சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பிள்ளைகளுக்கு முன் அடிபட்டால், விளைவு
-
- 2 replies
- 1.1k views
-
-
கோடை காலம் ஆரம்பித்ததுமே புலம்பெயர் நாடுகளில் கோயில்கள் (தர்மகர்த்தாக்கள்) கும்மாளம் போடத் தொடங்குகிறார்கள். சரியாகச் சொல்லி வைத்தது போல ஞாயிற்றுக் கிழமைகளிலோ அல்லது வங்கி விடுமுறை நாட்களிலோ வரும் சுபநேரத்திலே கடவுளைத் தேரிலேற்றி ஊர்வலம் கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக என்னிடத்தில் சில கேள்விகள் மென்மையான சந்தேகங்கள் 1. அன்பையும் அமைதியையுமே போதித்த சைவ சமயத்தின் பெயரால் இத்தகைய ஆடம்பரங்கள் தேவையா? 2. ஊரிலே ஆண்டவன் தேரில் வருவதற்காகச் சொல்லப்பட்ட காரணம் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ஆணடவன் அவர்களையே நாடிச் சென்று அருள் செய்வதற்காகவே தேர்த்திருவிழாக்கள். அப்படியானால் சைவர்களே இல்லாத தெருக்களில் யாருக்காக இந்த வீதி உலா? கடுமைய…
-
- 21 replies
- 4.7k views
-
-
ஈழத்தில் உருவாகும் குறும்படங்கள், குறுந்திரைப்படங்கள் எதைக் குறி வைத்து வருகின்றன சகலரின் கருத்துக்களையும் பதியுங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
கோவிட் 19 : யாரின் உயிரை காப்பாற்றுவது ? சில நாடுகள், குறிப்பாக இன்னும் மோசமாக பாதிக்கப்படாத, ஆனால் பாதிக்கப்படுவோம் என எண்ணும் நாடுகளில் கேட்கப்படும் ஒரு கேள்வி. வேகமாகாப்பரவி கோவிட் 19 தொற்று பரவி வரும்பொழுது பல நாடுகளில் உயிர்கள் காவு கொல்லப்படுகின்றன. அவ்வாறு நடந்த நாடுகளில், வைத்தியர்கள் அறிந்து கொண்ட ஒன்று : எவ்வளவு விரைவாக பாதிக்கப்பட்டவரை சுவாசிக்க உதவவும் இயந்திரத்துடன் ( வெண்டிலேட்டர் ) இணைக்கின்றோமோ அவ்வளவிற்கு அவர் உயிர் தப்பாது சாத்தியங்கள் அதிகம் என்பதே. ஆனால், சுவாசிக்க உதவவும் இயந்திரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வைத்தியசாலைகளில் உள்ளன. பொதுவாக இவை அவசர சிகிச்சை பிரிவுகளில் இருக்கும். நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இடையே, ம…
-
- 3 replies
- 635 views
- 1 follower
-
-
தோல் நிற அரசியலும்;( Skin Color Politics) இரு ஆவண குறும்படங்களும் – மேமன்கவி தோல் நிற வேறுபாட்டை முன் வைத்து உலகச் சமூங்களிடையே ஒதுக்கும் மனப்பான்மையும் ஒடுக்கு முறையும் இற்றைவரை வளர்த்தெடுக்கப்பட்டமை நாம் அறிந்த ஒன்று. இந்த ஒதுக்கும் மனப்பான்மைக்கும் ஒடுக்கு முறைமைக்கும் நீண்டதொரு வரலாறு உண்டு. இந்த வரலாற்றின் நவீன யுகத்தில் ஒரு பகுதியாக தெரிந்த வரலாறாக ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பின மக்கள் எதிர் கொண்ட அவலமும் துயரமும் அவர்தம் விடுதலை போராட்டமும் மாறிய பொழுதும், உலகளாவிய ரீதியாக, தம்மை வெள்ளையர்கள் என சொல்லிக் கொண்ட மேற்கத்திய காலனியங்கள், தம் ஆட்சிக்கு உட்பட்ட ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்களை பின்காலனியச் சூழல் வரை வெள்ளையர் அல்லாத கறுப்பர்கள் என்று ஒதுக்கும் ம…
