கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
இழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....? (11.02.09 அன்று வன்னியில் எறிகணைக்குப் பலியான உறவின் நினைவில் ஒரு கவிதை) பாயுமில்லைப் படுத்துறங்க வீடுமின்றிப் பதுங்குளி வாசலிலும் பாதையோரச் சகதியிலும் உழன்ற பொழுதுகளில் உனக்கும் சாவுவரும் என்றெண்ணியிருப்பாயா ? நம்பிக்கையறுந்த வாழ்வு நாளையுனக்கு இல்லையென்று எப்போதாவது எண்ணியிருந்தாயா ? எங்களைப்போல உனது மகளும் மனைவியும் அம்மாவும் அக்காவும் மருமக்களும் பற்றித்தானே மனசுக்குள் அழுதிருப்பாய் ? சாவரும் நாளின் முன்னிரவு உனக்குச் சாவு நாளையென்று சகுனம் ஏதும் அறிந்திருந்தாயா ? போரின் கொடிய வாய்க்குள் போய்விடும் சலனம் ஏதும் தெரிந்ததா ? பாழும் பொஸ்பரஸ் குண்டுகள் உன்மேல் …
-
- 12 replies
- 2.6k views
-
-
கனத்த இதயம் இன்று கனத்த இதயத்துடன் கண்விழித்த எனக்கு, என் இதயம் அடிபட்டு நொந்து கிடப்பதையும், அதன் வலியையும் உணரக்கூடியதாக இருந்தது. எதுவரை இது தொடரப்போகிறது. ஈழத்தமிழனின் வலிமையை அழித்துத் துடைக்கவும், உலகத் தமிழனின் ஆற்றலை முடமாக்கவும் எங்கள் பிராந்திய வல்லரசு சிங்கள ஏகாதிபத்தியத்துடன் இணைந்து வித்தை காட்டிவிட்டது. இதையும் ஒரு சுனாமியாக உலகத் தமிழினம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் விசேடமாக இந்திய இலங்கையின் கூற்றுப்படி நாலாம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இந்த வல்லரசுகள் செய்த, செய்து கொண்டிருக்கும் திருவிளையாடல்களை மறைக்க இப்போதும் பிரபாகரனின் கதை என்னும் படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்திற்கு நல்ல படம் காட்டிய அநேகர…
-
- 0 replies
- 1.7k views
-
-
உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள் ஈழத்தில் எம்மக்கள் ஏதிலிகளாய் ஏனென்று கேட்க ஒரு நாதியில்லை என் இனம் அழிக்கும் சிங்களமே கோர்வு கொண்ட சில நாடுகளே சோர்வு கொண்ட ஐ நாவே உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள்
-
- 0 replies
- 661 views
-
-
மோகிப்போம் வா......... ( 18+) மெதுமெதுவாய் மேல் எழும்பும் கறையான் புற்றைப்போல் , என் மனதை அரிப்பவளே வா ......... பள்ளியறையில் மோகிப்போம் வா . ஆனானப்பட்ட வாத்ஸசாயனனே முயற்சி செய்துதான் எழுதினான் காமசூத்திரத்தை . எனக்கும் உனக்கும் என்னதான் வெட்கம் சயனவறையில் ??? அடி என்னவளே !!!! மோகம் என்றால் என்னவென்று தெரியுமா ??? கண்டவுடன் ருசிப்பதல்ல கண்டு ரசிப்பது ........ அடி சூரியகாந்தப்பூவே !!!!! இரவின் மடியில் என் ஆண்மையும் , உன் பெண்மையும் அவசியம் . இதைவிடப் , பொறுமையும் திறமையும் என்ற இரு மைகள் அத்தியாவசியமடி ........ அடி என் வெல்லக்கட்டியே !!!!!!! நாங்கள் என்ன மிருகங்களா உச்சக்கட்டத்தை நோக்கி உடனே செல்ல ....... காதல் இல்லாத காமமும் ,…
