Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அவன் ..... இல்லாவிட்டால் .... நான் இல்லை ... நான் இல்லாவிட்டால் .... அவனுமில்லை .... நாங்கள் இரட்டை .... பிறவிகள் இல்லை .... அப்போ நாங்கள் .... யார் ...................? & & & & & விடை ; உடலும் உயிரும் ...!!! ^ சிறுவர்களுக்கான கவிதை கவிப்புயல் இனியவன்

  2. அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நீயும் நானும் என்றும் ஓர் உயிராக பத்து மாத பந்தத்தில் இனத்தோடு ஆறாவதாய் ,பெற்ற இந்த உயிர் அரக்கரின் நுழைவால் சிதறியோடி அடைக்கலம் புகுந்த கோவில் உனக்கு எயமனின் பாச கயிறுஎனும் செல் விழும் இடம் என்று அறிந்திலேன் . உன் கடை குட்டியுடன் நீயும் என் குஞ்சுகளுடன் நானும் சிதறியோடிய அந்த நாள் பசி, பட்டினி ,யுடன் நான் இருந்தாலும் ,என் குஞ்சுக்கு மாப்பால் பருக்க கெஞ்சி நான் சுடு நீர் வைத்து பால் கொடுக்க , பிஞ்சு என் முகம் பார்த்து முறைத்து ,அடம் பிடிக்க , அம்மம்மாவின் கோமதியின் பசுப்பாலுக்கு ஏங்க ....நான் பட்ட துய்ர்கொஞ்சமா ? ஓடியும் நடந்தும் . பதுங்கியும் நானும் என் குஞ்சுகளும் ,என் மாமா மாமியும் தள்ளாத அவர் வயதில் தடுமாறி…

  3. http://youtu.be/Gj3Fs8IQscE எங்களுக்கும் ஆயிரம் ஆசைகள் உண்டு.. அதில் கட்டுநாயக்கா போய் கடல் கடந்து அந்நியப்பட்டு அந்நிய தேசத்தில் கடவுச்சீட்டொன்றில் வதிவிடம் வாங்கி களித்துப் பின் கலியாணம் கட்டி இசைஞானியின் காதல் இசையில் கருத்தால் மயங்கி கலவி செய்து கலந்திப்பதும் ஒன்று...! ஆனாலும் கால்கள் நகர மறுத்தன. காலம் தடுத்து நிறுத்தின. அன்னை தேசம் அடிமை விலங்கு தாங்கி அழுது புலம்பும் நிலை அனுதினமும் அமைதி குலைத்தது...! கழுத்தில் நஞ்சு கட்டி களமதில் கருவி ஏவி சாவு பல கண்டோம் ஏன்..... கார்த்திகை 27 இல் எமக்கு ஓர் நாள் கழிப்பு கழிப்பீர் என்றோ..???! கல்லறைகள் வரிசையாய் அடிக்கி நிற்கும் கோலம்.. எம்…

    • 109 replies
    • 7.2k views
  4. தடுமாற்றங்களும் குழப்பங்களும் நிறைந்த மன நிலை நாம் என்ன செய்ய 2009 உலகமே சேர்ந்து குழப்பியது எம்மை குவிந்தது தாயகத்தில் பிணங்களின் குவியல் கந்தக புகை நிறைந்தது எங்கும் நச்சு புகையும் சேர்ந்தே இருந்தது இலங்கையில் ஓரினம் இன்னோரினத்தின் முகவரி பறித்தது பார்த்தது சர்வதேசம் சதியில் ஐநாவும் பங்கெடுத்தது உரிமைக் குடி ஒன்றின் உரிமை மறுப்பை உலகம் பார்த்தது உரத்து அறிக்கை விட்டன சில நாடுகள் சிறிலங்கா செய்ததை சரி என்று!!! துன்னாலைப் பிறந்தவன் லண்டன் நகர் வசித்தவன் மூவொன்பதாண்டு வயதுளான் முருகதாசெனும் பெயருளான் மூண்ட சினம் கொண்டான் உலகுக்கு உண்மை நிலை புகன்றிட வந்தான். ஏழு பக்கத்தில் எழுதி முடித்தான் மரண சாசனம் உண்மைக்…

