Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாட்டைவிட்டு ஓடிவந்த நாதேறிகளை நட்புக்கரம் நீட்டி வரவேற்று அடைக்கலம் கொடுத்து தன் நாட்டையே அவனுக்குத் தாரை வார்ப்பான் தமிழன் ரொம்ப நல்லவன் காலம் காலமாய் கட்டிக் காத்த கொள்கைகளை கடாசிவிட்டு அறிவுக்கு உதவாத அவன் கொள்கைகளைப் பின்பற்றி அவனோடு கூத்தடிப்பான் தமிழன் ரொம்ப நல்லவன் மாற்று இனத்தான் தன்னை மெச்சுவதற்காக தன் இனத்தானை அவனிடம் காட்டிக் கொடுத்து அவனிடம் கைத்தட்டல் பெறுவான் தமிழன் ரொம்ப நல்லவன் தன்மொழி பள்ளி இருக்க பிறமொழி பள்ளிக்குத் தன் பிள்ளைகளை அனுப்பி அந்த மொழியில் தன் பிள்ளைகள் பேசுவதைக் கண்டு பூரித்துப் போவான் தமிழன் ரொம்ப நல்லவன் தன் தாய்மொழியைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு பிறர் மொழியில் உரையாடி அந்த மொழி வளர நீரூற…

  2. பொறிசிந்தும் வெங்கனல் போல் ஆர்த்தெழுந்து நெறிகொண்ட தமிழினத்தை முரட்டரசு மோதிடவே வேறில்லை வழியென்று வேங்கையெனத் துணிந்தாங்கே வேலைப் பணிந்தாலே வெற்றி நிட்சயம் போல் காலந் தனையுணர்ந்து கதிரவன் போலெம் தலைவன் எண்ணத்தை நனவாக்க எடுத்த நல் விடுதலையை பொய்யூற்றி எங்கணுமே புதைத்துரைக்கும் பாவியரும் நெய்யூற்றிப் பற்றவைக்கும் நெடுவரக்க ராஜாங்கம் உற்றெழுந்து பாரெங்கும் பகையாக்கும் எண்ணத்தை பித்தக் கணக்கென்று பேர்தெறிந்தார் தம்பியுமே சேரமான் கணைக்கா லிரும்பொறை போல செந்தமிழீழப் பெயருடன் செங்கோ லேந்திட தமிழரின் ஒற்றுமை அத்திப்பூ ஆகாமல் வரலாற்றில் அடிமையென்று வாய்பிளக்கக் கூறாமல் செருமுனையில் சிறுத்தை யெல்லாம் சீறிப்பாய்ந்துமங்கே மூக்கின் மேல் விரலைவை…

  3. ஈழப் பண்ணையில் கந்தன் என்ற கமக்காரன் கட்டி வளர்த்த காளை மாடுகள்.. பண்பட்டு மண் பண்படுத்தி மக்களுக்காய் உழைத்தன ஓர் காலம். இன்றோ.. கட்டறுத்து சொந்த நிலங்கள் மேயும் கட்டாக்காலிகளாய்..! வளர்த்தவரையே மூர்க்கம் கொண்டு முட்டி மோதி சாகடிக்கும் நிலையும் காணீர். விசமிகளும் கரடிகளும் விசயத்தோடு பழி தீர்க்கும் படலம் தொடர்பில்.. எதிரிகளின் கைப்பாவைகளாய் மூர்க்கம் கூட்ட கட்டாக்காலிகளிடம் சாராய வெறியூட்டும் நிலையும் காணீர்..! எச்சரிக்கை..! எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  4. அருவி ஊற்றெனஅழுது வடித்தவள்அடங்கிக் கிடக்கிறாள்பொருமி வெடித்திடபுழுங்கித் தவிக்கிறாள்தழுவித் தகித்தவள்தயங்கி நிற்கிறாள்ஒற்றைநாள்ஒருதலைப்பட்சயுத்த நிறுத்தமாம்சத்தம் இன்றிசலனம் இன்றிஇப்போதான்சற்று சிரித்துச்சிவக்கிறாள்சிவக்கிறாள்சிரிக்கிறாள் இவளெனசிந்தை தெளிந்துசிரிக்க முடியவில்லைஒருதலைப்பட்சஒருநாள்யுத்த நிறுத்தம் தானாம்யுத்தம் எப்பவும்சத்தத்தோடு வெடிக்கலாம்பாதிப்பு முன்னதை விடபலமாயும் இருக்கலாம்யுத்த நிறுத்தம்காலவரையற்றுநீடிக்கவும் படலாம்எதற்கும் தயாராய்த்தான்இருப்பை நிலை நிறுத்தஎடுத்தடி வைக்கிறேன்...#ஈழத்துப்பித்தன்19.04.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/04/blog-post_19.html

