Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு, உலகில் பிரிட்டன் 2ம் தர நாடாகி விடும் என்று ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, பிரெக்ஸிட் என பரவலாக அழைக்கப்படுகிறது. இதுகுறித்து பெல்ஜியத்தில் புருக்ஸ் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் பேசினார். அப்போது அவர், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு பிறகு பிரிட்டன் உலகில் 2ம் தர நாடாக ஆகி விடும் என்றும், சர்வதேச விவகாரங்களில் செலுத்தும் ஆளுமையை பிரிட்டன் இழந்து விடும் என்றும் தெரிவித்தார். பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சீனாவை ஒன்றுபட்ட ஐ…

  2. பெரும் விபத்தை தவிர்த்த சவுத்வெஸ்ட் விமானம். தரையிறங்கும் சவத்வெஸ்ட் விமானம் குறுக்கே வந்த விமானத்தைக் கண்டு மீண்டும் மேலெழுந்து பாரிய விபத்தையும் உயிர்ச் சேதத்தையும் தவிர்த்திருக்கிறார்கள். இத்தனைக்கும் குறுக்கே போன விமானம் தனியாருக்கு சொந்தமான ஜெற் விமானம். அனுமதியேதும் இன்றி குறுக்கே போகிறது. சவுத்வெஸ்ட் விமானியை பாராட்ட வேண்டும். அதேநேரம் ஜெற் விமான விமானியின் லைசன்ஸ்சை ரத்துப் பண்ண வேண்டும்.

  3. அமெரிக்க காங்கிரசிற்கான உரை - உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிரான கடும் தொனியை குறைத்தார் டிரம்ப்,- கிறீன்லாந்திற்கு தொடர்ந்தும் எச்சரிக்கை Published By: Rajeeban 05 Mar, 2025 | 04:41 PM உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் கனிமங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் தயார் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். அமெரிக்க காங்கிரசிற்கான உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்று உக்ரைன் ஜனாதிபதியிடமிருந்து மிக முக்கியமான கடிதம் கிடைத்தது என தெரிவித்துள்ள டிரம்ப் நிரந்தர சமாதானத்தை ஏற்படு;த்துவதற்காக மிகவிரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு தயார்…

  4. [size=3]டாஸ்மார்க் சாராயத்தை ஒளித்துக் கடத்தும் சிறுவன்[/size] "ஓடி விளையாடு பாப்பா" என்று குழந்தைகளுக்கு, பா பாடி, அகமகிழ்ந்து நன்நெறிப்படுத்திய பாரதி, இன்று தமிழகத்தில் டாஸ்மார்க்கைத் தேடி, ஓடி ஒளித்து விளையாடும் இந்த விளையாட்டைக் கண்டு பூரித்து போவார்! "கழுதை அறியுமா கற்பூர வாசனை?" என 'நவீனத்து தமிழர்கள்', அவரை எள்ளி நகையாடக் கூடும்! யார் கண்டார்கள்? -a picture from FB.

    • 2 replies
    • 3.6k views
  5. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த ஆண்டில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்த பின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. சௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 ப…

  6. [size=5]கடந்த செவ்வாய் கிழமையன்று டொரண்டோவின் மௌன்டைன்வியூ சாலைக்கு (Mountainview Road) அருகே நடந்த கோர விபத்தில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்பட்டது. இருப்பினும் சரியான தகவல்கள் கிடைக்காததால் குற்றவாளியை போலிஸ் தேடி வந்தனர். இந்நிலையில் விபத்து நடைபெற்ற சில மணி நேரங்களில் பிராம்ப்டனின் வாகன பழுதுபார்க்கும் மையத்திற்கு வெள்ளை வோல்வோ ட்ராக் (Volvo truck) ஒன்று வந்துள்ளதாக போலிசுக்கு தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு இன்று விரைந்த அதிகாரிகள் அது விபத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமே என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் வாகனத…

    • 4 replies
    • 708 views
  7. Started by nunavilan,

    பராக் ஒபாமா [07 - June - 2008] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு செனட்டர்களான ஹிலாரி கிளின்டனுக்கும் பராக் ஒபாமாவுக்கும் இடையே கடந்த 17 மாதங்களாக இடம்பெற்ற கடுமையான போட்டி இவ்வாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. அண்மைக் காலமாக உலகின் கவனத்தை ஈர்த்த சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் இந்த வேட்பாளர் நியமனப்போட்டி முக்கியமான ஒன்றாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பத்தில் முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவது நிச்சயம் என்றே பொதுவில் நம்பப்பட்டது. பில் கிளின்டனுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கக்கூடிய வல்லமைமிக்க பேச்சாளர் என்று அவதானிகளினால் வர்ணிக்கப்படும் கறுப…