-
- 25 replies
- 17.6k views
-
-
மனிதம் மரங்களின் மனிதம் மரங்கள் அறிவதில்லை மனிதர்கள் தம்மைக் கண்டு அச்சமுறுவதை மரங்கள் அறிவதில்லை மனிதர் ஆதிக்கம் நிலைநாட்ட தம்மை வளர்த்து வருவதை மரங்கள் அறிவதில்லை தம்மைத் துளிரிலேயே இல்லாதாக்கிவிடும் மனித அச்சத்தின் பின்புலங்களை மரங்கள் அறிவதில்லை மரங்கள் அறிவதில்லை இவை எதையுமே மரங்கள் அறிவதில்லை ஆயினும் ஆயினும் மரங்கள் குளிர்மையும் நிழலும் வளர்த்தபடி மனிதர்கள் ஆறவும் அமரவும் குளிர்மையும் நிழலும் வளர்த்தபடி சி. ஜெயசங்கர் 31.10.2017 இலங்கை என்பது எம் தாய்த் திருநாடு மொழிகள் இனியவை அர்த்தம் நிறைந்தவை உணர்வும் அறிவும் கலந…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
அட்சய பாத்திரம் பணத்தை பங்கிட்டேன் பாதியாய் குறைந்தது அறிவை அளித்தேன் அணுவளவும் குறையவில்லை அன்பை பங்கிட்டேன் என்ன விந்தையிது அளவில்லாமல் பெருகியதே!!!
-
- 11 replies
- 3.3k views
-
-
கனவிலே வந்தாய் பெண்ணே கனடாவில் நலமா நீதான் கண்மணி என்றே சொன்னேன் கண்களை கொள்ளை கொண்டாய். நெஞ்சத்தை காண வில்லை திருடிநீ என்ன செய்தாய்? வஞ்சத்தை விட்டுச் சொல்லு- என் வஞ்சத்தை விட்டுச் சொல்லு பஞ்சமாம் ஊரி லெல்லாம் - உன் நாணத்துக் கில்லை யாமோ? வெஞ்சமர் ஆடி யுன்னை சிறைமீட்க ராமன் நானோ? பொய்யடி உலக மெல்லாம் - உன் மெய்நெஞ்சை திறந்து காட்டு! அங்கும்நான் இல்லை யென்றால் மெய்யெந்தன், மெய்யைக் கொல்வேன். கவிதைக்கா காத லித்தேன் ?-என் கண்ணுறு நீதான் பெண்ணே! கவிஞனும் உண்மை சொல்வான் காதலீ! நம்பு வாயா? வாழ்வது நீண்ட தில்லை. - வா வாழ்வைச் சுவைத்துப் பார்ப்போம். வருகின்ற தலைமுறைக் கெங்கள் வாழ்வினில் ஏணி வைப்போம்.. கல்நெஞ்ச…
-
- 2 replies
- 886 views
-
-
புத்தாண்டே தருவாயா....??? யுத்தங்கள் இல்லாத தேசங்கள் வேண்டும் யுக்திகள் இல்லாத பாசங்கள் வேண்டும்... வறுமைகள் ஒழிகின்ற வாழ்வது வேண்டும் ஏழை பணக்காறன் சமனாக வேண்டும்... உலகெல்லாம் ஒரு நாடாய் உருவாக வேண்டும்... உண்மைகள் உரைக்கின்ற உலகாக வேண்டும்... பேதங்கள் மறைகின்ற பெரு நாடாய் வேண்டும்.... ஜாதிகள் ஒழிகின்ற ஜாதகம் வேண்டும் யாவரும் ஒரு தாய் பிள்ளையாய் வேண்டும்... இன்னல்கள் தொலைகின்ற இல்லறம் வேண்டும்.... இவையாவும் நீக்கிடும் ஆண்டாக வேண்டும்... இரண்டாயிரத்து ஏழே இது நீயாக வேண்டும்....!!![/color] -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.9k views
