கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மாறும் உலகில் மாற உன் உறவே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை நிரந்தரம் நான் மாண்டபின்னும் உன்னில் உயிர்பது நிரந்தரம் தாயின் அன்பு சேய்க்கு நிரந்தரம் நான் சாயும்போது காப்பது நீயே நிரந்தரம் செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம அதன் விலையாக என்னை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
-
- 4 replies
- 1.9k views
-
-
காண வல்லாயோ ? ------------------------------------------------------ நீ இக்கணத்தில் ஒரு ஆற்றங்கரையிலோ அன்றில் ஒரு கடற்கரையிலோ உலாவிக் கொண்டிருக்கிறாயென நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். மிருதுவான ஒரு மணற்தரையில் உன் வெறும்பாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் நான் உன்னையெண்ணிக் கனவு கண்டுகொண்டிருக்கிறேனென நீ கனவு கண்டவாறே நிர்மலமான ஆகாயத்தையும் அடிவானத்தையும் மோகப் போதையுடன் பார்த்து முறுவலிப்பதாகவும் என் கனவுகள் விரிந்தவண்முள்ளன. நிறமிழந்து பெயர்களையிழந்து வயதிழந்து இருத்தலையும் இழந்து நித்தியமானவளாகவும் முழுமையானவளாகவும் ஆகிவிட்ட என் காதலியே ! காதலிப்போர் அனைவரினதும் காதலில் பதுங்கிக்கிடக்கும் என்னு…
-
- 4 replies
- 1.6k views
-
-
பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே இறக்க வைக்காதே பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே இவனைப்போல் பாவிகளை இனியேனும் படைத்து வைக்காதே வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு மூலம் வர வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ காதகனைக் கண்டு மக்கள் காறித்துப்ப வேண்டாமோ கோடி வகை நோய் கொடய்யா சாகும் வரை அழ விடய்யா இப்பிறவி முடிவதற்குள் இவன் கணக்கை முடித்திடய்யா உச்சி மரக்கிளையில் நின்று உயிர் வேரை அறுத்தவன் இவன் பச்சை இளங்கொளுந்தைக்கிள்ளி பாழ் நெருப்பில் எறிந்தவன் இவன் பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே ! முகநூல்
-
- 4 replies
- 4.1k views
-
-
உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம் உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? வருக புத்தாண்டே. அழைத்தாலும், விட்டாலும் அகலக்தடம் விரித்து - எங்கள் வாழ்வின் வாசலில் வினையாற்றத் தொடங்கிவிட்டாய். அழைத்தென்ன? விட்டென்ன? அனுமதி கேட்டா வருகின்றாய்? வந்தது வந்துவிட்டாய் வலிய வந்த சீதேவியே! எங்கள் வாழ்வின் வாசலில் கோலமிடு. நேற்றுன் சோதரி வந்தெடுத்துப் போனாள். ஒப்பாரி ஓலங்களை மட்டுமே எங்களதாய் மிச்சப்படுத்தி, கண்மூடித் திறக்குமுன்னே களவாடிப் போய்விட்டாள். எங்களுக்கென்று பத்திரப்படுத்த, செல் விழுந்த சிதைவிடையே உயிர் காவி …
-
- 4 replies
- 1.1k views
-
-
என் நிலை... ஆயிரம் கனவுகள் என்னுள் ஆயிரம் ஆசைகள் என்னுள் ஆயிரம் எதிர்பார்ப்புகள் என்னுள் ஆயிரம் வேதனைகள் இவைகளால் கனவுகள் பல கண்டேன் என்னவனை அடைவதற்கு கனவுகள் நிஜங்களாகமலே போய்விட்டன...கனவாகவே என்னவனுடன் வாழ ஆசை அதுவும் நிராசையாகவே போய்விட்டது....ஆசைகள் என்னவனுடனான எதிர்காலம் பற்றி எதிர்பார்ப்புகள் வைத்திருந்தேன் அவையும்...எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தருமாயின் அந்த ஏமாற்றத்தை எதிர்பார்க்க கூடாது என்று அவையும் ஏமாற்றங்களாகின இவை அனைத்துக்கும் பதிலாக என்னவன் எனக்கு வேதனை துன்பம்....தூக்கமின்மை... உண்விருந்தும் உண்ணா நிலை இப்படி பலதை பரிசாக தந்து சென்று விட்டான் பல தூரம்...
