கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
என் காதலை உன்னிடம் சொன்னபோது உன் இதயம் வெற்றிடமாக இல்லையென்றாய், உன் இதயக் கோயிலில் குடியிருக்கும் குபேரனை நினைத்துப் பொறாமைப்பட்டேன், அவனைவிட அதிஸ்டசாலி இருக்கமுடியாதென்று. அப்புறம்தான் அறிந்துகொண்டேன் உன் இதயம் ஒரேயொரு ஆண்டவனுக்குரிய ஆலயமல்ல, பல குடியிருப்பாளர்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பென்று. ஆறுதலாக வீடு தேடிய அதிஸ்டசாலி இப்போது நான்தான்.
-
- 1 reply
- 925 views
-
-
பரந்த வெளியிலே ஒற்றை மரமாய் தனித்து நின்றாலும் இரைதேடும் பட்சிகளுக்கு தங்குமிடமாகிறது மேற்கே மறையும் சூரியனும் தெளிந்த நீரோடையும் மெல்லென் தழுவிச் செல்லும் காற்றும் நீரிலே தோன்றும் சூரிய ஒளியும் இரவை நோக்கி நகர்ந்து சென்று உனக்கும் எனக்குமாய் நாளை எனும் உதயம் ஆழ்ந்த் நம்பிக்கையோடு விடிவு பிறக்கும்.
-
- 3 replies
- 925 views
-
-
கால்களில் கிடந்த மண் பொருக்குகளை தட்டிக் கொண்டிருக்கையில் சிதைந்து ஓலமிடத் தொடங்கின விளையாதுபோன பாட்டனின் கனவுகள். கதைகளில் சொல்லாத ரேகைகளில் கூறாத விரல்களால் தீட்டாத பாட்டனின் கனவுகள் கூடி மொய்க்கத்தொடங்கின, விளைந்த நெருக்கத்தில் நான் அறியாத பாட்டனின் முத்தமொன்றை பரிசளித்தன, உடல் சிலிர்க்க நடுக்கத்தோடு முத்தம் வெளியேற்றிய கண்ணீரை முகர்ந்தவை, கால நாற்றங்களால் உணர்வடக்கிக் கொண்டன, கண்ணீர் வெளியேறிய வெற்றிடத்தில் பாட்டனின் வயல் வளரத்தொடங்கியது. விளையாத கனவுகள் உணர்வுடைத்து இனி வேர்விடக் கூடும். எனிலும், நான் இன்றே எனது வயலை கொலை செய்துவிடப் போகிறேன்.
-
- 3 replies
- 925 views
-
-
-
தமிழா தமிழா திருந்திக் கொள்ளடா... உன்னைத் திருத்திக் கொள்ளடா.. அடுத்தவனை அழித்து வாழ்ந்த உன்தன் இரக்கமற்ற பேய்க்குணத்தினை நீயும் மாற்றிக் கொள்ளடா... விடிந்திடும் பொழுதினில் மலர்ந்திடும் ஈழத்தில் நீயம் மனிதனாகடா... உன் இனத்தையே அழிக்கும் உன் குதர்க்க குணத்தினை நீயும் விலக்கிக் கொள்ளடா... உன் முதுகினில் தேக்கிடும் அழுக்கினை நீயும் கழுவிக்; கொள்ளடா.. உலகம் விழித்துக் கொள்ளுமடா... இல்லையேல் இப்பூமி கருகிப் போகுமடா... தமிழா திருந்தப் பார்.....
