கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
சின்னதாய் ஒரு சிந்தனை பசிக்காக உண்டு வாழ் உணவு கிடைக்கபெறாதவர்கள் அதிகம் உண்மையாய் உழை வேலை இல்லாதவர்கள் ஏராளம் திறமையுடன் செயலாற்று வாய்ப்பு கிடைகாதவர்கள் ஏராளம் முயற்சி செய் வெற்றி பெற்றவர்கள் அதிகம் நம்பிக்கையுடன் வாழ் சாதித்தவர்கள் அவர்களே!!!
-
- 22 replies
- 4.9k views
-
-
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நீ நில்லடா..... தமிழா தமிழா நில்லடா.... உன் தலை விதி கோலம் என்னடா....?? அன்னியர் அரனில் ஏனடா அடிமையாய் வாழ்வது நீயடா...??? அவன் காலனி உன்னில் பதிவதா...?? அவன் காறியே உன்னில் உமிழ்வதா....??? இத்தனை சகிப்பு எதற்கடா...?? இன்னும் மௌனமாய் நீ ஏனடா...?? தீயாய் உணர்வதை மூட்டடா... பகையை தீயினில் போட்டு பொசுக்கடா... பொறுத்தது போதும் பொங்கடா... அடிமை விலங்கதை உடையடா... அகிலத்தில் தமிழனை நிமிர்தடா... ஆண்டுகள் ஆண்டுகள் அடிமையா...?? அட தமிழா நீ என்ன கோழையா...??? அவன் வன்முறை நீ இன்று அடக்கடா.…
-
- 7 replies
- 3.3k views
-
-
தேநீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள் எப்படி இழந்தோம் என்பது தெரியாமலேயே தொலைந்து போய்விட்டன அந்த இனிய நாட்கள். கணக்கன் தோட்டத்து உப்புநீரில் குளித்தால் மேனி கருக்குமென்ற அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி வியாபாரி தோட்டத்து நன்னீர் கிணறு அதிர குதித்தாடிய ஈர நாட்கள்... ஓடைநீர் ஊற்றில் சிக்கிய உறுமீனுக்காய்த் துள்ளி விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப் பீற்றிக்கொண்ட நாட்கள்... கவட்டைக் கொம்பொடிய …
-
- 0 replies
- 2.6k views
-
-
-
இன்னொரு அநாதை தமிழ்மொழி, பஹ்ரைன் பசியை போக்கிக்கொள்ளவே பழைய சோறு கேட்டு பலபேர் வீட்டு வாசலில் போய் நின்றேன். ஒரு சிலர் சுடச்சுட சோருபோடுவதாக வீட்டுக்குள் அழைத்து விருந்தும் வைத்தனர், உண்ட மயக்கத்தில் உறங்கினேன் என்று அன்று நினைத்தேன் ஆனால் இன்று தான் தெரிந்தது என் கர்ப்பை சூறையாட ஒரு பிடி சோற்றையும் ஒரு துளி மயக்கமருந்தையும் தியாகம் செய்த தியாகிகள் என்று. எது எப்படியோ என்னைப்போல் இன்னொரு அநாதை வீதியிலே கையேந்தி ஊர்வலம் போக என் கருவறைக்குள்ளே ஒத்திகை பார்க்கின்றன. http://www.koodal.com/poem/tamil/kavithai.asp?id=1666&c=1&title=another-orphan&author=tamilmozhi-baharain
-
- 0 replies
- 1.6k views
-
-
