சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் தேதி அது நிகழ்ந்தது. உலகம் அதுவரை கண்டிராத அரக்கன் ஒருவன் உலகத்தாருக்கு அறிமுகமானான். அவனுக்குப் ‘சிறிய பையன்’(Little Boy) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் அவன் ஒரு பெரும் அரக்கன். கணநேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த அரக்கன் . உலகம் இன்றுவரை அவனை நினைவில் வைத்திருக்கிறது. அவன் வேறு யாருமல்ல, அணுகுண்டு என்னும் பேரரக்கன் தான் அவன். வட அமெரிக்கா தன் கொடுரத்தன்மையின் மற்றொரு முகத்தை அன்று வெளிக்காட்டியது. ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மீது முதல் அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த அடுத்த நொடியில் எழுவதாயிரத்திலிருந்து என்பதாயிரம் மக்கள் தீயில் கருகி மாண்டுப் போனார்கள். அ…
-
- 3 replies
- 1.3k views
-
-
இப்ப கொஞ்ச நேரம் முதல் சொப்பிங் செய்ய WAL-MART இற்கு போனேன் ,அங்கு எனது ஒரு அக்காவை பிள்ளைகளுடன் சந்தித்தேன்.அவரது மூத்தமகன் மகன் மனிபாலில் பல்வைத்தியம் படித்துவிட்டு கனேடியன் லைசன்ஸ் சோதினை எடுத்துவிட்டு நிற்கின்றார் ,மகள் கரீபியனில் மருத்துவம் படிக்கின்றார் .அவர்கள் வீட்டை விட்டு பெரிதாக வெளிக் கிடுவதில்லை.பெற்றோருடன் ஒட்டிப்பிடித்த படி,நெடுகிலும் அப்படித்தான் . எனது வீட்டில் இந்த மாதம் முதல் மனைவி இரவு வேலை, ஆள் பத்துமணிக்கு தான் வரும்.பெரியவர் வந்தார் வெள்ளி இரவு என்பதால் நண்பர்களுடன் பறந்துவிட்டார்,திரும்பிவர இனி இரவு பத்து,பதினொன்று ஆகும் .சின்னவர் வந்தார் இரண்டு பீ.எஸ் ,3 கொன்றோலர்களையும் ,பாஸ்கேட்பால் கேமுகளையும் கொண்டு பக்கத்துவீட்டு நண்பரிடம் போய்விட்டார் த…
-
- 1 reply
- 1.2k views
-
-
இது நான் இருக்கும் இடத்தில் நடந்தது. சிட்னி அகதி முகாமில் தூக்கு மாட்டி இறந்தபின் இதை எழுதனும் போல் இருந்திச்சு. போன வருடம் 15க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் குடித்துவிட்டு ஒரு போட்டி, மின் கம்பத்தில் ஏறி கம்பியைத் தொட்டால் $1000. ஒருவன் ஏறி இறங்கி வந்தபின் அவன் சொன்னான் தொட்டுவிட்டேன் என்று சிலர் இல்லையென பயங்கர அடிபாடு, அதில் சிலர் வெளிக்கிட்டு வீட்டை போக அதற்கு முதலே அங்கு போய் காவல் நின்று திரும்ப அடிபாடு அதில் ஒருத்தனுக்கு கத்தி குத்து, பொலிஸ் வர கில்லி படம் மாதிரி நண்பேண்டா என்று கூறி தவிர்த்துவிட்டார்கள் ஜெயிலை, பக்கத்து வீடுகளுக்கு எப்படி இருந்திருக்கும் இவர்களின் செயல். இவர்கள் அகதி முகமில் இருந்து வெளி வந்தவுடன் ப்ரிட்ஜ், வசிங் மிசின், தளபாடங்கள்,…
-
- 9 replies
- 1.6k views
-
-
அண்மையில் ஒரு பத்திரிகைச்செய்தி எனது சிந்தனையைக் கிளறி விட்டிருந்தது . ஒருவர் தனது முயற்சிகள் தோல்வியடையும் பொழுது , அதன் எதிர்வினையை இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார் . இதுபற்ரிய உங்கள் கருத்துக்களை , கள உறவுகளாகிய நீங்கள் பதியுங்கள் . செய்தியின் சாரம் பின்வருமாறு போகின்றது ........................................ ஜேர்மனிய பெர்லின் நகரில் 100க்கு மேற்பட்ட கார்களை தீ வைத்து கொளுத்திய நபரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்பற்று கடனில் திண்டாடிய 27 வயது நபரொருவரே இவ்வாறு விலையுயர்ந்த கார்களை தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். 3 மாத காலப் பகுதியில் மட்டும் 67 ஆடம்பர கார்கள் அந்நபரால் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இத் தீவைப்பு சம்பவங்களுக்கு சி…
