Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யார் வீட்டுப் பிள்ளைகளோ தம்முடலில் வெடிகொழுத்த... பட்டாசு கொழுத்தி மிட்டாசு கொடுத்து வெற்றிவிழாக் கொண்டாடிய தமிழ்ப் பெருமக்களே! எவர் வீட்டுப் பிள்ளைகளோ காற்றோடு கரைய, உங்கள் வீட்டு வாரிசுகளை அக்கரைச் சீமைக்கு... அக்கறையாய் அனுப்பிவைத்த அருமைத் தமிழ் மக்களே! 'எரியும் வீட்டில் பிடுங்கியது இலாபம்' என... தன்மானமில்லாமல் இனமானம் விற்று, சாக்கடைக் குழிக்குள் சந்தணக் குளியல் போடும்... தமிழ் அரசியல் பெருந்தகைகளே! ஊர்பேர் தெரியாமல் உறவுகளும் அறியாமல் சிதறிப்போன தலைகளுக்கும் உங்களுக்கும், என்ன உறவென்று சிந்தித்தும் பார்க்காத... சிங்கார தேசங்களின் நிரந்தரக் குடிமக்களே! நீங்கள் உண்ணும் சோற்றில்... அவர்களின் தசைத்துண்டங்களும் சேர்ந்திருக்கும் ! நீங்க…

  2. முஸ்லிம் நண்பா!உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்!ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை!உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்!உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்!முடியவில்லை என்னால்;காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான் உடும்பனில்அவற்றை நீ வெட்டிவிட்டாயே!நீ மறந்திருப்பாய்.என்னால் மறக்கமுடியவில்லை.காரணம் என்னால் நடக்கமுடியவில்லை!நினைவிருக்கிறதா உனக்கு..நீ மறந்திருப்பாய்.நீ கொலைவெறியோடு விரட்டும் போது;ஒரு கையில் குழந்தையும்இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம் வீரமுனை, திராய்க்கேணியில்.நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள்உனக்காய் அழமாட்டமா?ஆனால்;மன்னித்துவிடு சகோதரா...இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை!நீ சிங்கள இனதாண்டவத்தில் தான் தத்தழிக்கிறாய்நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்!நாளை…

    • 0 replies
    • 1.1k views
  3. என் தலையெழுத்தினை பிழையாய், எழுதத் தொடங்கிய காதல்... என் தலைவாசல் தனைத் தட்டிநிற்கின்றது! வரவேற்க முடியாமலும்... தூக்கியெறிய முடியாமலும்... நான் படும் பாடு, என் எதிரிக்கு கூட... வந்துவிடக் கூடாது இந்த நிலைமை!!! பூட்டி வைத்த நான்கு சுவர்களுக்கு நடுவில்... நான் கதறி அழுத சத்தத்தையும், என் விரல் மொழிகள் வரைந்த குருதிச் சுவரோவியங்களையும், என் தலையணை தனைத் தோய்த்த நீரோவியங்களையும், மற்றவர் மனமறியாமல் புதைத்துவிட்ட... ரகசியமானவனாய் நான்!? எனக்கு, ஒரு இதயத்தினையும் ஒரேயொரு எண்ணத்தினையும் கொடுத்த, இறைவனுக்கும் என்மேல் இரக்கமில்லையோ!??? அன்பையும் ஆதரவையும் அன்போடு எதிர்பார்ப்பது... எத்தனை ஏமாற்றங்களைக் கொடுத்தாலும், அத்தனை வலியையும் நெஞ…

