கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஏய்திட மாட்டீரே! --------------------------- மண்ணுக்காய் உயிர்தந்தோர் எண்ணத்தைச் சுமந்தபடி வீட்டுக்கு வாக்களிப்பீர் விடியலுக்காய் நடப்போமென்று வீரமுடன் பேசி நின்றார்! விமோசனத்தை காண்பதற்கு வாக்களிக்க வருமாறு உலகத் தமிழ் உறவுகளும் உரிமையுடன் கேட்டு நிற்க உக்கிவிட்ட மனதினுள்ளே ஊமையாய் காயங்கள்.... புன்னைகைத்து அட்டை வேண்டிப் போட்டோம் நாம் புள்ளடியை வீட்டுக்கே! எமக்கு வாழ்வு வேண்டாம் எமது சந்திக்கு வாழ நிலம் வேண்டும் என்ற வாஞ்சையிலே வாக்களித்தோம் ஏய்திட மாட்டீரே! எங்களையாமாரே ஏய்திட மாட்டீரே!
-
- 3 replies
- 641 views
-
-
என்றும் --நீ சுவாசித்த ழூச்சில் இன்றும் என்னிடம் வரவில்லை உன் பாசத்துக்கு கட்டுபட்டு வழர்ந்த என்னை சந்தேகப் பட்டு ஒரு நொடியில் தூக்கி எறிந்தாயே -------- :cry:
-
- 3 replies
- 1.3k views
-
-
ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ணா எப்பொழுது வருவான்? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை வருடங்கள் பல ஓடிய பின்னரும் யாரைப் பார்த்தாலும் எங்காவது அண்ணாவைக் கண்டீர்க…
-
- 3 replies
- 769 views
-
-
தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாப்பாடல்களின் போக்கில் ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும். அதற்கேற்ப கவிவரிகளை செதுக்க வேண்டும் என்பது தமிழக கவிச்சிற்பிகளின் பேராவல்.இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள். “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கலியாணம்” போன்ற கவி வரிகள் சினிமாப்பாடல்களின் போக்கில் தனித்துவந்தான். பாடல்களில் புதுமைஇ தனித்துவம் இ இரசிகர்களுக்கு திடீரதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய புதுச்சொற்களை புனைதல் என்பன பாடல்களை இமயத்திற்கு உயர்த்தியது என்பது கூட மறுக்கப்பட முடியாததே. பாட்டு இ படம் இசினிமா நடிகர் இந்த சொற்களை கேட்டவுடன் உலகில் எந்த மூலையில் இருக்கும…
-
- 3 replies
- 3.4k views
-
-
எங்கள் விடுதலையின் பொருளறியும் கண்முன் விரிந்து கனவுவெளியெங்கும் விதைந்து கிடக்கிற எங்கள் மீதான வன்மங்கள் ஒருநாள் ஓர்மமாய் எழும். அன்று எங்கள் தீ விரல்கள் இப்பூமியெங்கும் தணலேற்றும்….. தமிழச்சிகளின் மார்பையறுத்தவனும் பிறப்புறுப்பை மிதித்தவனும் மரணத்தின் வலியறியும் விதியெழுதும் நாளின் பொழுதறியும் - எங்கள் விடுதலையின் பொருளறியும்.... 12.03.2012 (நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்போராளிகளின் ஒளிப்படங்கள் பார்த்த வலியின் வெளிப்பாடாய் இக்கவிதை)
-
- 3 replies
- 978 views
-
-
நினைவுகள் எல்லாம் .... இனிமையில்லை ....! அழகான ரோஜாக்கு கீழ் ... ஆபத்தான முள் ....! முள்ளை கவனிப்பாய் .... யாருமில்லை ரோஜா .... அழகாக இருப்பதால் .....! நெஞ்சுக்குள் ..... கள்ளிச்செடியை வைத்து .... முகத்தில் ரோஜாவுடன் ..... வாழும் காதலர்களே .... அதிகமாக இருக்கிறார்கள் ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி கே இனியவன்
-
- 3 replies
- 1k views
-
-
