கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நீ என்றும் என் காதலி.... கவிதை - இளங்கவி அதிகாலை ஓர் அழைப்பு மணி அவசரமாய் சென்று யாரது...? பதில்.. நான் தான் உன் தேவதை...! கதவை திறக்கிறேன், யார் தேவதையா...? ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....! அனைத்தையும் அடித்துவிடும் அழகான ஓர் முகம்... ஆனாலும் கண்களிலே கண்ணீர்... கலைந்த கூந்தல்.... மாற்றான் கைபட்டு கசங்கிய மேலாடை... மான மறைப்புகளில் ஆங்காங்கே இரத்தத் துளி..... கலைந்த கூந்தலையும் அலங்கரித்த கார்த்திகைப் பூ என் கண்முன்னே கதறுகிறாள் ஏன் என்னை கைவிட்டாய்..? நான் கேட்டென்...? எப்போ உனை கைவிட்டேன்...? நான் உன்னைப் பார்த்ததில்லை...! அட பாதகனே.. எனை பிரிய மனமின்றி அன்று ஏங்கி அழுது நின்றாய்... எனை விட்டு பிரிய மு…
-
- 4 replies
- 2.1k views
-
-
சந்தன பேழைக்குள் போன ஒரு சரித்திர நாயகன். திராவிட வீரத்தை மீண்டும் காட்டிய இந்த நூற்றாண்டின்-ஒரு தமிழ் மகன். விழிகள் மூடாமல் விடுதலைக்காய் வழிகள் தேடினான் வலிகள் சுமந்து-எதிரி குகையில் வாழ்ந்து இலக்கு தாக்குவான். நகைச்சுவை பேசி நண்பனாய் பழகுவான் நறுக்கென பேசி கடமையில் வெல்லுவான். அமைதியும் ஆற்றலும் இவனிடம் தேடலாம். புராணத்தில் வீரரை கற்பனையால் கண்டோம், புலி மகன் இவனால்-இன்று கண்முன்னே கண்டோம். தலைவனின் சிந்தனையை செயலாக்கினான் -இவன் செயல்கள் எல்லாம்-எதிரிக்கு பெரும் புயலாக்கினான். விடுதலை பயணத்தில் வீரமாய் வாழ்ந்த புலி - இன்று விதையாக வீழ்ந்தது எதிரியின் சதி. விடுதலை வீரனே-நீ வீழ்ந்தும் உயிர் வாழ்கிறாய். ஒற்றை தமிழன் வாழுமட்டும் நீ …
-
- 4 replies
- 912 views
-
-
உன் தோள் சாய ஆசைதான்...... அன்பே... உன் தோள் சாய நான் தூங்காமல் கத்திருக்கிறேன் தூக்கத்தில் மட்டும்தான் நீ வருவயா? நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் நீ விழி மூடிக் கிடக்கிறாய் நான் விழி மூடும் நேரமெல்லாம் என் விழிகளுக்குள் நடக்கிறாய் இருவரும் சேர்ந்தே விழிப்பதும் சேர்ந்தே நடப்பதும் எப்போது? பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எம்மால் முடிகிறது உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள் மனதுக்கும் உண்டு முடிவே இல்லாத வாழ்வும் பிரிவே இல்லாத உறவும் என்றுமே இல்லை இருந்தும் ஏகாந்தத்தை ரசிப்பதுவும் நேசிப்பை ருசிப்பதுவும் எமக்குப் பழக்கமானவை ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
