கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பொறிசிந்தும் வெங்கனல் போல் ஆர்த்தெழுந்து நெறிகொண்ட தமிழினத்தை முரட்டரசு மோதிடவே வேறில்லை வழியென்று வேங்கையெனத் துணிந்தாங்கே வேலைப் பணிந்தாலே வெற்றி நிட்சயம் போல் காலந் தனையுணர்ந்து கதிரவன் போலெம் தலைவன் எண்ணத்தை நனவாக்க எடுத்த நல் விடுதலையை பொய்யூற்றி எங்கணுமே புதைத்துரைக்கும் பாவியரும் நெய்யூற்றிப் பற்றவைக்கும் நெடுவரக்க ராஜாங்கம் உற்றெழுந்து பாரெங்கும் பகையாக்கும் எண்ணத்தை பித்தக் கணக்கென்று பேர்தெறிந்தார் தம்பியுமே சேரமான் கணைக்கா லிரும்பொறை போல செந்தமிழீழப் பெயருடன் செங்கோ லேந்திட தமிழரின் ஒற்றுமை அத்திப்பூ ஆகாமல் வரலாற்றில் அடிமையென்று வாய்பிளக்கக் கூறாமல் செருமுனையில் சிறுத்தை யெல்லாம் சீறிப்பாய்ந்துமங்கே மூக்கின் மேல் விரலைவை…
-
- 2 replies
- 1k views
-
-
நன்கு விபரம் தெரிந்த வயது ..... விடிந்தால் மாவட்ட விளையாட்டு ... பலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ... பலருடன் போட்டிபோடும் .... மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி .....!!! நாள் முழுவதும் கற்பனையில் .... முதலிடத்தை பிடித்ததாய் .... கனவும் வேறு வந்துதுலைத்தது..... திடீரென திடுக்கிட்டு எழுந்து ..... மீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....!!! ஆரம்பமானது ஓட்டப்போட்டி ..... மைதானம் வானை தொடும் வரை ... கரகோஷம் நான் வெற்றிபெற ... முகம்தெரியாதவர்கூட கத்தும் .... என் பெயர் ஓடினேன் ஒடினேன் ....!!! எல்லை கோட்டை நெருங்கும் .... ஒருசில நொடியில் யார் முதலிடம் .... யார்...? இரண்டாம் இடம் ...? முடிவை தெரிவிக்க தடுமாறும் .... நடுவரின் பரிதாப நிலை .....!!! நடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...? நொடி…
-
- 2 replies
- 782 views
-
-
அரியாத்தை திருமண்ணே! அனல் எடுத்து மூசு. சத்திய வேள்வி சாய்ந்ததாய்ச் சரிதம் இல்லை. சந்தனக் காடுகள் வாசத்தைத் தொலைத்ததில்லை. நித்திலச் சூரியனை இருள் மூடித் தின்றதில்லை. நிலம் பிடித்த பகையும் நீடிக்கப் போவதில்லை. துருவப் பனிக்காட்டில் அனல்பற்றி எரிகிறது. உருகும் அகப்பாட்டில் ஊர்மூச்சு எழுகிறது. சூரியப் பெருந்தேவே! வீரியச் சுடர் ஏற்றிடுக. அரியாத்தைத் திருமண்ணே! அனல் எடுத்து மூசிடுக. வேட்டைக்கு வந்தோரை வினை அறுக்கும் வேளையிது. வீரத்தின் பாட்டெழுத விழித்திருக்கும் நேரமிது. ஏழ்புரவி பூட்டிய எழுபரிதித் திருவே! எழுந்திடுக பூலோகம் ஒரு கணம் அதிரட்டும். செங்கொடியில் புலி ஏறிச் சிரித்திடுக. அழுகை ஒலி வ…
-
- 2 replies
- 1.4k views
-
-