கொடும் தீ வந்தெம்மைத் தீண்டும் சுடும் போதெல்லாம் உண்மை தூங்கும் வெறும் வார்த்தை ஜாலத்தில் அறிக்கை பறக்கும்! உலகும் இவர் பேடித்தனம் கண்டு மெல்லச் சிரிக்கும்! அழும் குழந்தையின் கண்ணீர் கண்டும் விழும் தலைகளின் வணங்காமை கண்டும் வெ(ல்)லும் எம் பகை என்றெம் வீரர் குரல் கேட்டும் உதடு சுளிப்பார் உண்மை மறப்பார் கடும் கோபம் கிளறிவிட்டார் எம் குலப் பெண்மை பறிக்க வந்தார் போலிச் சமரசம் செய்து நின்றார் பொல்லாத போர்தன்னை வேர் ஊண்டித் தளைக்கச் செய்தார் சாயம் மாறும் ஒரு நாள் ஞானம் வரும் பின்னாள்(ல்) ஈழம் வரும் பொன்னாள் காயம் மாறும் அந்நாள் எம் கனவு பலிக்கும் திருநாள்
-
- 7 replies
- 1.5k views
-
-
கனதிகள் அற்ற காகிதக் கப்பலாய் மாறி கவலைகள் அற்று நான் கண்வளர வேண்டும் நினைவின் விளிம்புவரை நிழல்தரும் அனைத்தும் நிர்மூலமாக்குவதாய் நெருடலாய் நிதம் நிகழும் நெருக்குதல்கள் நீங்க நிழற்குடையின் கீழ் நான் நீள்துயில் கொள்ள வேண்டும் மனவறையின் பக்கம் மண்டிய படி கிடக்கும் மூச்சுப் புகமுடியாப் புதரின் முடிவற்ற மீதங்களை மட்டுப்படாத காலத்தால் கருனைக் கொலை செய்திட மனம் ஆர்ப்பரிக்கிறது ஆயினும் அறுதியிட முடியா ஆழத்தில் கால்பதித்து அகக்கதவை எப்போதும் அறைந்து சாற்ற முடியாத அகத்தின் அறம் இழந்து அளக்கமுடியா ஆளத்தை அடிமுடி தேடியபடியே அல்லலுடன் கடக்கிறேன்
-
- 2 replies
- 682 views
-
-
தேவதையாய் நீ வந்த போதே நான் தெரிந்திருக்க வேண்டும் எனக்கு தெரியாமலே போய்விடுவாயென்று...♥
-
- 0 replies
- 626 views
-
-
அது ஒரு - நிலக் கீழ் இரயில் பயணம்.. கண்கள் அழகிய விளம்பரங்களோடு - தான் பேச.. மனம் - பல கணக்குப் போட்டு களைத்துப் போக.. கழுத்துத் தசைநார்கள் - ஓய்வுக்காக இழகித் தொங்க.. எதிரே.... வெள்ளை வான்வெளியில் நீல நிலவாய் உருண்டோடும்.. அவள் கண்கள்..! நின்று நிலைத்து - நிலை நிறுத்த வைத்து... பார்வைகள் சந்தித்து கணங்கள் கூட ஆகவில்லை.. விழியோ நட்பின்.. மொழி பேசுகிறது..! என் விழி... நியுற்றினோவின் வேகம் தாண்டி.. நிறப் பேதம் வென்று... செய்த சாதனையது..! "நியூட்டனின்" நிறப்பிரிக்கை கூட - அங்கு இல்லை..! அவள் தான் - அப்பொழுது என் தனிமை போக்கும் நண்பி..! விழிகளின் - மொழிப் புரிதலில் அவளும் இணங்க.. தொட்டிழுத்து …
-
- 7 replies
- 770 views
-
-
ஒரே ஒரு வெய்யில் காலம் எனக்கு கொடு! விதவைகளாய் இருந்த மரங்கள் பச்சை போர்க்க , ஊரெல்லாம் பண்பாடியே பறவைகள் பறக்க , சூரியனும் பனிக்கு பாய் ( bye ) சொல்லி ; சூட்டுக்கு ஹாய் (hi )சொல்ல , அது கண்டு என் மனம் உவகை பொங்கும் . மெலிதாகவே என் மனம் வருடும் மெல்லிய காட்சிகள் நிறைந்த ஒரே ஒரு வசந்தம் எனக்குக் கொடு ! அந்த காட்சிகளை நிரவிக் கொண்டபின் , சந்தோசத்துடன் என் இதயம் சத்தத்தை அடக்கத் தயார் .
