Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நோய் எதிப்பு சக்தி குறைகிறது விலை விண்ணை தொடுகிறது மஞ்சள் ......................... வியக்க வைக்கும் சிகிக்சைகள் மார்புதட்டி பெருமைபேசும் மருத்துவ ர் சிரிக்கிறது கொரோனா .......................... மறந்த வாழ்வியல் முறை தண்டனை கொடுத்து வருகிறது கொரோனா .......................... உயிர் கொல்லி நோய் சற்று நம்பிக்கை தருகிறது மிளகு ரசம் @ கவிப்புயல் இனியவன்

    • 7 replies
    • 978 views
  2. னான்=விகடன் ஆனந்த விகடன்

  3. உனைக் காணாத கணங்களில் காதல் எண்ணம் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடுகிறது பெருக்கெடுத்து ஓடும் உன் எண்ணச் சுமைகளின் திண்ணம் தாளாமல் தவித்துப் போகிறேன் திறன்பேசியில் குறுஞ்செய்தி தேடி நொடிக்குகொருமுறை நெருடுகிறேன் குறுஞ்செய்தி காணாது குன்றிப் போகிறேன்... அருகலையில் ஐயம் கொண்டு திசைவியை திருகிப் பார்க்கிறேன்.. என் கனவுக் கூட்டங்களின் பிறப்பிடமே அவற்றின் இருப்பிடமே….!! வீசும் தென்றலும் விசும்பின் சாரலும் உன் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது!! ஆதவனின் கதிரொளிகளும் உன் எண்ணங்களால் சுட்டு விட்டுச் செல்கிறது !! என் கனவுகளை நீயே பிரசவிக்கிறாய் அவற்றை போற்றுகிறாய் அழிக்கவும் செய்கிறாய்..!! ஐம்பூதங்களும் என் வேட்கை அறியும் அர…

  4. நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் நாம் எதிர் காலம் தமிழே நீ நலமா... அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று அழுதே உன்னைப் பார்க்கின்றோம் உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும் பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்... தமிழே நீ நலமா... தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான் கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும் திண்ணை விட்டகல திராணியும் இல்லை மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை தமிழே நீ நலமா... சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்…

  5. Started by N.SENTHIL,

    எதிரலை எங்கோ ஒர் கரையின் மடியில் - நமக்கான நாற்காலிகள் காத்திருக்கின்றன எதோ ஒர் கடலின் அலைகள் - நம் வருகை எதிர் நோக்கி நிலம் தொடுகிறது தனக்கான வேக விளிம்பைத்தாண்டி- நம் சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன கடிகார முட்கள் இனி எப்போதுமே நாம் சந்திக்க - போவதில்லையெனும் உண்மையறியாமல்

    • 7 replies
    • 1.7k views
  6. பனித்துளியை சூடாக்கும் கண்ணீர்த்துளிகள்.... மாவீரர் அஞ்சலிக் கவிதை..... கவிதை - இளங்கவி.... காலச சுவடுகளில் என்றும் கால் பதித்து விட்ட கார்த்திகை வந்ததுமே... கடும் பனியும் மறந்துபோச்சு.... காலகளை மூடிவிடும் கடும் மழையும் மறந்து போச்சு..... கனவுகளை ஆட்சி செய்யும் காதலும் மறந்து போச்சு..... கவலைகளைத் துறந்து.... காதலை மறந்து... காடு மேடெல்லாம் திரிந்து கடும் பசியும் தாங்கி - தமிழரின் கனவுகளை நினைவாக்க கஸ்ரங்கள் மட்டுமே அனுபவித்த காவிய நாயகர்தாம் என் நினைவில்...... கடலிலும் வெடித்தான்.... கட்டாம் தரையிலும் வெடித்தான்.... கடல் நீர் அருந்தி மட்டும் காவியங்கள் பல முடித்தான்..... காரிருளில் நடைபயின்று -எதரி…

