கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு ஆளரவமற்ற வனாந்தரத்துப் பெருமுகத்தில் அலைகிறது ஆன்மா. மீள் பொழுதின் வரவில் - உன் நினைவுகளைத் தெளித்துவிட்டுக் கனவாகிப் போனாய்.... நீயெழுதிய கடிதங்கள் மஞ்சள் கடதாசிப்பூக்கள் மறக்காமல் அனுப்பும் பிறந்தநாள் புத்தாண்டு வாழ்த்து மடல்கள் - உன் நினைவாய்க் கிடைத்தவைகள் எல்லாம் கண் முன்னால் உன்னை நினைவுபடுத்திபடி.... 'போய் வருகிறோம்' போர் நிறுத்த காலத்துச் சந்திப்பு முடிந்து பிரியும் நேரம் 'சந்திப்போம்' என்றாய் இன்று வந்த செய்தியுன்னை இழந்தோமென்கிறது. மாமாவின் மரணம் கேட்ட உன் மருமக்கள் சொல்கிறார்கள். 'கடிதம் மாமா' இனியெங்களுக்கு இல்லை... இதயம் நொருங்கிச் சி…
-
- 9 replies
- 2.7k views
- 1 follower
-
-
மாவீரர் தோழனுக்காய்.. கனவும் நனவுமாய்ப்போன காலபைரவர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கடலளவு கருணை இல்லாவிடினும் _சிறு கடுகளவேனும் நெஞ்சில் ஈரம் கொண்டு விடுதலை வேட்கையைக் கூட விலைபேசும் மனிதர்கள் மத்தியில் வீர வரலாறு எழுதினாயேடா தோழா வீர வரலாறு எழுதினாயே... தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் எமக்காய் தினம் தினம் சிலுவை சுமந்தாயே தோழா தினம் தினம் சிலுவை சுமந்தாயே... உணவுண்ட கோப்பையில் மலங்கழிக்கும் ஈனமா இனத்திற்காய் உன் இன்னுயிரை ஈய்ந்தாயே தோழா இன்னுயிரை ஈய்ந்தாயே... கூடப்பிறந்த சோதரியை கூட்டாக கருவறுக்கும் போது கூட்டிக்குடுக்கும் கயவர்கள் மத்தியில் குண்டு சுமந்தாயேடா தோ…
-
- 3 replies
- 1.3k views
-
-
கனவும் நனவுமாய்ப்போன காலபைரவர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கடலளவு கருணை இல்லாவிடினும் _சிறு கடுகளவேனும் நெஞ்சில் ஈரம் கொண்டு விடுதலை வேட்கையைக் கூட விலைபேசும் மனிதர்கள் மத்தியில் வீர வரலாறு எழுதினாயேடா தோழா வீர வரலாறு எழுதினாயே... தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் எமக்காய் தினம் தினம் சிலுவை சுமந்தாயே தோழா தினம் தினம் சிலுவை சுமந்தாயே... உணவுண்ட கோப்பையில் மலங்கழிக்கும் ஈனமா இனத்திற்காய் உன் இன்னுயிரை ஈய்ந்தாயே தோழா இன்னுயிரை ஈய்ந்தாயே... கூடப்பிறந்த சோதரியை கூட்டாக கருவறுக்கும் போது கூட்டிக்குடுக்கும் கயவர்கள் மத்தியில் குண்டு சுமந்தாயேடா தோழா குண்டு சுமந்தாயே... இரக்கப்பட்டு விடும் கண்ணீரையே …
-
- 3 replies
- 673 views
-
-
மாவீரர் நாள் கவிதைகள்!!! (புதுவை இரத்தினதுரை) மாரிமழை பொழியும். மண்கசியும் ஊர்முழுதும் வாரியடித்து வெள்ளம் வான்பாயும் கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும். துயிலுமில்லச் சாமிகளுக்கான சந்தனநாள் வந்தடையும். மாவீரச்செல்வங்கள் மண்கிழித்து வெளிவந்து சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள். விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள். தமிழீழம் விடியும் என நம்பி பாடும் நாள். விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள். தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான். குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம் இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு. …