  4. இளைஞனே எழுந்திடு!!!! நாளை வருமென்று நாளைக் கடத்தாதே வேளை வருமென்று வெருண்டு திரியாதே நாளை உனதாக வேண்டும்-அதில் வீரத்தமிழனின் புலிக்கொடி பறக்க வேண்டும் கோழைத்தனம் துறந்து வீர உணர்வோடு எழுந்துவா நீ உனக்கென்று ஒரு நாடுகாண நாளையல்ல இன்றே அதன் ஆரம்பம்காணப் புறப்படு போலி சுகங்களில் பொய்வாழ்வு வாழாதே மதங்களென்று மயங்கித் திரியாதே பிறந்ததிற்காக நல்லதைச் செய் இன்றே நாளை அது உன்வாழ்வைச் சிறப்பிக்கும் உன் கனவு தமிழீழம் நிறைவேற உன் மக்கள் உன் புகழ்பாட உணர்வுகொண்டு எழுந்துவா குழந்தைத் தனம் துறந்து உன் கொள்கை வெறிகொண்டு உலகம் புலி என்று கூற-நீ நம்பி எழுந்துவா உன் கனவு நிறைவேறும் குட்டக் குட்டக் குனிந்தது போதும்-இனி தமிழன் என்ற உணர்வ…

    • 2 replies
    • 1.1k views
  5. ஊடக இளவலுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் இளய கலைஞர்களே சென்னை வரும்போது சென்றவனைப் பாருங்கள் என்பேனே இன்று அவனில்லை. இயமனும் கவிதை சிறுகதைகள் எழுதிப் பிரசுரிக்க அவாவுற்று இவனை அழைத்தானோ. தாகத்தில் தெருப் பாடகர் நினைத்துவரும் சாலையோரத்து ஊருணி மாரியிலேயே வரண்டதுபோல ஊடக இளவல் கிருஸ்ணா டாவின்சி இளமையில் வீழ்ந்தானே. எங்கள் முகங்களை அறிமுகம் செய்த இனியன் முகமின்றி எரிதழலில் படுகிறதோ. இல்லை வாழும் முகமானாள் மகள் நேகா என்றும் சாகா முகமையா உனக்கு தமிழ் கலைஞர் எங்கள் நினைவுகளில்.

  6. உன்னை கண்டேன் ஓவியனானேன் உன்னிடம் கண்டேன் ஒளி(ழி)ந்தவன் ஆனேன் உன் கண்ணை கண்டேன் கவிஞனானேன் உன்னை கண்ணால் கண்டேன் காதலானேன் உன் உரைகள் கவனித்தேன் பேச்சாளன் ஆனேன் உன் உடைகள் கலைந்தேன் சிற்பி ஆனேன் உன் மனதை கண்டேன் மகிழ்வானேன் உன் மார்பு கண்டேன் மழலையானேன் உன் கழுத்தை கண்டேன் முத்து குளித்தேன் ( முத்து குளித்தேன் . சங்குதான் கிடைத்தது ) உன் கவின் மேனி கண்டேன் காம ராஜன் ஆனேன். உன்னதை வில(ள)க்கி வித்தகனானேன் விலகி விடாதே காவியமே . வில்லனாகி விடுவேன்

    • 4 replies
    • 1.1k views
  7. புதிய இசையின் பதற்றம் பீறிட்டெழும் என் பதற்றத்தின் பார்வை அமைதி அமைதி என பச்சைப் புல் தேடுகிறது அவலங்களின் நாவுகள் பயணித்த சுவை வழியே மௌனம் யாசிக்கிறது நடுக்கம் சிவப்புக் கம்பளம் விரித்த கூடமொன்றிலிருந்து நிர்வாகவியல் குறித்த வரைவுகள் தொடங்குகின்றன குளிரூட்டப்பட்ட சதுரங்கள் உரையாடலை வாசிக்கின்றன உணவுகளின் வரிசையில் எண்ணிக்கைகள் தொடர்கின்றன பசி மட்டும் சாசுவதம் கழிப்பறை சுவர் சிரித்த இசை கனவுப் பிரதேசமாய் விரிகிறது நடுநிசியளவு அல்லது பகலா ஏதோ ஒன்றிலிருந்து எழும் ஓலம் ஞாபகங்கள் மீது நதி நீரற்ற தனிமையை வீசுகிறது நடவடிக்கைகளின் ஒழுங்கு படுத்தலை ஒளி அறைகிறது நெஞ்சுப் பலகை மீது விழிகளின் அச்சம் வினாக்குறிகளை உமிழ்கிறது பழைய கேள்விதான் …

    • 2 replies
    • 1.1k views
  8. உனை சுமப்பதையிட்டு கொண்ட பெருமிதத்தால்... உன் குதிரை கூட எனை நோக்கி... கடைக்கண்ணால்.... ஒரு நக்கல் பார்வை வீசிவிட்டு செல்கிறது....

