Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாசறையில் பூத்து கல்லறைகளில் உறங்கும் மாவீரர்களே............ நீங்கள் ஒடுக்கப்பட்ட நம் தமிழினத்திற்காக மண்ணிற்க்குள் புதைக்கப் பட்டு, விதைக்கப் பட்டவர்கள். நீங்கள் மண்ணிற்க்குள் புதைக்கப் படவில்லை நமது தாயகமெனும் கட்டிடத்திற்க்கு உறுதியான அத்திவாரமாக்கப் பட்டவர்கள். மண்ணிற்க்குள் விதைக்கப்பட்ட உங்களின் கனவுகள் எரிமலைகளாக குமுறிக்கொண்டிருக்கின்றன நாளை நிச்சயம் எரிமலைகள் வெடித்துச் சித்றும் அப்போது உங்கள் ஆசைகள் நிறைவேறும் உறங்குங்கள் அமைதியாக அதன்பின்பு

  2. Started by ஜனனி,

    பாஞ்சாலி அடி பாஞ்சாலி ஒரு கணவன் கிடைப்பதற்கே நாங்கள் பாடாத பாடு பட வேண்டியுள்ளது ஐந்து கணவர்களை மிக எளிதில் அடைந்து விட்டாயே! (இதை நான் எழுதல என் தோழி ஒருத்தி எழுதினா. )

    • 5 replies
    • 1.3k views
  3. சிலையாக வடித்த சிற்பம் தான் அவளோ இப்பொழுது மலர்ந்த மல்லிகைதான் இவளோ கண்கள் இரண்டும் கதைகள் பேசின காதலின் விரசம் இதழ்களில் தவழ்ந்தன வகுப்பறையில்.... பாடங்கள் மறக்க பாடம் கற்பித்தாய் நீ ஆசான் நான் மாணாக்கன் ம்ம்ம்..... பாடம் நடத்து

  4. பாடலற்ற நிலம் .. நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள் இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள். எங்களுக்கு ஒரு கனவு இருந்தது எங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது எங்களுக்கு ஒரு நாடு இருந்தது அப்பொழுது எங்களுக்கு ஒரு கொடியும் பாடலும் இருந்தது. இன்று எங்கள் நகரத்தில் அந்நியக் கொடி பறக்கிறது எங்கள் நிலத்தில் அந்நியப் பாடல் ஒலிக்கிறது அன்று எங்கள் நகரத்தில் எங்கள் கொடிகள் பறந்தன எங்கள் நிலத்தில் எங்கள் பாடல் ஒலித்தது. அன்று எங்களுக்கு காவல் இருந்தது இன்று நாங்கள் காவல் இழந்திருக்கிறோம் அன்று எங்களுக்கொரு தலைவன் இருந்தான் இன்று எங்களுக்கு யாருமில்லை! தீபச்செல்வன் …

    • 1 reply
    • 721 views
  5. கோகிலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு ..... இந்த பாடல் தேவையாகவுள்ளது. கடைகளில் அலைந்தும் கிடைக்கமாட்டேன்கிறது... யாராவது உதவிசெய்ய முடியுமா????

    • 3 replies
    • 1.3k views
  6. வரலாறு காடுகளை பூக்க வைக்கும். HISTORY WILL BLOOM FOREST. . பாடா அஞ்சலி வ.ஐ.ச.ஜெயபாலன். . உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங…

    • 2 replies
    • 873 views
  7. பாடிப் பறந்த குயில் மாஞ்சோலையெங்கும் மாங்கனிகள் தோரணம் மரக்கிளைகள் மத்தியிலே மாங்கிளிகள் மோகனம்; தூங்கும் பழங்களிலே அணில்களின் மோகம்; துள்ளிப் பாய்வதிலே மந்திகளின் ஆர்வம் சோலையின் மறைவினிலே கோகிலத்தின் ராகம் சொற்கள் வந்த திசையினிலே அதைக் காணாத சோகம் நேரில் வந்து கூவுவதற்கு இதற்கேனோ தயக்கம் நெடுநாளாய் இதுபற்றி என் மனதிலே ஏக்கம் ஆவலுடன் காத்திருந்தேன் அடுத்த ஓசை கேட்க அலறிப் பறந்ததுவே காக்கையொன்று நுழைய தாழாத சோகம் என்னை வந்து தாக்க தவித்ததே மனம் பழசையெண்ணி ஏங்கி வேலைத் தலமொன்றில் வேலைதேடிப் போக வேலையின்றி இருந்தவரோ நீ யாரென்று கேட்க பயத்துடனே பதில்சொல்லி பதுமையாய் நிற்க பார்த்திருந்த மங்கையரோ புன்முறுவல் பூத்தார். வேலையங்கே கிடைத்தபின்னர் வேடிக்கைகள் பல…