கவிதை அந்தப் பொழுது..... ஒவ்வொரு முறையும் எனது இருளக்குள்ளேயே நான் தொலைந்து போகிறேன் ஒளி வரும் பாதைகளை எதிர்பார்த்தபடிக்கு ஓர் ஒளியிடையேனும் விகாரமில்லாத எதுவும் தென்படாத படிக்கு மூலையில் கிடக்கிறது இருள். எல்லா நியாயங்களுக்குமான கூக்குரலை உயர்த்தி கத்தியபடிக்கு ஒரே ஒரு வெளியில் அலைந்தபடிக்கு உள்ளேன். எனது சுமைகள் எதனையும் பொருட்படுத்த முடியாமல் பாரப்பட்ட வெளியை விட்டும் தூரமாகிவிட்டேன். உயிரை ஒரு ஜீவித காலத்துக்கு மட்டுமாகிலும் நகர்த்தினால் உத்தமம். மரணம் பற்றிய ஒவ்வொரு நினைவினூடாகவும் கழிந்து போகின்றன நொடிகள். இருள் சூழும் பொழுதை விரட்டியபடிக்கு ஒரு இயலாக் கருவியாய் எறியப்பட்டுப் போனேன் மூலையில் ஒரு புரட…
-
- 2 replies
- 1.1k views
-
-
சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவிருந்த காலத்தில் எழுதிய கவிதை. குமுதத்தில் வெளிவந்தபோது ஜெயமோகன் கருத்து எழுதியிருந்தார். இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் …
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 666 views
-
-
கவிதையின் கவிதைகள் http://3.bp.blogspot.../Photo-0052.jpg மனம் மாறும் மனங்கள் தினந்தோறும் மாறும்! உனைத்தேடும் இதயம் நிதமிங்கு ஏங்கும்! கரைதொடாத அலைகளுக்காய் கரைகள் காத்திருக்க, திசைமாறிய காற்றில் வழிமாறிய அலைகளாய்... பெண்கடல் ஆர்ப்பரிக்க, ஈரப்படாத கரைகள்... சுடுமணாலாய் உதிர்கிறது! கவிதை அனுப்பிய கவிதை பகுதி 04 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105723
-
- 2 replies
- 829 views
-
-
பேனையை விட எனக்கு பென்சிலாக இருக்க ஆசை ஏனெனில் நீ சீவி கூர் பார்க்கையில் உன் கன்னங்களில் அடிக்கடி... முத்தமிடலாம்.
-
- 2 replies
- 962 views
-
-
ஒற்றைச் சொல்லு வலி(NO VISA) 1990 ஆனையிறவுசமர் தரையிறக்கம் இடப்பெயர்வு அகதிமுகாம் இடப்பெயர்வு முகாம் பசி பட்டினி இழப்பு வலி இடப்பெயர்வு...(3) முகாம் செல்லடி பொம்பர் கெலி நேவிக்காரன் படுகொலை இடப்பெயர்வு முகாம் 1995 யாழ்இடப்பெயர்வு கிளாலி படுகொலை வன்னி முகாம் போராட்டம் இடப்பெயர்வு இடப்பெயர்வு இடப்பெயர்வு......(6) முல்லைத்தீவு ஆனையிறவு வெற்றிகள் சமாதானம் ஏ9 ஓமந்தை கொழும்பு சுனாமி அவலம் சாவு இடப்பெயர்வு மகிந்த சண்டை சண்டை படுகொலை கொத்து குண்டு படுகொலை போராட்டம் சண்டை முள்ளிவாய்க்கால் பாதுகாப்புவலயம் படுகொலை இடப்பெயர்வு வவுனியா முகாம் சித்திரவதை சிறை ஏழாம் மாடி அடி உதை காசு லஞ்சம் புத்தளம்…
-
- 2 replies
- 1k views
-
-
உங்களின் நினைவுகள்…..! காற்தடம் கரைத்து உப்பளக் காற்றிடை மிதந்து போர்த்தடம் தேடி உப்புக்காற்றின் உதைப்பில் உங்களின் நினைவுகள்.....! நெஞ்சினில் நிறைந்த நண்பரின் ஞாபக ஊற்றினில் நாட்குறிப்பினில் காற்றழுத்தக் காற்றழுத்தக் கரைதொட்ட அலையின் கரைமணலில் உங்களின் நினைவுகள்.....! நேற்று இவ் வெளியினில் நெஞ்சுயர்த்திப் போகிறோம் என்ற என் தோழியர் முகங்களில் பூத்திருந்து அப் புன்னகை அரும்பலில் உங்களின் நினைவுகள்....! காற்றில் நுளைந்து கடலில் கரைந்து – என் மூச்சில் நிறைந்து முகவரி மறுத்துப் பெயருமில்லாப் பொருளுமில்லா மெளனக் கிடக்கையில் மாவீரப் பெருமைகள் குவிய போனவென் தோழமைக் குரல்களில் உங்களின் நினைவுகள்.....! போற்றிட உம் பெருமைகள் பேசிடப் பேராயிரம் கவிதைகள் தோற்றன ஈற்…