-
- 6 replies
- 934 views
-
-
[size=5]விதையாகிப் போன நம் வீரத்தியாகிகளே,[/size] [size=3][/size] [size=3][size=4]தன்னை உருக்கி –இத் தரணிக்கு ஒளி கொடுக்கும் சுடர்போல் தமிழ் தாயவளின் உறவுகள் வாழ விதையாகி போன நம் விடுதலையின் வீரத்தியாகிகளே கார்த்திகை இருபத்தி ஏழு மட்டுமல்ல காலமெல்லாம் உம்மை கைதொழுவோம் நாம்[/size] [size=4]அடக்குமுறை, ஒடுக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க அமைதிக்கு பெயர் பெற்ற அழகிய நம் தேசம் வனப்பிழந்து வாடுவது தாங்காமல் –புது வலிமையுடன் புறப்பட்ட வாலிப நெஞ்சங்களே, கரத்தில் கனலுடனும் மனத்தில் அனலுடனும் களமாடி பகை வெல்ல புறப்பட்ட தோழர்களே, வெற்றி மேல் வெற்றியாக பல வெற்றிகள் எமக்கீந்து வெஞ்சமரில் உயிரீந்த மாவீரர்களே, வாசனை வீசிடும் வாலிப வயதினிலே வளர்…
-
- 1 reply
- 783 views
-
-
எங்கேயோ கேட்கிறது அந்த முனகற் சந்தம்! காரிருள் கவ்விய பொழுதில்... ஈருடல் தழுவிய நிலையாய்... யாருமறியாமல் நடக்கிறது கதகளி! கையில் அகப்பட்டதையெல்லாம் அள்ளியெடுக்கிறான் திருடன்! மெய்யில் வசப்பட்டதையெல்லாம் அள்ளிக்கொடுக்கிறாள் திருடி! கன்னக்கோல் கன்னம் வைக்க எண்ணம்போல் கன்னம் சொக்க, கொஞ்சங் கொஞ்சமாய் திருடுபோகிறது! கொஞ்சிக் கொஞ்சி உதடு நோகிறது! பின்னிப் பிணைந்த அரவங்கள் போல் எண்ணித் துணியும் அவயவங்களுக்குள், சிக்கித் தவிக்கிறது ஒளிபடா இடங்கள்! தறிகெட்டுப்போன மனதுக்கும் வெறி முற்றிப்போன உடலுக்கும் விடை கொடுக்கின்றன துகிலங்கள்! பாலாடை நீக்கி பால்பருக... பசியோடு காத்திருந்த பாலகன்போல் மேலாடை விலக்கி அடம்பிடித்து, கீழ்நோக்கி நகர்கின்றான் பாதகன்! …
-
- 11 replies
- 1.3k views
-
-
திரும்பும் திசையெல்லாம் திருடப் பார்க்கிறார்கள். தமிழனின் தன்மானத்தை.. வறண்ட தீவாய் முல்லை மண் வந்து போகிறது கனவில்.. ஈரப்பதம் இல்லை அதிலெங்கும்.. கண்களில் கூடத்தான் தினமழுது தீர்ந்துவிட்டது என் செய்வேன் யார் யாரோ சொல்கின்றனர், தனி நாடு அமைப்போம் என்றும் தனி ஆட்சி செய்வோம் என்றும் உரிமைகள் தொலைத்து, உயிரையும் தொலைத்து, சலனமற்ற சடலங்களால், செய்யப்போகிறோமா அதை.? கேள்விக்குறியாக இருக்கும் எம்மிடம் கேள்வி கேட்க ஆயிரம் பேர் முற்றுப்புள்ளி வைக்க எவனும் இல்லை முடிந்த கதை முடிந்த கதை என்று எம்மை முடக்க தான் பார்கிறார்கள்.
-
- 4 replies
- 739 views
-
-
உலகே உனக்கு கண் இல்லையா? என் இனமே நாம் போராடினால் தோற்றுபோகோம்.துரோகிகளின் துரோகத்தினால் அல்லவா எம் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. வீரபாண்டிய கட்டபோமனுகே ஒரு எட்டப்பன் இருக்கும் போது பதவிக்கும் பணத்துக்கும் விலை போகாத நம் தேசிய தலைவனுக்கு ஆயிரம் எட்டபர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. யேசுவிற்கு கூட ஒரு யூதாஸ் துரோகிகளே இல்லாத வரலாறே இருக்காதா? கூட இருப்பவர்கள் தானே குழி பறிகிறார்கள் இறைவா இன்னுமா இவர்களை நீ பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? அழித்துவிடு அழிந்துகொண்டிருக்கும் எம் இனத்தை இவர்கள் இன்னமும் அழித்துக்கொண்டு இருக்கும் எம் இனத்தை அழிபவர்களை அழித்துவிடு எங்கள் போராளிகளே உங்கள் மனத்துணிவும் ஆற்றலும் எமக்க எம் சந்ததிக்காக நீங்கள் சிந்திய ஒவொரு து…
-
- 0 replies
- 6.6k views
-
-
-
