சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இறந்தபின்...... காலை நேரம்., அலுவலகத்திற்குக் கிளம்பியாக வேண்டும். நான் செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம் அய்யோ.... என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது, என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, நான் நன்றாகத் தூக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும…
-
- 1 reply
- 800 views
-
-
ஒரு சமூகப் பரிசோதனை. யாருக்கு கொடுக்கும் மனம் உள்ளது? இந்த வீடியோவைப் பாருங்கள்.
-
- 2 replies
- 800 views
-
-
வயதுக் கட்டுப்பாட்டை மீறி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறுவர்கள் சமுகவலைதளங்களை பாவிக்க வயது கட்டுப்பாடு உள்ளது பிரிட்டனில் 10 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் முக்கால்வாசிக்கும் அதிகமான சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமுகவலைதளங்களில் கணக்குகளை வைத்துள்ளதாக, சிபிபிசி ( பிபிசியின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி) மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சமுகவலைதளங்களில் 13 வயதிற்கு குறைந்தவர்கள் கணக்குகளை வைத்திருக்க முடியாத கட்டுப்பாடுகள் உள்ளன. பிரிட்டனில் 10 தொடக்கம் 12 வயதுக்கு இடைப்பட்ட வயது சிறுவர்களில், முக்கால்வாசிக்கும் அதிகமானோர் வயது எல்லை கட்டுப்பாட்டையும் மீறி சமுகவலைதளங்களை பாவிக்கின்றன…
-
- 0 replies
- 800 views
-
-
சமுதாயக் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்ல வந்த சிசேரோ (Cicero) “திருமணம் சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்” என்றான். அன்று தொடங்கி இன்று வரை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியத் திருமணங்கள் வியக்கத்தக்க பல மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நமது நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களுக்கு ஈடுகட்டக் கூடிய வகையிலே மக்களின் மணவாழ்விலும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. இளைய சமுதாயத்தினரின் எண்ணச் சுழற்சியால் அவர்களது எதிர் பார்ப்புகள் மாறி வருகின்றன. உலகின் பல பகுதிகளிலும் நாள்தோறும் நிகழ்கின்ற வியத்தகு நிகழ்ச்சிகளும், எழுச்சிகளும் அவர்களது சிந்தனை ஓட்டத்தை பாதிக்கின்றன. தாங்கள் கற்ற கல…
-
- 1 reply
- 800 views
-
-
பல காலமாக நான் எழுதி வரும் ஒரு விஷயம், தமிழ்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பவர்கள் – தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும் புத்திஜீவிக் கும்பல். (இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டத்தான் கை இழுக்கிறது. லிங்கனையும் காந்தியையும் எண்ணிக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் கும்பல் என்று மட்டுமே சொல்கிறேன். மற்றபடி நீங்கள் எல்லா கெட்ட வார்த்தைகளையும் போட்டுக் கொள்ளலாம்.) மிக முக்கியமாக, அந்த ஆங்கில அறிவுஜீவிக் கும்பலின் முட்டாள்தனம் சகிக்க முடிவதில்லை. அந்தக் கும்பலுக்கு எதுவுமே தெரியாது. தெரிந்த ஒரே விஷயம், நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள்; தெளிவான ஆங்கிலம் எழுதுவார்கள். அவ்வளவுதான். அவர்களின் புத்தி, அறிவு எல்லாம் ரொ…
-
- 0 replies
- 798 views
-
-