-
- 2 replies
- 623 views
-
-
பற்றி எரிகிறது பாலஸ்தீனம்-பா.உதயன் பற்றி எரிகிறது பாலஸ்தீனம் அன்று ஒரு நாள் முகம் எரிந்த முள்ளிவாய்க்கால் போலவே எரிந்துகொண்டிருப்பது பாலஸ்தீனம் மட்டும் இல்லை அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் பொய்ச் சத்தியமும் போலி முகங்களும் வரலாற்றுத் துரோகங்களும் அவர்கள் மனசாட்சியும் கூடவே எரிகிறது ஐ நாவின் அறமும் அதன் தர்மமும் அமைதியாகவே பார்த்திருக்கிறது எரிந்து கிடக்கும் சாம்பலில் இருந்து எப்போதாவது ஒரு பூ பூக்காத என்று ஏங்கித் தவிக்கின்றன பாலஸ்தீன குழந்தைகள். பா.உதயன்✍️
-
- 2 replies
- 421 views
-
-
கனன்றே எரிவாய் தீக்கனலாக...... காலத்தின் உப்பரிகையில் கை கொட்டிச் சிரிக்கிறான் காலன் இது யாரோ ஒருவரின் கனவுக் கலைப்பல்ல விடுதலை விரும்பும் விதியின் விரல் பிடித்து விளையாடும் மொழியாக தினமும் இழப்புக்கள் அறுவடைக்கு ஆட்களை அசைபோடும் இரைமீட்பில் ஆண்டவனை அர்ச்சிக்கும் வரம் பெற்ற வள்ளலுக்கும் வழங்கிய பரிசு மரணம் குழந்தை இயேசு குடிகொண்ட மண்ணில் நிரந்தரமாய் நீ விடைபெற்ற செய்தி அறிந்ததால் அதிர்ந்தோம் அந்நிய மண்ணில் தடம் பதித்தாலும் மண்ணின் நினைப்பில் மனம் புதைந்தே கிடக்கும் மண்ணின் விழுதுகள் நாம் இறை உணர்வினில் கனல் மணக்கும் ஏழிலான வெண்மலரே மானிட வதையினால் மனம் கனக்க உம்மை கல்லறைக்குள் வைத்தோம் இது காலத்தின் கட்டளை ஈழ விடுதலையில் இதய…
-
- 2 replies
- 1.5k views
-
-
காலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....! ஆளரவம் தொலைத்த அடர் வனங்கள் அன்றைக்கு மௌனித்து மயானம் பூண்டு ஆட்களற்றுப் போனது. ஆழகான புற்தரைகளின் பச்சையம் ஆட்களற்றுத் தனித்த பனித்துளியின் ஈரம் குருதித் துளியாகிக் காயத் தொடங்கியது. நீங்களும் வெடியாகி இடியாகி வெளியில் வராத ஒளியாகிப் போனீரென்றுதான் காலமழுதது. எனினும் போரின் கறைகள் காயாமல் கண்ணீரின் ஈரம் தோயாமல் நீங்களெல்லாம் வனமளப்பதான வதந்திகளையெல்லாம் மௌனங்கள் காடேற்றிக் கடந்தது காலநதி. உங்கள் நிழலைக் கூடத் தொட்டறியாத பேயெல்லாம் உங்களைப் பற்றி ஆய்வுகள் செய்தது அங்கென்றும் இங்கென்றும் அறிக்கைகள் கொடுத்தது. சொல்லியழ முடியாத் துயர் கண்ணில் நிறைந்தாலும் வ…
-
- 2 replies
- 719 views
-
-
என்னுடைய அதிகபட்ச ஆசைகள் என்பதெல்லாம், நான் எழுதுகின்ற மாதிரியே வாழணும்! வாழுகின்ற விஷயங்களையே எழுதணும்!... என்பதுதான்!! எதிர்த்த மாடிக்கட்டிடங்களின் கண்ணாடிகளில், முகம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம்! அவை முகத்தில் ஓடும் சோக நரம்புகளை மட்டுமே பெருப்பித்துக் காட்டுகின்றன! எம் கண்ணீரில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியும் வானவில்லாகி... கட்டணப் பரிமாற்றங்களில் ஊர்போய்ச் சேர்கின்றது! அந்நியத் தெருக்களில் கொஞ்ச தூரம் நடந்தவுடன், களைத்துப் போகின்றேன்... ! ஏனென்று புரியவில்லை!? பழக்கப்படாத தெருக்களும், கொஞ்சம் பழகின முகங்களும்... ஏதோ, அகழிகள் போல் பயமுறுத்துகின்றன! என்னுடைய ஊர் ஒழுங்கைகளின் புழுதிமண் வாசனையும்... மழைக்கால சகதிகளும்... இப்பொழுது, எவ…
