கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=29KnF92oRog&feature=player_embedded பார்த்ததில் விரும்பி ரசித்தது.உங்களுக்காக இங்கே இணைகிறேன். நன்றி : முகநூல்
-
- 6 replies
- 1k views
-
-
நாசமாக்கிய நாகரீகம் !!!!!! மண் வெட்டிய மண்வெட்டிகளும் இல்லை உழுது உண்ட கலைப்பைகளும் இல்லை வெட்டுமண் சுமந்த பின்னல் கூடைகளும் இல்லை குடிநீர் சேகரித்த குளங்களும் இல்லை கால்கிலோ தங்கத்தை கடுக்கானாய் சுமந்த காதுகளும் இல்லை கோபுரங்கள் கண்ட சிற்பங்களும் இல்லை விடியலில் ஒலிக்கும் பாகவதர் ராகங்களும் இல்லை குளங்களில் குளித்த கோமனங்களும் இல்லை வெத்திலை பாக்கு பரிசங்களும் இல்லை நல்லது கெட்டதை சொல்ல பெரியோர்களும் இல்லை தோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டுகளும் இல்லை நியாங்கள் சொன்ன பஞ்சாயத்து அரச ஆலமரங்களும் இல்லை நல்லதையும் கெட்டதையும் கட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
நம்மை மறந்த நமது நட்சத்திரங்கள் ! காவிரியில் தண்ணீர் வரவில்லை கால் நடையில் சென்றீர்கள் உங்களின் கடமையுணர்வு தெரிந்தது! கார்கில் வீரர் காயம் ஆறவில்லை கைகள் கோர்த்து நின்றீர்;கள் உங்களின் கண்ணியம் புரிந்தது! ஈழத்திலே போர் இன்னும் ஓயவில்லை குஞ்சுகளின் தலையில் குண்டுமழை உங்களின் கட்டுப்பாடுதான் தெரிகிறது! மக்கள் திலகம் எம்.ஐp.ஆர் போல்;; நடிகர் திலகம் சிவாஐpயும்-எங்கள் மண்ணையும் மக்களையும் நேசித்தார்! உலகம் முழுதும் திரைவானிலே உங்கள் திரைபடம் ஓடவேண்டுமா அங்கே ஈழத்தமிழன் ஓடிவருவான்! உரிமைக்காக குரல் எழுப்பி உலகம் முழுதும் அலையும்-ஈழத் தமிழனுக்காய் நீங்கள் ஓடிவரவில்லை! தலைமுடி கோதும் படையப்பா தர்மத்தின் தலைவனாய் ந…
-
- 5 replies
- 1.3k views
-
-
கதிரவன் கரங்கள் தீண்டக் கண்டால் சூரியகாந்தி நாணும்.. கார்முகில் வரவு கண்டால் மயில் தோகை கொண்டாடும் பனித்துளி ஒட்டக் கண்டால் புல்லும் கூசிக் கூனும் மழைத்துளி ஒளித்தொடுகை கண்டால் வானம் கோலங்கொள்ளும் தூறல்தன் முத்தம் கண்டால் நிலம் நிறம் மாறிப் பூரிக்கும் பூவிதழ் விரிதல் கண்டால் வண்டு போதை கொள்ளும் நீரோட்டம் தேடக் கண்டால் ஆறு சலசலத்து குதூகலிக்கும்.. தென்றல் தடவக் கண்டால் தென்னங்கீற்று தெம்மாங்கு பாடும் சோடியது கூடக் கண்டால் கானக்குயில் கவி பாடும்... சூரியனின் சூடு கண்டால் பனி உணர்ந்து உருகும்... வான் மழை புணரக் கண்டால் சிப்பி கர்ப்பம் தரிக்கும்.. பெண்ணே உனைப் புவி கண்டால் நயகரா உறையும்... நான் உன் அழகு கண்டால் சிலையாகிச் சரணடைவேன் உன்னிடம்..! இய…