மண் காக்க தனை தந்த மாவீரரே மனங்களில் நாம் பூஜிக்கின்றோம் இந்நாளிலே சுதந்திர தாகத்தை நெஞ்சில் நிறுத்தியே சுகங்களை எல்லாம் உங்கள் நினைவிலிருந்து அகற்றினீரே உற்றம் சுற்றம் நம் மக்கள் என்றும் கொண்டீரே உயிரையும் துச்சமாக எண்ணிக் கொண்டீரே எதிரியை சூறையாட வெறி கொண்டீரே எமக்காக மண் மீட்க புறப்பட்டீரே தேசத்தின் கனவை சுமந்தபடியே தேகத்தை கொடுத்தீர்கள் ஒரு கணமும் தயங்காமலே வீழ்ந்தாலும் நீங்கள் விதைகளாகவே வீரத்துடன் மீண்டும் எழுவீர் விருட்சமாகவே நமக்காக நம் தேசம் மலரும் என்று நம்பிக்கையுடன் உங்களை போற்றுகின்றோம் இந்நாளிலே …
-
- 4 replies
- 3.3k views
-
-
நந்திக்கடல் – 2012 ஆவணி : நிலாந்தன் மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, மாமிசத்தாலானதும் சுவாசிப்பதுமாகிய அனைத்தையும் சுட்டெரித்த பின் தங்கத்தாலானதும் துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள். மாமிசத்தாலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம் சேகரித்து உப்புக்களியில்குவித்து வைத்திருக்கிறார்கள். உப்புக்களியில் இருபோக மழையில் துருவேறிக் கிடக்கிறது கனவு. காடுகளின் சூரியன் நந்திக் கடலில் உருகி வீழ்கிறான். கானாங்கோழி காணாமற்போனவரின் கடைசிச் சொற்களை அடைகாத்திருக்கிறது. நிலாந்தன், 2012 – ஆவணி, யாழ…
-
- 4 replies
- 773 views
-
-
உடல்கள் புதைந்தாலும் உணர்வு புதையவில்லை.... இளங்கவியின் - கவிதை..... முற்றத்தில் வேப்பம் பூ கோலமிட... வாசலுக்கு வெற்றிலைகள் மாலையிட... செம்பருத்தி பூ வருவொரை வரவேற்க ஆச்சியின் எடுப்பான வெளிப்பல்லு சொந்தங்களை அன்பாக வரவேற்ற.... எங்கள் அன்பான தமிழீழம் அழிந்து அடிமண்ணில் புதைந்ததுவே..... இடப்பெயர்வில் தொடங்கி பட்டினியில் தொடர்ந்து பயத்திலே வாழ்ந்து பாதியாய் செத்து; பின்னர் மீதியும் செத்த; மானமுள்ள தமிழினமாம்..! ;இன்று மண்ணோடு மண்ணாக மரணப் புதைகுழியில்.... கடைசிக் கதறலும் கயவனுக்கு கேட்கவில்லை கண்ணீரில் பல குழந்தை அவர்கட்கு காயமும் வலிக்கவில்லை ஆனாலும் தன் மரணம் ஏனென்றுதான் புரியவில்லை உயிருடன் உள் …
-
- 4 replies
- 1.2k views
-
-
தந்தையர் தின வாழ்த்துக்கள் சுயத்தை விற்று உழைப்பை இரைத்து உதிரம் வறண்டு குடும்பத்தை கரையேற்றும் கட்டு மரம் ! தன்னம்பிக்கை தைரியம் தெளிவு- இவை தோய்ந்த மூன்றெழுத்து மந்திரம் தந்தை ! கண்டிப்பு காட்டிடும் கண்கள் - முள்ளாய் அன்பு வழிய அக்கறை கொஞ்சும் அழகு மனம் - மலராய் ! அப்பா ! உந்தன் வியர்வை நாற்றத்தில் உழைப்பு மணக்குது ! நேர்மை மணக்குது ! புகழும் மணக்குது ! ரேகைகள் தேய்ந்து மரத்துப் போன விரல்களின் ஸ்பரிசத்தில் வாழ்வின் சோதனைகளை சொல்லாமல் உணரவைத்தாய் !