-
- 4 replies
- 14.1k views
-
-
1947ல் இலங்கையில் சிங்கள ஆதிக்கம் ஏற்பட்டதில் இருந்து இருந்து அதனை நிராகரித்து தமிழ் இன விடுதலைக்காக உயிர்நீத்த சகல கட்சிகளையும் இயக்கங்களையும் சேர்ந்த மாவீரர்களுக்கும் இலங்கைத் தமிழர் சமூக விடுதலைக்காக எழுந்து சாதி சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும் ஈழத் தமிழ் முஸ்லிம் உறவுக்காகவும் வீழ்ந்த மாவீரர்களுக்கும் எனது அஞ்சலிகள் மருதப் பாட்டு வ.ஐ.ச.ஜெயபாலன் கருகும் நீரில் தலைகீழாக மருத மரங்களும் என் நினைவுகளும் நெளிய சிற்றாறு நடக்கிறது. பறக்கிற குறு மணலோடு பார்வையில் தென்படும் இராணுவத் தடங்கள் கண்ணை உறுத்தியபோதும் போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில் பாலியாற்றம் கரையில் இருந்தேன். இருந்தும் என்ன நம் வீர விந்துகள் இன்னும் சிறையில் என்பது நெருடும். தென்…
-
- 0 replies
- 572 views
-
-
மாவீரர் நினைவில் கவிஞர் காசி ஆனந்தன்.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.7k views
-
-
மாவீரர் நினைவில் கவிஞர் காசி ஆனந்தன்.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.2k views
-
-
விரிந்த எனது தேசத்தின், பரந்து படர்ந்த வெளியெங்கும், அறைந்து நிற்கிறது வெறுமை! நான்கு வருடங்கள் நகர்ந்து போனதை, நம்பக்கூட முடியவில்லை! உங்கள் நினைவுகள் சுமந்த, உயிர்க்கூடுகள் மீது. கோரை படர்ந்திருக்க, எருக்கிலை சிந்தும் கள்ளிப்பால், உங்களுக்கு நிவேதனமாகின்றது! அரவங கேட்டுச் சத்தமிடும், ஆட்காட்டிக் குருவிகள், உங்களுக்காகக் கீதமிசைக்கின்றன ! எங்களுக்கெல்லாம் இப்போது, இரண்டு விலாசங்கள்! பிறந்த இடமொன்று, மறையும் இடம் இன்னொன்று! கிழக்கே உதித்து, மேற்கில் மறைகின்ற, சூரியன்களாக, எங்களை நாங்களே, உருவகித்துக் கொள்கிறோம்! அரேபியப் பாலைவனங்களிலும், உருகும் பனிப் டலங்களிலும், எங்களால் வாழமுடிகின்றது! நகருகின்ற ஒவ்வொரு வினாடியும், எங்கள் தேசம்…
-
- 11 replies
- 1.2k views
-
-
சைவ சமயம் உட்பட பல சமயங்களில் இறைவனைத் தொழ பதிகங்கள் இயற்றி கோவில்களில் தேவாலயங்களில் பாடி இறை நம்பிக்கைகளை பன்னெடும் காலம் வளர்த்து வரும் நிலையில்... எமது இனத்தின் இருப்பின் முதலாய் நிற்கும் தெய்வத்தையும் கடந்து நினைவில் என்றும் இருக்க வேண்டிய மாவீரர்களை நெஞ்சால் தொழுது இலட்சியத்தால் அவரின் கனவு வென்று நிற்க.. தோத்திரங்கள் பதிகங்கள் இயற்றி நிற்போம். அவை பண்.. தாளம் கொண்டு புனிதம் நிலைக்க.. பாடப்படும் நிலை இயற்றுவோம்..! வீழ்ந்த வீரரின்.. இலட்சியம் காவி நிற்போம். அந்த வரிசையில்.. எங்கள் பங்களிப்பு... உங்கள் பங்களிப்பையும் ஆற்றி நில்லுங்கள்...! பண் - தாளத்துடன் பாடக் கூடியது. பண் - தாளம் - அறியப்பட வேண்டியது. மாநிலத்தின் தமிழ் மரபு காத்தாராய் தமிழ்…
-
- 9 replies
- 911 views
-
-