-
- 1 reply
- 925 views
-
-
மடிகளை உள்ளிழுத்த மாடுகள் காலவெற்றிடத்தில் உறுமத் தொடங்கி நாணயக்கயிற்றுக்குள் வளைந்து உடல் சிலுப்பி நிலம் விறாண்டி மூச்செறியவும் செய்தன.. புளுதிகளையும் மூச்செறியும் கனதியையும் வலியேதுமில்லாமல் வழிந்த வீணீர்களையும் முகர்ந்த உண்ணிகள் தாமும் கூட உறுமமுயன்று உருத்திரதாண்டவமாடின... எரிந்து கிடக்கும் நிலத்தின் எச்சங்களை தின்றும், உறைந்துபோன மனங்களின் மர்மங்களை கொன்றும், ஈரமிழந்த வேர்களிலாலும் உயிர்ப்பை சுமக்கும் புனிதர்கள் தோள்கள் மீதேறியும், இன்னலற்ற சுவரோரம் முதுகு தேய்த்து உண்ணவும் உறங்கவும் ஆகுதிகளை வைத்து அவிபாகம் பெறவும் மடிகளை மறைத்து உறுமத்தொடங்கின கறவைமாடுகள்.. மேச்சல்நிலம் கொண்ட மாடுகளின் ஏவறைகளுக்கும் ஓய்வுநேர அசைபோடலுக்கும் அர்த்தமாயிரம் க…
-
- 5 replies
- 925 views
-
-
யாழ் மொழி பேசும் களவாணிகள் பல்கி பெருத்து விட்டனர் ஏதாவது ஒரு நொண்டிக் சாக்கு ஒரு சொல் போதும் கிளர்ந்து எழும் அடிமைகள் பதிவுகள் மற்றும் எழுத்துக்கள் இவை மற்றுமே முடிவுகள் என்று கருத முடியுமா என்ன.? பத்தாயிரம் பதிவுகள் போட்டால் நீ பெரியவன் சில பத்து பதிவுகள் போட்டால் நீ பிச்சைக்காரன் என்னங்கடா உங்கள் சைட்டு..? இணைய தளத்தின் அராஜகம்.. பிறகு எங்கு வினவுவது..? மனித மாண்புகளை.. சங்கிலிக்கருப்பு
-
- 12 replies
- 924 views
-
-
யுத்த காலத்தில் களத்தில் இருப்பவர்களுக்குதான் களநிலைமை தெரியும். யுத்த களத்தில் சில நேரங்களில் பின்னடைவு ஏற்படுவது இயல்பு, இக்காலங்களில் நம்மவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆதரவும்தான் நம்மவர்கள் வெற்றிகளை விரைந்தெடுக்க உதவும். இது நேரங்களில் சில மூதேவிகள் நம்மவர்களிடத்தில் பயத்தையும், சோர்வையும் ஏற்படுத்த முனையகூடும், அப்படி முயலும் சில மூதேவிகளை இங்கும் நாம் கான்கிறோம். அவர்களின் வெற்றுக்கூச்சல்களை புறந்தள்ளி புத்தி புகட்டுங்கள். தமிழர்களின் பொற்காலமாக கருதப்படும் பிற்கால சோழர்களின் வெற்றிக்கு வித்திட்ட வரலாற்று நிகழ்வை இது சமயம் குறிப்பிடுகிறேன் பழையாறைச் சோழ மன்னர்களில் விஜயாலய சோழர் என்பவர் இணையில்லா வீரப்புகழ் பெற்றவர். இவர் பற்பல யுத்த களங்க…
-
- 1 reply
- 924 views
-
-
எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே எங்களுக்காய் வாழ்ந்து எங்களுக்காய் மாய்ந்த எழுமதியே ! வணங்குகிறோம். சூரியனாய்ப் பிறப்பெடுத்துச் சுதந்திரத்தின் காவலனாய் கால்நூற்றாண்டையும் கடந்து காடும் மேடும் களவாழ்வுமென வாழ்வையும் உங்கள் வம்சத்தையும் எங்களுக்காய்த் தந்தவரே ! காலப் பெருநதியில் காணாமல் போகாமல் ஓயாமல் பாய்ந்த எரிமலையே ! காலகாலங்களுக்கும் ஆறாத்துயராக – எங்கள் அவதாரனின் துயரில் அனைத்தும் அசையவோ அடுத்து நகரவோ இயலாமல் போட்டு வைத்த பிணங்கள் போல் காலம் காப்பிடமின்றி அலைகிறது. வஞ்சம் கொன்றது எங்கள் வாழ்வைத் தின்றது இதை வரலாறு தன் மடியில் ஒளித்து வைக்க என்ன மர்மம் உள்ளதோ…..? வாழ்ந்தீர் எமக்காக எப்போதும் சொன்னது போல் இ…
-
- 0 replies
- 923 views
-
-
எறித்த வெய்யிலை ஓரம் கட்டியபடி எங்கும் எக்களித்தபடி காற்று திடுமென வானம் திகைத்து நிற்க கார்மேகக் கூட்டத்தின் கடைபரப்பல் துமித்துத் தூவானத்துடன் தூறலாய் ஆர்ப்பரித்தபடி மழை அதி வேகத்தோடு சோவெனச் சோலைகளை நிறைத்து சொல்லாமல் பெய்கிறது கோடையில் மழை குதூகலம்தான் ஆயினும் ............ எரிக்காத வெய்யிலை இரசித்தபடி ஏகாந்தத்துள் திளைத்திருந்து சுவாசத்தின் காற்றை சுத்தமாய் நிரப்பியபடி மெய்மறந்திருந்த என்னை குளிர்ந்து பட்ட துளி குதூகலம் கலைத்து கூட்டினுள் கலைத்தது ஆயினும் வீசும் குளிர் காற்றும் மூக்கை நிறைக்கும் மழையின் மணமும் சடசடத்துப் படபடத்து ஆடும் இல்லை மரக் கொடிகளும் வாசலில் நின்றெனை வர்ணிக்க வைத்தது இயற்கை எப்போதும் இரசனைக்குரியதே ஆனாலும் மாந்தர் நாம் …
-
- 3 replies
- 923 views
-
-
உன்னால் கவிஞன் ஆனதிலிருந்து உனக்காக எழுதி எழுதி என் அயுளைக் குறைத்துக் கொண்டத்துதான் மிச்சம் நீ என்னை புரிந்து கொண்டதுமில்லை இனியும் புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையும் இல்லை நீ என்னை வாசித்ததில்தான் தவறு என்று எண்ணியிருந்தேன் இப்போதுதான் புரிகிறது உனக்கு தெரிந்த மொழியில் நானிருக்கவில்லையென்று என்னை உனக்கு விளங்கப்படுத்திக் கொண்டேயிருக்க என் அயுளை உனக்காக கரும்பலகையாக்க முடியாது பொறுமைக்கும் எல்லை இருக்கிறது தண்ணீர் கூட மூன்று தடவைக்குமேல் பொறுக்காது நான் எத்தனை ஆண்டுகள் பொறுப்பது நீ என்னை புரிந்து கொண்டு வருவாய் என்று போதும் இதுவரை உனக்காக கவிதையோடு நான் காத்திரு…
-
- 1 reply
- 922 views
-
-
அம்மா....!!!நடை பழகும்போது ...கை கொடுத்தாயம்மா .....இடறி விழும்போது ...இடுப்பில் சுமந்தாயம்மா ....பள்ளி செல்லும் போது ....கால் வலிக்க நடந்தாயம்மா ....புத்தகப்பையுடன் என்னையும் ...தோள் சுமந்தாயம்மா ....!!!அம்மா ....!!!கருவறை சுமைமட்டும் ....நீ சுமக்கவில்லை ....உன் உடலின் அத்தனை ....உறுப்புகளிலும் என்னை ....சுமந்தாய் ...........!!!அம்மா .....!!!