-
-
தென் செய்தியில் தமிழாலயன் அவர்களால் எழுதிய கவிதை வெல்கின்றான் எல்லாளன்! விடிகிறது தமிழீழம்! தூய தமிழ்ச் செம்மொழியைத் தோற்றுவித்த செவ்வியர்தாம் போயழவோர் நாடுமிலை தோழி! - அவர் போக்கிலியாய்த் தானலைவார் தோழி! நேயமிலா மாந்தர்களே நீளலைகள் சூழுலகே ஞாயமிலை நாணமிலை தோழி! - செந் நாய்களுமோ நரிகளுமோ தோழி வாயலற நெஞ்சுருக வாழ்நிலைகள் தேடிவரும் வாயிலிலே குண்டுமழை தோழி! - இவர் வருவதற்குள் சாவுவரும் தோழி தாயுமிலை தந்தையிலை தன்னுறவு யாருமிலை சேயழுகை கேட்கலையோ தோழி! - கொடும் செவிடர்களோ ஊருலகம் தோழி யார்குடியைக் கெடுத்தார்கள் யாருணவைப் பறித்தார்கள் யார்யார்க்கும் உறவலவோ தோழி! - இவர் யாதும் ஊர் என்றதற்கோ தோழி போர்மூட்டும் புத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழா தமிழா திருந்திக் கொள்ளடா... உன்னைத் திருத்திக் கொள்ளடா.. அடுத்தவனை அழித்து வாழ்ந்த உன்தன் இரக்கமற்ற பேய்க்குணத்தினை நீயும் மாற்றிக் கொள்ளடா... விடிந்திடும் பொழுதினில் மலர்ந்திடும் ஈழத்தில் நீயம் மனிதனாகடா... உன் இனத்தையே அழிக்கும் உன் குதர்க்க குணத்தினை நீயும் விலக்கிக் கொள்ளடா... உன் முதுகினில் தேக்கிடும் அழுக்கினை நீயும் கழுவிக்; கொள்ளடா.. உலகம் விழித்துக் கொள்ளுமடா... இல்லையேல் இப்பூமி கருகிப் போகுமடா... தமிழா திருந்தப் பார்.....
-
- 1 reply
- 925 views
-
-
காதலித்தால் இதயங்கள் இடம் மாறுமாமே வா இதயங்களை மாற்றிவிட்டு காதலித்து பார்ப்போம் * நான் வார்த்தை தேடி அலைந்தபோது வந்து கிடைத்த கவிதை நீ * பயந்து பயந்துதான் உன்னை என் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினேன் அவா உன்னை ஆலாத்தி எடுத்து வரவேற்பா என்று தெரியாமல் * வறண்ட பூமியை விட நீ வைத்திருக்கும் குடைதான் மழைக்காக தவிக்கிறது * உலகம் அழியும் நாளில் நான் உயிரோடிருந்தால் தற்கொலையாளியாய் உன் மேல் பாய்ந்துதான் என்னை அளித்துக் கொள்வேன் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.1k views
-
-
மூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். என்றோ ஆழ்மனதுள் தைத்து இன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும் காலமுகமான ஒரு கவிதையடி நீ. தொடுவான் எரிய மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே ஈடன் பூந்தோட்டத்து வழி தவற ஓயாமல் சபிக்குமொரு ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான். ஏவாள் நீ இன்றெங்கே. உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே நீ இச்சித்தும் நான் தவிர்த்த அந்த விலக்கப் பட்ட கனி இன்னும் இருக்கிறதா. உன்னிடத்தே வளைய வளைய வந்து எனைக் கண்டால் நச்சுப் பொறாமை வழியச் சிரித்திடுமே அந்த அருவருத்த பாம்பு அது எங்கே. உன் பிள்ளை ஒன்றுக்குப் பாம்புக் கழுத்து மற்றதற்ககுப் பாம்புக் கண் என்ற ஊர்வாய் மொழியைஒப்பவில்ல்லை …
