கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஆண்டான் அடிமை விடும் நிலை தன்னை பூண்டோடு ஒழித்து இங்கு நாம் மாற்றுவோம் நீண்ட நெடுங்கலாம் தொடரும் மடமைக் கருத்தினை களை எடுப்போம் ஒரு சாதி சமய பேதங்கள் இல்லாத சமூக நீதி படிப்போம் ! (முகநூல்)
-
- 1 reply
- 486 views
-
-
நாம் தான் தமிழ் மக்களின் அரசியல் வாரிசுகள்! தொடக்கி வைத்தவர் கொள்கை மறந்தார் இடையிலே கைவிட்டு எதிரிதம் வால் பிடித்தார் பயங்கரமாய் சட்டங்கள் ஆட்சியாளர் கைவர வாழாதிருந்தார்! அண்டையில் இருந்தவன் சொந்த நலனுக்காய் காய் நகர்த்த புரிந்தும் புரியாததுமாய் சொகுசு கண்டார்! தமிழன் கண்ணீர் கண்டு போலியாய் இரங்கி ஆளவந்தவனை ஆழக்கால்பதித்து வலுவாக உட்காரவைத்து கதிரைக்காய் சண்டையிட்டார்! வட்டம் என்றும் சதுரம் என்றும் மேசையில் உட்கார்ந்து வருடம் கடத்தினார் பயன் தான் ஏதுமில்லை! எதிரியோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வலுவாகி கொன்று குவித்தான் நாங்களோ தலை நகரிலே பஜ்றோவில் பவனிவந்தோம்! தமிழ் மக்களின் பிரதிநிதிகளாய்! அம்மாதான் விடிவின் விடிவெள்ளி என்று …
-
- 1 reply
- 735 views
-
-
-
நேற்றிருந்த வாழ்வகற்றி புதியதோர் ஒளியைத் தேடி விரைந்து மாணவனாக தமிழீழ மண்ணில் விடுதலை வேண்டி உயர்ந்த கரங்களால் உலகின் புருவங்கள் விரிந்தன !!!
-
- 1 reply
- 405 views
-
-
நல்ல பாடம்! குருவி நானும் ஆலமர உச்சியில் ஒரு கூடுகட்டி நான்கு பிள்ளைகள் பெற்றிட அயலிருந்த காக்கையும் உயர பறக்கும் பருந்தும் வல்லூறும் எதிரிகளாகின! அன்றொருநாள் விசை கொடுகாற்றாய் புயலடித்திட கலைந்தது என் மனையொடு குடும்பமே! கலங்கினேன் வருந்தினேன் கவலையில் பிறந்தது உறதி! மீண்டும் கட்டினேன் ஒரு கூடு வலுவான கிளைதனிலே! பல சந்ததி கண்டு வாழ்கிறேன் சுதந்திரமாக! ஈழத்தமிழா நீ குருவியல்ல! மறத்தமிழன் வீணர்கள் காட்டுவர் வார்த்தையாலம்-அதில் மயங்கிடாது முயற்சி என் வாழ்க்கையை பாடமாய்க் கொண்டு! ஒரு நாள் உனது வெற்றித் திருநாளாகும்! யாழில் 2003 இல் பதியப்பட்டுள்ளது. http://www.yarl.com/kalam/viewtopic.php?f=6&t=1033 [காக்கை - இந்தியா பருந்து - …
-
- 1 reply
- 1.1k views
-
-
இரு கவிதைகள்: தீபச்செல்வன் தணல்ச் செடி சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
அன்று ........!!! நீ பேசவரும் வார்த்தை சொல்லுகிறது நீ பேசாமல் இருக்கும் காரணத்தை ...!!! இன்று .....!!! நீ பேசாமல் இருக்கும் ... காரணத்தை -நீ பேசிய வார்த்தைகளே .... காரணம் .....!!! & காதல் நேற்றும் இன்றும் கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 974 views
-
-
கருணை இல்லாதவனுக்குப் பெயர் கருணாநிதி பச்சைத்துரோகி கபட நாடகதாரி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவனில்லை அவன் திராவிட துரோகிகளின் தலைவன் இராமாயணம் தந்த நாட்டில் இராவணர்கள் மகாத்மா வாழ்ந்த நாட்டில் மாபாவிகள் பெரியார் வாழ்ந்த நாட்டில் பெரும் பூதங்கள் அண்ணா பிறந்த மண்ணில் அயோக்கியர்கள் புத்தர் பிறந்த மண்ணில் அற்பப்புளுக்கள் சேடம் இழுக்கும் வரை பதவியில் இருக்க உனக்கேன் இத்தனை ஆசை? பொய்யனே.....உன் பொய்கள் இலங்கை அரசின் பொய்களை மிஞ்சிவிட்டனவே தமிழர்கள் தினமும் சாகையிலே அங்கே போர்நிருத்தம் அமுலில் உள்ளதென்று அறிக்கை விடுகிறாய் எந்த உலகத்தில் உள்ளாய் நீ? உன் போக்கு எம் நெஞ்சில் தைக்கும் முள்ளு கண்ணை மூடிக்கொண்டு பால்குடிக்கும் க…
