கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
பயங்கரவாதி -தீபச்செல்வன்.. பனை மரங்களை பிடுங்கி கித்துல் மரங்களை விதைப்பாய் என் பூர்வீக வீடுகளை சிதைத்து இராணுவ முகாங்களை எழுப்பி எனை பயங்கரவாதி என்பாய் ஆலமரங்களை வீழ்த்தி வெள்ளரச மரங்களை நடுவாய் என் ஆதிச் சிவனை விரட்டி புத்தரை குடியேற்றி எனை பயங்கரவாதி என்பாய் எனதுடலை நிர்வாணமாக்கி இராணுவச் சீருடையை போர்த்துவாய் எனது வீரர்களின் நடுகற்களை உடைத்து உனது வெறிச் சின்னங்களை எழுப்பி எனை பயங்கரவாதி என்பாய் பிழையாய் எழுதியென் மொழியை அழித்து உனது மொழியை திணிப்பாய் எனது பாடல்களை அழித்து புரியாத உன் பாடல்களையென் செவிகளுக்குள் சொருகி எனை பயங்கரவாதி என்பாய் எனது நிலங்களை அபகரித்து உனது பெயர்களை சூட்டுவாய் எல்லைகளை மெல்ல …
-
- 0 replies
- 952 views
-
-
இணைந்தோம்! உலகத் தமிழராய் நாங்கள் இணைந்தோம்! நினைத்தோம்! எங்கள் தமிழ் உயிர் உயிரென நினைத்தோம்! (இணைந்தோம்) தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும் தாங்கினோம் இன்பம் தாங்கினோம்! அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ் அன்பினால் உலகை வாங்கினோம்! (இணைந்தோம்) சிரித்த தமிழ் முகம் நிலைத்த வையகம் செய்வோம் என ஆணை ஏந்தினோம்! விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும் விடுதலை வானில் நீந்தினோம்! (இணைந்தோம்) மானமே வாழ்வாய் நின்றோம் மலைகளை மோதி வென்றோம்! இயற்றியவர்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
-
- 1 reply
- 952 views
-
-
மனிதனாக எவரும் இங்கு வாழவில்லையே தனியுடமை இன்னும் இங்கு போகவில்லையே பொதுவுடைமை எங்கும் இங்கு வரவுமில்லையே பொல்லாத உலகம் இது மாறவில்லையே எல்லோர்க்கும் எல்லாமே கிடைக்கவில்லையே உழைப்பவன் கை இன்னும் உயரவில்லையே உனக்கும் எனக்கும் சமத்துவம் எதுகுமில்லையே சமூக நீதி வந்ததாக தெரியவில்லையே மாற்றம் இன்னும் இங்கு மாறவில்லையே அது வரும் என்ற நம்பிக்கைதான் கையில் இருக்குது. பா.உதயன் ✍️
-
- 1 reply
- 951 views
-
-
நான் இறந்தே போனேன் ஆனால் ... என் இதயம் துடி துடிக்க. நான் பேச்சு அற்று கிடந்தேன் ஆனால் ... எனக்குள் குரல் ஒலிக்க நான் பார்வை இன்றி கிடந்தேன் ஆனால் ... வெளி உலகை உள்ளூரப் பார்த்து நான் அசைவின்றி கிடந்தேன் ஆனால் ... கனவு என்னை தொலை தூரம் கொண்டு செல்ல நான் இறந்தே போனேன் ஆனால் ... உயிராய் ... உயிராய் இறந்தேன்.
