கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
சென்று வாருங்கள்! உமக்காய் எம்மிடம் எதுவும் இரந்ததில்லை........ வாசல் வந்து ஒளிதர.......... வைகறை கலைக்கும் சூரியன் ........ வரி கேட்குமா என்ன? காலம் ஒன்று எமக்காய் விழி திறக்க........... கந்தக அதிர்வில் .......... விழி மூடியவர்களே.... ஊரினைதான் பிரிந்து வந்தோம்... உணர்வினை தொலைத்து அல்ல.......... அலை ஓய்ந்ததென்று கனவாம் பலருக்கு....... அலை ஓய்வதுண்டா...? கடல் இருக்கும்வரை அலை காணாமல் போகுமா? கரிகாலன் படை - இருக்கும்வரை.. கூலிகள் கருத்து தமிழனை ஆளுமா? சாய்ந்துபோன விருட்சங்களே. உம் வேர்களை சுமந்தவர் வாழ . என்றுமே நீர் தருவோம். நிம்மதியாய் - உறங்கும்!! (மூதூரில் - எமக்காய் கனவுகாண- விழிமூடியவர்களிற்கு)
-
- 12 replies
- 2k views
-
-
என் வாழ்க்கைப் பயணங்களில் சுமந்த பொதியாய், என் வலிகளும் கூடவே வந்தன! எனக்கிந்த சாபம் எதுவரையென... எனக்குத் தெரியவில்லை இதுவரை! நம்பிக்கைகளை சாகடித்தபடியே... துரோகங்கள் என் பாதையை மாற்றியமைக்கிறது! வலிகளும், மாறும் வழிகளும் எதுவானாலும்... என் பாதம் நேர்வழி மட்டுமே தொடரும்! இன்னும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் நானிருப்பேன், தன்னம்பிக்கை எனக்கிருக்கு! சிறகெரிந்த வாசத்தில் மூச்சுத்திணறிய பீனிக்ஸ் பறவை, விழ விழ எழுவதுபோல்... நானும் எழுவேன்! வரைகின்ற வட்டம் போல... சுற்றிவரும் புள்ளிகளில், இரு முகங்கள் சந்தித்துக்கொள்ளும்! பயணங்களின் காரணங்கள் ஒரு வட்டத்துக்குள், முழுநிலவாய் சிரிக்கும்போது... நேற்று வந்த முழுநிலவுதான் என் ஞாபகத்தில் வரும…
-
- 27 replies
- 3.6k views
-
-
தில்லைநடராஜன் வாசற் திருப்படியில் தொல்லையம்பலங்கள் ஆடுகிறார் திருக்கூத்து எல்லைகடந்துவிட்ட பித்து நிலைபோலும் கல்லைக் கடவுளென்று தம் தேகத்தையாட்டுகிறார். பாலைக்குடித்த பிள்ளை யாரென்று மாலையெதிர்பார்த்து மேடையிலே நின்றமகன் சால்வை போனவிடம் தானுமறியாமல் சதுர்கூத்து ஆடிவிட்டான்; சிவனடியானாகிவிட்டான். கனியாக் காதலுக்கு அடிக்கின்ற புகையிதுவோ? கடவுள் வரமருளி ஆடுகின்ற கூத்திதுவோ? செப்படி வித்தைக்கு சிவனில்லம் சத்திரமோ ? மூளைப்பிசகுக்கு கலையாட்டம் மருத்துவமோ? - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 1.2k views
-
-
திசை தெரியாத் தேசமொன்றில் அடைபட்ட அந்நியர் போல் அடிமைச் சாசனம் எழுதியபின் எஜமானர்களின் கல்லா நிரப்பி மீளும் பெரும் பணிச் சுமையுடன் போயிருந்த அவர்கள் - இன்று எம்முடன் இல்லை தெருநாய்கள் இயங்கும் தெருவில் துப்பாக்கி குண்டுகளால் தொளையிடப்பட்டு தூக்கி வீசப்பட்டனர் இன்னமும் மனித முகங்கள் கண்டறியப் படாத அயல் மண்ணில் கருப்பு இரவுகளின் தனிமை தணிவதற்குள் எங்கள் ஏழைத் தொழிலாளர்களின் ஜீவநாடி அடங்கிப் போனது வன்மம் கொட்டித் தீர்க்கப்பட்ட பின்னர் கண்ணீர்த் துளிகளை மட்டுமே எமக்குப் பரிசாக அளித்தன பிசாசுகள் நாளை பற்றிய கனவுகளைச் சுமந்து சென்ற ஏதிலிகள் மேல் தங்கள் குரோதத்தைக் கொட்டி மரணத்தை மட…
-
- 7 replies
- 909 views