-
- 4 replies
- 802 views
-
-
எம் கரும்புலிகள்! சருகாகி மிதிபடோம் தமீழீழப்பயிருக்கு உரமாவோம் என்றெழுந்த உயிர்கள் காற்றாகிக் கரைந்து களமாடி வென்ற எம் கரும்புலிகள் மண்மீட்க உயிரம்பாய் பாய்ந்த எம் புலிகள் தம்மையே கொடுத்து தமிழீழத்தாய்க்கு வலுச்சேர்க்கும் உயிர்பூக்கள் ! உயிர்கொடுத்து வளர்த்த பெற்றோரை விடவும் மண் மீட்பே தன்மானம் என்று உணர்ந்த உன்னதங்களே! தீயிலே எரிந்தாலும் சுடராகி ஒளிர்கின்ற தங்கங்களே!! உங்களை எப்படிப் பாடுவோம் எங்கள் வேங்கைகளே காற்றாகி கடலாகி களத்திலே எரிமலையாகி ஒளித்தீபம் ஏற்றும் சூரியச் சுடர்களே! அச்சமது துச்சமென்று துணிவு ஒன்றே ஆடையென்று கொண்டு மானம்விட்டு உயிர் வாழ்வதுவா என்று சொல்லிச் சென்றீர்களே பாடம் இங்கு நன்று! விதையாகி விழுந்தவர் எ…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழா வெளிநாட்டில் தமிழனுக்கு தமிழில் பேச வெக்கம் நாகரீகம் முத்திப்போய் நடை உடையிலை மாற்றம் பிள்ளைகளின் பெயரைக்கேட்டால் தமிழனோ எனத் தடுமாற்றம் தமிழ் இனத்தின் தலை எழுத்தில் இப்படி ஏன் மாற்றம் இன்னும் இரண்டு தலைமுறையில் இவனின் நிலை இங்கு சோகம் அரசாங்க இலவசப்பணத்தில் ஆடம்பர ஆட்டம் அதை எடுத்து சிலதுகள் இங்கு சூது ஆட்டம் அகதியாகி வந்தும் இங்கே சண்டியர் கூட்டம் கோவில்களில் சிலதுகள் நர பலியாட்டம் காசுக்காக குடும்பம் பிரிந்து இருப்பது இது என்ன கோலம் பிள்ளைகள் வாழ்க்கை பாழகப் போவதுதான் மிச்சம் ஊரில சுவாமிக்கு ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
மன்னா மாமன்னா! நீ ஒரு மாமா மன்னா! பூமாரி தேன்மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ள மாறி அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவுக்கி! தேடிவரும் வறியவர்க்கு மூடா! நெடுங்கதவு உன்கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு! எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு மண்ணோடு மண்ணாக்கு! இந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங் காக்கையே!!! - இந்தக் கவிதை மாமன்னர் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியாரைப் போற்றி புலவர் பாலபத்ர ஓணாண்டி அவர்களால் பாடப்பட்டது....
-
- 4 replies
- 6k views
-
-
[size=3] [size=4]அழுதோம் [/size] [/size][size=3] [size=4]விழிகள் கரைய கரைய [/size][/size][size=3] [size=4]விடைகள் அற்று அழுதோம் [/size][/size][size=3] [size=4]கண்ணீரை துடைக்க யாருமில்லை [/size][/size][size=3] [size=4]கண்ணீர் வற்றி கண்கள் புண்ணாகின [/size][/size][size=3] [size=4]அழவும் உடலில் தெம்பு அற்று வீழ்ந்தோம் [/size][/size][size=3] [size=4]வீழ்ந்தோம்தான்[/size][/size][size=3] [size=4]உலகை நம்பியதால் வீழ்ந்தோம்தான்[/size][/size][size=3] [size=4]ஆனால் மீளவும் எழுவோம் [/size][/size][size=3] [size=4]விழ விழ எழுவோம் [/size][/size][size=3] [size=4]விடியும்வரை ஓயோம் [/size][/size] [size=4]http://leo-malar.blo...og-post_10.html[/size…