-
- 9 replies
- 773 views
-
-
நரபலி காட்சி வந்து நீ பார்.... இங்கே வந்து பாரு உலகே இங்கே வந்து பாரு அந்த கயவர் செய்யும் கோரமதை இங்கே வந்து பாரு.... துண்டு துண்டாய் உடலறுந்து கிடைக்கும் நிலை பாரு அந்த குண்டுகளை ஏவியவன் செய்யும் கோரம் காணு..... முண்டமதாய் மூச்சிழந்து கிடக்கும் நிலை காணு எங்கள் முந்தையர்கள் விட்ட தவறால் வந்த நிலை காணு..... என்ன செய்தார் என்றிவரை ஏனழித்தான் கேளு.... உயிர் குடிக்கும் இன வெறியன் மகிந்தன் செயலை காணு.... உணவாக தமிழர் உடலை உண்ணும் நிலை காணு.... மனிதம் உள்ளாய் நீ என்றால் வந்து நீயு பாரு உனக்கு - உள்ளம் இருந்தால் வந்து பார்த்து உலகே தீர்ப்பு கூறு.... நம்ம மக்கள் …
-
- 0 replies
- 979 views
-
-
சாந்த முகமதியாள் - அவள் சந்தண மணத்தழகாள் காந்தள் மலர் விரலாள்- என் கவிதைக்கு கருப்பொருளாள் கவரி மானொத்த மானத்தாள் கனிரசக் குரலழகாள் பாவலனாய் என்னைக் கவி படைக்க வழி சமைத்தாள் சின்ன இடை ஒடிந்து விழும் - அவள் சிங்கார நடையழகாள் அன்பொழுக பேசுவதில் -என் அன்னையையே வெண்றுவிட்டாள் சின்னக் குடைபோல் விரியம் செம்பவள வாய் திறந்தால் மின்னுகின்ற நட்சத்திரப் பல்லழகு கவிபடைக்கும் விம்மித் ததும்புகின்ற பொன் வண்ண அழகு அவள் தீபம் அவள் பெயரில் - எனக்கு அளவுக்கு மேல் ஆசை பட்டுத் தளிர் மேனி அவள் பாதம் செந்தாமரை -வெண் பட்டுத் துகில் உடுத்து நான் கவிஎழுத வைத்தவள் தான் என் கவிக்கு நாயகியாள் கற்பனைக்கு கருப்பொருளாள் ஆனால் இன்னும்…
-
- 18 replies
- 2.8k views
-
-
நலமறிய ஆவலுடன்....., "அன்புள்ள அக்கா, நலம் நலமறிய ஆவல்" அம்மாவுடன் கதைத்தேன் அக்காவுடன் சண்டை பிடித்தேன் பேச்சுவார்தைகள் நடக்கிறது புலிகளின் நிலவரம் போர்ப்பிள்ளைகளின் துணிகரம் என இணையஞ்சல் ஊடாய் நேசமொடு - என் நெஞ்சில் இடம் கொண்டான். "ஊருக்கு வா அக்கா உனைக்காண வேண்டும் போருக்குள் நின்று வன்னி பாருக்கு அறிமுகமாய் ஆனகதை சொல்ல ஊருக்கு வா அக்கா" அடிக்கடி அஞ்சல் எழுதிய புலி. பூவுக்கும் அவனுக்கும் பொருத்தம் நிறைய. அத்தனை மென்மையவன். போராளிப் பிள்ளையவன் போர்க்களம் புடமிட்ட புலியவன். புலம்பெயரா உறுதியுடன் பலம்பெற்ற தம்பியவன் ஞாபகத்தில் நிற்கின்றான் - என் நினைவகத்தில் பத்திரமாய். அம்மாவின் கதை அண்ணாவின்…