  5. Started by sathiri,

    எதிர் பார்த்திருந்தேன் இந்த ஆண்டிற்கான தலையின் படம் வரவில்லை எதிர் பார்த்திருந்தேன் இந்த ஆண்டிற்கான தளபதியின் படம் வரவில்லை எதிர் பார்த்திருந்தேன் உலக நாயகனின் படம் வந்தது ஆனால் எதிர் பார்த்தது கிடைக்கவில்லை எதிர் பார்த்திருந்தேன் சூப்பர் ஸ்ராரை அவர் வருவாரா ? வரமாட்டாரா தெரியாது ஆனால் எதிர் பார்த்த ஒன்று வந்தது ஜ.நா சபை அறிக்கை வழைமைபோல். கண்டிக்கிறோம். எதிர்பார்ப்புக்கள் தொடரும்.....

    • 8 replies
    • 1.1k views
  6. சும்மா கிடந்த நாம்.. தமிழீழ விடுதலை என்றோம்.. ஆயுதம் எடுத்து ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..! தமிழ் மக்களின் தலையினில் நன்றே.. மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..! ஆட்காட்டி வயிறு வளர்த்தோம்..! போகும் வழி இடையில் மறந்தோம்.. சிங்களச் சீமையில் சீமைப் பசுக்களிடையில் சரணடைந்தோம்..! தாடி வளர்த்து கம்னீசியம் காட்டினோம் வெள்ளை ஜிப்பாவில் ஜனநாயகம் பேசினோம் புலி எதிர்ப்பும் தமிழீழ அழிப்புமே எங்கள் அரசியலாக்கினோம். இன்று... ஆக்கிரமிப்பு படைகளோடு தும்பினியின் இடுப்பாட்டத்தில் சதியோடு குதி போடுறோம்.. தெரியுது தமிழீழம்.. சிங்களச் சீமைப்பசுவின் சிற்றிடையில் என்று வாக்குக் கேட்கிறோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயா…

    • 17 replies
    • 2.6k views
  7. இத்தழிந்து போய்விடவில்லை என் இனத்தின் நம்பிக்கை. கொழுந்தெறித்து கிளைபரப்பிய இனவிருட்சத்தின் வேர்களை கிளறியவனே பார்...... செத்துவிடவில்லை எங்கள் வேர்களில் இன்னும் நம்பிக்கை. என்ன செய்யப்போகிறாய் இனி.... எங்களை கொன்ற கதையை யார்யாருக்கோவெல்லாம் வென்ற கதையாக சொன்னாய்..... எங்கள் பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை மாலை புனைந்து கொண்டாடினாய்..... எங்கள் மகவுகளின் நெஞ்சுகளில் நச்சுகுண்டுகளை விதைத்துவிட்டு மண் வணங்கி மகிழ்ந்தாய்..... உனக்கான காலமென்று ஒன்றிருந்தால் எமக்கான காலமொன்றும் வரும் ! மீண்டும் வரும் !! *********************** காலம் திரும்புகிறது. நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள் குருவிச்சியும் இனி வரக்கூடும் வன்னியன் குதி…

  8. Started by kulir,

    நான் வாழ்ந்த மண்னை நினைதத்துப் பார்த்தேன் . சுடும் வெயிலில். நடைசெய்தாலும் மரநிலலின் காற்றின் குளிர்மை. நெடும் துரம் நடை செய்தாலும் அந் கால் பட்டமண்ணின் ஒருசுகம். வியர்வை சிந்த சிந்த . தாகத்தை தேடி போனேன் தரைகளில் இருந்த மரத்தின் கனிகளை உண்டேன். தண்ணீரே தேவை இல்லை . திரும்ப வீடு வந்தேன். சுவையுடன் சமைத்துக்கிடந்த உணவை சுவையாகவே உண்டேன்: மாமரகிளையில் ஊஞ்சல் கட்டி கால் மேல் கால் போட்டு விசுகின்ற காற்றின் ஒளியில் நித்திரை செய்த நாள் அந்தநாள். இன்று என்மண்ணையும் உறவுகளையும் நினைத்து நினைத்து உள்ளம் வருகி உருகிபோகிற மொளுகு திரி போல் என் மனம் உருகிறதம்மா . நான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்கை . திரும்ப வருமா திரும்ப வருமா