மடியில் வைத்து பாடம் ....தந்தாய் இப்போ நான்....பலபடிகள் தாண்டி பலநாடு ....சென்றேன் - புரிந்தேன் ...அன்னையின் மடியைவிட ....எந்த ஒரு பல்கலை கழகமும் ...இல்லவே இல்லை ......!!!அம்மா ....!!!கவிதை எழுத முனைவேன் ....வார்த்தைகள் வந்து தடுக்கும் ....அம்மா என்றவுடன் அத்துணை ...சிந்தனையும் வெற்றிடமாய் ....மாறிவிடும் - தாயே உம்மை ...எதனோடு ஒப்பிட…
-
- 0 replies
- 922 views
-
-
உன் பொங்கல் கவிதை தித்திப்பதற்காகவே சேர்த்தாயா உன் சக்கைரைப் பெயரை இப்படி இனிக்கிறதே * தினம் நீ முறித்து தரும் கரும்பின் சுவை அலுத்துவிட்டது எங்கே கரும்பொன்றை கடித்துவிட்டு தா உன் இதழ் தொட்ட சுவை அறிய வேண்டும் நான் * நீ கண் மூடி வழிபட வழிபட தன் நெற்றிக் கண்ணையும் திறந்து பிரகாசிக்கிறான் சூரியபகவான் * சூரியபகவானுக்காய் நீ போடும் நட்சத்திரக் கோலத்தோடு உன்னை பார்க்கும்போது நிலாக்கோலம்தான் ஞாபகம் வந்தது எனக்கு * எல்லாரும் கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தார்கள் நீ பாடிய தேவாரத்தை நான் மட்டும் கண்திறந்து கவனித்துக் கொண்டிருந்தேன் எப்போ பிரியும் உன் இமைகள் என்று -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 922 views
-
-
உள்ளதை மறைத்து உள்ளவரோடே உறவாடும் ஊடக நரிகளின் உஷ்ணப் பேருமூச்சோ . வள்ளலார் வாக்கையே வசைபாடிய - நம் வம்சம் போக்கற்ற போலிச்சாமியார்களின் புகலிடம் ஆனது கண்ட பூமித்தாயின் கனல் முச்சோ மாட்டுக்கே நீதி தந்ததோன் - மண்ணில் மட்டற்ற மாசு புரிந்தார் பணம் செய்யும் மாயத்தால் மண்புளோராய் மாறி மானமின்றித் திரிதல் கண்டு வெட்கித் தன் விழி மறைத்த நீதித் தாயின் சின மூச்சோ சுழலத் தொடங்கிய மின்விசிறி என் சிந்தனைக்கு சுவரிடவே வழமை வாழ்க்கைக்குத் திரும்பியவளாய்...... …
-
- 2 replies
- 921 views
-
-
ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிட்டந்தது தமிழ் வீரம்! இராசராசனும் ராசேந்திரனும் கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் கீழ் ஆசியம் முற்றும் நல் தமிழ் பேரரசு கோலோச்சியதும் இன்நாளில்தான் ஈராயிரம் ஆண்டுகள் இழந்து கிடந்தோம் இனமானம்! எள்ளி நகையாடினர் வடவர் என்று தமிழ்ச்சேரன் செங்குடுவன் படை எடுத்து இமயம் வென்றதும் இன்நாளில் மூவாயிரம் ஆண்டுகள் மூச்சிழந்தது எம் பகுத்தறிவு நம் மண்ணை ஆரியர் அபகரித்ததும் பணி செய்ய வந்த பார்பனீயம் எம் அறிவுக்கே விலங்கு இட்டதும் எல்லைகளை நாம் சுருக்கிக்கொண்டதும் இன்நாளில்தான் ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த தமிழ் வீரமும் ஈராயிரம் ஆண்டுகள் இழந்து கிடந்த இனமானமும் மூவாயிரம் ஆண்டுக…