-
- 0 replies
- 923 views
-
-
இனிய வணக்கங்கள், கடந்த சில நாட்களாய் இந்த முகநூல் பற்றியதோர் கருத்தாடலை செய்யவேண்டும் என்று நினைச்சு இருந்தன். இன்றுதான் சந்தர்ப்பம் கிடைச்சது. விசயத்துக்கு வருவோம். நான் நினைக்கின்றேன் சுமார் மூன்று அல்லது நான்கு வருசங்களுக்கு முன்னர் எனது நண்பன் ஒருவன் முகநூலில் இணைவதற்கு தொடர்ச்சியாக மின்னஞ்சலில் எனக்கு அழைப்புக்கள் அனுப்பிக்கொண்டு இருந்தான். வழமையாகவே வலைத்தளங்களில் இணையுமாறு ஏதாவது புதுசுபுதுசாய் அனுப்பிக்கொண்டு இருப்பான். நான் இணைவதில்லை. ஆனால் இதில் என்னமோ அவனை திருப்திப்படுத்துவதற்காக இணைந்துகொண்டேன். இதில் ஒரு விசயம் சொல்லவேணும், பலர் பலவிதமான வலைத்தளங்களில் இணைவதற்கு தினமும் மின்னஞ்சலில் அழைப்புக்கள் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். மற்றவர்களின் மனம்…
-
- 20 replies
- 5.5k views
-
-
தாரா வளர்ப்பில் சாதிக்கும் யாழ்ப்பாண இளம்பெண் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று சுவடிகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆக பணியாற்றுகிறார். அதேவேளை, சீர் பயோ (ளுநநச டீழை) என்கிற நிறுவனத்தை நிறுவி அதனூடாக தாரா வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். இன்று 300 க்கும் மேற்பட்டதாராக்களைவளர்ந்துவரும் ஸ்ராலினியுடன் பேசியபோது, 2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மலேசியப் பயணத்தின் போது தான் என் தொழில் முயற்சிக்கான முதல் விதை …
-
- 3 replies
- 3.9k views
-
-
தூத்துக்குடியில் ரஜினியின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தை கிழித்துத் தொங்கவிட்ட வீரத்தமிழன் சந்தோஷ்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் 'ரஜினிகாந்த் தூத்துக்குடிக்குச் செல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை', என்றார் நண்பர். 'நான் எதிர்பார்த்தேன்!' என்றேன் நான். வியப்புடன் உற்றுப்பார்த்த நண்பன், 'எப்படி?' என்றார் ஒற்றை வார்த்தையில். 'ஒன்றுமில்லை, காலாவுக்கு கன்னடத்தில் திரையரங்குகளில் தடைவிதித்து ஆப்படித்துவிட்டார்கள்! இளிச்சவாயன் தமிழன்களும் வரலேன்னா அம்போன்னு போயிருமேன்னு கவலைப்பட்டுப் போயிருப்பார்' என்று விரித்…
-
- 1 reply
- 1.4k views
-
-