-
- 4 replies
- 1.2k views
-
-
தோணியிலே ஏறும் போது சொன்னார்கள் துறைமுகத்தில் இறங்குவதாய்.. பாதிவழி போகையிலே .. பாவிகளோ தோணிக்குத் துளையிட்டார்கள் தண்ணியேறித் தாழும் நிலை .. தோணிக்கின்று ! பாவிகளே .. பாவிகளே .. தாழுவது தோணிமட்டுமல்ல நீங்களும் தான் ! புரிந்து கொள்ளுங்கள் !
-
- 4 replies
- 1.1k views
-
-
____________________ இப்படித்தான் கொடுமையான இரவுகளையே எப்பொழுதும் உனக்கு தரவேண்டியாயிற்று. காலை என்றாலும் உன்னை நெருங்கிவிட முடியவில்லை. எல்லாவற்றையும் நிர்பந்தங்களுக்காக செய்துகொண்டிருக்கிறோம். உன்னை தனியே விட்டுச் செல்லுகிற என் தாய்மையைப் பற்றி என்ன சொல்லி அழுகிறாய்! அந்த வெளியில் கலந்து கிடக்கிற தாலாட்டுகள் உன்னை தூங்க வைக்கும் என்றே நினைத்திருந்தேன். அவர்கள் உன்னை என்னிடமே சேர்ப்பதாக சொல்லுகிறார்கள். வீடுகளை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டு வந்த பயணத்தின் இடையில் ஒரு தோழிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கான பாதுகாப்பு விசாரணைகளுக்காகத்தான் இடையில் தடுத்து வைக்ப்பட்டிருக்கிறோம். தூங்க மறுத்து அழுது களைத்துப்போய் காலையில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
ஆண்டகை அகதியாக அல்லலுறும் பூமியிலே மாண்ட அடிகளே! மானிடக் கருணையே! நீண்டதொரு சரித்திரத்தின் நிதர்சனச் சான்றென்று நீசர்கள் வைத்தகுறி நேசரும்மைப் பறித்ததுவோ?
-
- 4 replies
- 1.5k views
-
-
வன்னியில் இருந்து ஒரு மடல் அன்புள்ள அப்பாவுக்கு உங்கள் பாசத்துக்குரிய பத்து வயது மகளின் கண்ணீர் கடிதம் இது… கனடாவில் இப்ப என்ன நேரமெண்டு எனக்குதெரியாதப்பா ஆனால் எங்களுக்கு இப்ப கெட்ட நேரந்தானப்பா… இடிமுழக்கம் கேட்டதுண்டு இப்படி வெடிமுழக்கம் கேட்டதில்லையப்பா… குண்டுச் சத்தம் காதைப் பிழக்கிறது அப்பா… சமாதான காலத்தில் உங்கள் பசுமையான நினைவுகளைத் தந்தீர்கள் அப்பா இனி நீங்கள் வரும்போது நாங்கள்… எங்கே… எப்படி..இருப்போமா... அல்லது… நெஞ்சு கனக்கிறது அப்பா… பள்ளிக்கூடமெல்லாம் சனத்திரளால் நிரம்பி வழிகிறது. காலைக்கடன் கழிக்கக்கூட இடமில்லையப்பா… நடந்து நடந்து என் பிஞ்சுக்கால்கள் ம…
-
- 4 replies
- 1.4k views
-
-
