உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26648 topics in this forum
-
லண்டனில் கைதானார் தொழிலதிபர் விஜய் மல்லையா! கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா, லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கடனாக வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைதுசெய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு. இதனிடையே, கடந்த 13-ம் தேதி விஜய் மல்லையாவுக்கு, பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக, விஜய் மல்லையா மீத…
-
- 12 replies
- 1.3k views
-
-
அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் விநாயக் பானர்ஜி, இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். அதேபோல, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ சேலை அணிந்து கொண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார். பொருளாதார நிபுணர்கள் அபிஜித் விநாயக் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடித் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுவீடனில் நடந்த நோபல் பரிசளிப்பு விழாவில் இந்தியப் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து அபிஜித் விநாயக் பானர்ஜி நோபல் பரிசைப் பெற்றுக்கொண்…
-
- 4 replies
- 1.3k views
-
-
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நடத்தப்படும் போராட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டத்தின் ஆட்சியை மதிக்கின்ற இந்தியாவில் சட்டம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமையாகும். தமிழ்நாட்டிலும் சட்டமும் நீதிமன்றமும் நீதிமன்ற தீர்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். தனி மனிதர்களுக்காக வளைந்துகொடுக்கக் கூடாது. இது இன்றைக்கு நடைமுறைக்கு வரவில்லை என்று சொன்னால், மீண்டும் கற்காலத்துக்கு தமிழ்நாட்டு மக்களை அழைத்துச் செல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். அப்பொழுது சுதந்த…
-
- 5 replies
- 1.3k views
-
-
கொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்! கொரோனா வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் தெரிவித்துள்ளார். கொரோனா கிருமித்தொற்று நாட்டைப் பாதிக்காது என எந்த நாடும் தவறாக எண்ணக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக, சீனாவுக்கு வெளியே இத்தாலியில் மேலும் 650 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உலக நாடுகள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை …
-
- 10 replies
- 1.3k views
-
-
பில் கிளின்டன், புஷ், ஒபாமா மூவரும் பகிரங்கமாகத் தடுப்பூசி ஏற்ற முடிவு கார்த்திகேசு குமாரதாஸன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான புஷ், கிளின்டன், பராக் ஒபாமா ஆகிய மூவரும் நாட்டு மக்கள் பார்க்கும் வண்ணம் கமராக்களின் முன்பாகப் பகிரங்கமாக வைரஸ் தடுப்பூசியைத் தங்களுக்கு ஏற்றிக்கொள்ள முன்வந்துள்ளனர். வைரஸ் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தடுப்பு மருந்து குறித்து மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையீனங்களைக் களைவதற்காகவும் அவர்கள் இந்த முயற்சியில் இறங்கவுள்ளனர். அவர்களது இந்த முடிவு தொடர்பான தகவல்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளன. சுமார் 50 வீதமான அமெரிக்கர்கள் மத்தியில் வைரஸ் தடுப்பு மருந்துகள…
-
- 2 replies
- 1.3k views
-
-
[Wednesday August 15 2007 07:15:01 AM GMT] ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் தீவிர வாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சன்னி-ஷியா பிரிவினருக்கு இடையே கோஷ்டி மோதலிலும் தினம் ஏராளமானவர்கள் பலியாகி வருகிறார்கள். சமீபகாலமாக யாசிடி என்ற பிரிவினருக்கு எதிராகவும் தாக்குதல் நடந்து வருகிறது. நேற்று சிந்கார் மாவட்டத் தில் மோசல் அருகே உள்ள அல்கதா மியா மற்றும் அல் அட்னியா ஆகிய கிராமங் களில் தற்கொலை படை தீவிர வாதிகள் 4 எண்ணை லாரி களில் வந்தனர். அந்த லாரிகள் நிறைய வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு இருந்தன. அந்த லாரிகளை தீவிர வாதிகள் வீடுகள் மீது அடுத் தடுத்து மோதி வெடிக்க வைத்தனர். வெடிகுண்டு லாரிகள் பயங்கர மாக வ…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரிட்டனின் வல்லாதிக்கத்தை நினைவுறுத்தும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பே காமன்வெல்த் எனப்படும் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இதில் பிரிட்டனால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளை பிரிட்டன் தனது தலைமையின் கீழ் ஒரு கூட்டமைப்பாக்கி வைத்துள்ளது. அதில் தனது முடிக்குரியவர்களை கெளரவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 54 நாடுகளைக் கொண்ட இந்த வெட்டி அமைப்பில் இருந்து கம்பியா என்ற மேற்கு ஆபிரிக்க தேசம் தானாக விலகிக் கொள்ள முடிவு செய்துவிட்டது. அது இந்த அமைப்பில் கடந்த 48 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த வெட்டி அமைப்பின் அரசுத் தலைவர்கள் மாநாட்டை நடத்த இனப்படுகொலை நாடான சிறீலங்காவை பிரிட்டன் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தெரிவு செய்து வைத்துள்ளன. இந்த ம…