-
- 0 replies
- 1.1k views
-
-
கல்லறை காயாது - தணிகைச் செல்வன் சிரித்தபடியேதான் நீ சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில் சந்தேகமில்லை எமக்கு. சமர்க்கள வீச்சாயினும் சமாதானப் பேச்சாயினும் இரண்டிலும்- சலவை செய்த உன் சிரிப்பைச் சந்திக்க எதிரிகளே அஞ்சினார்கள். உன்-புன்னகையின் வெண்ணிறமே புரட்சியின் விடிவெள்ளியாய்த் தோன்றியது புலித் தோழர்களுக்கு அந்தப் - புன்னகைக்குள்ளே ஒரு புரட்சியே பதுங்கியிருப்பதாகத் தோன்றியது பகைவர்களுக்கு. ஞாலச் சிறப்புக்கு வான்படையை ஊக்கிய உன் ஞானச் சிரிப்புக்கு நடுங்கினான் மகிந்தன். கருவிப் போரில் யுத்த தந்திரத்யுைம் அறிவுப் போரில் ராஜதந்திரத்தையும் கற்றுச் செரித்த களகர்த்தனே, எதிரிகள் உன்னைக் குறிவைக்கக் காரணம் உன் பெயரின…
-
- 0 replies
- 935 views
-
-
நான் - உறக்கம் நீ - கனவு உன் வரவுக்காகவே விடிய விடியத் தூங்குவேன் * என்னைத் தொலைக்காமல் உன்னைத் தேடினேன் என்பதில் பெருமை எனக்கு என்னை நான் தேடவே நீ கிடைத்தாய் என்பதில் பெருமை உனக்கு * என் சொந்தங்களில் நான்தான் முதல் கவிவாசகன் என்பதில் சிறியகவலை எனக்கு இதுவரை யாருமே உன்னை பார்த்து யார் எழுதியது என்று விசாரித்ததில்லையே * உன் தாயைப்போல் என் நேரமும் உன்னைக் கவனிக்க என்னால் முடியாமல் போனாலும் உன்னைக் காணத நேரங்களில் தாயாக நான் ஏங்கித் தவிப்பதுண்டு * உனக்காக காத்திருந்தால் என் கால்கள் வலிப்பதில்லை என் மனசு ஏறி நிற்பதால் என் தலைதான் வலிக்கும் -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 935 views
-
-
பச்சை புல்வெளி-------பச்சை புல் வெளியில் .....உச்சி வெய்யிலில் நின்றாலும் ....உச்சி குளிரும் மனிதனே ....உச்சி குளிரும் .....!!!கண் ......எரிச்சல் உள்ளவர்கள் ....கண் கூச்சம் உள்ளவர்கள் ....பச்சை புல் வெளியை ....உற்று பார்த்துவந்தால்.....கண்ணின் நோய்கள் தீரும் ....மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!அதிகாலை வேளையில்....பனித்துளி பன்னீர் துளிபோல் ...சுமர்ந்துகொண்டு அழகை ...காட்டும் பச்சை புல்வெளியில் ....ஒருமுறை கை நனைத்துப்பார் ....குளிர்வது கை மட்டுமல்ல ....மனமும்தான் மனிதா....!!!பூமிக்கு இயற்கை கொடுத்த .....பச்சை கம்பளம் புல்வெளி ....துணிப்புல் மேயும் முயல் ....அடிப்புல் வரை மேயும் மாடு ....பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!! மரம் வளர்…
