Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காலாறத்துடிக்கும் மீட்பர்களும்...கண்டுகொள்ளாத மந்தைகளும்.... காலையும் மாலையுமாய்க் கனவுபோல முடிந்துபோன நாட்களில் முடிவின்றிப் பயணித்தன விடுதலைக்காய் அவர்கள் கால்கள் சுதந்திரத்திற்கான கனவுகளைச் சுமந்துகொண்டு எப்போதும் நிழலைப்போலக் கூடவே தூப்பாக்கிகளைச் சுமந்தன அவர்கள் தோள்கள் மாதங்களையும் ஆண்டுகளையும் மறந்துவிட்டு வயதுகளைத் தியாகம் செய்தவாறு போர்க்களத்தில் கரைந்துபோயின அவர்கள் வாழ்க்கை எல்லாச் சிலுவைகளையும் எங்களுக்காய்ச் சுமந்துவர்கள் இன்று ஆயிரம் ஆயிரம் இயேசுநாதர்களாய் அறையப்படுகின்றனர் தடுப்புமுகாம்களில் கனவுகளையும் இளமையையும் தொலைத்தவர்கள் காலநதியின் நீள ஓட்டத்தில் …

  2. பிரபஞ்சத்தின் அந்தகார இருளில் மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில் தோன்றிய சிறியதொரு ஒளிக்கீற்று! பிரம தேவனின் பிரதிநிதியாய் உயிர்ச்சங்கிலி ஓய்ந்து விடாது ஓட வைக்கும் அற்புதப் படைப்பு! கருவை வளர்த்தெடுத்து, அதன் கண்ணையும்,மூக்கையும் கற்பனையில் வடித்துக் குருதியில் குளித்துச் சிலையாய் வடித்தெடுக்கும் ஒரு சிற்பியின் திறமை! குழந்தையின் முகம் பார்த்துக் காலம் காலமாய்க் கட்டி வைத்த ஆசைகளின் கனவுக் கோட்டையைக் கணப்பொழுதில் உடைத்தெறியும் ஒரு முனிவனின் முதிர்ச்சி! நோய் கண்ட வேளையில், இரவும் பகலும், அரைக்கண் மூடி, நீ கொள்ளும் அனந்த சயனத்தில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் அந்தப் பரந்தாமனின் பக்குவம்! பூவைத் துளைத்து அதன் …

  3. இன்று ஒரு சகோதரி எழுதியதை வாசித்தேன். நான் வாசித்ததை இங்கு பதிவு செய்கிறேன். இந்த காலங்களில் நானும் பிறந்த மண்ணில் இருந்தேன். மொறிஸ் குறிப்பாக வடமராச்சியில் அந்நிய படைக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். இவருடன் ஜேம்ஸ், ஜூட், ரமேஷ் மாஸ்டர், ஜீவா, ஜெயம், ஐயன் இன்னும் பலர் களமாடினார்கள். அனைத்து மாவீரர் தெய்வங்களுக்கும் எனது வீர வணக்கம் - அகஸ்தியன். சுமை தாளாத சோகங்கள்! வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம். இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண…

    • 1 reply
    • 1.2k views
  4. சங்கே முழங்கு ஈழத்தின் மானத் தமிழனம் உன்னத போராட்டத்தால், பல வீர மறவர்களின் தியாகத்தால் தமக்கென ஒரு நாட்டை ஆக்கி கொண்டதென சங்கே முழங்கு அன்றேல் ஈழத்திலிருந்த தமிழினம் மானத்தோடு உன்னதமாக போராடி அடிபணியாது முற்று முழுதாக அழிந்து போனது என்ற நெருப்பு வரிகளை சொல்லி முழங்கிடு இந்த யுகம் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்ட தலைவனை இந்த இனத்துக்கு தந்தது என்று உன் வரலாற்று பதிவில் எழுதி முழங்கிடு.