-
- 5 replies
- 1.3k views
-
-
காற்றே நலமா? என்னை தாங்கி நின்ற தாய் நிலமே நலமா? கடலே நலமா? அலையே நலமா? கரை தூங்கும்-கட்டுமரமே நீ- சுகமா? மரத்தடி பிள்ளையாரே நலமா? எங்கள் மனங்களில் வாழும் மறவர் குலமே நீங்களும் நலமா? ஒற்றை பனை மரமே - நலமா? உயிர்வாழ பால் தந்த பசுவே நீயும் நலமா? பள்ளிக் கூடமே நீ நலமா? பாடம் சொல்லி தந்த - குருவே நீங்களூம் நலமா? முரட்டு வீதியே நீ நலமா? அதில் முக்கி முக்கி போகும் மாட்டுவண்டிலே நீ நலமா? தோழர்களே நீங்க நலமா? தோழியரே நீரும் சுகமா? முச்சை கயிறு அறுந்து போக ஓடி போன நான் விட்ட பட்டமே நீ நலமா? எங்கு நீ இருந்தாலும் என்னையும் கேளேன் "நீ நலமா?" வயல் வெளியே நலமா? வரம்புகளே நீங்கள் சுகமா? ஆழக்கிணறே நீ ந…
-
- 41 replies
- 6.6k views
-
-
செடிவாழ நீர் தேவை... நான் வாழ-நீதேவை.. நீ வாழ வாழ்த்தி-இங்கு நான் வாழப் பார்க்கிறேனோ...? இல்லை..இல்லை... நீ வாழ நான் தேவை நான் வாழ நீ தேவை அதனால்.... "வாழ்த்துக்கள்" உனக்கு...அதனால்... எனக்கும்.....நானே... அத்துடன் ..அனைவரிற்கும்-தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
- 7 replies
- 1.6k views
-
-
நேசித்து பாருங்கள் முடியவில்லை என்றால் பிறர் நேசிப்பதை யோசித்து பாருங்கள் அன்பு உங்களை அடிமையாக்கி விடும்...
-
- 0 replies
- 1.7k views
-
-
அம்மா உன் கருவறை மீண்டும் தருவியா... நல்ல சயனம் அங்குதானே மீண்டும் தாங்கவருவியா.. இந்த பூமி ரொம்ப இரைச்சல்.. அதுதானே என்னிதய எரிச்சல்.. நட்பு என்பதை நம்பி நான் மோசம் போனேன் தம்பி அன்பு என்ற அம்பு என்னைத்துளைகள் செய்தது நம்பு இது மனிதம் இறந்த காலம் புவி திரும்பச் சுழலக்கூடும்.. ஒழுக்கம்தானே உயர்வு பண்புதானே வாழ்வு நல்லதென்றும் யோசி -நன் மெய் அதையே பேசி.. தந்தை சொன்ன மந்திரம்-இன்று தவிக்கும் தனயன் மாத்திரம்
-
- 7 replies
- 1.3k views
-
-
நல்ல நாளு பாத்திருக்கு.... குத்தகைக்கு நாட்டை வைச்சு குண்டுகளை வேண்டி வந்து.... மிச்ச மீதி உள்ளோரையும் மிகையொலியால் அழித்திடவே மெல்ல மெல்ல துவங்கி விட்டார்.... நட்ட நடு நாசியென்ன பட்ட பகல் வேளையென்ன.... பறந்தடித்து ஓடி வந்து பாவிகளை அழித்து போறார்.... நல்ல நாளு பாத்திருக்கு நம்ம வீட்டு ஏவுகணை.... சங்கெடுத்து ஊதி உன்னை சங்கரங்கள் ஆடிடுவார்.... ஆணவத்தில் ஏறி நின்று நல்லா வந்து ஆடிப் போ.... உன்னை அடக்கம் செய்ய எம்மவரும் புதை குழியை வெட்டிவிட்டார்.....!!! வன்ன மைந்தன் -