-
- 5 replies
- 951 views
-
-
""""இந்தியாவே எம்மை காத்திடாயா....???"""" தேசம் எரியுது தீயினிலே தமிழ் உடல்கள் வீழ்குது வீதியிலே.... அழுகுரல் வருகுது காற்றினிலே அட உலகே விழலாயா உன் செவியினிலே....??? குருதியில் நனையுது புலவுகளே வலி - கோரத்தில் துடிக்குது உறவுகளே.... போக்கிடமின்றி தவிக்கின்றதே போகவும் வழியின்றி துடிக்கின்றதே.... உணவுகள் இன்றி வதங்கின்றதே உதவுவார் இன்றி கலங்கின்றதே.... தாவிட கூடுகள் வேறில்லையே தாவிய கூடுகள் காணலயே... அந்நியன் வன்முறை அடங்கலயே அகதி வாழ்வின்னும் குறையலயே.... ஓடியே ஒதுங்கவும் முடியலயே ஒளிந்திட மறைவிடம் இன்றில்லையே... குண்டுகள் தோண்டிய குழியதுவே - புதை குழியாய் நமக்கின்று …
-
- 2 replies
- 951 views
-
-
எதுவரை நீளுமோ அதுவரையும் எதுவரை தொடருமோ அதுவரையும் அந்தங்கள் இல்லா அறுபடாச் சங்கிலியாய் தொடருமடி - நம் நட்பின் சங்கீதம் ………………………………………….. எங்கோ இருந்தபடியே என்னை கடிகார பொம்மையாய் ஆட்டி வைக்க உன் நட்புக்கு மட்டுமே முடிந்ததடி ………………………………………….. நீ உனக்காக உனக்காக என்று கவிதைகள் கேட்கிறாய் நான் உனக்காக உனக்காக என்று என்னையே எழுதுகின்றேன் ………………………………………….. நீ நேசிக்கின்றாய் என்றெண்ணி மகிழ்ந்து போகிறேன் என்னையல்ல நிழல்படங்களை என்றறியாத சின்னக் குழந்தையாய் ………………………………………….. என்னைப் போலவே எந்தன் கவிதைகளும் உன்னால் நிராகரிக்கப்பட்டவுடன் உடைந்து துண்டாகின்றன …
-
- 2 replies
- 951 views
-
-
'மகிந்தா ஆட்சி கலைய போகுது....'' ஜயா மகிந்தா ஆட்சியது குலைய போகுது..... அந்தோ பார் அலையதுவும் ஏறப் போகுது.... அவலம் தந்த படைகள் எல்லாம் சிதறப் போகுது.... சீற்றம் கொண்ட புலியணிகள் சீறப் போகுது.... சிங்களவன் படை நிலைகள் உடையப் போகுது.... அவன் சிந்தனைகள் கூட அங்கு சிதறப் போகுது.... ஓலத்தில பகை அணிகள் ஓட போகுது.... ''அந்த திருமலையும் இன்றுடனே விடியப் போகுது.....'' எங்கள் மண்ணும் எங்கள் வசம் ஆகப் போகுது.... அந்த ஆட்டத்திலே மகிந்தா ஆட்சி கலைய போகுது.... - வன்னி மைந்தன் - :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 1 reply
- 950 views
-
-
நான் இசைப்பிரியா ஓயாத கடலின் அலைகள் இடைவிடாது என்னுடலில் மோதியபடி மடிந்து சரிகின்ற வேளையில் ஆழமாய் வேர்ப் பரப்பி விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல என்னை இழுத்துச் செல்கிறாய் என் காலடியிலிருந்து ஒழுகி வழியும் நீர்த்துளிகள் உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய் வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும். அடர்ந்த வனத்தில் தனித்துத் திரியும் மிருகத்தின் வெறிகொண்டு என்னை வல்லுறவு செய்கின்றாய் சதையை ஊடுருவிய உன்னால் என் நிலத்தின் நிணநீர் ஓடும் எலும்புகளை என்ன செய்ய இயலும்? என் மார்பகங்களை அரிந்து வீசிய உனக்கு அதன் அடியிலிருக்கும் நெருப்பின் சூடு தகிக்கவில்லையா? நீ ஏந்திய இரும்புக் கருவியும் பாய்ச்சிய உடற்குறியும் இனி எழுச்சியின் அமிலத்தில் கரைந்தே போகும் …