வெய்துண்டல் அஞ்சுதும் - சுப.சோமசுந்தரம் சமீபத்தில் ‘யாழ்’ இணையத்தில் “ஆபாசப் படங்களின் தாக்கம் : உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு” என்னும் தலைப்பில் வெளியான பதிவும் அதற்கான பின்னூட்டங்களும் என்னுள் தோற்றுவித்த சிந்தனைச் சிதறலே எனது இவ்வெழுத்து. அது இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வாக இருப்பினும், மேற்கத்தியத்தில் வேகமாகக் கரையும் இந்திய/தமிழ் சமூகங்களுக்குப் பொருந்தாதா என்ன? இருவரும் உடன்பட்ட உடலுறவில் தலை முடியைப் பிடித்து இழுத்தல், அறைதல், கழுத்தை நெரித்தல், வாயைப் பொத்தி வசவு மொழிகளைக் கூறுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களின் மூலமும் ஆண்கள் வேட்கையைத் தணித்துக் கொள்வதாக கருத்துக் கணிப…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
செல்வம் தேடும் வழி [size=4]மனித குலத்தை மேம்படுத்தக்கூடிய கருவி ஒன்று உண்டு. மனிதனின் கனவுகள் நனவாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இது உதவுகிறது. இந்தக் கருவி நல்லவிதமாகப் பயன்படுத்தப்படும் போது வையகம் மனித குலத்தின் வசத்துக்குள் வருகிறது. அதே கருவி தவறாகச் செலுத்தப்படும்போது மனிதக்குலத்தையே வேரறுக்கும் வல்லமையைப் பெற்றுவிடுகிறது. [/size][size=4]இது இல்லையேல் மகன் தாயை மறக்கலாம், மனைவி கணவனை இழக்கலாம்; எவரும் உயிரைத் துறக்கலாம். இனம், குலம், மதம், மொழி, நாடு என்ற எந்தவிதப் பாகுபாடும் இன்றி மனிதகுலத்தை தன் வசத்தில் வைத்திருக்கிறது அந்தக் கருவி.[/size] [size=2][size=4]செல்வம்.[/size][/size] [size=2][size=4]காலையில் கண் விழித்ததும் இன்று என்…
-
- 1 reply
- 909 views
-
-
உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்! செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்லவே ஆணுக்கும் பெண்ணுக்குமான தயக்கம் நிறைய இருக்கும். பார்வையாலேயே பல நாட்கள் ஓடும். அதன் பிறகு ஒருவழியாக காதலை சொல்லி… அது கல்யாணத்தில் முடிந்தால் அவர்களுக்கு இடையிலான புரிதல் நிறைய இருக்கும். கூட்டுக் குடும்பமாக ஆட்கள் நிறைந்திருக்கும். அங்கே அந்த காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கண்களால் நடக்கும் உரையாடல். அதற்காக அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருந்தது இல்லை. சண்டைகளைத் தாண்டி அவர்களுக்குள் இருந்தது புரிதல். இன்று…? பார்த்ததும் ஒரே நாளில் காதலைச் சொல்லி், இரண்டே நாட்களில் எல்லாம் பேசி முடித்து… வாழ்க்கை என்பது சலித்துவிடுகிறது. சீக்கிரத்தில் தொடங்க…
-
- 0 replies
- 819 views
-
-
-
- 1 reply
- 736 views
-
-
-
பெண்களிற்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள் எனும் தலைப்பில் இணைக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையை லங்காஸ்ரீயி்ல் தொழிநுட்பமும் விஞ்ஞானமும் என்ற பகுதியில் வாசித்தேன். இந்த ஆய்வு எங்கும் பொருந்துமா பெண்கள் இவ்வாறு உள்ளார்களா என வியக்க வைத்தது. அதை இங்கு இணைக்க முடியாது யென்பதால் இங்கு தரவில்லை. நீங்களும் வாசித்து பாருங்கள். சிலர் வாசித்திருப்பீர்கள்.