  9. Started by yakavi,

    படித்தவனும் இங்கே தான். படியாத மக்களும் இங்கே தான். பணம் சேர்த்தவனும் இங்கே தான். பரம ஏழையும் இங்கே தான். குடித்தவனும் இங்கே தான். புகைத்தவனும் இங்கே தான். நடித்தவனும் இங்கே தான் நல்லாய் இருந்தவனும் இங்கே தான். கடவுள் காப்பான் என்று இருந்து கடைசியில் வருபவனும் இங்கே தான். இனி கடவுள் தான் காக்க வேண்டும் என்று சிலருக்கு செல்வதும் இங்கே தான். சமரசம் உலாவும் இடமும் இங்கே தான். மனித வாழ்வில் இயற்கையின் இரண்டு நிலை ஐனனம் மரணம் இங்கே தான்.

    • 0 replies
    • 753 views
  10. சாய்த்துச் செல்லப்பட்ட ஆடுகளில் பலியிடப்பட்டது போக மீதியானைவைகள் பட்டிக்கு திரும்புகின்றது இந்தச் சந்தையில் ஆடுகள் எப்போதும் பலியிடப்படுவதற்கே வளர்க்கப்படுகின்றது நரிகள் பரிகளானது போல் ;ஆடுகள் நாய்களாகி பலியில் இருந்து தப்பித்தும் கொள்கின்றது வெள்ளை நிற மேனி விரும்பி பன்றியான ஆடுகள் தெருவெங்கும் அசிங்கங்களை துப்பரவு செய்து மகிழ்கின்றது மான்களான ஆடுகள் வனவிலங்குச் சாலைகளில் துள்ளிக் குதிக்கின்றது பசுவான ஆடுகள் கோயில்களை சுற்றி பவ்வியமாக சாணிபோடுகின்றது நரிகளான ஆடுகள் ஊர்க்கோடிகளில் என்னும் ஊழையிடுகின்றது புலியான ஆடுகள் எல்லாம் மாண்டுபோனது எந்த வடிவமெடுத்தென்ன சிங்கத்துக்கு பசிவரும்போது இரையாவது வித…

  11. காதல் மொழியை புரிய வைத்த அகராதியே காலை எனை எழுப்பும் காணக் கடிகாரமே மாலை எனை மயக்கும் மந்திர மகுடியே உன்னை தனிதனியாக வர்னித்தால் சக அங்கம் என் மீது வழக்கு தொரலாம் என முழுதாய் வர்னிக்க வார்தைகளை தேடினால் பாவிக்கவிஞர்கள் சகலதையும் திருடி விட்டார்கள். காப்புரிமை இல்லையாம்.அதானாலென்ன உன் மீது எனக்கும் என் மீது உனக்கும் இருக்கும் உரிமை பிரிவு இல்லாது நிலைக்கும்

  12. எழுதப்படாத ஓலைகள்! ------------------------------- எவருமே தழுவிக்கொள்ள மறந்த அந்த இரவுகளில் மரணம் மட்டும் மறக்காமல் எங்களைத் தழுவிக்கொண்டிருந்தது! தூரத்தே இருந்த சாக்குருவிகள் எங்கள் இழப்புகளிலும் பூபாளம் பாடிக்கொண்டிருந்தன! ........... ........... ........... ........... ........... அவை இப்போதும் பாடிக்கொண்டுதான் இருக்கின்றன! :0 முள்ளிவாய்க்காலில் சாவடைந்த அனைத்துப் போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் கண்ணீர் வணக்கங்கள்!

