கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உலகம் இப்போ ஒரு உருண்டை வீடு அதில் மனிதர் எல்லாம் -தினம் அலையும் வெறும் கூடு இயந்திரங்கள் மனிதராகி வேர்வை சிந்தாது உழைக்கலாம் மனிதரெல்லாம் ஒன்று கூடி இயந்திரமாய்ப் பிளைக்கலாம் காலம் போற போக்கில் நாளை கலியாணங்கள் நடக்கலாம் ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத தம்பதியர் கூடியே தத்துப் பிள்ளை தத்தெடுக்க இயந்திரங்கள் சமைக்கலாம் வீட்டுக் காவல் வேலைகென இயந்திரத்தில் நாய்களாய் தோட்டம் முதல் தொலைவு வரை ஓடியோடி உழைத்திட இயந்திரமாய் மனிதனை சந்தையிலும் வாங்கலாம் .
-
- 2 replies
- 860 views
-
-
எட்டு ஆண்டானாலும் அவலம் மாறாத நிலை வேண்டும் என்று செய்து வேடிக்கை பார்த்தாயோ கடலம்மா தாய் என்று மதித்தோர்க்கு தயவற்ற செயல் செய்தாய் பேயாக நீமாறி பெருந்துயர் இளைத்தாயே கடல் அம்மா என்று வாயார வாழ்த்திய மக்களை வசைபாட வைத்தாயே உன் நியாயமற்ற செயலால் நடுத்தெருவில் எத்தனை பேர் நாதியற்று தனிமரமாய் சிறியோரும் பெரியோரும் சின்ன பச்சிளம் சிறாரும் சிதறி எத்தனை பேர் போனவர்கள் வருவார்கள் என பொய்த்த வரவுக்காய் வழியை வழிபார்த்தபடி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட ஆழாத் துயருடன் இன்றும் எத்தனை உள்ளங்கள் நன்றி : முகநூல்
-
- 2 replies
- 726 views
-
-
தேம்ஸ் நதியின் புன்னகை வ.ஐ.ச.ஜெயபாலன் பாலத்தின்கீழே வாழிய தேம்ஸ் நதியே என்றபடி இறங்கியபோது `நீர் லில்லி` இலைகள் பரப்பிய உன் கரை கண்ணாடியாய் நெழிய அன்னங்களின் கீழே நீ அன்று தூக்கத்தில் நடந்தாய் தேம்ஸ். மென்காற்றில் குனிந்து வசந்தப் பூ முகம் பார்க்க நெரியும் கரையோர மரங்களின்கீழ் நடந்துவந்தோம். கழுத்தை நெழித்து சிறகை அகட்டி நீர்மீது ஓடி வான் எழுந்த அன்னப் பறவை ஒன்றின் கர்வத்தோடு மோனத் தவத்தில் முகில்களின்மீது எந்தன் கவிமனசு. சிறுமியோ நனவுகளின் புல்வெளியில் நடக்கின்றாள். நானோ தேம்ஸ் அமைதியின் தேவதை என்றேன். ”என் அம்மா மாதிரி நம்ப முடியாதவள் மாமா” என்று அந்தச் சிறுமி உன்னைக் கிண்டல் செய்தாள்.. இதே தேம்ஸ் இதே இதே இதே தே…
-
- 2 replies
- 1.8k views
-
-
இந்த உலகம் உனக்கு சிறையல்ல நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய் ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது * வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது * தடை தாண்டி ஓடிக் கொண்டிருப்பவனுக்கு தடைகள் கண்ணுக்குத் தெரியாது நீ நினைப்பது போல வாழ்க்கை ஒன்றும் மரதன் ஓட்டமல்ல அது தடைதாண்டும் ஒட்டமே * பெருமை என்பது உன்னைவிட திறமைசாலிக்கு நீ கைதட்டுவதில் அல்ல அவனையும் உனக்காக கைதட்ட வைப்பதுதான் * இந்த உலகம் பூந்தோட்டமல்ல நீ வளர தண்ணிர் ஊற்ற இந்த உலகம் பெருங்காடு நீயாத்தான் வளரவேண்டும் * உனக்கு நண்பன் இருக்கிறானோ இல்லையோ உனக்கு எதிரி இருக்க வே…
