replies
- 3.4k views
-
-
திருமணத்தின் போது சீதனம் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ........
-
- 39 replies
- 7.1k views
-
-
மதிகெட்ட அறிவுரையும் துதிபாடும் பெண்ணி(ன)யமும். - சாந்தி ரமேஷ் வவுனியன் - 25.04.06 அன்று கொழும்பு நகரில் இராணுவ தலைமையகத்தின் குண்டு வெடிப்புத் தொடர்பான உடனடி ஊகங்களும் , அறிவித்தல்களும் உலக ஊடகங்களை விட எங்களது தமிழ் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட ஒன்றாகும். அரச தரப்பின் செய்தியை அப்படியே பிரதி பண்ணி அருகில் நின்று பார்த்தது போல் சம்பந்தப்பட்ட தாக்குதலை வவுனியாவைச்சேர்ந்த அனோஜா குகராஜா என்ற தற்கொலைக் குண்டுதாரியால் நிகழ்த்தப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. அந்த இளம்பெண் கர்ப்பிணியாயிருந்தார் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்க புலத்தில் உள்ள பெண்ணிலைவாதிகளை தங்களைத்தாங்களே அழைத்துக் கொள்ளும் சிறு கும்பலும் விழுந்தடித்துக் கொண்டு மாரடிக்க தயாராகியது. . நன…
-
- 8 replies
- 2.5k views
-
-
மனைவி மட்டும்….. தந்தை பெரியார் காங்கிரஸ் மகா இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிவந்த காலம் அது. தீவிர காந்தியவாதியாகத் திகழ்ந்த பெரியார், தானும் கதராடை உடுத்தி தன்னைச் சார்ந்தவர்களும் கதராடையை உடுத்த வேண்டும் என விரும்பினார். அது மட்டுமல்லாது கதர் துணிகளைத் தோளில் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று கூவி விற்று அனைவரும் கதராடை உடுத்தவேண்டிய அவசியத்தையும் உணர்த்தி வந்தார், ஆண்கள் மட்டும் அல்லாது பெண்களும் கதராடை உடுத்த வேண்டும் என்று கூறிவந்தார். இந்த சமயத்தில் பெரியாருக்கு ஒரு பிரச்சினை எழ ஆரம்பித்தது, ஊர் மக்கள் எல்லாரும் பெரியாரின் சொல் கேட்டு கதராடைகளை உடுத்த தொடங்கியபோது அவரது மனைவி திருமதி, நாகம்மை மட்டும் கதர் புடைவையை உடுத்த மறுத்துவிட்டார்.’ தன் மனைவியே கதர…
-
- 10 replies
- 1.7k views
-
-
புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு மதுரை பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணாவின் முதல் பட்டமளிப்பு விழாப் பேருரை இன்றளவும் பார் போற்றும் உரை. பள்ளி மாணவப் பருவத்திலேயே அவ்வுரையை மீண்டும் மீண்டும் வாசித்து இன்புற்றிருக்கிறேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக் குழுமத் தலைவராய் ( Dean, College Development Council ) பணியாற்றிய காலத்தில், கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தும் வாய்ப்பு அமைந்தது. அறிஞர் அண்ணாவை நினைத்தேன். "நமக்குமா?" எனும் எண்ணம் தோன்றியது. சரி, புலியைப் பார்த்து பூனை போட்ட சூடாகத்தான் இருக்கட்டுமே என என்னையே தேற்றினேன். இதில் பேசாப் பொருள் எதுவுமில்லை. மாணவர் சமூக…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். திருட்டைச் செய்த மனிதரின் கை துண்டிக்கப்படுதல், வேதத்தைக் கேட்டதற்காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல் போன்ற தண்டனை முறைகளுக்கும் மரண தண்டனைக்கும் இடையிலான கோட்பாட்டு அடிப்படை ஒன்றேயாகும். மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எ…
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-
-
தன்பாலீர்ப்பினர் பற்றிய சமூகப்பார்வை பட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? “தனிநபர் வாழ்வு அவர்களது தீர்மானம்” என்பதைச் சமூகம் எப்போது புரிந்துகொள்ளப் போகின்றது? கட்டாய எதிர்ப்பால் ஈர்ப்பு, இயற்கையானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் சமூகத்தின் மீது திணிக்கப்படுகிறது. நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள், விதிமுறைகள், கொள்கைகள் என்பவ…
-
- 0 replies
- 930 views
-
-
