கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நீ ரசிக்கின்ற றோஜா பூ சில நாட்களே வாசம் வீசும் நானே என் இதய தோட்டத்தில் நீ சுவாசிக்கும் வரை வாசம் வீசும் பூவாக இருப்பேன்...
-
- 4 replies
- 1.7k views
-
-
புரிந்து கொள்ளவில்லையே மழையே ஏன் உன்னைக் கண்டால் சில பெண்கள் தலை தெறிக்க பீதியுடன் ஓடுகின்றனர்....?????? ஏன் தானோ வெளியே வர மறுத்து விட்டு வீட்டிற்குள்ளேயே ஒதுங்குகின்றனர்???? ஏன் தானோ உன்னைத் தாண்டிப் போவதற்கு தம் முகங்களிற்கு நீ தொடா வண்ணம் உனைத் தடுக்கும் அணியை அணிந்து செல்கின்றனர்...?????? நீ என்ன எதிரியா அவர்களுக்கு??????? அல்லது உன்னிடம் எதாவது கடன் வாங்கி விட்டார்களா...???? புரிந்துவிட்டது..புரிந்துவிட
-
- 4 replies
- 1.3k views
-
-
இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் . (கவிதைக்கு முன்னம் இடம்பெறுகிற இந்த முன்னுரையின் சாரம்சம். ``என் கலைஞானம் பெண்கள் தந்த வரம். நான் இன்று உயிரோடு இருப்பது நான்கு இனங்களையும் சேர்ந்த எனக்கு தெரிந்த தெரியாதா பலர் நான் வாழ வேண்டுமென நினைத்ததால்தான் சாத்தியமாயிற்று. ``) . இது என்னுடைய முக்கியமான கவிதைகளில் ஒன்று. என்றும் பதினாறான என் வாழ்வுதான் என் கவிதைகள். பாதி மானுடமாகப் படைக்கப் பட்டு பாதி மனசு பாதி அறிவு பாதி அனுபவமென வாழ்கிற என் ஒத்தைக் கண் ஆண்பால் வாழ்வில் எதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்? . ஆனால் பெண்களுக்கு ஒரு அனுகூலமிருக்கு. ஆண்களோடு வாழ்ந்து, ஆண்களைப் பெற்று. ஆன்களைக் கைவிடாமல் வளர்த்து பேணுவதால் ஆண்களின் பாதி உலகை அவர்களால் தரிசிக்க முடியுது. . …
-
- 4 replies
- 1.3k views
-
-
கைகட்டி கதை கேட்டு உங்கள் புன்சிரிப்பின் மர்மம் தெரியாது ..நாம் திகைத்து நின்ற காலம் மறக்குமா ஆள் கூப்பிடுது வரட்டாம் என்றால் ... பல யோசனை வரும் நடக்கபோகுது எல்லாம் சரியா திரும்ப திரும்ப நாலுதரம் சரிபார்த்து பதட்டமா வந்து நின்றால் நீங்களே சொல்லும் ... கதை வெட்டையில் மாடு நிக்கு . போய் அடிச்சுட்டு வாங்கோடா இரவுக்கு கொத்து சாப்பிடுவம் போங்கோ நான் பின்னாடி வாரேன் வாகனத்தில் .. பயிற்ச்சியில் கவனமும் கடும் போக்கும் பாசத்தில் தோள்தட்டி தலை கோதி தட்டி கொடுத்து ஊக்கம் அளித்து கதை கேட்டு கேட்பதை செய்து கொடுத்து நிப்பியள் .... நிங்கள் வரிப்புலியுடன் மிடுக்கா நடக்கும் அழகே தனி எதிரிக்கி உங்களை கண்டால் பிடிக்கும் கிலி ஏழு பேரிச்சம்பழம் தந்தது எங்கடா ஆறு…
