கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
[size=5][/size] [size=5]குழந்தை[/size] புட்டிப் பாலை எட்டிப் பறித்துக் குடித்தது குட்டி பலூனை தட்டித் தட்டிச் சிரித்தது தொட்டில் மீது பெட்சீட் நனைத்தது தூங்கும்போது "நரி வெருட்டி" சிரித்தது இரவிரவா கத்தியழுது அப்பா அம்மாவின் நித்திரையைக் குழப்பியது தவழ்ந்து தவழ்ந்து பின் தள்ளாடி நிமிர்ந்து பெற்றோர் கைபிடித்து நடை பழகியது என , இவையெல்லாம் இப்பொழுது ஞாபகம் இல்லையெனினும் வேறோரு குழந்தை செய்வதைப் பார்த்து நாமும் அப்போது இப்பிடித்தானோ!? என உள்ளுக்குள்ளே சிரிப்பது வழமை! நன்றி : கவிதையின் கவிதைகள் .
-
- 4 replies
- 640 views
-
-
நான் அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேன்! கோயிலுக்குப் போனேன்! அங்கே அவர்கள் இல்லை! தேவன் திருச்சபையிலும் அவர்கள் இல்லை! மசூதிக்குள் சென்றும் எட்டிப்பார்த்தேன்! அங்கும் அவர்கள் இல்லை! இல்லவே இல்லை! கனத்த மனத்துடன் திரும்பிக்கொண்டிருந்தேன்! அந்தோ! அவர்கள்!! ஆம்! அது அவர்களேதான்!! அது அவர்களின் சத்தமேதான்!!! அவர்கள் வெளியிலேதான் நின்றார்கள் - இல்லை அன்போடு விளையாடிக்கொண்டிருந்தார்கள்!! குழந்தைகள்!!! வாலி 14 ஏப்பிரல் 2014 11:30 AM
-
- 4 replies
- 849 views
-
-
30.11.16 ஆனந்த விகடன் இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! மாநகரத்தின் அகதிகள் தேசத்தின் வல்லசுரக் கனவினால் தம் வாழிடங்களை விட்டுத் துரத்தப்பட்ட ஒரு மாநகரத்தின் அகதிகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனித்த பகுதிகளில் வசிக்கிறார்கள் வாக்குரிமையும் ரேஷன் அட்டையும்கூட சொந்த நிலத்தில் மட்டுமே அவர்களுக்குண்டு. அங்குள்ள வங்கிக் கணக்கையும் அவர்கள் இங்கிருந்தே பராமரிக்கிறார்கள். கால்வயிறு அரைவயிற்றுக் கஞ்சியோடு அங்கே சில கால்நடைகளும் மனிதர்களும் அதில் …
-
- 4 replies
- 1.9k views
-
-
கொடுமை வெடிக்கிறதே வெடிக்கிறதே கண்ட இடமெல்லாம் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கின்றதே மாறிக்கொண்டிருக்கிறதே மாறிக்கொண்டிருக்கிறதே தமிழ் ஈழம் இரத்த பூமியாக மாறிக்கொண்டிருக்கிறதே தொலைகிறதே தொலைகிறதே தமிழர்கள் காணாமல் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறார்களே வதைகிறார்களே வதைப்படுகிறார்களே உன் இனத்தால் நம் அப்பாவித் தமிழர்கள் சித்திரைவதைப் பட்டுக்கொண்டிருக்கிறார்களே சிந்தித்துப்பாரேன் சிந்தித்துப்பாரேன் நீ அரசமரத்திற்கு கொடுக்கும் மரியாதையைக்கூட நம் இன உயிர்களுக்கு கொடுக்கத் தவறிவிட்டாயே என்று கொஞ்சம் சிந்தித்துப்பாரேன் வேண்டாமே வேண்டாமே இந்த மனித வேட்டை இனியும் வேண்டாமே
-
- 4 replies
- 1.2k views
-
-
ஓற்றை தீயே ஒற்றை தீயே ஓசையில்லாமல் விழுந்ததேனோ ! பற்றை மனதை வெட்டையாக்கியதேனோ ! கற்றை கற்றையாய் களித்திருந்தேன் காற்றில் கரைத்தெறிந்ததேனோ ! சிப்பியென எனையெண்ணி முத்தொன்றை சேர்க்க முனைந்தேன் முடிவறியுமுன்னே முழுதாய் பறித்தெறிந்தாய் ஓற்றை வெண்ணிலா ஓய்யார உறக்கத்தில் பற்றேதுமின்றி பாவியாய் இருந்ததே ! இமைக்கும் நொடியினுள் இருளாக்கி மறைந்தாய் எனக்குள்ளே என்னை உருக்கி ஏழ்மைக்காதலை வளர்த்து வைத்தேன் காற்றினில் கரைத்து காதலை பறித்தெறிந்தாய் ஓற்றை தீயே ஒற்றை தீயே ஓசையில்லாமல் விழுந்ததேனோ ! பற்றை மனதை வெட்டையாக்கியதேனோ ! கற்றை கற்றையாய் களித்திருந்தேன் காற்றில் கரைத்தெறிந்ததேனோ ! மூன்றெழுத்தே என் மூச்சென்று முடிவாய் வாழ்ந்திருந்தேன் …
