Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட்டென்று நினைத்தே பதறியே போனேன் தொட்டது பட்டறை இரும்பென்ற போது..! அணைக்க நினைத்தே எரிந்தே போனேன் அணைத்தது கொடுந் தீப்பந்தென்ற போது..! கவ்வ நினைத்தே மரணித்துப் போனேன் கடித்தது சயனைட் இதழென்ற போது..! மேகமென்று நினைத்தே சிறைபட்டுப் போனேன் சிக்கியது கூந்தலில் என்ற போது..! இசையென்று நினைத்தே செவிப்பறை இழந்தேன் பேசியது பெண் குரல் என்ற போது..! கலையென்றே நினைத்தே பாடம் படிக்கப் போனேன் படித்தேன் கன்னியவள் கலையெடுத்தாடிய போது..! பஞ்சணை என்று நினைத்தே நிலையிழந்து போனேன் உணர்விழந்தேன் படுக்கையில் அவள் என்ற போது..! வசந்தம் என்று நினைத்தே விவாகத்துள் போனேன் விக்கித்தேன் "வீணாப்போனவனே" என்ற போது..! …

    • 7 replies
    • 1.5k views
  2. உள்ளம் பேதலிக்க... எண்ணம் கொடு! என் வாழ்விலும்... வண்ணக் கோலமிடு! எல்லை மீறும்போது... என்னைத் தடு! "கொஞ்சக்" கனவிலேனும்... என்னை விடு!

  3. பள்ளிக்கூடப் பிள்ளைகள் இடையில் Among the School Children - W.B.Yeats தமிழில் - நோயல் ஜோசப் இருதயராஜ் செல்லுகிறேன் நீண்ட வகுப்பறையின் ஊடே சிறுமுறுவல் சிலவினாக்கள் சிந்திக் கொண்டே; வெள்ளை உடை முக்காட்சில் முதய கன்னி விடைகனிவாய்ச் சொல்லுகின்றாள்: ``சிறுமியர்கள் மெல்லிசைப் பண், வரலாறு, கணிதம், தையல் மேலும் நவ நாகரிகம் கற்கின்றார்கள்`` எல்லோரின் விழிகளும் ஓர் கணவியல்பில் எழுகிறது அறுபதினைக் கடந்த என்மேல்! காணுகின்றேன் நின்றபடி கனவில், ஹோமர் காவியத்து ஹெலன்போன்ற என்றன் காதல் ராணியினை. தாழும் தீக் கணகணப்பில், ராப்போதில் அன்றொருநாள், அரட்டை கேலி வீண் அற்பச் சிறுபிள்ளைத் தனங்கள் எல்லாம் விபரீதம் விளைத்தகதை சொன்னாள்! கேட்டேன்! ஊன்கலந்த…

    • 1 reply
    • 970 views
  4. Started by vanni mainthan,

    வருவாயா... ஈழ மண்ணின் குரலதுவும் போனது போனது தானா தமிழிழமின்று குருதியிலே தோய்வது..தோய்வது..முறைதானா...? மதியுரை மந்திரி மன்னவனே உனையிழந்தின்று தேசமே யழுகிறதே-நீ கூடியே வாழ்ந்த குருவியெல்லாம் கூடிட உன்னையே தேடுறதே... கடலம் அலையும் அலைகிறதே கடலினுள் அவையும் அழுகிறதே வெகுமதி உன்னை இழந்ததினால்- அந்த வெண்ணிலா கூட தேய்கிறதே... ஈழ மண்ணின் குரலதுவும் போனத போனது தானா தமிழிழமின்று குருதியிலே தோய்வது தோய்வது முறைதானா... நோயுடல் உன்னை வாட்டியதோ தமிழீழ விடுதலை புட்டியதோ போற்றியே வாழ்ந்த உலகமெல்லாம்- இன்று போதனை மறந்து வாழ்கிறதே... அண்ணனே அண்ணனே வருவாயா அகிலத்தில் மீண்டும் பிறப்பாயா வீழ்ந்தே நொருங்கிய வெண்புறாவை மீண்டும…