-
- 1 reply
- 921 views
-
-
இளமைக்கால நட்பு நீயும், நானும் கரகமாடிய அந்த ஒற்றை விளக்கு அரசமரத்தடி... தோல் கிழிந்து இரவெல்லாம் சிராய்ப்பு வலி கொடுத்த நாய்க்கர் வீட்டு வேப்பமரம்... மட்டைகளை தோளில் சுமந்து மைல்கணக்கில் நடந்து கிரிக்கெட் ஆடிய சொசொரப்பு மைதானங்கள்... எதிரியின் பம்பரங்களை சில்லு சில்லாக உடைத்த பிரேமா வீட்டு முன்வாசல்... பசியெடுக்காத நிலாவுக்கு கும்மி தட்டி சோறு£ட்டிய தாவணி சிட்டுக்களை காண அமர்ந்த திண்ணைகள்... குமாரிடம் மூக்குடைபட்டு இரத்தம் சிந்திய நெருஞ்சி முட்புதர்... இப்படி ஒவ்வொன்றாய் பதினைந்து ஆண்டுகளில் எல்லவற்றையும் மிதித்தழித்துவிட்ட கால அரக்கன்.. மிஞ்சியிருக்கும் நினைவுகள் மட்டும் சுவடுகளாய்…
-
- 0 replies
- 920 views
-
-
நீ கவனமாக இரு……… போராட்டம் வீண் போகாது.” Posted by: on Jul 24, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் உலகம் முழுமையும் விழுது பரப்பி நிற்க்கும் பெரு விருட்ச்சம். குருவிச்சைகளும் மாயமான்களும் மாவீரர் தடம் பற்றி ஒருபோதும் தலைதூக்க முடியாது. எவரேனும் ஆணிவேரை அழிக்க நினைத்தால் விழுதுகள் வீரியம் கொடுக்கும ; கறுப்பு யூலைகளும் சிவந்த மேய்களும் உலகின் மனச்சாட்சியை தட்டத் தொடங்கிவிட்டது சாட்சியங்களை ஒப்புவிப்போம். அன்று சிங்களத்தின் சிறைக்கூண்டில் - குட்டிமணி நெஞ்சை நிமிர்த்தி சொன்ன வார்த்தைகள் எங்கோ ஒரு மூலையில் உள்ளுணர்வாய்…. ”ஒரு குட்டிமணியைக் கொல்வீர்களனால் பல்லாயிரம் குட்டிமணிகள் தோற்றம் பெறுவார்கள.;” நான் ஓர் விடுதலைப் போராளி இறுதியா…
-
- 0 replies
- 920 views
-
-
போகமட்டீரோ நீரும் நரகத்திற்கு...... சிங்களவா உனக்குத் தமிழர் செங்குருதி தானா உணவு பல தசாப்தங்கள் கடந்தும் பசி அடங்கவில்லையா உனக்கு இன்னும் எத்தனை தசாப்தங்கள் தேவை உனக்கு இனப்படுகொலை புரிந்து, உன் ஈனப்பசியைப் போக்குதற்கு வேணுமடா இது எமக்கு வேறுபாடு பாராமல் அன்று உன் கையில் ஆட்சியினைத் தந்ததற்கு சாபமடா எம் பிறப்பு, அதை காட்டுதடா நாட்டு நடப்பு போதுமடா எம் தவிப்பு போகமாட்டீரோ நீரும் நரகத்திற்கு
-
- 3 replies
- 920 views
-
-