-
- 13 replies
- 28.8k views
-
-
உண்மையான நண்பன் யார்? எந்த நேரத்திலும் உதவி செய்ய விருப்பம். நண்பனுக்கும் நண்பனுக்கும் உள்ள வேறுபாடு நம்பமுடியாத உண்மைகள் சிறந்த நண்பர்கள் கடன் வாங்குகிறார்கள் சிறப்பு இடம்எங்கள் வாழ்க்கையில். அவர்கள் புதிதாக "சிறந்தவர்" என்ற பட்டத்தைப் பெறவில்லை. இந்த பரிசை அவர்கள் வென்றனர் அதிக எண்ணிக்கையிலான மகிழ்ச்சி, முயற்சி, கஷ்டம், தொடர்பு மற்றும் அன்பு. மறுபுறம், உங்கள் சிறந்த நண்பர் உங்கள் மரியாதையை இறுதிவரை பாதுகாப்பார், ஏனென்றால் அவருக்கு விசுவாசத்தின் ம…
-
- 0 replies
- 2.1k views
-
-
என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். 6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம்…
-
- 9 replies
- 2.5k views
-
-
வெற்றி பெற வேண்டுமா? -விவேகானந்தர் வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர். அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா... அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம். அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக…
-
- 0 replies
- 856 views
-
-
நான் காணும் தொ.ப. ஒருவரது சான்றாண்மையால் ஈர்க்கப்பட்டோர் அவரைத் தத்தமது பார்வையில் காண முயல்வர். அச்சான்றோரின் அடிப்படைத் தத்துவங்கள் எல்லோருக்கும் பொதுவாக அமையினும், பார்வைகள் சற்றே விலகி வேறுபடலாம். அவ்விலகலும் வேறுபாடும் அச்சான்றாண்மைக்கு மேலும் அணி சேர்ப்பதாகும். நான் காணும் அறிஞர் தொ.பரமசிவன் அறிவுலகில் தமக்கென தடம் பதித்தவர். அவரை அறியாதார்க்கு சில அறிமுகச் சொற்கள். திருநெல்வேலிப் பகுதியான பாளையங்கோட்டையில் பிறந்து, வளர்ந்து, பேராசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்று சொந்த ஊரிலேயே வாழ்பவர். மானுட வாசிப்பில் துறை போகியவர். சமூகப் பிரச்சனைகளில் தமது கருத்துக்களை வெளியிடுவதில் எவ்விதத் தயக்கமுமின்றி எழுதுகோலை ஆயுதமாய்க் கொண்ட சமூகப் போராளி. எடுத்து…
-
- 0 replies
- 1.8k views
- 1 follower
-
-
`கறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை? `#being me?' பகிர்க பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் முதல் கட்டுரை இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ் சமூகத்தில், பல சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட நிறம் கறுப்பு. ஆனால் மனிதர்கள் கறுப்பாக இருந்தால்? அதுவும் பெண் என்றால்? பார்த்த நொடியில் உங்கள் தகுதி, குணம் என்று எதையும் யோசிக்காமல் உங்கள் நிறத்தை கொண்டு எடைபோட்டு ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். நம்மில் பலரும் இதனை பிறர் கூற கேட்டு இருப்போம் "பொண்ணு கறுப்பா இருந்தாலும் கலையாக இ…
-
- 3 replies
- 3.3k views
-
-
ஒரு சிறுவனுக்கு விருத்த சேஷனம் செய்யப்படுகிறது. உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இருண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. விருத்தசேஷனம் எச் ஐ வி தொற்றைக் குறைக்கும் விருத்தசேஷனம் செய்வது எச் ஐ வி பரவுவதை 60 வீதத்தால் குறைக்கும் என்று கூறும் ஆய்வு குறித்து ஒலிப்பெட்டகம். இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும…
-
- 13 replies
- 1.9k views
-
-
எட்வினா லாங்லே பிபிசி த்ரீ படத்தின் காப்புரிமை BBC Three/ David Weller கடைசியாக நான் மன வேதனை அடைந்தது சரியாக ஓராண்டுக்கு முன்பு. என் விஷயத்தில், காலம் முழுவதும் இருந்த அன்பு நிறைந்த வாக்குறுதி திடீரென முடிவுக்கு வந்துவிட்டது. நான் காதலித்தவருடன் செல்வதாக இருந்த நேரம். அவர் தன் மனதை மாற்றிக் கொண்டார். அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மறுபடி பழைய நிலைக்கு ஒருபோதும் வர முடியாது என்று நான் நினைத்தேன். முறிவுகள் முறிவுகள் எனக்குப் புதியது அல்ல. அதை நான் வழக்கமாகக் கைய…