-
- 2 replies
- 1k views
-
-
மனதெங்கும் எத்தனையோ மாயங்கள் அலைகளாய் எண்ணத்தில் தோன்றுவது எழுத்தில் வடித்திட முடியாததாய் காணும் காட்சிகள் கண்விட்டுப் போவதுபோல் நினைவுகளின் நீட்சிகள் தொடராதிருந்தால் எத்தனை இன்பம் மனம் எப்போதும் கொண்டிடும் காலத்தின் பதிவுகள் கனவின் கோலங்களாய் மனதில் மகிழ்வு தொலைத்து கண்கட்டிவித்தையில் கண் மூடும் வேளைகளில் கூட கபடியாடுகின்றன பகுக்க முடியாத எண்களாய் பகிரப்படும் நாட்கள் பம்பரமாய் சுழன்று மீண்டும் பரிதவித்து நிற்பதுவாய் நிமிடங்கள் நகர்த்தும் நாட்களாய் நெடுந்தூரம் செல்கின்றன தவிர்க்கவும் மறுக்கவும் மறக்கவும் முடியாததான பிணைப்பின் வலிமையில் மறுதலிக்கும் மனதின் செயல் எத்தனை கடிவாளமிடினும் எதுவுமற்றதாய் ஆகிவிடுகையில் எப்போதும் போல் என்னிலை ஏக்கங்…
-
- 2 replies
- 724 views
-
-
கண்ணாடி அறைக்குள்ளே காற்றாட கணிப்பொறிமுன் கண்கள் தேட கழுத்திலேயே சுருக்கு கயிறை கடிக்கொண்டு திரியும் வாழ்க்கை காதலை கூட கருமியைபோல குறுஞ்செய்திக்குள் குறுக்கிவிட்ட கூரமான வாழ்க்கை போக்குவரத்து நிறுத்தங்களில் நிராகரிக்கப் பட்ட நிமிடங்களை நிம்மதிக்காய் தேடும் நிஜமில்லா வாழ்க்கை கட்டியவளை அணைப்பதை கூட கடிகாரத்துக்குள் ஒதுக்கி வைத்த கயமைதனமான வாழ்க்கை மினுமினுக்கும் விளக்குகொளியில் மிடுக்கான உடையில் போதையில் மிதக்கும் வாழ்க்கை இதுமட்டுமா வாழ்க்கை இலைமீது மழைத்துளி அதை கொட்டி விளையாட காதலி; இமை இடையில் வரும் இன்ப கண்ணீர்துளி அதற்காகவே பிறந்த அம்மா கிள்ளி விளையாடி கிள்ளையோடு சண்டைகள் …
-
- 2 replies
- 1k views
-
-
''பயந்தோடிய படைகள் சிதைந்ந நிலை.....!!!'' கிழக்கின் மீது ஏறி ஆடி சிரிச்சு முடிச்சீக... இப்போ உங்க கிழிஞ்ச உடலை கண்டு ஏனோ வழி பிதுங்கி நிண்டீக....??? கண்ணை மூடி கணைகளை தான் ஏவி விட்டிக.... எண் கணக்கில் புலிகள் பலி என்று சொன்னீ;க.... வெற்றி கள நாயகராய் உம்மை உரைத்தீக.... இன்று வேண்டி கட்டி வாயடைத்து ஏன் நீண்டீக....??? முகமாலை முன்னரணில் முதுகுடைத்தீக... முறிந்து விழுந்த படைகளையே பொதியில் ஏற்றீக.... கனரகங்கள் கொண்டு வந்து கை அளித்தீக.... கரிகாலன் படையணியை பலமாக்கி விட்டிக.... இனி ஏறி வரும் களங்களிலே வேண்டி கட்டுங்க.... ஜயா மகிந்த ஆட்சிக…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஓடிப் போ.... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.... இல்லண்ணை வாயை நீ மூடு.... செய்யல உனக்கது நான் கேடு.... இப்ப இங்கது நீ மோடு... படிக்கனும் நிறைய நீ ஏடு.... முதலில படிக்க அங்கோடு.... விழுந்தது உனக்கது உயர் ஓட்டு.... செய்தாய் அதற்கது வீண் கேடு... அண்டுகள் ஆண்டுகள் இது கேடு.... செய்த தமிழன் அவன் கேடு.... ஆரியன் தினித்தது அது கேடு... அதை எதிர்காத திரவிடன் அவன் மோடு... வார்த்தையால் போடாத நீ சூடு.... உனக்கது பின்னாடி பெருங்கேடு.... இது காறும் உரைத்தது நீ போதும்... இத்துடன் நிறுத்தி நீ ஓடு.... நன்றி - வன்னி மைந்தன் - …