  5. மணலிலும் காற்றிலும் கடலிலும் ஒன்றாக சங்கமித்து இன்றும் விடுதலைக்காக காத்திருப்பவர்கள் எங்கள் மாவீரர்கள் விடுதலைக்காக போராடியவர்கள் இன்று விடுதலைக்காக காத்திருப்பதை சிந்திக்காமல் அவர் நினைவு கொண்டாடுவதில் பிரித்து போராடுபவர்களை நினைத்தால் என் நெஞ்சு வெடிக்கிறது நீங்கள் எழுங்கள் ஏனெனில் உங்கள் நினைவுகள் கொண்டாடுவதில் போட்டீ போட்டு உங்கள் நினைவுகளை அழிப்பவர்கள் ஏன் உங்கள் இலடச்சியங்களை சிதைக்காமல் இருப்பார்களா! ஆகையினால் எழுந்து விரைவாக வாருங்கள் உங்கள் நினைவு தினத்தை வைத்து சொத்து சேர்ப்போரும் ஒரு தொகுதியினர் இன்னொரு தொகுதியினர் பணத்திற்க்காக உங்கள் நினைவுகளை சிதைப்பவர்களும் அதுதான் அவர்கள் நோக்கமெனில் கைவிடுங்கள் நிலையற்ற வெறும் மாயைக்கு…

  6. சமாதானத்தின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்ட இன்றைய நிலையின் நாளைய நோக்குக் குறித்து எழுதும் கவிஞர் புதுவை இரத்தின துரையின் உலைக்கள வரிகள் இவை நெஞ்சுக்குள் அலையெற்றிய மாயக்கனவுகள் வெளியேற நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது. மினுங்கிய மின்சாரமற்று தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று செப்பனிடப்பட்ட தெருவற்று மாவற்று - சீனியற்று - மருந்தற்று ஏனென்று கேட்க எவருமற்று கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும். கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும் வீட்டு மூலையில் வீசிவிட்டு மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும் விறாந்தையின் தரைவிரிப்புகளையும் மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும் அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம். …

    • 9 replies
    • 3.9k views
  7. Started by காஞ்சிசத்யா,

    உன் கண்களுக்குள் என் இதயத்ததை பதிவேற்றம் செய்துவிட்டு நீ தரவிறக்கம் செய்வதற்காக தவித்து கொண்டு இருக்கிறேன் ❤

    • 1 reply
    • 1.4k views
  8. இந்த காதல் மழை 50 துளிகளாய் விழப்போகிறது ஒவ்வொரும் தனிரகம் நீ சூரிய உதய நேரம் .... பிறந்திருக்கிறாய் .... உன்னை காணும் .... போதெலாம் சூரியனை .... கண்ட தாமரைபோல் .... என் .... இதயத்துக்குள்ளும் .... மலர்வு ஏற்படுகிறது ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 01

  9. ஆபாசமாக எழுதுகிறார் என்று கவிஞர் குட்டி ரேவதி மீது விமர்சனம் வைக்கப்படுவது புதிதல்ல. ஆனால் சமீபத்தில் நீட்சி இதழில் வெளியான இவரது “மாமத யோனி” என்ற கவிதை (!) மிக அதிக அளவில் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. மாமத யோனி…. தன்னையே காவு கொள்ளும் மாமத யானையென உடல் வெறித்திருக்கும் யோனி எனது திசையெங்கும் எழுச்சியுற்று காமம் கிளர்ந்திருக்கும் பேருயுயிரும் அது தன் மதச்சாறு பொழிந்த காட்டை சேற்று நிலத்தை துவம்சம் செய்து திரிகிறது ஒரு காமக்கிழத்தியைப் போல சேரிப்பரத்தையர் போல….. விடலைகளின் புல்வெளிகளை அறுத்துச் சுவைக்கிறது இந்த ஒற்றை யானையின் மதம் போதும்… என் மாமத யோனியினுள்ளே ஒரு யானையைக் கொண்டிருக்கிறேன் தறிகெட்டோடும் அதன் இச்சைக்கு இந்த இரவுகள் போத…

  10. இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரலை துடைத்தாலும் .... உரலில் ஓரத்தில் ..... துவல்கள் ஒட்டி இருப்பது .... போலவே ...... முதல் காதல் நினைவும் .... இதயத்தின் ஒரு ஓரத்தில் ..... ஒட்டியே இருக்கும் .....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