-
-
“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய கருணாநிதி ஸ்ரீமச்சாசனம் ஊர்வச சிரோபபிஷசேகரி…” இச்செப்பேடு செப்புவது யாதெனில், “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!” என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு விடாது கடிதமெழுதியதோடு, அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட மணித்துளியில் அன்ன ஆகாரம் உண்ண மறுத்து, ஈழத்தமிழர் செத்த பின்பு போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன் கருணாநிதிச் சோழனின் மற்ற கைங்கர்யங்களாவன: சோழநாடு சோறுடைத்ததைப் பின்னுக்குத் தள்ளி ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்! பகை முடித்தார்! வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு, மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி, மகப்பேறு உதவித்தொகை… …
-
- 2 replies
- 1.4k views
-
-
கார் கூந்தல் "டை"களின் இரசாயனத்தில் விளைவு காட்டி செம்மை அடிக்க.. காற்றில் பறக்கும் ஒற்றை முடியும் ஸ்ரெயிட்னர் சூட்டில் நிமிர்ந்து கம்பியாகிக் குத்த நிற்க.. கயல்கள் கண்ட விழிகள் பென்சில் மைகளின் படையெடுப்பால் கரிக்கட்டைகளாகி பயங்காட்டி நிற்க.. அப்பிள் கன்னங்கள் அள்ளிப் பூசும் வர்ணப் பவுடர்களின் சூறாவளியில் சிக்கி சிதைந்து சிவந்து நிற்க.. கொவ்வை இதழில் சுரந்த அமிர்தமும் லிப்ஸ்டிக் கலந்து அமிலமாகி அரித்து வடிய.. சந்திர நகங்கள் மின்னல் இழந்து ஸ்ரிக்கர் ஒட்டி குட்டை கண்ட உடலாய் அலங்கோலம் காட்ட.. வெள்ளிக் கொலுசு சிணுங்கிய இடத்தில் சிறைச்சாலை "ரக்"காய் ஏதோ இரத்தம் கண்டக் கட்டி இருக்க.. பிறை நுதல் தன்னில் முட்டி விழும்…
-
- 19 replies
- 1.4k views
-
-
செயற்படுவோம்! -------------------------- கதைத்தோம் ஓடினோம் ஏறினோம் போனோம் கூடினோம் குரல்கொடுத்தோம் கலைந்தோம் ஆனாலும் ஓயோம் தமிழீக் கொடியதனை ஐநாவில் ஏற்றும்வரை ஓயோம்! ஓயோம்! என்றே நாம் உறுதிகொண்டே செயற்படுவோம்!
-
- 3 replies
- 744 views
-
-
சகோதரனே ! இன்று உன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் ஒன்றாய் வளர்ந்தோம் ஓரணியில் விளையாடினோம் கால அழைப்பை ஏற்று இன விடுதலைக்காய் உழைத்தோம் உனக்கும் எனக்கும் ஏழு வயது இடைவெளி -ஆனால் ஒரே நாளில் பிறந்தோம் எங்கு நின்றாலும் நம் பிறந்த நாளில் உன்னை நினைப்பேன் நீயும் அப்படித்தான் ஒரு குழந்தையின் மனநிலை கருதி நீண்ட நாள் காத்திருந்த இலக்கு கையிற்கு எட்டியபோதும் கைவிட்டு வந்தவன் நீ மீண்டும் சென்று வென்றுவந்த செயலில் வாழ்ந்த வீரன் நீ உனது தாக்குதல்கள் எங்கும் பேசப்பட நீயோ ஏதும் அறியாதவனாய் நகர்வாய் வீரனே உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் உன் வீடு வந்து திரும்பும் போது நீதான் என்னை சைக்கிளில் ஏற்…
-
- 14 replies
- 1.5k views
-
-
-
செருக்களத்துப் புலியொடுக்க தரணியெங்கும் முறுக்கெடுத்து தருக்குடனே தடைபோட்ட தனவான் தேசங்களே! கல்லுறங்கும் மாவீரர் எங்கள் உள்ளிருக்கும்வரை வில்கொண்ட கணைகளுக்கு வீதித்தடை என் செய்யும்?