    • 7 replies
    • 1k views
  5. மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஐந்தாகிப் போனதுவோ- எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதோ இரசாயன நெருப்புக்குள் உறவுகள் வெந்து துடித்து கருகி மடிந்த போது இங்கிருந்து நாம் கதறி அழுதோம் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய் ஆண்டுகள் ஐந்தானதோ இன்று பாழும் குண்டு மழைக்குள் எங்கள் பச்சிளங்குழந்தைகள் பதைபதைத்து துடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதுவோ சதிவலைகள் பின்னிய நாடுகள் என்று தெரியாமல் அந்த நாடுகள் ஓடிவந்து உதவாதோ என்று இறுதிவரை நம்பிக்கையோடு காத்திருந்து அன்று எங்கள் உறவுகள் உயிர்கள் ஊமையாய் அடங்கிப்போயின. அதனை எண்ணி எண்ணி நாம் அழுது அரற்ற ஆரம்பித்து ஆண்டுகள் ஐந்து ஓடியே போனது பதுங்குகுழிகள் வெட்…

    • 9 replies
    • 1k views
  6. Started by விகடகவி,

    பார்த்த பார்வைக்கும்.. பழகிய நாட்களுக்கும்.. பால்நிலவு சாட்சி.. குலவிய வார்த்தைக்கும்.. கொஞ்சிய இதழுக்கும் தென்றல் சாட்சி... ஸ்பரிசத்திற்கு.. அலைகள் சாட்சி படர்ந்ததற்கு புற்கள் சாட்சி நம் காதலுக்கு நாம்தான் சாட்சி.. போ மறந்து போ.. என் கல்லறைக்கு கண்ணீர் சாட்சி

  7. திரு செல்வா கனகநாயகம் ஆங்கில விரிவுரையாலார் ரொரன்ரோ பல்கலைக் கழகம் தமிழ் இலக்கிய வரலாரூ எழுதிய பேராசிரியர் வி செல்வநாயகம் அவர்கலாது மகனாவார், ஈழத்து தமிழ் கவிதை சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்களூள் முக்கியமானவர். 1970பதுகளின் பிற்பகுதியில் நான் யாழ் பல்கலைக் கழக மாணாவன்/மணவர் தலைவனாக இருந்தபோது அவருடைய நட்ப்புக் கிட்டியது. செல்வாவின் மனைவி திரு எங்கள் ஆங்கில விரிவுரையாளாராக இருந்தார். மொழிபெயர்ப்புகளூக்கூடாக என்னையும் சேரனையும் புதுவை இரத்தினதுரையையும் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்த பெருந்தகை. மேலதிக தகவலுக்கு http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE…

    • 11 replies
    • 1k views
  8. சாத்திரக்காரர்கள் தலைமறைவானார்கள். சனங்களின் பெரும்பிணி சாத்திரியின் பரிகாரங்களில் தீராதென்பதை சாவு சனங்களை நெருக்கிய மலந்தோய்ந்த கடற்கரையில் பிணங்கள் மிதந்த கடனீரேரிகளில் தம்மை நோக்கி இரண்டு பக்கங்களிலிருந்தும் குறிபார்த்துக்கொண்டிருந்த துப்பாக்கிகளை அஞ்சிய இரவில் சனங்கள் கண்டுகொண்டார்கள். சனங்களோடு சனங்களாய் தப்பியோடும் அவசரத்திலும் சாத்திரக்காரர்கள் பரிகாரப் புத்தகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு மறந்திருக்கவில்லை. போகுமிடம் எப்படியோ? சூரியன் மேற்கில்தான் உதிக்குமோ? நிலவு பகலில்க் காயுமோ? போன பின்னர் பார்க்கலாம். முக்காடிட்டபடி தமக்கு முன்னர் ஓடித் தப்பிய சாத்திரக்காரர்களைச் சபித்தபடி சனங்கள் உத்தரித்தனர். ஊழி முடிந்தபின்னர்…