-
- 2 replies
- 1.2k views
-
-
மானவாழ்வு ஒன்று பயணம் முடித்ததோ? தமிழ்வீரம் தந்த உயிர்ப்பூவின் வாழ்வை சதிகாரக் கொலை தின்றதோ? தமிழன் துன்பங்களுக்கு கரங்கொடுக்கும் ஜனனாயகக் கரங்களுக்கே மரணம் பரிசுகொடுக்கும் சீர்கெட்ட ஜனனாயகமே! மரணத்தின் பொறியில் உன்வாழ்வை வைத்து, இன-கண்ணீரின்நீதிக்கு சேவை செய்த உன்வான்னாட்களின் துணிச்சல்கள்தான் எதிரிக்கு வயித்தெரிச்சல்களோ? உன்பிரிவைத் சுமந்த செய்தி எம் நெஞ்சங்களுக்கு இடியைத்தந்தது. தேசத்தின் விடியலுக்காய் விலையான உன்வாழ்வை எம்கண்ணீர் சுமக்கின்றது கனவுகளோடு. இரவிராஜ் அண்ணாவின் பிரிவுத்துயரில் வருந்தும் யாழ்கள உறவு வாயயும், கையையும் கட்டிபோட்ட ஒரு இனத்தை மரணம் சூறையாடும்போது. மௌனம் கலையாமல் உன் மனிதாபிமானம் நோன்பிருக்கின்றது. சிங்க…
-
- 2 replies
- 933 views
-
-
உலகெங்கும் வாழும் சொந்தங்களே உயிர்காக்க நீங்கள் வாருங்களே ஒருவேளை உணவு தாருங்களே எங்களில் இறைவனைப் பாருங்களே இரவோடு இரவாக இடம் பெயர்ந்தோம் சொந்த ஊரில் நாங்கள் அகதியானோம் உடுத்த உடையோடு மட்டுமே நாங்கள் ஊரை விட்டு ஓடி வந்தோம் மரநிழலில் மதவடியில்...எங்கள் வாழ்க்கை(2) வான் கூரையின் கீழே உறங்குகின்றோம் எங்கள் உயிரள்ளிப் போகும் பகைவீட்டின் செல் மழையே எங்கள் உடல்கள் எரியும் சுடுகாட்டில் தானே வாழ்வே சமைப்பதற்கோ ஏதுமில்லை சரிந்திடவோ பாயுமில்லை குளிப்பதற்கு கிணறுமில்லை குடியிருக்க குடிசையில்லையே... விழி திறந்தால் காடாய் தெரிகிறதே ஆலமரம் நிழலாய் நிற்கிறதே- ஓடி ஓடி களைத்த எங்களுக்கு கானல் நீர்தான் தாகம் தீர்க்கிறதே பசி…
-
- 2 replies
- 1k views
-
-
ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில், பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின் குறிப்பிட்ட அணியை வழிகாட்டி நகர்த்திக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்போராளி. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவர்கள் …
-
- 2 replies
- 2k views
-
-
மாசி மாத விடுதலைப்புலிகள் 2007ல் வெளிவந்த வியாசன் எழுதிய கவிதை பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள் நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள் சுற்றிச் சுழன்றேறி வருகின்றன நரமாமிச உண்ணிகள். சம்பூரைத் தின்று சமித்து, வாகரையை வளைத்து முடித்து, குடாநாட்டின் குரல்வளையை நெரித்தபடி முகமாலையின் முன்னரணேற முயல்கின்றன உண்ணிகள். வன்னிதான் உண்ணிகளின் ‘நம்பர்வண்’ இலக்கு பாதைகளை அடைத்துப் பட்டினி போடுவதால் விடுதலை இதயங்களின் துடிப்பை நிறுத்தலாமென உண்ணிகளை ஏவுவோர் உறுதியாக நம்புகின்றனர். கொட்டிக் குவிக்கும் ஆயுதங்களை மட்டுமல்ல பட்டினியையும் சேர்த்தே பயன்படுத்தப்போகின்றனர். விடுதலையின் விகர்சிப்பை விழுத்துவதற்கு பட்டினியையும் பயன்படுத்திய சிலர் முன்னர் வெற்றியும் …