மாவீரர் புகழ் பாட தீபம் ஏந்தி செல்வோம் , மலரோடு ,நம் கண்ணீர் மழையாக சொரியும் உடலோடு உயிரும் ,விதையாக் தந்தீர் உயிர் உள்ள வரையும் மறவோமே நாளும் மகன் இல்லா,அன்னை,மகள் இல்லா அன்னை உறவற்ற ஊரார் உயிரற்ற மனைவி ,தன்னை விழி திறந்து பாரீர் ,முடிவு தான் இல்லை வழி ஒன்று பிறக்கும் ,நம் தலைவன் நோக்கில் மாவீரம் ஒரு போதும் ,மறையாது மறையாது தாய் மண்ணின் புதல்வர் ,தம் கடன் முடித்து ஓய்வில்லா உறக்கம் ,கொள்ளுவீர் அங்கு தாய் மண் என்றும் மறவாது சத்தியம் ............... ,
-
- 3 replies
- 1.3k views
-
-
மாவீரர் வாரம் – “காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா” -றோய் 90 Views ‘எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்’ என்கிறார் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். தமிழீழ மண் மீட்பு போரில் தங்களின் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை தன்னகத்தே சுமந்து நிற்கும் இந்த கார்த்திகை மாதத்தில், அவர்கள் விட்டுச் சென்ற கனவுகளைத் தாங்கி, உரிமைக்கான குரலை உலக…
-
- 13 replies
- 2.2k views
-
-
மாவீரர்அஞ்சலி கார்த்திகை மாதம் கடுங்குளிர் காலம் - எம் காவல் தெய்வங்களுக்கோ கனிவான மாதம் தமிழரின் இருளை நீக்க அவர் எழுந்தார் தரணியில் தமிழர் புகழ் ஓங்கவும் செய்தார் தாய் தந்தை உறவை இடையிலே துறந்தார் தமிழீழ விடுதலையைத் தலையிலே கொண்டார் உடல் பொருள் அனைதையும் உரிமைக்காய் கொடுத்தார் உரிமைப் போரிலே தம்மை முழுமையாய் இணைத்தார் மண்மீட்கப் போராடி- அம் மண்மீதே சாய்ந்தார் தமிழ் மண்ணேடு மண்ணாக அதன்மீதே வீழ்ந்தார் காற்றிலும் கடலிலும் அவர் தம்மைக் கரைத்தார் கடலலையும் அக்கதையை கரைக்கு கூற வைத்தார் காந்தள் மலர்கள்மேல் காதலும் கொண்டார் கார்த்திகைத் தீபத்தின் ஒளியிலே ஒளிர்ந்தார். தமிழர் இதயங்களில் இருப்பிடம் கொண்டார் தமிழீழக் கனவுடனே களமாடி வீழ்ந…
-
- 0 replies
- 504 views
-
-
வாழ்க்கையை மண்ணின் விடுதலைக்கும் மரணத்தை அஞ்சாத தியாகத்தாலும் எம் விடுதலைக்கு வித்தாகிய மாவீர செல்வங்களே! நியாயத்தின் செவிகளில் உமது கர்ச்சனை வரலாற்றின் நெற்றியில் உமது திருப்பெயர் இந்த மானுட பிறப்பின் நல்ல உள்ளங்கள் முகர்ந்து பார்க்கும் ஒவ்வொரு பூவிலும் உங்கள் உயிரின் வாசம் கமழும் நாளை பிறக்கும் ஈழத்தில் உமது உயிரின் சூடும் கலந்து இருக்கும் இந்த நாளை எமக்காக மரணித்த உமக்காக எம் மக்களுக்காக நாம் ஓரணியில் நின்று சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்
-
- 0 replies
- 490 views
-
-
மாவீரர்கள் இவர்கள் மரணித்தவர்கள் அல்லர் மரணத்தை மரணிக்க வைத்தவர்கள் தெய்வங்களுக்கும் தெய்வங்கள் இவர்கள் இவர்கள் வீரம் சாகாது, தியாகம் மறையாது தமிழீழம் மலரும் வரை இவர் விதைகுழிகளும் உலராது. இவர்கள் சுவாசித்த மூச்சுக்காற்றைத் தமிழீழம் வெல்லும் வரை இவர்களுக்காக நாம் சுவாசிப்போமென்று இந்நாளில் உறுதி பூணுவோம் இதுவே இவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் 2008ல் அண்ணன் இட்ட ஆணையை இவர்கள் மேல் நாம் இடும் ஆணையாக்கி முன்னகர்வோம் உலகத் தமிழா எழுந்து வா!!!....