    • 3 replies
    • 793 views
  8. பாடுக மனமே வ.ஐ.ச.ஜெயபாலன் எரிந்த புல்வெளிகளில் இனி வரவுள்ள மழையையும் பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான் கலங்காதே தாய்மண்ணே. என் அன்னையின் திருவுடல் புதைத்த பூமியைக் காத்து வீழ்ந்த பெண்களின்மீது சிங்கள பைலா பாடியும் ஆடியும் பேய்கள் புணரும் கொடும் பொழுதினிலும் நாளைய வசந்தப் பரணியே பாடுக மனமே. வணக்கத்துக்குரிய நம் மூதாதையர்களின் எலும்புகள்மீது எந்தத் தீயும் நிலைக்காது ஆதலினால் கருமேகமாய் விரியும் சாம்பல் வெளியில் நின்று இனி வானவில்லாகவுள்ள பூக்களையே பாடுக மனமே. உறவுகளின் ஓலங்களை அமுக்கும் தோழ தோழியரின் போர்முரசுகளே என் வசந்தப் பரனிக்கு இசையுங்கள். அம்மா தமிழ் மண்ணெடுத்து இன்பப் பொழுதொன்றில் நீயும் எந்தை…

    • 23 replies
    • 5.2k views
  9. பாட்டி வீட்டுப் பழம் பானை பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா அந்தப் பானை ஒரு புறம் ஓட்டையடா ஓட்டைவழி ஒரு சுண்டெலியும் அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா உள்ளே புகுந்து நெல் தின்று தின்று வயிறு ஊதிப் புடைத்துப் பருத்தடா மெள்ள வெளியில் வருவதற்கும் ஓட்டை மெத்தச் சிறிதாக்கிப் போச்சுதடா பானையைக் காலை திறந்தவுடன் அந்தப் பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு பூனை எலியினைக் கண்டதடா அதை அப்படியே கௌவிச் சென்றதடா கள்ள வழியில் செல்பவரை எமன் காலடி பற்றித் தொடர்வானடா! நல்ல வழியில் செல்பவர்க்கு தெய்வம் நாளும் துணையாக நிற்குமடா! படித்ததில் பிடித்தது குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

  10. எமது தாயகப்பாடலான 'ஒர் இரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்" பாடலினுடைய வரிகள் யாருக்காவது தெரியுமா? அந்த பாடலை இணையத்தில் எங்கு கேட்கலாம் என்று கூறமுடியுமா?

    • 9 replies
    • 1.7k views
  11. முதன்முதலாய் உன்னருகே நான். உன் போதை விழிகள் என் உடலில் எழுதின எனக்கான தலைவிதி. உன் மனமெப்படியோ அப்படியே செல்ல என் வாழ்க்கை பயணிக்கும் போது இடையிடையே இரவுத் தீண்டல்களில் பாதை தடுமாறும். உனக்காக பட்டினி கிடந்தேன் பல நாட்கள் மனநிறைவாய் வருவாய். எனக்கென இருநாட்கள்கூட உன் மனம் தாங்காது சலித்துப் போய் நடுநிசியில் யாருமில்லாத வானத்தை வெறுப்பாக பார்ப்பதும் கொண்டாட்டமில்லா இரவுகளை அடியோடு தொலைப்பதும் இன்றைய சூழ்நிலையாக்கினாய். உன் விஷமம் அறிந்தும் உன்னுயிரோடு ஒட்டுகிறேன் பிளாஸ்டிக் பை நீராக... நீ என்னோடு எழுதிய கவிதைகள் என் அருகே உறங்குகின்றனவே!

    • 12 replies
    • 2k views
  12. பாதைக்கு பழக்கப்படாத பாதங்களாகவே பயணங்கள் தொடர்கிறது எதிர்படும் எல்லா முகங்களிலிருந்தும் எல்லோருக்குமான முகமொன்றை தேடியலைகிறேன் நாட்காட்டியின் கிழிபடாத நாளொன்றின் மூன்றுவேளை உணவிற்கான கனவுடன் மாற்றுமொரு தாள் கிழிபட துவங்குகிறது வசப்பட்டாக வேண்டிய வாழ்க்கையை வரவேற்க வாயிற் படியிலேயே வாழ பழகிக் கொள்கிறேன் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்குமான தோழமையின் வருகைமீதான நம்பிக்கையில் தனிமையை எதிர்கொள்ள தயாராகிறேன் நாளைய யன்னல்களில் உட்புகும் ஒளியில் எனது இருண்ட அறையெங்கும் வைகறையை நிரப்பி கொள்வேன் புத்தக பைகளை வீசி எறிந்துவிட்டு சுமைதூக்கிகளுக்கு அழகின் வானவில் வர்ணங்களை வரைய கற்றுத் தருவேன் விலைமாதொருவளின் ஒர்நாளின் ஒரிரவின்…