    • 0 replies
    • 636 views
  8. தமிழர் எதிர்ப்பு: இந்திய அரசின் நிரந்தர அரசியல் வெளிநாட்டுக்கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கையின் விரிவாக்கமே. இந்திய அரசு தமிழகத் தமிழர்கள் பால் என்ன அணுகுமுறை கொண்டிருக்கிறதோ அதே அணுகுமுறையைத்தான் ஈழத்தமிழர்கள் பாலும் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைப…

    • 0 replies
    • 567 views
  9. மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை adminJune 15, 2025 தென்னாபிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது . அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், செயல் இயக்குனராகவும் உள்ள 56 வயதான ஆசிஷ் லதா ராம்கோபின் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ‘நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ என்ற காலணி விநியோக நிறுவனத்தின் இயக்குனர் மகாராஜ் என்பவாிடம் , தனக்கு தென்னாபிரிக்காவில் உள்ள பிரபல நெட்கேர் குழும மருத்துவமனைக்கு துணிகள் விநியோகிக்க, இந்தியாவில் இருந்து 3…

      • Haha
      • Thanks
      • Like
    • 3 replies
    • 332 views
  10. இந்தியாவுக்கு ஒரு முஸ்லிமால் ஜனாதிபதியாக முடியும் என்றால் பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் உயர்ந்த பதவிகளுக்கு ஏன் வரக்கூடாது? என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.பாகிஸ்தானில் சிறுபான்மையின இந்து மக்கள் அதிகமாக வாழும் உமர்கோட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் ஒரேமகனான பிலாவல் பூட்டோ கலந்து கொண்டார். அவருக்கு ராஜஸ்தானி தலைப்பாகையை அணிவித்த இந்து மக்கள், அவர்மீது வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவரும் கூடியிருந்த மக்களின்மீது வண்ணப்பொடிகளை தூவி வாழ்த்து தெரிவித்தார். …

  11. ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கான விமானப்பயணங்கள் இரத்து! ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கான அனைத்து விமானப் பயணங்களும் ஒரு மாதத்திற்கு இரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் குறித்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருந்து அமெரிக்கா செல்வோருக்கு குறித்த விதி பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் 12 ஆயிரத்து 462 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இதுவரை அங்கு 827 …

  12. இத்தாலிய பிரதமர் யூசெப் கோன்டே மார்ச் 16 திங்களன்று பகலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தாலி ஆபத்தான வாரங்களில் நுழைவதாக எச்சரித்தார். அன்று மாலையே மேலும் 349 புதிய உயிரிழப்புக்களைச் சந்தித்திருந்தது. அதற்கு முந்தைய நாளில் 368 உயிரிழப்புக்கள் என இரு தினங்களில் 700 பேரையும், வைரஸ் தொற்று அறியப்பட்ட இரு வாரங்களுக்குள் மொத்தமாக 2,158 காவு கொடுத்திருக்கிறது இத்தாலி. இது சீனாவிற்கு அடுத்தான பேரிழப்பு. ஆனால் இந்த மரணப்புள்ளியை சீனாவை விட வேகமாகத் தொட்டிருக்கிறது இத்தாலி. திங்களன்று காலையில் பிரதமர் கொண்டே பேசிய விடயங்கள் இத்தாலிக்கு மட்டுமானது எனக் கடந்து செல்ல முடியாதவை, அலட்சியப்படுத்த முடியாதவை. " நாங்கள் இன்னும் இழப்புக்களின் உச்சத்தை எட்டவில்லை என்று மருத்துவ…

  13. பட மூலாதாரம், Win McNamee/Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒப்புதலுடன் காஸாவில் அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளார். கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2025, 12:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திங்கட்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் காஸாவில் அமைதிக்கான ஒரு திட்டத்தை முன்வைத்தார். 20 அம்சங்களை கொண்ட இந்தச் சமாதானத் திட்டத்தின் கீழ், காஸாவில் சண்டை நிறுத்தப்படும், இஸ்ரேலியப் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், மேலும் காஸாவின் நிர்வாகத்திற்காக ஒரு சர்வதேச 'அமைதி வாரியம்' (Board of Peace) அ…

  14. உக்ரைனுக்கான இழப்பீட்டு கடன்கள் குறித்த ஐரோப்பிய ஆணையத் திட்டத்தை பெல்ஜியம் இன்னும் ஆதரிக்கவில்லை. Ulyana Krychkovska, Tetyana Vysotska, Anastasia Protz — 22 அக்டோபர், 14:32 பெல்ஜியக் கொடி. ஸ்டாக் புகைப்படம்: பெல்ஜியக் கொடி 1332 தமிழ் உக்ரைனுக்கு €140 பில்லியன் இழப்பீட்டுக் கடன்களை வழங்க, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஆணையம் பெல்ஜியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, ஆனால் பிரஸ்ஸல்ஸ் இன்னும் இந்த முயற்சியை அங்கீகரிக்கவில்லை. மூலம்: ஐரோப்பிய பிராவ்தா , பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதர்களை மேற்கோள் காட்டி. ஒரு EU தூதரின் மேற்கோள்: "ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் கூட்டம் தற்போது நடந்து வருகிறது, அங்கு உக்ரைனுக்கு ஆதரவாக முடக்…