எமக்காகப் பிறந்தவர் எம்மில் பிறப்பாரா? வானத்து எல்லையெங்கும் வண்ணப் பூச்சொரியும் கார் காலத்து ஓர் இரவு களிப்பான மார்கழியில் ஞாலத்து இருளகற்ற நம் பாவம்தனை மீட்க காலத்தின் தேவைக்காய் கன்னி மகன் அவதரித்தார் ஓளியாக வந்த இந்த உத்தமனாம் இறை மைந்தன் வழியாக எம் வாழ்வில் வந்து பிறப்பாரா? துளிகூட அமைதியின்றி துன்புறும் சோதரரின் துயரைத் துடைக்க மனத் துணிவைத் தருவாரா? ஆயுதமே வேதமென்றும் அடக்குமுறை கொள்கையென்றும் அன்பை வெறுப்பவர்க்கு நற் பண்பைத் தருவாரா? ஆணவத்தின் பிடியினிலே அல்லலுறும் இப்பூமி காண்பதற்கு புது உலகக் கதவு திறப்பாரா? மனிதத்தைத் தொலைத்து விட்ட மகத்தான பூமியிலே தனிமனித நேயத்தை தரணியெங்கும் விதைப்பாரா? வன்முறைகள் சூழ்ந்த இந்த வக்கிர …
-
- 3 replies
- 11.2k views
-
-
கண்ணுக்குள் சூரியச் சிரிப்பும் வாய்ச் சொல்லுக்குள் இனிமையும் கனிவும் நெஞ்சுக்குள் விடுதலைப் பெருநெருப்பு கண்ணால் யாவையும் பேசியே மனசில் சிம்மாசனமிட்ட தம்பி ஊர் போனதில் உறவானவருள் ஒருவன் உயிர் கரைக்கும் இசையால் மனங்களைத் தன்னோடு ஒட்ட வைத்த தன்னினிய குரலில் தந்தவொரு பாடல்….அவன் நினைவுகள் சுமந்து அவன் பாடிய பாடலிது.... பாடலை நேரடியாகக் இங்கே அழுத்துங்கள். பாடலை தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள்.
-
- 3 replies
- 1.9k views
-
-
எங்கள் சாம்பல் மேட்டில். காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும் எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட எங்கள் மண்ணில், கனவான்களாகவும் கடவுளர்களாகவும் எங்களில் தம்மைத் திணித்தபடி இன்னும் எங்கள்மேல் தம் வன்மங்களைக் கொட்டித் தீர்க்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மீட்பர்கள் என்று தம்மை அழைத்தபடி தமக்குத் தாமே பட்டங்கள் சூட்டிப் பாணங்கள் ஏவி எம்மைச் சூழ்ந்து கொண்டனர். தம்பக்கம் சார்ந்தால் அரியாசனம் இல்லையேல் அரக்கர் நாமம் காலங் கடந்தும் இதுவே தொடர்கதையாய் நீண்டு கொண்டிருந்தது. மறைந்திருந்து பாணங்கள் ஏவுவதில் வல்ல ராமர்கள் மீண்டும் நாவாய்கள் ஓட்டிப் புதர்களைக் கடந்து கரையைத் தொட்டனர். அம்புகள் வீழ்ந்து மீண்ட…
-
- 3 replies
- 948 views
-
-
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்! கடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... எண்ணற்ற சினிமாக்களால் உன் புத்தி ரேகை மழுங்கியது........ லாட்டரிச் சீட்டுகளைச் சுரண்டியதாலேயே உன் உழைப்பு ரேகை உருக்குலைந்தது........ தங்கைகளின் திருமண ஏற்பாட்டில் அலைந்து திரிந்ததில் உன் திருமண ரேகையும் தொலைந்து போனது..... முதுமை ரேகை மட்டுமே முறியாமல் உள்ளது....... கொஞ்ச நாட்கள் கழிந்தால் உன் குறையெல்லாம் போய் விடும் போ! -கவிஞர் கலைவேந்தன்
-
- 3 replies
- 2.4k views
-
-
இயல்பினை கடந்த திடத்துடன் இயற்கையை வென்றவர்கள் எப்பொழுதும் இறப்பதில்லை! அறத்தினை மீறிய உலகிற்கு மறமென்றால் இதுவெனக் காட்டியோர் தம் இனமென்றே தம்முயிர் வாட்டியோர்! நிலத்தினில் வீழ்ந்திட்ட விதைகள் புலத்தினில் புதிதாய் கதைகள் உம் கல்லறையேனும் சொல்லுமா விடைகள்? உங்கள் ஒவ்வொரு கதையும் போதும் எம் பரம்பரை உம்மைத் தொடரும் உம் இலட்சியம் அடையும் வரை! அதுவே உங்களுக்கான உண்மையான அஞ்சலிகள்!