-
- 2 replies
- 986 views
-
-
எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஈழத்தில் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியது ஆளும் வர்க்கம். வன்னியில் இறுதிப் போரின்போது பச்சிளம் பாலகரிலிருந்து பல்விழுந்த முதியவர்கள் வரை எரிகுண்டுகள் வீசப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம், நெஞ்சுவிம்ம நாடிநரம்புகள் புடைக்க என்ன செய்வது ஏதுசெய்வது என்று அறியாது தவித்தோம். எல்லாவற்றையும் விட க் கொடிதினும் கொடிதாய், எம் அக்கா தங்கைகளின் மானத்தைச் சூறையாடியதுமல்லாமல் அவர்கள் கழுத்துகளைத் திருகிக் கொன்றான் எதிரி. எப்படிப் பொறுப்போம். இரதகஜதுரகபதாதிகளையிழந்து வெறுஙகையராய் நாம் நின்றோம். கையிலிருந்த வில்லம்புகளுக்குப் பதிலாகச் சொல்லம்புகளே எமக்கு மிஞ்சின. அனியாயங்களைச் செய்தவன் ய…
-
- 2 replies
- 2.2k views
-
-
"அந்த பிள்ளையைத் தெரியுமாடா? " நண்பனிடம் கேட்டேன் "நந்தினியைத்தானே சொல்கிறாய்? பாவப்பட்ட குடும்பமடா ஒரு அண்ணன் வீரச்சாவு அக்கா போராளியாய் போய் இறுதி யுத்தத்தோடே இல்லாமல் போய் விட்டாள் இவள் மட்டும் தான்டா மிச்சமாயிருந்தாள் தகப்பனைக்கூட இந்தியாமி தனங்கிளப்பில் வைத்து சுட்டுட்டான் இவளையும் நாய்கள் விடவில்லையே" ஈரவிழிகளோடு சொல்லி முடித்தான் நண்பன் இவளுக்கு ஏதோ நடந்திருக்கிறது இல்லையென்றால் ஏனந்த பிஞ்சு தன்னையே கருக்கிக் கொண்டிருக்கும் நண்பனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் நாலு வீடு தள்ளித்தானே இருக்கிறான் "என்னடா நடந்தது அவளுக்கு?" "எதையடா சொல்வது? எப்படியடா சொல்வது? எங்கட தெருவின் செல்லப்பிள்ளை அவள் அழகாய் இருப்பாள் என்ட மூத்த…
-
- 2 replies
- 423 views
-
-
இறைவா இது நியாயம் தானா? தமிழினம் இனி அடிமை தானா? டிக் டிக் டிக்கென நொடிகள் நகருது திக் திக் திக்கென இதயம் துடிக்குது பக் பக் பக்கென பயமாய் உள்ளது இத்தனை காலம் நாம் போராடியது வீண்தானா? நாம் தோற்கப்போகிறோமா? இன்பமான நாட்கள் இனி எம் வாழ்வில் இல்லையா? உலகையே திரும்பி பார்த்து திகைக்க வைத்த தானைத்தலைவனை இழந்து விடுவோமா? அடிமைவிலங்கு உடையாதா? தலைகுனிந்து நாமினி வாழவேண்டுமா? அடுத்தவர் இகழ்ச்சிக்கு நாமினி இலக்கா? தமிழினத்தைக் காக்க யாருமில்லையா? கயவர்களிடமும் எடடப்பர்களிடமும் துரோகிகளிடமும் தமிழர்கள் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியது தானா? இனி தமிழினம் ஆண்டாண்டு காலத்திற்கும் அடிமைகள் தானா? இறைவா இது நியாயம் தானா?