  11. ஒரு தமிழனாய் -------------------------- என் மனதைப் போலவே கூதிரின் காத்தும் கூவிச் சில்லிடுகின்றது பனியைப்போல உறைக்காவிட்டாலும் மனதை குடையும் வெம்மையின் சூடு என்னைப் போலவே இன்னும் உறையாமல் எல்லாவற்றைப் பற்றியும் பாடும் என் பாடல்கள் பாட முடியாது தோற்கும் இடம் என் சந்ததிகள் என்னைப்போலவே முறையறியாது குழம்பித் தவிக்கும் அவள் தமிழ் சிரிப்பாய் சித்திரமாகப் பதிகின்றது மறந்து போன இன்பங்களைப் போல உன் ஊரில் பாம்புண்டா ? அவள் பயங்கள் பாம்பாய்ச் சுற்றுகின்றன. "பெக்கர்ஸ்" அகதியாய் வந்தவர்களும் பெக்கர்ஸ் தானே வாழ்க்கையை யாசித்தவர்கள் தானே எல்லாவற்றையும் தாண்டி மூவேந்தர் பற்றியும் பாரி முல்லை தேர் ஒளவை தமிழ்ச…

    • 4 replies
    • 1.4k views
  12. படைப்போம் படைப்போம் புரட்சிகள் படைப்போம் உடைப்போம் உடைப்போம் இயலாமை உடைப்போம் எடுப்போம் எடுப்போம் அறிவாயுதம் எடுப்போம் தவிர்ப்போம் தவிர்ப்போம் அறியாமை தவிர்ப்போம் துறப்போம் துறப்போம் சுயநலம் துறப்போம் தடுப்போம் தடுப்போம் இருளினை தடுப்போம் மறப்போம் மறப்போம் வேற்றுமை மறப்போம் நிறைப்போம் நிறைப்போம் ஒற்றுமை நிறைப்போம் மறுப்போம் மறுப்போம் புறங்களை மறுப்போம் தெரியோம் தெரியோம் கறைகளாய்த் தெரியோம் அறிவோம் அறிவோம் தன்பலம் அறிவோம் புனைவோம் புனைவோம் புதியன புனைவோம் அழிப்போம் அழிப்போம் மடமையை அழிப்போம் வளர்ப்போம் வளர்ப்போம் இனமானம் வளர்ப்போம் பயில்வோம் பயில்வோம் சரித்திரம் பயில்வோம் முயல்வோம் முயல்வோம் …

    • 2 replies
    • 795 views
  13. தக்காளி ,வெங்காயம் விளை நிலம் எங்கே உண்ணும் உணவும் உடை இல்ல நிலை இங்கே மறந்து மறைத்து போனது எங்களின் நிலைமை மூன்று மாதத்தில் நெல் சாகுபடி வருமானமோ நாங்கள் சாகும் படி ..... மாறும் எங்கள் காலம் தங்கம் இப்போ உங்க காலம் வரும் நெல்லை தேடி அலையும் காலம் சிறிய வீடு சிறிய காரும் போதும் எனக்கு இது தான் உன் எதிர்பார்ப்பு இயற்கை சீற்றம் வந்தால் இதில் இல்லை பாதுகாப்பு உண்ணும் உணவு நாங்கள் தயாரிப்பது உங்களுக்காக இதை நீ புரியாதவனாக இருக்கிறாய் வழி விடு வழி விடு உன் சங்கதி வாழ்வதற்கு புதிய இயந்திரம் வந்தாலும் இதில் அனைத்தும் கிடைத்து விடுமா ....... சிந்தனை என்னும் வார்த்தைகளை சிந்திக்க மறந்து விட்டாய் என் தோழா …

  14. என் கவிஞன் எங்கே? ------------------------------ கண்ணாலும் காணவில்லை காதாலும் கேட்கவில்லை உன்னை காணாமல் தேடுகிறேன். என் கவிஞ! நீ எங்கே இருக்கிறாய்? செந்தமிழின் சொல்லெடுத்து உன் பேனா பெரும் செல்லடிக்கும் போதும் எழுதியதே கண்ணால் கண்டு உன்னோடு கதைத்த பொழுதுகள் இன்னும் என் நெஞ்சத்துள் உருகுகிறதே வாழ்வு பெரும் சோகம் வன்னி வாழ்வு பெரும் சோகம் என் மண்ணில் கிடந்து உழன்றெழுந்தாய் எழுதினாய் உன் கவிதைகளை என்கவிஞ! உன் கவிதை கண்டு என்மனம் எப்பொழுதும் ஆறுமடா! ஈழத்து கவிஞன் என்று உன்னை போற்றாதார் யாருண்டு? எதிரவர்க்கு கூட உன்தமிழ் பிடிக்குமடா? இனி அழக்கண்ணீரில்லை என்பதற்கு பிறகு உன்னைக்காணவில்லை …