-
- 3 replies
- 950 views
-
-
-
- 10 replies
- 950 views
-
-
மகரந்தங்களின் கண்ணீரும் பருவம் தப்பிப்போன பாலணுக்களின் திட்டைக்களும் நிறைந்து கிடக்கின்றன தேன்களில்கூடுகளில், சுடர் தின்ற விட்டிலின் கனவுகள் கருகி பரவுகின்றன அழகோடு இயைந்த நிலவினைப் புணர தேடியலைகிறான் சூரியன் இரவினை கொன்றும் பிறக்கிறது இரவும் நிலவும். இலைகளை வெறுத்த கிளைகள் காத்திருக்கின்றன, பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக, சாம்பல்மேடுகளில் மேய்ந்த மாடுகளின் மடிகள் கறக்கின்றன ஆசை தீய்ந்துபோன வெப்பத்தோடு, அன்பு... ஒருவர் மனம் நெகிழும்படி மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் என்று தெளிவாக வரையறை செய்கிறது அகராதி. அநேக நாக்குகளில் வழிகிறது துர்நாற்றம் சிலவேளைகளில் விசமாகவும். அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் விடைகள…
-
- 17 replies
- 949 views
-
-
ஏன் உதைத்தீ ( ர )ர்களே ?? இருட்டில் இருந்த உங்களுக்கு வெளிச்சம் காட்டியவர்கள் நாங்கள் உங்கள் பசியெடுத்தபொழுது குறிப்பறிந்து ஊட்டியவர்கள் நாங்கள்..... உங்கள் வலி கண்டு எங்கள் வலியாய் துடித்தவர்கள் நாங்கள்....... உங்கள் வெம்பலுக்கும் தேம்பலுக்கும் குளிர்நிலாவாய் இருந்தோம் நாங்கள்..... எங்களுக்கு என்று ஒரு சந்தோசம் நீங்கள் கண்டதுண்டா ?? உங்கள் வாழ்கையில் மெழுகுதிரியாய் எரியும் எங்களை ஒருகணம் உங்கள் , பார்வை திரும்பியதுண்டா ?? உங்கள் ஏற்றம் இறக்கம் எதிலும் ஒன்றாய் கலந்த எங்களை ஏன் எட்டி உதைத்தீ(ர)ர்களே ?? மைத்திரேயி 19/01/2013
-
- 14 replies
- 949 views
-
-
என்றும் என்னில் கலந்த உறவே எப்போதும் எனக்காய் வாழும் உயிரே என் தாய் போல் அன்பு காட்டிய நீயே என் தவிப்பு புரியாமல் மௌனமாக என் மனவாசல் கதவின் தாழ் திறந்த நீ காலங்கள் வரும் காத்திரு என்றாய் காலங்கள் ஓடுகின்றன உன் நினைவுகளுடன் காலமகளும் சிரிக்கிறாள் உன்வார்த்தைகள் காணாமல் போனதாக கடைவாய் சிரிப்புடன்
-
- 1 reply
- 949 views
-
-