-
- 0 replies
- 442 views
-
-
மரணத்தை வென்ற மனித வித்துக்களின் மா வீரம் பாடும் நேரம்-இது மணி விளக்கேற்றும் நேரம். மனிதத்துவத்தின் மேலான பண்புடன் மற்றவருக்காய் உடம்பதனில் மணிக்கணக்கில் ஆயுதங்கள் ஏந்தி மறத் தமிழனாய் வாழ்ந்த காவியச்செம்மல்கள். தமிழர்கள் அடிமைப்படுவதையும் தம் தாயகம் பறிபோவதையும் -கண்டு வீறுடன் துடித்தெழுந்தவர்கள். தம் இனம் தரணியில் தன்மானத்துடன் வாழ்வதற்காய் தம் வாழ்வைத் தந்து தன் உயிரைத் தியாகம் செய்தவர்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
மாவீரர்கள் பற்றிய கவிதைகள் வேண்டும். யாழில் பல கவிஞர்கள் இருக்கிறார்கள். உங்களிடமிருந்து மாவீரர்களின் தியாகங்கள், சாதனைகள் பற்றிய கவிதைகளை எதிர்ப்பாக்கிறேன். வான்புலிகள்,கரும்புலிகள் பற்றிய கவிதைகளும் வேண்டும். வருகிற செவ்வாய்கிழமைக்கு முதல் வந்தால் நன்றாக இருக்கும்.
-
- 1 reply
- 1.3k views
-
-
மாவீரர்கள்..........!! தமீழீழ விடிவிற்காய் நும் விடியலை துறந்து தமிழருக்காக விடியலை தேடிய உன்னதமானவர்களே! எம் உதட்டில் பூக்கும் புன்னகைமலரிற்காக உயிர்துறந்த உங்களுக்கு மலர்தூவும் நேரம் இது!! கதிரவன் ஒளிபாய்ச்ச அஞ்சும் எம் தமீழீழ மண்ணில் நஞ்சுமாலையணிந்து திக்கெட்டும் ஒளிபாய்ச்சிய துஞ்சா நெஞ்சங்களே!! பெயருக்கும், புகழிற்கும் பேராசைப்படும் இவ்வுலகில் எதையும் எதிர்பாராது பெயரதனை மறந்து தலைவனின் கரத்தை பலபடுத்த வந்தவர்களே!! உதட்டளவில் வீரத்தை உச்சரிக்கும் மனிதருள் வீரத்தை நிஜமாக்கி காட்டி மெளனமானவர்களே..!! எம் மண்ணிற்கு உயிர் தந்து உம்முயிரை மண்ணிற்கு அர்பணித்த வீரர்களே நீங்கள் வீரர்கள் அல்ல வீரபுருசர்…
-
- 7 replies
- 1.8k views
-
-
கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கண்ணீரும் செந்நீரும் கலந்திடும் கார்த்திகை இருபத்தியேழு சொல்லில் அடங்காச் சோகங்கள் சூழக் கண்சிமிடித் தமிழரை கைநீட்டி அழைக்கும் கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கார்த்திகை மைந்தர்கள் காவிய நாயகர் போர்க்களம் கண்டு புனிதர்கள் ஆகியே தூய்தமிழ் அன்னையின் தாய்மடித் தழுவித் தமிழர்தம் மனங்களில் தண்ணொளி வீசினர் கருத்தினில் தலைவன் கொள்கையை ஏற்றவர் கந்தக குப்பியைக் கழுத்தினில் சுமந்தவர் தரைப்படை கடற்படை தரணியில் கண்டவர் வையம் வியந்திட வான்படை அமைத்தவர் வரிப்புலி வடிவாகி வீரத்தில் திளைத்தவர் உணவு உறக்கம் உறைவிடம் மறந்தவர் காடுகள் களனிகள் கூடிடும் காப்பனர் வெடிகள் சுமந்தே வெந்தணல் ஆகினர் அன்னையும…