  9. பள்ளி நினைவுகள் தோழிலே பையுடன் தோழர்கள் புடைசூழ பள்ளி சென்ற பருவ நாட்கள் சிந்தையில் விரிகையில்-இதயத்தில் சின்னதாய் ஒரு நெருடல் நிலவு அல்ல-பள்ளி நினைவுகள் தேய்வதற்கு நித்தமும் விழி எதிரே நிஜங்களாய் மலர்பவை பருவமழை அல்ல-பள்ளி நினைவுகள் வந்துபோக பசுமையாய் பதிந்து பாதத் தடங்களாய் தொடர்பவை காலச்சக்கரம் விரிகையில்-வசந்த காலத்தின் சுவடுகளாய் பதிந்து காற்றினும் பரந்து விரிந்து காவியமாய் நெஞ்சிலே ஒளிர்பவை நேற்றைய நட்புகளே - பள்ளி நாட்களின் உறவுகளே இதயச்சுவர்களில் உங்களின் இனிய நினைவுகள் அழியாத புத்தகமாய் ஆண்டாண்டு வாழும்

  10. அம்மா திரும்பியிருக்கிற ஆற்றங்கரை காணி நிலம் தீபச்செல்வன் புற்களும் பற்றைகளுமாய் கிடக்கும் நிலத்தில் வீடு கரியிருக்கும் உருக்குலைந்த காணியில் அம்மாவின் களைப்பு தணலூட்டப்பட்டிருக்கிறது கடவுள்கள் எங்களை கைவிட்டதாய் ஒரு நாள் உணர்ந்தபொழுது காணி நிலம் தரும் பராசக்தியிடம் அம்மா உணவிழந்து பசியிருந்தாள் ஆற்றங்கரையில் கிடக்கும் இந்தக் காணிநிலத்தை பராசக்தி ஏன் கைவிட்டாள்? யுத்தக் குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனைக்காலத்தின் எந்தச் சித்திரவதைகளையும் பகிரப்போவதில்லை என்று அம்மா ஒப்புதலளித்திருக்கிறாள். வீடு திரும்பியிருக்கிறோம் என்பதை இந்த ஆற்றங்கரைப் பறவைகள் கொண்டாடுகின்றன ஒரு நாள் ஆறு பெருக்கெடுக்கையில் என்னை கைகளில் அம்மா நிரப்ப…

    • 0 replies
    • 1.1k views
  11. ;;மகிந்தாவிற்கு எச்சரிக்கை ..;; எங்கள் புலி வானமதை ஏளனங்கள் செய்தவரே கையேந்தி உலகமதில் கை பிச்சை எடுக்கிறீரோ...?? வேண்டி வந்த போர் கருவி வேளையின்றி கிடைக்கையிலே எங்கள் புலி வானமதை எட்ட நின்று முடிப்பீரோ....??? கம்பெடுத்து நாங்கள் வந்தால் களைந்தோடும் படைகளய்யா உங்களது கோட்டைகளை இன்றுயிவை காக்குமாய்யா....??? பகலிரவாய் வானமேறி பாவி உயிர் பறித்தவரே உந்தன் உயிர் காவெடுக்கா உறுமும் புலி அடங்கிடுமோ...?? எங்கள் புலி வீரரை என்னவென்று நீ நினைத்தாய்...? காத்திருந்தோம் உனையழிக்க கள முனைகள் திறந்து விட்டோம்... ஏற்றமுடன் நாம் நிமிர்வோம்- இனி ஏழரையே உனக்கு காண்- உன் கோட்டைகளே இனி சரியும் உனக்கு கோவணமும் இல்லை போ... …