  7. Started by nochchi,

    "எந்த நாளோ?' -கவிஞர் கோ. கலைவேந்தர் போரினை நிறுத்த வேண்டிப் புலம்பினோம் உலகி னோடும்! வீதிகள் எங்கும் உணாது வாடினோம் உறவி னோடும்! போர்வெறிக் கண்ணோட் டத்தில் புலமிழந்த இராச பக்சே ஓநாயின் இழவ றிந்தே உவக்குநாள் எந்த நாளோ? போர்க் களத்தின் அழுகை வெள்ளம் வடியுநாள் எந்த நாளோ? போர்க்களத்தின் உள்கா யங்கள் ஆறுநாள் எந்த நாளோ? போர் வெறி வல்லாட் சிக்குள் மீளுநாள் எந்த நாளோ? பேரொழிந்த இராச பக்சே புதையுநாள் எந்த நாளோ? மண்வெறி கொண்டார் தாமும் பிடிசாம்பல் ஆவார்! - சென்ற உயிரினைப் பொருத்து வாரும் ஒழியுநாட் கொள்வார்! - ஞாலத் தண்பரப்பில் உன்னைப் போற்றித் தொழுவாரும் யாவர்? - மீண்ட கண்பரப்பை …

    • 0 replies
    • 1.5k views
  8. Started by cawthaman,

    நீ யற்ற போது February 21st, 2007 at 1:10 pm (காதல்) · Edit இலையற்ற மரம் நீர்யற்ற தோப்பு மண்பிடியற்ற வேர் கூடற்ற கிழை நிறமற்ற மரம் நிழல் கொடா நிலை உயிர்யற்று உறவற்று நீயற்று நின்ற மனம் காதல் வேர்றற்று சாந்து கரிசல் லாயிற்று ஆ நிலை யற்ற வாழ்வு இலை யற்ற மரம் நீர் யற்ற கடல் மரம் மற்ற காடு நிறமற்ற மலர் நீ யற்ற போது, நான் பெற்ற வலி Comments நகரும் காலமும், நகராத வாழ்வும் February 21st, 2007 at 1:00 pm (காதல்) · Edit நகரும் காலமும், நகராத வாழ்வும் நகர்ந்தது,நாட்கள் மிடங்கள் நாட்களாய் கனத்தை காதலித்தது நிமிடங்ள் வேதனையை கூட்டியது, நீ யின்றீ வாழ்க்கை வெறுமை கொண…

  9. சில நிகழ்வுகளும்! நிஜங்களும் எப்படித்தான் பார்த்து பார்த்து எடுத்துவைத்தாலும் மறந்து போய் விடுகின்றது பயணத்தின் போது ஏதோ ஒன்று! அள்ளி அள்ளிக் குளித்தாலும் சில நேரங்களில் நனைவதேயில்லை புறங்கால்கள்!. எப்படித் தேடியும் அகப்படுவதில்லை பிச்சை போடும்போது மட்டும் சில்லறைகள்! மிகக் கவனத்தோடு கையாண்டாலும்!. சதையோடு சேர்த்தே வெட்டுப்படுகின்றது விரல் நகங்கள்!. எழுந்து போய் நிறுத்த வேண்டும் தொலைக்காட்சியை நினைத்தும் தேடுகின்றது மனது ரிமோல்ட்டை! இப்படியே நகர்கின்றது! என் வாழ்வில்! சில நிஜங்களும் நிகழ்வுகளும்!.

  10. நாளைய விடியல் நாளைய விடியல் நாம் இருப்போமா..? நாளை சேவல் கூவக்கூடும் நாம் இருப்போமா..? நாளை இங்கு பூவும் மலரும் நாம் இருப்போமா..? ஆழமர நிழலில் அகதி வாழ்க்கை வன்னி மண்ணில் மணல் வீடு கட்டும் குழந்தைகள் அதை உடைக்கும் மழை வெள்ளம்! ஐ.நாவில் ஆயிரம் தொண்டர்கள் இருந்தென்ன..? எம்மை எல்லாம் மனிதப் பட்டியலிலா இணைத்துள்ளார்கள்..? மாமிசம் தின்னும் மடையர்கள்! ஆண்ட இனம் அகதியாய் அழியுமோ..? விழிக்குமோ தமிழினம் !? குஞ்சு குருமன்களாய் இளையவர், முதியவராய் உங்களில் சிலராய்.. உருக்குலையும் எங்கள் உடன்பிறப்புகள் இங்கு தினம் தினம்! பாலகன் ஒருவன் பாடுகிறான! பாவியர்கள் நாங்கள் ஏன்..? அவதியில் ஆக்கப்பட்…

  11. Started by pakee,

    மாய உலகமிது எதுவும் உண்மையில்லை - நம்பாதே எதையும் நம்பாதே யாரையும் நம்பாதே எல்லாம் பொய் யாரையும் எதையும் உன்னால் மாற்ற இயலாது மாற்றவும் வேண்டாம் யாருக்காகவும் நீ மாறாதே ! நீ நீயாகவே வாழ் - முழுமையாக உண்மையாக ! உறுதியாக ! நீயாக மாறிவிடு..... உன்னைத்தேடு கண்டுப்பிடி நீ யார் என்றறி நீ உன்னை அறிந்தால் இவ்வுலகமே உன்னை அறியும்...