-
- 0 replies
- 206 views
-
-
வரலாறு. ---------------------------------------------------- தாயம் விளையாடிக் கடவுள் ஒருதடவை தன்னை மறந்ததனால் காலம் பெருக்கெடுத்துக் கரையுடைந்து தொடங்கியது வரல் ஆறு மறதிக் கருங்குழியில் மறைவுபெறும் மானிடமும் மற்றனைத்தும் வெறும் மடையிழந்த பாய்ச்சல்களே எறும்புகளின் புற்றானாலென்ன தேனீக்களின் கூடுகளானாலென்ன மனிதர்களின் நகரங்களானாலென்ன காலத்தின் கண்களில் இவையெல்லாம் ஒன்றே. எங்கே அந்த பபிலோனியா? எங்கே என் மொகஞ்சதாரோ ? பாலைவனங்களுக்குள் எத்தனை நகரங்கள் தூசியாய் போனது ? மசெடோனியாவின் மகாபுதல்வன் பபிலோனியாவில்மரித்தது விதியின் முரண்நகை. வீழ்த்திய நகரிலேயே வீழ்தான் இப்பேர்மனிதன். எங்கே உறங்குகிறாய் நீ அலெக்ஸாண்டர்?…
-
- 10 replies
- 2.3k views
-
-
மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்: தீபிகா மிச்சமிருக்கும் உயிரின் கதைகள் ————————————————- உங்களுக்குத் தெரியுமா? நாங்களொரு பருக்கை சோற்றுக்காக … உமிக் கும்பிகளை இரகசியமாய் இரவுகளில் கிளறியவர்கள். யானை மிதித்த கால்தடத்திற்குள் வற்றாது மிச்சமிருந்த தண்ணீரில் தாகம் தீர்த்துக் கொண்டு தப்பி வந்தவர்கள். கடவுள்கள் உறுப்பிழந்து அனாதையாகி செத்துக் கிடந்ததை நம்பமுடியாத கண்களுக்குள் ஏந்தியவர்கள். வீடுகளை பார்த்துக் கொண்டு பதுங்குகுழிக்குள் படுத்துறங்கியவர்கள். மின்விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுதிரி வெளிச்சங்களில் படித்தவர்கள். விமானங்களை கண்டால் விழுந்தடித்துக் கொண்டு பதுங்கியவர்கள் பட்டாசுகள் வெடித்தாலும் காதுகளைப் பொத்திக்கொண்டு படுத்த…
-
- 2 replies
- 588 views
-
-
இழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....? (11.02.09 அன்று வன்னியில் எறிகணைக்குப் பலியான உறவின் நினைவில் ஒரு கவிதை) பாயுமில்லைப் படுத்துறங்க வீடுமின்றிப் பதுங்குளி வாசலிலும் பாதையோரச் சகதியிலும் உழன்ற பொழுதுகளில் உனக்கும் சாவுவரும் என்றெண்ணியிருப்பாயா ? நம்பிக்கையறுந்த வாழ்வு நாளையுனக்கு இல்லையென்று எப்போதாவது எண்ணியிருந்தாயா ? எங்களைப்போல உனது மகளும் மனைவியும் அம்மாவும் அக்காவும் மருமக்களும் பற்றித்தானே மனசுக்குள் அழுதிருப்பாய் ? சாவரும் நாளின் முன்னிரவு உனக்குச் சாவு நாளையென்று சகுனம் ஏதும் அறிந்திருந்தாயா ? போரின் கொடிய வாய்க்குள் போய்விடும் சலனம் ஏதும் தெரிந்ததா ? பாழும் பொஸ்பரஸ் குண்டுகள் உன்மேல் …