-
- 6 replies
- 1.9k views
-
-
செருப்புகளும் மதங்களும் விற்பனை சந்தையில் நிறைய குவிந்து கிடக்கின்றன செருப்புகள் போல் மதங்களும் தங்களுக்குள் விவாதித்து விவாதித்து தாங்களாகவே அடித்துக் கொள்வதிலும் சளைத்தவையில்லை ஒன்றையொன்று அளவுகளிலும் அழகுகளிலும் தான் வெவ்வேறாக இருக்கின்றன சில அறுந்தும் சில தேய்ந்தும் செருப்புகளை போலவே பல வேளைகளில் செருப்புகள் உயர்வானவைதான் மனிதயினத்தை காவுகள் கேட்கும் மதங்களைவிடவும் kavimathi.com
-
- 1 reply
- 836 views
-
-
"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு... 30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு... இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க.. கமல் படம். மன்மதன் அம்பு. மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு வந்து விட்@டா@மா என்கிற அளவிற்கு ஒரே கமலஹாஸன் களும்! கமல ஹாஸிகளும்! அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில் பதுங்கிக் கொண்டு நூல்தனம் காட்டும் அவரை பரமக்குடி பையன் என்றும் பெரியாரின் பிள்ளை என்றும் பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள் இந்த அம்பு... இராம பக்தர்களின் கைகளிலிருந்து …
-
- 34 replies
- 5.4k views
-
-
-
- 13 replies
- 2.1k views
-
-
தொட்டுத்தொட்டு நான் வளர்த்தேன் நெஞ்சுக்குள்ள விதை விதைச்சே விருட்சம் வளர்த்தேன் காடு கழனி எல்லாம் நான் அலைஞ்சே கண்டுபிடிச்சே உன்னைப் போல் அதையும் நெஞ்சுக்க வைச்சேன்..! தொட்டும் தொடாமலும் நீயும் வந்தே பச்சைப் பைங்கிளியா சுற்றியே வந்தே... உள்ளம் முழுக்க உல்லாசமா நான் உன் சோலையில..! அங்க என்ன வேலை செஞ்சே.. நெஞ்சுக்க நோ எடுக்க பிடிங்கி எறிஞ்சே நான் வைச்சத..! வெட்டிய காடும் வரண்ட கழனியும் சுற்றி வந்த பைங்கிளி சிறகொடியவும் கண்டேன்..! தோழியாய் வந்தே தூதனாய் என் உயிர் பிடிங்கினே.. நீ யாரென்று பார்க்கையில... நான் தேடியே நட்ட மரக்கன்ற பிடிக்கி எறிஞ்ச என்னவள் கை... அறிஞ்ச போதே பதறிப்போனே செல்லமாடி நீ எனக்கு..! …
-
- 4 replies
- 1.3k views
-
-
செல்லாதா எங்கள் பா...?? துடுப்பை பறித்து- நீ தூர எறிந்தால் கரைக்கு போகாதா எம் கவிதை படகு...?? இடுப்பை உடைத்து- எம்மை இருத்தி வைத்தால் நடந்து போகாதா- எங்கள் நறுக்கு வரிகள்...?? குப்பி விளக்கதில்- நாம் குத்தும் வரிகள் எட்டி பார்க்காதா எங்கள் தேசம்...? எழுது முனையை- பறித்து சிறையில் இட்டால் பறந்து போகாதா- எங்கள் பா வரிகள்...?? -வன்னி மைந்தன்-
-
- 8 replies
- 1.7k views
-
-
திரு செல்வா கனகநாயகம் ஆங்கில விரிவுரையாலார் ரொரன்ரோ பல்கலைக் கழகம் தமிழ் இலக்கிய வரலாரூ எழுதிய பேராசிரியர் வி செல்வநாயகம் அவர்கலாது மகனாவார், ஈழத்து தமிழ் கவிதை சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்களூள் முக்கியமானவர். 1970பதுகளின் பிற்பகுதியில் நான் யாழ் பல்கலைக் கழக மாணாவன்/மணவர் தலைவனாக இருந்தபோது அவருடைய நட்ப்புக் கிட்டியது. செல்வாவின் மனைவி திரு எங்கள் ஆங்கில விரிவுரையாளாராக இருந்தார். மொழிபெயர்ப்புகளூக்கூடாக என்னையும் சேரனையும் புதுவை இரத்தினதுரையையும் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்த பெருந்தகை. மேலதிக தகவலுக்கு http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE…
-
- 11 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 521 views
-
-
