Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகத்தை நனைக்கும் ஈழத்தின் கண்ணீர் மழை! தமிழீழம் எங்கும் கேட்கிறது மரணத்தின் ஓலம்! தமிழகம் எங்கும் ஒலிக்கிறது உறவுகளின் பூபாளம்! உலகத் தமிழரின் ஒற்றைத் தலைவனாய் கருணைக் கடலில் மீண்டும் உயர்ந்து நிற்கிறார் கலைஞர் ஐயா! ஒன்றன் பின் ஒன்றாய் உணர்வுகளின் சங்கமத்தில் ஒரே குடையில் நகர்கிறது தமிழர்களின் ஊர்வலம்! புரட்சிக் கொடியின் கீழ் அடக்கி வைத்த நெருப்பின் உணர்வுகள் கொப்பளித்து தமிழ்த் தாயின் பிள்ளைகள் ஒர் அணியில் திரள்கிறது! குண்டு மழையின் குருதியில் குளிப்பது எங்களின் நிலையானதால் வான் மழையின் கண்ணீரில் குதிக்கவும் நீங்கள் துணிந்துவிட்டீர்கள்! தமிழினக் கொலையே தாரக மந்திரமாய்க் கொண்டு தலைகீழாய்த் தொங்கும்…

  2. *.மனம் சுமக்கு’மே ‘ வலிகள். * (மே பதினெட்டு - கவிதை) ******************************************* *இருளும் -ஒளியும் இரவும் -பகலும் என்பதுபோல், இழப்பும் -ஏற்பும் கொண்டோம் இதனால் எம் வாழ்வில் என்பதுண்டு! – இதில் சில எண்களும் உண்டு! “அவ் வெண் பதினெட்டு!” *பதினெண்கீழ் கணக்கு” - பதினெட்டு நூல்களின் தொகுப்பு! தமிழுக்கு இதனால் சிறப்பு! *பதினெட்டு ‘மே’ என்பதிலோ எண்ணற்ற கணக்கு!.... - இங்குண்டு தமிழரின் இறப்பு! தமிழுக்கும் இழப்பு!.... *வைகாசி, புத்தம் ஞானம் பெற்ற மாதம் ! - இருந்தும் சுத்தம், மொத்தமாக மதம் இழந்த மாதம் - நித்தம் யுத்தம் செய்த மாதம்! … *நாமோ,.. சுற்றம் த…

  3. அவன் அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவனுக்கு அங்கு எல்லாமே புதுமையாக இருந்தது. அழகாகவும் இருந்தது. எதையுமே புதிதாக பார்க்கும்போது அப்படித்தான்.. அவன் தன்னுடைய சொந்தபந்தங்கள், நெருங்கிய நண்பர்கள் என எல்லோரையும் பிரிந்தே அந்த வேலைக்காக வந்திருந்தான். அந்தப் பிரிவு அவனுடைய மனதில் ஒரு நிரந்தரமான வெறுமையை உருவாக்கி இருந்தது. இருந்தபோதும் அவன் தானும் தன்னுடைய வேலையுமாக ஒரு குறுகிய வட்டத்தினுள் புதைந்து போனான். அவனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்து விட்டிருந்த இழப்புகள், சோகங்கள், வலிகள் மட்டுமே அவனுக்கு இப்போது துணையாக இருந்தன. சிலவேளைகளில் தான் தன்னுடைய சொந்த ஊரை, குடும்பத்தினரை, நண்பர்களை விட்டு வெகுதூரம் விலகி சென்று விட்டதாக அவன் கற்பனை செய்துகொண்டான்.…

  4. விடுதலையின் விளிம்பில் நாம்..... நம் தாயக மீட்பு வாசல் வரை வந்துவிட்டோம் விடுதலைக்காய் வழிதேடி கண்முன்னே தெரிகிறது காலையது உன் விடியலுக்காய் ! வந்த வழி பார்க்காதே வலி நிறைந்த வாழ்வு அது வடுக்களாலும் வலிகளாலும் நிரம்பி நின்ற சோகமது ! முயற்ச்சியினால் முன்னேறு முழு நிலவைத் தொடுவதற்கு முடிந்துவிட்டால் முழு வசந்தம் உனக்காக காத்திருக்கு ! வாள் நுனியில் நிற்கின்றாய் உன் வசந்தம் ஒரு பக்கம் ? அடிமை வாழ்வோ மறுபக்கம் ? வசந்தந்தான் உன் தேர்வு அடிமை வாழ்வை உன்மனம் தேடாது ! நீரில் மூழ்க மறுத்துவிட்டால் முத்துக்கள் உன் சொந்தமல்ல ! முயற்ச்சியற்று இருந்துவிட்டால் உன் தாய் நாடோ உன் மக்களின் சொந்தமல்…