-
- 4 replies
- 630 views
-
-
தோரணங்கள் இல்லை மஞ்சள் சிகப்பு நீலக்கொடிகள் இல்லை எழுச்சி கீதங்களும் இல்லை இது கார்த்திகைதனா நாங்களும் தமிழர்கள் தானா.. ஒடுங்கிப்போகிறது சர்வமும், சவங்களா நாம். இத்தனை திங்களாய் என்ன செய்தோம். களையிழந்து கொண்ட நிலைதொலைத்து வாடிக்கிடக்கிறாள் ஈழநங்கை. மரகதமாமணிகள் உறங்குமிடமெங்கும் பேரிருள் மேவி கிடக்கிறது. காந்தள் சூடி ஒளிகொண்டு நிற்கும் காலமல்லவா இது. நினைவேந்தலில் உருகியழும் நேரமல்லவா இது. தீக்கடைக்கோல்களை மறந்துவிட்டு எவரெவர் கால்களில் விழுந்தோம். ஒப்பாரி வைத்தோம் எவராவது பார்த்தார்களா ? வாருங்கள் சாம்பல் அகற்றித் தீமூட்டுவோம். வேர்களில் இருந்து மீண்டும் தழைப்போம். விண்நிகர்த்த மேனியர் விதைத்த நிலத்தில் புல் முளைத்தாலும் புலியாகுமென்று நடுகல் உடை…
-
- 4 replies
- 780 views
-
-
யுத்த மேகங்கள் கலைந்து-வானில் குண்டு மழைகள் ஓய்ந்து-அடங்கி மரணத்தின் ஓலங்கள் மறைந்து-ஓடி இரத்ததின் ஆறுகள் இமைகள்- மூடி நரபலி மனிதனின் பற்கள்-விழுந்து புரையோடிய மக்கள் கொள்கைகள்-மாறி இன்றுதான் பிறந்தோம் என்று-கூறி பறவைகள் வானில் இனியகானம்-பாடி பொன்மணி நெற்கள் கொழித்து-விளைந்து பிறந்த் பூமியில் உறவுகள்-கூடி இனிமையாகும் அந்நாள்-எந்நாள்
-
- 4 replies
- 1.2k views
-
-
கண்ணீர் நொடிகள் - என்.சுரேஷ். சென்னை கல்யாணி கவரிங் கல்யாணி கவரிங் என்ற விளம்பரம் கேட்டு கவரிங் நகை வாங்கச் செல்லும் ஏழை கல்யாணி நிஜ நகைகளுக்காக ஏங்கிக் கலங்கும் நொடிகள்! விதவையாகிப்போன அந்த பூக்காரி அக்காவின் நினைவுகளும் கனவுகளும் மனதை குத்தும் நொடிகள்! காதலனும் காதலியும் பிரிந்த பின் சந்திக்க அவர்தம் கணவனுக்கும் மனைவிக்கும் முன் ஒருவருக்கொருவர் அறியாதவர்கள் போல் நடித்துத் துடித்த தவிப்பின் நொடிகள்! சொந்த இனத்தின் அழிவக் கண்டும் சட்டத்தால் வாய்ப்பூட்டிடப்பட்டும் அமைதியின் வேடத்தில் தவமிருக்கும் வீரத்தின் எழுச்சி எரிமலை கண்ணீரால் துடிக்கும் நொடிகள்! பட்டியலிட்டால் அடங்கா எத்தனை எத்தனை கண்ணீர…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிரி இனி நீ! ஒன்றல்ல..... இரண்டல்ல..... ஓராயிரமும் அல்ல.... இருபது ஆயிரங்களை நெருங்கும் வீரர்கள் இழப்பு! அத்தனையும் மொத்தமாய் வெறும் அறிக்கையில் எச்சரிக்கை - என்றாகுமோ..... தவித்தது நீயும் -நானும் தான்! தவறு தவறு! பெரும் நெருப்பின் முகம் எங்கள் பிதா மகன் பிரபா! அவர்-எப்போ என்ன நினைப்பார் என்று யாரறிவார்! அலை மூசி வீசினால் கரையில் நிற்கவே பயப்பிடுவான் - தமிழன் ஆழ்கடலில் போர் செய்யும் வீரம் கூட - எப்பிடி ஒரு தமிழிச்சி பெற்றாள்? தலைவா-எல்லாம் உன்னால்! அமைதி என்று பேசி நின்று அடிப்பவனுக்கு ஆயுதம் கையில் தந்து -அடிமையாய் கிடப்பவனில் பிழை பிடிக்கும் உலகம் ! திரும்பும் திசை எங்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