-
- 4 replies
- 782 views
-
-
காந்தீயம் (அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்காக.) இமயத்தின் முன் ஓர் சிறுவனாய் அண்ணாந்து நிற்கிறேன் பிரமாண்டம்! அது ஒன்றுதான் புரிகின்றது. கலப்பு, பிறப்பு, இளமை, ஒழுக்கம், கல்வி, குடும்பம், வாழ்வில் எளிமை சமூகம், பண்பு, சமயம். சேவை, தர்மம், சத்தியம,பக்தி அகிம்சை அரசியல், தொழிலில் அறம் எனப் பலவாய் பாறைகள் அடுக்கிப் பார்க்கவே எட்டா உச்சமாய்த் திகழும் தியாகப் பாறை எட்டிப் பிடிக்க முடியாத் தெலைவில் எங்கோ முடியாய் இருக்க நானோ பிரமாண்டத்தின் வைர மலைகளை யானையைப் பார்த்த குருடனைப்போல ஒன்றொன்றாகத் தொட்டுத்தடவி... ... கூழாங்கற்களாய் உணர்ந்து மயங்கும் முட்டாள்தனத்தில் மூழ்க முடியுமா? ஏனோ எனக்கு எதுவும் புரியவி;லை கலப்புப் பற்றி காந்தீயம் சொல்கிறது: இயற்கை உனக்குக் காமக் கிளர…
-
- 4 replies
- 1.1k views
-
-
நடந்து சென்ற 2007 நன்மை பயக்கவில்லை நாடி வந்த 2008 ஏ நன்மை பல கொண்டு வா! அழுகையும் அவலமும் அனுதினம் கேட்ட செவிகளுக்கு சிரிப்பும் மகிழ்ச்சியும் தினம் தினம் கொண்டு வா... நடந்த போர்களில் போன உயிர்கள் உடைந்த மனங்களுடன் ஓடிய மக்கள் கிடைத்ததை உண்டு ஏப்பம் விட்ட பரிதாபங்கள் அனைத்தும் அலையில் அகப்பட்ட துரும்பாய் ஓடி மறைந்திட ஓர் புது வழி சமைத்து வா! தாய் ஓர் இடம் தனயன் ஓர் இடம் வாழ்ந்திடல் தகுமா? ஊர் ஓர் இடம் உற்றார் உறவினர் ஓர் இடம் - நான் மட்டும் இங்கு வாழ்தல் முறையோ? பெற்றமும் கன்றும் பிரிந்து வாழ்ந்தால் பாசமும் அன்பும் தான் விளைவதெங்கே? சொல் வீரராய் இருப்பார் செயல் வீர…
-
- 4 replies
- 1.4k views
-
-
அடம்பனெல்லாம் திரண்டு நின்றால் பலமும் கிடைக்குமே அடிமையெல்லாம் அணி திரண்டால் விலங்கும் ஒடியுமே ஏழையெல்லாம் எழுச்சி கொண்டால் ஏற்றம் விழையுமே நல்லாரெல்லாம் நன்றாய்ச் சேர்ந்தால் நன்மை நடக்குமே வேங்கையெல்லாம் வீறு கொண்டால் விடிவு பிறக்குமே தமிழரெல்லாம் ஒன்று பட்டால் ஈழம் மலருமே http://gkanthan.wordpress.com/index/onrupattaal/
-
- 4 replies
- 852 views
-
-