    • 2 replies
    • 619 views
  13. உன்னை சுவாசித்த நாட்கள் கண்களை ழூடிப்பாத்தேன் கண்ணீர் வரவில்லை-- கண்களை திறந்து பாத்தேன் கண்ணீர் வந்தது --காற்றின் ஒளியினால் உன்னை நினைத்து கண்களை ழூடினேன் கனவுகள் வருவதில்லை நீயும் தெரிவதில்லை-- என்னையே நினைத்து கண்களை ழூடினேன் அந்த கனவில் நீ அல்லவா ...தெரிந்தாய் உன்னிடம் பேசினேன் உன் மௌனத்தை புரிந்து கொண்டேன் ------- மெய்யானாலும் பொய்யானாலும் உன் மனசுக்குள் இருப்பவன் நான் அல்லவா காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி கனவில் வந்து என்னை கலாட்டா பண்ணுவாய் ஆனால் நேரில் வந்து நின்றாலும் நிமிந்தே பாக்கமாட்டாய் ஏய் திருட்டு பொம்மை உன்னையே நினைத்து ...பாரு உன் கண்களில் நீர் கசியுமா உன் கல்லான மனதாலே என்…

    • 11 replies
    • 2.2k views
  14. நாள்கள் நெருங்கிறது .. நினைவெல்லாம் நாட்டை நோக்கி .. சிறகுகள் இருந்தும் பறக்க முடியா .. பறவைகள் எல்லாம் கூட்டில் .. அமைதியா வேடிக்கை பார்க்கிறது .. தன் எஞ்சிய குஞ்சுகளை காப்பதா ... இல்லை இழந்த குஞ்சுக்கு ஒளி ஏற்றவா .. சிறகுடைந்த குஞ்சுக்கு உணவு தேடவா .. என்ன செய்வேன் சிறு கூட்டில் நான் ... உணவு தேடி போன என்னவன் வரும்வரை .. கொஞ்சம் கீச்சிட்டாலும் பக்கத்தில் உள்ளவர் ... கூண்டோடு பிடிங்கி எறிவர் அல்லவா ... எனக்கு ஏது நிரந்தர கூடு இவ்மண்ணில் .. பாலையில் ...வீரையில் ..பனையில் என்று ... மாறி மாறி தங்கிய களைப்பு இன்னும் போகவில்லை .. மீண்டும் ஒரு கூடு பின்னும் எண்ண இல்லை .. இருக்கும் கூண்டில் இருப்பவரை வளர்த்து விட்டால் .. தனிமரத்தில் நான் மட்டும் உற…

  15. நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது! எமக்குப் பின்னால் பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது! தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது வெண்பனி தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி எம் செவி வழி நுழைந்தது வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை ! சந்தடி ஓய்ந்த தெரு வழியே நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் ! இப்படியே எத்தனையோ இரவுகளில் விவாதிப்போம் நெடு நேரம் முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன் பிரிந்து செல்வோம் ! பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில் உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் ! பரணி... உன் நினைவுகள் தேய்ந்து கொண்ட…

    • 0 replies
    • 681 views
  16. பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே பாடலைக் கேட்டுவிட்டு நீங்கள் அளித்த கருத்துக்கள் விமர்சனங்களுக்கு எனது பதில் கருத்துக்கள். சுகன் உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எதிர்பார்க்கவில்லை! யாழ்களத்தில் இருந்து இவ்வளவு உறவுகள் இந்தப்பாடலைக் கேட்டு இதற்கு தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் வழங்குவார்கள் என்று. அந்த வகையில் முதலில் மோகன் அண்ணாவிற்கு எனது அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன். யாழ்கள அனைத்து முகமறியா அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். எங்கள் வளர்ச்சியில் யாழ்களமும் இணைய அணில்போல் பங்கெடுத்துக் கொள்வதையிட்டு நாங்கள் பெருமகிழ்வடைகிறோம். உங…