கடலை விட்டுப்போன மீன் குஞ்சுகள் கரையில் நின்று நீந்திக் கொண்டிருந்த மீன் குஞ்சுகள் சந்தோசத்தில் துள்ளி விழுந்து தரைக்கு வந்தன கடற்கரை மணலில் புரண்டு ஆசையை அள்ளிப் பூசின குழந்தைகளோடு பட்டம் விட்டு விளையாடி நாளை வருவதாகக் கூறி நடந்து சென்றன வெய்யிலில் நெடுஞ்சாலையில் நின்று வியர்த்து ஐஸ் குச்சியொன்றை வாங்கிச் சூப்பி கடல் நீரெல்லாம் உப்பென சொல்லித் துப்பின கோபுரக் கலசத்தின் விளிம்பு வரை ஏறி வியந்து, விசில் அடித்து மகிழ்ந்தன இலைகளின் மறைவில் அழகியை வீழ்த்தி இதழைக் கவ்விச் சப்பிய மனிதனையே பார்த்து வாய்பிளந்து முனகின கடலுக்கு அன்று திரும்ப மனமே இல்லை இருளில் பழுத்த இலைகளில் ஏறி கொட்டக் கொட்ட விழித்தே இர…
-
- 14 replies
- 3k views
-
-
நெஞ்சம் எங்கும்நினைவாலே நிலைத்தவள்நித்தம் என் நினைப்பினில்நீர்க்கமற நிறைந்தவள்உடல் முழுதும் தழுவிஉவகை தருபவள்உதடுகளின் இடை புகுந்துஉல்லாசமாய் நுழைந்தவள்நாசி வழி புகுந்துநாபிக் கமலத்தை நிறைப்பவள்துள்ளி ஓடும் குருதியிலும்தீர்க்கமாய் நிறைந்தவள்அள்ளி ஆசையோடு முத்தமிடும்அழகுச் செவ்வண்ண மேனியாள்நிகரில்லா அவள் வனப்பின்நினைவுகளைச் சுமக்கிறேன்நித்தமும் அவள் மடி துயிலவேதகிக்கிறேன் தவிக்கிறேன்நாடிச் சென்று அவள் மேனி தழுவநாதியற்று நிற்கிறேன்...#ஈழத்துப்பித்தன்06.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post.html
-
- 0 replies
- 1.7k views
-
-
சேய்களைக் காத்த தாய். வீரமங்கை செங்கொடி |சீமான் | தமிழ் தேசியம்
-
- 0 replies
- 599 views
-
-
சேரனின் காடாற்று கவிதை தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக கனத்த அட்டையுடன் அழகான புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதிலிருந்து இரு கவிதைகள் . நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு தற்கொலை. காவற்பரணில் ஒரு கண்ணிழந்த போராளி.
-
- 8 replies
- 1.2k views
-
-
ஒளிமிளிர்ந்து நடனமாடிய உன்கண்களை முதல் முதலில் சந்தித்தபோது என் இதயத்தில் வாள் உருவியது போல் ஒரு வலி உணர்ந்தேன்... பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...! தொந்தரவு செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்ட இந்த உலகில் யாருக்கும் எந்த இடஞ்சலுமில்லாது தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில் சேர்ந்தே பறக்கலாம் வா...
-
- 64 replies
- 3.6k views
-
-
-
சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்! சூடான பாலை-வனத்திலே .... நீராடினோம்!! என் அங்கத்தில் ஒரு கை மட்டுந்தான் அங்கிருந்தது! மற்றையவை எல்லாம் மற்றவை நாடி... தேடத் துணிந்தது!! தடுத்தவள் கைகளில் உணர்ந்த நாற்குணமும் - என் முற்றுந்துறந்த "போர்க்குணத்தில்" அடங்கிப் போனதோ என்னவோ??? பெண்மையை புதிதாய்..... பார்த்த துடிப்பு! பருவங்களுக்கே.... உரிய வெடிப்பு!!! இதுவரை விஞ்ஞானம் கண்டுபிடிக்காத வேகத்தில், நம் பயணம் தொடர்ந்தபோதும்..., சொர்க்கம் அருகில் வந்து நின்றபோதும்..., பயண நேரங்கள் நீடிக்க வேண்டுமென பேராசைப்பட்டது ஆசை!! மூடியும் மூடாத விழிகள்... தேடிடும் வழிகள்... அந்நியம் பார்க்காமல் எழுப்பிய ஒலிகள் - அத்தோடு பாதி தெரிந்த உருவங்கள்... தெறி…
-
- 41 replies
- 3.3k views
-
-
கண்ணெதிரே வந்து நின்று களிப்பூட்டும் காதலியைக் காணவில்லை வெறிச்சோடிக் கிடக்கும் ஊரின் நிலை மாறவில்லை தேரில் வரும் சாமியைக் கும்பிட வழியில்லை ஆமி செய்யும் அட்டகாசம் ஓயவில்லை சமாதானம் சமாதானம் என்று வீண் கோஷம் போடுவதில் அர்த்தமில்லை எல்லோரும் சமமென்று நினைக்கும் வரை நிம்மதியொன்றில்லை விண்மதியின் ஒளியினில் குளிர்ச்சியில்லை தன் மதி தான் தனக்குதவி என்று உணரும் வரை வளர்ச்சியில்லை விலைவாசி குறையவில்லை மலைவாசி சிறப்புடன் வாழவில்லை எந்தவாசியும் எமக்கில்லை - சிவன் ஆசி மட்டும் இருந்தால் தொல்லையினி இல்லை மனிதனை மனிதன் புரிந்து கொண்டால் ஓர் சண்டையில்லை எல்லை கேட்டு போரிடவும் தேவையில்லை சாதிகள் ஆதியில் இருந்து வந்தவையில…
-
- 3 replies
- 1k views
-