-
- 4 replies
- 1.1k views
-
-
எம் தேசம் மீட்டெடுத்தே... ------------------------- உலகின் கண் திறக்க உயிரை விதையாக்கி பெரும் சபதம் எடுத்தவரே மரணம் வருகையிலும் தமிழர் வாழ்கவென உரைத்தவரே உம் பாதம் தொழக்கூட அருகதையற்றோனாய் அன்னியத் தெருக்களில் அலையும் நிலையினிலும் உங்களை மறவோமே! தலைவன் வாழுமிடம் தமது இருப்பிடமாம் என்று அணியம் செய்தவரே பெரும் மனிதப் புதிர்கள் ஐயா மானம் மண் மீட்பில் என வாழ்ந்த தமிழ் மானிடரே உங்கள் பாதம் தொழுகின்றோம்! எமக்கும் சேர்த்தே நீவிர் ஒரு தேசம் படைக்கவென உயிர் தானம் செய்தீரே உமைச் சுமக்க முடியவில்லை! உம் நினைவைச் சுமந்தபடி எம் தேசம் மீட்பதென உறுதி எடுக்கின்றோம்! வலியின் துயர் சுமந்து உம் நினைவின் கருச்சுமந்து எம் தேசம் மீட்ட…
-
- 4 replies
- 978 views
-
-
காமினியின் குழந்தைகளே.....! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே... பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்.... உயிரைக் கொல்லாது என்று உத்தரவாதம் சொல்கிறேன்.. ஒரு கால நீட்சியில்-எங்கள் ஒட்சிசனே இதுதானே.... சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்? நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை? தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை? எண்ணி ஏழு ஆண்டுகள்.... என்னதான் நடந்து கண்டோம்.......! முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...? கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான் இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான்…
-
- 4 replies
- 1.1k views
-
-
தேடித்தான் உன்னை கண்டு பிடித்தேன் இருந்தும் இன்னும் தேடுகிறேன் உனக்குள் என் காதலை நான் பேசிக்கொண்டே இருக்க உன் கண்களிடம் கற்றுகொள்ள வேண்டும் நான் பேசாமல் இருக்க உன்னிடம் கற்றுகொள்ள வேண்டும் நீ காட்டும் யார் என்றாலும் சண்டை பிடிக்க தயார் உன் கண்களை காட்டத வரை உன்னை சிரிக்கவைத்து பாக்க ஆசைதான் இன்னும் முழுசாய் பாக்க விட்டதில்லை உன் கன்னக்குழி ஐந்து என்று எழுத தெரியாது அஞ்சு என்று எழுதத்தான் தெரியும் எழுத்து பிழைவிடும் கவிஞன் நான் நீ கிடைக்கத்தான் கவிதை எழுதுகிறேன் இருந்தும் காட்டமல் மறைக்கிறேன் கிடைக்காமல் போய்விடுவாயோ என்று உன்னை ஒருதலையாக காதலிப்பது முட்டாள்தனமாக இருந்தாலும் உன்னைக் காதலிக்கிறேன் என்பதே …
-
- 4 replies
- 1.5k views
-
-
அன்னையே சக்தியே!..... மங்காப் பொன்னென மனதினில் நிறைபவள் கண்ணில் தெரிகின்ற காட்சியாய் இருப்பவள் அண்டங்கள் யாவிலும் அன்னை உறைபவள் கொண்டிடும் கோலங்கள் அனைத்திலும் பொலிபவள் என்னென்ன வேண்டுமோ தாயிடம் கேளுங்கள் பிள்ளையின் குறைதனை அன்பினால் தீர்ப்பவள் தீயவை எல்லாம் திரிசூலத்தால் அழிப்பவள் அன்பென்ற ஒன்றுக்காய் அகிலமே அளிப்பவள் குங்குமத் தாயவள் மங்களத் தாயவள் மடி ஏந்தி வேண்டினால் மனக்குறை போக்குவாள் தங்கிடும் வெற்றிக்கு சக்தியை வேண்டுவோம் விரைவினில் ஈழம் மலர்ந்திட வேண்டியே பாடுவோம்!