-
- 8 replies
- 1.3k views
-
-
பிரான்சின் 19வயது வீரமங்கையான ஜோன் ஒப் ஆர்க் இன் சிலிர்பூட்டும் வீரவரலாறு இன்று எல்லாமே முடிந்து விட்டதக நினைத்து மூலையில் இடிந்துபோய் இருப்பவர்களும் பழைய சுதந்திர வாழ்வை மறந்துவிட்டு கிடைத்துள்ள இனத்தை கருவறுக்கும் இன்றைய சிங்களத்தின் சதிகார வாழ்வை ஏற்று வாழத்தலைப்பட்டுள்ளவர்களும் அறியவேண்டிய விடையமாகும். யார் இந்த ஜோன் ஒப் ஆர்க்? உலக சரித்திரத்தில் அழியாத இடம்பெற்ற ‘ஜோன் ஒப் ஆர்க்’ என்ற இளம் பெண்ணைப்பற்றி வல்லாதிக்க சக்திகளின் பக்கத்துணையுடன் சிங்களத்தால் அழிக்கப்பட்டுள்ள நாங்கள் அறிந்து கொள்வது அவசியம். அது 15ஆம் நூற்றாண்டு. இங்கிலாந்து பிரான்சு ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். இங்கிலாந்து பிரான்சின் பல பகுதிகளை கைப்பற்றியது. பிரா…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்கப் பெண்ணை குறிவைத்து மிருகத்தைவிட கேவலமாக பொது இடத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபனை மும்பை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணான மர்யான்னா அப்டோ என்பவர் மும்பையில் உள்ள ஒரு பிரபல கணக்கு ஆடிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றியபடி, மும்பையில் வசித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் அவர் ’கேட் வே ஆப் இந்தியா’ பகுதியில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் அவரது பார்வையில் படும்படி ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் நடந்து கொண்டான். அவனது எண்ணத்தின் வக்கிரத்தை இவ்வாறு வெளிப்படுத்திய அந்த காட்டுமிராண்டி, அந்த வக்கிரத்தின் வடிகாலை அந்த அமெரிக்க பெண்ணின் மீது பாய்ச்சியுள்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ட்ரம்ப் தன்னை வல்லுறவுக்குட்படுத்தினார் என நீதிமன்றத்தில் பெண் சாட்சியம் Published By: Sethu 27 Apr, 2023 | 10:02 AM டொனால்ட் ட்ரம்ப் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் நீதிமன்றில் வாக்குமூலம் சாட்சியம் அளித்தார். ஈ. ஜீன் கரோல் எனும் இப்பெண், நியூஹோர்க்கின் மென்ஹட்டன் சமஷ்டி நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக நேற்று புதன்கிழமை சாட்சியம் அளித்தார். 1996 ஆம் ஆண்டு, மென்ஹெட்டன் நகரிலுள்ள பேர்க்டோர்க் குட்மேன் வர்த்தக நிலையத்தின் ஆடைமாற்றும் அறையில் வைத்து தன்னை டொனால்ட் ட்ரம்ப் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என த…
-
- 18 replies
- 1.3k views
-
-
விழுப்புரம்: மணமகன் தாலி கட்டும் போது அதை தட்டிவிட்டு விட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண் [^]. தனது காதலருடன் வெளியேறினார். இதனால் மணமகன் தனது எதிர் வீட்டு பெண்ணுக்கு தாலி கட்டினார். சினிமாவில் வருவது போன்ற இந்த பரபரப்பான சம்பவம் [^] பற்றிய விவரம் வருமாறு:- விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் உத்திராபதி (27). இவருக்கும் அவருடைய மாமா சின்னதுரையின் மகள் சுதாவுக்கும் திருமணம் [^] நிச்சயிக்கப்பட்டது. நேற்று தியாகதுருகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. காலை 7.15 மணியளவில் அய்யர் மந்திரம் ஓதி தாலியை எடுத்து உத்திராபதி கையில் கொடுத்தார். அதை சுதாவின் கழுத்தில் கட்ட முயன்றபோது, அதை மணமகள் சுதா தட்டிவிட்டார். கழுத்தில் அணிந்தி…
-
- 5 replies
- 1.3k views
-
-
பாக்கு நீரிணையில் இலங்கை கடற்படைக்கும் சோதனை பாகு நீரிணையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா கடற்படை கப்பல்களும், படகுகளும் இந்திய கடற்படையால் சோதனைக்கு உட்படுத்தப்படும் இதற்கான சகல அதிகாரங்களும் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாம் என தமிழக முதல்வர் கருணாநிதி எனும் நபர் அறிவித்துள்ளாராம் என PTI செய்தி ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி இலங்கை சூரியன் வானொலி அறிவித்துள்ளது. ஆதாரம்: இலங்கை சூரியன் FM