-
- 7 replies
- 1.3k views
-
-
சம்பிரதாயங்களுக்கு வெளியால் ஒரு தீபாவளி மற்றவனைக் கொன்று விளக்கேற்றும் மடமைத் தீபாவளியை அகற்றி யாரையுமே கொல்வதில்லை என்ற புதுமைத் தீபாவளியை இன்று பிரகடனப்படுத்துவோம்... இன்று ஈழத் தமிழனுக்கு ஒரு புதுமைத் தீபாவளி..! நாமெல்லாம் புது மனங்களுடன் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல அதிலிருந்து விடுபட்டு அட.. நமக்கும் தீபாவளி இருக்கிறதா என்று சிந்திககிறார்கள்… தீபாவளியை நாம் கொண்டாடலாமா இல்லை அமைதியாக இருக்கலாமா என்ற எண்ணங்கள் பலரிடையே இன்றும் இருக்கிறது. புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளில் வரும் தொலைக்காட்சிகளும், இணையங்களும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை நடாத்தி அட.. தீபாவளி நடக்கிறது என்று பிரச்சாரம் செய்து வருகின்ற…
-
- 1 reply
- 886 views
-
-
எனக்கு தெரிந்தவர்கள் ஒரு அம்மாவுக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான்... வேறு பிள்ளைகள் இல்லை..... அந்த அம்மாவின் கணவரும் இறந்து விட்டார் சில வருடங்களுக்கு முதல்.... எல்லோரும் ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் வீட்டுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் கண்டிப்பாக நினைப்பார்கள் ... ஆண்கள் கல்யாணம் பண்ணி மனைவிக்கு பின்னால் போனாலும் பெண் குழந்தை தன்னை வைத்து காப்பாற்றும் என்றுதான் நினைப்பார்கள்...அந்த அம்மாவும் கற்பனையோடும் மகள் தன்னுடன் கடசிவரை இருப்பாள் என்றுதான் நினைத்து இருப்பார்... மகளை படிக்கவைத்து லண்டனில் கல்யாணம் பண்ணி அனுப்பி வைத்தார் அவர் கணவர் போன பின்பும்... மகளும் இங்கே வந்து நல்ல வசியாகதான் வாழ்கிறார்.. அவருக்கு பிள்ளைகளும் பிறந்தது... பிள்ளைகள் பிறந்தபோது அவங்கள் அம்மா த…
-
- 34 replies
- 4.4k views
-
-
1,10,19,28 திகதிகளில் பிறந்தவர்களுக்கு உடன் பழகுபவர்களும் குடும்பத்தில் உள்ளவர்களும் கைராசிக்காரர் என்று உங்களை நினைப்பார்கள். எந்தக் காரியத்தை உங்கள் கையால் தொடங்கினாலும் அது நல்ல சக்சஸ் தரும் என்று அனைவரும் நம்பும் நிலையில் உங்களுக்கு என்று ஒரு காரியம், ஒரு முயற்சி தொடங்க நினைத்தால் அது மட்டும் சக்சஸ் கோமல் போவது ஆச்சரியத்தை, அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கும். தன்னால் பிற மனிதர்கள் எவ்வளவோ நல்ல பயனை அடையும்போது, தன் அதிஸ்டம் தனக்கு வேலை செய்யாமல் போகிறதே என்று ரொம் வருத்தப்பட்டு கொண்டிருப்பீர்கள். மற்ற ஒருவருக்காக ஒரு காரியத்துக்கு போகிறீர்கள். அக்காரியம் உடனே கைகூடுகிறது. உங்களுக்காக அதே காரியத்துக்கு போகிறீர்கள் உடன் முடியாமல் நாளை மறு நாள் என்று இழுபறி நிலையாகு…
-
- 2 replies
- 1.5k views
-
-
அன்பான கள உறவுகளுக்கு!!!!!!!!!!! நீண்டகாலமாக என்னுள் உறுத்துகின்ற ஒரு விடையத்தை உங்களுடன் பகிருகின்றேன். எங்களுக்கு எமது அப்பா ,அம்மா நல்ல அழகான தமிழ்பெயராக வைத்திருப்பார்கள் . அவை பெரும்பாலும் தங்களது மூதாதையரை ஞாபகப்படுத்தவோ ,அல்லது மத நம்பிக்கையின் பேரிலேயோ அமைந்திருக்கும் . ஆனால் நீண்ட அழகான பல அர்த்தங்களைத் தரக்கூடிய பெயர்களையே எமது பெற்ரோர்கள் எங்களுக்குச் சூட்டி எங்களை அழகு பார்த்தனர் . பல காரணங்களுக்காக இடம் பெயர்ந்த நாங்கள் பல காரணங்களுக்காக எமது பெயர்களை குறுக்கி, அல்லது பிரஜாஉரிமை கிடைத்தவுடன் ஐரோப்பியப் பெயர்களை வைக்கின்றோம். இதற்கு காரணங்களாக வேற்ரு இனத்தவர்கள் தங்கள் பெயரைக் கூப்பிடக் கஸ்ரப்படுகின்றனர் என்று ஒரு வியாக்கியானத்தைத் தருகின்றார்கள் . கோ…