-
- 4 replies
- 1k views
-
-
கடந்த காலமும் எதிர் காலமும் நடந்தவை பற்றி சிந்திக்காதீர்கள் நடக்கபோறவை பற்றி சிந்தியுங்கள் நடந்தவை எல்லாமே கனவுகள் நடக்கபோறவைகள் தான் நிஜங்கள் நடந்த பாதையில் நிழல்கள் அதிகம் நடக்கபோகும் பாதையிலோ நியங்கள் நடந்து வந்துவிட்டேன் என பெருமிதம் கொள்ளாதீர்கள்...இடர் பட்டாலும் நடக்கபோகும் பாதயில் இடர் வராது பாதுக்காத்துக்கொள்ளுங்கள் நடந்தவை நாடகங்கள் ஆகட்டும் நடக்கபோறவை நிஜங்கள் ஆகட்டும் கடந்த கால நினைவுகளில் எதிர்கால கனவுகளில் இந்த நிகழ் காலத்தை தொலைத்துவிடாதீர்கள்
-
- 4 replies
- 1.3k views
-
-
பள்ளிப்பருவத்திலே சித்திரம் வரைவதில் வாலி அவர்கள் மிகவும் முனைப்பாக இருந்தாராம். அப்போதைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஒவியத்தில் கரை தேர்ந்து இருந்தவர் ஓவியர் “மாலி”. அவரது தீவிரமான ரசிகரான இவருக்கு, பள்ளித் தோழன் பாபு என்பவன் ” வாலி ” என்னும் பெயர் சூட்டி ஓவியத்தில் மாலியைப் போலவே நீயும் ஒரு கலக்கு கலக்குவாய் என்று வாழ்த்தினானாம். அப்போது அவர் பாரதியாரின் ஒவியம் ஒன்றை வரைந்து அதன் கீழ் வாலி என்று கையொப்பமிட்டு அதைத் தனது தமிழ் வாத்தியாரிடம் காட்டினாராம். அதைப் பார்த்துப் பாராட்டிய தமிழ் வாத்தியார் “உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலி என்று பெயர் சூட்டினாய்?” என்று கேட்டாராம். அதைக் கேட்ட சுற்றி நின்ற மாணவர்கள் சிரித்து விட்டார்களாம். அப்போது ஒரு துண்டுக் காகித…
-
- 4 replies
- 1.8k views
-
-
அம்மா கவனம் அம்மா இந்த நாட்கள் எம்முடனேயே முடியட்டும். இனி எவரும் இப்படி வாழவேண்டாம் . இவ்வாறு சாகவேண்டாம். உன்வைற்றில் உள்ள என் இளையவனோ இளையவளோ நான் பட்ட துன்பம் நீபட்ட சிரமத்தை நினைக்கவே கூடாது! இத் துன்பங்களும் அவர்களை நெருங்கவும் கூடாது!! நாம் நெருங்க விடவும் கூடாது! அப்பா இல்லை.இருக்கிறாரோ தெரியவில்லை! இருந்தாலும் இனி மனிதனாக நடமாடக்கூடியதாக அவர்கள் விட்டு வைத்துள்ளார்களா தெரியாது...??? ஆமி பிடிச்ச எதிர் வீட்டு மாமா திரும்பி வந்தபோது அவர் வந்தது எவ்வாறு எனக்கு தெரியும்.! அம்மா நீ கவனம் அதைவிட உன்னுள் உறங்கும் என் இளையவர் மிகக்கவனம். இப்போ சிங்களவன் இலக்கு பிறக்காத குழந்தைகள் தான். அவர்களுக்கு விருப்பம் தமிழ் சிசுவின் கொல…
-
- 4 replies
- 1.1k views
-
-
என் மகளே செங்கொடி....! *செங்கொடி* நீ செழித்து வேரூன்றி விழுதெறிந்து மானிட விடுதலையை வென்றிருக்க வேண்டிய வித்து நீ. ஏனடி பெண்ணே…? எரிந்தாய் நெருப்பில்….? அவசரப்பட்டு விட்டாய் மகளே..…! அண்ணன்களைக் காக்க நீ அணைத்த தீ அவர்களை வாழும்வரை வருத்தப்போகிற வலியல்லவா உனது தீ….! நீ வாழ்ந்திருக்க வேண்டியவள் வரலாறுகள் படைத்திருக்க வேண்டிய பலம் நீ. ஏனடி பெண்ணே….? இந்த அவசரம்….? உன்போல்வீரமும்மானிடப்பெறுமதியும்புரிந்தவர்கள் இவ்வுலகில்அதிகமில்லையடிமகளே…..! மாற்றங்கள் நிகழ உன்போன்ற மங்கையரும் மகனாரும் தேவையடி எங்களுக்கு….! அரசியல் புலிகளும் நரிகளும் உங்கள் உயிரில் தீமூட்டிக் கரியாக்கி வீர உரை நிகழ்த்தி இன்றோடு உன்ன…