ஒரு புலம்பெயர்ந்தவனின் புலம்பல் தை பிறந்தால் வளி பிறக்கும் பயிர்கள் எல்லாம் தழைத்தோங்கும் மாசியில் மாம்பழம் மறக்கேலா நினைவு அது பங்குனியில் கதியால் வெட்டு பரபரப்பாய் நாட்கள் நகரும் சித்திரையில் வேம்பு பூத்து சிறப்பாய் சிலிர்த்து நிற்கும் வைகாசியில் விசாகம் தமிழர் வரலாற்றுப் பாரம்பரியம் ஆனியில் அனல் வெயில் அப்பப்பா என்ன புழுக்கம் ஊரெல்லாம் வெப்பத்தால் உறங்கிவிடும் வீட்டுக்குள் எங்களுக்கோ கொண்டாட்டம் எவ்வளவு சந்தோசம்........... பின்னேரம் கிளித்தட்டு காலையில் பாட்டுக்குப்பாட்டு கனவுகளில் கவலையின்றி களிந்தது எம் இழமைக்காலம் இடையில் வீடு வந்தால் இருக்கும் சாப்பாடு இடையிடையே அம்மாவின் வசைப்பாட்டும் வழமையங்கே உப்பிடியே பு…
-
- 1 reply
- 948 views
-
-
கூடினார்கள் எரித்தார்கள் கலைந்தார்கள் சனீஸ்வரர்களுக்கு எள்ளெண்ணெய் வைத்ததில் பூசகர் இல்லம் புனருத்தாரணம் பெற்றது. ------------------------------------- கறிவேப்பிலை, பன்னக்குழை தேங்காய்ப் பொச்சு இவைகடந்து தீச்சட்டி, தீவட்டி, வேப்பிலை, சாணகம் வளர்தொழிலாய் தமிழர்களின் ஏற்றுமதி வியாபாரம். - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 948 views
-
-
யாழ் அது எனது வாழ்வு அதன் உறவுகள் எனது உடன் பிறப்புக்கள் யாழ் எனக்கு எல்லாம் தந்திருக்கிறது ஐயா அண்ணன் அக்கா தங்கை தம்பி மாமன் மச்சான்......... யாழ் எனக்கு தாய் அமைதி வழி நடந்து அடிவாங்கி ஆயுதம் தூக்கி நரித்தனமாய் அழிக்கப்பட்டு உருக்குலைந்து இனி என்ன செய்ய என்ற நிலையில் நான் சாய்ந்த மடி யாழ்........... யாழ் என் தங்கை போல அழகு செய்ய ஆசை நடந்த நல்லவை அனைத்திலும் நானும் பங்காளி ஆபத்து வந்தபோது காவலன் யாழ் என் பெண்டாட்டி போல அதன் அருமை எனக்கு தெரிவதில்லை எனது பலவீனங்களை நான் ஒரு போதும் வெளியில் சொல்வதில்லை யாழில்லையென்றால் நான்? சொல்லமாட்டேன்.............. அவள் வாழிய பல்லாண்டு....... தமிழிருக்கும் வரை அவள் இருப்பாள்.
-
- 13 replies
- 948 views
-
-
அகதிப்பெருந்துயர்... வாடி இலை சொரிந்து வனப்பிழந்து கூடிக்குலாவிடக்குருவிகளற்று ஆடையிழந்து அம்மணமாய் நின்ற மரஞ்செடிகொடிகள் எல்லாம் வாடைக்காற்று வருடிட வலிமை பெற்று பூவும் கனியுமாய் பூத்துக்குலுங்கி புன்னகை செய்யும் இளவேனிற் காலங்களில் நீலம் ஒளித்திட நிலைகொண்ட இருள்கிளித்து பால்வெளி விந்தைகளாய் பரவிக்கிடக்கும் விண்மீன்களும் பால்நிலவும் வானில் உலாவரும் வசந்தகால இரவுகளில் நீலம் உடுத்திவந்து நிலவுடன் கொஞ்சிடும் நீரலைகள் தாலாட்டும் பேரழகுக்கடலின் பெருநீளக்கரைகளில் ஊரே கூடியிருக்கும் உல்லாச நாட்களில் உணர்வுகள் கிளர்ந்தெழுந்து உயரப்பறக்கும் இனிமைகள் நிறைந்த இரவுப்பொழுதுகளில் நான்மட்டும் தனித்திருந்து உயிர் வத…
-
- 0 replies
- 947 views
-
-