  5. நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்....... பிணங்களின் ஓலங்களையும் இழப்புக்களின் வலிகளையும் சகித்தபடி சிந்தனைகளைப் புதைத்து விட்டு தூங்கப் பழகியிருக்குறோம் வீட்டின் கோடியில் இற்றுப்போன உடல்களின் எஞ்சிய எலும்புகளின் நடுவே அமைதியாக இருந்து உணவருந்திக்கொள்கிறோம் கோப்பையில் இருந்து எழும் சொந்தங்களின் இரத்த வாடையை நினைவுபடுத்தாது தேநீரை சுவைத்துக்கொள்கிறோம் விடுதலைக்காய் வீழ்ந்தவர்களின் நினைவுகளை சுமந்த நாட்களில் கொடிகளைப் பிடித்தவாறு ஆக்கிரமிப்பாளர்களின் தேசிய கீதங்களைப் பாடிக்கொள்கிறோம் ஏசிய வாய்களால் யூதாஸ்களைப்பாடி எங்களின் மீட்பராய் துதித்துக்கொள்கிறோம் இடித்துக் கொட்டப்பட்ட கல்லற…

  6. நீங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கும் வீதியில்தான் குழந்தையொன்று பின்னந்தலையும் தாயுமில்லாமல் அழுதே இறந்த‌து நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது பார்க்கும் வீட்டில்தான் போராளி ஒருத்தியை நான்கைந்துபேர் மொழிகலப்பற்று புனர்ந்தார்கள் நீங்க‌ள் ந‌ட‌ங்க‌ள் நீங்க‌ள் இப்போது கால் ந‌னைக்கும் கடற்கரையில்தான் படகில் தப்பியோடமுயன்ற‌ நிறைசூல் பெண் ஒருத்திசுட‌ப்ப‌ட்டு இற‌ந்துபோனாள் கூடவே அவளோடு... நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது நிற்கும் பதுங்குகுழியில்தான் மேலே செல்லடியிலிறந்த ஆறுமாத குழந்தையை தூக்கவியலாமல் கையில் துவக்கோடும் தவிப்போடும் நின்றிருந…

    • 0 replies
    • 1.1k views
  7. பிறந்ததற்காய்... வாழச் சபிக்கப்பட்டிருக்கிறது அடிமைகளின் வாழ்வு. முடிக்க முடியாத கவிதையாக இன்னும் மன அடுக்குகளில் இறைத்துக் கிடக்கிறது மானுடத்தேடல். பிறந்ததற்காய்... வாழச் சபிக்கப்பட்டிருக்கிறது அடிமைகளின் வாழ்வு. முடிவுகள் அற்ற தேடல் தீராக்கடனாளி ஆக்குவதில் தீர்க்கமாய் இருக்கிறது. வகைப்படுத்த முடியா வலிகளை எடுத்தெழுதுவதில் எவ்விதப் பயனுமில்லை நித்திய நோயாளியாக விரும்பின் கூறுக கொத்தணிக் குண்டுகள்போல் தமிழினத்தின் வாழ்வு சிதறிச்சிதறி சின்னாபின்னமான கதைகள் கோடியுண்டு முற்காலம், பிற்காலம் இடைப்பட்ட இக்காலம் தெளிவற்ற கலங்கலுக்கு உரித்துடையதாக காட்சியாகவும், சாட்சியாகவும்.... மாயமானாகப் புலப்படு…

  8. இந்திய தேசமே! ஒதுங்கி விடு!! விந்திய மலைத்தொடரில் அந்த அகத்தியமுனிவன் அடிபதித்த நாள் முதலாய், இந்திய தேசம் எங்கள் தேசத்தைத் தங்கள் தேசத்துடன் இணைத்துக் கொண்டது! சோழ வள நாட்டின் சோறுடைத்த வயல்களும், சேரநாட்டு யானைகளின் செழிப்பான தந்தங்களும், பாண்டிய நாட்டின் பசுமை மிக்க இலக்கியமும், இந்திய தேசத்தின் சொத்துக்களாகின. அரை குறையாய் வளர்ந்த ஆரியமொழி, எங்கள் தமிழிடம் கடன் வாங்கித் தன்னை வளர்த்துக் கொள்ள, விலை போகாத வேதங்களும் வேள்விகளும்,சாதிகளும் எங்கள் சொந்தங்களாகின. புறமுதுகு காட்டாத புறநானுற்றுத் தமிழன் இராமாயணத்தின் குரங்காக, கடாரம் வரை கப்பலோட்டியவன் பிடாரிக்குக் கோவில் கட்டிக் கும்பிடுகி…