-
- 3 replies
- 1.2k views
-
-
பாட நூலுக்காக செலவிட்ட... நேரத்தைவிட உனக்காக... முகநூலுக்காக செலவிட்ட .. நேரம் அதிகம் -இப்போ ..... கிழிந்த ஆடையின் நூல் .... விட்ட தவறை காட்டுகிறது ....!!! @ முக நூல்பற்றிய கவிதைகள் கவிப்புயல் இனியவன் (மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக )
-
- 3 replies
- 1.4k views
-
-
"ராமன் எத்தனை வஞ்சகனடி?" "தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய சொற்களால் சீதைக்கு எய்தவனை நங்கையர் மூக்கு அறுத்தவனை தீண்டாதவன் என்பதால் சங்காரம் செய்தவனை மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!" "தீர மிக்க வாலியை வஞ்சித்து குரங்கின் உதவி பெற்றவனை தீவின் சிறையில் நிமிர்ந்து நின்றவளை இரக்கமின்றி தீயில் இறக்கியவனை தீதோ நன்றோ ஒன்றாய் வாழ்ந்தவளை இரக்கமற்று காடு அனுப்பியவனை தீபம் ஏற்றி 'ராம-சீதை'யாக வாழ உரத்த குரலில் தொழுகின்றனர்!!" [கந்தையா தில…
-
-
- 3 replies
- 677 views
- 1 follower
-
-
My PayPal AC: visjayapalan@gmail.com தமிழகத்திலும் உலகிலும் பாலை இசைத் தொகுப்பைக் கேட்ட பலருக்கு இனித் தமிழர் என்கிற படல் மிகவும் பிடிதிருக்கிறது. எனது பாலை இசை தொகுப்பை கடனாக யாழ் இணையத்தில் தரவிறக்கம் செய்த 5000 பேரில் 10% ரசிகர்கள் விலைகொடுத்திருந்தாலே இப்படி முடக்கப்படாமல் எனது பணிகளைத் தொடர வாய்ப்புக் கிடைதிருக்கும். ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் எனது பணிகலைத் தொடர்வதோடு தொடர்ந்தும் கடன் அடிப்படையில் யாழ் இணையத்தில் அவற்றை பகிர்ந்துகொள்ள இயலும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=43413 இதுவரை ரஞ்சினி பிராங்பேர்ட், கோகிலா அவுஸ்திரேலியா, பறவைகள் கனடா மட்டுமே எனது நனம்பிக்கைக்கு வலுச் சேர்த்துள்ளனர். எனது பாலைக் கடன்களை அடைக்கவும் விடுதலைக்கான ஆய்வ…
-
- 3 replies
- 1.2k views
-
-
மதம் பிடித்த மனிதன் மனிதனையும் அவன் நாகரிகத்தையும் கொலை செய்துகொண்டிருக்கிறான் எந்தப் படுகொலைகளையும் நான் ஏற்க மாட்டேனென அவன் கன்னத்தில் அறைந்து சொல்கிறது மனிதம் எனக்கான உரிமையை நீ பறிப்பதென்பதும் உனக்கான உரிமையை நான் கொல்லுவதென்பதும் எனக்கானதும் எனது குழந்தைக்கானதுமான வழியை நீ விடாமலிருப்பதும் எல்லா மதமும் மனிதனும் சமம் என்பதை நீயோ நானோ மறுப்பதென்பதும் என் மதத்தை விட உன் மதம் தான் உயர்ந்ததென்பதும் உனக்காக மட்டும் நிச்சயிக்கப்பட்ட சொர்க்க வாசல் திறந்திருக்குமென்பதும் இறைவனால் எழுதப்பட்ட நியதி என்று எந்த வேதமும் எந்தக் கடவுளும் எந்தத் தூதரும் எமக்கு அருளவில்லை …