  17. Started by Paranee,

    01.04.2002 அன்று கரவை பரணீ என்ற பெயரில் யாழ் இணையத்தின் முன்னைய களத்தில் எழுதிய கவிதை காலத்தின் தேவை கருதி இன்று இங்கு உறங்கிய தமிழினம் இன்று விழித்துக் கொண்டது. ஊடுருவிய சிங்களம் அங்கு ஆட்டம் காணுது விடுதலைவேண்டிய வீரர்கள் விரைந்து வருகின்றார்கள்.... இங்கு உறங்கிடும் தங்கள் உறவுகளை விழிக்கச் செய்கின்றார் கல்லறைக்குள் உறங்கிடும் சகோதரர்கள் கண்விழித்தெழுகின்றார் தலைவன் காட்டிய பாதையில் சென்ற நம் வீரர் வெற்றி பெறுகின்றார்.. அடிமை விலங்கு ஓடித்து தமிழன் அங்கு பறக்கத் தொடங்கி விட்டான் பட்டினிச் சாவு ஒழிந்து அவர்கள் பாடத் தொடங்கி விட்டார் காசிற்காய் Nபுhராடிய சிங்களம் இன்று சிலையாகி விட்டது... நாட்டிற்காய் போராடிய ப…

    • 3 replies
    • 1.1k views
  18. மண்ணும் விண்ணும் மட்டுமல்ல மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல். அதை எப்படி ஆரம்பிப்பது ? யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து ? இல்லை எடுத்துச் செல்லுங்கள் உங்கள் அதீத கற்பனைகளை. மதுவும் விந்தும் ஊறிய சொற்க்களை. கனவு வரை மண் தோய அவள் இட்ட அடிகளில் உள்ளதே கவிதை. அவள் பி.ஏ முடிக்கவில்லை என்றார்கள். அவள் காட்டில் என்றார்கள் மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள். நானோ அவளை கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன். நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா அல்லது அவள் மீதான மதிப்பினிலா. கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன் நடுங்கும் என் கால்களை. அவள் அதே அமைதி ததும்பும் முகமும் குருத்துச் சிரிப்புமாய் முகவரி கேட்காதீர்கள் என்றாள். …

    • 12 replies
    • 2.4k views
  19. கடற்கரையில் நாம் நடந்த சுவடுகளை கடலலை அழிக்கும்! கண்ணே நீ என் இதயத்தில் நடந்த சுவடுகளை யாரழிப்பார்? *********** மனசுக்குள் மத்தாப்புக் கொளுத்தியவள்... மனசையே கொளுத்துவாள் என்று யார் அறிவார்? *********** வீணை அங்கே விரல்கள் இங்கே இராகத்தை மட்டும் ஏனடி திருடிக் கொண்டாய்? *********** என் இதயச் சுவற்றில் உன் ஞாபகச் சிலுவைகள்! எப்போதடி உயிர்த்தெழும்?

  20. பணத்திற்காய் சீதனச் சந்தையில் உனது வாழ்க்கையை பொருளுக்காய் விற்கும் ஆண் ஜாதியே- நாம் உனக்காய் குரல் கொடுக்கவா? இந்த கோழைகளுக்காக குரல் கொடுப்போம் சீதனம் என்னும் கொடிய அரக்கனை கொன்றொழித்திடுவோம்... பெண்ணே விழித்தெழு! பேரம் பேசி தனது வாழ்க்கையை விற்கும் நிலையில் இந்த ஆண்மகனா? அவமானம்..... அவமானம்.... கேவலம் கேவலம் உன் நிலை கேவலம் பணத்திற்காய் விலைபோகிறவள் விபச்சாரி பணத்திற்காய் வாழ்க்கையை விற்பவன் நீ மட்டும் எந்த வர்க்கம்? நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட நாங்கள் பொம்மைகள் அல்ல -நாங்கள் மானமுள்ள, உணர்வுகொண்ட மாதர்கள் பணம் செலுத்தி,பல் இளித்து பஞ்சனை நாங்கள் தேடவில்லை மானம் உள்ள ,எங்களுக்கேற்ற மகராஜனைத் தேடுகின்றோம்.…