-
- 2 replies
- 1.1k views
-
-
வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் 01 வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய …
-
- 2 replies
- 1.6k views
-
-
மேவும் துயர்கழுவியொரு மழை பொழியட்டும் தீச்சொரிந்து வானம் திசையழித்து எழட்டும் அந்த ஒளி விழுந்தெங்கும் பரவட்டும் அந்தோ... இருள் மூடி எந்தைநிலம். நிலப் பிளவுகளிலிருந்து எழுகின்ற ஓலம் கேட்கிறதா, சிதைந்த கற்கோளங்களில் எழுகின்ற பாடல் புரிகிறதா காற்றோடு கலந்துபோன பிள்ளைகளின் நேசம் தெரிகிறதா பெருங்கனவுடன் துடித்துக் கிடக்கிறதே மண் மேடுகள் அதாவது புரிகிறதா நிலமே எனைசுமந்த நிலமே ஊரோடுகூடி காந்தள் சூடி ஒளியேற்றி உணர்வெழுந்து மணியொலித்து முகம் பார்க்கும் உறவுகள் எங்கே... விழிநீர் மறைத்து மேனி தழுவிக் கரம் பிடித்து களமாடிய கதைபேசும் தோழர்கள் எங்…
-
- 2 replies
- 1.3k views
-
-
சப்த ரிஷிகளை ஏற்றிச் செல்ல ஒரு சிறு படகு பாற்கடலில் வரும் வரும் என்று சொன்னதெல்லாம் பொய். அதிசயங்கள் அற்புதங்களுக்காக காத்திருந்த காலமெல்லாம் வீண். கண்ணியமில்லாத யுத்தம் தலைப்பிள்ளைகளைக் கேட்டது. மரணம் பதுங்குகுழியின் படிக்கட்டில் ஒரு கடன்காரனைப்போல காத்திருந்தது பராக்கிரமசாலிகளின் புஜங்கள் குற்றவுணர்ச்சியால் இளைத்துப்போயின கள்ளத் தீர்க்க தரிசிகளும் கலையாடிகளும் ஏற்கனவே சரணடைந்து விட்டார்கள் நன்றியுள்ள ஜனங்களோ பீரங்கித் தீனிகளாய் ஆனார்கள். ரத்தத்தால் சிந்திப்பவர்கள் மட்டும் சரணடையாதே தனித்து நின்றார்கள். ஓரழகிய வீரயுகம் அதன் புதிரான வீரத்தோடும் நிகரற்ற தியாகத்தோடும் கடற்கரைச் சேற்றில் புதைந்து மறைந்தத…
-
- 2 replies
- 741 views
-
-
விலகி விலகிப் போனாலும்...... அழகாய் இருக்கிறாய் ... பயமாய் இருக்கிறது!! காதல் இது தானா? விலகி விலகிப் போனாலும்...... மனசுக்கு பிடிததால் சந்தோசம் என்கிற தீபம் திறந்து விழிகள் இருண்டும் வியக்கிறது... ஆனால்.... இன்னும் ஒரு பயம்.. ஒரு வார்த்தை போதுமே சொல்லிவிட்டு தொடர்ந்து........., கடந்துப் போனது ....தடம்!! மனதுக்குள் மறைந்திருக்கிறதோ என் காதல்? இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது
-
- 2 replies
- 1.3k views
-
-
காதலின் வேதனையை கவிவரிகளில் முடக்கலாமா? காதலின் சோகத்தை கண்ணீரினால் கழுவலாமா? உடலின் உயிரை காதலுக்காக மாய்க்கலாமா? இதயத்தின் காதல் வலியை மருந்து கொண்டு மாற்றலாமா? காதலின் வலியுடன் மறு பிறப்புமட்டும் காத்து இருக்கலாமா? கிடைத்த காதலைத்தான் இப்பிறப்பில் இழக்கலாமா? காதல் என்னும் இனிய சாக்கடையில் எதிர் நீச்சல் போடாமல் இருக்கலாமா?