-
- 3 replies
- 828 views
-
-
எண்ணம் எண்ணம் உயர்வாய் எண்ணம் கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்! உன்னை நீயே அறிந்து கொண்டால் பெறலாம் விரைந்து வெற்றிக் கிண்ணம்! உள்ளில் இருக்கும் கள்ளம் அகற்றி கொள்வாய் உந்தன் பக்கம் வெற்றி! விழிகள் திறந்து உன்னைச் சுற்றி நடப்பது தெளிந்தால் நாளும் வெற்றி! எதுவிங்கு வெற்றி தெரிந்தவர் இல்லை? தன்னை உணர்தலே வெற்றியின் எல்லை! பொய்மை என்னும் போர்வை அகற்றி உண்மை நெறியினில் செல்வது வெற்றி! அடுத்தவர் முதுகில் ஏறிச் சவாரி செய்வது அல்ல உண்மை வெற்றி! அடுத்தவர் கண்ணீர் துடைக்க நீளும் விரல்கள் கொள்வதே உண்மை வெற்றி! சொல்லிலும் செயலிலும் நன்றே உரைத்து அடையும் வெற்றி உனக்கே உரித்து! நல்லோர் என்று உலகம் போற்றும் அதுவே என்றும் மாறா வெற்றி! …
-
- 3 replies
- 913 views
-
-
உன் காலடி ஓசையில்தானே என் இதயம் பாசை கற்றுக்கொண்டது உன் கூந்தலின் சுருள்களில்தானே என் இதயம் கனவைப் பெற்றுக்கொண்டது சிந்தையும் மையலில் சிதைந்தபோதுதானே கண்களும் காந்தமாய் கவர்ந்தபோதுதானே அந்தரத்தில் அந்தரித்து நின்சுந்தரத்தில் சுயம்புரள அதரத்தில் ஆதாரம்தேட நீ அகல நின்றாய்! சுட்டும் சொற்களுக்குள் உன்னை சிறையாக கட்டிக்கொள்ள வகையறியா கபோதி மீட்டும் உன்விரல் பிறப்பில் ஊற்றும் உணர்வில் ஈட்டும் என்மனமே இன்ப இராகங்களே!!
-
- 3 replies
- 536 views
-
-
குற்றம் ஏர்.... ஊருக்கு உண்மைகள் உரைப்பேன்- எனக்கறிந்த உண்மைகள் அத்தனை உரைப்பேன் பாருக்கெல்லாம் முதலாகுமென்ற பாரதியை வார்த்தையை உரைப்போம்... தாளப்பறந்த விமானம் தள்ளாடி விழ்வது முறையே கண்ணேதிர் முன்னே நின்ற கட்டிடம் காண பிழையே... உச்ச கதிரோன் தானெனவே உசந்ததாய் நினைத்தத பிழைதானே மதியதை மதியதை மறந்தாரே- இன்று மனிதமதையெ இழந்தாரே.... கூடு கட்டிய குருவிகளின் கூடது உடைத்தத பிழைதானே மாட மாளிகையில் தானெனவே மனிதா நினைத்தத பிழைதானே.... நீதிநெறியதை மறந்தாரே- இன்று நீதிகெட்டின்று விழந்தாரே தூக்கிட யாரின்று வருவாரோ...? துன்பத்தில் தவிப்பது முறைதானே... இகழ்வதும் புகழ்வதும் முறைதானே- தொடர் இகழ்வது இகழ்வது பிழைதானே மனிதன் போட…
-
- 3 replies
- 1k views
-
-