  5. காலங்கள் மாறுகின்றன காட்சிகள் மாறுகின்றன ஆட்சிகள் மாறுகின்றன ஆனாலும் மாறாத காயம் ஒன்று தான் அது முள்ளிவாய்க்கால் சோகம் மட்டும் தான் கோரத்தின் காட்சியும் அதுவே கொடுங்கோலின் ஆட்சியும் அதுவே அதர்மத்தின் சாட்சியும் அதுவே, அய்யோ, பரிதாபத்தின் காட்சியும் அதுவே பட்ட துயருக்கு நீதி வேண்டும் பலி கொடுத்த உயிருக்கு நியாயம் வேண்டும் இழந்த இழப்புகளுக்கு நீதி வேண்டும் நாம் தலை நிமிர்ந்து வாழ வழி வேண்டும் நம் செல்வங்கள் வாழ வேண்டும் நம்பிக்கையுடனே ஒன்று சேர வேண்டும் நம் வாழ்வில் விடிவொன்று உருவாக வேண்டும் நம் தமிழீழ கனவும் மலர வேண்டும் மீரா குகன்

    • 0 replies
    • 833 views
  6. ஈர்பத்து ஆண்டுகளில் திலீபனின் நினைவுகள். தித்திக்கும் பெயர்கொள் தேன்தமிழ் மறவா! திலீபா! சென்றனவே ஈர்பத்து ஆண்டுகள் எத்தனையோ பொன்மொழிகள் உதிர்த்தாய் திருவாயால் ஈழத்தாய் ஈன்றெடுத்த அரும்பொருட் பேறே! அத்தனையும் ஆணித்தர மாயெம் நெஞ்சினில் ஆழப் பதிந்து அகலவிரி கின்றனவே பத்தரை மாற்றுத் தங்கம்நீ புரிந்த பாங்கான ஈகைக்குப் பாரினில் நிகருண்டோ? கல்விச் செல்வமே கொடையெனக் கொள் கவினுறு இனத்தின் எண்ணத்தை உடைத்துத் துல்லியமாய் உணர்ந்தாய் தமிழீழ விடுதலையே தொடரும் வாழ்விற்கு முதன்மை வகிக்குமென. நல்கினாய் இன்னுயிரை இந்தியா நாணமுற நலமிகு உடலையும் ஈய்ந்தாய் மாணவர்க்காய் வல்லவனே இத்தகு கொடையினை அளித்திட வையகத்தில் யாருளர்? வணங்கினோம் வந்திடுவாய்! …

  7. அதிகாலையில் உன்னை எழுப்ப அலாரம் வைத்துவிட்டு, அலாரத்தை நீ எழுப்புவாய் நடைபாதை சாக்கடைநாற்றம் உன் நாசியைத் துளைக்காது கோவில்மணி ஓசையில் சிறகைக்கும் பறவைகளை ரசிப்பாய் மொட்டை வெயிலில், மொட்டைமாடியில் கவிதைகள் பிறக்கும் மழையையும் ரசிப்பாய் உச்சி வெயிலையும் ரசிப்பாய் தங்கையிடம் அத்தனையும் விட்டுக்கொடுப்பாய் அம்மாவை அவ்வப்போது அன்போடு கட்டியணைப்பாய் சிலமுறை முத்தம் கொடுப்பாய் என்றுமே கேட்காத அப்பா சொல்லை தட்டாமல் கேட்பாய் அவள் சிணுங்களை செல்போனில் ரசிக்க, சில்லறையைச் சேகரிப்பாய் ஆடைகளைக் களைகையில் அவனை நினைத்துக்கொள்வாய் (பெண்களுக்கு மட்டும்) நீ நாத்திகனானாலும் ஆத்திகத்தை அவ்வப்போது ஆதரிப்பாய் கல்லூரி, அலுவலகம் செல்லும்முன் - நீ கடைசியாகப் பார்ப…