  21. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்61-ம் ஆண்டு பிறந்தநாள்:26.11.2015வாழ்த்து-----------இயற்கை எனது நண்பன்...!வாழ்க்கை எனது தத்துவாசிரியன்...!வரலாறு எனது வழிகாட்டி...!மொழிந்தாய் முன்னாளில் தெளிந்தேதறிகெட்ட தமிழர் தமக்கோஅனைத்து மானாய் நீயே!வாழ்க நின்தவம் பல்லாண்டு!!அறம் அறிவு வீரம்சேர்ந் ததோர் வடிவாய்...ஈனம்சார் உலகில் மானம்சார்தலைவன்! தம்பியு மானாய்!!தமிழ்வீர மரபின் விளைவாய்போருலகில் புதுமை கண்டுஉலகில் தமிழர் முகமானாய்!வாழ்க நின்வீரம் பல்லாண்டு!!பெளத்த நெறிவிடுத்து மகாவம்சகதைப்படித்த மொக்குச் சிங்களன்பகைமுடித்து ஈழம் வென்றெடுத்துஆளவா தமிழி னத்தைபுவி போற்றவா நம்குலத்தை!வாழ்க நின்புகழ் பல்லாண்டு!!-----------------------------------இவண்: வன்னிவேலன்

  22. உன்னை மறப்பதும் .... இறப்பதும் ஒன்றே ...!!! தோப்பில் இருந்த ... மரங்கள் வெட்டப்பட்டு ... தனிமரம் நிற்பதுபோல் .... உன்னை இழந்து தனியே .... நிற்கிறேன் .....!!! காதலில் தோற்ற .... ஒவ்வொரு இதயம் தீயில் கருகிய இதயம் ... மீண்டும் துடிக்க விரும்பாது .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

  23. Started by sathiri,

    ஒரு துளி இறுக்கியணைத்த விறைப்பு இறங்க ஓடத்தொடங்கிய ஒரு இலட்சம் வீரியங்கள் விழ விழ எழ முடியாமல் ஒன்று மட்டும் திரும்பி பார்த்து வீழ்வேன் என நினைத்தாயோ? உட்புகுந்தது :lol: :lol: வேறையார் நான்தான். சும்மா ஏதோ தோன்றியது கனக்க யோசிக்க வேண்டாம்

  24. நெஞ்சுக்குள் தரிசனம்.! எங்கள் பண்பாட்டின் ஆன்மீக அடையாளமாய் நிமிர்ந்த நல்லூர் முருகா! நின் பெருந்திருவிழா அழகில் நெஞ்சு நிமிரும் நாளுக்காய் காத்திருந்தோம் இன்று.. நின் தரிசனம் காண அடையாள அட்டை இன்னுமின்னும் பற்பல நிபந்தனைகள் அந்தக் கிருமிக்கு அவ்வளவு வல்லமையா… 650 பேர் சோதனை செய்து 300 பேருக்கு மட்டும் அனுமதியாம்! எனது எண் 301 ஆனால்…. நெஞ்சு தளர்ந்தேன்! நெஞ்சுக்குள் நின் அழகு தரிசனம் காணும் நினைவிலே அமைதி காண்பேன்.!! – சண்முக பாரதி https://www.vanakkamlondon.com/nallur-sanmugaparathi-25-07-2020/

  25. Started by karu,

    தாயிருந்த மண்ணைவிட்டு சமச்சிருந்த சோத்த விட்டு ஊரழிய வந்தோமே ஒன்றுமின்றிப் போனோமே தோல் நிறமும் மாறலியே சொந்த குணம் போகலையே தேரிழுத்து வீதியெல்லாம் செய்த தவம் காக்கலையே புலம்பெயர்ந்து வந்து புலம்புவதால் என்னபயன் மட்டக்களப்போடு மன்னார்தான் போனாலும் வன்னி இருக்குதென்று மகிழ்வோடிருந்தோமே! வெட்டி அரிந்தெம்மை வேரோடு சாய்க்க வென்று வாசலிலே நிற்பவனெம் வாழ்வை அழிப்பானோ! சுற்றிவர நின்று சுடும் பகையைக் காலெடுத்து எற்றி இறைவா எமக்குதவி செய்யாயோ! (யாராவது இந்த ஒப்பாரியைத் தொடருங்கள்.)

    • 9 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.