விழித்துக்கொண்ட முல்லை. பற்றிப் படர்ந்தேறக் கொம்பற்ற வயலோரம் முளைத்ததனால் முல்லை தனக்கு வெறும் புல்லே போதுமெனத் தானும் படர்ந்திருந்த வேளையில்தான் அவ்வழியால் பாரிமன்னன் பவனிவந்தான் பரிவாரம் சூழத் தேரேறிப் பவனிவந்த வேந்தன் பாதையோரம் கொம்பற்றுத் துவண்ட கொடிகண்டான்;. என்னேயிது நீதியிங்கு ஏற்றம் பெறக்கொம்பிலா வாழ்வுற்தோ முல்லைக்கென நெகிழ்ந்தான். பின் தேரிறங்கி முல்லையிடம் சென்று 'சின்னஞ் சிறு கொடியே, உன் விதி கண்டு மனம் நொந்தேன் யான்" என உரைத்தான். "என்னேயுன் பெருமை மன்னா, சின்னஞ்சிறு கொடிக்காய் நீ உளம் நெகிழ்ந்தாய் கண்டேன் போதுமதுவெனக்குப்போதும் புற்களுடன் வாழ்வேன் இனியான் போய் வருக" என நன்றியுடன் நயம்படச் செப்பியது செடி…
-
- 4 replies
- 1.4k views
-
-
அன்னையே! ஆங்கில மோகத்தில் அனைவரும் திளைத்து ஆனந்தப் படுகையில் அன்னைத் தமிழை எண்ணி ஏங்கிட என்னை ஏன் பெற்றாய்?! பெண்ணடிமைத்தனத்தை பெண்களே ஏற்று பெருமைப் படுகையில் பெண்ணின் விடுதலையை நேசிக்கும் ஒருவனாய் என்னை ஏன் பெற்றாய்?! சாதியால் இணைந்து சமூகமாய் முன்னேறும் சந்ததியினர் மத்தியில் சாதியை வெறுக்கும் சமரசப் பித்தனாய் என்னை ஏன் பெற்றாய்?! பொன்னையும் பொருளையும் பொக்கிஷமாய்க் கருதும் பொல்லாத உலகில் பொது நலம் விரும்பும் போக்கிரி மைந்தனாய் என்னை ஏன் பெற்றாய்?!
-
- 4 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழினி ஜெயக்குமாரன் அண்மைக்காலமாக பல நல்ல காத்திரமான கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதி இலக்கிய உலகின் கவனத்தினை தன் பக்கம் திருப்பிக் கொண்டு இருப்பவர். அவரது பெயரிடப்படாத இன்னொரு கவிதை இது. தன் முகநூலில் பதிந்து இருந்தார். யாழில் பிரசுரிக்கவா எனக்கேட்டு அவர் அனுமதி பெற்று இங்கு பிரசுரிக்கின்றேண் ------------ போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுது கொண்டேயிருந்தது. வெடியதிர்வுகளின் பேரோசைகளால் குடி பெயர்ந்தலையும் யானைக் கூட்டங்களாக இருண்ட முகில்களும் கூட மருண்டு போய்க் கிடந்தன. பகலை விழுங்கித் தீர்த்திருந்த இரவின் கர்ஜனை பயங்கரமாயிருந்தது அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில். காதலுறச் செய்யும் கானகத்தி…
-
- 4 replies
- 1.2k views
-
-
தீபம் பத்தும் அறியாத பருவகாலவயது அது.. கார்மேகம் கண்ட மயிலாய் காதல்தீபம் ஏற்றினாள் அவள் கயல்விழிகளால் காலம் கடந்தபின்னும் பிரகாசமான ஒளியுடன் சுடர்விடுவது - என் இதயத்தில் மட்டும் அல்ல எங்கே.. நெஞ்சில் கைவைத்துக் கூறுங்கள் அந்தப் பருவகாலம் மயிலிறகாய் வருடிய நினைவுகளாக உங்கள் இதயத்தில் இல்லை என்று ??? நேசமுடன்.. -நித்தியா ஒலிவடிவில்..