    • 27 replies
    • 8.8k views
  15. நட்பை வளர்க்க வார்த்தைகள் தேவையில்லை. புன்னகை மட்டும் போதுமென்று புரிய வைத்த என் அன்பு நண்ப ! என் இதயப் பாலைவனத்தில் நீரூற்றிப் பூமரம் நட்டவனே வெறும் பனி மூட்டமாய் இருந்த என் இதயத்தில் மேக மூட்டம் தோன்றிப் பெருமழை பொழியக் காரணமானவனே கூட்டைப் பிரித்து றெக்கை விரிக்கும் பட்டுப் பூச்சியாய் கூட்டம் கூடிப் பறந்து திரியும் பட்டாம் பூச்சியாய் எத்தனை பரவசங்கள் நமக்குள் நடந்தேறின. என் ஆருயிர் நண்ப ! சிப்பிக்குள் பதுங்கிக் கொண்ட பனித்துளியாய் என் அன்புக்குள் உறங்கிக் கொள்ளும் முத்தானாய் நீ அந்தரத்தில் பறப்பது போல் ஆனந்த தாண்டவத்தைக் கற்றுத் தந்த என் வாலிப நண்பனே ! பனித்துளி தெளித்த ரோஜாவாய் முள்முடி தரித்த எண்ண…

    • 3 replies
    • 1.2k views
  16. 1 இறுக்கி பற்றி பிடித்து இருந்த .. உன் கைகள் லேசாய் பிடி தளரும் .. போது நான் புரிந்து இருக்க வேணும் .. நீ வளர்த்து வருகிறாய் என்று .. மகனே ... 2 ஓடும் உன் மகனை ... பிடிக்கும் வயதில் நான் .. இல்லை மகனே .. முதுமை .! 3 அப்பா என்று என்னை நீ அழைத்தபோது .. இன்னும் ஒருமுறை கூப்பிட மாட்டானா .. என் பிள்ளை என்னை என்று ஏங்கிய.. என்னை இப்பொழுது உனக்கு ஒன்னும் .. தெரியாது போப்பா அங்கால என்கிறான் ... லையிட்டா வலிக்குது மகனே மனது ..! 4 என்ன உனக்கு தொப்பை எட்டி பார்க்குது .. என்று கேட்பவர்களுக்கு தெரியுமா .. அது உனக்காக வளர்த்து தொப்பை என்று .. நீ சிரித்து சறுக்கி விளையாட மகனே ..! 5 உன்னுடன் மிட்டாய்க்கு இட்டா .. சண்டையை விட உன் எச்ச…

  17. வாரஇறுதி விடுமுறைகூட வருடங்களின் பின்புதான் ஓய்வின்றிய உழைப்பில்.. தொலைந்து மறையும் தொலைதூர உறவுகள் தொலைபேசி அழைப்பில்.. முழுநாளும் வேலைக்குள் தடம்மாறும் நண்பர்கள் முகம்பார்க்க முடியாமல்.. தொலைவில் இருந்து தொலைபேசிக்குள்ளே குடும்பம் நடத்தி.. தூங்கியெழ மட்டும் வீடுவந்து செல்லும் குடும்பத்து உறவுகள்.. பம்பரமாய் உழைக்கும் பரதேசி வாழ்க்கையின் பாழாய்போன கொள்கை.. பசிக்கும்போது உணவு களைத்தபோது தூக்கம் கிடைத்தாலே போதும்.. வருஷங்களுடன் சேர்த்து வாழ்க்கையை தொலைக்கும் வலிமையான வட்டத்துள்.. முடிவற்ற பாதையில் தெளிவற்ற பயணமாய் புரிந்த…

  18. சுமக்கும் சிலுவையுடன் -------------------- அந்திப் பொழுதும் வெட்கும் வேளையில் அவளுக்காக காத்திருக்கின்றேன் கரைகளை நக்கும் நுரை கால்களையும் கழுவிப் போகின்றது கடலிலும் பேதமில்லை கரையிலும் பேதமில்லை- அது சுமக்கும் மனிதரில் பேதமில்லை மனங்களில் பேதம் முதுகில் சுமப்பவன் முக்காடு போடுபவன் முக்குறி இடுபவன் அதற்கும் மேலால் மண்ணில் உழைப்பவன் மரத்தில் ஏறுபவன் நித்திலம் கொழிப்பவன் நின் மலசலம் எடுப்பவன் எத்தனை பேதமை இருட்டிப் போன பின்னும் அவள் வரவில்லை... சேதி வந்தது 'அவள் வர மாட்டாள்' மண்ணின் மேலால் நீர் இருக்கலாம் கடல் மண்னின் கீழால் நீர் இருக்கலாம் கிணறு மண்ணும் நீரும் ஒட்ட முடி…