ஒரு தொழிலகம் மற்றும் வீடு உன்னதமான நிலையை அடைவதற்கு உதவும் ஐந்து அடிப்படை செய்கைகளை உள்ளடக்கிய ஐந்து ஜப்பானிய சொற்களால் விவரிக்கப்படுவதை ஐந்து 'எஸ்' என்கிறோம். செய்ரி- - அப்புறப்படுத்துதல்செய்டன் - ஒழுங்கு படுத்துதல்செய்சோ - துப்புரவாக்குதல்செய்கெட்சு - நிர்ணயித்தல்சிட்சுகே - பயிற்சியும் கட்டுப்பாடும்சேப்டி - பாதுகாப்பு இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மற்றும் தொழிற்சாலையிலும் பல்வேறு மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. ஐந்து 'எஸ்' செயல்களை செய்வதற்கு எல்லா இடமும் பொருத்தமான இடமே. வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே தொழிற்சாலை நிரந்தரமாக இயங்க முடியும் என்ற ஒரு கட்டாயமான சூழ்நிலை உருவாகி வருகிறது.தொழிற்சாலைகள் 2000-ம் ஆண்…
-
- 0 replies
- 798 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராகேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் 2 முறை தற்கொலைக்கு முயன்றேன். என் குழந்தையை கருணை கொலை செய்து விடுமாறு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். அழுது அழுதே என் வாழ்க்கை தீர்ந்து விடுமோ என பயந்திருக்கிறேன். விவாகரத்து ஆன வலியும், என் குழந்தை குறித்து மற்றவர்களின் புரிதலும் மனச்சோர்வை அதிகரித்த காலத்தில், என்னிடம் துணையிருந்தது என் நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கை மட்டுமே என் வாழ்வில் சிறு வெளிச்சத்தை தந்தது. அந்த சிறு நம்பிக்கை வாழ்வதற்கான உந்துதலை அளித்தது. அந்த நம்பிக்கை மட்டுமே இன்று எனக்கு முழு துணையாக இருக்கிறது," என கண்களில் நம்பிக்கையோடு தெளிவாக பேசுகிறார் பார்கவி.…
-
- 7 replies
- 797 views
- 1 follower
-
-
வடமேற்கு பாகிஸ்தானில் குடும்ப கெளரவத்துக்காக 3 பெண்கள் அவர்களது உறவினர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அந்தப் பெண்களில் ஒருவர் தனது கணவரை விட்டு பிரிந்து சென்றதை தொடர்ந்தே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. மேற்படி பெண்களில் ஒருவரான கராச்சியைச் சேர்ந்த 22 வயது பெண் இரு வருடங்களுக்கு முன் கடைக்காரர் ஒருவரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் அவர் தனது கணவரை விட்டு பிரிந்து சென்று வடமேற்கு ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பிறிதொரு நபரை திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்வதற்கு அந்தப் பெண்ணின் அத்தையும் மைத்துனியும் உதவியுள்ளனர். இந்நிலையில் இந்த விடயத்தை அறிந்த வடமேற்கு பாகிஸ்…
-
- 0 replies
- 797 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(1): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா இக்கட்டுரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி மற்றும் சமூக விலக்குப்பற்றியதொரு ஆய்வுக் கற்கையாகும். இக்கற்கையின் முன்னைய பகுதி வரல◌ாற்றுரீயாக இடம்பெற்ற இரண்டாம்தரத் தகவல்களிளன அடிப்படையாகக் கொண்டது. ஏனைய பகுதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களின் ஒரு பகுதியினரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளினைப் பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றன. உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களில் பஞ்சமர் என அழைக்கப்படும் மரபரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிரதிநிதித்துவம…