    • 3 replies
    • 833 views
  8. Started by vaithegi,

    பாவி.................மாபாவி.........நீ மனிதனா இல்லை இராட்சதனா சூரனா இல்லை இராவணனா இடும்பனா இல்லை பெரும் பூதமா காடையனா இல்லை காட்டேரியா யாரடா நீ.......... கிராதகா........ கொலைகாரா........ இரக்கமில்லா பாதகா........... இலிவான சிறுமனத்துக்காரா இலங்கைத்தீவே கடலில் மூழ்கிவிடும் போல் உள்ளதே..... மூர்க்கனே நீ செய்யும் பாவங்களால். மகிந்த எனும் பேயே.... கிட்லரே மடிந்து போ.........நீ..... மடிந்து போ...................

    • 0 replies
    • 833 views
  9. இறுதியாய் ஒரு யுத்தம் இறுதியாய் ஒரு யுத்தம் இனமானம் காக்க ஈனர்களை விரட்ட இழந்தவை யாவும் மீட்ட இனிவரும் பிள்ளைக்கு சுதந்திரத்தின் சுகம் காட்ட இறுதியாய் ஒரு யுத்தம். அடிமைகளாய் , அகதிகளாய் அவமான வாழ்வு போதும் ஏதிலியாய் எங்கேயோ அழுகிச் சாகும் நிலை போதும் அடியோடு வீழ்ந்தாலும் அன்னை பூமிக்கே, உரமாகும் மரணமேற்போம்... மாக்களுக்கு மனமஞ்சி மறைந்தொளியும் மானக்கேடு மண்ணோடு மண்ணாக்கி ஈழன்னை புகழ் தாங்கி புலிக்கொடியால் புயல் கிளப்பி புறப்படுவோம் பெரும் படையாய்.. நாய்கள் தான் வாழும் நரிகளுக்கு பயந்தொதுங்கி நாடாண்ட குடிகள் நாம் நடுக்கிடுவோம்.. படை நடத்தி. கோடிப்பேர் வரட்டுமே !! கூலிக்கு மாரடிக்கும் கூர்மையற்ற கூ…

    • 1 reply
    • 833 views
  10. நீ என்னை பார்க்காதே, என் மனம் உன்னை காணாது! நீ ஒன்றும் சொல்லாதே, என் உள்ளம் கேட்காது! கண்முன்னே மறைந்தாயே, கானல் நீர் போல.... உயிர் போகும் நேரத்தில் காண கண் துடித்திருக்கும், உள்ளம் இளகுதடி உன்னை காணமல் போனதற்கு! வராமல் போனதற்கு மன்னிப்பாயா.... தொடரும் தோல்விகளாய், துரத்துதடி ஞாபகங்கள். மாறி போன வாழ்க்கையில், மறந்து போன நினைவுகள் வாழ்ந்த வாழ்க்கையே மாயமாய் போன பின் வாழ்க்கையை துறந்து விட, வயது என்னை தடுக்குதடி! முற்றும் துறந்து நான் முனிவனாய் மாறினால். அங்கும் நீ அமர்ந்திருப்பாய் அம்மன் சிலையாக... வல்லக்கோட்டை முருகா வல்லமை தாராயோ.... சந்திரிகா தேசம் தமிழ் கூடல்.

  11. ஜனநாயகக் கோமாளிகள் கோவி. லெனின் சிங்கங்களுக்கு எலிப்பொந்தில் கிடைக்கிறது எல்லாவிதமான வசதிகளும். புலிகளுக்குப் பசி என்றால் புல்லுக்கட்டு வேண்டாம் புண்ணாக்கே போதும் தேர்தல் நேரமெனில் எதனையும் எதனுடனும் கூட்டிக் கொள்ளலாம். கழிக்க வேண்டியவை மானமும் வெட்கமும். கொள்கைகள்... கூவி விற்பதற்கே! தகையும் விலையென்றால் தன்னையே விற்கவும் தயார் எங்கள் தலைவர்கள். கூட்டணி மேடைகளில் கூடியும் கலைந்தும் கூத்தடிக்கிறார்கள் ஜனநாயகக் கோமாளிகள். எல்லாவற்றுக்கும் எம்மக்கள் கைதட்டிச் சிரிப்பார்கள் எனக் கணக்கிட்டுச் சிரிப்பாய் சிரிக்கிறார்கள் வாய்ச் சொல் வீரர்கள் குறிப்பு: யதார்த்தமாக இந்தப் பக்கத்தில் கவிதை வெளிய…