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் 2 நாளாகவும மோதல் தொடர்வதாகவும் 50 விடுதலைப்புலிகள் பலி என்றும் ஜோக் அடிச்சிட்டு இருக்கு
-
- 5 replies
- 1.3k views
-
-
சீனாவின் புதிய ஸ்டெல்த் போர் விமானங்கள்- J-20 அமெரிக்கா உட்பட பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது ஸ்டெல்த் விமானங்கள் இராடர்களுக்கு பிடி படாதவை It is the J-20, a radar-evading jet fighter that has the same two angled tailfins that are the trademark of the Pentagon’s own stealth fighter, the F-22 Raptor. After years of top-secret development, the jet — China’s first stealth plane — was put through what appear to be preliminary, but also very public, tests this week on the runway of the Aviation Design Institute in Chengdu, a site so open that aircraft enthusiasts often gather there to snap photos of their favorites. Some analysts say the timing is no …
-
- 1 reply
- 1.3k views
-
-
அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு! அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வருடாந்திர மனித உரிமைகள் கூட்டத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். உக்ரைனில் நடக்கும் போர் ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம் என்றும் கூறினார். ரஷ்யா எந்த சூழ்நிலையிலும் ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது என்றும், அதன் அணு ஆயுதங்களால் யாரையும் அச்சுறுத்தாது என்றும் அவர் உறுதியளித்தார். ரஷ்யாவிடம் உலகின் அதிநவீன மற்றும் மேம்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதன் அணுசக்தி மூலோபாயத்தை அமெரிக்காவுடன் ஒப்பிடுவதாகவும் புடி…
-
- 12 replies
- 1.3k views
-
-
பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதாவை கற்பழிக்கவில்லை, பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. பலவந்தப்படுத்தவில்லை என்று கர்நாடக சிஐடி போலீஸார், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக நித்தியானந்தா இருந்த்து தொடர்பான வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்தனர். பின்னற் இந்த வழக்குகள் அனைத்தும் கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி நித்தியானந்தா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அரளி நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து. அப்போது நித்தியானந்தாவின் வக்கீல் வ…
-
- 9 replies
- 1.3k views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆணுறை வெடிகுண்டுகள்: அலறும் ரஷ்யா! (வீடியோ) டமாஸ்கஸ்: ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்கி அழிக்க, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆணுறை வெடிகுண்டுகளை தயாரித்து பறக்கவிட்டு, நெருக்கடி கொடுத்து வரும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதேபோல் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சிரியாவில் கடும் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சிரியாவின் லடக்கியா மாகாணத்தில…
-
- 7 replies
- 1.3k views
-
-
இன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர். முன்னாள் அதிகாரி திரு. கார்த்திகேயன் தலைமையில் புலனாயவு குழுவினர் கண்டு பிடித்த உண்மைகள் மற்றும் அதன் எதிர்மறை நியாயங்களான ஜெயின் கமிஷன் கேள்விகள் என்று எத்தனையோ விடை தெரியாத மர்மங்கள் ஏராளமாய் உண்டு. இன்று வரைக்கும் ஏராளமான கேள்விகள் இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுருக்கிறது. அதுவே இன்று வரையிலும் பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத மனித வெடி குண்டு தாக்குதல் எத்தனை கோரங்களை உருவாக்கியதோ அதை விட பல மடங்கு ஒரு இனப் பேரழிவும் நம் முன் தான் நடந்தது. நாம்…
-
- 4 replies
- 1.3k views
-
-
நியூயார்க்: அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்த சாப்ட்வேர் நிபுணர் ஒருவர் தனது மனைவ, மகள், மகனை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் தான் அமெரிக்க நிதி நெருக்கடியால் வேலையிழந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த கார்த்திக் ராஜாராம் என்ற இந்தியர் தனது மனைவி, மாமியார், 3 குழந்தைகளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந் நிலையில் மி்ச்சிகன் மாகாணத்தில் உள்ள நோவி நகரில் வேலையிழந்த தந்தை குழந்தைகளையும் மனைவியையும் கொலை செய்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்தவரான லட்சுமிநிவாஸராவ் நெருசு (42) தனது மனைவி ஜெயலட்சுமி (37), மகள் தேஜஸ்வி (14), மகன் சிவா (12) ஆகியோரைக் கொலை செய்துவிட்டு தப்பிவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