    • 6 replies
    • 1k views
  9. ''கண் மூடி தாக்குதல்'' கண்ணை மூடி வந்து இங்கு கண் மூடி தாக்கிறியே.... கஸ்ரப் பட்டு நான் வடித்த கவிதைகளை வெட்டுறியே... காரணங்கள் கேட்டு வந்தால் சொல்ல நீயும் மறுக்கிறியே.... உன் மனசில் என்ன வைத்து என்னை வந்து தாக்கிறியோ...??? விதி முறைகள் மறந்து வந்து வீண் பழியை வீசிறியே.... காரணங்கள் இன்றி வந்து கண் மூடி தாக்கிறியே.... கோரமதை வந்து ஏனோ இன்று என்னை சாடுறியோ....??? அட என் ஊற்றெடுக்கும் உணர்வுகளை அடைத்துவிட துடிக்கிறியோ....??? அதனாலோ வந்து என்னில் கண் மூடி தாகிறியோ....??? நன்றி வன்னி மைந்தன் :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: …

  10. நெருப்பு நீ, நீர் நான். சூரியத் தகட்டில் வெப்பந் தணியா நெருப்பு நீ, வா! வந்தனை பூமியை உருட்டு; திரட்டு; என்னோடு இணைந்து பிரட்டு. என்னுள் ஊடுருவி உள் துளை கக்கிய தீயெடுத்து நாக்கிலே குழை. அணை என்னை; அல்லது அணைப்பேன் உன்னை. பிதுக்கி யெடுத்தவாறு பதுங்கி வா! தொடு முத்தமிடு தீ முழுவதுமாய் கக்கு, முடிந்தவரை போராடுகிறேன். சத்தமிடு, மொத்தமும் இடு. இன்னதென அறியாமல் தொடுகிறேன் உன்னை தாக்கு; தேக்கு காதல் ரசங்களை (உன்)ஜுவாலைகளின் வழியே போக்கு. சுவடெரித்து விட்டு திரும்பச் செல்; இல்லயெனில் எனை நீரென்றும் பாராமல் கொல். உடுத்து; படுத்து; உன் கோப வெறிக்கு ஆளாகாத என்னை உன் சாம்பலிலே கிடத்து. அகல விரி விழ…

  11. அழகு மலர்களின் மெளன மொழியில் காதல் கொண்டு.. விரியும் இதழ்களின் காந்தக் கவர்ச்சியில் கவர்ந்து..கள்ளுண்டு கலவி கண்டு கருத்தரிக்க உதவுகிறான் காதல் தூதுவன் இவன்..! அந்த விசயத்தில் இவன் ஒரு "பிளே பாய்"..! மானுட உலகம் மாற்றி அமைத்திட்ட இயற்கையின் நியதியில் கருத்தடை மாத்திரைகள் கருப்பைகளுக்கு விடுமுறை தர யோனிகளுக்கோ ஓய்வில்லாத உரசல்கள்..! உராய்வு நீக்கிகளுக்குக் கூட அங்கு பஞ்சம்.. கிழியும் அந்த உறைகளின் வியாபாரமோ இன்று உச்சியில்..! நிமிட நேர உள்ளக் களிப்பில் போதை கண்டு.. உடலில் சேரும் அந்த மாத்திரை நஞ்சுகளின் தாக்க அறிதல் இன்றி கூடிக் களித்திருக்குது மானுட சமூகம்..! பாவம் இவன் அதே.. மானுட உலகின் அரக்கச் சிந்தனையில் பூச்சி கொல்லி…

  12. போதும் என்ற மனம்.. பொன்னான மனம்.. இனிப் பொறுத்தது போதும்.. என பொங்கிய மனமே.. தமிழுக்காய் போர்க்களமாடும்.. மனம்.. போருக்கும் மனமில்லை.. தாய் ஊருக்கும் ஒட்டில்லை உயிருக்குப் பயந்தோடி வந்தேன்.. புகழுக்கும் பொன்னுக்கும் தான் ஆசை கொண்டேன்.. தாய் மண்ணுக்காய் போராடும் அண்ணா.. உன்தம்பி ஒரு கோழை எனை மன்னிப்பாயா அண்ணா எனை மன்னிப்பாயா...