மனசு போல வாழ்க்கை-1 : முடியும், முடியாது இரண்டும் நிஜம்தான்! ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? வெற்றியைத் தேடித்தான்! படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியபின் கல்யாணம், வெளி நாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம்.. பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம்...இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா? மன அமைப்பு நினைப்பது கிடைப்பது தான் வெற்றி. ஆசைப்பட்டதை அடைய வேண்டும். அதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளனர் நம் மக்கள். நவீனச் சந்தைப் பொருளாதாரமும் அதை ஊக்குவிக்கிறது. உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனமில்லையா? இதைச் சாப்பிடக் கொடுங்கள். கல்லூரி வளா…
-
- 41 replies
- 30.2k views
-
-
வசதியாக வந்தால் தான் திருமணம் செய்வேன்'' என, காதலி கூறியதால், 42 சவரனை திருடி விற்க முயன்றவரை, மதுரை கரிமேடு போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை சேர்ந்தவர் சுகுமார், 23. ஆறு மாதங்களுக்கு முன், டில்லியில் நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டார். விபத்தில் சிக்கிய இவரது தம்பியின் சிகிச்சைக்காக, 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.அதை திருப்பி செலுத்துவதற்காக, மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் மணிகண்டன் என்பவரின் நகை பட்டறையில், 7,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.இதற்கிடையே, கோல்கட்டாவில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவரது காதலி, "வசதியாக வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்' என்றார். மணிகண்டன் பட்டறையில் நகையை திருட, 20 நாட்களாக சுகுமார் முயற்சி செய்து…
-
- 17 replies
- 2.1k views
-
-
http://www.keetru.com/dalithmurasu/dec05/wilson.html
-
- 12 replies
- 2.8k views
-
-
"ஆப்ரிக்காவுக்கு மிஷினரிகள் வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தன. எங்களிடம் நிலங்கள் இருந்தன. அவர்கள் சொன்னார்கள்... நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று. நாங்களும் கண்களை மூடினோம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிள்கள் இருந்தன, அவர்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன.." என்று வேதனையோடு ஆப்பிரிக்காவில் நடந்த மதமாற்ற மோசடியை வெளி உலகத்திற்கு தெரிவித்தார் மறைந்த கென்ய அதிபர் ஜோமோ கென்யத்தா. மிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள்தான், மக்களை கும்பலாக மதம்மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறுகின்றனர் மதம் மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர். உதாரணத்துக்கு 2000மாவது ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்தது கிறிஸ்தவர்கள் எண்ணிக…
-
- 0 replies
- 1.2k views
-
-
விசரன் என்னை மன்னிப்பார் என்கின்ற நம்பிக்கையில் , எனக்குப் பிடித்த அவரின் ஆக்கத்தை உங்களுடன் பகிர்கின்றேன் . ஆனால் , இதைப் பிரதேசவாதம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இதைத் தயவு செய்து பார்க வேண்டாம் . எமது மக்களின் ஊத்தைகளை எள்ளலுடன் விபரித்துள்ளார் . இனி.................................................................... ஏறத்தாள 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் வாழ்ந்திருந்த காலமது. என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோருமே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நான் மட்டுமே மட்டக்களப்பைச் சேர்ந்தவன். மட்டக்களப்பு என்பதாலேயே சில நக்கல் கதைகள் என்னை நோக்கி வரும். அதில் நக்கல், பகடி இருந்ததே அன்றி விஷம் பூசிய வார்த்தைகள் இருந்ததில்லை. அப்படி நான் உணர்ந்ததுமில்லை. டேய் உன்னூர்…
-
- 49 replies
- 78.3k views
-
-
இழப்பு இழப்பு இழப்பு.. இழப்பை தவிர எதுவுமில்லா முதுமை.. உறவுகளின் இழப்பு.. நண்பர்களின் இழப்பு.. உடலில் பலம் இழப்பு.. இவர்கள் இளையவர்களுக்கு கூறுவது..