    • 0 replies
    • 1.3k views
  12. தேசக்காற்றே அனல் வீசியதேன் - எம் தேவனையும் நீ பறித்ததேன் தேசத்தின் குரல் ஓயந்து நாம் திகைத்து நின்றோம் - இன்று தேசியகீதமே அழிந்ததம்மா ! அலையொன்று அடித்தோய்ந்ததம்மா அந்த ஆண்டவனும் எம்மை மறந்தானம்மா தமிழின் செல்வனை பறித்தானம்மா எம் தாயக வேள்வியை அணைத்தானம்மா

    • 0 replies
    • 1.5k views
  13. உயிரே என் உயிரே ஒரு வார்த்தை சொல்லாயோ உறவே என் உறவே ஓர் நாளில் மறந்தாயோ ........ மனசே என் மனசே அவள் மனதை சொல்லாயோ உணர்வே என் உணர்வே அவள் உணர்வை சொல்வாயோ உனை நான் பிரிந்தும் உடலால் இழந்தும் உனையே நினைத்தேன் உயிராய் தானே சுரங்கள் இல்லா கவிதையா இருந்தும் உனையே நினைத்தேன் இசையா தானே உயிரே என் உயிரே ...... ஒரு வார்த்தை சொல்லாயோ உறவே என் உறவே ........ ஓர் நாளில் மறந்தாயோ ........ music உன் உணர்வை நான் புரிந்தேன் என் உணர்வை ஏன் மறந்தாய் உனக்கென்று நான் பிறந்தேன் ஏன் இங்கு எனை மறந்தாய் சாலை ஓரம் தவிக்கின்றேன் பிணமாக நடக்கின்றேன் நீ போகும் இடமெல்லாம் தனியாக தவிக்கின்றேன் உய…

  14. Started by nedukkalapoovan,

    கருவினில் அவள் வயிற்றினில் உதைந்தோம்..! வளர்கையில் அவள் மார்பினில் உதைந்தோம்..! பள்ளிப் பருவத்தில் அவள் ஆசைகளையே உதைந்தோம்..! வளர்ந்த பின் அவளையே உதைகிறோம் இறுதியில்.. தனிமையில் தள்ளுகிறோம்..! இருந்தும் அவள்.. இன்னும் எங்களையே நினைக்கிறாள்.. உருகிறாள் அழுகிறாள் அன்பைப் பொழிகிறாள்.. அவள் தான் அம்மா...! அன்பு மக்களாய் அவளுக்கு நாம் என்ன அளித்தோம்..???! வெறும்..ஏமாற்றங்களே...! பதிலுக்கு அவளோ இன்னும்.. அளிப்பது அனுதினம் அன்பும்.. ஊக்கமும்..! அன்னையை கடவுளாய் தொழ வேண்டாம் பூக்களால் பூஜிக்க வேண்டாம் பொன்னால் அலங்கரிக்க வேண்டாம் பட்டால் போர்க்க வேண்டாம் பரிசால் குவிக்க வேண்டாம்.. அவள் பேசும் ஒரு வார்த்தை…

  15. வா மச்சான் வா மச்சான் உனக்கு கவலை எதுக்குடா காதல் என்பது மூன்று எழுத்து வாழ்க்கை என்பது நான்கு எழுத்து காதலை விட வாழ்க்கைதான்டா பெருசுட நிம்மதி உனக்கு நிச்சயம் கிடைக்கும்ட தோல்வியும் நமக்கு தோழன்ட வருந்தாதே நண்பா நினைச்சவங்க கிடைச்ச காதலிட இல்லை என்றால் வாழ்க்கை காதலிட காதல் தோல்வி மரணம் வேண்டாம்ட லட்சிய வெற்றிய குறி வைச்சட நிச்சயம் நமக்கு இருக்குட வரலாறு வாழ்க்கை என்றும் உந்தன் கையில்ட...