-
- 2 replies
- 12.7k views
-
-
-
கவிதை: அகல் விளக்கு சேரன் கடவுளர்க்கு நிழல் உண்டா? இருந்தாலும் யார் கண்டார்? எம் நெருப்புக்கும் கண்ணீருக்கும் இல்லை. சுக்கிலத்தாலும் குருதியாலும் வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக நாம் அனுப்பும் கணை எதுவெனத் தேடிக் காட்டுக்குள் போக முடியாது. காடும் எரிகிறது. ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது இருப்பதே ஒரு கால் உருவற்ற கவிதையின் உயிரை தேடாதே தீ பெருகும் என்றாள் பெருகுவது எல்லாம் நன்மைக்கே எனத் தொடர்ந்து நடந்தேன் கடலோரம் வழி விடா நீர் வழி தரும் மொழி குருதிப்பணம் திரட்டி பொய்யில் நினைவேந்தல் செய்தால் கண்ணீர் நிறையாது மழை பெய்து தீபத்தை இருளாக்கும் அலைகளிலா ஒலியில் ஓலம் எழுந்து புலம்பெயர் உலகின் காற…
-
- 0 replies
- 701 views
-
-
-
ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ???????? என்இனமும் என்மண்ணும் சிறக்க களமாடிய தவக்கொழுந்துகளுக்கு வடை றோலின் பெயரில் வணக்க விழாவாவாம் கூதல் குடிகொண்ட புலம்பெயர் மண்ணில் புலன் பெயர்ந்தவர்களால் புலம்பெயர்க்கப்பட்ட அந்நியம் தொட்டு அருவருப்படைந்த கார்த்திகைப்பூக்கள் தலைநிமிர்ந்து சிரிக்கவில்லை உங்களை வணங்குகின்றோம் என்றபெயரில் களியாட்டா விழா கொதிக்க கொதிக்க கொத்துறொட்டியும் மொறுமொறுப்பாய் றோல்சும் கல்லா கட்டும் உணவ(ன்வணக்)க விழாவில் இவைகளைப் பாராது ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ?? என்மண்ணில் உயிருடன் உலாவும் கார்த்திகைப்பூ பெற்ற பெயர் வேசி......... அவள் வாழ்வும் அவள் பிள்ளைகளும் நடுறோட்டில் .......... சிங்களத்தின் கொட்ட…
-
- 99 replies
- 6.7k views
-
-
கபாலிக்காக மண் சோறுண்ணும் மடையர்களை நினைந்து தமிழன்னை புலம்புகிறாள். புளிய மிலாறு வெட்டி புறமுதுகில் சாத்தியிந்தக் கழிசடைகள் ஓடுதற்கு மக்காள் - நல்ல காரியங்கள் செய்யீரோ மக்காள். குண்டாந்தடியெடுத்துக் குண்டியிலே போட்டு நன்றாய் பென்ட நிமிர்த்த வேணும் மக்காள் - இந்த பேயர் திருந்துதற்கு மக்காள் ஆத்திர மெல்லாம் சேர்த்து அழகான கேட்டி வெட்டி சூ—தில் கொடுத்தாற்தான் மக்காள் – இந்த சோமாறிகள் விழிப்பார் மக்காள் கொட்டன் எடுத்ததிலே குத்தும் சிராய் செதுக்கி விட்டால் முதுகினிலே மக்காள் – இந்த வீணர் திருந்திடுவார் மக்காள் தக்கார் இலாதென்றன் தாழ்வுகளைப் போக்குதற்கு மிக்க மனங்கவன்றேன் மக்காள் – நான் மீள்வதினியெக்காலம் மக்காள்.