இல்லாதவனுக்கு வயிறு நிறைந்தவனுக்கு மூளை கனத்தவனுக்கு ஆன்மா தேடும் இடம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தனிமையும் ஒரு பறவையும் தூக்கம் தொலைந்த ஓர் அகாலம் அடர்ந்து படர்ந்திருந்தது இரவின் கரிய கூந்தல் தனிமைக் குகையின் நினைவுப் பாதையில் படுத்துக் கிடக்கிறேன் விழித்தவாறு மென்மையான நிசப்தத்தைப் பிளந்து கொண்டு வன்மையாக ஒலிக்கிறது ஒரு பறவையின் கதறல் எப்போதும் கேட்டிராத பெயர் தெரியாத ஒரு பறவையின் குரல் அது தன் தனிமை தவிர்க்க விட்டு விட்டு விடாது கத்துகிறது கரைந்து புதைந்த அந்தப் பறவையின் குரல் ஆழ்ந்த மௌனத்திலிருந்து எழுந்து ஒலிக்கிறது அதன் வலியோடு பின்னாளில் என் தூக்கம் தொலைந்த அகாலங்களில் எல்லாம் நட்சத்திர ஒளி இந்த ஒளி ந…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஒரு துளி இறுக்கியணைத்த விறைப்பு இறங்க ஓடத்தொடங்கிய ஒரு இலட்சம் வீரியங்கள் விழ விழ எழ முடியாமல் ஒன்று மட்டும் திரும்பி பார்த்து வீழ்வேன் என நினைத்தாயோ? உட்புகுந்தது :lol: :lol: வேறையார் நான்தான். சும்மா ஏதோ தோன்றியது கனக்க யோசிக்க வேண்டாம்
-
- 4 replies
- 675 views
-
-
எம் மக்களுக்காய் ஓர் முயற்சி... கவிதை..... பலகாலம் தொடரும் தமிழரின் பேரவலம் இருந்தும் சிலவாரம் அதற்கெல்லாம் ஓர் சிகரம்..... கவிதை வடிக்கவென்று கணனிமுன் உட்கார்ந்தால்..... காணும் காட்சியெல்லாம் எங்கள் உறவுகளின் இரத்த வெள்ளம்.... ஐயோ..மனது பொறுக்கல்லையே மனமும் அதைப் பார்க்க மறுக்கிறதே இதை உலகுக்கு அறியவைக்க என் அறிவுக்கு யோசித்தேன்..... பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தும் சொல்லுகிறேன்.... ஏற்கனவே தெரிந்திருந்தால் என்னை மன்னித்திடுங்கள் தெரியாமல் இருந்திருந்தால் என் அறிவுரையை ஏற்றிடுங்கள்... நீங்கள் பார்க்கும் கொடூரக் காட்சிகலில் 'மவுசை' ரயிற் கிளிக் பண்ணிடுங்கள் அங்கே…
-
- 4 replies
- 887 views
-
-
பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ் அடிமையாய் கிடப்பதா? சொல்லாண்டு தமிழினம் அடிபட்டு சாவதா? பொல்லாக்குணம் கொண்ட கொடியர்கள் எம் மண் ஆழ்வதா? மெல்ல தமிழ் இனம் இனி சாகுமா? வெல்லா போர்களம் எங்கும் தமிழனுக்கு உண்டா? எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம் எள்ளாய் நினைத்தவன் எலும்பை நொருக்குவோம் கொல்லா குணம் இன்னும் தேவையோ? எல்லாம் அழிந்த பின் நீ அழுவது நியாயமோ? செல்லாப் போர்களம் தோல்வியை நோக்கி ஷெல்லால் அடித்தாதல் உன் ஊர் நாசம்..! கல்லாய் நீயும் இருப்பதோ..! கடவுளையும் துணைக்கழைப்பதோ..! மெல்லத் திறந்திடு உந்தன் சிந்தனையை பொல்லாப்பகை விரட்ட -புலி படையுடன் இணைந்திடு நல்லார் உலகை படைக்க நாமும் இணைவோம் சொல்லார் எம் மீத…
-
- 4 replies
- 1.1k views
-
-