  12. இனம் தின்னும் ராஜபக்சே கவிஞர் வைரமுத்து சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத் தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும் சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக் கூத்துக்களை நிரந்தரமாய் நிறுத்துங்கள்! …

    • 1 reply
    • 832 views
  13. இசை ஞானி காலத்தை வென்றவர்..! தயை கூர்ந்து இசை ஞானி அவர்களை ஈழ விசயத்தில் இழுக்காதீர்கள்..? அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல..! அவர் ஒன்றும் திராவிட/ ஆதி திராவிட அரசியலுக்கு மாற்று அல்ல..! அவரை ஏன் இழுக்க வேண்டும்..? ஈழ அரசியலில்..! கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு இவர் எப்படியும் பொறுப்பாளர் என்ற அவசியப் பொருள் முத்திரை ஏன்..? தடுமாற்றம் கொள்கிறார்களோ..? காலம் பெருவெளி சூனியம் அந்திவெளி வண்ணங்களில் தோன்றும் ராக ஓசைகள் இவை மிஞ்சியவை அல்ல அனைத்தும் என்று தெரியுமா உங்களுக்கு..? பழந் தமிழனின் கொடுந் துயரமோ இசை ஞானி அவர்கள்..? சங்கிலிக்கருப்பு

    • 3 replies
    • 832 views
  14. தசையினைத் தீ சுடினும்... எழுத்தா ளரும் விடுதலைச் சிறுத்தைகள் முன்னாள் எம்.எல்.ஏவுமான ரவிக்குமாரின் "தமிழராய் உணரும் தருணம்" என்ற நூலில் வாசிக்க வாய்த்த கவிதை. 1983-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தின் ஒரு சம்பவத்தை சிங்களக் கவிஞர் பாஸில் ஃபெர்னாண்டோ கவிதையாகப் பதிவுசெய்திருக்கிறார். மொழியாக்கம் கவிஞர் சேரன். 'ஜூலை: மேலும் ஒரு சம்பவம் இறந்தவர்களைப் புதைப்பது ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில் இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை சத்தியமாகச் சொல்கிறேன் நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன். சித்தம் குழம்பியனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை. உங்களைப் போலவே நானும் உணர்ச்சிகளை வெளிக்கா…

    • 6 replies
    • 832 views
  15. மழையை என்றால் குடையும் கூடவே .. வானம் என்றால் முகிலும் கூடவே ... மரம் என்றால் காற்றும் கூடவே .. நிலா என்றால் நட்சத்திரம் கூடவே .. ஒன்றை விட்டு இன்னொன்று தேடலில் .. என்னை விட்டு உன்னை தேடலில் .. உன் கண் கண்டபின் காதல் தேடலில் .. இருவரும் சேர்கையில் காமம் தேடலில் .. எல்லோரும் போல் உன்னை ரசிக்க .. எல்லோரும் போல் உனக்கு பொய் சொல்ல .. எல்லோரும் போல் உன்னை வர்ணிக்க ... எல்லோரும் போல் நான் புலவன் இல்லை .. என்னுள் மறைந்து இருந்து பார்க்கும் .. என்னுள் என்னை தேடும் காதல் .. உன்னில் மட்டும் வராமால் போகுமோ .. எம்மை நாம் ஆக்கும் காலம் வரும் .. அதுவரை நம் காதல் கவிதையில் .. வாழட்டும் ரசனையில் இருக்கட்டும் .. எம் குடில் நாம் அமைக்கு…