  13. Started by Sembagan,

    பான்கீமூன் மனிதத்தைக் கொன்று மனிதாபிமானத்தை மரணக் குழிக்குள் தள்ளி சுயலாபம் தேடும் சூட்சிக்காரனின் தலைவா! மனிதனைக் கடிக்கும் விசர் நாய்க்கு மரணம்தான் தீர்ப்பென்றால் பல இலட்சம் மக்களைப் படுகொலை செய்தவனுக்கு பதவியும் பாராட்டுமா?

  14. பாயுது வேங்கை பதறுது...சிங்களம்.. பாரடா தமிழா பாரடா.. இந்த சரித்திர வெற்றிக்கு.. உதிரங்கள் ஊற்றிய மறவனைப் பாடடா.. வெகுண்டது வேங்கை.. வெடிக்கின்றபோது... தமிழன் வெற்றிக்குத் தடைகள் ஏது.. சீரிய தவைவன்... கூறிய பாதையில்.. போரிடும்..புலிகளைப் பாடு... தமிழனின் மானத்தை காத்திட உயிர் தந்த வித்துடல்.. ஆடையைக் கலைந்தாய்.. தமிழ் விழிகள் சிந்தும்.. கண்ணீர் மூடும்... அம்மணமேலுடை ஆகும்.. உணவைப் பறித்தாய்.. உயிர்கள் தவிக்க.. உயிரைப் பறித்தாய்.. உன் மத்தம் சிரிக்க.. இதுதான் கரிகாலன் அடி.. இப்போ சிரிடா சிரி... இருக்குது..பின்னூட்டமுனக்கு... இது வெறும்.. முன்னோட்டக் கணக்கு.. எத்தனை உயிர்கள் போனாலும்.. சத்திய வேள்வியில் வ…

  15. Started by மாறன்,

  16. இரசியப் புரட்சியை காளியின் கடைக்கண் பார்வை எனவும் யுகப் புரட்சி எனவும் போற்றிப் பாடியதால் புரட்சிக் கவிஞன் ஆனவன் ஒவ்வொரு கவிக்கும் இசையோடு தாளமும் கொடுத்து ஓசையோடு நயம் கொடுத்து எழுதி வைத்ததால் இசைக் கவிஞன் ஆனவன் பெண்ணடிமையை எதிர்த்ததால் பாஞ்சாலி சபதத்தில் மனுதர்ம சாஸ்த்திரத்தை திரிபு படுத்திய சாஸ்த்திரம் என்றதால் புதுமைக் கவிஞன் ஆனவன் கோகுலத்துக் கண்ணனைத் தன் காம வேட்கை தீர்க்கும் காதலனாக்கிப் பாடியதால் தன்னினச் சேர்க்கைக் கவிஞன் ஆனவன் இன்னும் குழந்தையாக்கிப் பார்த்ததனால் paedophile கவிஞன் ஆனவன் தமிழர் ஆண்ட மண்ணை மறவர் வீரம் படைத்த நிலத்தை சிங்களத் தீவென்றழைது அறியாமையை வெளிப்படுத்தியதால் அறிவிலியான கவிஞன் ஆனவன். …

  17. பாரதி கண்ட யாழ்ப்பாணத்துச் சுவாமி.. கோவிந்த சாமி புகழ் சிறிது சொன்னேன்; குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான், தேவிபதம் மறவாத தீர ஞானி, சிதம்பரத்து நடராக மூர்த்தி யாவான் பாவியரை கரையேற்றும் ஞானத் தோணி, பரமபத வாயிலேனும் பார்வை யாளன்; காவிவளர் தடங்களிளே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன். தங்கதாற் பதுமைசெய்தும் இரத லிங்கம் சமைத்துமவற் றினிலீசன் தாளை போற்றும் துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்; தோழரே!எந்நாளும் எனக்கு பார்மேல் மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி. குவளைக் கண்ணன் புகழ் யாழ்பாணத் தையனை…