-
- 2 replies
- 1k views
-
-
பல்லவி ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை என் வாழ்வு இருக்கும் போதே எழுதி உயரத்தானே ஆசை உனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும் இணைய வேண்டும் இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய் இருக்க வேண்டும் பெண்: யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை என் வாழ்வு மலரும் போதே அதைக் கேட்கத்தானே ஆசை சரணம் 1 ஆண்: கண்ணுக்குள்ளே நீ எங்கே என்று என் கவிதைகளும் உளவு பார்த்ததோ நெஞ்சுக்குள்ளே நீ எங்கே என்று என் கனவுகளும் கேட்டு நின்றதோ பெண்: கண்ணுக்குள்ளே கலகம் செய்தாய் என் இதயத்தின் புதுத் திருடா கவலைகள் ஏனடா காதல் யுத்தம் செய்யப்போகிறேன் காத்திருந்து வாழப் போகிறேன் ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை என் வாழ்வு …
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=3]அட[/size] [size=3]யாருங்க இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா?"[/size] [size=3]"ஆமா![/size] [size=3]யாரு இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா!!"[/size] [size=3]சங்கட மடத்துக்கு [/size] [size=3]அக்னி கோத்திரம்[/size] [size=3]சைவ மடத்துக்கு [/size] [size=3]பிள்ளைவாள் மாத்திரம்[/size] [size=3]பேரூருக்கு [/size] [size=3]வெள்ளாளக் கவுண்டர்[/size] [size=3]கோவிலூருக்கு [/size] [size=3]நாட்டுக்கோட்டைச் செட்டி[/size] [size=3]சாமித்தோப்புக்கு [/size] [size=3]நாடார் அய்யா[/size] [size=3]"அட[/size] [size=3]யாருங்க இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா?" [/size] [size=3]"ஆமா![/size] [size=3]யாரு இப்ப [/size] [size=3]சாதி பார்க…
-
- 2 replies
- 993 views
-
-
திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டிருக்கும் நிலையில், இது குறித்து கவிஞர் பழநிபாரதி தன் வலிமையான வார்த்தைகளால் அவரது மரணத்திற்கு கவிதை எழுதியிருக்கிறார். உருக்கமான அந்த கவிதை இங்கே.... உண்மை கண்ணாடியின் முன் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது... கண்கள் ஆழ்ந்த இருளில் இரண்டு விளக்குகளைப் போல பிரகாசித்தன விலை பேச முடியாத அழகு அதன் கர்வமாக இருந்தது யாருடைய கைகளோ கண்ணாடிக்குப் பின்னிருந்து பாதரசத்தை உரிக்கத் துடித்தன முடியாத ஓர் இறுக்கத்தில் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது உடைந்த சில்லுகளில் உண்மையின் ஒரு முகம் பத்து நூறு ஆயிரம் லட்சமென விரியத் தொடங்கின - பழநிபாரதி