-
- 0 replies
- 711 views
-
-
வாரஇறுதி விடுமுறைகூட வருடங்களின் பின்புதான் ஓய்வின்றிய உழைப்பில்.. தொலைந்து மறையும் தொலைதூர உறவுகள் தொலைபேசி அழைப்பில்.. முழுநாளும் வேலைக்குள் தடம்மாறும் நண்பர்கள் முகம்பார்க்க முடியாமல்.. தொலைவில் இருந்து தொலைபேசிக்குள்ளே குடும்பம் நடத்தி.. தூங்கியெழ மட்டும் வீடுவந்து செல்லும் குடும்பத்து உறவுகள்.. பம்பரமாய் உழைக்கும் பரதேசி வாழ்க்கையின் பாழாய்போன கொள்கை.. பசிக்கும்போது உணவு களைத்தபோது தூக்கம் கிடைத்தாலே போதும்.. வருஷங்களுடன் சேர்த்து வாழ்க்கையை தொலைக்கும் வலிமையான வட்டத்துள்.. முடிவற்ற பாதையில் தெளிவற்ற பயணமாய் புரிந்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
பொய் சொல்லவத்தில்லை உண்மையை மறைத்திருகிறோம் இதை விட கொடுமை பாதி உண்மை பேசியிருக்கிறோம் - கொடுமையில் கொடுமை பாதி உண்மை பேசுவதுதான் -இதை எல்லாம் செய்து விட்டு நல்லவனாக வேஷம் போடுகிறோம் நடிக்கிறோம் .....!!! @@@@@@ தப்பு என்று தெரிந்து கொண்டு தப்பு செய்திருக்கிறோம் -ஆனால் மற்றவர்கள் செய்யாத தப்பையா நான் செய்கிறேன் என்று சமுதாயத்தை அடமானம் வைத்து தப்பு செய்கிறோம் நல்லவனாக நன்றாக நடிக்கிறோம் .....!!! @@@@@@@ திட்ட மிட்டு பிறர் காசை திருடியது இல்லை ஆனால் வழியில் கிடந்த பணப்பையை யாரும் உரிமை கோராதபோது எம் பணமாக்கி செலவு செய்கிறோம் மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம் வழியில் கிடந்த காசு பொது சொத்து யாரும் பயன்படுத்தலாம் என்று நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ... நன்றாக நடிக்கிறோம் .…
-
- 0 replies
- 789 views
-
-
நீலவானம் சொரியும் மலர்களாய் வெண்முகில் கூட்டம் கூடி வேலவன் கோவில் தேடியோடி...! கோபுரத்தை உரசும் தென்றல் பணிந்து வேம்பைத் தழுவி எழுந்து பனையைத் தொட்டுச் செல்லும்...! வீடுகளில் முற்றத்தில் தோட்டத்தில் வள்ளல்களாய் மலர் மரங்கள் செடிகள் கொடிகள் பயிர்கள் பந்தல்கள்....! நல்லூர் வீதிதோறும் கூந்தல்களில் மணக்கும் வண்ண வண்ண மலர்கள் நகரும் நந்தவனங்கள் ஒயிலாய் இடை அசைவில் சிதறும் மணிகள்...! ஆறுமுகம் அருகில் இரு தேவியரும் அலங்காரமாய் அமர்ந்திருக்க அழகு இரதம் புறப்பாடு ஆரம்பம்...! வீதிகளில் தேர் ஓடுவது ஊர்களிலே மாந்தர் வியர்வையில் திளைத்து தேர் மிதப்பது நல்லூரினிலே...!!