-
- 0 replies
- 795 views
-
-
ஏப்ரல் மாதம் நடந்த வருடாந்திர தேசியத் திறனறித் தேர்வுகளின் முடிவுகளை ஜப்பான் கல்வி அமைச்சகம் பொதுப்பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது. 2007 முதல் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஜப்பானிய மொழியறிவு, கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவைச் சோதிப்பதற்காக நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதத்தை, பொதுப்பார்வைக்கு வெளியிடுவது என்ற கல்வி அமைச்சகத்தின் முடிவு பிரச்சினைக்கு உரியது. இதுபோன்ற நடவடிக்கைகள் பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடும். ஏனெனில், கல்வி அமைச்சகத்தின் முடிவின்படி, இந்தப் பள்ளிகள் தேர்வு முடிவுகளை மட்டுமல்ல, அம்முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையையும், மாணவர்களின் மதிப்பெண…
-
- 2 replies
- 792 views
-
-
ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 1) சிறந்த ஆசான் 2) சிறந்த பெற்றோர் 3) சிறந்த நண்பன் கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . ஆசிரியர் என்பது வேறு ஆசிரியம் என்பது வேறு ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் என்பது என் கருத்து நன்றி
-
- 3 replies
- 791 views
-
-
ஒருவர் காதலிக்கிறார் என்பதை அவரது காதையும், செல்பேசியையும் வைத்துச் சொல்லிவிடலாம். எங்க அவர் காதைப் பார்க்க முடிகிறது. எப்போதும் காதில் செல்பேசி ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்று சொன்னால், அவர் நிச்சயம் காதலில் விழுந்தவராகத்தான் இருப்பார். இது டெலி மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்குப் பொருந்தாது. பெரும்பாலான காதலர்கள் வெகு நேரம் தொலைபேசியில் அரட்டை அடிப்பதை வழக்காமாகக் கொண்டுள்ளனர். நிற்கும் போது, நடக்கும் போது பயணிக்கும் போது என எப்போதும் ஏதாவது ஒன்று இவர்கள் வாயிலும், காதலும் போய்க்கொண்டே இருக்கும். கூட இருப்பவர்கள்தான், மணிக்கணக்கா அப்படி எ…
-
- 1 reply
- 791 views
-
-
ஆதிதிராவிடர் (விடுதி) சிறைச்சாலை! யாழன் ஆதி தலித் மக்களின் விடுதலை என்பது அவர்களின் சமூக, அரசியல் சூழலில் மட்டுமல்ல; அது அவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் அடங்கியிருக்கிறது. தலித்துகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கல்வி மட்டும்தான். ஆனால், சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, இங்கு நிலவும் கல்வி முறையிலான ஏற்றத் தாழ்வுகளில் அவர்களுக்கு கிடைத்திருப்பது தரமற்ற கல்விதான். சத்தான உணவினைப் போல, உயர்தர கல்வியும் அவர்களுக்கு எட்டுவதில்லை. இந்தப் பின்னணியோடுதான், தலித் மாணவர்கள் தங்கிப் பயில்கின்ற ‘ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவியர் விடுதிகள்' எதிர்கொள்ளப்பட வேண்டும். இந்த விடுதிகள்தான் எதிர்கால தலித்துகளின் வாழ்நிலையைத் தீர்மானிக்கின்ற இடங்களாக இருக…
-
- 0 replies
- 791 views
-
-