  16. அன்பிற்கு புது பல அர்த்தங்கள் தேடி அகங்காரத்துடன் காதலையும் அலர்ச்சியம் செய்து தெரிந்தே நான் அவனுடன் புரிந்த சண்டைகள் தெளிவு தரும் என்று ஏதோ ஓர் நினைப்பில் வர்ணங்களில் வானவில்லை காண்பது போல் வாட்டும் ஏக்கங்களில் அன்புக்கு விளக்கங்கள் தந்தாலும் நெடுந்தூரத்தில் அவன் உருவம் என் விழிப்பார்வை கைது செய்தால் நெஞ்சில் சுமந்த சுமைகள் யாவும் நெகிழ்ச்சியில் உருகுதே கதிரவனின் வருகையில் மலரும் தாமரையாய் கண்களின் இரு கருமணிகள் விண்மீன்களானது ஏனோ ? சொற்களுக்கு எட்டாத உணர்வுகள் யாவும் உடனே விழித்துக்கொள்ளும் சொப்பனத்தில் கூட அழியா சுவடாய் மனதினுள் பதிந்து கொள்ளும் ஆன…

  17. கொத்தணிக் குண்டுகள் -Cluster bombs உலகம் எங்கும் தடைசெய்யபட்ட எமக்கு 29.11.2008 இன்று விடுதலைநாள்! பறந்து பறந்து வெடிக்கும் எமக்கு பிடித்த நகரம் தமிழீழத்தில் கிளிநொச்சி! எம்மைக் கட்டுப்படுத்த முடியாது. எம்மைக் கொச்சைப்படுத்த முடியாது. சோவியத் சிறைகளில் அடைபட்டுக் கிடந்தோம் சிறிலங்கா வந்து மீட்டெடுத்து தமிழர்களின் தலைவாசலில் கட்டிவைத்து விளையாடுகிறது. ஈழத் தமிழருக்காக உலகத் தமிழர்கள் மட்டுமில்லை நாங்களும்தான் கொத்துக் கொத்தாய் கண்ணீர் வடிக்கிறோம்! நாம் என்ன செய்வது? எம்மை உருவாக்கியவனும் பயங்கரமானவன் நாமோ அவனைவிடப் பயங்கரமானவர்கள் எம்மை இலகுவில் அழித்துவிட முடியாது ஒருமுறையல்ல இருமுறையல்ல…

  18. கெரிலா போர் உதிகளைக் காடுகளைக் கைவிட்டு வெளிகளிலே முடிசூடி எழுந்த கதை எங்கள் கதை எங்களது காடெல்லாம் எதிரி ஆழ ஊடுருவ, பெரு வெளியின் பொறிக்குள்ளே, வீரமுடன் படை நடத்தி வீழ்ந்த கதை எங்கள் கதை.

    • 2 replies
    • 832 views
  19. வெற்றி.... மன திருப்தியை .... கொடுக்கும் ... தோல்வி .... மன உறுதியை ... கொடுக்கும் .....!!! தோல்வியென்னும் ... அக்கினிக்குள் வெந்து .... வெற்றியென்னும் ... அன்னத்தை உண் ....!!! ^ எழுந்திரு போராடு வெற்றி கே இனியவன்

  20. Started by வர்ணன்,

    வென்றால் சிரி.............. வெள்ளம் கால் நனைத்தால்..... சிரி............ முழங்கால்மேலது உயர்ந்தால்........... முற்றும்போனதென்று புலம்பு...! ஒண்டும் காணம் ... ஒண்டும்காணமென்றே அழு.,... ஏதும் நடந்தால்...... இடுப்பை குலுக்கி குலுக்கி........ என்னமோ பண்ணு...... நான் என்ன சொல்ல.......... சிலவிடத்தில்........ சத்தம் போட்டு அழுவதை விட... மெளனமாய் சிரிப்பது மேலாம்!

  21. யார் இவர்கள்? இவர்கள் ஏன் சாகவேணும்? ஏன்? ஏன்? இவர்கள் உயிராயுதம் எடுத்துக் களமாடுகையில் நாமெல்லாம் ஸ்கோர் பார்த்துக்கொண்டிருந்தோம்.! அனைவருமே ஆட்டமிழந்து வெளியேறினர்! பாவம் இவர்களைச் சுமந்த உதரங்கள்! அவை இன்னும் ஆட்டமிழக்கவில்லை இயலாமை எனும் செருக்களத்தில்! நாங்களும் தான் மாறவில்லை காத்திருக்கோம் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கும் வரை! அநுராதபுரம் வான்படை தாக்குதலின் காவியமான கரும்புலிகள் நினைவாக.