-
- 4 replies
- 1.1k views
-
-
ஒரு பிடி ................................வேண்டும் தலைவனின் மண்மீட்பில் ஒரு பிடி மண் வேண்டும் மண்கொண்ட அன்னையின் நினைவாக ஒரு பிடி முத்து மண்ணில் நான் போட்ட கோல மண் முன் வீட்டு மாமியின் வேலிக்கும் ஒரு பிடி மாமர நிழாலில் மண் வீடு கட்டிய என் தோழி மலர்விழி மண் மீட்பில் மாண்டு விட்டா மாமா வின் கடைசி மண் மீட்க போய்விட்டான் நான் நட்ட மாங்கன்று கிளை விட்டு பழ்ம் கொடுத்து என் பிள்ளை ருசிபார்த்து ,பசியாற மண் வேண்டும் கோமத்யின் இரு நாள் பசுகன்று பார்க்க வேண்டும் கோழியும் குஞ்சுமாக ஒரு கூட்டம் காணவேண்டும் கோவில் மணி ஒலி என் துயில் எழுப்ப வேண்டும் . வயல் வரம்பில் காலரா நடை பயில வேண்டும் விளைந்துநிட்கும் நெற்கதிர் அளைந்து வரவே…
-
- 4 replies
- 1.7k views
-
-
மறுவாழ்வு பச்சை வர்ண ஆடைகட்டி பல நிறத்தில் மலர்கள் சூடி பார்ப்பவர்கள் நெஞ்சத்தினை பறித்திழுக்கும் அழகிகள் காலம் செய்த கோலத்தால் கட்டழகு தளர்ந்து பூவிழந்து பொலிவிழந்து போர்த்திருந்த போர்வை கழன்று ஆண்டிக்கோலம் கொண்டு: அல்லவையாய் நின்றபோது வெள்ளாடை கொடுத்து விதவைக்கோலம் ஆக்கினான் ஒருவன். இப்படி அமைந்ததே நிலையென்று ஏக்கமாய் பார்த்தேன் வேடிக்கை பார்க்காதீர்; - நாங்கள் விதவையாக்கப்பட்டவர்கள் பூத்துக் குலுங்கி புதுப்பொலிவு பெற எங்களுக்கு காலம் கைகொடுக்கும் வரை காத்திருக்கிறோம்; என்றார்கள் செண்பகன் 23.10.13
-
- 4 replies
- 821 views
-
-
இரத்தம் எழுதிய கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் 1985 மே மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்தப் பனைகள். நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம் காட்டுக் குதிரைகள் கன…
-
- 4 replies
- 1.1k views
-
-
கனவுகளைச் சுமந்தபடி தென்னங்கீற்றில் முகம் துடைத்து திங்கள் விழும் நிலாமுற்றம் கன்னல் தமிழ் பயின்றிட்ட கவின் கொஞ்சும் கலைக்கூடம் முன்னும் பின்னும் எல்லையிட்டு முப்புறமும் கடலேரி வான் நோக்கி உயர்ந்து வணங்கா மண்காக்கும் கற்பகத்தரு வைகறை மேகத்தைக் கிழித்து வாசல் தெளிக்கும் காலைக் கதிரோன் அந்த ஈரக் காற்றின் இதமான வருடல் முற்றத்து வேலிகளில் எட்டி நிற்கும் செம்பருத்தி இரட்டை வடக் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடிய வேப்பமரம் கொத்தும் மீன்குஞ்சு குதித்து விளையாடும் குளக்கரைகள் இடையில் குடமசைய நடைபயிலும் இளமங்கையர் சிரிப்பொலிகள் மாதமொருமுறை எம்மை மகிழ்வூட்டும் திருவிழாக்கள் இன்றும் எம் இதயங்களில் இனிமையான நினைவலைகள் கனக்கும் இதயங்களி…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழன் - யாரோ? கூட இருப்பன் கொலையுண்டு போனாலும் - ஒரு பக்கத்தில் ஒதுக்கி விட்டு பஞ்சாமிர்தம் சாப்பிட நினைப்பவன்! தமிழன் என்றால் யாரோ- ? முயற்சி செய்பவருக்கு தடையாய்- இலாபம் இல்லை என்று தெரிந்தும்..... ஏட்டிக்கு போட்டியாய் ஏதும் செய்ய நினைப்பவன்! தமிழன் எவரோ- தாயை தவிக்க விட்டு - பாயை சுருட்டி கொண்டு பரதேசம் ஓடுபவன்! தமிழன் என்ன செய்வானோ? உப்பு யாரும் அள்ளினால்- சாக்கை தூக்கி கொண்டு ஓடுவான் -அவனும்! உப்பு நீரை பாத்திகட்டிவைக்க- நினைக்கான்! தமிழன் இன்னும் என்ன செய்வானோ-? கருத்து யாரும் ஆரம்பித்தால்தான்- தானும் எழுதுவான் - கவிதை என்று யாரும் ஆரம்பித்தால்தான்- தானும் மூக்கை இடையில் நீட்டுவான்! தமிழனுக்கு வீரம் உ…
-
- 4 replies
- 1.7k views
-
-
என்னடா வாழ்க்கையிது??????? அடிக்கடி வாயில வாற வார்த்தை இது! உண்மையில் அதுதான் உண்மை! ஏனென்று தெரியவில்லை! எதற்கென்றும் புரியவில்லை! என்னதான் நல்லது செய்தாலும் - கடைசியில என் தலையிலதான் வந்து விழுகுது! நல்லவனாய் வாழ்வதும் ... வாழ நினைப்பதும் ... எவ்வளவு கஷ்டம் என்பது ... இப்ப புரியுது!!! தன் கதை வசனத்துக்கு... என் தலையில, தலையெழுத்தாய் எழுதிவிட்டுப் போனவனை... இன்னும் தேடுகின்றேன் நான்! என் கையில் கிடைத்தால் தொலைந்தான் அவன்!!! "கடவுள்" எனும் நபரைப் பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள்! உங்கள் சார்பாகவும் ஏதாவது இருக்கும்! சேர்த்துச் செய்துவிட்டு... நான் போகின்றேன் நரகத்துக்கு!!! இந்த உலகத்தில் வாழுவதைவிட நரகம் எவ்வளவோ மேல்!