-
- 2 replies
- 1.1k views
-
-
எழுந்தோடு....... ஏனடா வருகிறாய் ஏறியே சிங்களா எங்களின் எல்லையில் உனக்கென்ன வேலடா....??? சத்திய வேள்வியில் செத்து மடிந்திட்ட வேங்கைகள் எத்தனை... இத்தனை இழந்தோம் விருட்சமயானோம் தேசத்தை என்ன விட்டிட்டு ஓடவா....??? எரிமலை ஆகியே எழுகிறோம் நாங்களே இனி -தீயினில் பொசுங்குமே உங்களின் அரண்களே... எங்களின் வீரரை என்னென்று நினைத்தாய்...?? கோழையர் என்றா கொக்கரித்து சிரித்தாய்... இந்தோ வருகிறோம் இறப்புனக்கெழுதவே இனியும் நிற்காதே எழுந்தின்று ஓடடா... எத்தனை காலங்கள் எம் மண்ணை ஆழ்வாய்...??? இனியும் பார்த்திட நாமென்ன பைத்தியகாறறா....??? அந்நியா எமக்கு அடிமை சாசனம் எழுதவா முனைந்தய் எழுந்தே ஓடடா... …
-
- 2 replies
- 934 views
-
-
நான் அழுகிறேன் இன்று தோல்விகளின் முழு உருவமாய் பிறந்தேனே என்று...
-
- 2 replies
- 1.2k views
-
-
சேகர் அண்ணாவின் (தமிழ்சூரியன்) பகீரதப்பிரயர்த்தன முயற்சியால் அவரது இசையிலும் எனது குரலிலும் வரிகளிலும் காட்சிப்படுத்தலிலும் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுச்சேர்க்கும் முகமான பதிவு. முள்ளிவாய்க்கால் பேராவலம்முடிவில்லா ஓர் அவலம்பன் நாட்டுப்படை புகுந்துபல்லாயிரம் உயிர் தின்றுசொல்லாத கதை கோடிசுமந்து கிடக்கும் மண்ணதுவில்லாண்ட இனம் ஒன்றுவீறுகொண்டு போர் கண்டுவிடுதலைக்காய் வேள்வியொன்றைவிருப்புடனே நடத்தியதையைகண் காணச் சகிக்காதகாடையர்கள் கூட்டிணைவில்இனம் ஒன்று அழிந்ததுவேஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமேபல தேசம் வாழ்ந்தோம்பார் எங்கும வீதி வழி குவிந்தோம்பலனேதும் கிடைக்காமல்பரிதவித்து பைத்தியமானோம்இனப்படுகொலை ஒன்றைஇரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறிஇந்தியப் பெருங்கடலும…
-
- 2 replies
- 1.3k views
-
-
கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது! கத்தலோனியர்களே! ——————————— கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது! சனனாயகத்தினை நம்பும் அயலவர்கள் உங்கள் அயலிலே! அரசுகள் எப்போதும் விடுதலையை ஏற்பதில்லை அது அவர்களின் மரபுமல்ல ஆனாலும் உங்கள் விடுதலைப்பாடல் உலகெங்கும் கேட்கிறது! உலகின் சில சக்திகள் இன்று உறுமாலாம் – ஆனால் நாளை கைகோர்ப்பர் ஒன்றிணைவர் வளங்களின் வழியே தமது நலன்களைக் காண்பர் ஆனாலும் என்ன உங்கள் விடுதலைப்பாடல் உலகெங்கும் கேட்கும்! தானாகக் கிடைப்பதல்லவே விடுதலை தொடர் முயற்சியே சுதந்திரக் காற்றினை உங்கள் தேசவெளியில் வீசச…
-
- 2 replies
- 632 views
-
-