-
- 1 reply
- 1.3k views
-
-
a ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே ! நீ எங்கே இருக்கிறாய் ? ````````````````````````````````` ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே! தமிழீழத்தின் அடிமையிருள் ... போக்க வந்த வீரத்திருச்சுடரே! தமிழினத்தின் தன்மான ஒளிவிளக்கே! இந்திய நாய்களின் வேட்டை மானே! நீஎங்கே இருக்கிறாய்? உன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாய் உன் ஆர்த்த அரியணை மேனிக்குக் குறி வைத்திருப்பதாய்ச் சொல்லிச் சொல்லி எள்ளி நகையாடுகிறார்களே, இராசீவின் வஞ்சக வேடர்கள்! தஞ்சம் கோராத தமிழனே! அஞ்சாமையின் தொகுப்பே! நீ,எங்கே இருக்கிறாய்? கனிவுக்குக் கைகொடுத்து, கல்போன்ற நின்தோளை நீவீ,-உன் கழுத்துக்குக் கத்திவைக்கும் எத்தர்கள், உன்னைச் சுட்டுப் பொசுக்கக் குறிவைத்துத் திரிகிரார்களாமே! மறம் மாண்ட தோற்றமே! அறம் மா…
-
- 1 reply
- 1.1k views
-
-
வேதியியலும் காதலும் --------------------------ஐதரசனின் இரண்டு பங்கும் .... ஒட்சிசனின் ஒருபங்கும் .... சேர்ந்த கலவையே நீர் -H2O .....!!! என்னுடைய நினைவுகளையும் ..... உன்னுடைய நினைவுகளையும் .... வேதனையுடன் சுமந்து கொண்டு .... இருக்கும் நம் காதல் ... வேதியல் சூத்திரம் தான் ....!!! வேதியல் வகுப்பறையில் .... வேதியல் படித்தானோ .... தெரியவில்லை .... வேளை தவறாமல் ... உன் வேடிக்கைகளை ரசித்திருக்கிறேன் .....!!! வேதியலில் ... ரேடியத்தை கண்டு பிடித்த .... மேரி கியூரி குடும்பம் .... வேதனையான மரணத்தை .... அடைந்தார்கள் .... புற்றுநோய் ......!!! காதலும் .... ஒரு புற்றுநோய் .... உன் நினைவுகளால் நானும் ... என் நினைவுகளால் நீயும் .... கொஞ்சம் கொஞ்சமாக .... இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!
-
- 1 reply
- 641 views
-
-
மீண்டும் உயிர்த்தெழுந்து வா.... என்னுடன் என் சகோதரனே ' துயரங்களால் ஆழப்புதைக்கப்பட்ட உனது கரங்களை நீட்டு கருங்கல்லால் மூடப்பட்ட கல்லறையில் இருந்து திரும்பி வரப்போவதில்லை நீ.... பூமிக்கு அடியில் புதையுண்டு போன காலத்திலிருந்து எழுந்து வரப்போவதில்லை. உனது கோபக் குரல் மீண்டும் ஒலிக்கப் போவதில்லை - அல்லது தோண்டப்பட்ட உன் விழிகள் இமை திறக்கப் போவதில்லை. பூமியின் அடியாழத்திலிருந்து என்னைப் பாருங்கள் .... நிலத்தை உழுதவர்களே நெசவாளிகளே அதிகம் பேசாத ஆட்டிடையர்களே - நம் இனமரபுக் கடற்பறவையின் இனிய குஞ்சுகளே ' சதிகாரர்களின் கருங்கல் பலிபீடங்கள் உயர்ந்து எழுந்துவிட்டன.... நீங்கள் புதையுண்ட இடத்தின்மேல். ஆண்டியன் மலைத்தொடரின் கண்ணீரில் உறைந்து போன பண…
-
- 1 reply
- 536 views
-
-