''நிதர்சனத்திற்கு நன்றிகள் '' ''நிதர்சனத்திற்கு நன்றிகள் '' இரும்பு கரமதிலே இறுகி கிடந்தவனை அகிம்சை வாளெடுத்து எப்படி அறுத்து வந்தாய்...?? கம்பிச் சிறையினிலே கட்டுண்டு கிடந்தவனை தங்கு தடையின்றி எப்படி தப்பிக்க வைத்தாய்...?? தேதி குறித்தங்கு சாவு காத்திருக்க காலன் வர முன் எப்படி காத்து வந்தாய்..?? நினைத்து பார்க்கையிலே நெஞ்சு வியக்குதய்யா இத்தனை துணிவுணக்கு எப்படி வந்ததய்யா...?? ''நீதியின் முன்னாலே நிற்கின்ற நிதர்சனமே- உந்தன் பாதம் பணிந்தே யான் வணங்கி எழுகின்றேன்...'' ஈழ மைந்தனவன் இன்னுயிரை காத்தவரே காலம் புராவும் - உம்மை கையெடுத்து வணங்குகிறோம்... இதய மில்லாமல் இருக்கின்ற மனிதர் முன் மனிதத்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
உனக்காக காத்திருக்கையில் என்னைக் கடப்பவர்கள் மட்டும் ராசியானவர்கள் உன் முகத்தை அவர்களில் தேடுகிறேனே * அந்த சூரியனுக்கு யார் என்னைக் காட்டிக்கொடுத்தது பாருங்கள் நிலாவுக்காக காத்திருக்கிறேன் என்ற கோவத்தில் என்னை கறுப்பாக்கி கொண்டிருக்கிறது * உனக்காய் காத்திருந்த இடத்தில் கொஞ்ச நேரம் நி ன் று பார் உன்னைப் பெற என்னை நான் இழந்த வலி புரியும் * தாமதமாய் வருவதையே பழக்கமாய் கொண்டவள் நீ தெரிந்தும் உனக்காய் காத்திருக்க பழக்கப்பட்டவன் நான் * " நிலா" என்று யார் உனக்கு பெயர் வைத்தது உனக்காய் என்னை தேய வைத்துக் கொண்டிருக்கிறாய் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.3k views
-
-
பாரெங்கும் எனது பெயர் மணக்கயிலே படிப்பிக்க ஆயிரம் பேர் இருக்கையிலே படிக்க மறுப்பது ஏன் குழந்தாய்? -எனை படிக்க மறப்பதுவும் ஏன் குழந்தாய்? வள்ளுவனுள் வாசகமாய் வளர்ந்தேனே.. ஔவை மடி ஔடதமாய் தவழ்ந்தேனே கம்பன் வழி காவியமாய் கரைந்தேனே பாரதியில் பாக்களாய் படிந்தேனே தித்திக்கும் என்றார்கள் ஒரு சிலபேர்.. தெவிட்டாது என்றார்கள் பற்பல பேர்.. எத்திக்கும் எனது பெயர் செழிக்குமென்றால் எதற்காக எனை படிக்க மறந்து நின்றாய்? சொக்கும் தமிழ் உனையாள வேண்டாமா? சொல்வளமும் சிறப்புற வேண்டாமா? பிறச்சொல்லை புகுத்தாதே எனக்குள்ளே பாழாகி போவேன் நான் தரணியிலே.. எனது வழி தமிழனாய் பிறந்தவனே எனது வம்ச வாரிசாய் வளர்ந்தவனே எனை வளர்க்க மறந்த மானிடனே எனை சுமக்க வெறுக்கும் வெறும்பயலே நான்படும் வேதனைக்கு …
-
- 3 replies
- 770 views
-
-
1 எங்கள் தேசத்தின் குரல் ஓய்ந்திடவில்லை ஆண்டுகள் ஏழு ஓடி மறைந்ததா?- எங்கள் தேசத்தின் குரல் ஓய்வெடுத்து ஆண்டுகள் ஏழானதா? அன்பே மூலதானமாக அடக்கமே ஆளுமையாக அறிவே ஆயுதமாக தமிழினத்தின் குரலை தரணிக்கு எடுத்துக் கூறிய எங்கள் அன்பு பாலா அண்ணா உலகத்தைவிட்டு பறந்தோடி ஆண்டுகள் ஏழு ஆனதோ? உண்மையுள் உண்மையாய் உண்மையே உணர;வாய் உண்மையே இவராய் உண்மையாய் வாழ்ந்த உயரிய மகன்-இன்று எம்மைவிட்டு சென்றதை இன்னும் நம்ப மனம் மறுக்கின்றது உலகின் பார;வையில் இவரின் உறக்கம் மரணம் எனப் பெயர;பெறும் ஆனால், உலகத்தமிழர; உளங்களில்- இவர; என்றும் சீவித்திருக்கும் மனிதன். தமிழின விடிவுக்காகவே இறுதிவரை உழைத்த உறுதியான போராளி இவர;. பாழும் நோய் வந்து பாடையேறும் நாளை இரக்கமின்றி தெரிவித்தபோது பதட்டமின…