வருவாளா… அழகிய றோசா மலர் ஆடி ஆடி வந்ததுபோல் மெல்லென அருகில் வந்தாள் - என் மேனியெங்கும் சிலிர்த்ததுவே. கண்களால் தூண்டில் போட்டாள் கௌவ்வினேன் மீனாய் நானும். கையினால் பிடிப்பாளென களிப்புடனே முன்னே போனேன். அருகிலே இழுத்து என்னை அணைப்பாள்தானே என்ற ஆசையில் மனமும் பொங்க அமைதியாhய் நின்றேன் அங்கே கண்ணினால் சாடை செய்த கனிமுகத்தைப் பாhத்து நிற்க மண்ணிலே தள்ளி விட்டாள் மரம்போல வீழந்தேன் நானும் கொல்லெனச் சிரித்தாள் பார்;த்து கொவ்வையின் இதழ்கள் விரிய சட்டென எழுந்து நின்று தட்டினேன் உடலின் மண்ணை. சோகமாய் பார்த்தாள் என்னை துடித்தன விழிகள் மீனாய்; - அவை ஈரமாய் நனைந்து வடிய என் இதயமும் வாடியதப்போ நிலத்தினை நோக்கி நி…
-
- 4 replies
- 1.7k views
-
-
[size=5]ஹைக்கூக்கள் 2 அப்பல்லோ இல்லை சந்திரனையும் கடந்து காதலர்கள். இணைபிரியா தோழன் ஏழைக்கு பசி சும்மா இருந்தாலும் இருக்க முடிவதில்லை இணையம். கடவுளும் பயந்தான் கொடுப்பதற்கு கடன் நாற்று நடுகையில் நனைந்தது மனசு இடைவிட்டு இறங்கத்துடித்தன காற்சட்டைகள் வாலிபவயசு சிதறின சில்லறைகள் இறந்தவன் பிச்சைக்காரன் வல்வையூரான்.[/size]
-
- 4 replies
- 1.1k views
-
-
விடிவைத் தேடிப் பாதளக் குழிக்குள் முடிவை நாடிச் செல்வது போல் ஏதுமில்லா மாகாண சபை போதுமென்பார் இருக்கையிலே தமிழிங்கு வாழு மோடி - தோழி எம் கலையிங்கு தேறு மோடி சூத்திரத் தமிழன் ஆளக்கூடாது எனச் சாத்திரம் பேசிச் சதி செய்யும் ஆத்திர ஆரியர்கள் இங்கிருக்கையில் தமிழ்தான் வளருமோடி தோழி எம் கலைதான் மிளிருமோடி பெருவிளக்காயிருந்து பெருந்தியாகம் புரிந்து எமக்காக அணைந்த மாவீரர்க்கு ஒரு விளக்கேற்ற ஒற்றுமை இல்லாத போது தமிழை வளர விடுவாரோடி தோழி எம் கலையை ஒளிர விடுவாரோடி வந்தாரை வாழவைப்பது பண்பாடடி வந்தேறிய தெலுங்கனையும் கன்னடத்தியையும் ஆளவைத்து அடிமையாய் இருப்பது இளிச்சவாய்த்தனமடி தோழி கையாலாகக் கூட்டமடி நம்மை நாம் ஆள வேண்டுமடி நம் மொழியோடு க…
-
- 4 replies
- 572 views
-
-
தேடித் பார்க்கின்றேன் இன்னமும் பெரிதாக எதுவும் இங்கு மாறிவிடவில்லை எல்லாம் அப்படியே இருக்கின்றன இயல்பாகவே மண்ணில் இருக்கும் செங்குருதியின் நிறம் தோட்டத்தின் நடுவே இழுத்து போடப்பட்டு உருண்டு போய் பந்தாக காவிளாச்செடிகள் பச்சையாக வெட்டி சூடு மிதிக்கப்பட்ட பனை ஓலைகளும் மூரி மட்டைகளும் வேலிக்கரையில் வளர்ந்து ஆழமாக வேர் விட்ட அறுக்கம்புல் வேலியில் படந்து காய்த்து தொங்கும் பாவல்காய் முன்னர் பாட்டி வைத்த இடத்திலேயே அடுப்பு எரிக்க இப்போதும் பனையின் மட்டைகளும் கொக்காரைகளும் அதே சாணி மெழுகிய நிலம் தாத்தாவின் கயித்து கட்டில் கொடியில் படபடக்கும் தோய்த்த நாலுமுழ வேட்டி துலா கயிற்று கிணறு தாவாரத்தில் தொங்கும் தென்னோல…