வன்முறைதான் வழியா? ஸ்ரீரஞ்சனி வன்முறை என்பது, அதிகாரம் அல்லது உடற்பலத்தைப் பயன்படுத்தி ஒருவரை அல்லது அவர் சார்ந்த குழுவைத் துன்புறுத்துதல் அல்லது பொருள்களைச் சேதப்படுத்துவதன் மூலம் குறித்தவரை அல்லது குறித்த குழுவைப் பயப்படுத்துதல் ஆகும். முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வன்முறையே சிறந்த வழி எனப் பலர் கருதுகின்றனர். அதற்கு, அவர்கள் வளர்ந்த முறையும், வாழ்ந்த சு10ழலும் முக்கிய காரணமாகின்றன. “அடி வாங்கி வளர்ந்ததால் தான், நான் இன்று ஒர் உயர்நிலையில் இருக்கிறேன். தழும்பு வந்தால் பெற்றோர்களிலும், ஆசிரியர்களிலும் ஒரு மரியாதையையும் பயமும் தானாகவே வந்துவிடும்!”- எமது சமுதாயத்தில் பெரியமனிதர் என மதிக்கப்படும் ஒருவர், இங்கு நிகழ்ந்த நடன அரங்கேற்றமொன்றில் சொன்ன வசனங்கள் இவை. இவ்வக…
-
- 1 reply
- 790 views
-
-
ஏன்னுடன் வேலை செய்பவர்களில் ஆபிரிக்காகாரன ஒருவனுமிருந்தான்.. மிக நல்லவன் நல்ல பகிடிகாரன். ஒரு நாள் மேலதிகாரி ஒருவர் வந்து தேவையில்லாமல் மிக அதிகமாக அவனிடம் கத்தினார். அவனோ மிக சிறப்பாக வேலை செய்து கொண்டிருந்தவன் திரும்பி என்னை பார்த்தான் ஏதோ ஆப்பிரிக்க மொழியில் சொல்லிவிட்டு பழையபடி வேலை செய்யத் தொடங்கினான். சிறிது நேரம் அவனது கோபம் அடங்க விட்டு மெதுவாக அவனிடம் என்னநடந்தது என்னக் கேட்டேன். மேலதிகாரி போன பக்கம் பார்த்து 'சிக்கன் மைண்டட் மான்'; என்றான் இப்போ எனக்கு நடந்த பிரச்சனை பற்றி கேட்ட கேள்வி மேலான ஆவல் போய் கோழிப் புத்தி பத்தி கேட்க வேணும் போல இருந்தது. மெதுவாக கோழிப் புத்தி பற்றி கேட்டேன். அது என்னடாப்பா அந்த கோழிப் புத்தி? மிக ஆறுதலாக என்னைப் பார்த்தான் ப…
-
- 2 replies
- 789 views
-
-
"கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்! முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!" பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே, கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு, அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து, சதையை தாண்டி விதியை காண்பது காதல் .... அப்படி காதல் கொண்ட கனிந்த காதலிக்காக ஷாஜகான் [Shah Jahan], மும்தாஜ் மஹால் [Mumtaz Mahal] இறந்த பின் ..... கண்களை கலந்து, இதயங்களை ஒன்றாக்கி, மௌனத்தை மொழியாக்கி, சிந்தனையை சீராக்கி, வாழ்வை வசந்தமாக்கி, இன்பத்தை இரட்டிப்பாக்கி கொடுத்து வாழ்ந்த அவள் நினைவாக தாஜ்மகாலை கட்டி அவள் நினைப்பில் வாழ்ந்தான்! வேறு பல மனைவிகள் இருந்…
-
- 0 replies
- 787 views
-
-
சில காலமாய் நடக்க ஆரம்பித்திருக்கிறேன். மூன்று வாரத்தில் ஐந்து நாட்கள் தான் என்றாலும் அலுவல் குறிப்பாக சில காலம் என்பது சாலப்பொருத்தமே. நெஞ்சத்தை கிள்ளாதே படம் ரிலீஸ் ஆன போது சில நாட்கள் ஆசைப்பட்டதோடு சரி. வாக்கிங் வாய்க்கவில்லை. வெறும் டாக்கிங்தான் வாழ்க்கை என்றாகி விட்டது. ஜிம்மிற்கு வெட்கமில்லாமல் பதினைந்து முறை சேர்ந்ததுதான் மிச்சம். ஆசான் சஜீவனிடம் ஏரோபிக்ஸ் கற்று சில காலம் (இங்கு சில மாதங்கள் எனக் குறிப்பு கொள்க) பேயாட்டம் போட்டு ஓய்ந்தேன். யோகா புத்தகங்கள் வாங்கிய எண்ணிக்கையில் பாதி எண்ணிக்கை நாட்கள் கூட ஆசனம் செய்யவில்லை. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக நந்தனம் தெருக்களில் நான் நடக்க ஆரம்பித்ததுதான் இங்கு கதைக்களம். மனித விநோதங்களின் தீவிர வ…
-
- 0 replies
- 785 views
-
-
இந்த காணெலியில் வயலின் செய்யும் ஒரு ஐயாவை பேட்டி எடுத்திருக்கிறார்கள், நல்ல விடயம், ஆனாலும் சில விடயங்களில் இன்னமும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம் என்பது எனது எண்ணம் ..