வழமைபோல இணைய உலா வந்தபோது திருவடியான் பதிவுகளில் கண்ட இக்கட்டுரையை இணைக்கிறேன். உலகமயமாகும் உணவுப் பஞ்சம் 1. இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கி விட்டன. பாராளுமன்றம் அளவில் விவாதங்களுடான கூச்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
கனடாவில் நடைபெற்ற 19 வயதுக்கு கீழானோருக்கான உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் போட்டியில் பங்÷கற்ற உகண்டா அணியின் 7 வீரர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்கள் மீண்டும் நாடுதிரும்பவில்லை என்று உகண்டா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மேற்படி 7 வீரர்களும் கடந்த சனிக்கிழமை டொரொன்டோவில் வைத்து காணமல்பேõயுள்ளனர். எனினும் அவர்கள் தமது ஆவணங்களை விட்டுச்சென்றுள்ளனர். இது குறித்து கனேடிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவருவதாக உகண்டா கிரிக்கெட் சபையின் பேச்சாளர் லதிமர் முகாஸா தெரிவித்தார். இதில் காணாமல்போயுள்ள வீரர்களுள் உகண்டா 19 வயதுக்கு கீழானோருக்கான அணியின் தலைவர் அஹமத் யாகுபும் உள்ளடங்குகிறார். உகண்டா கிரிக்கெட் வீரர்கள் காணாமல் போவது இது முதல் முறையல்ல. இரண்டு ஆண்டுகளுக்…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஷார்ஜா: பாகிஸ்தான் சிறுமிகளை ஏமாற்றி அழைத்து வந்து ஷார்ஜாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாகிஸ்தானியர் ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். ஷார்ஜாவில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் குறிப்பிட்ட வீட்டினுள் சுமார் 13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலர் அடைத்து வைக்க பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வாலிபர், ஷார்ஜாவில் வீட்டு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அழைத்துவந்து, அவர்களை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. சிறுமிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாரீஸ் நகரில் வரலாறு காணாத மழை! பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் திடீரென புயல் தாக்கியது. சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்த மழை 54 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. இது ஒரு மாதத்தில் பெய்யும் சராசரி மழையின் அளவாகும். இதன் காரணமாக அந்நகரில் உள்ள 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தால் மிதக்கின்றன. கடந்த 1995-ம் ஆண்டு 47.4 மி.மீ அளவுக்கு மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. பாரீசின் புறநகர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்…
-
- 20 replies
- 1.3k views
-
-
இந்து சமுத்திரப் பகுதியில் மீண்டும் கடல்கோள் தாக்கினால் பேரழிவு ஏற்படும் அபாயம் [06 - February - 2008] * அமெரிக்க ஆய்வாளர்கள் இந்து சமுத்திரப் பகுதியில் மீண்டும் கடல்கோள் தாக்கினால் பேரழிவு ஏற்படுமென நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் சுமாத்ராத் தீவின் அருகே நடுக்கடலில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் காரணமாக கடல்கோள் அலைகள் ஏற்பட்டு நிலப்பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததால் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாக் கடற் பகுதியில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் லேசான அளவில் கடல்கோள் அலைகள் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படுவதும் இல்லை. இந்நிலையில் கடல்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
சைமன் பியர்ட், 56 இளைஞர் ஆலோசகராக பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல இளைஞர்களுடன் பாலியல் ரீதியாக தவறாக பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார். இணையத்தில் இருக்கும் பொது அரட்டை அறைக்குள் சென்று இளம் வயது பெண்களை தேடி அவர்களுடன் பேசுவது பின் அரட்டையை பாலியல் ரீதியில் திசை திருப்புவது உள்ளிட்ட வேலைகளை ஆறு வாரங்களாக முனைப்புடன் செய்து வந்த இவரை ரகசியமாக படம் பிடித்தனர் ஸ்கை செய்தி குழுவினர். தான் நிருபர்களால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமல் 13 வயது சிறுமி அமியுடன் நட்புடன் முதலில் அரட்டையை துவங்கினார். முதலில் இணைய காமெராவில் தன படத்தை போட்ட சைமன் , பின் சிறுமி அமியையும் இணைய காமெராவில் வருமாறு வலியுறுத்தினார். பின்னர் சிறிது சிறிதாக பாலியல் ரீதியாக அரட்டையை திசை திரு…
-
- 6 replies
- 1.3k views
-