    • 2 replies
    • 793 views
  16. ஊரடங்கு தளர்த்தப்படும் அப்பா படலையை எட்டிப் பார்பார் தெருநாய்கள் குரைக்கும் படலையை திறக்கப் போன அப்பா திரும்பி வருவார் வீதி சுத்தம் செய்யும் படைச் சிப்பாய்கள் வருவார்கள் நாய்கள் அலரி அடித்து ஓடி வரும்....

  17. என் பிரியமான மகராசி ------ நிலவின் வடிவத்தை..... உடலாக கொண்டு ..... நிலவின் ஒளியை உடல்..... நிறமாக கொண்டவள்..... என் பிரியமான மகராசி.......!!! மயிலைப்போல் பாடுவாள்..... குயிலைபோல் ஆடுவாள்.... நடனமாடும் சிகரமவள்.... அவள் வதனத்தை உவமைக்குள் ..... பூட்டிவைக்கமுடியாததால்..... உவமைகளையே ...... மாற்றவைத்துவிட்டாள்.............!!! அவளை கவிதை வடிக்கிறேன்..... வரிகள் வெட்கப்படுகின்றன...... அவளின் வெட்கத்தையும்.... கவிதையின் வெட்கத்தையும்..... இணைக்கும் போது எனக்கும்.... வெட்கம் வருகிறது - அவளை..... வார்த்தைகளால் நினைக்கும் போது .........!!! அவளை தொட்டு பார்க்கும் ......... பாக்கியம் எனக்கு கிடைக்குமோ.... கிடைக்காதோ தெரியாது ..…

  18. பிணங்களைக் காக்கவோ வருவர் ? நினைவுகளோடு வாழும் நிலமற்ற அகதிகள் நாங்கள். 'நாளைய பொழுது நமக்கானது' கனவுகள் பொய்த்துக் காலிடை மிதியும் பிணங்களை விலக்கி உடலில் வழியும் குருதியைத் துடைத்து ஓடுதல் ஒதுங்குதல் உயிர் வாழுதல் பற்றிய ஏக்கமும் துயரும்.... கடற்கோள் கொள்ளையிட்ட துயரைவிடக் கொடுமையிது காப்பிடமற்ற விரிந்த வெளியில் கூப்பிடவும் யாரும் கேட்காத் தொலைவிருந்து காத்திடுவர் தூதர் கடலிடை வந்து மீட்டிடுவர் என்றான நம்பிக்கையும் களவு போய் பிணங்களின் நடுவேயான கூக்குரலும் குழந்தைகளின் கதறலும் ஏழ்கடல் நுனிவரையும் எங்களின் அழுகை.... எறிகணை துரத்தித் துரத்தி எறிந்திருப்பது கடைசி முனை.... எங்களைப் பற்றி உலகம் பேச…

    • 3 replies
    • 1.1k views
  19. ஊற்று - தேநீர் கவிதை சக்கையாகிப் போன ஒரு பழைய நினைவின் இடுக்கிலிருந்து உருண்டோடி வருகிறது * காடிருந்த நிலத்தின் வியர்வையாக வழிகிறது * புதையுண்ட தனிமையின் விதையொன்று மரமாகி உதிர்க்கும் முத்து முத்துப் பூக்களாக உதிர்ந்து கொண்டிருக்கிறது மூலம் காண முடியாத ஆழத் துயரில் ஊற்றெடுத்து தளும்பிக் கொண்டிருக்கிறது * கால வெறுமையின் ஊதுகுழல்களால் ஊதப்படும் சாம்பல் பூத்த கங்குகள் எரிவதில் பொங்கிப் …

    • 1 reply
    • 977 views
  20. இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று, கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு! தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி! சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்! உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும். சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி! பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து, தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே! தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித…

  21. போகமட்டீரோ நீரும் நரகத்திற்கு...... சிங்களவா உனக்குத் தமிழர் செங்குருதி தானா உணவு பல தசாப்தங்கள் கடந்தும் பசி அடங்கவில்லையா உனக்கு இன்னும் எத்தனை தசாப்தங்கள் தேவை உனக்கு இனப்படுகொலை புரிந்து, உன் ஈனப்பசியைப் போக்குதற்கு வேணுமடா இது எமக்கு வேறுபாடு பாராமல் அன்று உன் கையில் ஆட்சியினைத் தந்ததற்கு சாபமடா எம் பிறப்பு, அதை காட்டுதடா நாட்டு நடப்பு போதுமடா எம் தவிப்பு போகமாட்டீரோ நீரும் நரகத்திற்கு