  13. பல வருடங்களுக்கு முன்னம் வாசுகி பாடுவதற்க்காக எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல் . பொங்கல் வாழ்த்துப் பாடல் -வ.ஐ.ச.ஜெயபாலன் * வெண்பனி மீது பொன்மலர் சூடும் செங்கதிரோனை வாழ்த்துகிறோம் கண்பனி சூடி எம் நினைவோடு ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம் * பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே * பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று பாசத்தில் வாடும் நெஞ்சங்களே பனியையும் மீறி பசுமையில் நிமிரும் பைன்மரம் போன்ற சிங்கங்களே * பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே * பூமியில் என்றும் அகதிகள் என்று புழுதி மண் போல சுழலுவதோ தாயகம் மீண்டு துயர்களை வென்று தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ * பொங்கல் …

    • 3 replies
    • 1k views
  14. தோல்வியில் மீளுவோம் நீண்ட பயணம்…., முடிவு வரும் ஆனால் பாதை கடினமானது. தெரிந்து பயணம் செய்தான் எங்கள் தலைவன். வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….! பயணத்தின் பாதை அது மிகக் கொடுமையானதாய் கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..! சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய் குருதியாற்றில் குளிர்தோடிய பயணம் அது முடியும் தருவாயில்…..! இதோ கனவின் கடைசித்துளி நிசமாகியதாய் நினைவு. நாங்கள் வென்றோம்…..! பாதியில் பயங்கரக்கனவு போல் பறிபோன கனவின் மீதமாய் தோற்றுப் போனோம்….! பயணம் முடியாமல் தோல்வியாய் பயணவழி வந்தவர்கள் பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும் பயங்கர அறைகளிலும்…..! எனினும் எல்லைகளை எட்டும்வரை பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த சிலர்…

  15. அன்பின் சம்பந்த சுமந்திர சிறீலங்கா தேச மைந்தர்களே..! சிங்கக் கொடி தூக்கி எம் சினம் தனித்த சிங்கங்களே...! அன்னை சிறீலங்கா மாதா உங்கள் கடவுளாம் காளியின் மறுபிறப்பே..! அவள் தம் வாகனமே எங்கள் கொடி நடுவே நிற்கும் சிங்கம். அவள் கரமிரு ஆயுதமே எம் சிங்கம் ஏந்திய வாள்..! சிரம் தாழ்த்தி ஏற்றோம்... உம்மிருவர் சிங்கக் கொடிதனைப் பற்றிய சீரிய விளக்கங்களை..! வன்னிப் போரும் முள்ளிவாய்க்காலும் வதம்...! அசுர வதம்...! தமிழீழம் என்ற வேண்டா வேள்வி செய்த அசுரர்கள் அழிக்க நாம் செய்த வதம்..! வதம் முடிந்து ஆண்டுகள் 3 ஆகின்ற இப் பொன்னான வேளையில்... தமிழீழம் மறுக்கும் தமிழ் தேசியம் மறந்த.. எம் இனிய தமிழ் பேசும் சிங்கங்கள…

  16. நீ.. எனக்கு ஒரு ஏஞ்சல் (கெஞ்சல்) நான்.. உனக்கு ஒரு வலன்ரைன் கிவ்ட் சுத்திய கஞ்சல். (கஞ்சல்) ஓசில வந்ததென்று கிவ்டை கவ்விக்கிட்ட நீ கஞ்சலை.. தூசென.. தூக்கி வீச முன் கண் திறந்து பார்.. அங்கு.. கசங்கிக் கிடப்பது நானும் என் அன்பும்..!(காதல்)