-
- 4 replies
- 1.4k views
-
-
செஞ்சோலைக் குயில்கள்..... கவிதை - இளங்கவி..... புலியின் கோட்டையிலே பூத்த சிறுமலர்கள்..... பொசுங்கி விட்ட பின்பும் மனதில் பூத்து நிற்கும் கொடி மலர்கள்.... அவர் செஞ்சோலையில் வளர்ந்த சிரித்து நின்ற இளந்தளிர்கள் செத்து நம் சரித்திரத்தில் இடம்பிடித்த இளம் குயில்கள்.... வாழ்க்கையின் வசந்தத்தை ஏக்கத்துடன் பார்த்திருந்த.... வெண்பனியில் தவண்டுவரும் நம் ஈழத்துப் பென்குயின்கள்.... வணக்கத்துடன் சூரியன் கிழக்குவாசல் வந்துவிட..... செஞ்சோலைப் பூக்கலெல்லாம் சிறிதாக மலர்ந்துவிட.... வளமையான பொழுதென்று வண்ணச் சிட்டுக்கள் நினைத்திருக்க.... வாழ்க்கைக்கு சில மணிதான்; என்று தெரியாத தேவதைகள்...... மகிந்தவின் கட்டளைக்கு எமன்க…
-
- 4 replies
- 848 views
-
-
மாதா பிதா குரு தெய்வம் முன்னிலை இழந்தது ஆணியம் தாய் நாடு தன்னிலை இழந்தது ஆணியம் கருப்பையில்லா உடல் உயிரின் உன்னத இயல்பு இழந்தது ஆணியம் தாயைப் போல சேய் அடையாளம் இழந்தது ஆணியம் மொத்தத்தில்... தங்கு நிலையில் தொங்கி வாழுது ஆணியம். திடம் படு தோள் திமிரிரு ஆண்மை வீர வசனங்கள் குறைசலின்றி.. தோளின் வலு சுமையோ தாங்க முடியாது திணறியே போகுது திறனிழந்த நெம்பாக துணையிழந்த ஆணியம். பூமிதனை மிதிக்காமல் பெண்ணினந்தான் வாழ்ந்திடுமோ? பூப்பாதம் என்ன பூம் பஞ்சால் ஆனதுவோ தசையும் எலும்பும் 45 முதல் 100 கிலோ.... பெண்ணே பெண்ணை மிதிக்கும் கொடுமை காண மறுக்கும் குருட்டு ஆணியம். கங்கை சரஸ்வதி காவேரி வற்றுதல் உயிர்க்கு இழப்பு பூமிக்கு வறட்சி. பெண்ணின் அன்பு பெண்ணி…
-
- 4 replies
- 1k views
-
-
திறக்கப்பட்ட கதவுகளின் வழியே... கடந்துசெல்லும் காலங்களின் ஊடாக திறக்கப்பட்ட கதவுகள் மூடப்பட்டும் மூடப்பட்ட கதவுகள் மறுபடி திறக்கப்பட்டும் சிலவேளைகளில் மட்டும் காற்று வருமென்ற எண்ணங்களோடுதான் காத்திருப்பு தொடர்கிறது எங்களுக்கு...! எங்களின் எதிர்காலம் குறித்த பேச்சுக்களை விட்டால் நிகழ்காலம் குறித்த நாற்காலிகளின் கனவுகள் வெறும்... கனவாகவே போய்விடும் அவர்களுக்கு...! இதனால்தான் அன்போடு பேசலாமென அக்கறையோடு அவர்கள் இடைக்கிடையே வருவார்கள்...! வாருங்கள் ஊரெல்லாம் ஓடித்திரியலாமென அழைத்துப்போவார்கள் சுமக்கமுடியாத சுமைகளைஎல்லாம் நெஞ்சிலே சுமந்துகொண்டு அவர்களின் பின்னாலே ஓடித்திரிவோம் கடைசியாகக்கூட அவர்கள் ஒன்…
-
- 4 replies
- 1.8k views
-
-