-
- 12 replies
- 2.5k views
-
-
நீ கடிகாரமாய் இரு .... உனக்கு வலியே... தராத முள்ளாய் .... நான் உன்னை சுற்றி .... வருகிறேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்
-
- 32 replies
- 5.8k views
-
-
என் இனமே..!! என் சனமே...!!! -------------------------------------------------------------------------------- என் இனமே..!! என் சனமே...!!! காற்றில் வரும் எங்கள் அழு குரல் உங்களுக்கு கேட்கிறதா..?? எங்கள் உடல் இரத்தம் கருகி வரும் வாசம் வருகிறதா..?? உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அழுவதற்கு திராணியும் இல்லை.. தொண்டை குழியில் ஒரு சொட்டு தண்ணீரும் இல்லை.. உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அருகிலே இறந்த என் பச்சை பாலகன் மனதிலே இறந்து போன என் கணவன் தூரத்திலே இறந்து போன என் உறவுகளின் சாம்பல் உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? கண்ணருகில் சிறு துளி கண்ணீர் மூக்கருகில் துளிர் விட…
-
- 0 replies
- 823 views
-
-
மலரோடு நேசம் வைக்க குருவிக்கு கற்றுத் தரத் தேவையில்லை.. நிலவோடு நேசம் வைக்க வானுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை.. இதழோடு நேசம் வைக்க முத்தத்துக்கு எச்சில்கள் தேவையில்லை.. சூரியனோடு நேசம் வைக்க சூரியகாந்திக்கு மின்னஞ்சல் தேவையில்லை.. தென்றலோடு நேசம் வைக்க தோப்புக்கு பேஸ்புக் தேவையில்லை.. காலத்தோடு நேசம் வைக்க வாழ்க்கைக்கு செல்போன் தேவையில்லை.. கருவோடு நேசம் வைக்க இலத்திரனுக்கு புவிஈர்ப்பு விசை தேவையில்லை.. என்னோடு நேசம் வைக்க.. மின்னணுக்களில் மின்னிய உன் காதலை அழிக்கத் தேவையில்லை.. காரணம்... உன் மின்னணுக்கள் என் உடலணுக்கள் எங்கும் நிலைபெற்று விட்டதால்..! Spoiler (யாவும் கற்பனை என்று சொல்ல முடியல்ல. பழைய மின்னஞ்சல்களை வாசித்த…
-
- 5 replies
- 1k views
-
-
மின்னல்கள் கூத்தாடுதே உன்விழிகள் பார்த்து மேகங்கள் மழை தூவுதே உன் அழகை பார்த்து விட்டு விட்டு தூறும் மழையே கொஞ்சம் நில்லாயோ நெஞ்சை தொட்டு போகும் பெண்ணின் முகவரி சொல்லாயோ மேகங்கள் கொண்டு வானம் மழை பொழிகிறது மேகத்தில் நின்று மின்னல் ஒளி தெறிக்கிறது மழை போல் நீ வருவாயோ மண் போல் நான் ஏங்குகிறேன் வானத்தின் தூரத்தில் உன்னை நான் தேடுகின்றேன். http://www.youtube.com/watch?v=113R1IanoMo
-
- 4 replies
- 509 views
-