-
- 1 reply
- 2.6k views
-
-
கண்ணீர்ப் பொங்கலை….. ------------------------------------------- கண்ணீர்ப் பொங்கலுமாய் செந்நீர்ப் பொங்கலுமாய் எம் தாயக தேசமன்றோ ! நகரும் மக்களை நரபலி எடுக்கின்றது சிங்களப் படைகளன்றோ ! நாங்கள் சர்க்கரை போட்ட பொங்கலைப் பொங்குவதா எம் தேசம் காத்திடப் பொங்கி எழுவதா ! பொங்கி எழுந்து நாம் எம் தேச மக்களின் துயரினை துடைப்போமா இல்லை இன்னும் கதைகள் பேசியே காலத்தை கழிப்போமா ! எங்களின் உறவுகள் ஏதிலியாகியே தங்கள் வாழ்வினை தொலைத்து விட்டாரே ! தங்கள் வாழ்வைத் தொலைத்தது ஏனோ தாயகம் மீட்டெழும் முடிவினில் தானே ! கண்ணீர்ப் பொங்கலும் செந்நீர்ப் பொங்கலும் கடக்கும் பலமென்றும் உலகத் தமிழர் கைகளில் தானே உலகெங்கும் எழுவோம் பொங்கி எழ…
-
- 0 replies
- 820 views
-
-
சித்திரை நினைவுகள் சித்திரை நிலவில் நித்திரை நீக்கி - உன் முத்திரை விழி பார்த்திருந்தேன்... நிலவின் குளிர்ச்சி உந்தன் முகத்திலா..... உன் முகத்தில் குளிர்மை நிலவின் முகத்திலா - என்று குழம்பிய கணங்களைக் கடப்பதுதான் காதலின் சுகமா என்றிருந்தேன்.... என்னில் ஒட்டிய நினைவு நீயடி... உன் விழியால் எனை நனைத்தாயடி... உன்னால் காதலின் சுகமுணர்ந்தேனடி.... அதன் வலியிலும் மகிழ்ந்ததேனடி.... வலிக்கும் நிலத்தில் தான் என் வாழ்வு.... மறுபடி நீ வந்து - என்னை மணக்கும் பொழுதில் தான் பலிக்கும் என் நினைவென்று... சிந்திய முத்துக்கள் கொண்டு என்னை வழியனுப்பியவள்.... குரல் கேட்டு நாலு சித்திரை கடந்துவிட்டது.... அவள் நினைவுகளோ - என்னை அகல மறுக்கிறது...... எங்களைக…
-
- 10 replies
- 1.1k views
-
-
பனி படர்ந்த வயல்களும் பசுமாட்டுத் தொழுவமும் பனம்பழம் பொறுக்கிய பனங்கூடலும் பசிமறந்து பட்டாம் பூச்சியாய் திரிந்த பள்ளிக்கூடக் காலமும்_இன்று பகலின்றி இரவின்றி பாதகனின் கொடுஞ்சிறையில் பசி போக்க வழியின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவிக்கிறோம் அநாதைகளாய்... குண்டுமழை நடுவினிலும் குருதிமழை நடுவினிலும்_நின்று வெஞ்சமராடிய வேங்கைகளை வஞ்சகத்தால் கொன்றுவிட்டு நெஞ்சுரத்தோடு பேசுகிறான் வடக்கின் வசந்தமென்று..... பி.கு_ எனக்கு கவிதை என்ன என்பதே தெரியாது. இளங்கவி அண்ணாவின் கவிதைகள் ரொம்ப பிடிக்கும். அவருடன் கேட்கும் போது அவர்தான் கவிதை பற்றி சொல்லி எழுத ஊக்கம் தந்தார். எனது முதல் கவிதை இளங்கவி அண்ணாக்கே.
-
- 13 replies
- 1.9k views
-
-
எத்தனை ஆயிரம் கனவுகளைச் சுமந்து எந்தவித எதிர்பார்ப்புக்களுமே இன்றி... எமக்காக வீரகாவியமான வேங்கைகளே_உங்களுக்காய் என்னால் எதையுமே செய்யமுடியவில்லை_அதனால்... என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே! மரணத்திற்கு நாள்க் குறித்து மரணத்தையே முத்தமிட்ட... மாவீரர் பிறந்த மண்ணில் பிறந்தேன் என்று பெருமை கொள்ளும் என் மனது.. மாண்ட உங்களின் கனவான_தாய் மண் விடுதலைக்காய் உழைக்காது... வெற்றுவீரம் பேசும் சுயநலவாதிநான்_அதனால் என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே! ஆயிரமாயிரம் ஆசைகள் கொண்ட சராசரி மனிதர்கள் தான் நீர் ஆயினும் அன்னை மண் தனைக் காத்திட ... அத்தனை ஆசைகளையும் துறந்த அதிசய பிறவிகள் நீர் தாயகக் கனவுக்காய் ஆயிரமாயிரம் உயிர்களை... …
-
- 12 replies
- 2.6k views
-