கவனம் தமிழா! கவனம்! வைகாசித்திங்கள்( ஆங்.) 18ம் நாள். முள்ளிவாய்க்கால் படுகொலை என்று அறியப்பட்டதினம் இது! அறிந்தும் அறியாததுபோல் - தெரிந்தும் தெரியாததுபோல் உலகமே கண்ணைமூடிக் கொண்டிருக்க, இந்தியக்கோட்டான்களும் சிங்களக்குரங்குகளும் சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்களை உயிரோடு புதைத்ததினம் இது!! தமிழுறவுகளைத்தொலைத்தமையை எண்ணி, முழுத்தமிழினமுமே கலங்கிநிற்கும் நாள் இது! மனிதத்தைத்தொலைத்தமைக்காக முழு உலகமுமே வெட்கித்தலைகுனியவேண்டிய நாள் இது! தமிழனாகப்பிறந்த ஒவ்வொருவனும் தலையிலடித்துக்கதறியழ வேண்டிய நாள் இது!! அழுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் ,அன்னைதமிழ் துயர்போக்கும் அடுத்தகட்ட நகர்வுக்காக வீறுகொண்டெழவேண்டியநாள் இது !!! …
-
- 1 reply
- 973 views
-
-
நிகழ் ஒவ்வொரு நாளும் இரவு கவிகையில் ‘அவர்கள்’ வருவர். ஒழுங்கை முகப்பில் நாய்கள்குரைக்கையில் ‘அவர்கள்’ வரவைத் தெரிந்து கொள்வோம் விளக்கை அணைத்து வாசலைப் பார்த்து மௌனமாயிருப்போம் வேலியோரத்தில் நிற்பதும் நடப்பதுமாய் அவர்களின் பவனி தொடரும் புரியாத மொழியில் பேசிய போதும் அவர்கள் கேட்பது நமக்குப் புரியும்: பெண் நகை புலி. ஒலியடங்கிய சற்று நேரத்தில் எங்காவது வீரிட்ட அழுகையோ வேட்டொலியோ கேட்டபடி தூங்கிப் போவோம் விடியும் வரையும் நிம்மதி மறந்து உறங்குவதே போல் வாழவும் தெரிந்துவைத்திருக்கிறோம். - எஸ்.கே. விக்னேஸ்வரன் 1987 - ‘அமைதி’ பின்னரும் நான் வந்தேன் நீ வந்திருக்கவில்லை காத்திருந்தேன் அன்றைக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று கனடாவில் குடும்ப தினம் நன்றி தர்சினி.(CMR)
-
- 1 reply
- 1.1k views
-
-
நான் கொடுக்கும் துண்டித்த அழைப்புகளை கண்டிக்கும் உன் கோபத்தின் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு...... சண்டையிட்டு சரணடையும் சலனமற்ற உன் அன்பின் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு.... மடிகணினியோடு மல்லுக்கட்டி போராடி என்னோடு அரட்டை அடிக்கும் உன் சேட்டைகள் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு.... கோபத்தினை மறைத்த தருணங்களில் இம் என்ற ஒற்றை சொல்லோடு உரையாடும் பித்தனே உன் பித்தத்தின் மீதும் கொள்ளை பிரியம் ... அன்றாடம் நான் கேட்கும் கேள்விகளுக்கு சில்லரிக்கும் புன்னகையோடு சம்மந்தமில்லா விடையளிக்கும் உன் சலிப்புகள் மீதும் கொள்ளை பிரியமே..... பேசிக்கொண்டிருக்கும் போதே சொல்லாமலே தூங்கிடும் உன் தூக்கத்தின் மீதும் கொள்ளை பிரியமே..... காதருகே கண்ண…
-
- 1 reply
- 571 views
-
-
தமக்கென்றோர் மொழி தமக்கென்றோர் கலாச்சாரம் தமக்கென்றோர் வாழ்வு முறை தன்னை வடிவமைத்து தன் போக்கில் வாழ்கின்ற இனக் குழுமம் ஒன்றை இடையிட்டுப் பெருகிவந்த இன்னோர் இனம் வந்து இடித்துத் தன் காலுள் கண் முன்னே போட்டுக் கதறக் கொழுத்தையிலே அமுக்கம் தாளாமல் அதை எதிர்க்க அவ்வினத்தின் உள்ளே இருந்தொருவன் எழுதல் உலக விதி அவனின் பின் முழு இனம் திரண்டு மூச்சைக் கொடுத்திடுதல் எழப் போகும் ஓரினத்தின் இருப்பின் வரலாறு நீண்ட போராட்ட நெடு வெளியில் மண்ணுக்காய் மாண்ட வீரர்கள் மன வலிமை ஓர்மத்தை தூண்ட, துவளாமல் தொடர்கையிலே அவன் பற்றி இடைவெளியில் மனம் சோர்ந்து இடிந்தோர் விதையற்று வடிக்கின்ற விமர்சனங்கள் வாய் நா…
-
- 1 reply
- 597 views
-
-
சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு… என் அப்பாவைக் கொன்று எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு. அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில் நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்… இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன். • ஆனால், துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும்போது அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ, குறித்த நேரத்தில் வராமல் கால்மணி நேரம் தாமதித்தாலும், தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும் தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ எனக்குப் புலப்பட்…
-
- 1 reply
- 589 views
-
-
வழுவழுப்பான யுத்த வீதியின் சலனமில்லா சதுரங்களில் சாம்ராஜ்ய சண்டைகளில் சமத்துவம் தேடி.......... கறுப்பன் வீழ்த்திய வெள்ளையனின் சிரசுகள் களத்தின் ஒரத்தில் கதியின்றி.... துண்டாடிய சிரசுகளில் சிப்பாய்க்கு சில்லறைகள். அரசிக்கு ஏன் ஆயிரங்கள் கட்டங்களில் முன்னேறி வெள்ளை ராஜாவின் கதைமுடித்து களம் இப்போ கறுப்பர் கையில் அளிவிலா பலம் பெற்றும் அரசனவன் போனபின்பு ஏன் ஆளாது அடங்கிப்போனாள் அரசியவள் ஆட்டம் ஓய்ந்து போச்சு மேசை மீதான வன்முறைகள் பலகை மேல் மரண வாடை உணர்வதில்லை குப்புறக் கவிழ்ந்த முகங்கள். …
-
-
- 1 reply
- 933 views
- 1 follower
-
-
____________________ எங்கள் யுத்தகால நிகழ்வுகள் பற்றி அவர்கள் கலந்துரையாடப் போகிறார்கள். யாரும் குற்றங்களை இழைக்கவில்லை என்றே எல்லா விசாரணைகளும் சொல்லுகின்றன. குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள் மிக மிக கொடிய இரவுகளை பனி படர்ந்திருந்த இரவுகள் என்றே அவர்கள் சொன்னார்கள். எல்லாருடைய கைகளிலும் குருதி பிறண்ட கோடுகள்தானிருக்கின்றன. சரியாக ஆயுதங்களை பாவித்தார்களா எனவும் சரியாக குண்டுகளை வீசினார்களா எனவும் சரியான இடத்தில் நிலை கொண்டிருக்கிறார்களா எனவும் எல்லா அறிக்கைகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஜனநாயக மேசைகளில் வடிந்து கொண்டிருக்கிற குருதியை ஏந்தும் எல்லா விசாரணைகளும் தந்திரம் வாய்ந்திருக்கின்றன. குழந்தைகள் மறுக்கப்பட்ட பூமியில் அ…
-
- 1 reply
- 626 views
-
-
" கார்த்திகைப் பூக்கள்" மானத்தை உயிரெனக் கொண்டவர் - மண் மானத்தை உயர்வெனக் கொண்டவர் தன் மானமே தமிழென நின்றவர் -வீர தலைவனின் வழியினில் சென்றவர்! பொங்கிடும் கடல்அலையும் வீரரைப்பணிந்து நிற்கும் வீசிடும் காற்றலையோ ஈழ மறவரைப் புகழ்ந்து நிற்கும் நெஞ்சிலே தாங்கிநின்றோம் உம்மை நித்தமும் பூஜிக்கின்றோம் வெங்களம் ஆடிநின்றே சிங்களக் கொட்டத்தை அடக்கி நின்றீர்! எங்களின் மானம் ஒன்றே தமிழீழமே என்றுரைத்தீர் தாயகம் காக்கவே இன்னுயிர் கொடுத்தே உயர்ந்து நின்றீர்! கார்த்திகை மாதமல்ல வீரரைக் நினைக்க ஓர் பொழுதென்ன?! என்றுமே உங்களைத்தான் தெய்வமாய் எண்ணுகின்றோம் காப்பதே கடவுள் என்றே நாம் அறிந்ததை உம்மில் கண்டோம்! 'கல்லறை வாழுகின்ற க…
-
- 1 reply
- 1k views
-
-
வீடெங்கும் தடபுடல் அமளியென அதிர்ந்திடவே வீதியெங்கும் தோரணங்கள் தொங்கிச் சிரித்திடவே வீடியோக்காரர்களும் வித விதமாய் படம்பிடிக்க வீணான செலவுகள் எதற்கென்றே புரியவில்லை! பதின்மூன்று வயதிலவன் பத்து "ஏ"க்கள் பெற்றிருந்தான் பந்தலும் போடவில்லை பரிசுகளும் குவியவில்லை பத்தே வயதுபெண் பருவம்தான் அடைந்துவிட்டால் பட்டுப்புடவைகட்டி பலகாரங்கள் பல ஊட்டி பத்திரப்படுத்துவாதாய் பதுக்கியேவைத்தார்கள் பத்தியமானதாய் எதை எதையோ சொன்னார்கள் ஆருமில்லா அறைதனிலே அவளை அமர்த்திட்டர் ஆணியொன்றினையோ அவள்தலையில் செருகிட்டர் அதற்கான காரணம் யாதென கேட்டிட்டால் அமுக்கிப்போடும் பேயினை விரட்டவே என்றிட்டர் ஆண்பாலும் பெண்பாலும் தெரிந்திருக்கு பேயுக்கு அப்பெண்படும் பாடுத்த…