-
- 2 replies
- 825 views
-
-
நாள்காட்டியில் ஆரம்பித்து இணையத்தளங்கள் வரை, ஜோதிடம் என்பது எதாவொரு ரூபத்தில் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மண்ணுலகை சுற்றிக் கொண்டிருக்கும் நவக்கிரகங்களை, அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதற்குரிய சாதக பாதகங்களை கணக்கிட்டு, அதனால், மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும். உடல் ரீதியாக வேதனை வந்தால், மருத்துவரைப் பார்ப்பதும், மன ரீதியாக சோதனை வந்தால், ஜோதிடரைப் பார்ப்பதும்தான் மக்களின் இயல்பு. ஆனால், எந்த ஒரு ஜோதிடனும், நடந்தவற்றை 99% மிகச் சரியாக கூறும் அளவுக்கு, நடக்கப் போவதை துல்லியமாக கூறுவதில்லை. அது மிகவும் கடினம். ஏனென்றால், படைத்த பிரம்மாவை தவிர, வேறு யாராலும் நமது எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்…
-
- 0 replies
- 3.8k views
-
-
முகப்புத்தகத்தில் முகம் செய் …. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா 04 நவம்பர் 2012 இணையம் தகவற்தொழில் நுட்ப உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இணையம் மனிதர்களின் பௌதீக அசைவியக்கத்தை(physical movement) தூண்டாமல் மெய்நிகர் உலகில் (virtual world) அவர்களை இருந்தஇரையில் இயங்கத்துண்டுகிறது. இதற்குக் காரணமாக இணையத்தில் வளர்ந்து நிற்கும் சமூக ஊடக வலையமைப்புக்கள் (social media networks) இருக்கின்றன. இச் சமூக வலைத் தளங்கள் தனிமனித நடத்தைகளிலும் சமூகத்திலும் அந்தச்சமூகத்தின் அரசியலிலும் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து நின்று ஆராய வேண்டிய தேவ…
-
- 0 replies
- 870 views
-
-
அணு உலை பற்றிப் பரவலான பேச்சுகள் தமிழ்நாட்டு மக்களிடையே இருந்தாலும், அணு உலைக்கான சரியான அறிவியல் விளக்கம், பலருக்கு இல்லாமல் இருப்பது உண்மைதான். மின்சாரம் இல்லாமல் மனுசன் கஷ்டப்படும் வேளையில், மின்சாரம் தயாரிப்பதை இந்த கூடங்குளவாசிகள் ஏன் தடுக்க வேண்டும்?" என்று சர்வசாதாரணமாகக் கோபப்படுபவர்களும் உண்டு. அணு உலையை எதிர்க்கும் மக்களின் கோபத்துக்குச் சரியான காரணம் உண்டுதானா? அல்லது அதெலாம் சும்மா தேவையற்ற பயமா? என்னும் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் தேவை. "விமானம் விபத்துக்குள்ளாகும் என்று நினைத்து, விமானத்திலேயே பயணம் செய்யாமல் இருப்பது சரிதானா?" என்று ஒரு தலைவரே கேட்டிருந்ததை, நியாயமான வார்த்தைகள் என்றும் சிலர் நம்புகிறார்கள். இவற்றுக்கான விடைகளை நான் மொத்தமாக இங்கு ஆராயாவிட…
-
- 3 replies
- 8k views
-
-
வீட்டிற்கு வந்த உறவினரிடம் கணவர் கூறினார், ”என் மனைவி கேட்டதை எல்லாம் நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன். முடியாது என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.” உறவினரோ அவரை மனமார பாராட்டி அந்தப் பெண்ணைப் பார்த்து 'நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி” என்று கூறினார். அதற்கு அந்தப் பெண் 'ஆம்' என்று தலையசைத்து ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தார். அவளது மனம் அமைதியாகச் சொன்னது “என் கணவரால் செய்ய முடிவதைத் தான் நானும் கேட்பேன்” என்று. இத்தனை அழகான, மென்மையான ஒரு உலகம் தான் பெண்ணின் இதயம். அது ஆராயப்படவேண்டியது அல்ல.. ரசிக்கப்படவேண்டியது.. பாதுக்காக்கப் படவேண்டியது.. http://www.ilaignan.com/1917 ம்ம்...திரியை கொளுத்திப் போடுவம்...பத்திக்கிதா...? இல்லை ஊத்திக்கிதா...?ன…
-
- 21 replies
- 1.9k views
-