முட்டுவதற்கு வளர்க்கப்பட்ட ஆடு வெட்டுண்டு கிடக்கிறது மற்றைய ஆடுகள் கதறுகின்றன கத்திக்கு சொந்தக்காரன் யார் என்று பதறுகின்றன முன்பு ஒரு நாள்.. ஆடு கட்டுக்குள் அடங்க மறுத்தது யாருக்கும் சொல்லாமல் கயிறு அறுத்தது ஆயினும் பின்பு ஆடு திருந்தியது தானாகவே வீடு திரும்பியது காலங்கள் ஓடியது.. ஓநாய்களை முட்டப் பழகிய ஆடு புதிய களத்திற்கு ஒரு நாள் வந்தது அங்கே ஓநாய்கள் நிற்கவில்லை உடன்பிறந்த ஆடுகள்தான் நின்றிருந்தன முட்டுவதில் பழைய வேகம் இல்லை முட்டுகிறதா? ஒட்டுகிறதா? எசமானர்களுக்கு சந்தேகம் வந்தது உண்மைதான். இன்றைக்கு ஆடு வெட்டப்பட்டுக் கிடக்கிறது மற்றைய ஆடுகள் எசமானர்கள் பின்னே நடக்கின்றன ஓநாய்களின் பற்தடம் தேடித் திரிகின்றன ஓநாய்க…
-
- 8 replies
- 947 views
-
-
தமிழ்த்தாய் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார், ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன் நேர்ந்த தனைத்தும் துடைத்து ம…
-
- 0 replies
- 947 views
-
-
பொதுவாகவே தமிழ்நாட்டுகாவல்துறையினர் அனைவரும் என்றில்லாது விட்டாலும் அதிகமானவர்கள் ஈழத்தவன் ஒருவனை ஆத்திரத்தில் பேசும்போதும் அடிக்கும்போது வன்மத்துடன் அழைக்கும் பெயர் 'அநாதை அகதிப்பயலுகளா' என்பதுதான்.போனவாரம்கூட செங்கல்பட்டுதடுப்புமுகாமில் இப்படி சொல்லியே தாக்கியுள்ளனர்.அதனையே தலைப்பாக வைத்து ஒரு கவிதை (நன்றி: Tamil_Araichchi கூகிள் குழுமத்தில் ச.ச.முத்து) அநாதை அகதிப் பயலுகளா….! – ச.ச.முத்து செப் 6, 2013 1 அநாதை அகதிப் பயலுகளா… எப்போதும் இங்கு தெருவிலோ, முச்சந்தியிலோ எதிரே வருபவனோ எவனோ சொல்லிச்செல்லும் வசனம்தான். அகதிக்கறுப்பா…! போ வீட்டுக்கு..! கேட்டுக்கேட்டே வாழப்பழகிவிட்டோம் நாம். குளிர்கூட ஊடுருவ முடியாத…
-
- 2 replies
- 946 views
-
-
புதிய பௌத்தம் யு9 பாதை திறந்தாயிற்று ஈழத்தமிழர்களின் வாழ்வுபோல் தலை இல்லாத் தென்னையும் பனையும் தான் தெருவெங்கும் தோற்றுன்றன. துக்கத்திலும் அவமானத்திலும் தலைகுனிந்து நிற்கும் மரங்களுக்கும் எம்மக்களுக்கும் துப்பாக்கி காட்டியே ஆறுதல் சொல்கிறார்கள் படைகளும் அவர்களின் குடைகளும். துப்பாக்கி தூக்கிய கைகள் வெறுமையாக உயர்த்தப்பட்டபோது வெளிநாட்டில் எம்தமிழ் மனங்கள் விதைவையாய் போயின. மாறிநின்றவர்களுக்குக் கூட மாண்டவர்கள் தமிழரின் அடையாளமாய் போயினரே. திவசத்துக்குக் கூட அடையாளம் இன்றி வன்னி வடுவின்றி எலும்புகள் கூட எரியத்தொடங்கிவிட்டன- ஆனால் …
-
- 2 replies
- 946 views
-
-