வாழ்வே உன் அர்த்தம் தேடி அலைகின்றோம் வழிநெடுகிலும் பொழுது போக அழுகின்றோம் எங்கள் காயங்களின் வினோதங்களை வேடிக்கை பார்க்கின்றோம் சாரலும் தூறலும் கூடவே பெருவெள்ளமும் மண்ணில் காய்ந்த குருதியை கழுவிச்செல்கின்றது புதுவெள்ளமாக திசைகளற்றுச் செல்கின்றது பள்ளம் எங்கேயோ அங்கு நகர்கின்றது எங்கள் வாழ்வும் அதன் நியாங்களும் கூடவே கரைந்து செல்கின்றது. வீழ்ந்தவர்களின் தடங்கள் ஊரெங்கும் பரவிக்கிடக்கின்றது உயிர்வலிகளுடன் நிறையக் காட்சிகள் நேற்று கனமாயிருந்தது அந்தப்பிள்ளை இங்குதான் சிதறிக்கிடந்தன் இந்தப் பிள்ளை இங்குதான் குடல் வெளித்தள்ளிக் கிடந்தான் இந்த தெருவில் அந்த முடக்கில் ஊரெங்கும் காடெங்கும் நேற்றுவரை எங்கள் செல்வங்களாக சித…
-
- 1 reply
- 733 views
-
-
தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு.. தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /* ஒரு பயம் எனக்கு /* எப்போதாவது ஒருநாள் /* என் விசயத்தில் தலையிடாதே /* என்று சொல்லிவிடுவானோ என்று /* மகனே மறந்தும்/* அப்படி சொல்லிவிடாதே /* மரணித்து போய்விடுவேன் /* சின்ன வயதில்/* நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /* நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /* என் வயதான காலத்தில்/* நானும் உன்னிடம் குழந்தை போல்/* வினா எழுப்பக்கூடும் /* கத்தாதே வாயை மூடு /* என்று சொல்லிவிடாதே /* வலி தாங்க முடியாத…
-
- 3 replies
- 859 views
-
-
அன்புடன் அனிதா இணையத்தில் யாழ்மீட்டி ரீங்காரம் செய்து - உங்கள் இதயத்தை பகிர்ந்துகொண்ட எம்வீட்டு குருவிகளே! எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்? இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை! உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்ஜோடி இன்றிலிருந்து என்றென்றும் உடலாலும் இணைகிறது! உள்ளத்தில் நீர் சுமந்த உண்மையான அன்பிற்காய் திருவிழா செய்கின்றோம்! திருமணமாம் உமக்கின்று! இதயத்தின் உரசல்களில் உருவான ஒளித் தீப்பிழம்பு விண்வெளியில் பயணித்து கண்மணிகள் கதைசொல்லும்! இணையத்தில் சுழியோடி முத்தான காதல் செய்த மணி ரசிகை ஓருயிராய் வாழ்க பல்லாண்டு! அன்புடன் கலைஞன் முகமூடிக் கருத்தாடல்.. …
-
- 37 replies
- 50.1k views
-
-
விண்ணை தாண்டி விழிக்க வைக்கிறாய் உன் விழிகளாலே அன்பை காட்டி அரவணைக்கிறாய் உன் அழகாலே காதல் என்று சொன்ன போது மட்டும் ஏனடி அண்ணா என்று சொல்லி என்னை புதைத்து விட்டாய் மண்ணுக்குள்ளே...
-
- 2 replies
- 956 views
-
-
மீண்டும் அங்கே! - சத்தி சக்திதாசன் உள்ளத்தின் வெள்ளமது நதிபோல அசைகிறது என்னிதயத்தின் ஓரத்தில் உறங்கிக் கிடந்த என் மனப்பறவையது விழித்துக் கொண்டு இசைப்பது சோக கீதம் என் மண்! என் மக்கள்! என் மொழி! நான் மீண்டும் அங்கே போக வேண்டும் பாதைதான் தெரியவில்லை பயணம்தான் புரியவில்லை சென்று வந்த நண்பனவன் சொன்ன ஒரு செய்தியொன்று கல்லிலே எழுத்துப்போல இளமையில் கல்வி தந்த இனிமையான கல்விச்சாலை இடிபாடுகளுடன் இடர்படுகிறதாம்! நானுதித்து தவழ்ந்த அந்த நினைவகலா இல்லமது தாய்மடியின்றும் தாவி அன்று தவழ்ந்திருந்த முற்றமது மழைபோல வானிலிருந்து மதியற்ற வீணர் தம்மால் வீசப்பட்ட குண்டுகளினால் வளமிழந்து வாடுகின்றதாம்! வாசமிக்க முல்லைய…
-
- 0 replies
- 904 views
-
-
பொய்மையும் கயமையும் கொட்டமடிக்கும் வேளையில் வாய்மையும் நீதியும் நடைபயிலவேண்டும் நாணிக் குறுகி நிற்கும் என் இனம் வீறு நடைபோடவேண்டும் அடிமைச் சங்கிலியை உடைத்த தமிழச்சிகள் தரணியில் வாழவேண்டும் கறையான் புற்றில் குடியிருக்கும் பாம்புகள் குளறியோடவேண்டும் தகரக் கொட்டகை வாழ்வு உக்கியே போகவேண்டும் உழுத்த எம்வாழ்வு உயரவே வேண்டும் எங்கள் நண்டுக்குணம் மாறி திமிறித் திரண்டால் நடக்கும் இவை நடக்குமா ??????????