-
- 4 replies
- 1.8k views
-
-
திரும்பும் திசையெல்லாம் திருடப் பார்க்கிறார்கள். தமிழனின் தன்மானத்தை.. வறண்ட தீவாய் முல்லை மண் வந்து போகிறது கனவில்.. ஈரப்பதம் இல்லை அதிலெங்கும்.. கண்களில் கூடத்தான் தினமழுது தீர்ந்துவிட்டது என் செய்வேன் யார் யாரோ சொல்கின்றனர், தனி நாடு அமைப்போம் என்றும் தனி ஆட்சி செய்வோம் என்றும் உரிமைகள் தொலைத்து, உயிரையும் தொலைத்து, சலனமற்ற சடலங்களால், செய்யப்போகிறோமா அதை.? கேள்விக்குறியாக இருக்கும் எம்மிடம் கேள்வி கேட்க ஆயிரம் பேர் முற்றுப்புள்ளி வைக்க எவனும் இல்லை முடிந்த கதை முடிந்த கதை என்று எம்மை முடக்க தான் பார்கிறார்கள்.
-
- 4 replies
- 731 views
-
-
கல்லறைகளில் தெய்வங்கள் சபிக்கின்றன எங்கள் ஊர்களில் எம் தெய்வங்கள் கல்லறைகளில் தான் உயிர்ப்புடன் உறைந்திருக்கின்றன எம் தெய்வங்கள் கல்லாகிப் போனதில்லை எம் பிரார்த்தனைக்காக காத்திருந்ததும் இல்லை அவர்களின் நேர்த்திக் கடன்கள் எம்மை நோக்கியே இருந்தன கல்லறைக்கு போகும் முன் தம் கழுத்தில் தொங்கிய கனவை எம் உயிர்களில் மாட்டி விட்டே போயினர் எமக்காக பசித்திருந்தனர் எமக்காக விழித்திருந்தனர் எமக்காக நிலவற்ற இருள் வேளைகளிலும் தன்னந் தனியாக காடுகள் கடந்தனர் எதிரியின் இறுதி தோட்டா முடியும் வரைக்கும் உண்ணாதிருந்தனர் நெஞ்சம் தகிக்கும் கனவுகளை எம் தெய்வங்கள் கண்டன ஊரின் எல்லைவரைக்கும் எதிரியை துரத்துவதாக சன்னதம் க…
-
- 4 replies
- 1k views
-
-
விலையற்ற உயிர் மீது மலிவாய் போகிறது காதல் -சில கழிவுகளின் கருத்துக்களில் கனிவான காதல் மொழி கேட்டு கல்லும் கரைந்திடும் என்பர் கருத்துதென்றும் -தன் பிறப்பின் புகழென்றும் தளம்பும் கருத்துக்கள் தடை தாண்டி பெற்றவரின் விடை தாண்டி பொறுமையின் எல்லை தாணடி வறுமையில் வலி தாண்டி மனம் கொண்ட சலனம் நீக்கி மனதார வாழ வழி செய்யும் காதல் காமத்திற்காய் என்றும் காமமின்றி காதலில்லை என்றும் கருதுகின்ற வாலிபர் கருத்தில் காதல் ஒரு புூசனிக்காய்! வாயிருக்கு என்பதற்கா வந்ததெல்லாம் பேசுவதால் வந்ததென்னவோ!? –வலி கொள்ளும் வழிதன்னில் வார்த்தைகளை விதைப்பதென்னவோ!? வழியுண்டு சொல்ல மொழியுண்டு ஆனாலும்… பதிலொண்டு நாம் சொன்னால் பாரின் எனக்கும் உனக்கும் வேறுப…
-
- 4 replies
- 1.2k views
-
-