  17. வியூகம் யாவும் விடை காண்பார். நினைவிலும்,கனவிலும்,தமிழீழம் பற்றிய பற்றுதலாலான நினைவுகள் ஏந்தி ஒரு சாந்தி தரும் செய்தி ஒன்று பூம்புனலேந்தி ஐம் புலன்களை ஆதங்கமாக நீவி ஆத்ம, ஆதரவுக்கரம் தாராதோ? வனையும் நெஞ்சகத்து கதவின் காந்தங்களை, புனையும் பொய்யர்களின் பீற்றல்களை, புரட்டி,பகை விரட்டி ஏகாந்தமாகும் நமதான ஆதங்கக்கரம் பற்றி! தினையும்,ஆங்கு தினமும் எம் விடுதலை வேங்கைகளின் திளையும் வெற்றிச் சேதி ஆற்றி எம் உளவுரணேற்றி தீந்தான வாகை பகைபுலம் காட்டி நமதான வரமாக்கி மாந்தமாகும் எம் மனவிருளகற்றி,விளக்கேற்றி, விடியல் செய்தித் தீ சுமந்து, நீ எம் அகமாக சுகமான, சுமைஏந்தி சுற்றம் சூழ, மகிழ வலம் வருவாயா? ஏதிலியாக தினம் அங்கு மாயும் எம் இன மாந்தர் ஆ…

    • 0 replies
    • 1k views
  18. உலகெங்கும் வாழும் சொந்தங்களே உயிர்காக்க நீங்கள் வாருங்களே ஒருவேளை உணவு தாருங்களே எங்களில் இறைவனைப் பாருங்களே இரவோடு இரவாக இடம் பெயர்ந்தோம் சொந்த ஊரில் நாங்கள் அகதியானோம் உடுத்த உடையோடு மட்டுமே நாங்கள் ஊரை விட்டு ஓடி வந்தோம் மரநிழலில் மதவடியில்...எங்கள் வாழ்க்கை(2) வான் கூரையின் கீழே உறங்குகின்றோம் எங்கள் உயிரள்ளிப் போகும் பகைவீட்டின் செல் மழையே எங்கள் உடல்கள் எரியும் சுடுகாட்டில் தானே வாழ்வே சமைப்பதற்கோ ஏதுமில்லை சரிந்திடவோ பாயுமில்லை குளிப்பதற்கு கிணறுமில்லை குடியிருக்க குடிசையில்லையே... விழி திறந்தால் காடாய் தெரிகிறதே ஆலமரம் நிழலாய் நிற்கிறதே- ஓடி ஓடி களைத்த எங்களுக்கு கானல் நீர்தான் தாகம் தீர்க்கிறதே பசி…

  19. புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எங்கும் எதிலும் இருக்கிறார் புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எதிலும் எங்கும் இருக்கிறார் கடலினில் தரையினில் காட்சிகள் நடத்துறார் வானத்தில் எதிரியின் கதையை முடிக்கிறார் புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எங்கும் எதிலும் இருக்கிறார் வாகரை மண்ணில் இருக்கிறார் – அவர் பற்றியில் இன்னும் இருக்கிறர் கோணமலையிலும் இருக்கிறார் – திருக் கேதீச் சரத்தில் இருக்கிறார் கொழும்பில் இருக்கிறார் காலியில் இருக்கிறார் கொடும்பகை இதயத்தில் குண்டுகள் வெடிக்கிறார் விலைகளை விண்மண் ஆக்குறார் – பங்கு விலைச் சுட்டெண்ணில் இருக்கிறார் (புலிப்படை) நிலத்தில் நிலையாய் இருக்கிறார் – இவர் நலமாய் நாட்டை நடத்துறார் கடல…

    • 2 replies
    • 1k views
  20. புலிகளின் இரையாண்மை!!!!!!!! நனறி-முகநூல் http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/563189_229347280500032_100002742857647_315612_598241312_n.jpg