    • 7 replies
    • 1.6k views
  19. பத்து வயதில் பார்த்தேன் நண்பனின் பார்வை என்றால் தந்தையிடம்......... பதினாறில் பார்த்தேன் காதல் பார்வை என்றால் சிநேகிதியிடம்........ நாற்பதில் பார்த்தேன் காம பார்வை என்றால் கணவனிடம்........ அறுவதில் பார்த்தேன் கிழவனுக்கு பார்வை தெரியாது என்றால் பேரனிடம்.... அதே கண்கள் பார்வை வேறு அர்த்தம் வேறு பருவம் வேறு........

  20. Mohamed Nizousபற்ற வைக்கின்றபைத்தியகாரனுக்கும் தெரியாது.எரிகின்ற கடையுடன்எத்தனை மனிதர்களின்எதிர்காலமும் எதிர்பார்ப்பும்எரிகின்றது என்பது.கல்லை எறிகின்றகாவாலிக்குத் தெரியாது.கண்ணாடியுடன் சேர்த்துதன்னாட்டின் பெயரும்உடைந்து போய்உலகளவில் நொறுங்குவது.பள்ளியை உடைக்கும்மொள்ளமாரிக்குத் தெரியாது.அள்ளாஹ்வின் வீட்டில்அத்து மீறி நுழைந்துஅட்டகாசம் செய்தவன்பட்டழிந்து போன செய்தி.வீடுடைத்து எரிக்கும்காடையனுக்குத் தெரியாது.பிறந்து வளர்ந்துபறந்து வாழ்ந்த வீடுஉடைந்து போகும் போதுஉள்ளே எழும் வலிஉடைக்கின்ற காடையனைஒரு நாள் வதைக்கும்.ஐம்பதாயிரம் தருவதாகஅறிவித்தல் கொடுக்கும்அரசுக்குப் புரியாது.தருகின்ற பணம்கருகிய இடத்தின்கறுப்பைப் போக்கவும்காணாது என்று.பாட்டுக் கேட்க கோல் எடுக்கும்பாத்திமாக்களுக்…

    • 0 replies
    • 1.1k views
  21. ''எங்கு போய் ஒழிந்தான் சொல்கேம்....???'' எறிகணைகள் ஏவி பகை ஏழ் பத்து உயிர்களையே... கதிரவெளியினிலே இன்று காவு கொண்டதங்கே.... எண் கணக்கில் நூறு தாண்டி வேறு பிறர் காயமங்கே.... கொலை வெறியன் மகிந்தன் அங்கே.... கொல்லுகிறான் நாளும் அங்கே.... எம் தமிழர் உறவு அங்கே.... நித்தம் கண்ணீர் கொட்டுதங்கே.... இத்தனையும் வந்து பார்க்கா ஒழிந்தான் இன்று - எரிக் சொல்கேம் எங்கே.....??? வன்னி மைந்தன் - :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

  22. Started by இளங்கோ,

    எலிகள் அஞ்சி ஓடுகின்றன பிள்ளையார் ஏறி உட்கார்ந்து விடுவார் என்பதால்.

  23. இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே வழி அனைத்தையும் காதல் செய் . காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல . அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!! + கவிதை " மனத்தால் உனக்கு அபிசேகம் செய்கிறேன் - என் இதயத்தில் தெய்வமாக நீ இருப்பதால் " இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!! தொடரும் ...........

  24. Started by கஜந்தி,

    பூவுக்குள் பூவாய் இவள் உறங்கிக் கொள்ள கண்ணீர் கொண்டு பாசத்தோடு என் உறவுகள் சுற்றி நிற்க இவளையும் வெறுத்திடும் இதயங்கள் பெருமூச்சு விட்டு நிற்க ஏனடா இவளை சந்தித்தோம் என சிலர் திட்டி நிற்க இவள் மட்டும் பூவோடு பூவாய் வாடாது உறங்கிக் கொண்டாள்! தன் இறுதி விடுதலைப் பயணத்தில் மகிழ்ச்சியாய்...! இவளுக்காய் அழுதிடும் உறவுகள் மறந்திடுவார் மரணத்தை மீண்டும்!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.