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழ் இணையத்துக்கு எஸ் ஹமீத் இனால் எழுதி பிரசுரிக்குமாறு கேட்டு அனுப்பப்பட்ட கவிதை இது. -நிழலி ---------------------------------------------------------------------------- விடாது கொத்தும் பாம்பிலிருந்து விடுதலை பெற ஒரு வேண்டுகோள்...! -எஸ். ஹமீத். ஓர் ஊழின் உக்கிரத்தில்... நரகத்தின் மையத்திலிருந்து பீறி எழுந்து அக்கினி மழையாய்க் குமுறித் தலை வீழும் செங்கங்குகளில்... சூரியனுருகி வழிந்த ஈயத் தரையினில் பாதம் எரிந்து கருகும் கொடிய கொடூரத்தின் கோரங்களில்... ஏதுமறியா இளம் பிஞ்சுக் குழந்தை; எடுத்தொரு நிழலில் கிடத்திட.... யாருமில்லை...! ***** சுற்றி நின்று பேய்கள் அலறும் க…
-
- 4 replies
- 789 views
-
-
அம்மா இருந்த உணவை பகிர்ந்து எம் வயிறு நிரப்பி நீரை மட்டும் நீ குடித்து சிரித்தபடி எமை வளர்த்தாய் வளர்ந்தால் உன்னை பார்ப்பார் என்றோ படித்து பெரியவர் ஆவார் என்றோ நீ கனவு கண்டிருப்பாய் எதுவும் நடக்கவில்லை யாருக்கும் உதவும் உன்மனம் பிள்ளைகளோடு பிறந்ததால் பிள்ளைகள் உன்னோடு இல்லை ஒருபோதும் நீ நினைத்திருக்கமாட்டாய் உன் இறுதிசடங்கில் கூட உன் பிள்ளைகள் வரமாட்டார் என்று அம்மா நீ விரும்புவாயோ இல்லையோ அடுத்த பிறப்பிலும் நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்
-
- 4 replies
- 801 views
-
-
.......'கலையாத கனவுகள்' கண்ணீரில் பிறந்தேனோ? மின்னல் போல் உதித்தாய் பின்...... திரைகள் போட்டு சூரியனை மறைத்தாய் காலம் கடந்தும் ......... --மீண்டும் மேகம் வடிவாய் பூத்தாய்....... உன்னை வாசலில் வந்து பார்த்தேன்....... ஆனால் மூச்சு காத்து தான் ....... அடித்தது ஏன் பனி வீசி பாளத்தை உடைத்து தேடும் விழியே வைத்து விட்டு சென்றாய்.......? விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 4 replies
- 1.8k views
-
-
புன்னகை மழையே நீ எங்கே பொன் நகைகள் கொண்டாடும் புன்னகைக்கு புலிப்படையில் ஓர் அடையாளம்! தமிழ் ஈழத்தின் தரை மெழுகும் நிலவாய்... புலம் பெயர்ந்தோர் விழிகளிலும் தவழ்ந்து வந்த பூந்தென்றலாய்... எங்கள் இதயமெங்கும் பூத்துக் குலுங்கிய பூந்தோட்டமே! நீ சென்ற இடமெல்லாம் புன்னகை மழை பொழிந்து உன் தமிழால் உலகத் தமிழை உயர்த்தினாய்! எத்தனை செல்வங்கள் தமிழில் இருந்தாலும் தலைவனுக்கெனவே தனித்துவமாய் வாய்த்த தமிழ்ச்செல்வா எங்கே போனாய்? இதயத்தில் வலிகள் பெருகி கண்ணீர் வழிகிறது. இமயத்தின் இழப்பை எண்ணி இதயம் கனக்கின்றது.! அண்ணா உந்தன் புன்னகை எமக்கு வேண்டும் தமிழீழம் பூக்கும் நேரத்தில் புன்னகை சிந்…