  9. இது ஈழமுரசில் வெளிவந்த கவிதை. பூக்கள் சரிந்த பூனகரி நன்றி - ஈழமுரசு

    • 0 replies
    • 1.2k views
  10. கல்வாரிப்பூக்கள் உடைந்த மனங்களினை ஒட்ட வைப்போம் உறுதியுடன் அன்பைப் பற்ற வைப்போம் நிறைந்த துயரினையே நிறுத்தி வைப்போம் நெஞ்சில் துணிவுதனை நிலைக்க வைப்போம் சோகச் சுமைகளினை இறக்கி வைப்போம் சொல்லில் இனிமைகனை சுவைக்க வைப்போம் மனதின் காயங்கள் மறக்க வைப்போம் மண்ணின் மனிதத்தை மதிக்க வைப்போம் சிந்திக்கும் ஆற்றலினை வளர வைர்போம் சிரிப்பில் துயரங்கள் துரத்தி வைப்போம் ஞாபகத் திறன்களை குவித்து வைப்போம் ஞானிலம் மகிழ்ந்துமே களிக்க வைப்போம் தீய சிந்தனைகளை அகற்றி வைப்போம் தீமைகள் அணுகிடா விலக்கி வைப்போம் அனுபவப் பாடங்கள் படித்து வைப்போம் ஆசைப் பேய்களினை அடக்கி வைப்போம் வாழ்வின் அர்த்தங்கள் புரிய வைப்போம் வளமாய் வாழ்வுதனை வாழ வைப்போம் ஆன்மீக தேவைகளில் …

  11. தீபச் செல்வன் கவிதைகள் ஓவியம் : பொன்வண்ணன் போர் நிலம் வெறும் நிலத்திற்கு பொம்மைகள் திரும்புகின்றன பிரயாணிப்பவர்கள் எல்லோரது கைகளிலும் பெருத்த வண்டிகளிலும் அவர்களிடமுள்ள அகலமான குறுக்குப் பைகளிலும் நிலத்தை அள்ளிச் செல்லுவதாக வயது முதிர்ந்தவர்கள் பிதற்றுகிறார்கள். போர் நிலத்தில் குழந்தையின் பொம்மை இறந்து சிதைவுகளுடன் கிடக்கிறது கொல்லப்பட்டிருக்கிற தாயைக் குறித்தோ தன் தந்தையைக் குறித்தோ எதுவும் கேட்காமல் மறந்துபோன குழந்தை தன் பொம்மை தேடி பாதியாய் மீட்டிருக்கிறது. தரப்பால் துண்டுகளுடன் சில பூவரசம் தடிகளையும் எடுத்துக்கொண்டு பொம்மை வீடுகளைக் குழந்தைகள் மூட்டிக்கொண்டு அதனுள் இருக்கின்றனர் சுவர்களோ தடுப்புக்களோ இல்லாத பொம்ம…

  12. அவன் புலி அவர்கள் புலி ஆதரவாளர்கள் இவன் அகிம்சாவாதி இவர்கள் அகிம்சாவாதிகள் அவன் துரோகி அவர்கள் துரோக கும்பல் இவன் எட்டப்பன் இவர்கள் எட்டப்பர்கள் அவன் புலம் பெயர்ந்தவன் அவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் இவன் தாயகத்தான் இவர்கள் தாயகத்தவர்கள் அவன் ஜனநாயவாதி அவர்கள் ஜனநாய்கவாதிகள் இவன் சோசலிசவாதி இவர்கள் சோசலிசவாதிகள் அவன் குறும்தேசியவாதி இவன் பெரும்தேசியவாதி நீ சந்தர்பவாதி நான் இவையாவும் சேர்ந்த கலவை சூப்பர் சுப்பிரமணிவாதி