-
- 38 replies
- 2.7k views
-
-
ஊரில தங்கட பெண் பிள்ளைகளை ஒழுக்கமாகவும்,ரீசன்டாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் தங்கட பிள்ளைகளை தனிய பெண்கள் மட்டும் படிக்கும் மகளீர் பாடசாலையில் சேர்த்து விடுவார்கள்[அந்தப் பாடசாலையில் படித்தால் போல அந்த பெண்கள் எல்லாம் ஒழுக்கமாய் இருக்கிறார்களா என கேட்கக் கூடாது.] அதே மாதிரி புலம் பெயர் நாட்டிலும் பல பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மகளீர் பாடசாலையில் சேர்த்து விடுகிறார்கள் இது ஆரோக்கியமானதா? என்னைப் பொறுத்த வரை படிக்கிற பிள்ளை எங்கேயும் படிக்கும் அதே மாதிரி ஒழுக்கமாய் இருக்க விரும்புவர்கள் கலப்பு பாடசாலையில் படித்தாலும் ஒழுக்கமாய் இருப்பார்கள்.தவிர ஆண்,பெண் சேர்ந்து படிக்கும் போது ஆண்,பெண் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் போகும்...பெண்கள் தைரியசாலிகளாக,எதற்கும் வெட்கமி…
-
- 7 replies
- 1.2k views
-
-
தாயகத்திர் கராச்சார சீர்கேடுகள் துரித முறையில் அரங்கேறிக்கொண்டு செல்லுகின்றது . சிங்கள இனவாத அரசினால் இது எங்கோ சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு பக்கம் தாயகத்தில் உள்ளவர்கள் காணாததை கண்டவுமன் அளவு மீறி செயல்படுகின்றனர். மறுபக்கம் புலம்பெயர் தமிழர்கள் ... எமது பணத்திமிரை தாயகத்தில் அரங்கேற்றுகின்றோம். அப்பாவிகள் வயிற்றிலும் அடிக்கின்றோம். 100ருபாவிற்கு விற்கும் பொரளை 200ருபாவிற்கும் வாங்குகின்றோம் பாவம் அங்கு வாளும் ஏளைகள்...விட்டுவிடுங்கள் அவர்களை.. காமத்திற்காக தாயகம் செல்லும் இன்னெரு கூட்டம் அட பாவிகளா ... அங்கு தத்தளிக்கும் பெண்களும் உங்கள் சகோதரிக்ள தானடா ...பணத்தை கஸ்டப்பட்ட பெண்னின் தாய் தந்தையிடம் காட்டி இவர்களுக்கு கை படாத றோஜா வேணுமாம் அதற்கு பல…
-
- 6 replies
- 1.1k views
-
-
தோல்வி என்பதே இல்லை வெற்றி வெளிச்சம் - இயகோகா சுப்ரமணியம் உயர்வும் சரிவும் காணாத் தொழில்கள் நமது பூமியில் எதுவுமில்லை; உணர்ந்து தெளிந்து முனைந்தவர் தோற்ற சரித்திரம் இங்கே என்றுமில்லை. ” அவர் தொட்டது துலங்கும். தொட்ட தெல்லாம் பொன்னாகும்” என்று பொதுவாக வெற்றி பெற்றவர்களைப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடுவது உலக வழக்கம். வெற்றி பெற்ற மனிதர்களோடு நாம் போற்றும் அத்தனைபேருமே தோல்விகளை பல முனையில் சந்தித்து, அதையும் மீறி வந்தவர்கள்தாம். ”என்னதான் இருந்தாலும் உங்க சாதனை அற்புதம் சார்” என்று பாராட்டும் போது, ”அய்யோ. அதெல்லாம் இல்லீங்க. கூட்டு முயற்சி. ஆண்டவன் செயல்” என்று அவர்கள் சொல்லும்போது, ”ஆஹா. என்ன ஒரு அடக்கம், பெருந்தன்மை” என்று மேலும் அவரைப் பாராட்டுவோ…
-
- 0 replies
- 880 views
-
-
நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறந்த குடிமகனாய் இரு என்றார் மகாத்மா காந்தி. அந்த அருமையான போதனையை நம்மில் பலர் தவறாகத்தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நானும் சிறந்த குடிமகன்தான் என மார்தட்டிக்கொள்பவர்களால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் தலைகால் புரியாமல் மயங்கி விழுவதும் உண்டு. அப்படி அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு எங்கே இருக்கிறோம்,எப்படி இருக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் விழுந்து கிடக்கும் அத்தகையதொரு நபரையே படத்தில் காண்கிறீர்கள். யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் விழுந்துகிடந்த 'குடி' மகனை எமது செய்தியாளர் தனது கெமராவில் க்ளிக் செய்து கொண்டார். உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் அசு…
-
- 1 reply
- 2.8k views
-
-
குதி உயர்ந்த செருப்பு நல்லதா? கெட்டதா? http://4.bp.blogspot.com/_tX4buy0NvMU/S0L6UTVKqpI/AAAAAAAABRo/6Rxd5fFuPYc/s1600-h/image002.jpg
-
- 13 replies
- 5.1k views
-
-
மேற்கு நாடுகளில் நேர முகாமைத்துவம் (Time Manage Ment) வாழ்வாதாரமாகக் கருதப்படுகிறது. நேரத்தை முறையாகக் கையாளும் போது சோர்வுக்கும் பதற்றத்திற்கும் இடம் இல்லாமல் போய் விடுகிறது. உரிய நேரத்தில் பணிகளை வேகமாகச் செய்து முடிக்கும் போது ஓய்வும் நிம்மதியும் கிடைக்கின்றன. வீட்டுப் பெண்ணாக இருந்தாலென்ன, வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலென்ன இருவருக்கும் நேர முகாமைத்;துவம் அவசியம் தேவைப்படுகிறது. ஆரம்பிக்கும் போது கடினமாக இருக்கலாம் சிறிது நாட்களில் அதன் அனுகூலங்களை அனுபவிக்க முடியும். குடும்பத்தினரைக் குறிப்பாக இளையோர்களை நேர முகாமைத்;துவக் கட்டுப்பாட்டில் பழக்கி விட்டால் அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையும். எமது தாயக வாழ்வைத் துறந்து புலம் பெயர்ந்த வாழ்வை மேற்கொள்ளும் எமக்கு மேற்…
-
- 2 replies
- 2.4k views
-
-
கலி முத்தி போச்சா? மைத்ரேயர்: கலி காலத்தில் என்ன நடக்கும்? பாரசாரர்: மைத்ரேயரே கலியினுடைய விஸ்வரூபத்தினை விபரமாக சொல்கிறேன் கேள் கலிகாலத்தில் திருமணங்கள் தர்மாமன முறையில் நடைபெறமாட்டா குருகுல மாணவ முறையும் இராது எந்த மனிதன் ஆனாலும் பொருள் உள்ளவனே அரசன் ஆவான் குலம் கல்வி முதலியவன் கணக்கில் எடுக்கபடமாட்டா. பெண்களுக்கு கூந்தல் நீளமாக இருந்தாலே அழகி என்ற கர்வம் வந்துவிடும். கலி வளர வளர பொன்னும் பொருளும் நசிந்து போகும். மேலும் எவனாகினும் பொருள் உடையவனையே பெண்கள் தங்கள் புருசனாக வரித்து கொள்வர்.எவனிடத்தில் பொன்னும் பொருளும் அதிகம் உள்ளதோ அவனையே தலைவனாக ஏற்று கொள்வார்கள். கலியுகத்திலே புத்திக்கு பயன் பொருள் சேர்பது மட்டுமே தவிர வேறு எதுவும் தர்மமாக ஏற்று…
-
- 0 replies
- 1.9k views
-
-
மாவிட்டபுர தேவதாசி மீது நட்டுவச்சுப்பையனார் படிய படல் கனகி புராணம் எழுதியவர்: நட்டுவச் சுப்பையனார் பிள்ளையார் காப்பு 1. சித்திர மறையோர் வீதி சிறந்திடும் வண்ணையூர்க்குக் கத்தனாம் வைத்தீசர்க்குக் கனத்ததோர் நடனஞ்செய்யும் குத்திர மனத்தளாகுங், கொடியிடை, கனகி நூற்குப் பித்தனாயுலா மராலிப் பிள்ளையான் காப்பதாமே நாட்டுப் படலம் 2. தடித்தடி பரந்திட் டெழுந்து, பூரித்துத், தளதளத் தொன்றோ டொன்றமையா(து) அடர்த்திமையாத கறுத்த கணதனால் அருந்தவத் தவருயிர் குடித்து, வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து, மதகரிக் கோட்டினுங்கதித்துப், படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரத்து, பருமித்த துணைக் கன தனத்தாள் 3. நடந்தா ளொரு கன்னி மாராச கேசரி, நாட்டிற் கொங்கைக் குடந்தா ந…