நல்லெண்ணெய் வழிய வைத்து ..ஊரில் நல்லதண்ணி கிணறு தேடி போய்..வயலில் அள்ளி முழுக்காட்டி விட்டா என் ..அக்காள் அறுகம் புல்லு பிடுங்க போகையில்...தரைவைக்கு மணியத்தின் லாரி வரும் கொழும்பில் ...இருந்து மாமாக்கள் வாங்கி அனுப்பிய சீனவெடி ..கொண்டு சிங்காரமா புது சட்டை போட்டு ..தலைசீவி பொங்கல் பொங்கும் அம்மாக்கு ...உதவி கட்டித்தரும் பொங்கல் கொண்டு மாமி ..வீடு போகும்போது மனதில் வரும் வெட்கம் ..மச்சாள் இங்கேரு மாப்பிள்ளை வாறாரு என்று சொல்லும் ..மாமா வீட்டுக்கு வந்த உறவுகள் எல்லாம் ..கூடி முற்றத்தில் தொடங்குவர் விளையாட்டு ..கிளி சின்னவர் எங்களை தங்கள் காலுக்குள் ..வைத்து தள்ளி விடுகையில் விழும் அடி முதுகில் ...உறைக்க நினைவுகள் மட்டும் இப்பொழுதும் ...மனதில் மீண…
-
- 9 replies
- 946 views
-
-
உன்னை நாளையும் சந்திக்கலாம் என்ற சந்தோசத்தைவிட இன்றும் உன்னைப் பிரிவதே கொடிது * நம் முதல் சந்திப்பை பற்றி யாரிடமாவது பேச நினைக்கும் போதெல்லாம் வாயடைத்துவிடுகிறது நம் முதல் பிரிவு * ராஜ்மகாலில் கூட கடைசியாக நின்றாலும் நுழைந்துவிடலாம் யாருமே காத்திராத உன் வீடுதான் என்னை நுழைய விடாது உலக அதிசயமாய் தெரிகிறது * எப்பதான் எனை உன் வீட்டுக்கு கூட்டிச் செல்லப் போகிறாய் நான் முதல் முதலாய் வாங்கிக் கொடுத்த பொம்மை கிழவியான பிறகா..? * உன்னைப் பார்த்தால் யாருக்கும் அலுக்காதுதான் அதற்காக உன்னை உன் வீட்டிலே வைத்திருந்தா என் கண்கள் சும்மாவிடுமா..? -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 945 views
-
-
-
வாரா வாரம்... திரை கூர்ந்து விழிப்புலன் கூர்மையாக்கி செவிப்புலன் நேர்மையாக்கி தெளிவாய் பார்க்கிறேன் கேட்கிறேன்.... ராசி பலனில் பகவான்கள் பலர். என்னோட அதிபதி.. குருபகவான் கூட கன்னிப் பெண்கள் மேல தான் கண்ணோட... கருசணையாய் இருக்கிறார். காளை எனக்கு மாதம்.. வருடம் பல... காத்திருந்தும் பலனில்லை. பகவான்... கிருபையும் எனக்கில்லை..! சாத்திரியின் கடைக்கண் பார்வையிலும் நானில்லை..! காளை என்னை விளித்து.. பலன் சொல்லவும் யாருமில்லை..! இருந்தும்.. பூமிப்பந்தில் நாம் நிமிர்ந்து நிற்கிறேன்.. சுய தேடலும் சுய உழைப்புமே என் வாழ்க்கை என்பதால்..! எல்லாம் நான்.. நெஞ்சில் இரண்டு சிரட்டை இன்றி பிறந்ததன் பலன்..!
-
- 6 replies
- 945 views
-
-
(படித்ததில் பிடித்தது) அன்பின் சுந்தரம், நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன ஏழை வானத்தின் கீழ் அந்தகார இரவு முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது ஊமை ஓலமிடும் நிலத்தின் கீழே எந்த இடத்திலாவது நீங்கள் உறங்கியிருப்பீர்களென உங்களைக் கடந்து போகும் வரும் பூட் சப்பாத்துக்களின் ஒலி அசைகின்ற உலகைச் சொல்லித் தரும் எனக்கு அன்றைய நள்ளிரவு இருள் பஞ்சாயுதங்கள் வீழ்ந்த களப்பு அப்பா இல்லாமல் போன காலம் குஞ்சுகளுக்கு யாருடைய காவல் அங்கிருந்தும் இங்கிருந்தும் கொஞ்சம் பேர் வந்து அடிக்கடி விசாரிக்கிறார்கள் ருசி தானே இந்த (சிறை) உணவு வேறெங்கும் கிடைத்ததா இதை விடவும் …
-
- 2 replies
- 944 views
-