  13. இதயமில்லா மனிதர் கூட கலங்கி நிற்கும் கொடூரங்கள்.. ஈழ மண்ணில்..! முன்வினைச் சொந்தமோ.. பந்தமோ.. ஈழ மண்ணின் மீது பிறவிக் காதல் கிருஷ்ணமூர்த்திக்கு..! ஈழ தமிழர்கள் ஈனத் தமிழர்களாய்.. தங்கள் குழந்தைகளை இஞ்சினியராக்கி கொழுத்த சீதனத்தில் வெளிநாட்டில் வாழ வைச்சு மகிழும் வேளையில்.. இஞ்சினியராகி வெளியூர் போயும் ஈழத்து நினைவாகி இள வயதை மறந்து துயர் கொண்டனன் இந்தக் கிருஷ்ணன். தேரோட்டியாய் அன்றி தன் தேகம் தீயினில் வேக.. மீண்டும் ஓர் முத்துக்குமாரனாய் பிறப்பெடுத்திருக்கிறான் இவன். ஐநா அறிக்கை முழுசா பிரசவிக்கவில்லை.. கவலை மட்டும் முழுதாய் பிறப்பெடுக்க.. தாங்க முடியா வேதனையில்.. தன் சுற்றம் மறந்து சுகம் மறந்து இன வாழ…

  14. காலக்கரைபற்றி நீள நடக்க முயல்கிறேன் உன்னையும் என்னையும் அறிந்த ஒற்றைத்திங்கள் மட்டும் உடன் வருகிறது. வெட்கமற்று என்னைத் தழுவிய உப்புக் காற்றை உள்ளம் தேடுகிறது. உனக்குமெனக்குமான மோனப் பொழுதுகளில் முகையவிழ்த்த முல்லைகளின் சிரிப்பொலி சில சமயங்களில் இரைச்சலாகவும், சில சமயங்களில் இன்னிசையாகவும்....... காலநதிக்கரையில் பதித்த தடங்கள் இன்னும் சிதையாமல்.... காத தூரம் கடந்தும், கருகியும் பாதைவெளிகள் பிரிந்தும் ..... தொடர்ந்தும்,...... ஒற்றைத்திங்கள் மட்டுமே உடன்வருகிறது சாட்சி சொல்ல.

  15. நீண்ட இரவின் முடிவில் காத்திருக்கின்றது நேற்றைய வாழ்வில் உதிர்ந்து போன ஒரு பூவின் இதழ் காட்டு வழிப் பயணத்தின் இறுதியில் கிடைக்கின்றது வற்றிப் போன நதியின் சுவடு தூரப் பயணம் ஒன்றின் கடைசித் தரிப்பிடத்தில் அழிந்து போனது ஆரம்பித்த இடமும் இறுதி புள்ளியும் எங்கு சென்று தேடுவேன் காணாமல் போன என் உயிர் தொங்கிய பெரு விருட்சத்தை அடர்ந்து பெரிதாக நின்றிருந்த பெரு விருட்சத்தின் கிளையில் தொங்கிய பறவைகள் அனைத்தையும் பெரும் பூதம் தின்றுகொழுத்த கதையையும் அந்த பூதத்தை என் தோழர்களே வளர்த்து பறவைகளை தின்னக் கொடுத்த கதையையும் எப்படிச் சொல்வேன் என் பிள்ளைக்கும் அவன் பேரனுக்கும் என் வரலாறு முழ…

  16. சொல் அப்பா சொல்: வெள்ளை பனி உருகி வீட்டின் முன் வழிகின்றது வளைந்து செல்லும் வீதியெங்கும் பனியின் சிதறல்கள் காற்றின் திசையெங்கும் குளிரின் வாசம் பனி பார்க்க விரும்பும் மகனை கூட்டிச் சென்று காட்டுகிறேன் குவியலாக இருக்கும் பனிக்குள் குளித்தெழும்புகிறான் சறுக்கி வீழ்ந்து சிரித்து எழும்புகிறான் வெண் நுரை அள்ளி வீசி விளையாடுகிறான் இப்படித் தானே அப்பா நீயும் ஊர் முழுதும் மழை நிரம்புகையில் சைக்கிளில் என்னை வைத்து வெள்ளம் காட்டுவதும் மழையில் நனைவதின் சுகமும் வெள்ளத்தை கூறு கிழித்து சைக்கிள் ஓட்டுவதன் பரவசமும் அப்பா நீ காட்டியது தானே எனக்கும் பின்பு பனை வெளிகளினூடு போகையிலும் மலைக் குன்றுகளினூடு நடக்க…