தொட்டுத்தொட்டு நான் வளர்த்தேன் நெஞ்சுக்குள்ள விதை விதைச்சே விருட்சம் வளர்த்தேன் காடு கழனி எல்லாம் நான் அலைஞ்சே கண்டுபிடிச்சே உன்னைப் போல் அதையும் நெஞ்சுக்க வைச்சேன்..! தொட்டும் தொடாமலும் நீயும் வந்தே பச்சைப் பைங்கிளியா சுற்றியே வந்தே... உள்ளம் முழுக்க உல்லாசமா நான் உன் சோலையில..! அங்க என்ன வேலை செஞ்சே.. நெஞ்சுக்க நோ எடுக்க பிடிங்கி எறிஞ்சே நான் வைச்சத..! வெட்டிய காடும் வரண்ட கழனியும் சுற்றி வந்த பைங்கிளி சிறகொடியவும் கண்டேன்..! தோழியாய் வந்தே தூதனாய் என் உயிர் பிடிங்கினே.. நீ யாரென்று பார்க்கையில... நான் தேடியே நட்ட மரக்கன்ற பிடிக்கி எறிஞ்ச என்னவள் கை... அறிஞ்ச போதே பதறிப்போனே செல்லமாடி நீ எனக்கு..! …
-
- 4 replies
- 1.3k views
-
-
காதல் ஒரு கல்வெட்டு கல்லு அங்கேயே கிடக்கும் காதலர் போய்விடுவர் காதல் ஒரு நீரோட்டம் காதல் போய்விடும் காதலர் அங்கெயே இருப்பர் காதல் ஒரு நெருப்பு வெப்பம் அகன்ற பின் சாம்பலே மிஞ்சும். காதல் ஒரு வெளிச்சம் குருடருக்கு காதல்தான் உயிர்காற்று பிணங்களுக்கு காதல் ஒரு நிலம் கடலில் தொலைந்து போனவனுக்கு எனக்கும் என் காதலிக்கும் மட்டும் காதல் 50Kr ரோஜா எரிச்சலுடன் வாசகன்
-
- 4 replies
- 1.5k views
-
-
வாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த... காட்டுமரம் நான்.. எல்லா மரங்களும் எதாவது... ஒரு கனி கொடுக்க எதுக்கும் உதவாத... முள்மரம் நான்... தாயும் நல்லவள்... தகப்பனும் நல்லவன்... தறிகெட்டு போனதென்னவோ நான்... படிப்பு வரவில்லை... படித்தாலும் ஏறவில்லை... இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பை பார்க்க... இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன்... பிஞ்சிலே பழுத்ததென்று... பெற்றவரிடம் துப்பிப்போக ... எல்லாம் தலையெழுத்தென்று எட்டி மிதிப்பான்... பத்துவயதில் திருட்டு... பனிரெண்டில் பீடி... பதிமூன்றில் சாராயம்... பதினாலில் பலான படம்... பதினைந்தில் ஒண்டிவீட்டுக்காரி ... பதினெட்டில் அடிதடி... இருபதுக்குள் எத்தனையோ... பெண்களிடம் விளையாட…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
தரவிறக்கம் செய்யக்கூடிய வகையில் தமிழுக்கும் அமுதென்று பெயர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலை யாராவது நல்ல உள்ளங்கள் தரமுடியுமா? உதவி செய்தால் நன்றாக இருக்கும் அன்புடன் பாட்டை தேடிக்களைத்து போன உள்ளம்.
-
- 4 replies
- 1.5k views
-
-
ஈழமண்ணே! என்தாயே!! வேற்றுவர் வந்துன்னில் வெந்தணலைக் கொட்டி வேதனை செய்வதெல்லாம்........ விளங்காத பொருளாக வேடிக்கை பார்ப்பதிலும்.... விடமுண்டு மாள்வதே என் விதிக்கு நன்று.
-
- 4 replies
- 1.5k views
-