-
- 2 replies
- 785 views
-
-
20 ஆகஸ்ட் 2020 புதுப்பிக்கப்பட்டது 20 ஆகஸ்ட் 2020 இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் முத்துலட்சுமி ரெட்டியின் கதை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல துறைகளில் முதல் நபராக சாதித்தவர். இந்தியாவின் முதலாவது பெண் மருத்துவர், முதலாவது பெண் சட்டமன்ற உறுப்பினர், முதலாவது சட்டமன்ற துணைத் தலைவர் என வரிசையாகச் சாதித்தவர். யார் இந்த முத்துலட்சுமி ரெட்டி? தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886 ஜூலை 30ஆம் தேதி…
-
- 2 replies
- 784 views
-
-
காபி, உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை சேர்ந்த நியூராலஜி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களின் சுவர்கள் வலுவிழக்கும் போது ரத்தம் கசிந்து பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்கான காரணம் குறித்து நெதர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் மானிக் எச்.எம்.விலாக் என்பவர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு 8 முக்கிய காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பது நாம் குடிக்கும் காபி தான். இது ஸ்ட்ரோக் ஏற்பட 10.6 சதவீதம் காரணமாக இருக்கிறது. தீவிர உடற்பயிற்சி 7.9 சதவீதமும், செக்ஸ் 4.3 …
-
- 0 replies
- 783 views
-
-
நண்பனுக்காக ஒரு மதிய வேளையில் செல்போன் Recharge கடையில் நின்றிருந்தேன் .. கடைக்காரர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததால் சிறிது நேரம் கடை வெளியே காத்திருக்க வேண்டியதாகி விட்டது . 1-2 மணியென்பதால் , பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. [size=4]வெயில் வேறு கொளுத்தியது..[/size] [size=4]அப்போது .......[/size] [size=4]45 - 50 வயதிருக்கும் ஒரு பெண்மணி அந்த கடையின் வாயிலைப் பார்த்தவாறே கடையின் நிழலில் நின்றார் . [/size] [size=4]சரி கடைக்கு வந்திருக்கிறார் என்று [/size]நானும் நண்பனும் தள்ளி வேறு பக்கம் போய் நின்றோம் . அவரோ முகத்தில் எவ்வித சலனமுமின்றி எங்களைப் பார்த்தவாறே நின்றிருந்தார் . சரி ஏதோ கேட்க வருகிறார் என்றால் அதுவும் இல்…
-
- 0 replies
- 783 views
-
-
ஆதிவாசி எனும் கள உறவின் "[size=5]வாயாடவில்லை எந்தன் வாலாடுது - நான்[/size] [size=5]வம்பு செய்யவில்லை விதி விளையாடுது[/size][size=5][size=4]" கையெழுத்து (தலையெழுத்து) பகுதியில் உள்ள [/size][size=4]இந்த வசனத்தில் பல கருத்துகள் அடங்கியிருக்கு. நல்ல கருத்து ஆதிவாசி.[/size][/size] [size=5][size=4]விதியை யார் தீர்மானிக்கின்றார்கள், விளைவு நம் கையிலா அல்லது மற்றவர்கள் மீது பழியை போட & ஒரு தப்பை மறைக்க இந்த சொல்ல பயன் படுத்துகின்றோமா?[/size][/size] [size=5][size=4]இது எம்மில் உள்ள பலகீனத்தை காட்டுகின்றதா? [/size][/size] [size=5][size=4]விரும்பினால் உங்கள் பொன்னான கருத்துகளை பகிருங்கள் எனக்காக அல்ல பலருக்கு உதவும்.[/size][/size] [size=5][size=4]====…
-
- 0 replies
- 782 views
-
-
காதலர்தினம் ரோஜாவை மட்டுமல்லாமல் மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி... நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்... இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள். வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம். இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா? கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவ…
-
- 3 replies
- 782 views
-
-
பிரான்பற்று வேள்வியில் அறுக்கப்பட்ட ஆட்டின் தலை புலம்புகின்றது கேட்பீராக….? செய்திகள் | இலங்கைச் செய்திகள் Saturday, May 9, 2015 by admin இன்றைய தினமும் நூற்றுக்கணக்கான கடா ஆடுகள் வெட்டி மண்ணில் சாய்க்கப்பட்டள்ளன. இந்நிலையில் ஒரே வெட்டில் இரண்டு துண்டாய் தலைவேறு முண்டம் வேறாய் துடிதுடித்து கிடந்த ஒரு கடா ஆடு தன் வாழ்க்கையையும் துன்பத்தினையும் அந்த ஆலய சந்நிதானத்தில் அதாவது அந்தக்கடாவின் பலிபீடத்தில் கிடந்தவாறு தன் ஆற்றாமையை சொல்லி புலம்புகின்றது. அவ்வளவு சனக்கூட்டத்திற்கு மத்தியிலும் அதன் புலம்பல்கள் மட்டும் என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தன. எனதருமை அன்புத்த தமிழா! உன் நம்பிக்கைகள் கண்டு எமது இனம் இன்று வெட்கித்தலைகுணிகின்றது. மன்னித்துக்கொள்ளுங…
-
- 4 replies
- 781 views
-
-