  17. குரங்குகள் கழுத்தில் பூமாலையாக விழுவது தான் எமது புத்திஜீவித்தனத்தின் இறுதி எல்லை குரங்குகள் பிய்த்தெறியும்போது பூமாலைகளில் தான் பிழைகள் இருக்கவேண்டும் என்பதே சிந்தனையின் எல்லை இந்தச் சிந்தனை முறை உயிர்வாழ முற்படும் போதெல்லாம் எல்லோரும் எல்லாமும் அர்த்தமற்றதாக்கப்படுகின்றது மிகச் சுலபமாக இந்தச் சிந்தனை முறை வானுயர்ந்த வீரத்தையும் தியாகத்தையும் அர்த்தமற்றதாக்கிவிடும் எது குறித்து சிந்திக்கவேண்டுமோ எதையெல்லாம் நினைத்து உணர்வுகள் வளரவேண்டுமோ அதையெல்லாம் கத்தரித்து கப்பாத்து பண்ணிவிடும். அடிமைத்தனத்தால் கட்டப்பட்ட மேடைகளில் காட்டப்படும் குறளிவித்தைகளால் தொப்பிக்குள் இருந்து முயலை எடுப்பதுபோல் எமக்காக எதையும் எடுக்க முடியாது ஒருவேள…

  18. நந்திக் கடலில் பேரம் நடந்தது எம் மக்கள் நீந்தவும் முடியாது நிர்க்கதியாய் கை அசைத்து கடல் நடுவே தத்தளித்து தவித்தனர் இப்ப மீளவும் ஈராக்கின் பின்பாய் லிபியாவில் சொல்லப்படுகிறது இந்தியாவையும் மீறி ஈழம் எடுக்கலாம் எண்ணையைத் தோண்டிக்கண்டுபிடி தமிழா அடித்துச்சொல்றாங்கள் இதுதாண்டா உலகமயமாதல் அமெரிக்கா பிரிட்டன் பிரான்சு மீட்பன்கள் அணு ஆயுதம் இருக்கெண்டு பாய்வினம் மக்களெல்லாம் சாகுதெண்டு அழுவினம் மக்கள் கரிசனை பொங்கிக் குண்டாய் பொழிவினம் எண்ணையிருந்தால் ஈழமெடுக்கலாம் தேர்தல் நெருங்கினால் அன்னை சோனியாவும் எமை ஆரத்தழுவும் தம் கையைமீறினால் தான் ராஜபக்சவும் கம்பி எண்ணலாமாம்–ம் எல்லாம் வல்ல தேசங்கள் வகுத்த நியதியாம் மக்கள் போரெழும் பூ…

  19. அரசியலின் இலட்சியம்

    • 0 replies
    • 1.6k views
  20. Started by priyaa,

    ஏழை குழந்தையின் கண்கள் மின்னியது.... மாற்று உடுப்பு கிடைத்தது எண்டு எண்ணி ... பாவம்.. தன்னை போல அதுவும் 'வேண்டாம்' என ஒதுக்க பட்டவை எண்டு அறியாமல் ...