-
- 4 replies
- 2k views
-
-
-
தமிழீழத்தில் ஒட்டுக் குளுக்களுக்கு தனியான ஓரிடம் தரணியிலே தமிழர்கள் தலைகுனியவைத் தான்தந்த தானினம் தங்களுக்குள் தலைமையில்லா தரங்கெட்ட தனியினம் தன்மானம் தானில்லா தாய் கூட தனக்கில்லா தனியான ஒரு கூட்டம் தப்பான தனிக்கூட்டம் தன்னானத் தழிழர் எல்லாம் தள்ளிவைக்கும் தானிந்த தவளைக் கூட்டம்
-
- 4 replies
- 1.5k views
-
-
பாரோரே பாருங்கள் அவன் பண்பை பயங்கரவாதியென்றே பட்டியலிட முற்ப்பட்ட பாரோரே பாருங்கள் அவன் பண்பை எதிரியெனில் எங்கிருந்தாலும் எதிர்த்தழிக்கும் எம் தமிழன்! ஏதிலியை ஏழைகளை எதிர்கொண்டு அழிப்பானோ? எங்கெனும் ஓர் குண்டை ஏதும் அறியார் மேல் எறிந்தானோ? பாராயோ அவன் பண்பை பாரோரே? பாடாயா அவன் பண்பை பாரெங்கும்! ஓங்கி அரையப்பட்ட இறைஅதுவே ஓங்கிய கரப்பக்கம் ஒடிந்து வீழ்தால் கொள்ளாத வேங்கையென மாவீரம் கொண்டவரோ! கொண்றிடுவர் ஏதிலியை ஏழைகளை! பார்த்தோமே பாரோரே செஞ்சோலை செங்குருதி! என்னற்ற குண்டுகளை எம் தமிழர் வீடுகளில் எடுத்தெரிந்து கொன்றதையும் பார்த்தோமே? தமிழனின் கறியிங்கே தாராளமாய் கிடைக்குமென்றே ஈனப் பிறவிகளின் இழிச் செயலாய் வாசகங்கள் பார்த்திருந்தும் பாரா…
-
- 4 replies
- 1.4k views
-
-
நீ இல்லை என்று தான் எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள் நானும் இல்லை என்றே சொன்னேன் உன்னையல்ல அவர்கள் சொன்ன சொல்லை இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது இத்தனை நாளாய் தேடியும்...???? உள்மனம் சமூகச் சொல்லை ஏற்க விளைகிறது. இந்த மண் - உன்னை விழுங்கிய நாளை மறந்திருக்கும் ஏனென்றால் அது உன்னை மட்டும் விழுங்கலியே. ********************************* ஊரறிந்த ஒரு நாளில் ஒரு தீபமேற்ற வழியில்லை தெருவில் சிலர் உன்னை சூடு வைத்த எழுத்தாணியுடன் பார்த்து நிற்கிறார்கள். நான் பொதுவாய் ஒரு தீபமேற்றுவேன் “அம்மா பெரியறை விளக்கை நானே வைக்கிறேன்” யாரோ என்றோ கண்டதாய் சொன்ன கடவுளுக்கு என்றும் தீபம் வைக…
-
- 4 replies
- 971 views
-