    • 0 replies
    • 128 views
  15. பொதுவாக யோகாசனங்கள் உடல் நலத்திற்கு உபயோகமானவை. இங்கும் சில ஆசனங்களை ஜீனியர் விகடன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. பரீட்சித்துப் பாருங்கள் உங்களுக்கும் ஏதாவது உபயோகமாக இருக்கின்றதா என்று !! நன்றி ஜீனியர் விகடன்

    • 6 replies
    • 2.5k views
  16. அமெரிக்காவில் பேருந்து சாரதி ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையில் மூண்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது. பெண் பயணி சாரதி அருகில்சென்று தாக்கியதும் சீற்றமடைந்த சாரதி தனது இருக்கையை விட்டு எழுந்துவந்து பயணி முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தினார். "நீ ஒரு ஆண் போல் நடந்துகொண்டால் அதற்கேற்ற வகையில் என்னால் பதில்தரமுடியும்" என்று பெண் பயணியை தாக்கிய பின் "அவள் ஒரு பெண்" என வேறு பயணி சத்தமிட்டபோது பதிலளித்தார். பெண் பயணி மீது கையினால் முகத்தில் ஓங்கி குத்தியபின் அவரது உடமைகளை பேருந்துக்கு வெளியே எறிந்து, அவரையும் பேருந்திலிருந்து இழுத்து வெளியேற்றுவதற்கு சாரதி முயன்றுள்ளார். மேற்படி சம்பவத்தின் பின் சாரதி சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட …

  17. ஐரோப்பாவை அடையும் முயற்சியில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் உயிரிழப்பு கடந்த மூன்று நாட்களில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் மற்றும் அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனத்தின் பேச்சாளர் கார்லோட்டா சமி, கடந்த வாரத்தின் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குடியேறிகள் ஐரோப்பாவை அடையும் முயற்சியில் கடலில் பயணிக்க பொருத்தமற்ற படகுகளில் பயணித்ததால் இத்தாலியின் தெற்கு பகுதியில் படகுகள் மூழ்கியுள்ளன என தெரிவித்துள்ளார். இப்படகுகளில் ஒன்று கவிழ்ந்ததைக் காட்டும் காட்சிகள் இத்தாலிய கடற்படை கேமராவில் படம் பிடிக்கப்பட்டன. இந்தப் படகிலிருந்து …

  18. அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக கருதப்படும் டொனால்ட் டிரம்ப் பிட்ஸ்பெர்க்கில் நடைப்பெற்று பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது அவர், “தவறு செய்வதில் சீனா மிகப்பெரிய மற்றும் சிறந்த நாடு. மெக்சிகோ சீனாவின் சிறிய வடிவம். சீனா அதன் பொருட்களை அமெரிக்காவில் கொட்டி குவிக்கிறது. அறிவுசார் சொத்து திருட்டில் ஈடுபடுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் மீது மிகப்பெரிய வரிகளை திணிக்கிறது. சீனா திருந்தாவிட்டால் அவர்கள் மீது வரிகள் விதிக்கப்படும். அவர்கள் நம் மீது கடுமையாக வரி விதிக்கிறார்கள். நாம் ஒன்றும் செய்வது இல்லை. நவம்பர் மாதத்தில் நீங்கள் ஆதரவளித்தால் (வாக்களித்தால்) நாம் நிறைய வேடிக்கைகளை அனுபவிக்கலாம். சீனாவுக்கு ஒபாமா மீது மர…

  19. ஐரோப்பா முழுவதுமான பனிப்பொழிவில் ஆறு பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து! கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமான வானிலை காரணமாக ஐரோப்பா முழுவதும் பரவலான பயணத் தடை ஏற்பட்டுள்ளது. கண்டத்தில் வானிலை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சின் இரண்டு தனித்தனி பகுதிகளில் பனிமூட்டமான வானிலையால் இடம்பெற்ற வாகன விபத்தில் 05 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் போஸ்னியாவின் தலைநகர் சரஜெவோவில் 16 அங்குலம் (40 செ.மீ) பனிப்பொழிவு ஏற்பட்டதில் ஒரு பெண் உயிரிழந்தார். இதேவ‍ேளை, கடுமையான பனி மூட்டமன வானிலையால் ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள் பாரிஸ் மற்றும்…