-
- 3 replies
- 2.1k views
-
-
இங்கிலாந்தின் கருணை சிறுவன் (Kindest Boy) என அழைக்கப்பட்டு வந்த ஹாரி மோஸெலி, இன்று காலை மரணமடைந்துள்ளான். 11 வயது மட்டுமே நிரம்பிய ஹாரி, கடந்த நான்கு வருடங்களாக மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தான். எனினும் தளர்ந்து விடாது இப்புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்த தொடர்ந்து பல பொது நிகழ்வுகளில் பங்கேற்று, தனகு நோயின் அறிகுறிகள், உபாதைகளையே உதாரணமாக எடுத்துரைத்தான். மூளைப்புற்றுநோய் ஆராச்சி மையத்திற்கு நிதி திரட்டும் வகையில், சொந்தமாக கைகளால் உருவாக்கிய Bracelets வளையல்களை விற்று, 500,000 யூரோவுக்கு மேல் நிதி திரட்டினான். இதன் மூலம் பிரிட்டனின் கருணை சிறுவன் என பெயர் பெற்ற ஹாரி, இங்கிலாந்தின் மிக பிரபலமான நபர்களில் ஒருவராக மாற…
-
- 0 replies
- 925 views
-
-
என்னை மிகவும் பாதித்த செய்தி இது மனிதன் என்றுமே கற்காலத்தில் தான் வாழ்கின்றான் . ஆக்கசக்தியான பெண் உயிரியை வெறும் இனப்பெருக்த்திற்கு மட்டுமே என்று எண்ணும் ஆண் உயிரியின் உளப்பாங்கு என்றுமே மாறவில்லை . என்பதற்கும் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு...........................; பாகிஸ்தானின் முக்கிய நகரான ராவல்பிண்டியில் உள்ள பெண்கள் பாடசாலையொன்றில் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 60 பேர் அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவியர் மற்றும் ஆசிரியைகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்பாடசாலையில் சுமார் 400 மாணவியர் கல்விகற்று வருவதுடன் 30க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 8ஆம் தேதி, முகமூடி அணிந்த 60 க்கும் மேற்பட்டோர், கைகளில் இரும்பு ஆயுதங்கள…
-
- 5 replies
- 1k views
-
-
இன்று கனடாவில் நன்றி தெரிவிக்கும் நாள் விடுமுறை... அந்த வகையில், யாழ் கருத்துகளத்தை வருடக்கணக்காக எங்களுக்காக நிர்கவித்து வரும் மோகன் அண்ணாக்கு மனமார்ந்த நன்றிகள் கருத்துகளத்தில் வரும் குப்பைகூழங்களை துப்பரவு செய்து முடிந்தளவு ஆரோக்கியமாக வைத்திருக்கும் மட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்
-
- 2 replies
- 1.5k views
-
-
மாலை நேரம் . வேலையால் களைத்து விழுந்து வந்த நண்பர் ஓய்வெடுக்க முடியாமல் .. மனைவி, இவர் வேலையால் வந்தவுடன் மகனை கையளித்து விட்டு, தன் வேலைக்கு பாய்ந்துவிட்டார் ... மகனை மேசையில் இருத்தி விட்டு, சற்று ஊர்ச்செய்திகளை பார்க்க கணனி முன் இருந்த நேரம் ... வீட்டு தொலைபேசி அலறியது .. எடுத்தால் ... மறுமுனையில் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரி கனடாவில் இருந்து ... ஹலோ .. எப்படி இருக்கிறீர்கள் .. இருக்கிறோம் அக்கா, அவ வேலைக்கு போய் விட்டா .. இல்லை இல்லை உங்களுடன் கதைக்கலாம் .. ஓம் சொல்லுங்கோ .. அண்ணாவின் அறுபதாவது பிறந்தநாள் வருகிறது அடுத்த ஓரிரு மாதங்களில் வருகிறது, எம் குடும்பம் இப்போ பல நாடுகளில் பிரிந்து வாழ்கிறோம், இது ஒரு நல்ல சந்தர்ப்பம், ஒருதரம்…
-
- 6 replies
- 1.3k views
-
-