வெண்ணிற பனி படலம் போர்த்தியஆடையுடனும், தலையில் மல்லிகை பூ வைத்து அலங்காரத்துடன் பவனி வரும் எங்களை தத்தெடுத்த இங்கிலாந்து தாய் கன மழை என்னும் கண்ணீரால் நனைவதேன். இயற்கை தனது பாதையில் சீராக நடக்கிறது நாம் மனிதர்கள் தான் சீரற்ற நடவடிக்கைகளால் இந்த பூமியை அழித்து கொண்டு இருக்கின்றோம் மனிதர்களே சிந்தியுங்கள் இந்த பூமி தாயை காப்போம்
-
- 4 replies
- 705 views
-
-
எம் கண்ணுணர முடியாத கண்மணிப்பூக்களே! ஏனிந்த மௌனம்? இன்னும்…. கார்த்திகை மலரவில்லை காண்டாமணி ஒலிக்கவில்லை புன்னகை பூக்கவைக்கும் பேச்சொலியும் கேட்கவில்லை பார்த்தொருகால் வந்தெமக்கு….. பூத்தமுகம் காட்டுதற்கு புனிதர்கள் இன்னும் எழவில்லை. ஏனோ பெரு மௌனம்!!!!! காலதேவரே!....... இதுவென்ன கண்ணாமூஞ்சி விளையாட்டு கபாடக் கதவங்களின் தாழ் திறக்கும் ஓசைகூட மானசீகச் செவிகளின் மன்றம் வந்து சேரவில்லை ஐம்புலனை சிறிதடக்கில் - உம் அருவுருவின் சலசலப்பு ஆன்மாவுக்குக் கேட்கும் இப்போது, ஆயத்த ஆரவாரமும் அருவுருவில் உணரவில்லை சலசலப்புச் சத்தமும் செவிப்புலனுக்கெட்டவில்லை காலதேவர்களே உம் மூச்சின் வெம்மை இன்னும் என் காதோரம் பரவவ…
-
- 4 replies
- 1.1k views
-
-
நட்புக்கு எடுத்துகாட்டாய் -என் நண்பன் ....!!! காதல் ஒருவர் மீது வரும் ... ஒருவகை ஈர்ப்பு ... நட்பு எல்லோர் மீதும் ... பூக்கும் அழகான பூ ....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்
-
- 4 replies
- 654 views
-
-
அண்ணா...! நானும் உன் சொந்தங்களும் நலம் என்று சொல்ல இங்கு தான் எமக்கு ஏதுமேயில்லையே??! தொலைந்து போன பொருட்கள் யாவும் கையில் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் இன்றுவரை வாழ்கிறாள் உனது அம்மா...! தொலை தூரம் நீ இன்று சென்றிட்ட போதிலுமே நாளை எமை தேடி வருவாய்... எங்கள் நம்பிக்கைகள் இன்னும் தகர்த்தெறியப்படவில்லை! நீ சென்ற நாள் முதலாய் புதினங்கள் பலப்பல நடக்குது நாள் தோறும். பக்கத்துக்கு வீடுக்காரன் புதுசா ஒரு எல்லைபிரச்சனைய தொடங்கியிருக்கான் என் வீட்டுக் காணியும் உன் தோட்டம் துரவெல்லாம் அளவெடுத்துக்கொண்டு போயினம்... எங்களூர் சுடலையில் வெறிதாய் கிடந்த வெற்றுக்காணியில் அயலூர் வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
நாங்கள் பிறை காண முன் அவன் சிறை காண வேண்டும் நாங்கள் கஞ்சி குடிக்கும் போது அவன் அஞ்சி துடிக்க வேண்டும் நாங்கள் நோன்பு பிடிக்க முன் அவன் கம்பி பிடிக்க வேண்டும் நாங்கள் ஈச்சம் பழம் உண்ண முன் அவன் பேச்சுப் பலம் மறைய வேண்டும் நாங்கள் கேட்டு அழும் துஆவால் அவன் கூட்டுள் விழ வேண்டும் நாங்கள் நம்பி எண்ணும் திக்ரால் அவன் கம்பி எண்ண வேண்டும் நாங்கள் எழுந்து சஹர் செய்ய முன் அவன் ஒழிந்து போக வேண்டும் நாங்கள் தானம் செய்யும் மாதத்தில் இந்த ஞானம் பொய்யனாக வேண்டும் நாங்கள் கேட்டு அழும் குனூத்தால் அவன் ஆட்டம் நிற்க வேண்டும்…AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=138917 .