  21. சிறகடிக்க ஆசைப்படும்... சிறைப் பறவை, உறவுக்காய் ஏங்கிக் கழிக்கும்.... தினம் இரவை! என் வரவுக்காய்... ஆசைப்படும் 'தாய்போல்' மடியும், காத்துக் காத்திருந்தே... தினம் இரவுகள் விடியும் ! வெற்று வார்த்தைகளில் எதுவுமில்லை, மற்றத் தேவைகளின் தேவையுமில்லை! கற்ற கல்விகூட அளவோடுதான், பெற்ற அனுபவம் இன்று வாழ்வோடுதான்! கண்ட தோல்விகள் கொஞ்சமில்லை, இன்றுவரை எதுவுமென்னை மிஞ்சவில்லை! எல்லாமே எமக்கொரு பாடமென, வெல்வோமே நாம்தான் வீரரென! சந்தித்த சரிவுகளை சாய்தளமாக்கி, நிந்தித்த வாழ்வுதனை போர்க்களமாக்கி... வந்து நின்ற எதையும் வென்று நின்று, நொந்து நின்று... குனிந்த தலை....................... நிமிர்ந்து நிற்போம்!

  22. அவனில்லை இன்று எம்மோடு அவன் நினைவுகள் நீர்சூடி வழிகிறது விழியிரண்டும். அவனில்லா வனம் ஆளில்லா நிலம். அவனின்றி அனைத்துமே அனாதைப் பிணம். ஆனைகள் மிதித்து அடங்காத் துயர் மூடி அ (உ)லையும் காற்றும் ஊழித்தீயூறி அடைகாக்கும் தாயாகிறது. அவன் போலொருவன் பிறப்பான். பிரபாகரன் என்ற பெருந்தீயாய் இருப்பான். அவன் வருவான் ஆன்மபலம் தருவான். அனைத்துமே அவனாகி எமையுருக்கி ஒளிர வைப்பான். காலக் கணக்கிருப்பை கார்த்திகை ஈரம் காலவிதி கடத்திக் கரையேற்றும். கனவுகள் விதைத்துக் காத்திருக்கிறோம். சாந்தி நேசக்கரம் …

    • 0 replies
    • 1k views
  23. உலக வல்லாதிக்கத்தின் அவலம் உணராக் கோட்பாடுகளும், ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன. தொடரும் போரும், கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும், பொருத்தமில்லாச் சமன்பாடுகளும் எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன. எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும் மறுக்கப்படுகின்றன. குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. ஒரு இனவாதத்தின் படர்கை எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது. முற்றுப் பெறாத கால நீட்சியில் எம்மினத்தின் வாழ்வு வேதனைக்குள்ளாகிறது. வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம் உசுப்ப உசுப்ப உக்கிரமாகிறது விடுதலை மூச்சு. ஒடுக்குதற்கெதிரான நிமிர்வு வியாபிக்க விடுதலைச் சுடரில் சுதந்திர வாசனையை எம்வாசல் நோக்கி அள்ளிவரு…

  24. (Mohamed Nizous) தெருக்கள் எங்கும் செய்தி தீயாகிப் பரவியது குருக்கள் மடத்தில் கடத்திக் கொன்று போட்டான்களாம் விடுதலை என்ற பெயரில் தறுதலைக் கூட்டம் செய்த கொடூர பேயாட்டத்தில் குருக்கள் மடமும் ஒன்று வாப்பா வருவாரென்று வாசல்நின்ற குழந்தையிடம் பேச முடியாமல் தவித்து பிள்ளையின் தாய் அழுத நாள் அப்பாவி இவர்கள் என்று அறிந்தும் கொடியவர்கள் துப்பாக்கி முனையில் செய்த துரோகத்தின் நினைவு நாள் பொருட்களை கொள்ளையிட்டு பொதுமக்களை தள்ளிச் சென்று பொறுக்கிகள் போல சுட்டார் பொறுக்காது எவரின் மனமும் எத்தனை அழுகைகள் எத்தனை சாபங்கள் அத்தனையும் பலித்தன அப்புறம் நந்திக் களப்பில் அம்பலாந்துறையில் தேடி அகழ்ந்து பார்த்தால் தெரியும் …

    • 3 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.