-
- 1 reply
- 713 views
-
-
மதிலொன்று மறித்துக் கிடக்கிது. கருங்கல்லாய் இருக்கலாம் காரிரும்பாய் இருக்கலாம் ஒருவேளை தேவலோகத்துச் சாமானாயுமிருக்கலாம் மதில் தெரியிது அதன் பலம் தெரியிது முன்னர்: பூசாரி வந்து குளை அடிச்சுப்; பாத்தார் பரியாரி வந்து மூலிகை வைச்சார் பாம்புக்கடி வைத்தியரும் ஒருக்கா வந்துதான் போனார் கைமருந்து பலிக்கேல்ல சீமையில் படித்த சிறப்புச் சிகிச்சைகள், கேரள மாந்திரீகர், மட்டக்களப்புச் சமாச்சரம், ஒண்டும் தான் பலிக்கேல்ல மதில் இப்ப மினுமினுப்புக் கூடிக் கிடக்கிது பூசாரி ஊத்திய பாலும் பஞ்சாமிர்தமும் காரணமாயிருக்கலாமாம்;: பேச்சுமிருக்குது கனகாலம் கதைக்காது புதிராய்க் கிடந்த ஊர்க் கிழவர் ஒருநாள் திடுப்பெண்டு சொன்னார் "உதுக்கும் ஒரு சாமானிருக்க…
-
- 18 replies
- 2.3k views
-
-
கையில்லாச் சட்டை! தணிக்கையில்லாத் தொடை! சாயச் சிவப்பில் சமாதியாகிப் போன உதடுகள்! புருவ மேட்டில் கருமேகக் குவியல்! இரவு உடையில் வீதி உலா! தேரொன்று நடப்பதாய் எம்மவர் கண்கள் இமையா(து) தவம் இயற்றும்! தடுக்கி விழும் இதயம் எடுக்கி அணைத்தால்(ள்) சொர்க்கத்தில் பயணம்! இளமை வெட்டி ஒட்டிய 'லேபிள்கள்' உற்றுப் பார்த்தால் எல்லாம் போலிகள்! உதடு பிரிந்தால் வார்த்தைகளுக்கு வலிப்பு எடுக்கும்! ஆங்கிலம் நிர்வாணம் ஆகும்! மூலையில் தமிழ் முக்காட்டுடன் மெல்ல விசும்பும்! பார்வை வண்டுகள் சிறகடிக்கும் ரோஜாவென யோசித்து மயங்கும்! குதிக்கால் உபயத்தில் உயர்ந்து விடுவார்கள்! …
-
- 2 replies
- 1.7k views
-
-
புதிய பாதைகள் படைப்போம் அழகிய பூமி, அதைத் தொடும் எல்லையற்ற வானம் இவை நடுவே விதம் விதமாய் பல்லுயிர்க் கோலங்கள். அவை நடுவே எமை இணைக்கும் பகுத்தறிவுப் பாலங்கள் இப் பிரபஞ்சத்தின் விந்தைகள் பலகோடி வாழ்வின் சிக்கல்களும் அவற்றிட் சிலகோடி அத்தனையும் அவிழ்க்கும் அறிவு சக்தி - நம்மில் அளப்பரிய ஆற்றலாய் இருந்தும் என்ன பயன்? என்ன செய்கிறோம்? எதைக் கண்டு கொண்டோம்? ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம் ஆனால்அங்கு எம் பிணங்களையும் அறுவடை செய்கிறோம் எம்மைத் தாங்கும் மண்ணை நம் குருதியால் நிரப்புகிறோம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்வுகளாய் உதித்து விந்தைகள் புரிந்த கடவுளர் பெயரால் பல வஞ்சனைகள் புரிகிறோம் பகுத்தறிவு இருந்தும் பூமியைப் பல தேசங…
-
- 1 reply
- 1.5k views
-
-
நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது "ஒருவழிப் போக்குவரத்து" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! ஒரு வழிப் போக்குவரத்து ----------------------------------------------- நடுத்தெருவில் நிற்கும் பிழைப்பு அவருக்கு. உச்சி வெய்யிலில் புகை தூசுக்கள் இடையில் ஆயிரம் கவலைகளை மனதின் மூலையில் தள்ளி நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார். சிவப்பு விளக்கு கண்டல்ல, சீருடைக் காவலர் சீறுவாரென்றே விதிகளை மதிக்கப் பழகியிருக்கிறோம் நாம். அவருக்குள்ளும் கவிதை இருந்திருக்கும், கோடையின் வெப்பத்தில் உருகி ஓடியிருக்கும். …
-
- 2 replies
- 996 views
-
-
நவராத்திரி நாயகியே! முத்தமிழாய் இனிக்கின்ற முப்பெரும் தேவியரின் விந்தைகளை வித்தைகளைக் கொண்டாடும் நாள் வருது! இத்தரையில் பிறந்துவிட்ட அத்தனை பேரினுள்ளும் சக்தி என்றே ஒன்றேதான் இயக்கங்கள் நடத்திடுது! "அன்னை" என்ற சொல் ஒன்றே அன்பை அள்ளி வழங்குதல் தான் தேவைகளைத் தான் அறிந்து கொடுக்கின்ற உறவு அவள் தான்! முதல் மூன்று நாட்களும் மன உறுதி வீரம் தனை அள்ளித் தருகின்ற மலைமகளாய்!அடுத்த மூன்று நாட்களிலும் குறையாத வளம் நிறைவாகத் தரும் செல்வி திருமகளாய் நிறைவாய் மூன்று நாட்களிலும் அறிவுக்கண்ணைத் திறந்து கல்விஞானம் கொடுக்கின்ற கலைமகளாய் அருள் வழங்கும் சக்தி அவள்! அவல்,கடலை,சுண்டல் என இந்து வீடெங்கும் களைகட்டும்! பாடல்களும் பண்ணுமங்கே மனசுக்கு சுகம் கூட்டும்! விண்ணாளும் த…
-
- 15 replies
- 2.5k views
-
-
முத்தேவியரின் புகழ் பாடிடும் இனிய இரவு முத்தமிழ் இன்பத்தில் மூழ்கித்திளை மனது மெய் ஒன்று உளதென ஆன்மா உணரும்; மெய்யன்போடு வையத்தை வாழ்த்தி மகிழும். ********* வண்ண நறுமலர்கள் கண்கவர் அலங்காரம் எண்ணெய் தீபம் காண் உள்ளமும் பிரகாசம். பண்ணுடன் இசை வாணி புகழ் கேள் மனம் மண்ணிலே ஓர் சொர்க்கத்தை உணரும். ********* சங்கீத சுரங்கள் செவி தனைச் சேர்ந்திட சிந்தையில் உதித்திடும் அழகுக் கோலமும், அசைவிலா வண்ணச் சித்திரம், சிற்பம் மனதை அசைவுறும் வண்ணம் செய்திடும் விந்தையும், அழகுறு மங்கையர் அபிநய நடனம் காண் ஆன்மா செய் நடனத்தின் அற்புத உணர்வும் கலைமகள் உந்தன் இருப்பினை உணர்த்திடும் ; கலைத்தாய் உன்னைப் போற்றிடும் என்னுள்ளம்! ********* ப…
-
- 2 replies
- 8.1k views
-
-
காதலித்து கெட்டு போ.அதிகம் பேசுஆதி ஆப்பிள் தேடுமூளை கழற்றி வைமுட்டாளாய் பிறப்பெடுகடிகாரம் உடைகாத்திருந்து காண்நாய்க்குட்டி கொஞ்சுநண்பனாலும் நகர்ந்து செல்கடிதமெழுத கற்றுக்கொள்வித,விதமாய் பொய் சொல்விழி ஆற்றில் விழுபூப்பறித்து கொடுமேகமென கலைமோகம் வளர்த்து மிதமதி கெட்டு மாய்கவிதைகள் கிறுக்குகால்கொலுசில் இசை உணர்தாடி வளர்த்து தவிஎடை குறைந்து சிதைஉளறல் வரும் குடிஊர் எதிர்த்தால் உதைஆராய்ந்து அழிந்து போமெல்ல செத்து மீண்டு வாதிகட்ட,திகட்ட காதலி..~ முனைவர் டாக்டர் நா.முத்துக்குமார்----------------------------------------------------------------------------------------------------------------------------------------------நா.முத்துக்குமார் "" துளிப்பாக்கள் ""உள்ளாடைக் கடைகளில்அளவு கு…