  21. கருணாநிதியின் உண்மை முகம் http://www.youtube.com/watch?v=SPGH4I6y0NQ&feature=feedf

    • 0 replies
    • 1.9k views
  22. அண்;மையில் நான் ஒரு நினைவாஞசலியைப் பார்க்க நேரிட்டது. அது ஐரோப்பிய நாட்டில் வெற்றிகரமாக இயங்கும் வர்த்தக நோக்கமுடைய இணையத்தளமொன்றில். வன்னியில் அவலம் அதிகரித்தவண்ணமிருந்தவேளை, விடுதலைக்காய் தேடல்களில் ஈடுபட்டு கணவன் இந்தியச்சிறையில், அதேவேளை அவரது குடும்பம் தமிழர் விரோததேசமாம் இந்தியாவினது ஏவலில் சிங்களம் சிதறியடித்த குண்டுகளில் ஒருத்தரும் மிஞசாது சாகடிக்கப்பட்டனர். தனது அன்புள்ளங்கள் பிரிந்த இரண்டாது வருடநினைவிற்காய் பின்னுட்டமாக ஒரு கவிதை சிவகரன் இணைத்திருக்கிறார். வாசிக்கவும். கால்களில் கூடு பின்னும் முடிவற்ற பாதை அவ்வளவுதானா ... பிள்ளைகள் மாய்ந்தபின் சுவற்றில் கிடக்கும் புத்தகப்பையாய் அவன் கனவுகள் எல்லாம் இருள் மூடுமோ கிணற்றடியில் எடுப்பாரின்ற…

  23. இந்தப் படைப்பு, ஏறத்தாள இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு காலத்தில் மனிதகுணமும் அதனது இயல்புகளும் எந்த விதத்திலும் மாறிவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அசோகச்சக்கரவர்த்தி காலத்தில் இருந்து இன்றுவரை எதுவுமே பெரிதாக மாறி விடாதது மட்டுமல்ல, மனித குணம் மேலும் மேலும் வக்கிரமடைந்து செல்வதைக் காட்டுகின்றது. 'தர்மச்சக்கரம்' கலிங்கம் வீழ்ந்தது! குருதி கொப்பழித்த 'தாயா' நதிக்கரையின் ஓரங்களில், கரையொதுங்கிய பிணங்களின் இரத்த வாடை கலந்த காற்று வெற்றிச்செய்தியை, நெற்றியில் சுமந்து வீசியது, அன்னப் பறவைகள் நடை பயின்ற ஆற்றங்கரையில், ஆந்தைகளும் கழுகுகளும் குந்தியிருந்தன.. கலிங்கம் வீழ்ந்தது!. வீதியெங்கும் வெற்றியின் பூரிப்பு. வீழ்ந்து கிடக…

  24. Started by thamilmaran,

    அன்னதானம் தாய் மண்ணிலே குஞ்சும் குருமானும் குமரியும் கர்பிணியும் பெற்ரவளும் வழர்த்தவனும் உடல் அவயவங்களை இழந்தவர்களும் தள்ளாடும் வயோதிபமும்.......... தினம் தினம் கையிலே வெற்றுத் தட்டேந்தி ஒட்டிய வயிற்றுடன் ஒரு நேர உணவு கேட்டு தெருத்தெருவாய் கால் வலிக்க கை கடுக்க அலைந்து திரியும் போது............... புலத்திலே அன்னதானம் என்ற பெயரில் குப்பைத் தொட்டிகளுக்கும் கறுப்பு பைகளுக்கும் உணவு திணிக்கப்படுகின்றன!!!!!!!! அன்புடன் தமிழ்மாறன்

  25. முகப் புத்தகம் இணைய இணைப்புகளிட்கு இங்கு அவசியம் இல்லை இதய இணைப்புகள் இருந்தால் போதுமே - உன் முகப்புத்தகத்தை தரிசிக்க . உனக்கு மட்டும் நண்பர்களை பரிந்து உரைக்க மாட்டேன் உலகமே என்னை மட்டும் நண்பனாக உனக்கு பரிந்து உரைக்கட்டும் . உன் சிரிப்புகளை அப்லோட் பண்ணுகின்றாயே சிதறிப் போகின்றேன் சில்லறைகளாக . புறநிலை எல்லாம் புறம் தள்ளிவிட்டு -உன் புரபைலினை மட்டும் உச்ச்சரிகின்றேன் . துனிசியா ,எகிப்து ,லிபியா முகப் புத்தகம் வீழ்த்திய இராச்சியங்கள் உன் முகப்புத்தகம் வீழ்த்திகொண்டிருக்கும் பூச்சியம் நான் மட்டும் . by Jeyashankar Somasundaram

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.