  22. Started by Mayuran,

    மல்லுக் கட்டி நிற்கின்றோம் ஜல்லி கட்டை நடத்திவிட கொள்ளிக் கட்டை கொண்டு வந்து தமிழ் குல தொன்மம் அழித்துவிட மல்லுக் கட்டும் உலகமயமாக்கலோடு நாமும் மல்லுக்கட்டி நிற்கின்றோம். புல்லுக் கட்டு போல எங்கள் புராதன தொன்மைகளை புதைத்துவிட்டு பல்லுக்காட்டி நிற்கச் சொல்லி பாடம் சொல்லும் கயவரோடு மல்லுக்கட்டி நிற்கின்றோம் #ஈழத்துப்பித்தன் 19.01.2017

    • 0 replies
    • 830 views
  23. அவசரப்படும் மனிதர்கள் அடைக்கப்படும் முன்கதவுகள் அடங்கி கூடடையும் பறவைகள் அமைதியாகிப்போகும் தெருக்கள் - என அந்திகள் அழைத்துவருவன அந்நியமானவொன்றாகவே போய்விடுகின்றன, நழுவிச்செல்லும் கதிர்களும் மினுங்கத்தொடங்கும் நட்சத்திரங்களும் ஒடுங்கிப்போகும் ஓரிரு பூமரங்களும் அந்தரத்தில் எழுந்தலையும் ஒளிப்புள்ளிகளும் புதர்களின் அரவங்களும்- இந்த அந்திகளை கோரமாக்கிவிடுகின்றன. இந்த, அந்திகள் இருளை மட்டும் சுமந்து வருவதில்லை பகல் பற்றிய பெருமூச்ச்சுக்களையும் பயம் நீங்காத சில இரவுகளையும் கூட அழைத்து வந்து விடுகின்றன, அநாயாசமாய் அந்திகளை அனுபவித்து வரவேற்கின்றன அரவங்களும் ஆந்தைகளும் புதிரான சில மனிதர்களும். என்னவோ தெரியவில்லை........... இன்னும், அந்திகள் வருவது …

  24. பொல்லாப் பிறப்பும் புளுதியில் எறிபட்ட மீன் குஞ்சுகளும் வல்ல அசுரர்களின் கால்களில் புளுவாய் துடிக்கும் போதிலும் எல்லா வலியும் பொறுத்தருள் என்ற கடவுளுக்கு அரோகரா சொல்லித்திரியும் தெருப்பண்டார பரதேசிகளின் கூச்சல்கள் உலக மூலை முடுக்குகளில் ஓங்கி ஒலிக்கின்றது. கோவணத்துடன் சிலுவையில் அறையப்பட்ட கத்தருக்கு உடல்முழுக்க ஆடையணித்து தோத்திரம் சொல்லும் தேவதூதர்களை அம்மணமாக சிலுவையில் அறையப்பட்டிருப்பவர்கள் குறை உயிருடன் அரைக்கண்ணால் புரியாமல் பார்க்கின்றார்கள் கடவுளால் கைவிடப்பட்டவர்களின் திருவோடுகளில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் விழையாடும் பந்துகள் தான் தவறி விழுகின்றது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அனைத்தும் கலந்து பீத…

  25. [size=5]ஆண்டு மூன்றுகள் ஓடி மறைந்தது அத்தனை அவலம் நடந்து முடிந்தது எத்தனை அழிவுகள் எம்மினம் கண்டது இன்னும் தான் எனக்கு [/size][size=5]மறக்கவில்லை பண்பட்டு நாங்கள் பயணித்தோம் பார் புகழ நாம் பார்த்திருந்தோம் பச்சை வயல்களாய் எம் வாழ்வு பரந்திருந்ததாய்க் கனவு கண்டோம் பெண்ணின் சுதந்திரப் பெருமை கண்டோம் போரில் அவர்தம் வீரம் கண்டோம் எண்ணிலடங்கா எக்களிப்பில் எதிரி அறியாதிருந்துவிட்டோம் வண்ணக் கோலம் நாம் போட்டு வட்டத்துள்ளே நாம் நின்றதனால் எதிரி போட்ட கோலத்தை எட்டிப் பார்க்க மறந்துவிட்டோம் மானம் தானே பெரிதென மாண்டுவிடும் மாண்புமிக்க மானர்குலத் தமிழர் நாம் மாளாதின்னும் இருக்கின்றோம் எங்கள் நிலத்தை எடுப்பவனை எங்கள் பெண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.