  20. இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான பெண்கள் அச்சம்! மும்பை: பால்தாக்கரேவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிந்ததற்காக கைது செய்யப்பட்டு, மிரட்டலுக்கு உள்ளான பெண்ணும், அதற்கு'லைக்’ போட்ட பெண்ணும் இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம் எனக் கூறியுள்ளனர். பால்தாக்கரேவை விமர்சித்து கருத்து தெரிவித்த ஷகீன் என்ற அந்த 21 வயது பெண்,போலீசார் கைது செய்து நடத்திய விதத்தில் மிரண்டுபோய் உள்ளார். அவரது மாமா நடத்தி வந்த கிளினிக் சிவசேனா தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வரும் மிரட்டல் காரணமாக ஷகீன் தனது ஃபேஸ்புக் கணக்கையும் ரத்து செய்து விட்டார். மேலும் தாம் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ள அவர்,நடந்த சம…

  21. ஈகுவடோரில் சற்றுமுன்னர் இரு பயங்கர நிலநடுக்கங்கள் : பதற்றத்தில் மக்கள் தென் அமெரிக்க நாடான ஈகுவடோரில் சற்றுமுன்னர் பாரிய இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈகுவடோரின் வடமேற்கு பகுதிகளான குயினிண்ட் மற்றும் முயிஸின் ஆகிய பகுதிகளிலேயே 5.9 மற்றும் 6.2 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சில இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஈ…

  22. பிரிட்டன் வெளியேற்றம்: அரசுக்கு கால அவகாசம் வேண்டும் - பிரதமர் தெரீசா மே பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்குத் தேவையான பேச்சுவார்த்தைகளுக்கு தயார் செய்வதற்கு தங்களுடைய அரசுக்கு கால அவகாசம் வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கல் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் ஆகியோரிடம் தெரீசா மே தெரிவித்துள்ளார். இச்சூழலில், தெரீசா மேவின் முயற்சிகள் வெற்றியடைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தெரீசா மேவிற்கு வாழ்த்துக்கள் கூறி சுமுகமான போக்கை கடைப்பிடித்தாலும், ஐரோப்பிய ஒ…

  23. December 24, 2012 இன்று திங்கட்கிழமை அதிகாலையில் நியுயோர்க் பகுதி தீயணைக்கும் படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர் எனவும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர் எனவும் பிந்திய செய்தி தெரிவிக்கின்றது. றேசெஸ்ரர் பகுதியில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தகொண்டிருந்தபோது அவற்றைத் தணிப்பதற்காக விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுளளது. துப்பாக்கிக் காயமடைந்த தீயணைப்பு படையினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் கூறுகின்றது. அப்பகுதி உள்ளுர்த் தகவல்களின்படி தீப்பிடித்த பகுதிக்கு அண்டிய பகுதியிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு அப்பக…

  24. என் அரசைக் கவிழ்க்க இந்தியாவில் சதி நடக்கிறது: நேபாள் பிரதமர் குற்றச்சாட்டு நேபாளத்தில் நடைபெற்று வரும் என் ஆட்சியைக் கவிழக்க இந்தியாவில் சந்திப்புகள், கூட்டங்கள் என்று சதி நடைபெற்று வருகிறது என்று அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலி சாடியுள்ளார். மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மதன் பண்டாரி நினைவாக தன் இல்லத்தில் நடத்தியக் கூட்டத்தில் நேபாள் பிரதமர் கே.பி.ஒலி கூறும்போது, “டெல்லியிலிருந்து இது தொடர்பாக செய்திகள் வருகின்றன. நேபாளின் வரைபடத்தை நாங்கள் மாற்றி வெளியிட்டதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எனக்கு பெரும்பான்மை உள்ளது அதனால் என்னை ஒன்றும் அசைக்க முடியாது. நேபாளின் தேசியவாதம் பலவீனமானதல்ல. பிரதமரை 15 நாட்களில் மாற்றிவிடலாம் …

  25. ஜேர்மனி நாட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை பிணையக்கைதியாக வைத்துள்ளதால் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஜேர்மனியில் உள்ள Saarbruecken நகர் உணவகம் ஒன்றில் சற்று முன்னர் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், உணவகத்தில் இருந்து சில ஊழியர்கள் தப்பி வெளியேறியுள்ளனர்.மேலும், எந்த நேரத்திலும் உணவகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி உறுதி செய்யப்பட்டதும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பொலிசார் உணவகத்தை சுற்றி குவிக்கப்பட்டனர். இதற்கிடையில், பொலிசார் உணவகத்திற்குள் நுழைந்தபோது, அங்கு கீழ்தளத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.