கண்ணிலே நீர் இல்லை துடைப்பதற்கு கவிதையிலே பஞ்சம் இல்லை உங்கள் சிற்பத்துக்கு கவிஞனாக உயிர் தந்த உங்கள் அன்புக்கு என்றும் அடிமையாகதான் இருப்பேன் இந்த உறவுக்கு
-
- 4 replies
- 1.3k views
-
-
அங்கோ உண்ண உணவில்லை உடுக்க துணியில்லை குடிக்க நீரில்லை உறங்க வழியில்லை சுகாதார வசதியில்லை மருந்தோ மருந்துக்குமில்லை உயிருக்கோ உத்தரவாதமில்லை உதவிடவோ யாரும் முன்வரவில்லை இங்கோ அமைதியில்லை மனம் நலமாயில்லை உறக்கமில்லை உடல்நலமில்லை உலகநாடுகளிடமோ இரக்கமில்லை ஏரெடுத்துப் எம்மை பார்ப்பாரில்லை தமிழர்கள் இப்போது சுவற்றில் பந்தாக அடிக்கப்படுகிறோம் நாம் திருப்பித் தாக்கும்போது கேள்வி கேட்க இங்கே யாருக்கும் அதிகாரமில்லை எந்த அருகதையுமில்லை
-
- 4 replies
- 1.4k views
-
-
நெருப்பாற்றில் நெகிழ்ந்துருகி நெட்டுயிர்க்கும் கணமதில் கறுப்பாடாய் கலந்துகலக்கிய பொறுப்பானவரே.......................... நிறுத்திய ஒரு பயணத்தால்_ எம் குருதிகுடித்தவன் கோரப்பற்களை மறைத்தீரே ............. காத்திருந்து கருவறுக்கவா தேர்ந்தெடுத்து அனுப்பினோம் , கொன்றொழித்து , எம்மண்தின்றழித்து, நின்றபகை நிறம்பிரிகையில் உரமாய் கரங்கொடுக்க உணர்வெழுந்தால் உன் குருதியும் தகுதியற்றதே ,! அவலகுரல்களின் எதிரொலிகளிலும் , அங்கமிழந்தலையும்_ ஒரு தலைமுறையின் கண்ணீரிலும் , எங்கென்றே தெரியாதுபோன உறவுகளின் உணர்வுகளிலும் , எஞ்சிப்போன எம் எலும்புகளின் வீச்சத்திலும் , இருந்தெழுந்த வாக்கேயிந்த வாழ்வுதந்தது இருப்பிற்காய…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆகாய வல்லூறுகள் மூவர்ணச் சக்கரங்கள் பூசி வந்து அரிசி அள்ளி வீசிய போது அண்ணாந்து கையசைத்து அகம் மகிழ்ந்து கொண்டாடிய வேளையில் ஒரு நொடி தானும் சிந்தித்திலோம் அவை எம் மகாத்மாவிற்கு வாய்க்கரிசி ஆகுமென்று. அசோகச்சக்கரம் ஈழத்தமிழதில் பாசம் வைத்து நேசக்கரம் நீட்டுவதாய் தேடி வந்த போது.. சிங்களத்துக்கு ஆப்படிப்பதாய் மெச்சி மோந்து மோட்டுச் சிங்களம் என்று பேசி பெருமை கொண்ட போது கணமும் நினைத்திலோம் அது எம் மகாத்மாவிற்கு பாடை கட்டும் என்று. டிக்சிற்றுகளும் சிங்குகளும் டாங்கிகள் கொண்டு அமைதிப்படை என்று அன்ரனோவ்களில் புகையடிக்க வந்திறங்கிய போது பெல்கள் கிலுக்கி வந்த மணிக் ஹெலிகளுக்கும் பூமாலை போட்டு வரவேற்ற வேளைகளில் …
-
- 3 replies
- 958 views
-
-
தயா இடைக்காடர் உண்ணாவிரத நிறைவுப் பாடல்
-
- 3 replies
- 1.6k views
-
-