  12. இத்தழிந்து போய்விடவில்லை என் இனத்தின் நம்பிக்கை. கொழுந்தெறித்து கிளைபரப்பிய இனவிருட்சத்தின் வேர்களை கிளறியவனே பார்...... செத்துவிடவில்லை எங்கள் வேர்களில் இன்னும் நம்பிக்கை. என்ன செய்யப்போகிறாய் இனி.... எங்களை கொன்ற கதையை யார்யாருக்கோவெல்லாம் வென்ற கதையாக சொன்னாய்..... எங்கள் பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை மாலை புனைந்து கொண்டாடினாய்..... எங்கள் மகவுகளின் நெஞ்சுகளில் நச்சுகுண்டுகளை விதைத்துவிட்டு மண் வணங்கி மகிழ்ந்தாய்..... உனக்கான காலமென்று ஒன்றிருந்தால் எமக்கான காலமொன்றும் வரும் ! மீண்டும் வரும் !! *********************** காலம் திரும்புகிறது. நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள் குருவிச்சியும் இனி வரக்கூடும் வன்னியன் குதி…

  13. பொய்யுக்கு தானடா பொம்பள வாழுறாள் மெய்தனை காட்டியே மாயங்கள் செய்யிறாள் ஆம்பள மனச கஷ்ட படுத்திறாள் கல்யாணம் கட்டிப்பின் கைவிட்டு செல்கிறாள் உலகம் சுத்துது தன்னாலே உலக சுத்திறன் பெண்ணாலே காதல் பற்றியே சொன்னாலே கோபம் கொள்கிறன் தன்னாலே பேஸ்புக்கில் காதல் மலர்வது தப்பப்பா பேஸ்புக்கால் காதல் அழிவதும் தப்பப்பா பட்ட துன்பமிது கேட்டால் நீ நண்பேண்டா ஏற்கமறுத்தால் நான் என்னத்த சொல்வேண்டா பேஸ்புக்கில் பசங்கள தேடிப்பிடிக்கிறாள் வயசுக்கு ஏற்றதாய் வேசங்கள் போடுறாள் அப்பப்ப பெயரை மாற்றி இடுகிறாள் செல்லம் என்றழைத்து சேட்டைகள் செய்கிறாள் எங்கடா எங்கடா காதல் மலருது வாலிபம் இப்போ காமத்தில் அலையுது காலேச்சு பொண்ணுக கர்ப்பமா போகுது சின்னச்சிறுசுக அப்பா ஆகுது ஆணுக்கும் பெண்ண…

  14. சத்தியம் செய்வோம் இந்த நாளிலே! ------------------------------------------------------ சுக்குநூறாக வெடித்துப் பறக்கும் இதயங்களான எம் தமிழ் உறவே துயரம் நிறைந்த இந்த நாட்களை எப்படி மறப்போம் எங்கே தீர்ப்போம்! மனிதாபிமானம் பேசிடும் உலகோ மனித அழிவுக்கு மகிழ்வு பகிருது தமிழர் குருதியில் கைகளை நனைத்து விருந்தினையுண்டு சிரித்து மகிழுது ! சிறுமை நிறைந்த சீரற்ற உலகை நம்பியதாலே எம் தாயகமிழந்தோம் தாயகம் வாழ்ந்த உறவுகளிழந்தோம் உலகை நம்புதல் நன்மையல்லவே என்பதையல்லவா உலகு சொன்னது எம்மை நம்புவோம் தாயகம் மீட்க தாயமல்லவோ நாம் செய்யும் காணிக்கை மண்ணுள் புதைந்தோர் வேண்டுதல் அதுவே ! கண்ணீர் துடைத்து நாம் கைகளைக் கோர்த்து சத்தியம் செய்வோம் இந்த நாளிலே !…

    • 3 replies
    • 1.1k views
  15. கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு-பா.உதயன் 😂 —————————————————————- இஞ்சியும் உள்ளியும் ————————— இஞ்சியும் உள்ளியும் தன்னையா கொல்லுமாம் கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. பயம் ——- மனிதரை கண்டு மனிதர் பயந்ததை பார்க்க கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. முகம் தொலைந்த மனிதன் ———————————- முகத்தை எல்லாம் மூடிப் போகும் மனிதரை பார்த்து கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கடுகு சிறிது காரம் பெரிது ———————————- கண்ணுக்கே தெரியாத என்னைக் கண்டு வீட்டுக்க ஒழிக்கும் மனிதனைக் கண்டு கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கொல்ல முடியல்ல ————————- எத்தினை யுத்தம் செய்தீர் எவ்வளவு மனிதரை கொண்டீர் என்னை மட்டும் கொல்லவா முடி…