Innovation distinguishes between a leader and a follower - Steve Jobs கடந்த இரண்டு வருஷமாக என்னைச் சுற்றி இயங்கும் உலகத்தை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவைத்தது இன்று வந்த ஆப்பிள் உலகின் பிதாமகர் Steve Jobs இன் மறைவு. அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளை என் iPhone வழி வந்த செய்திதான் இவரின் மரணச் செய்தியைக் காவிவந்தது. அந்த நேரம் மேலதிகாரிகளும் பக்கத்தில் இருந்ததால் உடனே அந்தச் செய்தியைக் கவலையோடு பகிர்ந்தேன். எல்லோர் முகத்திலும் ஒரே சமயம் சட்டென்று ஒட்டிக்கொண்ட துயர ரேகைகளைக் காண முடிந்தது. வேலை ஒருபக்கம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் இவரின் இழப்பை ஏற்க ஒப்பாமல் மனம் அலைபாய்ந்தது. மதிய உணவுக்குப் பின்னான நடைப் பயிற்சியின் போது சிட்னியின் நகரப்பகு…
-
- 4 replies
- 1.2k views
-
-
கணவன் மனைவிக்கிடையே, திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. இதற்கு காரணம், சரியான, பரஸ்பர புரிதல் இல்லாமையே. கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்கள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள். இங்கு தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் சில, குழந்தைத்தனமானதாகவும் நகைச்சுவையாகவும் தோன்றலாம்.. ஆனாலும் தம்பதிகளுக்குள் கவுரவம் பார்க்காது, கடைபிடிப்பதில் தவறில்லையே.. 1. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்ன கையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை. 2. வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம். 3. மனைவிக்கு / கணவனுக்கு வேண்டியவ…
-
- 29 replies
- 8.4k views
-
-
பெரிய பெரிய விலங்குகளும் சின்ன சின்ன விலங்குகளும் உள்ள ரொம்ப பெரிய காடு அது. விதம் விதமான பறவைகள். பற்பல பூச்சிகள். உயர்ந்த மரங்கள். எல்லாவிதமான உயிர்களுக்கும் அந்த காடுதான் வீடு. ஆனால் ஒருநாள் அங்கே எவரோ தீ மூட்டிவிட்டனர். காடு எரிய ஆரம்பித்தது. காட்டில் வாழும் விலங்குகள் பதறின. அங்கும் இங்கும் ஓடின. மரங்களோ ஓட முடியாமல் இறுதி வரை எரிய தங்களை தயார் படுத்திக் கொண்டன. ஓடிய விலங்குகள் எல்லாம் ஒரு தடாகத்தின் அருகே சிறிய குன்றொன்றில் நின்று கொண்டு தம் நல்ல இல்லம் எரிந்து சாம்பலாவதைச் செயலிழந்து பார்த்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு ஒரு விசித்திரம் நடந்தது. ஒரு சின்னஞ்சிறிய தேன் சிட்டு எரியும் காட்டுக்குள் சென்றது. பின் திரும்பியது. தடாகத்துக்குள் மூழ்கியது. பின் மீண்டும் க…
-
- 2 replies
- 1k views
-
-
காதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும் பிளவுகள் இல்லாத உறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமான குழப்பம் இல்லாத உறவுகளுக்கு மற்றவரை புரிந்து கொள்வதுதான் தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாக உணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்கு உற்றதுணையாக இருப்பார். காதலர்கள்,தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாக பணி செய்வார்.மற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றி மற்றவருக்கு உணர்த்த வார்த்தைகளையும்,அங்க அசைவுக…
-
- 5 replies
- 1.4k views
-
-
சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. ராய் மாக்ஸ்ஹாம் இது உயிர்வேலி. முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. உலகவரலாற்றின் மிகப்பெரிய வேலி இதுதான். கிட்டத்தட்ட வட இந்தியாவை இரு நேர்பாதிகளாக இது பிளந்தது. 40…
-
- 2 replies
- 1.2k views
-