  22. பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள் o தீபச்செல்வன் ------------------------------------------------------------------ (இன்னுமின்னும் அறியாத சேதிகள் அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன) நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே! உன்னை உரித்து சிதைத்தவர்களின் கைளிலிருந்து எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது. கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு என்ன நேர்ந்திருக்குமென்று தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம் எண்ணிக்கையற்ற முனைகளில் நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது. …

    • 12 replies
    • 3.2k views
  23. காதல் சிட்டுக்கள்..... கவிதை - இளங்கவி அந்தி மாலைப்பொழுது மங்கிய மின்னொளியில் உணவகமொன்றில் ஜோடியாய் இரு காதல் சிட்டுக்கள்.... காம்புடன் குடிய கருஞ்சிவப்பு ரோஜாவை நீட்டியது ஆண்புறா... ரோஜா கொடுக்கிறாய் ஆனால் ஏன் அதை அழகில்லாத காம்புடனும் முள்ளுடனும் தருகிறாய் என்றது பெண் சிட்டு.... அழகில்லாத இந்தச் செடி அழகிய ரோஜாவை எப்படி தாங்கி நிற்கிறதோ நானும் உன்னை என் தேவதைபோல் என்றும் தாங்கி நிற்பேன் என்று சொன்னது ஆண் சிட்டு.. அவன் காதல் வார்த்தையில் மயங்கிய பெண் சிட்டு தன் இரு கைகளாலும் அவன் முகத்தைத் தழுவி ஒட்டிய முத்திரை போல் தன் இதழைப் பதித்தாள் அவன் இதழில்.... முத்தத்தின் சில நிமிடமும் சில யுகங்…

  24. எச்சாதி சொல்வீரோ பத்தே வயதான பாலகனாய் இருக்கையிலே பதிலறியாக் கேள்வியொன்றைப் படித்தவரைக் கேட்டிருந்தேன் என்வயதை ஒத்துநிற்கும் எதிர்வீட்டுப் பையனுடன் ஏற்புடனே விளையாட எதற்காகத் தடுக்கின்றீர் முத்தமிழில் புலமைபெற்ற முன்வீட்டுத் தாயிடத்தில் தமிழ்ப்பாடம் படிப்பதற்குத் தடுப்பதுவும் எதற்காக? இத்தனையும் ஏன்என்று இதமாகக் கேட்டதற்கு இழிசாதி அவரென்று இரகசியமாய்ச் சொல்லிவைத்தார் சாதிகளில் பலசொன்னார் சமனுமில்லை எமக்குஎன்றார் சகபாடி எனச்சொன்னால் சண்டைவரும் இங்குஎன்றார் இச்சாதி கணிப்பதற்கு இருக்கிறதோ ஒருமார்க்கம் இடக்காகக் கேட்டதற்கு இலேசாகப் பதில்சொன்னார் பரம்பரையாய் வருகின்ற பழக்கமிது எனச்சொன்னார் செய்தொழிலை வை…

    • 8 replies
    • 1.5k views
  25. அம்மாவைத் தேடி.. அம்மா...அம்மா...அம்மா -உன் பிள்ளை அழைக்கிறேனம்மா.... கண்ணீர்ச்சுூட்டில் கரைந்து இமை கனக்குதே அம்மா... மடி தேடும் நான் அன்பு மகனல்லவோ... தலைமுடி கோதும் விரலெங்கு தூரத்திலோ.. தாயே நான் செய்த தவறென்ன சொல்லு.. ஜீவனிரண்டை சுமந்த தாயே எந்தன் நெஞ்சும் ஈரம்தானே.. அன்பு என்பது ஆதாரம் தாயினன்போ பெரிதாகும்.. கண்கள் கருணைக்கடலல்லவோ.. எந்தன் உருவம் தந்ததுன்னுடல்லவோ... கருவறை ஒளியும் தாய்நெஞ்சு வலியும் மனதுக்குத்தானே தெரியும் அன்னையினன்பைப் பிரித்திட நினைத்தால் புூலோகம் தீயினில் எரியும்... இடிஇடியென பல இன்னல்கள் நேரிலும் தாயின்நிழலின் கீழ் மனம் தாங்கும்.. வேரின்றி மரமில்லை தாயின்றி வாழ்வில்லை நீய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.