அகதிப்பொன்னியும்..தனித்துப்போன அவளின் கனவுகளும்.... தனிச்சு ஒருத்தியாய்க் காடுவெட்டிக் கல்லுடைத்து வேலிபோட்டுக் கூடுகட்டி கோழிவளர்த்து ஆடுவளர்த்து சிறுகச்சிறுகச் சேமித்துக் கட்டிய அந்தவீட்டில்த்தான் ஊர்விட்டுப்போயும் போகாமல் வேர்விட்டுக் கிளைபரப்பி எங்கும் வியாபித்திருக்கின்றன போரிற்கு இடம்பெயர்ந்த பொன்னியின் கனவுகள்.... புழுதிவாசம் காற்றிலெழப் புழுங்கிக்கிடக்கும் முற்றத்தில்தான் அகதியாக்கப்பட்ட பொன்னியின் வியர்வைகள் ஆவியாகின.. புழுங்கலும் ஒடியலுமாய்க்காய்ந்த புழுதி முற்றத்தில்தான் சுழிப்பும் முனுமுனுப்புமெனக் கலைக்கும் பொன்னிக்கு அலைத்துத் தண்ணிகாட்டிப் புன்னகையும் சிரிப்புமெனப் புறாக்கள் மேய்ந்துசெல்லும்... ஊற்ற…
-
- 0 replies
- 920 views
-
-
ஆழ்கடலின் அலை அயத்தமானது அது புரியாது நானும் அதன் அழகில் மயங்கி அலையின் சீற்றம் புரியாது கடலின் ஆழம் தெரியாது கரையின் ஓரமாய் நின்று ஆர்ப்பரிக்கும் அலை கண்டு அகமகிழ்ந்தே காத்திருந்தேன் அலை உயந்து பின் தணிந்தது சுழன்ற காற்றின் திசையெங்கும் சுழற்றி வாரி நீரை இறைத்தது என்மேல் தெறித்து விழுந்த நீர்த்துளிகள் மேனி நனைக்க அலையின் மகிழ்வில் நானும் ஆர்ப்பரித்து நின்றேன் எழுந்தது எதிரியாய்ப் பேரலை என் அங்கம் அத்தனையும் சுருட்டி ஆத்மாவின் மூச்சை நிறுத்தி சிந்தனை எல்லாம் அழித்து சிகரங்கள் எல்லாம் தொட்டவளை தன்னை நம்பியே நின்றவளை ஆழ்கடலின் இருண்ட அறையில் எழுந்திடமுடியாப் பாறைகள் நடுவே எதிரியாய்த் தள்ளி எக்காளமிட்டது என்ன செய்வேன் நான் எழுந்துவர முடியவில்லை எ…
-
- 9 replies
- 920 views
-
-
இனி யவளே என் இதயத்தில் நிறைந்தவளே இனி என்னுள்ளே எனக்கென்றோர் இதயமில்லை இனி நீ இன்றி என் வாழவிலு மொருத்தியில்லை இனி நீயேதான் என்றுமெந்தன் வாழ்வினெல்லை நீ இருக்கும் வரை தான் இனி நானிருப்பேன் நின் முகமலர் வினை தான் நிதம் பார்த்திருப்பேன் நின் கூந்தலில் மலர்ச் சரம் இனி நானாயிருப்பேன் நின் பாதங்கள் படும் நிலமும் நானா யிருப்பேன் நீ யெனக்கிந்த மண்ணில் வந்த வெண்ணிலா நீ எனை ஆளும் ஆட்சி உந்தன் கண்ணிலா நின் பேச்சினில் வரும் சுகம் இளவேனிலா நின் விழி வழி வரும் மொழி தான் காதலா
-
- 5 replies
- 919 views
-
-
சுள்ளிகள் பொறுக்கும் காக்கையின் கனவுகளில் கூடு. கூட்டில் குலவும் இணையின் இதமான உரசலும் நெருக்கமும், நெருக்கத்தில் விளைச்சலில் கூடுநிறை முட்டைகள், சிறகணைப்பின் சூட்டில் சிலிர்த்துத் தலைநீட்டும் குஞ்சுகள், வழியெல்லாம் தேடி வாகாய்க் கொணர்ந்த இரை, இரை கேட்டு வாய் பிளக்கும் குஞ்சுகளின் பசிக்குரல், பசி தீர்க்கும் தாய்மையின் பரிவான வாய் ஊட்டல். ஓயாத பகற்கனவும் அயராத உழைப்புமாய்க் காலம் கடக்க, நனவானது முதல்கனவு கூட்டின் முழுமையில் குதூகலித்துத் துயில் கொண்ட முதல்நாள் இரவு கருத்தது மேகம் சிறுத்தது மேனி சுழன்றது காற்று உழன்றது மரக்கிளை கூடு சிதைந்தது காடு கவிழ்ந்தது உயிர்த்தெழுந்த காகம் …