-
- 3 replies
- 665 views
-
-
என் தாயே மனையாண்ட என் மணிமகுடத்தாயே உனை வாழ்த்த எனக்கு அருள் தாரே கருவில் எனைத் தாங்கி கண்மணி போல் காத்தவளே உருவில் உனைப் போல் வந்த என்னை- உன் குருதி கொடுத்து வளர்த்தவளே- நான் ஒரு நூறு பிழை செய்தாலும் உன் உயிர் போல் எனைக் காத்தவளே கள்ளிப் பாலூற்றிக் கருவழிக்கும் மா நிலத்தில் பிள்ளைப் பாலூட்ட மறுதலிக்கும் மானிடத்தில் துள்ளி வரும் குழந்தைக்குத் தாய்ப் பாலூட்டித் தாலாட்டி வெள்ளிப் பால் நிலவை அள்ளித் தருவேன் என்று அமுதூட்டி பெண்குழந்தையென்றாலும் பொன்குழந்தை எனப் பாராட்டி கண்ணின் இமை போல் காலமும் நீராட்டி மண்ணின் பெருமையை மனத்தினில் இசையாக்கி பண்பின் சிகரமாய் எனைப் பாரினிலே வேராக்கி விண்ணில் நின்றும் இன்றும் எனைச் சீராக்கும் எ…
-
- 3 replies
- 686 views
-
-
இணையத் தளத்தில் அறிமுக மானாய் நண்பன் என்றழைத்து நட்பை மட்டுமே பரிமாறினாய்... நாம் நம்மை பார்க்க வில்லை யென்றாலும் பாசமாய் அழைத்தாய் சட்டைப் பையின் கனத்தைப் பார்த்து பழகும் இவ்வுலகில் என் மனதின் கனத்தையும் பகிர்ந்துக் கொண்டாய்... என் துயரில் ஆறுதல் சொல்லும் ஓர் தோழியாய் என் தவறில் என்னை கண்டித்திடும் எந்தையாய் இருந்தாய்... தன் தேவைகளுக்கே இறைவனை நாடுவோர் மத்தியில் எனக்காய் என் தேவைக்காய் உபவாஷீத்து வேண்டுதல் செய்தாயே... நீ என்னுடன் பழகியது சில நாளென்றாலும் நீ என்றும் நான் மறவா எந்தன் பிரியமானத் தோழி தானடி… நான் என் வாழ்வின் சாதனையில் உயரத்தில் இருந்தாலும் நான் ஏறிய படிக்கட்டுகளாய் என்றும…
-
- 3 replies
- 1.3k views
-
-
சாகத் துணிந்தவர் கூட்டம் சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம். சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம். வேகமுடன் பகை வீடு எரித்திடும் வீரப் புலிகளின் கூட்டம். வேகமுடன் பகை வீடு எரித்திடும் வீரப் புலிகளின் கூட்டம். சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம். தூங்கிடும் கூட்டம் என்று எம்மை நினைத்தனர், வேங்கைகள் கூட்டமடா, தமிழ் வேங்கைகள் நாங்களடா. தூங்கிடும் கூட்டம் என்று எம்மை நினைத்தனர், வேங்கைகள் கூட்டமடா, தமிழ் வேங்கைகள் நாங்களடா. ஆண்டி பரம்பரையாக்கவோ எங்களை, ஆண்டி பரம்பரையாக்கவோ எங்கள் - ஆண்ட பரம்பரை நாங்கள் - ஈழம் ஆண்ட பரம்பரை நாங்கள், ஆண்ட பரம்ப…
-
- 3 replies
- 1.8k views
-