-
- 2 replies
- 699 views
-
-
பொங்கலுக்கு தேவையான பொருட்களெல்லாம் வாங்கிவிட்டேன்.. பொங்கலிட முற்றமதை எங்கே போய் வாங்குவேன் .. சிங்களனின் பாசறையாம் என் வீடு அவனாடும் மைதானம் என் முற்றம் . எங்க போய் பொங்கலிட ??? ««««««««««««°»»»»»»»»»»»»»» "பொங்கலிட முற்றமில்லை.. சொந்தமென யாருமில்லை .. வெந்தமனம் நொந்துதினம் வாடுகையில்.. எங்குபோய் இவர் பொங்கலிட தைத்திங்களதில் ? தை பிறந்தால் வழிபிறக்கும்.., பொய்யானால் மனம் சலிக்கும்.., இருபத்தைந்தாண்டுகள் ஆண்டுகள் நொந்தகதை யாரறிவார்? போர் ஓய்ந்து ஏழாண்டு.., பொய்மட்டும் ஒளியாண்டு... …
-
- 2 replies
- 714 views
-
-
எதுவரை நீளுமோ அதுவரையும் எதுவரை தொடருமோ அதுவரையும் அந்தங்கள் இல்லா அறுபடாச் சங்கிலியாய் தொடருமடி - நம் நட்பின் சங்கீதம் ………………………………………….. எங்கோ இருந்தபடியே என்னை கடிகார பொம்மையாய் ஆட்டி வைக்க உன் நட்புக்கு மட்டுமே முடிந்ததடி ………………………………………….. நீ உனக்காக உனக்காக என்று கவிதைகள் கேட்கிறாய் நான் உனக்காக உனக்காக என்று என்னையே எழுதுகின்றேன் ………………………………………….. நீ நேசிக்கின்றாய் என்றெண்ணி மகிழ்ந்து போகிறேன் என்னையல்ல நிழல்படங்களை என்றறியாத சின்னக் குழந்தையாய் ………………………………………….. என்னைப் போலவே எந்தன் கவிதைகளும் உன்னால் நிராகரிக்கப்பட்டவுடன் உடைந்து துண்டாகின்றன …
-
- 2 replies
- 947 views
-
-
குரங்கணி வனதேவதைகளுக்கு அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன் . மாடு தழுவி மாளாது தினவு என யானை தழுவ மழைக்காடு சென்றவரே மழைக்காடுட்டில் இளைய தமிழகத்தை வரவேற்க ஆர்வக்கோளாற்றால் இறங்கிவந்த சூரியனே நீர் சிந்த வானூர்தி வாராத தேசத்தில் கண்ணீரால் தீயணைக்கும் கடல் சூழ்ந்த தமிழ் நாடே பெருந்தீயில் பட்ட எங்கள் குலதெய்வ நடுகல்லாய் குரங்கணியை காக்கச் சூழுரைக்கும் இளையவரே மேலை மலர்தொடர் வாழ்ந்தால் என்களது கண்மணிகள் காலமெல்லாம் வாழ்வர் மலராக வண்டாக பறவைகளாய் விலங்குகளாய் புல்லாய் வனங்களாய் பொய்கைகளில் மீனினமாய் வனதேவதைகளாய் பல்லாண்டு பல்லாண்டாய் வாழிய நம் கண்மணிகள்.
-
- 2 replies
- 1k views
-
-
காலை புலர்ந்தது காலை புலர்ந்தது- பா.உதயன் காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கதிரவன் எழுந்தான் கனவுகள் உயிர்த்தது பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த தாயினை எண்ணுக மனமே எண்ணுக எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா இன்னும் துயிலுவியோ இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக பொங்குக ஆலய மணிகள் அன்பினை ஒலிக்க ஆயிரம் பறவைகள் கூடியே பாடின அழகிய குயில்கள் கூவி இசைத்தன கதிரவன் வாசலை திறந்து இங்கு வந்தான் வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் …
-
- 2 replies
- 432 views
-