-
- 25 replies
- 2.5k views
-
-
நான் தனிய இல்லை தலைநகராம் கொழும்பில் காலையில் குண்டுவெடிப்பு தொலைக்காட்சி பார்த்ததில் மலைத்து போனேன் வலைப்பின்னலில் கண்களை சுழல விட்டதில் கண்டுகொண்டேன் மீண்டும் பல செய்திகளை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கையை விட தேடிப்பிடித்த தமிழர்களின் தொகையோ பன்மடங்கு என ஒவ்வோர் இடமாக தேடி வெவ்வேறு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை நினைக்கையில் பகலவனுக்கே தாங்க முடியாமல் இருளைக் கக்கினான் வெண்ணிலவும் மங்கலாக உருண்டது வானமதில்.. அடையாள அட்டையை எடுத்து தலையணைக்கடியில் வைத்து ஆடம்பரமின்றி ஆனால் அழகாக ஆடை அணிந்து படுக்கையில் புரண்ட போது உறக்கம் எனக்குள் தூரவாகிப் போனபோதும் உறங்கினேன் என்னையும் மறந…
-
- 27 replies
- 4.4k views
-
-
வைரஸாய் தொற்றிக் கொண்டு கன்னித் தமிழை கணணித் தமிழாய் கனிவிக்க கனவோடு வந்தவன்... தமிழ் பொடியாய் சிறக்க சில சிக்கல் சிலர் தர... சிறகு விரித்தான் குருவிகளாய் நட்புகளின் கூட்டுறவில்..! நீண்டு நிலைத்த காலமதில்... எண்ணற்ற எண்ணங்களுக்கு எழுத்துரு.. இலத்திரன்களால் ஒழுங்கமைத்து ஓவியம் தீட்டி பச்சை தீட்டிக் கொண்டவன் யாழது.. இயல்பாகினன். தொல்லையொன்றை இனம் மொழி இணைந்து காண.. மீண்டும் வெடித்த சொற் போரில் பிறந்தது நெடுக்கால போகும் காலம்... நீண்டது நிலைத்தது. இயல் இசை நாடகம் தமிழோசை அடங்கிய தமிழ் மூன்று.. யா…
-
- 10 replies
- 1.2k views
-
-
உடலிருந்தும் உறவிழந்து அழுகுதே தமிழினம் துயர் துடைக்க யார் வருவார் நீங்கள் இல்லையே தமிழன்னை காத்த மலை ஒன்று சரிந்ததே அன்று உலகத்தில் எம்மை உரைத்த பிறந்தாக வேண்டும் நீங்கள் இன்று !!! (முகநூல்) உலகமெங்கும் ஏற்றுக்கொண்ட ஈழ ராஜ தந்திரி உலகமெங்கும் தமிழரின் உரிமை சொன்ன மந்திரி தழு தழுத்த குரலோடு தர்மம் சொன்ன வாய்மொழி தலைவன் மீது அன்பு கொண்டு அனலில் நின்ற பெரும்புலி எம் தேசம் தந்த பெறுமதி எம் தேசத்தின் குரல் !!!
-
- 0 replies
- 572 views
-
-
அன்புக்கு இலக்கணமாய்- என் அகராதியில் இருப்பவனே பதறிப்போன பொழுதெல்லாம் பக்கமிருந்து பகிர்ந்தவனே... நம்பிக்கையிழந்த போதெல்லாம்- எனை நிமிர்ந்து எழ வைத்தவனே- என் நண்பர்களையும் அன்பர்களையும் தன்னவராய் ஏற்பவனே நம்பிக்கையின் முழு வடிவாய் நாள்தோறும் திகழ்பவனே காலத்தின் கடூரத்திலெல்லாம் கண்ணிமையாய் காத்தவனே.. காதலித்த போது மட்டுமன்றி கரம்பிடித்த பின்னாலும் காதலின் சுவையுணர வைப்பவனே.. பெண்ணடிமைத்தனம் எதிர்த்து பேசுகின்ற பெண்ணாயினும் களங்கமற்ற உன் பாதம் கண்ணிலொற்றல் தகுமென்று கண்ணாளா உன்சார்பாய் களமாட முன்வருவேன் எப்போதும் என் இனியவனே எனைப் புரிந்து நடப்பவனே... நீயே என் துணைவன்.. நீ போதும் என் வாழ்வை நித்தமும் பசுமையாக்க...
-
- 1 reply
- 447 views
-