  16. [size=1]இது தான் காதலா ..........[/size] [size=4]மணமேடையில் சமய முறைப்படி கட்டிய தாலி கழற்றி எறியும் உலகிலே கணவன் இறந்ததும் உண்டியலில் போட்டு அடுத்த கணவனை தேடிபோகும் காலம் இங்கே இருப்பினும் இது போன்ற காதலும் வாழ்கிறது நாட்டிலே [/size] [size=1]படமும் பகிர்வும் [/size]

  17. [size=5]மரணம் கூடு கட்டிய மரங்கள்,,[/size] [size=5]முறிந்து விழுகின்றன![/size] [size=5]பூரண சந்திரனின் வெளிச்சம்,[/size] [size=5]புதைகுழிகளின் ஓரங்களில்,[/size] [size=5]பட்டுத் தெறிக்கின்றது![/size] [size=5]மழை வெள்ளம் தேங்கிய,[/size] [size=5]குழிகளின்,மத்தியில்,,[/size] [size=5]கார்த்திகைப் பூக்களின்,,[/size] [size=5]கைவிரல்கள் அசைகின்றன![/size] [size=5]அமைதியடையாத ஆத்மாக்கள்,,[/size] [size=5]உலகத்தை நோக்கிக்,[/size] [size=5]கரங்களை விரித்து,[/size] [size=5]நியாயம் கேட்கின்றன![/size] [size=5]உண்மைகள் நிதர்சனமாகி,[/size] [size=5]உலகை உலுக்குகின்றன![/size] [size=5]கண்கள் கட்டப்பட்ட,[/size] [size=5]நீதித் தேவதைக்கும் கூடக் ,[/size] [siz…

  18. [size=4]காலன் கூடக் கண்ணீர் விட்ட நாள்![/size] [size=4]கனவுகள் தொலைந்து போன நாள்! கரம் தூக்கிய மனிதக் கூடுகளைக்,,. காந்தீயம்,கழுவிலேற்றிய கரி நாள்! நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம், நடு முதுகில் கத்தி ஏற்றிய நாள்! நம்பிக்கை ஊட்டியவர்கள் எல்லாம், நரிகளாக மாறிவிட்ட நாள்! உலகத் தமிழர்களின் இதயங்கள், ஊமைக் கண்ணீர் வடித்த நாள்! உலகத் தலைவர்களின் காலடிகளில், ஈழத் தமிழன் விழுந்து கெஞ்சிய நாள்! கையிழந்தும், காலிழந்தும், கட்டியணைத்த துணையிழந்தும், கருக் குழந்தைகளின் தொப்புள்கொடிகள், துண்டிக்கப் பட்டதொரு கரிநாள்! கரம் கூப்பி நான் தொழுத தெய்வங்களும், காவடியேந்தி நேர்த்தி வைத்த தேவதைகளும்…

  19. Started by akootha,

    • 3 replies
    • 1.1k views
  20. எம் கண்ணுணர முடியாத கண்மணிப்பூக்களே! ஏனிந்த மௌனம்? இன்னும்…. கார்த்திகை மலரவில்லை காண்டாமணி ஒலிக்கவில்லை புன்னகை பூக்கவைக்கும் பேச்சொலியும் கேட்கவில்லை பார்த்தொருகால் வந்தெமக்கு….. பூத்தமுகம் காட்டுதற்கு புனிதர்கள் இன்னும் எழவில்லை. ஏனோ பெரு மௌனம்!!!!! காலதேவரே!....... இதுவென்ன கண்ணாமூஞ்சி விளையாட்டு கபாடக் கதவங்களின் தாழ் திறக்கும் ஓசைகூட மானசீகச் செவிகளின் மன்றம் வந்து சேரவில்லை ஐம்புலனை சிறிதடக்கில் - உம் அருவுருவின் சலசலப்பு ஆன்மாவுக்குக் கேட்கும் இப்போது, ஆயத்த ஆரவாரமும் அருவுருவில் உணரவில்லை சலசலப்புச் சத்தமும் செவிப்புலனுக்கெட்டவில்லை காலதேவர்களே உம் மூச்சின் வெம்மை இன்னும் என் காதோரம் பரவவ…