-
- 0 replies
- 919 views
-
-
தூங்கி கிடந்தீர்கள்.. புன்னகைத்தார்கள் அரசியல்வாதிகள்.. பின்னால் நின்று உங்கள் கன்னங்களை வருடிவிட்டார்கள்.. இன்னும் என்ன வேண்டும் என்று இனமானத்துக்கு விலை பேசினார்கள்.. முன்னால் உங்கள் கன்னங்களை தடவிவிட்டு பின்னால் உங்கள் கண்ணீரை காசாக்கினார்கள்.. செம்மரிகளாய் இருப்பார்கள் என்றெண்ணி தமிழரை செருப்பாய் தேய்த்தார்கள்.. இருப்பை உணர்த்த ஒரு தீ பிறாக்காதோ என்று தமிழ்க்கரு சுமந்த மனங்கள் தவித்தன.. உள்ளே குமைந்து கொண்ட உணர்ச்சித்தீயை மோதி அணைத்துக்கொண்டே இருந்தது சாப அரசியல்... பழுத்த கிழம்கள் எல்லாம் பாழும் அரசியலில் இருந்து உழுத்துப்போன வார்த்தைகளைப் பேசி உருவேற்றி வெளுத்ததெல்லாம் பாலென்று தொழுது நிற்கும் தொண்டர்களின் வேர்வைகளில் கொழுத்துப்போய் தம் குடும்பம் வளர்க்க..…
-
- 13 replies
- 919 views
-
-
எண்ணம் எண்ணம் உயர்வாய் எண்ணம் கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்! உன்னை நீயே அறிந்து கொண்டால் பெறலாம் விரைந்து வெற்றிக் கிண்ணம்! உள்ளில் இருக்கும் கள்ளம் அகற்றி கொள்வாய் உந்தன் பக்கம் வெற்றி! விழிகள் திறந்து உன்னைச் சுற்றி நடப்பது தெளிந்தால் நாளும் வெற்றி! எதுவிங்கு வெற்றி தெரிந்தவர் இல்லை? தன்னை உணர்தலே வெற்றியின் எல்லை! பொய்மை என்னும் போர்வை அகற்றி உண்மை நெறியினில் செல்வது வெற்றி! அடுத்தவர் முதுகில் ஏறிச் சவாரி செய்வது அல்ல உண்மை வெற்றி! அடுத்தவர் கண்ணீர் துடைக்க நீளும் விரல்கள் கொள்வதே உண்மை வெற்றி! சொல்லிலும் செயலிலும் நன்றே உரைத்து அடையும் வெற்றி உனக்கே உரித்து! நல்லோர் என்று உலகம் போற்றும் அதுவே என்றும் மாறா வெற்றி! …
-
- 3 replies
- 918 views
-
-
பயங்கரவாதியின் மகள் இறந்தேனும் தன் துணைவனைக் கண்டுகொண்டாள் அவள் இப்படி ஒரு நீள் பிரிவு எந்தப் பெண்ணுக்கும் கிடைத்துவிடக்கூடாது என எண்ணியபடி ஆயுட் சிறைவண்டியில் ஏறினாள் சிறுமி எந்தக் குழந்தையும் இப்படி ஒரு சிறை வண்டியில் ஏறிவிடக்கூடதென எண்ணியபடி தாயின் சடலத்தின் பின் கொள்ளிக்குடத்துடன் சென்றான் சிறுவன் எந்தக் குழந்தையும் இப்படி ஒரு வயதில் தன் தாயிற்கு கொள்ளி சுமக்கக்கூடாதென எண்ணியபடி காத்திருந்து காத்திருந்து இறந்துபோன துனைவிக்கு விலங்கிடப்பட்ட கைகளால் அரப்பும் சந்தனமும் அப்பினான் அவன் எந்த ஒரு துணைவனுக்கும் இப்படி ஒரு இறுதிச் சந்திப்பு நிகழ்ந்துவ…
-
- 1 reply
- 918 views
-