    • 0 replies
    • 984 views
  18. பாரதியே! உனக்கு பெண் சுதந்திரத்தில் நம்ம்பிக்கை இல்லை போலும்! 'புதுமைப் பெண் ' படைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாய் ! வீட்டில் ஒடுங்கிக் கிடந்தவளை தன் மகிழ்ச்சியை தியாகம் செய்தவளை ஆணின் கட்டுக்கடங்கியிருந்தவளை குடும்பத்தில் அடிமையாயிருந்தவளை உன் கவிச் சாட்டையால் உசுப்பேற்றினாய் ! அதை எதிர்ப்பவர்களை சுட்டுப் பொசுக்கினாய்! சேவல் கூவும் வேளையில் எழுந்து எறும்பாய் தினமுழைத்து மாடாய் குடும்பபாரத்தை இழுத்து கால் செருப்பாய் ஓரத்தில் கிடந்தது படிப்பு வாசனையில்லாமல் வாழ்ந்து பிள்ளை பெறும் இயந்திரமாய் இருந்து சிறைப் பறவையாய் அடைபட்டுக்கிடந்தவளை பாரதியே! உன் கவிச் சாவியால் தானே சிறையினைத் திறந்தாய்! சுதந்திரப் பறவையாய் பறக்க வழி செய்தாய்! கோலங்கள் போட அவள் தான் சுடுநீர் சாப்பா…

    • 0 replies
    • 661 views
  19. தமிழ்த்தாய் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார், ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன் நேர்ந்த தனைத்தும் துடைத்து ம…

  20. பாரதியார் காதல் கவிதைகள் சொல்லும் ரசனை காதல் செய்வீர் காதல் செய்வீர் காதல் செய்வீர் 😀

    • 14 replies
    • 7.3k views
  21. பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?! (முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.) சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை.. பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா? சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா? பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்.. சோழியான்: சரி.. பாடும்.. பாரதியார்: தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை (தீராத) தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி த…

    • 46 replies
    • 5.5k views
  22. Started by இளைஞன்,

    தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? கன்னத்தில் முத்தமிட்டால் ...

    • 3 replies
    • 1.4k views
  23. பாராட, பார்த்தாட, பாதைபல வார்த்தாட வகுத்த பிரபாகரம் வாழீ போர்த்து மழைத்துளி பொழியும் பொன்முகிலைச் சுமக்கும் ஆகாய வெளியே! நீ வாழீ ஆர்த்து அலை எறிந்து அன்பு நுரை சுரக்கும் ஆனந்தக் கடலே! நீ வாழீ பார்த்து வர்ணப் புன்னகைக்கும் வனப்புகளில் கோலமிட பூத்தெழுந்த பூமகளே! வாழீ - இங்கு வார்த்து ஒரு வாழ்த்துரைக்க வல்லமை கோர்த்துவந்த திகட்டாத செந்தமிழே! வாழீ காலமகள் புதல்வனை தூளியிலே தந்த கார்காலத் திங்களே! வாழீ - அக் கதிரவனின் கால் தடங்கள் வலயவரப்பெற்ற வல்லமைத் திருமண்ணே! வாழீ சூரியப் புதல்வனைத் தழுவிச் சுழல்கின்ற கனிவான காற்றே! நீ வாழீ - அடர் காட்டிடை அணைத்துக் களைப்பாற்றி அனுப்பிய அழகான தருகளே! வாழீ மானமகன் தலைசாய்ந்த…

  24. Started by ilankathir,

    எது எதுக்கு யார் யார் யார் யாருக்கு நடத்தலாம் சாதனையாளர்க்கோ சமூகத் தொண்டர்க்கோ வீரர்க்கோ என்றில்லை யார் யார்க்கு வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் அதிகம் கொலை செய்தவர்க்கு கொலைக்குத் துணை நின்றவர்க்கு கொலை செய்யப்பட்டவருக்கு பயன் பெற்றதற்கு பயன் பெறுவதற்கு பிரபலமாவதற்கு விழா நடத்துவதற்கு மனத்தில் இடம் பிடிப்பதற்கு சும்மா பாராட்டுவதற்கு பாராட்டு விழா நடத்தியதற்கு சிலரைப் புறக்கணிப்பதற்கு பிறர்தான் நடத்தவேண்டுமென்பதில்லை பிறர் பெயரில் நாமேகூட நடத்திக்கொள்ளலாம் அல்லது பிறரைத் தூண்டி நடத்திக்கொள்ளலாம் பாராட்டு விழாக்கள் பாராட்டுவதற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை ! நன்றி : ஆனந்த விகடன…

    • 8 replies
    • 935 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.