  21. வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய தனித்தலைபவனின் காலடிகளைத் தொடரும் நாரைகளும் மௌனம் கலைத்தேதும் பேசவில்லை 02 அன்று உன் முன்னே குழந்தைகளை துரத்திச் சுட்டழித்த ஹெலிகெப்டர்கள் இன்றுன…

    • 0 replies
    • 1.1k views
  22. ஊர விட்டு வந்த நானும் ஊரை பற்றி எண்ணும் நேரம் உண்மைகளை சொல்ல போனால் ஊருக்குள்ள ரொம்ப சோகம் 5லட்சம் உழைச்சாலும் 5காசு கையில் இல்ல காருக்குள்ள திரிஞ்சாலும் கால்கடுப்பு போகவில்ல நாலுபேர தெரிஞ்சாலும் நல்லதொரு வாழ்க்கையில்ல தாய்கொடுத்த பாசமிங்க தந்துவிட யாருமில்ல. பள்ளி நண்பன் தூரம் இல்ல தேடி போக நேரம் இல்ல துள்ளி விளையாடவில்ல தூக்கமது போதவில்ல கூலி வாழ்க்க கூட அது ஊர போல இல்லடா கேடு கெட்ட வாழ்க்க வெளிநாட போல எங்கடா சொல்லி பாரு ஊரில் சொன்ன வார்த்த கூட போலிடா சொந்த பந்தம் நேரில் என் தாய பார்த்து கேலிடா காதலிச்ச கன்னி அங்க கண்ணீரோடு நானுமிங்க என் மனசு ஏங்குதிங்க மன்மதன்னு பேருதாங்க காதலிச்சா கூட அவ காச தான பாக்கிறா காதலது வந்தா நீ மனசுக்குள்ள பூட்டுடா ஆச…

  23. Started by இலக்கியன்,

    அன்புக்கு இலக்கணமும் நீ தான் தமிழ் பண்புக்கு புததகமும் நீ தான் கற்புக்கு கண்ணகியும் நீ தான் பொறுமைக்கு பூமியும் நீ தான் கண்டிப்பதில் கிட்லறும் நீ தான் அன்புக்கு அன்னை திரேசாவும் நீ தான் படி என்று சொல்லவதற்கு ஆசானும் நீ தான் வீட்டில் இரட்சியத்துக்கு அரசியும் நீ தான் அன்போடு பேசும் தோழியும் நீ தான் பூமியில் வாழும் உயிர் உள்ள தெய்வமும் நீ தான்

  24. நான்... வானில் பறந்து மேகமாய் ஓட வேண்டும்! நான்... நிலவில் விழுந்து வின்மினாய் விழ வேண்டும்! நான்... தென்றலில் புகுந்து புயலாய் மாற வேண்டும்! நான்... மலரில் நுழைந்து தேனாய் சிந்த வேண்டும்! நான்... கடலில் அலைந்து கரையாய் ஒதுங்க வேண்டும்! நான்... பகலில் பட்டாம் பூச்சியாய் பறக்க வேண்டும்! நான்... இரவில் மின்மினி பூச்சியாய் திரிய வேண்டும்! நான்... தாமரை இலையில் பனித்துளியாய் தூங்க வேண்டும்! நான்... மரத்து கிளையில் இலையாய் தொங்க வேண்டும்! என்றும் நான் இயற்கை உடன் வாழ வேண்டும்...

    • 4 replies
    • 1.1k views
  25. மார்கழிப்பனி மழையில் யேசு பிறந்து வந்தார் மானிலம் பூச்சூட புது அழகினைப் படைக்க வந்தார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.