-
- 1 reply
- 1.9k views
-
-
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் காமம் கலக்காத காதல் இன்னும் உயிருடன் இருக்கிறதா? அதாவது நான் காமத்தை தவறு என்று சொல்லவில்லை. உடலழகில் வசியப்பட்டு காதல் என்ற உன்னதமான சொல்லை இழிவுபடுத்தி வருகிறார்கள். முதலில் காமம் என்பது என்ன? காமம் என்பது ஆசை,விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பஙகளையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல். பழங்காலத்தில் காதலே காமம் என்ற சொல்லில் வழங்கி வந்ததென அறிஞர்கள் சொல்கிறார்கள். தமிழ் அகராதிகளில், லிங்கம், யோனி, அல்குள், கொங்கை வார்த்தைகளை நீக்கிப் பார்த்தால், அகராதி சிறுகதைப் போல சிக்கனமாகச் சுருங்கி விட வாய்ப்புண்டு என்றும் சொல்கிறார்…
-
- 1 reply
- 5.3k views
-
-
◆ ஒரு பனை ஓலைக் குடிசை...!!! வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!! வெளியே ஒரு விசுவாசமான நாய். ◆ பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்.. ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி... பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள் ◆ இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு.... சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்.. ◆ ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...! அடுத்து ஒரு புளியமரம்...!!! ◆ பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்திமரம்.. ◆ விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்... ◆ மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!! ◆ மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. . தான…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
சமூக வழிநடத்தலில் ஆலயங்களின் பங்களிப்பு
-
- 1 reply
- 754 views
-
-
365 பெண்களோடு டேட்டிங் செல்ல இலக்கு வைத்திருப்பது ஏன்? அனைத்து வயது வரம்பு பெண்களோடும் இவர் ஏன் டேட்டிங் செல்கிறார்? கீதா பாண்டே பிபிசி செய்திகள், டெல்லி 41 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டேட்டிங் செல்லும் சுந்தர் ராமு தமிழ் நடிகர், தொழில்முறை நடனக் கலைஞர் மற்றும் புகைப்படக் கலைஞர் சுந்தர் ராமு கடந்த சில ஆண்டுகளில் 335 பெண்களோடு டேட்டிங் சென்றுள்ளார். ஆனால் 365 டேட்டிங் செல்ல வேண்டும் என்கிற தனது இலக்கை அடைய இன்னும் 30 குறைவாக இருப்பதாக அவர் கூறுகிறார். அவர் விவாகரத்தானவர். ஆயினும் "காதலை வெறுக்கவில்லை" என்கிறா…
-
- 3 replies
- 625 views
- 1 follower
-
-
66 வயசுலயும் கண்ணாடி போடல. என்ன கொஞ்சம் ரொம்பவே பொடியான எழுத்துகள் மட்டும் சிறிது மங்கலாகத் தெரிகிறது. ஆனாலும் படித்துவிட முடிகிறது. ஆனால் 5ம் வகுப்பு படிக்கும் பேரன் கண்ணாடியை போட்டுக் கொண்டு குறுக்கும், நெடுக்குமாக நடக்கையில் ஏதோ ஒரு வகையில் பரிதாபமும் எட்டிப் பார்க்கிறது. அவசர உலகுக்குள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் விரைவு காட்டல் இங்கு வழக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் பலரது வாழ்க்கையும் இப்போது விரைவு காட்டி கிளப்பி விடுகிறது. என் கண்முன்பே நான் அன்று உண்டு மகிழ்ந்த பதார்த்தங்கள் பலவும் துரித உணவு கலாச்சாரத்தில் மூழ்கித் தொலைக்கப்பட்டுவிட்டது. நாஞ்சில் நாட்டில் முன்பெல்லாம் வீட்டுக்கு, வீடு காலையில் கருப்பட்டி காபி கிடைக்கும். இப்போது கருப்பட்டி வ…
-
- 1 reply
- 1.8k views
-