-
- 1 reply
- 457 views
-
-
ஏகலைவன் வித்தை கற்க எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று கட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்? தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன் தகுதி அவனுக்கேது என்று சீறி அவன் தலை வெட்டிச் சாய்த்த கதை இராமபிரான் வரலாரன்றோ? கட்டை விரலையோ, தலையையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும். பிறகென்ன? முதலுக்கே மோசம் வந்தபின்னர் முயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ? ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில் கனமான பாறையொன்றை அவன் தலையில் உருட்டி விட எத்தனிக்கும் உளுத்தர்களை கண்டால் உதைக்கத் தான் வேண்டும் ஓட ஓட விரட்டத்தான் வேண்டும் ஆற…
-
- 1 reply
- 851 views
-
-
சிறகடிக்க ஆசைப்படும்... சிறைப் பறவை, உறவுக்காய் ஏங்கிக் கழிக்கும்.... தினம் இரவை! என் வரவுக்காய்... ஆசைப்படும் 'தாய்போல்' மடியும், காத்துக் காத்திருந்தே... தினம் இரவுகள் விடியும் ! வெற்று வார்த்தைகளில் எதுவுமில்லை, மற்றத் தேவைகளின் தேவையுமில்லை! கற்ற கல்விகூட அளவோடுதான், பெற்ற அனுபவம் இன்று வாழ்வோடுதான்! கண்ட தோல்விகள் கொஞ்சமில்லை, இன்றுவரை எதுவுமென்னை மிஞ்சவில்லை! எல்லாமே எமக்கொரு பாடமென, வெல்வோமே நாம்தான் வீரரென! சந்தித்த சரிவுகளை சாய்தளமாக்கி, நிந்தித்த வாழ்வுதனை போர்க்களமாக்கி... வந்து நின்ற எதையும் வென்று நின்று, நொந்து நின்று... குனிந்த தலை....................... நிமிர்ந்து நிற்போம்!
-
- 1 reply
- 1k views
-
-
தேநீர் கவிதை: வழிப்போக்கன் நான் வழிப்போக்கன் வழிகள் என் முகவரிகள் * மழையில் நனைவது எப்போதும் இருக்கும் மழை நீர் அருந்துவது எனக்குப் பிடிக்கும் * இளைப்பாறும் போதெல்லாம் நான் நிழலுடன் பேசுகிறேன் மனம் மரத்துடன் பேசுகிறது * என் பயணம் அடைதலில் இல்லை தொடர்தலில் இருக்கிறது * ‘வெகுதூரம் வந்த பின்னும் வெகுதூரம் இருக்கு இன்னும்’ இந்த வரி அதிகம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
நீங்கள் அத்தனை பேரும் ............. அத்தனை பேரும் வாழ்கையை ...வாழ்கிறீர்களா? மனைவியை மாதமுருமுறை என்றாலும் "வெளியில் " அழைத்துச்செல்கிறீர்களா?.. மனைவி பிள்ளைகளுடன் ....மரடிக்கிராலா? ....ஒரு மாற்றதிக்கு பிள்ளைகளை கவனிப்பீர்களா? இரவு வேலை பார்க்கிறீர்களா? நீங்கள் காலையில் வர பிள்ளைகள் பாடசாலை போய்விடுவார்கள்..பிள்ளைகள் பாடசாலையால் வர நீங்கள் போய்விடுவீர்கள்?....பிள்ளைகளுக்கு இரவில் தன் முத்தமா? மனைவி வேலைக்கு போவதானால் நீங்கள் இரவும் அவள் பகலும் .. ஒருவரை ஒருவரை கான்பீர்களா?......இரண்டு வேலை மூன்று வேலை என்று மாரடித்து விட்டு ...எங்கே இன்பம்?........... எங்கே நிம்மதி ?........ போதும் என்ற... மனமே ..வேண்டும் ....அவன் போல கார் வேண்டு…
-
- 1 reply
- 1k views
-