-
- 0 replies
- 154.2k views
-
-
அழகான குக் கிராமம் .... கூப்பிடு தூரத்தில் ஆங்காங்கே .... குடிசைவீடுகள் இடையிடையே ... வேற்று காணிகள் ,முற்பற்றைகள் .... முற்பற்றைகள் நடுவே மண் புற்றுகள் ... எந்தபுற்றில் பாம்பு வசிக்கிறதோ .... அந்த புற்று கோயிலாக மாறும் ...!!! வீடுகள் என்னவோ குடிசைகள் ... பாம்பு புற்றுகள் செங்கல் மாடங்கள் ... பல கால நித்திய பூசை , பால் அபிஷேகம்... ஏட்டிக்கு போட்டியாக புற்றுக்கள் .... கோயிலாக மாறும் போட்டியாக ... விதம் விதமான பூசைகள் .... பக்தர்களுக்கு திண்டாட்டம் .....!!! ஊரில் குறி சொல்பவரே நீதிபதி .... ஊரின் நீதிபதி சொன்னால் இறுதி ... யாரும் திருப்பி பேசமாட்டார்கள் ... பேசினால் நாகதோஷம் பற்றிவிடும் .... அவருக்கு வரும் கனவுகள் ... காலபோக்கில் கோயிலாய் மாறிவிடும் .... அயல் கிராமத்தவரும்…
-
- 2 replies
- 2.3k views
-
-
நாங்க தமிழர்! நாங்க கனடா. ஆனால் மற்ற தமிழர்கள் கனடா வர வேண்டாம் என்று சொல்லுவம். நாங்க தமிழர்! கனடாவில் வேலை இல்லை என்று செல்லுவம். ஆனால் இரண்டு வேலையும் நல்ல சம்பளத்தோட நல்ல வேலை செய்வம். நாங்க தமிழர்! கனடாவில் கஸ்ரம் என்று சொல்லுவம். ஆனால் இரண்டு வீடு வைத்திருப்பம். இரண்டு மில்லியன் dollars மேல் சொத்து வைத்திருப்பம். நாங்க தமிழர்! குளிர் வராதேங்கோ எண்டுவம். நாடு போனா வெக்க தாங்க மாட்டம் என்று படம் காட்டுவம். நாங்க தமிழர்! என்னோட பிள்ளை கனடாவில் என்று பெருமை பீத்துவம். ஆனால் பக்கத்து வீட்டு காறன் போறான் என்றால் வயிறு கூட ஒரு நிலைக்கு வர முடியாம தவிப்பம். நாங்க தமிழர்! எங்கட…
-
- 4 replies
- 753 views
-
-
ஆலன் என்ற சிரியா அகதிக் குழந்தை ஒன்றை ஒரு நாள் அலை கடல் தின்றது தெரியுமோ. ஏன் அவன் இங்கு வந்தான் என்றும் எதற்காக அவன் பிறந்த நாட்டில் வாழ முடியவில்லை என்றும் எவன் தான் கதைத்தான். எவன் தான் இவர்களை கடலினில் தேடினான். ஆனால் பணம் படைத்தவர்களுக்கோ அமெரிக்கர்களுக்கோ ஐரோப்பியர்களுக்கோ ஏதும் துன்பம் நடந்தால் உடனே முழு ஊடகங்களும் அதனோடு முழு உலகமும் பேசும். எத்தனை பாகுபாடுகளைக் கொண்ட சமத்துவமும் நீதியும் இல்லாத உலகம் இது. நாங்க மனுசங்க தான்ரா-பா.உதயன் எங்கள் தலையிலும் குண்டுகள் விழுந்தன எத்தனை மனிதர்கள் இறந்தனர் தெரியுமோ உங்கள் கடலிலும் அகதிகள் இறந்தனர் எத்தனை அகதிகள் இறந்தனர் தெரியுமோ ஏழைகள் இறந்தனர் எவருக்கும் தெரியுமோ எத்தனை குழ…
-
- 4 replies
- 384 views
-