ஒரு கவித படிச்சேங்க . ரெம்பவே ஃபீலிங்கா இருந்திச்சு . உங்ககூட ஷேர் பண்ணிக்கிறேன் . நிலந் தொடாமல் மிதந்தேன் உலர்ந்த மணற் துகளால் உருவானவளாக மெதுமெதுவாக உடல் பாரமிழக்கிறது நான் லேசாகி உதிர்கிறேன் அலைகள் என்னை மோதுகின்றன யார் அவற்றை எனை நோக்கி வரச் செய்தது? திரும்பத் திரும்ப வெண்நுரைகளைத் என் தேகத்தில் பூசின எவர் அவற்றை என்னிடம் துரத்தியது? யார் கரையில் என்னை வீசியது? எவரது கைகளவை? காணாமல் போகிறேன் நீரோடு கலக்கிறேன் கண்கள் உற்றுப் பார்க்க முடியாத ஆழத்தில் உறைந்து கிடக்கிறேன் ஈரமண்ணாக. http://thoomai.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
-
- 3 replies
- 635 views
-
-
இத்தாலி எருமையின் எட்டப்பன் நீதி கவிதை - இளங்கவி தமிழனின் இனத்தையே நம்பவைத்து கழுத்தறுத்த கரு நாய் நீ தீயே...... தமிழினம் உனை மறவா இதுவே உன் தலைவிதியே..... துரோகத்தின் கலைக்கூடம் தமிழன் துன்பத்துக்கு ஓர் உருவம் தமிழனின் சரித்திரத்தில் நீ தவறிவிட்ட ஓர் அகரம்.... கவிதையால் நமை தடவிவிட்டு கத்தியால் கழுத்தறுத்த கடைசித்தமிழனாய் இருந்துவிடு :இல்லையேல் நம் ஆயிரமாம் உயிர்களுடன் உடன் கட்டை ஏறிவிடு..... தவறிய சகோதரத்தை தட்டிவைத்தான் நம் தலைவன் நெளிவான நடைபாதை நிமிர்த்திவைத்தான் நம் தலைவன்; அதை சகோதர யுத்தமென்று எம் தலையை குனியவைத்தாய் கடைசியில் இத்தாலி எருமையின் எட்டப்பனாய் மாறிவிட்டாய்..... தமிழுக்காய் உன் பதவி …
-
- 3 replies
- 1.8k views
-
-
மெளனங்களாய் உங்கள் நினைவேந்திக் கரைகிறது இந்நாள்….. முப்பதாண்டுத் தவம் முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு மூச்சறுந்த நிலையில் எல்லாம் உறைந்து போய்க் கிடக்கிறது…… வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம் வரலாறாய் பதித்துவிட்டு வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில் இந்த மெளனங்களும் ஊகங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது….. உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில் இப்போ நல்ல மழை பெய்கிறது….. நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்….. உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு உயிர் கொடுக்கப் போனவர்கள் தவிர்க்க முடியா நில…
-
- 3 replies
- 923 views
-
-
""""கூட்டமாய் கூடாதீர் தளபதிகளே"..."""" அன்புத் தளபதியே அஞ்சும் மனதொன்று கெஞ்சி கேட்கிறது கூட்டம் இட்டு கூட்டமாய் கூட்டத்தில் நீவீர் ஏன்....??? நீர் மக்களின் தொண்டன் மரணம் உங்களுக்கு தூசு புரிகிறது இருந்தும் மனசு பதைக்கிறது... விருட்சங்களே எங்களின் விசாலங்களே நீவீர் வீழ்ந்தால் எம் விடுதலை என்னாவவது....??? வட்டமிட்டு வானத்தில் வள்ளூறு சுற்றி திரிகிறது... அலரி மாளிகையின் அரக்கன் உயிர் குடித்து ஏப்பம் விடுகின்றான்... வீதி உலா போகும் மனித மரங்களை வெட்டி எறிகின்றான்... ஆணி வேர் அறுந்து எத்தனை குடுமபங்கள் அல்லாடுகிறது... கண்ணீரோடு எத்தனை உறவுகள் தள்ளாடுகிறது... சுமையா…
-
- 3 replies
- 1.4k views
-