காட்சிப்பிழைகள் - கே இனியவன்காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்) காதல் ஒரு மந்திர கோல் ..... இரண்டு இதயங்களை .... ஒன்றாக்கி விடும் ....!!! நெற்றியில் ... குங்கும பொட்டு.....? அப்பாடா - சாமி .... கும்பிட்டு வருகிறாள் ....!!! தேவனிடம் .... பாவ மன்னிப்புக்கேட்கிறாள் .... என்னிடமும் கேட்பாள் .....!!! ^^^ கனவு நிஜத்தில் நிறைவேறாத ... ஆசைகளை நிறைவேற்றும் .... நீர்க்குமிழி .....!!! திடுக்கிட்டு எழுந்தாள் .... தாலியை கண்ணில் வணங்கி... என்னை பார்த்தாள் ....!!! இன்னும் சற்று தூங்கியிருந்தால் .... சொர்கத்தை......... பார்த்திருப்பேன்....!!! ^^^ நீ என்னை .... காதலிக்கும் வரை ... உத…
-
- 2 replies
- 1.2k views
-
-
எனக்கு மின்னஞ்சலில் வந்தது ஈழத்துப் பாப்பா பாடல் ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
பனியின்றி குளிரின்றி இந்த வருடத்தின் முதல் சிரிப்பு இயற்கையின் சிரிப்பில் துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..! மலர்வது மலர் மட்டுந்தானா..! மனிதர்களுந்தான்..! நகரமே சிரித்தது யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது சிரித்துக் களித்தது இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க மலராய்த் தெரிந்தது குட்டைப் பாவாடைகளும் கட்டை ரீசேர்ட்டுகளும் தலை காட்டா விட்டாலும் சிட்டுக் குருவிகளாய் இளசுகள் உதட்டோடு உதடுரசி மூக்கோடு மூக்குரசி கெஞ்சலும் கொஞ்சலுமாய்..... வட்ட மேசைகளைச் சுற்றி வட்ட மிட்ட கதிரைகளில் பெரிசுகளும் சிறிசுகளும் கண் பார்த்துக் கதை பேசி மெல்லுதட்டில் தமை மறந்து ஐஸ் சுவைத்து...... கை கோர்த்து நடக்கையிலும் காதலுடன் இடை தழுவி …
-
- 2 replies
- 1.6k views
-
-
உன்னோடு ஓடிக்கொண்டிருந்த நதியாக நான் இருந்த போது ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தது ஏனோ குளமாக தேங்கிவிட்டேன் ஆனாலும் என்னைச் சுற்றி உன் நினைவென்னும் குளக்கட்டுகளே உன்னோடு ஓடியதும் நானே உன்னோடு உருண்டதும் நானே உன்னோடு விழுந்ததும் நானே உன்னோடு கலந்ததும் நானே ஆனாலும் நீ நானில்லாமலே சேர்ந்துவிட்டாய் வாழ்க்கை எனும் கடலில் நான்தான் உன்னை நினைத்தே தேங்விட்டேன் குளமாய் இருந்தாலும் யார் வீட்டு குழம்பிலாவது நீயும் ஒரு நாள் உப்பாகலாம் நானும் ஒரு நாள் நீராகலாம் அப்போதாவது உண்மை சொல்வாயா..? ஏன் என்னை விட்டு சென்றாயென்று -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 1k views
-
-
நீ சிரித்து பேசும் பொழுதுகளை விட விட்டு விலகும் பொழுதுகளில் தான் என் காதல் அழுது அடம் பிடித்து உன் பின்னேயே வருகிறது...
-
- 2 replies
- 720 views
-