-
- 4 replies
- 1.1k views
-
-
அவன் வருவான் அதுவரை காத்திரு…. அழுதபடி உனக்காய் இல்லாத கடவுளையெல்லாம் இறைஞ்சியதன் பலன் இன்று நீ அறுக்கப்பட்ட செட்டைகள் முளைத்துப் பறக்கும் பறவைபோல் இருள் மதில்கள் தாண்டி வெளியில் வந்திருக்கிறாய்…. *குறுந்தகவல் மூலம் உன் விடுதலைச் செய்தி* மனம் முட்டின மகிழ்ச்சி நிலத்தில் நிற்காது கால்கள் பறக்கின்றன….. மூன்றாண்டு அஞ்ஞாத வாசம் முடித்து – உன் வரவை எதிர்பார்த்திருந்த குழந்தையின் முகத்தில் மீளவும் சிரிப்பை பூக்க வைத்துள்ளாய்…… அவன் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி இனி நீ கனவு காணலாம் கவிதைகள் படிக்கலாம் அச்சம் தரும் கனவுப்பாளங்களை உடைத்துக் கொண்டு இரவுகளில் இனி நீ உறங்கலாம் இது நிரந்தரமாகட்டும். கனவுகளுக்காய்ப் போன உனது கண்ணாளனின்…
-
- 4 replies
- 1.6k views
-
-
சாட்சியம் காலத்தின் கட்டாயம் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் சித்திரவதைகள் என எம்மினம் சின்னாபின்னப்படுத்தப்பட்டு எமது தேசமும் எரிக்கப்பட்டபோது உலகம் கண்மூடி நிற்க உண்மைகள் புதைக்கப்பட்டன. இப்போ சீமெந்துச் சுவரில் முளைவிட்ட சிறு விருட்சம்போல் உண்மை மெல்ல மெல்ல வெளியேறுகிறது. தன்கடமையை மறந்த ஐ. நா மன்று கதிகலங்கி நிற்க மனிதவுரிமை மனச்சாட்சியாய் வாய்திறக்கிறது. சாட்சியம் கோரி வாய்திறக்கும் மனிதவுரிமை ஆதரவில்லாமல் அனாதையாய்விடக் கூடாது. பார்த்ததை பகிர்ந்ததை பட்ட துன்பத்தை துணிவுடன் எடுத்துக் கூறி தமிழர் துயர் துடைக்க சாட்சியம் வழங்கு சாட்சியமில்லாவிடத்து உண்மையும் அனாதையாகிவிடும். மனச்சாட்சியும் மௌனமாகிவிடும். தயங்காதே! தமிழீழ விடுதலைக்காய் தன்ன…
-
- 4 replies
- 729 views
-
-
மௌனங்கள் பேசட்டும் அன்பே நீ பூமியில் அவதரித்த நேரம் நிசப்த நேரமா??? அதனால் தானோ என்னவோ நீ உன் மொழியாக மௌனத்தை தேர்ந்தெடுத்துள்ளாய் போதும் உன் மௌனம் பிறப்பில் இருந்து நீ மௌனமாய் இருந்தது பேசிவிடு உன் மௌனத்தை கலைத்து விட்டு என்னுடன்... உன் மௌனங்கள் பேசும் என்ற நம்பிக்கையில் நான்...
-
- 4 replies
- 1.1k views
-
-
அப்பாவி சுந்தரேசன் அழகிய லாவண்யா... டாக்டர் சுந்தர்..அசைவம் கலக்காத அப்பாவி.. வல்லினம் பேசாத நல்லவன்.. இனிமையின் இருப்பிடம்.. எளிமையின் வாழ்விடம்.. வயது திருமணத்தை செய்க என கோவிலில. பெண் பார்ப்பு ரம்யமான சூழல்.. தேவதையாய்.. லாவண்யா.. கூரை சரசரக்க.. கூந்தலெல்லாம் பூச்சூடி வண்ணமையிட்டு வட்டமெனப்பொட்டுவைத்து முகம் பார்க்காமல் சிரித்தபோது நாணமென எண்ணிக்கொண்டான்.. தேன்குரலில் எப்படி இருக்கிறீர்கள் கேட்டபோதே முடிவு செய்தான் இவள்தான் என் மனைவியென்று.. இவன் தலையாட்டலுக்காகவே காத்திருந்த பெற்றோர் கட்டி வைத்தார்..அக் கன்னிப்பெண்ணை ? முதலிரவே இவனுக்கு நினைத்தமை போல் அமையவில்லை.. பாலுடன் வருவாளெனப் பார்த்திருந்தான்-அவள் செல…
-
- 4 replies
- 1.5k views
-